Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Galattaa Kaathal

கலாட்டா 02

கலாட்டா 02:

‘எள்ளுவய பூக்கலையே,

எட்டுக்கூட ஆகலையே…

ஆனாலும் ஆபிஸ் போனும் எழுந்துரிய்யா…



Advertisement

இன்னைக்கும் குளிக்காம போனா தப்பையா!!!’

 

Advertisement

காலை அலாரம் அபாயக்குரலில் கதற, குப்புறப்படுத்து, மெல்லிய குறட்டையுடன் உறங்கிக்கொண்டிருந்தவன் உடல் தூக்கி வாரிப்போட குதித்து எழுந்து அமர்ந்தான். அவன் தான் கோகுல்.

Advertisement

 

ஆழ்ந்த உறக்கம் நொடியில் கலைந்துவிட, “ச்சை! நம்ம வாய்ஸா இது, இவ்வளோ கேவலமா இருக்கு!” என்றவன் கத்திக்கொண்டிருந்ததை அணைத்துவிட்டு, “சொந்த குரல்ல பாடி அலாரம் வச்சா உடனே எழுந்துக்கலாம்ன்னு எந்த பரதேசியோ சொன்னதை கேட்டு நம்மலே பாட்டு பாடி அலாரம் வச்சது தப்பா போச்சு! தினம் தினம் பேயடிச்சு எழுந்துரிக்குற மாறியே பீலிங்!” என தன்போக்கில் புலம்பியவன், உடலை நாலாப்பக்கமும் நெட்டி முறித்து திரும்ப, அவனுக்கு பக்கத்து படுக்கையில் போர்வையை தலை வரை போர்த்திக்கொண்டு படுத்திருந்த உருவத்தை கண்டு இரண்டடி பின்னே நகர்ந்தான் அவசரமாய்.

Advertisement

 

அவன் கண்கள் வீட்டை துரித கதியில் ஸ்கேன் செய்ய, பொருட்கள் வைத்தது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது.  அடுத்ததாய் வீட்டின் வாசல்க்கதவை பார்க்க, இரவு அவன் சாற்றிய அமைப்பிலேயே அதுவும் இருக்க, கிலி பிடித்தது அவனுக்கு.

 

“ஆஹா! பூட்டுன வீட்டுக்குள்ள ஒரு உருவம்! கதவும் தொறக்கல! ஜன்னல் வழியாவும் வர முடியாது! அப்டின்னா… அப்டின்னா… இது!!!” என யோசித்தவன் தொண்டை பயத்தில் வறண்டு போக, “இது அதுவா தான் இருக்கும்” என அவனே ஒரு முடிவுக்கு வந்தான்.

 

“இந்த தரகன் வீட்டை ‘மலிவு விலை தம்பி’ன்னு என் தலைல கட்டும்போதே நினைச்சேன்!” என புலம்பியவன், மெல்ல மெல்ல நகர்ந்துக்கொண்டே, “இது தூக்குல தொங்குச்சோ, மாடில இருந்து குதிச்சுச்சோ தெரியலையே” என பிதற்றியபடி முன்பொருமுறை கோவிலுக்கு சென்றபோது வாங்கி வந்திருந்த திருநீர் பொட்டலத்தை கையில் எடுத்தான்.

 

“நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்! எந்த தீங்கும் என்னை தீண்டாது! சாமிப்புள்ள டா நானு” என சொல்லிக்கொண்டு விபூதியை அள்ளி போர்வை போர்த்தியிருந்த உருவத்தின் மீது சிதற விட்டவன், “இந்த தீய சக்தியை இங்கிருந்து விரட்டி விடுங்கள் ஆண்டவரே! சாத்தானே அப்பாலே போ! சாத்தானே அப்பாலே போ” என சொல்லிக்கொண்டே விபூதி தீரும் வரை அள்ளிக்கொட்ட அந்த உருவம் அசைந்தது.

 

 

[the_ad id=”6605″]

 

அசைந்ததில் போர்வை விலக, அதன் மூலம் வெளியே தெரிந்த பாதங்களை கண்ட கோகுல், “அட, கால் இருக்கு! அப்போ இவன் பிசாசு இல்லை” என ஆராய்ச்சியை வெற்றிகரமாய் முடித்துக்கொண்டு, இப்போது தைரியமாய், படுத்திருந்தவனின் முதுகில் நாலு தட்டுத்தட்டி, “டேய், எவன்டா அது பூட்டுன வீட்டுக்குள்ள வந்து  பூந்து படுத்துருக்குறது?” என கத்த, அந்த சத்தத்தில் அவன் மெல்ல கண் விழித்தான்.

 

சோம்பல் முறித்தபடி அவன் கண்ணை கசக்க, “எவனா இருந்தாலும் மரியாதையா எழுந்து போய்டு, உனக்கு என் பவர் என்னன்னு தெரியாது! சிபிஐ, போலிஸ், வக்கீல், பத்திரிக்கை ஆளுன்னு எல்லாரையும் எனக்கு தெரியும் பாத்துக்க!!” என்றான் கோகுல் பந்தாவாய்!

 

கண்ணை கசக்கித்திறந்தவன், எதிரே நிற்கும் கோகுலை கண்டதும் ஆரவாரமாய், “மச்சி! ஹவ் ஆர் யூ டா?” என கை நீட்ட, நீட்டிய அவன் கரத்தை தட்டிவிட்ட கோகுல், “டேய், ஹூ ஆர் யூ டா?” என்றான் கடுப்புடன்.

 

எழுந்து அமர்ந்தவன், “ஏய் என்னடா இந்த உயிர் நண்பனை மறந்துட்டியா? உன் தேவா-வ மறந்துட்டியா?” என கரம் விரிக்க, ‘தேவா’ என்ற பெயரில் சமைந்து நின்றான் கோகுல்.

 

“தேவா-வா? எந்த தேவா?” அவன் பீதியுடன் கேட்க, “உனக்கு எத்தனை தேவாவை தெரியும்?” என முறைத்தான் ஆதித்ய தேவ்!

 

“எனக்கு தெரிஞ்ச தேவா-வா நீ இருந்துடக்கூடாதுன்னு தான் கேட்குறேன்! உண்மையை சொல்லு, அட்ரெஸ் மாறிதானே வந்த?” என்ற கோகுல், ‘ஆமான்னு சொல்லிட்டு கிளம்பிடுடா’ என நினைத்தான் நப்பாசையுடன்.

 

அவன் ஆசையை நிராசையாக்கும்படி, “என்னடா கோகுல், இந்த தேவாவை மறந்துட்டியா? நம்ம பழகுன பழக்கத்தை மறந்துட்டியா? ஸ்கூல்ல ஒண்ணா படிச்சா உன்னோட உயிர் நண்பன், என்னை மறந்துட்டியா?” என தெள்ளத்தெளிவாய் ஆதி எடுத்து சொல்ல, தலையில் கைவைத்து தரையில் ‘பொத்’தென அமர்ந்தான் கோகுல்.

 

“என்னாச்சுடா?”

 

கோகுல், “எங்கடா இருந்த இத்தனை நாளு?” அவன் கேட்ட விதம், ‘இத்தனை நாளு இல்லாம இப்போ என்னத்துக்குடா வந்த?’ என்பதே! ஆனால் ஆதியோ, கோகுலை தோளோடு அணைத்துக்கொண்டு, “அதான் இப்போ வந்துட்டேனேடா! இனி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்!” என சொல்லி கோகுல் தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டான்.

 

கோகுல் மண்டை மேலே ஒரு கொசுவர்த்தி சுருள் ஓடியது. கடைசியாய் ஆதியை அவன் பார்த்த நாளும், ‘உன்னைவிட்டு எப்பவும் போக மாட்டேன்டா’ என்று அவன் சொல்லும் காட்சியும் மாறாமல் கண் முன் வந்தது.

 

அப்போது ஆதியும் கோகுலும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி பரிட்சையை எழுதிவிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்துக்கொண்டிருந்தனர்.

 

மகாராஷ்டிரா பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக இல்லாததால், தன் மூன்று பிள்ளைகளின் பள்ளிப்படிப்பையும் தமிழ்நாட்டிலேயே அமைத்துக்கொடுத்திருந்தார் ஜெயதேவ். கிருஷ்ணாவும் ஆதியும் வெவ்வேறு பள்ளிகளில் சேர்ந்திருக்க, இருவரும் தங்க, ஒரு வீட்டை பிடித்து, பராமரிப்புக்கு ஆளும் போட்டிருந்தார் அவர். 

 

கோகுல், “இன்னையோட ஸ்கூல் முடியுதுடா, இனி நம்ம எப்போ பார்த்துப்போமோ தெரியல” என்றான் சிறு வருத்தத்துடன்.

 

ஆதி, “நான் எங்கடா போவேன் உன்னைவிட்டு? உனக்கொன்னுன்னா நான் தானே வந்து நிப்பேன்!? எப்பவும் உன்னைவிட்டு போக மாட்டேன்டா” என உணர்ச்சித்ததும்ப சொல்லியவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டான் கோகுல்.

 

மறுநொடி, அணைத்துக்கொண்டு நின்ற இருவரும் வெடுக்கென பிரித்துவிடப்பட, “எவன்டா எங்களை பிரிச்சது?” என கோவத்துடன் திரும்பிய கோகுல் முன்னே, ஆறடிக்கும் மேலே ஆஜானுபாகுவாய் நின்றிருந்தார் ஒருவர்.

 

அவர் நின்ற தோரணையே வயிறை கலக்கிவிட, “யாருடா இந்த பீம் பாய்?” என முனகலாய் கேட்டான் கோகுல்.

 

ஆதியும் அதே பீதியுடன், “இவர்தான்டா நேத்து நான் ப்ரொபோஸ் பண்ண பொண்ணோட அப்பா!” என சொல்ல, ஸ்லொ மோஷனில் திகிலுடன் அவனை பார்த்த கோகுல், “ஏன்டா ஒரு பொண்ணுக்கிட்ட லவ்வ சொல்றதுக்கு முன்ன, அவளுக்கு அப்பா இருக்கா, அண்ணன் இருக்கா! அவனுங்க ஜிம்முக்கு போவாங்களா? இதெல்லாம் பாக்க மாட்டியாடா?” என கேட்டுக்கொண்டிருக்கும்போதே, கோகுல் கழுத்தில் இருந்த டையை பிடித்து முன்னோக்கி இழுத்தார் அவர்.

 

சுண்டெலியென அவரிடம் சென்ற கோகுலிடம், “என் பொண்ணுக்கு லெட்டர் குடுத்தது யாருடா?” என்றார் அவர்.

 

ஆதி கோகுலை நெருங்கி, “மச்சி மச்சி, பயமா இருக்குடா! எனக்கு உன்னை விட்டா யாருடா இருக்கா? எப்படியாவது காப்பாத்து! அந்த பொண்ணு வேற நம்மளையே பார்த்துக்கிட்டே இருக்கு” என அந்நேரத்திலும், தூரத்தில் நின்றிருந்த பெண்ணைப்பார்த்து சிரித்துக்கொண்டே அவன் சொல்ல, “பயமா இருக்குடா” என்றான் கோகுல்.

 

ஆதி, “நீ என் உயிர் நண்பன் டா! உனக்கொண்ணுனா நான் நிப்பேன், உன்னோட எப்பவும் நான் இருப்பேன்டா! எனக்காக நீ நிக்க மாட்டியா?” என உசுப்பிட, நொடியில் உடல் முறுக்கேற “நான் இருக்கேன் மச்சி உனக்கு” என்றான் கோகுல்.

 

அவரோ, “கேள்வி கேட்டா என்னடா உங்களுக்குள்ள பேசிட்டு இருக்கீங்க?” என மிரட்ட, உள்ளுக்குள் பயந்தாலும், நண்பனுக்காக தைரியத்தை வரவழைத்து, “லெட்டர் யார் குடுத்தா என்ன சார்?” என்றான்.

 

[the_ad id=”6605″]

 

“என்னடா திமிரா பேசுற?” என அவர் முறைக்க, முன் தினம் இரவு நைட் ஸ்டடியில் பார்த்த ‘தளபதி’ படம் நேரம் கெட்ட நேரத்தில் அவன் நியாபகத்தில் வர,

 

“என்னையே கேள்வி கேக்குறியா? நட்புன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? நண்பன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? சூரியான்னா என்னன்னு தெரியுமா உனக்கு? நான் சூர்யான்னா, அவன் தேவா! என் தேவாக்கு ஒன்னுன்னா நான் விட்டுடுவேன்னு நினைச்சியா? அவன்கிட்ட முன்னாடி ஒருதடவ சொல்லிருக்கேன், அவனுக்காக உயிரை குடுப்பேன்னு! எடுத்துக்கோ! எடுத்துக்கோஓஓ!” என கோகுல் தன்னை மறந்து ‘தளபதி சூர்யா’வாகவே மாறி கத்த, அடுத்து அவன் பேசும்முன், அவன் இடது காது, ‘கொய்ய்ய்ய்’ என டியூன் போட்டது.

 

“கேள்வி கேட்டா பைத்தியம் மாறி பேசிட்டு இருக்க?” என அவர் மீண்டும் அறைய கையை ஓங்க, “மச்சி!! காப்பாத்துடா!” என திரும்பிய கோகுல் அவனுக்கு பின்னே பல அடி தூரத்தில் ஒரு உருவம் ஓடிக்கொண்டிருப்பது தெரிய, “அடப்பாவிப்பயலே எப்பேர்ப்பட்ட இடத்துல கோர்த்துவிட்டுட்டு ஓடிட்ட” என அலற, அடுத்து அவன் போதும் போதும் என கெஞ்சுமளவு அவர் கொடுத்துவிட்டே சென்றார்.

 

கொசுவர்த்தி சுருள் மெல்ல சுருங்க, எதிரில் அமர்ந்திருக்கும் ஆதியை மேலும் கீழும் பார்த்தான் கோகுல்.   

“கடைசியா என்னை கோர்த்துவிட்டு அடிவாங்க வச்சுட்டு, நீ பின்னங்கால் பிடரில அடிக்க ஓடும்போது உன்னை பார்த்தது! இப்போ மறுபடியும் வந்து, ‘உன்னைவிட்டு போக மாட்டேன்டான்னு சொல்ற!’ என்ன செய்ய காத்துருக்கியோ தெரியல” என திகிலுடன் சொன்னவனை கண்டு சிரித்து, “அது அறியா வயசு டா! இப்போ உனக்கு ஒன்னுன்னா நான் விட்டுடுவேனா? சும்மா தூக்கிப்போட்டு கும்மிற மாட்டேன்” என்றான் சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டு…!

 

‘இது நம்மை விட்டு போவாது’ என தெளிவாய் உணர்ந்ததும் பெருமூச்சு விட்ட கோகுல், “இப்போ எதுக்காக இங்க வந்த?” என்ற கதையை கேட்டான். நடந்தது அத்தனையும் ஒன்று விடாமல் ஆதி சொல்லி முடிக்க,

 

“இத்தனை வருஷத்துல ஒரு போன் கூட பண்ணாதவன், எப்படிடா பிரச்சனைன்னு ஒன்னு வரும்போது மட்டும் பழைய பிரண்டு மண்ணுக்குள்ள புதைஞ்சுருந்தாலும் தோண்டி எடுத்து கண்டுப்புடிக்குறீங்க?” என்றான் மெய்யான ஆச்சர்யத்துடன்.

 

“டெக்னாலஜி டெவலப்மென்ட் மச்சி!” என கெத்தாய் சொன்னான் ஆதி.

“விளங்கிரும் டிஜிட்டல் இந்தியா” என சலித்துக்கொண்டு குளிக்க ஆயத்தமானான் கோகுல்.

 

அவனை போக விடாது, “எனக்கு மேரேஜ் லைப் பிடிக்கலன்னு மேரேஜ் வேண்டாம்ன்னு சொல்றேன்! பட், நீ ஏன்டா இன்னும் மேரேஜ் பண்ணல?” என கேட்க, சட்டென கோகுலின் பின்னே நாலு பேர் வயலின் வாசித்தனர்.

 

“சொல்லுடா”

“பொண்ணு கிடைக்கலடா” என சோகமே உருவாய் சொன்னான் கோகுல்.

 

“ஏன்டா என்னாச்சு?”

 

“வேணாம் விடுடா”

 

“சொல்லு மச்சி!!”

 

“அது எதுக்குடா? வேண்டாம்!”

 

“அட சொல்லுடா, சொன்னா தானே மனசுல இருக்க பாரம் குறையும்”

 

“அது என்னோடயே போட்டும் ஆதி!”

 

ஆதி, “என்னை உன் நண்பனா நினைச்சா சொல்லு!” என அழுத்தமாய் கேட்க, தன் மனப்பெட்டகத்தை திறக்க தயாரானான் கோகுல்.

 

கோகுல், “அதாவது மச்சி…..!!!” என ஆரம்பிக்க, ஆதியின் அலைபேசி எழுப்பிய சத்தத்தில், “மச்சி நீ பேசிட்டே இரு, நான் வந்துடுறேன்” என்ற ஆதி, அழைப்பை இயக்கி, “மாதா ஜி!!!! ஹவ் இஸ் பித்தன் ஜி?” என ‘பிதா’வை ‘பித்தன்’னாக்கி தந்தையை நலம் விசாரித்துக்கொண்டே வெளியே சென்றுவிட்டான்.

 

குழந்தை கையில் மிட்டாய்யை கொடுத்துவிட்டு அதை உடனே பிடுங்கிக்கொண்டதை போல பாவனை காட்டியவன், “ஹும்ம்! நான் பாட்டுக்கு சிவனேன்னு தானேடா இருந்தேன்…! பேசிட்டே இருன்னா, யார்க்கிட்டடா பேசுவேன்?” என சுற்றும் முற்றும் பார்த்து, “வந்த கொஞ்ச நேரத்துக்கே சாவடிக்குறானே? என்னை இவன்க்கிட்ட இருந்து காப்பாத்து முருகா” என வேண்டுதலோடு குளிக்க சென்றுவிட்டான்.  

 

கோகுல் குளித்து முடித்து வரும்வரை போன் பேசிக்கொண்டிருந்தான் ஆதி.

 

ஆபீஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்த கோகுலிடம் வந்த ஆதி, “ஹான், எங்க விட்ட?” என கேட்க, “நான் எங்கடா ஆரம்பிச்சேன்?” என முறைத்தான் கோகுல்.

 

 

[the_ad id=”6605″]

 

“ஹீஹீ! இப்ப சொல்லு மச்சி!” என கோகுலை பலவாரு வற்ப்புறுத்தி கதைக்கேட்க ஆரம்பித்தான் ஆதித்யதேவ்.

 

“இதுக்கு முன்னாடி ‘சுடரொளி’ன்னு ஒரு பத்திரிக்கைல தான் போட்டோக்ராபரா வேலை பார்த்துட்டு இருந்தேன்! லவ்வு ஒன்னுமே செட் ஆகலையேன்னு அரேஞ் மேரேஜ் பண்ணலாம்ன்னு பார்த்தா, பத்திரிக்கைக்காரனுக்கு பொண்ணு குடுக்க மாட்டோம்ன்னு புதுசா புரளியை கிளப்பிட்டானுங்க! ஹும்ம்! போன வருஷம் தான் அந்த வேலையை விட்டுட்டு, இப்போ பார்க்குற வேலைல சேர்ந்தேன்! இன்னும் தேடிட்டே தான் இருக்கேன், ஒரு பொண்ணும் கிடைக்கல” என அவன் சொல்லி முடிக்கையில், “ஆஆஆஆ” என கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான் ஆதி.

 

“இப்போ ஆபிஸ் தான் போறியா?”

 

“ஆமா”

 

ஆதி, “அப்போ என்னையும் அங்கேயே சேர்த்துவிடு” என்றான் கூலாய்.

 

அவன் கேட்டதில் திடுக்கிட்டு போன கோகுல், “என்னடா ஸ்கூல்ல சேர்த்துவிடுன்னு கேட்குறமாறி அசால்ட்டா கேட்குற? இது கொஞ்சம் பெரிய கம்பெனி! நானே பலத்த ரெக்கமெண்டேஷன்ல தான் உள்ள போனேன்” என்றான்.

 

‘வீட்டில் இருப்பது போதாதென்று ஆபிசுக்கும் வந்து ஏழரையை கூட்டுவானோ?’ என்ற பயம் அவனுக்கு.

 

“அதான் ரெக்கமென்ட் பண்ண நீ இருக்கியே? சேர்த்து விடுடா” என்றான் ஆதி.

 

“டேய், நான் எந்தமாறி ஆபிஸ்ல வேலை பாக்குறேன்னு கூட தெரிஞ்சுக்காம, என்னையும் சேர்த்துக்கோன்னு சின்ன புள்ள மாறி கேக்குற?” கோகுலுக்கு சிறு எரிச்சல் வந்தது.

 

“அதுக்கென்ன வேலைக்கு வரப்போ தெரிஞ்சுக்கிட்டா போச்சு”

 

“ஊருல இருந்து வரும்போதே என் உயிர எடுக்கணும்ன்னு முடிவோட தான் கிளம்புனியா?” வெளிப்படையான அவன் எரிச்சலில், “ச்ச ச்ச இல்லடா! ஜஸ்ட் இங்க வந்து தான் தோனுச்சு” என்றான் நக்கலாய்.

 

ஆழ மூச்செடுத்த கோகுல், “நாளைக்கு இன்டர்வியூ இருக்குடா! ரெண்டு மாசம் முன்னாடியே ரெஸ்யூம் குடுத்தவங்களுக்கு தான் இப்போ செலெக்ஷன் நடக்கும்” என்றான் அவனுக்கு புரிய வைக்கும் நோக்குடன்.

 

“நாளைக்கு தானே இன்டர்வியூ? இன்னைக்கு போய் என் ரெஸ்யூம் குடுத்துடு!” என்றான் அவன் கூலாக!!!

 

“மச்சி, நான் உனக்கு வேற இடத்துல கூட ஜாப் அரேஞ் பண்றேன்டா”

 

“இருந்தாலும் நீ கூட இருக்குறமாறி வருமாடா?” முகத்தை படுபாவமாய் வைத்துக்கொண்டு ஆதி கேட்க, “ஐயோ கொல்றான்டா இவன்” என நெற்றியில் அடித்துக்கொண்டான் கோகுல்.

 

போனை எடுத்து யாருக்கோ அழைத்து சில நிமிடங்கள் பேசிவிட்டு வந்த கோகுல், “நான் சொல்ற மெயில் ஐடிக்கு உன் ரெஸ்யூமை அனுப்பிடு” என்றான் கடுப்பான முகத்துடன்.

 

பளிச்சென சிரித்த ஆதி, “மாட்டேன் மாட்டேன்னு சொல்லிட்டு எனக்காக பண்ணிருக்கியேடா? எப்படி?” என்றான்.

 

“நாய்க்கு வாக்கப்பட்டு நாசமா போறதை விட, கழுதைக்கு வாக்கப்பட்டு கஷ்டப்படலாம்’ன்னு முடிவு பண்ணிட்டேன்!!”

 

“அப்டின்னா?”

 

“உன்னை வீட்ல வச்சு மாரடிக்குறத விட, ஆபிஸ்ல வச்சு….” என கோகுல் இழுக்கும்போதே, “பீர் அடிக்கலாங்குறியா மச்சி?” என சிரித்தான் ஆதி.

 

“ம்ம்ம்? ஆமா! இன்னும் கொஞ்சம் லேட்டா போனா ஆபிஸ்ல இருக்க ராங்கி என்னை போட்டு அடிப்பா!” என சொல்லிக்கொண்டே ஷூவை தட்டி  காலில் மாட்டியவன், “ரெஸ்யூம் சப்மிஷனோட என் வேலை முடிஞ்சுதுடா! அதுக்கு மேல வேலை வாங்குறது உன் சமத்து” என்றான்.

 

“அதெல்லாம் எனக்கு அசால்ட்டு! நீ கிளம்புடா” என கோகுலை வழியனுப்பி வைத்தான் ஆதித்யதேவ்.

 

[the_ad id=”6605″]

 

மாலை மங்கி நிலா மகள் ஊர்வலம் போக தயாராய் அலங்காரமின்றியே தேவதையென வந்து நின்றபோது, அவளை ஒத்த வனப்புடன், நிமிர்ந்த நடையோடு மாடியில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தாள் தன்யா இராஜகோபாலன்.

 

டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவை சுவைத்துக்கொண்டிருந்தார் இராஜகோபாலன். கணவனுக்கு பரிமாறிக்கொண்டிருந்த லட்சுமி, மகள் வருவதை கண்டதும், “சாப்பிட வா மா” என அழைக்க சிறு தலையசைப்புடன் சென்று அமர்ந்தாள் தன்யா.

 

மகள் தன்னெதிரே வந்து அமர்வது தெரிந்தும், நிமிர்ந்து கூட பாராத ராஜகோபால், மனைவியிடம், “சுரேன் சாப்பிட்டானான்னு கேட்டியாமா?” என்றார்.

 

கேட்டுக்கொண்டிருந்த தன்யாவுக்கு உணவு தொண்டை தாண்டி செல்ல அடம்பிடித்தது.

 

‘எதிரில் இருக்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாதவர் எங்கோ இருக்கும் மகனை மட்டும் அவள் எதிரவே நலம் விசாரிப்பது நன்றாகவா இருக்கிறது?’ என்ற எண்ணத்துடன் நின்ற லட்சுமி, கணவனுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே என்ற கட்டாயத்திற்காக, “சாப்பிட்டுருப்பான்” என்றார் பட்டும் படாமல்!

 

“சாப்பிட்டுருப்பான்னா என்ன அர்த்தம்? நம்மளை விட்டு தூரமா இருக்கான், நேரத்துக்கு சாப்புடுறானா இல்லையான்னு கூட நீ கேட்க மாட்டியா? இதைக்கூட நான் சொல்லனுமா?” என அவர் கேட்க, நுனிநாக்கு வரை சூடாக கேட்க வந்த கேள்வியை அவர் வெளியிடும் முன், “ம்மா, சட்னி போடு” என தடுத்தாள் தன்யா.

 

அவள் விழியசைவில் ‘பேசாதே’ என சொன்னதை தாயும் புரிந்துக்கொண்டு அமைதியானார்.

 

இராஜகோபாலன் பலவித தொழில்கள் செய்து அத்தனையும் ஆரம்பித்த சில மாதங்களிலேயே அவரை நட்டத்திற்கு இழுத்து செல்ல, அவருக்கு இரண்டாவதாய் ‘தன்யா’ பிறந்த நேரம், கை கொடுத்தது கட்டுமானத்தொழில்.

 

தன்யா நாளுக்கு நாள் வளர, அவளைப்போலவே தொழிலும் செழிப்புடன் மெருகேறியது. காலமாற்றத்திற்க்கேற்ப தொழிலில் மாற்றம் செய்துக்கொண்டிருந்தவர், இடம் வாங்கி வீடு கட்டி அதை கணிசமான தொகையில் விற்பதோடு சேர்த்து, சில வருடங்களுக்கு முன்பு புதியதாய் ஒரு வேலையும் சேர்த்துக்கொண்டார்.

 

மக்கள் அதிகம் படையெடுக்கும் சுற்றுலாத்தளங்களில் ‘தங்கும் விடுதிகள்’ போல கட்டி அதை வாடகைக்கு விடுவது என அவர் தொடங்க, ஆரம்பித்த சில வருடங்களிலேயே விடுதியின் தரமும், விலையும் நியாயமாய் இருந்ததால் மக்களிடம் நல்ல வரவேற்ப்பு அமைந்தது.

 

மூத்த மகன் சுரேந்தர் தந்தையுடன் கைக்கோர்த்ததும், ‘காட்டேஜ் ரென்டல் பிசினசை தமிழ்நாட்டில் செய்வதைக்காட்டிலும் வெளிநாடுகளில் துவங்கினால், நல்ல லாபத்துடன், தொழில் வட்டாரத்தில் விரைவில் முன்னுக்கு வரலாம்’ என யோசனை சொல்ல,  மகனை நம்பி முதலை போட்டார் ராஜகோபால்.

 

அதன்படி முழு பொறுப்பையும் மகனிடம் ஒப்படைத்தவர், அவன் விருப்பப்படி, மாலத்தீவுகளில் காட்டேஜ் கட்டுவதற்கான உரிமத்தை சுரேனுக்கு பெற்றுக்கொடுத்தார். கடந்த ஒரு வருடமாக கட்டுமான பணிகள் அங்கே நடைபெற, அங்கேயே தங்கி அதை கவனித்துக்கொண்டிருக்கிறான் சுரேந்தர்.

 

சென்னையில் இருக்கும் ‘லக்ஸ்சூரியஸ் ஹோம்ஸ்’ தொழில் முதல் மாலத்தீவுகளில் கட்டிக்கொண்டிருக்கும் ‘காட்டேஜ்’ பிசினஸ் வரை அத்தனையும் ‘தன்யா’ பெயரிலேயே!!!

 

மகள் என்றால் தந்தைகளுக்கு எப்போதும் தனி பாசம் தானே? ராஜகோபாலும் அப்படியே! ஆனால், அது ஒரு வருடம் முன்பு வரை!!!

 

இப்போது மகளை நிமிர்ந்து கூட பார்ப்பது இல்லை! அவசியமான சில வார்த்தைகளுக்கு கூட லட்சுமி தூது போக வேண்டியதாய் போனது!

 

எல்லாம் எதனால்!?

‘திருமணம்!!!’

 

அந்த ஒரு வார்த்தை, உறவுகளையே தள்ளி நிறுத்தும் அளவுக்கு தன்யாவை கொண்டுவந்துவிட்டது.  இருந்தும் அவள் சிறிதும் அசையவில்லை.

 

அவளை திருமணம் செய்துக்கொள்ள சொல்லி கெஞ்சி, மிஞ்சி, மிரட்டி என பல விதங்களில் மொத்த குடும்பமே முயன்றும் கூட அவள் சற்றும் மனமிரங்காமல், ‘ஒருத்தனுக்கு அடிமையா என்னால வாழ முடியாது’ என்ற அவள் கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

 

ஒருமுறை ராஜகோபால் அவர் உடல்நிலையை காட்டி அவளை சம்மதிக்க வைக்க போராட, மறுநாள் அவ்வீட்டில் இருந்து காணாமல் போனாள் தன்யா. அதன்பின்னே, வெகுவாய் போராடி, அவளை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருகையில், “இனி ஒரு வார்த்தை உன்னிடம் நான் பேச போவதில்லை” என ராஜகோபால், வருடம் கடந்தும் அதை சரிவர கடைப்பிடித்து வருகிறார்.  

 

சுரேந்தர் மாலத்தீவுகளுக்கு சென்ற பின்னே, அவன் செய்துக்கொண்டிருந்த வேலையை ‘தன்யா ரெசிடென்ட்ஷியல் சொசைட்டி’யில் தன்யாவே கவனிக்க தொடங்கிவிட்டாள். கிட்டத்தட்ட சென்னை கம்பெனி அவள் ஆதிக்கத்தில் தான் உள்ளது.

 

உணவு முடிந்து அவள் எழுந்து செல்கையில், “லட்சுமி, நாளைக்கு காலைல பத்து மணிக்கு நம்ம பிரபாகர் வீட்ல பர்த்டே பார்ட்டி இருக்கு, போக சொல்லு” என்றார் அறிவிப்பாய்.

 

அது ‘தனக்கானது’ என உணர்ந்த தன்யா, “ம்மா, நாளைக்கு காலைல இன்டர்வியூ இருக்கு, என்னால போக முடியாது” என்றாள்.

 

லட்சுமியை பார்த்து, “போய்தான் ஆகணும்! அவர் அடுத்து குடுக்க போற ப்ராஜெக்ட் நமக்கு வரபபோகுது! இப்போ இந்த பார்ட்டிக்கு நம்ம போலன்னா அது மரியாதைக்குறைவா இருக்கும்!” என்றார் ராஜகோபால்.

 

அவளோ அன்னையை பார்த்து, “அதுக்கு அவரையே போக சொல்லுங்கம்மா! பத்து மணிக்கு எல்லாரும் வந்துடுவாங்க! அவங்களை வர சொல்லிட்டு நானே லேட்டா போனா, அவங்களை எப்படி கரெட் டைம்க்கு வரணும்ன்னு என்னால ஆர்டர் போட முடியும்?” என்றாள்.

 

லட்சுமி பரிதாபமாய் கணவரை பார்க்க, “தொழில்ல எதுக்கு முக்கியத்துவம் குடுக்கணும், எதுக்கு குடுக்க தேவையில்லன்னு முதல்ல உன் பொண்ணை கத்துக்க சொல்லு! நாளைக்கு வரவங்க ஒன் ஆர் காத்திருந்தா நமக்கு எந்த நட்டமும் இல்லை! அதே இந்த பங்ஷனுக்கு போலன்னா, ப்ரொஜெக்ட் அடுத்து குடுக்காம போக சான்ஸ் இருக்கு” என்றார் காட்டமாக.

 

 

[the_ad id=”6605″]

 

இம்முறை தந்தையிடம் நேரிடையாக, “நீங்க போனாதான் என்னப்பா? எனக்கு அங்க யாரையுமே தெரியாது!” என தன்யா சொல்ல,

 

அவரோ லட்சுமியிடம், “எனக்கு போக முடிஞ்சா நான் ஏன் மத்தவங்களை போக சொல்ல போறேன்! எனக்கு லைன்ஸ் கிளப் மீட்டிங் இருக்கு! நாளைக்கு காலைல பங்க்ஷன் அட்டென்ட் பண்ணிட்டு அவளை எங்க வேணா போய்க்க சொல்லு” என சொல்லிவிட்டு ராஜகோபால் பேச்சு முடிந்தது என சென்றுவிட்டார்.

 

தன்யா எப்போதும் போல ஆயாசத்துடன் ஆவேசமும் சேர, மேசைமீது இருந்த ஜாடியை தரையில் தள்ளிவிட்டு கோவத்துடன் மாடியேறினாள்.

 

இவளின் ஆவேசமும், அவனின் அட்டகாசமும் ஒன்னு சேருமா?  

 

-கலாட்டா தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!