Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Galattaa Kaathal

PRIYA MOHAN’S கலாட்டா காதல் 25.1

கலாட்டா 25.1   கோகுல் மெல்ல நடந்து அந்த அலங்கார அரங்கத்தை அடைந்துக்கொண்டிருந்தான். மாலை நேர மங்கிய வெளிச்சத்தில், சூரியன் கொஞ்சம்கொஞ்சமாய் விடைபெற்று நிலாமகளை பதவியேற்க சொல்ல, அந்த நேரத்தில் பிரமாண்டமான பலவண்ண விளக்குகளால் ஒளிர்ந்துக்கொண்டிருந்தது அத்திருமண மண்டபம்.   வாயில் அருகே சென்றவனை செயற்கை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெயர் பலகை “ஆதித்யதேவ் வெட்ஸ் தன்யா” என்ற எழுத்துக்களுடன் இன்முகத்துடன் வரவேற்றது.   இருபக்கமும் தும்பிக்கை தூக்கிய உயிரற்ற யானைகள் வாயிற்காவலர்களாய் நிற்க, அதைத்தாண்டி உள்ளே சென்றான் […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 25.2

கலாட்டா 25.2   மேடையில் தன்யா ஆதியின் கரம் கோர்த்து நிற்க, “அப்பறம் உன் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன சொன்னாங்க?” என்றான் கண்சிமிட்டி.   மகாராஸ்ட்ராவில் நடந்த வரவேற்ப்புக்கு கல்லூரியில் தன்யாவுடன் சுற்றிய, அம்ருதா, நவ்யா, தீப்தி மூவரும் வந்திருக்க, அவர்களை பற்றித்தான் விசாரித்துக்கொண்டிருந்தான் ஆதி.   “ம்ம்ம்… இத்தனை வருஷத்துக்கு பிறகும் ஏன் அதே மொக்க சீனியரை கல்யாணம் பண்றன்னு பரிதாபமா கேட்டாங்க” என தன்யா நமட்டு சிரிப்பு சிரிக்க, “ஏய்….!!!!” என முறைத்தான் ஆதி. […]


PRIYA MOHAN’S கலாட்டா 24.3

கலாட்டா 24.3             ஜெயதேவ், “பொழுதே விடிய போகுது! காலைல திறப்புவிழாவை வச்சுக்கிட்டு, எந்த கூமுட்டை நம்ம இடத்துலயே நம்மளை கடத்தி வச்சுருப்பான்?” என்றார் சந்தேகமாய்.   “நீதானேடா சொன்ன இது உன் பொண்டாட்டி வேலையா இருக்கும்ன்னு? அந்த நம்பிக்கைல தானே நானே தைரியமா இருக்கேன்?” என ராஜகோபால் அதிர்ந்து போய் கேட்க, “அப்டிதான் நானும் நினைச்சே….ன்!” என இழுத்தார் ஜெயதேவ்.   “என்னடா இழுக்குற?”   “இல்லடா, ஒருவேளை […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 24.2

கலாட்டா 24.2   இரவு, இரண்டு மணி இருபது நிமிடங்கள்…   சுட சுட இருந்த டீயில் எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து, மெதுவடையை அதில் தொட்டு சுவைத்துக்கொண்டிருந்தனர் தலைவனும், அல்லக்கைகளும்.   முகம் குரங்கு குல்லாவால் மறைக்கப்பட்டிருந்தாலும், வாய் அருகே கிடைத்த சிறு இடைவெளியில் வடை உள்ளே சென்றுக்கொண்டிருந்தது.   ஆதி, “ச்சை” என முகம் சுளிக்க, “மிஸ்டர் கிட்னாப்பர்ஸ்! கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கட்டை மட்டும் அவிழ்த்து விடுங்க! நான் எங்கயும் ஓட […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 24.1

கலாட்டா 24.1             அறைக்குள் சுருண்டு படுத்திருந்த லட்சுமி, கதவு தட்டப்படும் ஓசையில் எழுந்து வந்தார். வெளியே தெய்வானையை கண்டதும் மகிழ்ந்து போனவராய், “அண்ணி…!” என அவர் கரத்தை பற்றிக்கொள்ள,   “வந்தவங்களை ‘வாங்க’ன்னு நீ வந்து வரவேற்க்கனும்! அதவிட்டுட்டு இப்படி ரூம்க்குள்ள அடைஞ்சு கிடக்குற? உன்னை தேடி நான் வர வேண்டியதா இருக்கு!” என்றார் உரிமையாய் கோவம் கொண்டு.   “கோச்சுக்காதீங்க அண்ணி! பசங்க வாழ்க்கையை நினச்சு மனசு […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 23.2

கலாட்டா  23.2   ‘தன்யா கன்ஸ்ட்ரக்ஷன்’ உறுப்பினர்கள் பயணப்பட்டிருந்த விமானம் மாலத்தீவை முன்னிரவிலேயே வந்தடைந்தது. சுரேனின் ஒரு வருட நீண்….ட உழைப்பு!  சுற்றிலும் நீர் சூழ, அதன் நடுவே அங்கங்கே இருந்த சிறு சிறு குடில்கள் அந்த இரவு நேர மின்விளக்கு அலங்காரத்தில் சொர்க்கலோகமென காட்சியளிக்க, யாராலும் தங்கள் கண்களை இமைக்கக்கூட முடியவில்லை.   ஒவ்வொரு குடிலும் விதவிதமான அமைப்புகளில் வெவ்வேறு வடிவங்களில், அளவுகளில் இருக்க, ஒரு குடிலுக்கும் மற்றோரு குடிலுக்கும் இடையே நேரடி தொடர்பு இல்லாதபடி […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 23.1

கலாட்டா 23.1   ரிசெப்ஷன் அருகே, கையில் ஒரு பைலை பிடித்துக்கொண்டு அதில் மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்தாள் பிரியா.   “ஷீலா, கிவ் மீ தட் ரெட் பென்?” வரவேற்ப்பாளரிடம் பேனாவை வாங்கி மீண்டும் என்னவோ எழுத ஆரம்பித்தாள்.   பூனை போல அவள் பின்னே வந்து நின்ற கோகுல், “ஹலோ மேடம்?” என்று மெல்லமாய் சொல்ல, வேலை மும்மரத்தில், சொல்வதும் யாரென்றும் நிமிர்ந்து பாராது, “ஒன் செகன்ட் ப்ளீஸ்” என்றாள் பிரியா.   கோகுல், “நான் ஒரு […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 22.2

கலாட்டா 22.2   சுரேன் மாலத்தீவுகளில் செய்துக்கொண்டிருந்த வேலை முழுமூச்சுடன் இறுதிக்கட்டத்தை அடைந்து திறப்பு விழாவுக்கான வேலைகள் ஆரம்பிக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தன.   சென்னையில் இருந்தே, அங்கு செய்ய வேண்டிய வேலைகளை பணித்துக்கொண்டிருந்தான் சுரேந்தர்.  நிச்சயம் நின்று போனதில் இருந்து லட்சுமி சுரேந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். மகனின் இழப்பு பெரிதென்றாலும், ‘போனதை நினைத்து, மகளின் வாழ்வை பறிகொடுப்பதா?’ என்ற ஆதங்கம் அவருக்கு.   திறப்பு விழாவுக்கு யார் யாரை அழைப்பது என்ற சிந்தையில் இருந்த சுரேன், ராஜகோபால் […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 22

கலாட்டா 22.1   அலுவலகத்தில் ஆதியின் அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளை பிரட்டிப்போட்டு தேடிக்கொண்டிருந்தான் கோகுல். அவன் வாய் தன் போக்கில் புலம்பிக்கொண்டிருந்தது.   ‘கூட இருந்தும் உயிர் எடுத்தான், இப்போ கிளம்பி போயும் உயிர் எடுக்குறான்! இவன் சொல்லிக்காம போனதுக்கு இந்தம்மா என்கிட்ட காட்டுக்குரங்கு மாறி கத்திக்கிட்டே இருக்கு!’ என அவன் புலம்பலோடு கோப்புகளை பார்ப்பதும், எடுத்து வீசுவதுமாய் இருக்க,   “என்ன மிஸ்டர் கோகுல்? ஃபைல் கிடைச்சுதா இல்லையா?” அறையின் வாயிலிலேயே கடுகடுப்புடன் நின்றிருந்தாள் […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 21.2

கலாட்டா 21.2   பால்கனியில், இரவு வானத்தில் எதையோ தேடுபவன் போல வெறித்துக்கொண்டு,  கைகளை தலைக்கு கொடுத்து படுத்திருந்தான் ஆதி.   “வெறுந்தரையில ஏன்டா படுத்துருக்க?” என கேட்டுக்கொண்டே கோகுல் அங்கே வர, தன் தேடலை நிறுத்தாதவன், “சும்மா தான்” என்றான் மெல்ல.   ஆதியின் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்தான் கோகுல். “பசிக்குது! சாப்பிடலாம் வா!”   ஆதி, “நீ சாப்பிடு, நான் அப்பறமா வரேன்” என்றிட, அயர்வாய், ‘உப்ப்’ என வாய்வழி பெருமூச்சு விட்ட கோகுல், […]