Skip to content
Post Views: 8,710
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 15
கலை செல்விக்கு நெஞ்சு ஒரு மாதிரி அழுத்தியது. மகளை தப்பாக நினைக்க மனம் வர வில்லை. எல்லா விவரமும் சொல்லி கொடுத்து தான் வளத்தார். அவளுக்கே எல்லாம் தெரியும். நிச்சயம் தப்பாக போக மாட்டாள். இது ஏதோ எதார்த்தம் தான் என்று நம்பினார்.
ஏனெனில், கோவில், திருவிழா என்று வந்தால் இந்த மாதிரி ஊர் ஆண்கள் உதவி செய்வார்கள் தான். சகஜமாக நடக்கும், தீ சட்டி எடுக்கும் போது, சாமி ஆடும் போதெல்லாம் தாங்க, பிடிக்க யார் என்ற கணக்கெல்லாம் பார்க்க மாட்டார்கள். ஆனாலும், விக்ரம் குனிந்து சேலையை சரி செய்து விட்டது நெஞ்சில் முள்ளாக உறுதிய போதும் அப்படி இருக்காது என்று தன்னை சமாதான படுத்தி கொண்டார் கலை செல்வி.
Advertisement
மறுநாள் பொங்கல், அடுத்து கெடா வெட்டு இருந்தது. பொங்கல் வைப்பது கள்ளி காடு தான். அந்த ஊர் பெண்கள் தான் முதல் வருவார்கள். அவர்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிட்ட பின் தான் மற்றவர்களுக்கு அருள் வரும்.
காலையிலே மெருன் வண்ண சாப்ட் சில்க் சேரி அணிந்து தயாரானாள் பிரபா. செல்வி கவனம் முழுக்க மகள் மீது தான். பிரபா அதிக ஆர்வமாக கிளம்புவதாக தாய்க்கு தோன்றியது.
விக்ரம் கோவிலில் தான் இருந்தான். அவனும் அதே மெருன் வண்ண சட்டையும், வேஷ்டியும் கட்டி இருந்தான். அவளுக்கு சேலை எடுத்து கொடுத்ததே அவன் தான். பிரபா, வீட்டில் ஃபார்வெல் செட் சேரி என்று பொய் சொல்லி வைத்து இருந்தாள். நீதிபதியும் அங்கு தான் இருக்க, விக்ரம் அடங்கி இருந்தான்.
Advertisement
கொட்டு, மேளம், வேட்டு போட்டு கள்ளி காட்டு ஊர் மக்கள் வர, வரவேற்க நின்றார் நீதிபதி. அவரின் பார்வை பிரபாவதியை அழுத்தமாக பார்க்க, அவளுக்கு பயமாக இருந்தது. விக்ரம் கேள்வியாக தான் தந்தையை பார்த்தான்.
Advertisement
மற்ற பக்கம் கெடா வெட்டுக்கு ஏற்பாடு நடக்க, கூட்டம் எல்லாம் அங்கு தான் இருந்தது. பிரபா, தன் தாய் உதவியோடு பொங்கல் வைத்தாள்.
ஆண்கள், சிறுவர்கள் என்று ஒரு பக்க மந்தையில் பொங்கல் உண்ண அமர்ந்தார்கள். பொங்கல் பானையை பிரபா இறக்கி வைத்து கறி பிடித்த இடத்தை கழுவி கொண்டிருந்தாள்.
“பிரபா, நீ இங்க பாரு. நான் ஒரு எட்டு கிடாவ பார்த்திட்டு வாரேன்…” என்று செல்வி நகர.
Advertisement
பிரபா தன் வேலையை பார்த்தாள். அவள் சேலை முந்தியை சொருகாமல் விட, அங்கிருக்கும் அடுப்பு கங்கில் லேசாக பட்டது. தீ அனைத்து இருந்தாலும், கங்கு படருமே…
“பிரபா, உன் சேலையை சொருகி உட்கார்…” என்று விக்ரம் சொல்ல,
காதில் விழுந்ததை உறுதி செய்யும் விதமாக தலையசைத்து ஏற்றவள், அவள் வேலையை தான் பார்த்தாள்.
மகளை தனியே விட மனதில்லாமல் செல்வி திரும்ப வர,
“ஏய்! உன்னை தாண்டி சொல்றேன். காது கேட்குதா இல்லையா? அப்ப இருந்து சொல்றேன் தான, கீழ கங்கு இருக்கு பாரு, சேலையை எடுத்து வைடி…” உரிமையான விக்ரமின் வார்த்தைகள் தெளிவாக செல்வி காதில் விழுந்தது.
அதிர்ந்து போய் மகளை பார்க்க, அவன் சொல்வதற்கு தலையாட்டி சேலையை கையில் பிடித்தாள்.
மகளின் செயல் இன்னும் அதிர்ச்சியை கொடுத்தது அவருக்கு…
கிராமங்களில் அப்படியெல்லாம் ஒரு வயது பெண்ணை உரிமையாக டி போட்டு அழைக்க மாட்டார்கள். அதுவும் உறவு முறையில் வராத பெண்களிடம் வார்த்தையை விட கூடாது. இது சாதாரணம் கிடையாது.
அதற்கு மகளும் மறுப்பு சொல்லாமல், அமைதியாக ஏற்பது என்றால் மயக்கமே வந்தது.
செல்வி பார்வை விடாமல் மகளை தொடர, பிரபா படையல் வைத்து சாமி கும்பிட்டவள், முதல் தளிகையை விக்ரமுக்கு தான் கொடுத்தாள். அடுத்து அருண், மதன் என்று எல்லாரோடும் சிரித்த முகமாக பேசிய படி பிரசாதம் கொடுத்தாள்.
அவர்களும் அவளோடு சகஜமாக பேசினார்கள். வேற ஊர் பெண் என்ற பாகுபாடு, ஒதுக்கம் எதுவுமில்லை. நிறைய நாள் பழக்கம் போல கேலி, கிண்டல் எல்லாம் இருந்தது.
கலை செல்வி சாதாரணமாக, கவனிக்காதது போல காட்டி கொண்டாலும், கவனமெல்லாம் மகளிடம் மட்டும் தான்.
விக்ரம் குரூப் மந்தையின் ஓரத்தில் அமர்ந்து இருக்கு, பிரபா மேலே சென்று மற்ற சிறுவர்களுக்கு கொடுத்தாள்.
விக்ரம் தன் நடப்புகளோடு தீவிரமாக பேசி கொண்டிருந்தான். தன் வேலை முடித்து வந்தவள், படியில் ஆட்கள் உட்கார்ந்து இருப்பதை கண்டு சற்று விலகி, விக்ரம் அமர்ந்து இருக்கும் இடம் வந்து, அங்கு படிக்கட்டு இல்லாததால் அவன் தோலை பிடித்து தான் இறங்கினாள்.
எதுவும் செல்வி பார்வையில் இருந்து தப்ப வில்லை. ஒரு பெண் தன் தோலை தொட்டு இறங்குகிறாள். அதை துளியும் கண்டு கொள்ளாமல் தன் பேச்சில் கவனமாக இருக்கிறான்.
தன் தோலை தொடும் போது லேசாக நிமிர்ந்து பார்த்தவன், பின் அதை கண்டு கொள்ள கூட இல்லை. யாரோ? எவனோ ஒருவனின் தோலை பிடித்து உரிமையாக இறங்குகிறாள். துளி பதற்றம், பயம் கிடையாது. இருவரும் சகஜமாக இருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன? பழக்கம் புதுசு இல்லை என்பது தான். அப்படியானால்?…
விவரம் புரிந்து செல்விக்கு நெஞ்சு கொதித்தது. வேகமாக சென்று மகளை ரெண்டு போட்டு முடியை பிடித்து இழுத்து வரும் வெறி வந்தது. இடமும், சூழலும் கருதி அமைதியாக நின்றார்.
அடுத்து கெடா வெட்டு, விருந்து என்று கோவில் அமர்கள பட்டது. பிரபா முழு நேரமும் சந்திரா உடன் தான் இருந்தாள். மூன்று ஊருக்கும் பொது கோவில் என்பதால் எல்லாம் ஒன்றாக தான் இருந்தது. அவர்களோடு இருந்து சுற்றி, சாப்பிட்டு, பேசி சிரித்து என்று ஆறு மணிக்கு மேல் தான் பிரபா வீடு வந்தாள்.
முன்பே அப்படித்தான் என்றாலும், அப்போது அவள் வட்டம் எல்லாம் தன் ஊர் மக்களோடு மட்டும் தான். அடுத்த ஊர் பிள்ளைகளோடு கலந்து நிற்க மாட்டாள். ஆனால், இன்று முழுக்க முழுக்க இருந்தது எல்லாம் அந்த ஊர் இல்லை இல்லை அந்த வீட்டு ஆட்களோடு மட்டும் தான்.
செல்வி, மகளை கண்டு கொள்ளாமல் வீடு வந்தவர். தன் கணவனிடம் ஒன்று விடாமல் சொல்லி விட்டார். எதையும் மறைக்க வில்லை.
தமிழ் செல்வத்திற்கு தலையில் இடி இறங்கியதை போல இருந்தது. தன் மகளா!… தன் பிள்ளையா அவ்வாறு ஒரு காரியம் செய்தது. இதுவரை மகள் குறித்து ஒரு சிறு சங்கடமும் வந்ததில்லையே. படிப்பு, நடத்தை, பழக்கம், பேச்சு, சிரிப்பு கூட கட்டுப்பாடாக, கண்ணியமாக இருக்கும் தன் மகளா இப்படி ஒரு அசிங்கத்தை செய்தது.
நம்ப முடியாமல் நெஞ்சில் கை வைத்து நின்று விட்டார் தமிழ் செல்வம்.
“அப்பவே நான், அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணுவோம்ன்னு சொன்னேன் கேட்டீங்களா?”
“பொட்டை கழுதையை தலையில தூக்கி வச்சு ஆடுனதுக்கு முச்சந்தில நிக்க வச்சு மூக்கருத்துட்டா உங்க மக… என்று செல்வி கத்தி கொண்டிருக்க,
“இப்போ என்ன செய்யலாம் செல்வி. நம்ம பாப்பாவா இப்படி, என்னால நம்ப முடியலை. எதையும் யோசிக்க கூட முடியலை. நீ சொல்லும் போது நம்பாமல் இருக்கவும் முடியல…” என்று தலையை பிடித்து கொண்டார் தமிழ் செல்வம்.
“ஆமா இப்ப புலம்புங்க. பொம்பளை வளக்குற பிள்ளை தான் உருப்படும். நான் என்னவோ கொடுமைகாரி மாதிரி மகளை பொத்தி பொத்தி வச்சீங்க. இன்னைக்கு அவ புத்தியை பாருங்க…” என்றவள்,
“நீங்க, நம்ம சின்னவனை கூட்டிகிட்டு ரேவதி வீட்டுக்கு போங்க. ராத்திரி பத்து மணிக்கு மேல வந்தா போதும்…” என்று முடிவாக சொல்ல,
“செல்வி… நம்ம பாப்பா, கொஞ்சம் பொறு என்னன்னு விசாரிப்போம். பொறுமையா எடுத்து சொல்லுவோம். நான் சொன்னா எம் பிள்ளை கேட்கும்…” என்ற செல்வம் வீட்டிலே இருக்க, பிரபா வந்து விட்டாள்.
பெற்றவர்கள் பார்வை பிள்ளையை தொடர்ந்தாலும் எதுவும் கேட்க வில்லை. பிரபா ஒரு கனவிலே தான் இருந்தாள்.
ராத்திரி ஒன்பது மணி இருக்கும். வீர பிரபாகரன், ரேவதி வீட்டில் விட்டு இருந்தார்கள்.
பிரபா ஒரு வெள்ளை கலர் நைட்டி போட்டு இருந்தாள். செல்வி வாசல் கதவை அடைக்க, கூடத்தில் இருந்த செல்வம்,
“பிரபா…” என்று சத்தம் கொடுத்தார்.
“வாரேன் ப்பா…” என்று அறையை விட்டு வெளியே வந்தவள்,
“என்னப்பா…” என்று தன் அறை வாசலில் நின்று கேட்டாள்.
செல்வி கூடத்தில் இருக்கும் பின் பக்க கதவு வாச படியில் அமர்ந்து இருந்தார்.
“விக்ரம் யாரு?…” எந்த மேற்பூச்சும் இல்லாமல் விசயத்துக்கு வந்தார்.
செல்வி மகளையே பார்க்க, பிரபா முகத்தில் அவ்வளவு பயம். இப்படி மாட்டி கொள்வோம் என்று எதிர்பார்க்க வில்லை போல…
“சொல்லுன்னு சொல்றேன் தான. விக்ரம் யாரு, அவனுக்கும் உனக்கும் என்ன? உன்னை ஏதும் சுத்தி வாரானா? எதுவும் பிரச்சனையா பாப்பா… நீ மொத அப்பா கிட்ட தான சொல்லணும்…” பொறுமை காத்த குரலில் செல்வம் கேட்க.
பிரபாக்கு, தந்தை பேச்சு தாங்கவே முடியவில்லை. தன்னை நம்புகிறார் தந்தை. அவர் பேச்சை காப்பாற்ற முடியவில்லையே… விக்ரம், ஐயோ என்னால விட்டே கொடுக்க முடியாது என்று நினைக்க, கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
தலை குனிந்து அழும் மகளை பார்க்கும் போதே விசயம் புரிந்தது. மனம் கனத்து போனது. இதற்கா உன்னை படிக்க வைத்தேன்.
“என்னத்த விசாரணை. இந்த அமுக்கினி தலை குனிஞ்சு கண்ணீர் விடும் போதே உங்களுக்கு தெரியலையா… மானத்தை கெடுத்து புட்டா…” என்று செல்வி புலம்ப,
பிரபாக்கு மேலும் கண்ணீர் வந்தது.
“எவ்வளவு நாளா?…” செல்வம் மீண்டும் கேட்க.
பிரபாவால் பதில் சொல்ல முடியவில்லை. சொந்த வீடு, பெத்தவர்கள் தான். ஆனால் பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது. தைரியமாக, ஆம் நான் காதலிக்கிறேன் என்று சொல்ல வரவில்லை. அவ்வளவு ஏன் நிமிர்ந்து நேர் கொண்டு தந்தையை பார்க்க கூட முடியவில்லை.
“பொம்பளை பிள்ளைய கண்டிச்சு வளங்கன்னு உங்க அம்மா சொல்லும் போது நான் கேட்கல… இவ்வளவு படிக்க வைக்காதீங்க கையை மீறி போயிடுவான்னு சொல்லும் போதும் நான் கேட்கல. மாப்பிளை பார்த்து கட்டி கொடுப்போம்ன்னு உங்க அம்மா சொல்லும் போது கூட நான், உன் விருப்பத்தை தான் கேட்டு நின்னேன். நீ படிக்குறேன்னு சொன்னப்போ படிக்கவும் வச்சேன். மாப்பிள்ளை பார்க்கும் போது கூட உன் கிட்ட சொல்லி தான் செஞ்சோம். உனக்கு எல்லாம் சுதந்திரமும் நான் கொடுத்தேன். ஏன்?… என் பொண்ணை சுதந்திரமா வளர்க்க நினைச்சேன். உன் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை. இதுவரைக்கும் கண்ணார காணத வரை உன் வார்த்தை, செயல் எல்லாம் முழுசா நம்பினோம். அவ்வளவு நம்பிக்கை வச்ச எங்களை செருப்பால அடிச்சுட்டுல்ல…” முகம் கோபத்தில் சிவக்க சொன்னவர், ஓங்கி ஒரு அறை பிரபா கன்னத்தில் விட,
காது சவ்வு கிழிந்த மாதிரி ஒரு வலி, கதவில் சாய்ந்து தன்னை நிலை படுத்தினாள். கை கொண்டு கன்னத்தை தொட முடியவில்லை. அவ்வளவு வலி. கண்ணீர் தான் கரகரவென கொட்டியது. ஒரு சத்தமில்லை, மூச்சு விடாமல் வாங்கி கொண்டாள்.
“செல்வி, நாளைக்கு உங்க அண்ணனை வர சொல்லு பேசி முடிச்சுடுவோம்…” என்றவர் நகர்ந்து விட,
ஒரு சத்தம் கொடுக்காமல் அமைதியானாள் பிரபா.
“அடியே ஊமை கொட்டான், இங்க கேளு. உன் மனசுல என்ன நினைப்பு இருந்தாலும் அதை அழிச்சுபிடு. ரெண்டு அடி தான அடிப்பாங்க, சத்தமில்லாம வாங்கிட்டு அவன் கூட ஓடி போகலாம்னு மட்டும் நினைக்காத… ஒன்னு நாங்க பாக்குற ஆளுக்கு கழுத்தை நீட்டு, இல்லையா உத்துரத்துல தூக்கு மாட்டி தொங்கு. ஆனா, அவன் கூட மட்டும் உன்னை அனுப்ப மாட்டேன். மானம் தான் வாழ்க்கை, அதை இழந்து என்னதுக்கு வாழணும்…” என்றவர்,
ஒரு மூலையில் முடங்கி கிடந்த மகளை நோக்கி வந்து,
“எங்க அம்மைக்கு நாங்க ஆறு பேரு. இப்போ இருக்குறது நாலு பேரு தான். அஞ்சு வயசுல ஒன்னு, ஏலு வயசுல ஒன்னும் தவறி போச்சு. பிள்ளை செத்ததும் எங்க அம்மையும், அப்பனும் கூட செத்தா போனாங்க. அடுத்த பிள்ளையை பார்த்து காலத்தை ஓட்டல. நாளைக்கு நீ செத்தாலும் அப்படி தான். பெத்த பாசம் இருக்கும் தான். ஒரு நாள் அழுவேன் ரெண்டு நாள் அழுவேன். ஒரு மாசம் கூட அழுகுறேன்னு வச்சுக்க, அப்புறம் அடுத்த சோழிய பார்த்து காலம் போயிரும்… திமிரெடுத்து நீ செஞ்சதுக்கு நாங்க பொறுப்பா…”
“ஊருக்கே கோளாறு சொல்றவக உங்க அப்பன். அவங்களுக்கு ஒரு தலைகுனிவு வர கூடாது. மீசையை முறுக்கி நிக்கிற எம் புருசனை, நாக்கு மேல பல்லு போட்டு நாலு பேர் பேசறதா… எம்புட்டு கேவலம், அசிங்கம், ஊர் சிரிச்சுபிடும். உனக்கு நாங்க மாப்பிள்ளை பாக்குறோம் தான, அப்புறம் என்ன அவசரம்…”
“பொம்பளைன்னு இருந்தா நாலு பேர் பார்வை மேல படத்தான் செய்யும். நீ தாண்டி ஒழுக்கமா இருக்கணும். ஊசி இடம் குடுக்காம நூல் எப்படி நுழையும்… கலர் கலரா ட்ரெஸ் எடுத்து கொடுத்து உன்னை நாங்க அழகு பார்க்க, நீ அடுத்த வீட்டு ஆம்பளையா மயக்கி திரிஞ்சு இருக்க… வெட்கம் கெட்டு போச்சே. அடுத்த வீட்டுல நடந்தாலே ஆயிரம் யோசனை சொல்றவ நான், என் வீட்டு சிரிக்கி மேனா மினிக்கி திருஞ்சு இருக்கா, நான் பார்க்காம போனேனே. ஊர் சொல்ற மாதிரி காரியகார வீட்டுல தான் சூத்த கத்தரிக்காய்…” என்று இரவு முழுவதும் புலம்பி கொண்டு தான் இருந்தார் செல்வி.
பிரபா எதிர்த்து பேசவே இல்லை. முழுதாக நனைந்தாச்சு, இனி மறுப்பு சொல்ல முடியாது. குடுத்த அடியையும், பேசிய பேச்சுக்களையும் மெளனமாக வாங்கி கொண்டாள். பெத்தவர்கள் கோபம் இதிலாவது ஆறட்டும்…
அடுத்த நாள் கோவிலுக்கு பிரபா வர வில்லை. விக்ரம் பார்வை அவளை தான் தேடியது. அவள் போனும் பேச வில்லை. பொதுவாக வீட்டில் இருக்கும் போது போன் பண்ண மாட்டாள். ஏதாவது முக்கியம் என்றால் தான் போன் வரும், அதனால் விக்ரம் அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. ஆனால், இன்று கோவிலுக்கு வர வில்லையே. மனசு சஞ்சலமாக இருக்க, சோர்ந்து போனான்.
தமிழ் செல்வம், கலையரசி மட்டும் வந்து கடைசி நாள் சாமி கும்பிட்டு செல்ல… விக்ரம், அவர்களை பார்த்து லேசாக சிரிக்க,
தமிழ் செல்வம், அவனை அடக்கப்பட்ட கோபத்தோடு அழுத்தமாக பார்த்து தான் கடந்தார். கலை செல்வி எப்போதும் பார்த்தாலும் தம்பி என்று நன்றாக பேசுபவர், அவன் புறம் திரும்பாமலே கடக்க.
விக்ரமுக்கு மனதில் பெருத்த சந்தேகம். ஒரு வேளை விசயம் வெளி வந்துடுச்சோ… அருணும், மதனும் வந்தவர்களுக்கு இளைஞர் அணி சார்பாக மோர் கொடுத்தார்கள்.
அருண் ரெண்டு கப்பை எடுத்து போய் செல்வம், செல்விக்கு கொடுக்க…
அவர்கள் சும்மா பேருக்கு கூட எடுக்க வில்லை, வேண்டாம் என்று வேற புறம் பார்த்து சொல்ல, அருண் திகைத்து போய் மதன் முகம் தான் பார்த்தான். மதன் திரும்பி விக்ரமை பார்க்க, அவனும் புரியாமல் தான் குழப்பத்தில் நின்றான்.
கோவில் முடிந்த பொது கூட்டம் அன்று மாலை கூடுவதாக அறிவித்தார்கள். ஊரில் முக்கியஸ்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். அடுத்து என்ன என்ற பேச்சு வார்த்தை நடைபெறும்.
விக்ரம் அதற்கு தான் காத்திருந்தான். இவர்கள் இங்கு வந்து விட்டால், பிரபா தனியாக இருப்பாள். அவளை போய் பார்க்கலாம் என்று மனம் கணக்கு போட்டது.
அன்று மாலை கூட்டம் தொடங்க, வழக்கம் போல மூணு ஊரில் இருந்தும் முக்கிய தலைகள் வந்தார்கள். எப்போதும் போல மதன், அருணை காவலுக்கு வைத்து விட்டு விக்ரம், பிரபா வீட்டை நோக்கி நடந்தான். யாரும் பார்க்கும் முன் கேட்டை திறந்து உள்ளே செல்ல… அங்கு வீடு வெளிப்புறம் பூட்டி இருந்தது. எங்கே சென்றாள், என்னிடம் ஒன்றும் சொல்ல வில்லையே… குழப்பத்தோடு சுத்தி பார்த்தான் விக்ரம், யாரையும் காணம். அவளை உள்ளே வைத்து பூட்டு போட்டு பூட்டி தான் வந்தார்கள்.
மதனிடம் இருந்து போன் வந்தது,
“என்ன மச்சான்…”
“எங்கடா இருக்க, சீக்கிரம் வா, அவசரம்…” என்று மதன் சொன்னதும்.
என்னவோ என்று கிளம்பி விட்டான் விக்ரம். அவசரமாக கூட்டம் நடக்கும் இடத்துக்கு வர, பேச்சு வார்த்தை தான் போய் கொண்டிருந்தது.
விக்ரம், தன் நண்பனை பார்க்க, அவன் பேச்சை கவனி என்று கண்ணை காட்டினான்.
இந்த வருசம் மெம்பர் எலக்சனுக்கு நீதிபதியை குளத்து கரை சார்பாக நிறுத்தி இருந்தார்கள். நீதிபதி பொதுவான கிராம தலைவர் தானே தவிர, அரசியலில் கிடையாது. இது தான் முதல் முறை…
இவர்கள் ஊரில் மூவாயிரம் வீடு இருக்க, அடுத்த ஊரிலும் மூவாயிரம் வீடு இருந்தது. இங்கு நீதிபதி நிக்க, அங்கு வேற ஒருத்தர் நிற்கிறார். விக்ரமுக்கு புரிந்தது பூனை குட்டி வெளியே வந்துருச்சு…
இந்த ஊர் ஓட்டு இவருக்கு என்றால், அடுத்த ஊர் ஓட்டு அங்கு இருக்கும் நபருக்கு தான். வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது கள்ளி காட்டு முன்னூறு வீடு மட்டும் தான். அதனால் தான் தந்தை அடக்கி வாசிக்கிறார். புரிந்து கொண்டான் விக்ரம்.
விக்ரம் பேச்சு வார்த்தையை கவனித்தான். ஊர் பேச்சு எல்லாம் நன்றாக தான் போனது. ஊரணியை பங்கு போடுவது, விளைச்சல் என்று பேச்சு வார்த்தை சுமூகம் தான். ஊர் காரியங்களில் எல்லாம் நீதிபதி வஞ்சகம் செய்ய வில்லை. அதுவரை கொஞ்சம் நிம்மதி விக்ரமுக்கு…
“என்ன தமிழ் செல்வம். அப்புறம் மூத்தது ஒரு பொண்ணு இருக்குல்ல உனக்கு… படிச்சு முடிச்சுருச்சு போல, வேற எதுவும் பாக்குறையா…” என்று சாதாரணமாக நீதிபதி கேட்க.
“ பாக்குறேன் பஞ்சாயத்தார். இப்போ தான் படிப்பு முடிஞ்சு இருக்க. நல்ல இடமா , எங்களுக்கு , தோதா பாக்குறேன்…” பொதுவாக சொன்னார் தமிழ் செல்வம்.
“ஆனாலும் ஒரு யோசனை என்ன, என்னைக்கும் இல்லாம தன் பெண்ணை பற்றிய பேச்சு…” என்று மனதில் ஓடி கொண்டு இருந்து.
“ஆமாப்பா, காலாகாலத்தில் பொம்பளை பிள்ளையை கட்டி கொடுத்திரனும். ரொம்ப நாள் வீட்டுல வச்சு இருந்தா, நம்மளை தான் வக்கதவன்னு ஊர் பேசும். காலமும் கெட்டு கிடக்கு, யாரையும் நம்ப முடியாது. நம்ம வீட்டு பிள்ளைக எல்லாம் படிச்சு வேலைக்கா போக போறாங்க. நாட்டு நடப்பை தெரிஞ்சுக்க தான். பொம்பளை பிள்ளையை ஒரு சொல் வராதுக்கு முன்னாடியே ஒருத்தன் கைல பிடிச்சு குடுத்துடனும்… என்ன சுந்தரம் நான் சொல்றது…” என்று நல்ல யோசனை சொல்வது போல தான் பேசினார்.
ஆனால், தமிழ் செல்வத்திற்கு முகம் கருத்தது. எல்லாம் தெரிந்து தான் பேசுகிறாரா… அதே யோசனை விக்ரமுக்கும் இருந்தது. சாதாரண வார்த்தைகளா? இல்லை பதம் பார்க்கும் பேச்சுகளா?…
அந்த சுந்தரமும், “நீங்க சொல்றது சரி தான் அண்ணே. நமக்கு தெரிஞ்ச ஒரு குடும்பம் இருக்கு, நிறைய படிப்பு படிக்க வச்சாங்க. நான் அப்பவே சொன்னேன், பொம்பளை பிள்ளையை ரொம்ப நாள் வீட்டுல வைக்காதடா நல்ல இடம் வந்த குடுன்னு… எங்க என் பேச்சை கேட்டான். கடைசில அந்த பிள்ளை படிக்க போன இடத்துல எவனோ ஊர், பேர் தெரியாதவனை காதலிச்சு, கல்யாணம் பண்ணிகிச்சு. அதுக்கப்புறம் அழுது புலம்பி என்ன பண்ண, குடும்ப மானம் போச்சு, மரியாதை போச்சு. அந்தாளு பாவம் தலை நிர்ந்து நடக்க முடியலை…”
அருகில் இருந்த பரமன், “எப்படி முடியும். வாழ்ந்த மானம் மரியாதையோடு தான் வாழணும். ஆரம்பத்திலேயே பொம்பளை பிள்ளையை அடக்கி வைக்கணும். ரொம்ப செல்லம் கொடுத்த இப்படி தான் ஊர் சிரிக்கும்…”
தமிழ் செல்வம் முகத்தையும், அதில் தோன்றிய அவமான கன்றலையும் நீதிபதி ரசித்தார் என்று தான் சொல்ல வேண்டும். திட்டம் போட வில்லை, சண்டை போட வில்லை, கத்தி கூட பேசவில்லை, இப்படியா என்று கூட கேட்க வில்லை. பெண் பிள்ளை பெற்றவரை தூண்டி விட்டார்.
நீதிபதி பக்கத்தில் இருந்த சிவராமன், “அட நீ வேறப்பா… இப்போ எல்லாம் பெத்தவங்களே பிள்ளை கிட்ட சொல்லுறாங்க… நல்ல படிச்ச, பணக்காரன் கிடச்ச காதலிக்க சொல்லி… காலம் கெட்டு போச்சு. நாமளும் போன்ல எம்புட்டு பாக்குறோம். நல்ல குடும்ப பிறப்பு வேணும்…” என்று மேலும் பேச,
முடியாமல் எழுந்து விட்டார் தமிழ் செல்வம். ஆக, எல்லாம் தெரிந்து தான் நடக்கிறது. என்னவோ முச்சந்தியில் நிற்க வைத்து செருப்பால் அடித்த உணர்வு…
“என்ன செல்வம் எழுந்துட்ட… டேய், லூசு பயலுகளா, யார் கிட்ட என்ன பேசுறதுன்னு விவஸ்தை வேணாம். நீங்க நாட்டு நடப்பை சொல்றேன்னு நம்ம மிலிட்டரிகாரரை சங்கட படுத்திடீங்க. பாரு, செல்வம் முகம் செத்து போச்சு. நீ ஒன்னும் நினைக்காத செல்வம். காலம் அப்படி இருக்கு… முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் கிழிய போறது என்னவோ சேலை தான். ஏண்டா, நம்ம மிலிட்டரி பத்தி தெரியாது. ஒரு சொல் சொல்ல முடியுமா… அவன் வீட்டு பிள்ளையை லேசா எடை போடாதீங்க. அதெல்லாம் பிள்ளையை ஒழுக்கமா தான் வளத்து இருப்பான். என்ன மிலிட்டரி நான் சொல்றது… உம் பிள்ளை உம் பேச்ச தான கேட்கும். அவனுக கிடக்கணுங்க நீ உட்காரப்பா..” என்றார் நீதிபதி.
மதனுக்கு அவ்வளவு வெறுப்பு..பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்.
பொது இடம் என்பதால் விக்ரம் தன்னை அடக்கி கொண்டு இருந்தான். அவன் தொண்டை ஏறி, இறங்கியது. செல்வம் முகம் பார்க்க முடியவில்லை. என்னவோ குற்றவாளி மாதிரி குற்ற உணர்வு. எவ்வளவு லேசாக காரியத்தை நடத்தி கொண்டார் தந்தை.
விக்ரம் இப்படியெல்லாம் யோசிக்கவே இல்லை. சண்டை வரும், கலவரம் நடக்கும், ஒருத்தருக்கொருத்தர் வெட்டி கொள்வார்கள். அதை தான் தடுக்க வேண்டும், இல்லையேல் தங்களை வெட்டுவார்கள். இப்படி தான் நினைத்தான்.
ஆனால் நீதிபதி, சத்தமில்லாமல் பெண்ணை பெற்றவரின் மனதை நோகடித்து விட்டார். இனி விக்ரம் என்ன பேசி சமாதானம் செய்தாலும் ஒன்னும் கதையாகாது… இவர்கள் காதலும் கை கூடாது.
தாய் அறியாத சூல் உண்டா… அந்த வகையில் நீதிபதி ஜெயித்து விட்டார். அவருக்கும் ஊர் கலவரத்தில் விருப்பம் இல்லை. மகனை யோசித்தார். அவன் என்ன திட்டமிடுவான் என்று அவன் போக்கில் விட்டு அறிய பார்த்தார்.
விக்ரம் அப்படி தான் நினைத்தான். தன் தந்தை முழுதாக ஒப்பு கொள்ள மாட்டார். அவர் பழமைவாதி. ஆனால், தமிழ் செல்வம் அப்படி அல்ல. இந்தியன் ஆர்மியில் பணி புரிந்தவர். முற்போக்குவாதி. நியாயமும், நேர் சிந்தனையும் கொண்ட மனிதர். கொஞ்சம் போராடினால் தங்களை புரிந்து கொள்வார் என்று தான் நினைத்தான். இரு பக்கத்தில் ஒரு பக்க எதிர்ப்பு குறைந்தால் ஊர் பிரச்சனை, கலவரம் என்று எல்லாவற்றையும் தடுக்கலாம் அல்லவா…
விக்ரம் என்னென்னவோ நினைத்து வைத்து இருக்க, நீதிபதி அடித்து ஆட தொடங்கி விட்டார். தமிழ் செல்வத்தின் மான, மரியாதையில் கை வைத்தார். மேலும் நடக்கும் என்று மறைமுக மிரட்டல் விடுத்தார்.
அதை செல்வமும் புரிந்து கொண்டார். “சொந்தத்துல மாப்பிள்ளை இருக்கவும், வெளிய பெருசா யோசிக்கல. என் சம்சாரம் அண்ணன் மகன் தான்.பேசி முடிச்சாச்சு… ஊர் வீட்டுல தப்பு நடந்தா, என் வீட்டுலையும் தப்பு நடக்குமா என்ன?… அப்படி தரம் கெட்டு நான் பிள்ளை வளர்க்கல…” என்று சாதரணமாக சொன்னவர்,
“ஆனா ஒன்னு பஞ்சாயத்தார். இப்ப இருக்குற காலத்துல பொம்பளை பிள்ளையை பெத்தவங்களை விட ஆம்பிளை பிள்ளை பெத்தவன் வளர்ப்பு தான் சரியில்லை. நாலு விசயம் தெரிஞ்சுக்க, சொந்த கால்ல சுதந்திரமா நிக்க தான் பிள்ளைகளை படிக்க அனுப்புறோம். அங்கையும் சில வளர்ப்பு சரியில்லாத நாதாரிக படிக்கிற பிள்ளையை சுத்தி வந்து கெடுக்க பார்க்குதுங்க. இப்போதெல்லாம் டிவி, பேப்பர், நியூஸ்ல மொத பையன்களை ஒழுக்கமா வளங்கன்னு தான் பேச்சே…” என்று லேசாக சிரித்தபடி சொன்னவர், தன் மனைவியோடு நகர்ந்து விட்டார்.
நீதிபதி முகம் கடுக்க அமர்ந்து இருந்தார். விசயம் வெளி வந்தாச்சு, அடுத்து என்ன என்ற யோசனையில் விக்ரம் இருந்தான்.
கலை செல்வி பொங்கி வரும் அழுகையை அடக்கிய படி நடந்து வந்தார். நாக்கு மேல பல்ல போட்டு ஒரு சொல் வந்து விட்டதே… இப்படி ஒரு பேச்சு வந்து விட கூடாது என்று தானே அத்தனை பார்த்து வளர்த்தார்.
“செல்வி, நீ வீட்டுக்கு போ…”
“நீங்க எங்க போறீங்க?…” கொஞ்சம் பயத்தோடு தான் செல்வி கேட்டார்.
“உங்க அண்ணன் வீட்டுக்கு தான். பேச வேணாம் பூ வைக்க சொல்லிடுவோம். நான் முறையா பேசிட்டு வாரேன்…” என்றவர், தளர்ந்த நடையோடு விருதுநகர் செல்ல,
வேக வேகமாக வீடு வந்தார் கலை செல்வி. நெஞ்சு எரிந்தது… தன் வீட்டுக்கு பெண் கெட்டு அத்தனை பேர் வர… இன்று வலிய போய் கட்டி தாரோம் என்று சொல்லும் நிலைக்கு வைத்து விட்டாளே, அந்த பாவி…
நேற்று முழுக்க அழுகையில் தான் கரைந்தாள் பிரபா. ஒரு வாய் சோறு உள்ளே செல்ல வில்லை. என்ன நடக்கும், விக்ரம் எவ்வாறு சமாளிப்பான் என்று பயமாக இருந்தது. பசி என்ற நினைவு கூட இல்லை.
குளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற குளித்து வந்தவள், தொண்டையை நனைக்க தண்ணியை எடுத்தாள்.
விறுவிறுவென வீட்டுக்கு வந்த செல்வி, வெளி வாசலில் மஞ்சனத்தி விறகு வெட்டி கிடந்தது. அதில் ஒரு கட்டையை எடுத்தவர், வேகமாக உள்ளே செல்ல,
error: Content is protected !!