கள்வனே கள்வனே – 17
கள்வன் – 17
மனதிற்குள் அடுத்து செய்ய வேண்டியதை கணக்கிட்டவள், இட்லியை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு இன்பனிடம், “கல்யாணத்திற்கு என்ன ஸ்பெஷல்?”
Advertisement
“கல்யாணமே ஸ்பெஷல் தானே?” கேள்வியாய் ஒரு பதில் வந்தது அவனிடமிருந்து.
“ரொமான்ஸ் மன்னனா இருப்பீங்க போலவே… இப்போது தெரியுது ஏன் யுக்தா உங்ககிட்ட விழுந்துட்டான்னு… ஆனால் உங்க அண்ணன் லவ்னா என்னனு கேப்பாருனு நினைக்கிறன்…” பேச்சு வாக்கில் இதயனையும் சீண்டினாள் இனியா. அவனோ உணவே சித்தம் என்பது போல் அன்னை ஊட்ட உண்டுகொண்டிருக்க அவளின் சீண்டலில் நிமிர்ந்து பார்த்தான். அவனை தங்கள் உரையாடலில் சேர்த்துக் கொள்ளத் தானே அவன் பேச்சை எடுத்தது. அதில் வெற்றியடைந்ததும் அவனைக் கண்டு மென்னகையுடன் கண் சிமிட்ட, ‘உனக்கு என்னதான் வேண்டும்? என்னை சீண்டுவதில் அப்படி என்ன அலாதி பிரியம் உனக்கு?’ என்ற கேள்வி அவன் விழிகளில் தேங்கி நின்றது. ரூமிலிருந்து இன்றுமே அவனை சாப்பாட்டு மேசைக்கு தூக்கி வந்து அமர்த்தியிருந்தான் இன்பன்.
Advertisement
Advertisement
“ஜுனியரே இப்படி இருக்கும் போது, சீனியர் எப்படி இருப்பாருனு நான் சொல்லனுமா என்ன?” இன்பனிடமும் குறும்பு இப்போது. ஒரு சுமூக சூழ்நிலையை உருவாக்க முயல்கிறாள் என்பது புரிந்து அவளுக்கு தோதாகவே பதில் தந்தான்.
“ஓ… அப்போ உங்க அண்ணனிடம் இருந்து தான் எல்லாமே கற்றுக் கொண்டீர்களோ?… உங்க அண்ணியா வரப் போறவங்க ரொம்ப லக்கி…” என்று இனியா சுருதி இறங்கிக் கூற இதயனின் முகம் மீண்டும் இறுக்கத்தை தத்தெடுத்தது. சாதாரண வாழ்வு வாழ்வதற்கே வழியில்லை இதில் எங்கே திருமணத்தை பற்றி யோசிப்பது?
Advertisement
“அதற்கு தான் காத்துக்கொண்டிருக்கிறோம்…” என்று இன்பன் முடித்துக்கொள்ள,
இறுக்கமாகிய நிகழ்வை விடுத்து தான் முடிவு செய்திருக்கும் காரியத்தில் கண்ணானாள், “வீட்டை பாதி மாற்றியாச்சு… மீதி எப்போ செய்யப் போறீங்க?”
“புரியல?”
“வீட்டுக்கு அழகு பொருட்கள் எல்லாம் வாங்கி வைச்சாச்சு… எப்போ பெயிண்ட் செய்து அதை இன்னும் பிரகாசமாக ஆக்க போறீங்க…”
“ஆமா இன்பா வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கணும்… அப்பா இருக்கும் போது செய்தது… உன் கல்யாணமும் வருது…” அவ்வளவு நேரம் சிறியவர்களின் உரையாடல்களை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சிவகாமி குறுக்கிட, இன்பன் அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்தான்.
அதை கணிக்க முடியாத தாய், “என்னடா?”
“அம்ம்மா… எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறியானு எனக்கு புரியல… இப்போ பெயிண்ட் பண்ணா லட்சத்தை தாண்டும்மா… நம்ம பெருசா எதுவும் செய்யலைனாலும் கல்யாண செலவே நிறைய ஆகும்… பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்யும் போது இந்த வீண் செலவு எதற்கு?”
“கல்யாணம்னா அப்படி தான் இருக்கும்… வரபோற மருமக இவ்வளவு பொருள் வாங்கி நம்ம வீட்டையே கலையாக்கி இருக்கா. நாமளும் நம்ம பங்குக்கு செய்யணும் தானே. நீ இதுக்கும் கொஞ்சம் பணம் ஒதுக்கு…” என்று சிவகாமி கட்டளையிட, முதல் சந்திப்பைப் போன்று இல்லாமல் இம்முறை இனியா இருக்கிறாள் என்றெல்லாம் பாராது தங்கள் உள் விஷயங்களை தயக்கமின்றி பேசினார். இன்பனும் முதல் நாள் போலன்றி ஒருவித தோழமையுடன் அவளை பார்க்கத் துவங்கினான். வெளியாள் என்ற கோட்டை தாண்டிய இனியா வெற்றிகரமாக அவ்வீட்டின் உறுப்பினராகிப் போனாள் வெகு குறுகிய காலத்தில்…
“ஆனால் பெயிண்ட் வாசனை, கெமிக்கல்ஸ் எல்லாம் இவனுக்கு ஒத்துக்காதுமா… இன்ஃபெக்ஷன் ஆகும்…”
“ம்ம்… அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்…” என்று கவலையுடன் சிவகாமி இழுக்க,
இனியா முன்வந்து, “ஏன் இவ்வளவு டென்ஷன்… லீவ் நாளில் பெயிண்ட் பண்ணுங்க பாஸ்… நானும், ஆன்ட்டியும் உங்க அண்ணனை அப்படியே வெளியில் கூட்டிட்டு போய் டைம் ஸ்பென்ட் பண்றோம்… அவங்களும் வெளியில் அதிகமாக சென்றதில்லை தானே… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்குவாங்க… நீங்க ஒரு இரண்டு நாட்களுக்குள் வேலையை முடிக்கப் பாருங்க…”
“இதுவும் நல்ல யோசனை தான். இன்பா ஏற்பாடு செய்டா…” களிப்புடன் சிவகாமி கட்டளையிட, உற்சாக மேகங்கள் அனைவரையும் தொட்டுச் சென்றது இதயனைத் தவிர…
அவன் சம்பந்தப்பட்ட முடிவுகள் அவன் சம்பந்தப்படாமலேயே எடுக்கப்பட்டன… அதுவும் அவன் விரும்பாத அவளால்…
ஆயினும் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுக்கும் நிலையிலும் அவன் இல்லை என்ற நிதர்சனம் எப்போதும் போல தாழ்வுணர்ச்சியை தூண்ட, முகம் இறுகி, இதழ்களையும் இறுக்க மூடிக்கொண்டான். கண்களோ காரணமின்றி ஈரமாக முற்பட கண்களையும் மூடிக் கொண்டான்.
[the_ad id=”6605″]
“இதயா என்னப்பா செய்யுது?” அவனின் செய்கையில் பதறிப்போய் சிவகாமி கேட்க, இன்பன் நொடிப்பொழுதில் எழுந்து இதயன் அருகில் சென்றான்.
“டேய் என்னாச்சு? கண்ணை திற… மயக்கம் வருதா?”இன்பன் அவன் கன்னத்தை தட்ட கண்களை திறக்கவேயில்லை இதயன். அவனின் உணர்ச்சிகளை படித்தாளோ என்னவோ இனியா அவனை நெருங்கி, இதமாய் அவன் கைகளை பிடித்து, “காம் டவுன்… ரிலாக்ஸ்…”
அவளின் தேகச் சூட்டை தன் கைகளில் அவனால் உணர முடியவில்லை என்றாலும் கணிக்க முடிந்தது. அதுவே ஒருவித தவிப்பை தர, தன் கணிப்பு பலித்ததா, பொய்த்ததா என்பதை அறியும் ஆவலில் கண்களை படக்கென திறந்து தலை குனிந்து தன் மேல் இருக்கும் அவள் கையைப் பார்த்தான். வார்த்தையில் வர்ணிக்க முடியா ஒரு பூரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது. இதுவரை தன் அன்னை, தம்பி செய்கைகளைக் கூட யோசித்ததில்லை… அவர்களின் தொடுதல்களை கணித்ததில்லை… அவ்வளவு ஏன் அவர்கள் அருகில் இருக்கும் நேரமெல்லாம் தூக்கத்தில் தான் கழிப்பான். அந்த தூக்கத்தில் பாதி மாத்திரையின் வீரியம் மீதி மனதில் இருக்கும் வலியின் வீரியம். ஆனால் இன்றோ இனியாவை தவிர்க்க முயன்றும் அவளின் இருப்பை தவிர்க்க முடியவில்லை. தனக்காக அவள் செய்யும் செய்கைகளை மனதில் இருந்து அழிக்க முடியவில்லை. அந்த இயலாமையே அவன் நினைவடுக்குகளில் அவளை நினைவிலேயே வைத்திருக்க, அவனின் சரியான கணிப்பு அவனுக்கு உணர்வு வந்துவிட்ட ஒரு பிரம்மையை தோற்றுவித்தது.
“டேக் இட் ஈஸி… ஏன் இவ்வளவு அழுத்தம் குடுக்கிறீங்க? இவங்க உங்க அம்மா, தம்பி, நான் பிரெண்ட்… அட்லீஸ்ட் எங்களிடம் மட்டுமாவது சகஜமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களது வெற்றியோ, தோல்வியோ, வலிமையோ, நலிவோ எதையும் அளவீடு கொண்டு மதிப்பிடாத உயிர்களிடம் நீங்களும் உங்களின் ஈகோவை விடுத்து உங்கள் உள்ளத்தை காட்டவேண்டும். இவர்களிடமே மறைத்து நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? உங்களுக்காகவே வாழும் இவ்விருவருக்கும் நீங்கள் செய்யும் உபகாரம் இது தானா?” தன்னையும் அறியாமல் சந்தடி சாக்கில் அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் வரிசையில் தன்னையும் சேர்த்துக் கொண்டாள்.
“நீங்களே ஒரு டாக்டர். உங்களுக்கே நன்றாகத் தெரியும் இந்த மாதிரி நேரத்தில் மனதில் எவ்வளவு அழுத்தம் இருக்கும், எந்த மாதிரி எண்ணமெல்லாம் வரும், அதை எப்படி சரி செய்வதுனும் தெரியும். எல்லாமே தெரிஞ்சிக்கிட்டு நீங்களே உங்களை வதைத்துக் கொண்டு, மற்றவர்களையும் வதைக்கிறீங்க.
வியர் யுவர் டாக்டர் ஷூஸ். ஷெட் யுவர் இன்செக்யூரிட்டி அண்ட் சீ ஹௌ பியூட்டி திஸ் லைஃப் இஸ் ஃபார்(for) எவ்ரிவன்.” தன் பேச்சால் ஏதேனும் மாற்றம் அவனுள் தோன்றுமா என்று தெரியாது. ஆனால் தன் மனதில் இருந்தவற்றை கொட்டிவிட்ட ஒரு நிறைவு அவளிடத்தில். அதே நிறைவுடன் அவனின் விழிகளை சந்திக்க, தெளிந்த தோற்றம் அந்த வெள்ளை விண்வெளிக்குள்.
அவனை மேலும் தூண்டும் விதமாய் இன்பன் அவன் தலையை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, “இனியா சொன்னதை யோசி அண்ணா… உனக்கு நாங்க வேணுமானு தெரியாது ஆனால் எங்களுக்கு நீ வேண்டும்; அதுவும் பழையபடி… ட்ரஸ்ட் அஸ் அண்ட் ஓபன் அப்…” என்க,
மெலிதான கண்சிமிட்டல் அவனிடத்தில் பதிலாய்…
[the_ad id=”6605″]
“ஓகே… நான் கிளம்புறேன். நேரம் ஆகுது. மாலை பார்க்கலாம். பை…” என்று இனியா அங்கு நிற்காது பையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள், அவர்கள் மூவருக்கும் தனிமை கொடுக்கும் விதமாய்…
◆◆◆
“காலையில் என்ன பண்ணிட்டு வந்த பேபி… ரொம்ப வேலையோ?” இனியா அவளிடத்தில் அமர்ந்தவுடனே வினா எழுப்பினாள் யுக்தா.
“இல்லையே…”
“அப்படியா? இரண்டு மூன்று முறை கூப்பிட்டேன் இன்பன் என் கால்லை அட்டெண்ட் செய்யவே இல்லை… நீயும் வேறு காலை அங்கு செல்வேன் என்று சொன்னாயா அதான் வேலையோ என்று கேட்டேன்.”
“அவ்வளவு அக்கறை இருக்குறவ என்கூட அங்க வரவேண்டியது தானே… நான் கூப்பிட்டும் நீ முறுக்கிட்டு போற…” என்று இனியா குறை படிக்க, யுக்தா முகம் கூம்பி பின் தயக்கத்துடன் அவளை பார்த்தாள், “நான் ஒன்னு கொடுப்பேன் நீ கோவிச்சிக்க கூடாது…”
“என்ன பீடிகை எல்லாம் பலமாக இருக்கு. என்னனு சொல்லுடி…”
யுக்தா சில ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து இனியாவிடம் நீட்டினாள். புருவங்கள் சுருங்க என்ன என்பது போல் பார்த்தாள் இனியா.
“நேற்று நீ வாங்கியதற்கு…” தயக்கத்துடன் வந்தன யுக்தாவிடமிருந்து. நேற்று இன்பனிடம் பேசிய பின்னே பணத்தை கொடுத்துவிட முடிவு செய்துவிட்டாள் யுக்தா.
“என்னடி கொழுப்பா?” கோபம் கலந்த சீற்றல் இனியாவிடம்.
“இது தான் சரி பேபி… நியாயமாக பார்த்தால் நான் தான் கொடுத்து இருக்கணும். நீ தான் அங்க வீட்டிற்கு போகும் வரை வாங்கியது யாருக்கென்றே கூறவில்லை.”
“ஏன் ஏன் நான் கொடுத்தால் என்ன?” யுக்தாவின் செயலுக்குப் பின் இருக்கும் காரணி அறியாமல் இனியா மல்லுக்கு நின்றாள்.
“நீ ஏன் கொடுக்கணும் பேபி?” இனியாவிற்கு நிதர்சனத்தை உணர்த்திவிடும் நோக்கில் அழுத்தமாய் வந்தது யுக்தாவின் கேள்வி.
“இது என்ன சம்மந்தம் இல்லாத கேள்வி?”
“நீ ஏன் இதெல்லாம் வாங்கிக் கொடுக்கணும்னு ஒரு காரணம் சொல்லு… நீயே அத்தைகிட்ட நான் வாங்கியதாய் தான் சொன்ன, நான் அதை உண்மையாக்குறேன் பேபி… உனக்கான பாராட்டை ஏதோ நான் செஞ்ச மாதிரி என்னால ஏத்துக்க முடியாது…”
“நீ என்ன சொன்னாலும் நான் பணத்தை வாங்க மாட்டேன்.” என்று இனியா பிடிவாதம் பிடிக்க,
“அது தான் ஏன் பேபி? எந்த உரிமையில் இதெல்லாம் செய்ற?”
“உரிமையிருந்தா தான் செய்யணுமா என்ன? என் மனசாட்சிபடி தான் நடந்துக்கிறேன். ஹீ இஸ் மை பிரென்ட்…”
“ம்க்கும்… எனக்கு உடம்பு சரியில்லாம மலேரியா வந்து ஹாஸ்பிடல்ல இருக்கும் போது நீ ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் கூட வாங்கிட்டு வரல பேபி… பிக்னிக் வந்த மாதிரி வந்து பார்த்துட்டு போன… ஆனா இப்போ என்ன செஞ்சிட்டு இருக்க?” என்ற யுக்தாவின் வினாவுக்கு,
அலட்சியமாக தோள்களை குலுக்கிக் கொண்டு யுக்தாவின் பேச்சை நிராகரித்தது போல் காட்டிக் கொண்டாலும் அந்த வார்த்தைகள் அவளுள் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. தான் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறோம் என்ற கேள்வி பூதாகரமாக உருவெடுத்தது. யுக்தா சொல்வதும் சரிதானே. பல ஆண்டுகால தோழிக்கே தான் பெரிதாய் எதுவும் செய்யவில்லை எனும் போது சென்ற வாரம் தான் அவனின் இருப்பை உணர்ந்திருக்க ஏன் இதெல்லாம் செய்யவேண்டும்? அவனின் மீது பிடித்தம் ஏற்பட்டு விட்டதோ? அது சாத்தியமா? ஒரு வார்த்தை கூட பேசி பழக்கிடாதவனிடம் எப்படி பிடித்தம் ஏற்படும்? வாய்ப்பே இல்லை… என்று மூளை முரண்ட,
“நல்லா யோசி பேபி… எனக்காக இல்லையென்றாலும் உனக்காக நீ இந்த கேள்விகளுக்கு விடை அறியத் தான் வேண்டும். அதுவரை உனக்கு சேரவேண்டிய இந்தப் பணம் உன்னிடமே இருக்கட்டும்.” என்று கூறியதோடு நில்லாமல் இனியா பையில் பணத்தை வைத்தாள் யுக்தா.
‘நான் ஏன் இதெல்லாம் செய்யணும்? நான் யாரு அவங்களுக்கு? இல்லை எனக்குத் தான் அவங்க யாரு? அவங்களை சரி செய்யணும்னு எனக்குள் ஏன் இவ்வளவு வேகம் இருக்கு? இது தான் பிடித்தமா இல்லை ஈர்ப்பா? ஈர்ப்பு வருகிற மாதிரியான நிலையிலா இருக்கிறார் அவர்? பின்னர் எனக்குள் ஏற்படும் உணர்வுக்கு என்ன பெயர்?’ அவளுக்குள் காரணம் தேடி தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் இனியா.
இனியா ஏதோ முணுமுணுப்பது போன்று காதில் விழ, “ஏதாவது சொன்னியா பேபி?” என்று சந்தேகத்துடன் வினவினாள் யுக்தா.
[the_ad id=”6605″]
“ஹான்… நீ சொன்னதை தான் யோசிச்சிட்டு இருக்கேன். எனக்கு ஒன்னுமே விளங்கலடி… அவரை தேற்ற சொல்லி என்னவோ ஒன்று உள்ளிருந்து என்னை உந்துவது போல இருக்கு. அதுக்கு மேல என் உணர்வுகளை உறவுச் சங்கிலிக்குள் பிணைக்க விரும்பவில்லை. என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம்…” என்று தட்டிக்கழித்தவள், “நீ உன் அவர் வீட்டுக்கு செலவு செய்யணும்னு நினைச்சா என்கிட்ட ஒரு யோசனை இருக்குடி…”
“என்ன?”
“வீட்டுக்கு உன் செலவில் பெயிண்ட் அடிச்சிடு… என்ன கொஞ்சம் அதிக செலவு தான் பட் நீ ஆசைப்பட்ட மாதிரி செலவு செய்யலாம்.” என்க,
“அடிப்பாவி… என்ன ஒரு விவரம்… ” என்று புருவம் உயர்த்தினாள்.
“உன் ஆள் தான் செலவுக்கு கஷ்டமா இருக்குனு சொல்லிட்டு இருந்தாரு. அப்புறம் உன் இஷ்டம்.” என்று கழுத்தை வெட்ட, யுக்தா யோசிக்கவெல்லாம் இல்லை முடிவே செய்து விட்டாள் அவளால் முடிந்த உதவி செய்ய வேண்டுமென்று. இனியாவே இவ்வளவு மெனெக்கெடும் போது அவ்வீட்டின் உரிமையானவள் செய்யாமலா…
*^*^*
