Skip to content
Post Views: 6,041
“வீட்டுக்குப் போலாமா” என்றான் அவளை இன்னும் தன்னோடு இறுக்கி அவள் செவிகளில் கிறக்கமாக.
அந்தக் குரலுக்கு “ஹ்ம்ம்” என்பதை கடந்து எதைத்தான் அவளால் கூறிவிட முடியும், அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை கர்ம சிரத்தையாக இருளை வேடிக்கை பார்த்திருந்தவள் கைகளில் மெல்லிய நடுக்கம் அதை உணர்ந்தவன் தன் விரல்களோடு கோர்த்துக்கொண்டான்.
Advertisement
ஒரத்தநாடு வீட்டிற்குத்தான் சென்றான் அவள் கேள்வியாய் பார்க்கவும் “இதுதான் நம்ம வீடு நம்ம வாழ்க்கையோட எல்லா நல்லதும் இங்கதான் ஆரம்பிக்கணும்” என்றான்.
மெல்ல புன்னகைத்தவள் இறங்கிக்கொண்டாள் வண்டியை நிறுத்திக் கேட்டைப் பூட்டி விட்டு வீட்டைத் திறந்தான், அவன் பின்னே அமைதியாக உள்ளே நுழைந்தாள் கதவை அடைத்தவன் அறை நோக்கிச் செல்ல ஷாலின் நுனியை திருகிக்கொண்டே தேங்கி நின்றாள் அவன் மனைவி.
Advertisement
Advertisement
அறை வாயிலில் கையைக் கட்டி கதவில் சாய்ந்து நின்றவனும் அவளையே பார்த்திருந்தான் அவன் இதழ்கள் தாராளமாகப் புன்னகையை சிந்தியது.
“ஆறு புள்ள கேட்டவ இப்படி அரை கிலோமீட்டருக்கு தள்ளி நின்னா நான் என்ன செய்யட்டும்” என்றான் சீண்டலாகச் சட்டென்று திரும்பி நின்றுகொண்டவளுக்கு முகத்தை மூடிக்கொள்ள கைகள் பரபரத்தது அதற்கும் சேர்த்து கிண்டல் செய்வானோ என்று தடுமாறி நின்றாள்.
Advertisement
அவள் வயிற்றோடு கைகொடுத்து இழுத்து தன்னோடு சேர்த்தனைத்தான் தோளில் அழுத்தமாகப் பற்தடமும் பதித்தான் “ஸ்ஸ்” என்றாள்.
அவளை அப்படியே அள்ளிக்கொண்டவன் அறைக்குள் நுழைந்து காலால் கதவை அடைத்துவிட்டு அவளைப் படுக்கையில் விட்டான் அறையில் விளக்கைப் போடவேயில்லை அங்கே நுழைவதற்கு முன்னே அவள் தேங்கிவிட்டாளே.
கீழே மேலே என்று இரண்டு பாகமாகப் பிரிந்திருந்த பழைய மாடல் மர ஜன்னல்களைத் திறந்து விட்டான் நிலவொளி மெல்லிய கீற்றாக அறைக்குள் நுழைந்தது, அவளை நோக்கி வந்தவனை கண்டு மூச்சடைத்து.
“நிதானம் நிதானம்” என்று தன்னையே தேற்றிக்கொண்டாள் அருகில் நெருங்கி அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் முதல் முத்தம் பதித்தான் இதழ்கள் மெல்ல மெல்ல கீழிறங்கி கன்னம் காதுமடல் என்று கழுத்துவளைவில் தேங்கி வாசம் பிடித்தது.
“கால் வலிக்குதா” என்றான் உதடுகளும் மீசையும் கூறுகுறுக்க.
“அத்தான் ப்ளீஸ்” என்றாள் அவன் சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு.
“எஸ் ப்ளீஸ்” என்றவன் “ரெண்டு புள்ள போதும் சரியா” என்றான் இன்னும் நெருங்கி.
“முடியாது முடியாது ஆறு ஆறுதான்” என்றாள் வேகமாக.
நிமிர்ந்தவன் இதழ் கடித்து விஷமமாக அவளைப் பார்த்தான் ‘புள்ள பெத்துக்கறது என்ன உன் தார்வாட் பேடா சாப்பிடுறது போலன்னு நினைச்சியா எதுக்குடி ஆறு புள்ள என்ன கணக்கு சொல்லு” என்றான்.
அவன் வலக்கரம் அவள் கன்னத்தைத் தாங்கியிருக்க கட்டைவிரல் அவள் இதழை மெல்ல வருடியது, அவளிடம் அமைதி “சக்தி” என்றான் இப்பொழுது ஆழ்ந்த குரலில்.
விழிகள் திறந்து அவனைப் பார்த்தாள் “ஹ்ம்ம் சொல்லு” என்றான்.
“நீங்க எந்த விசேஷத்துக்குப் போனாலும் தனியா தான் நிக்குறீங்க நிறைய இடத்துல நீங்க மேடை ஏறினாலும் போட்டோக்கு நிக்குறதில்ல முதல்ல உங்களுக்குப் பிடிக்காது அதனால அப்படின்னு நினச்சேன் அப்புறமா புரிஞ்சுது உங்களுக்கு இந்தத் தனிமை பிடிக்கல எல்லார்கூடவும் யாரோ ஒருத்தர் நிற்க எல்லா இடத்திலேயும் தான் மட்டுமே நிக்குற நிலைமையை நீங்க வெறுக்குறீங்க”.
“நீங்க என்னடா என்னைத் தள்ளி வைக்குறதுன்னு எல்லாரையும் உங்ககிட்ட இருந்து தள்ளி வெச்சிருக்கீங்க, இப்போ உங்க கைப்பிடிச்சு நீங்க ஏறுற எல்லா மேடையிலும் நானும் உங்ககூட நிப்பேன் அது போதாது நானும் நம்ப குழந்தைகளுமே உங்களைச் சுத்தி நிக்கணும்”.
“வேற யாரும் நினைச்சாலும் உங்க பக்கத்துல வரமுடியாம உங்களுக்கே உங்களுக்கான சொந்தம் மட்டும் உங்களைச் சுத்தி நிக்கணும் நாம ஏறினதும் அந்த மேடையே நிறைஞ்சிடனும்” என்றவள் வார்த்தைகளைத் தனக்குள் வாங்கிக்கொண்டான் சிவபாலன்.
அவன் விழிகளில் நீர் அவளை இன்னும் இன்னும் தன்னோடு இழுத்தனைதான் இதழ் வழியே அவள் உயிரோடு கலந்திட பேராசை கொண்டான், அவளுள் புதைந்தான் தன்னை தேடினான் உயிரோடு கலந்தான் ஆத்மார்த்தமான அழகான ஒரு கூடல் தென்றலை போலத் தழுகி ஆழிப்பேரலையாய் அவளைச் சுருட்டியெடுத்துக்கொண்ட தேடல், தேடலை முடிக்க அவனும் விரும்பவில்லை அவனைத் தள்ளி நிறுத்த அவளும் விரும்பவில்லை.
இரவுணவை இருவருமே உண்டிருக்கவில்லை தன் மார்பில் முகம் பதித்து கிடந்தவள் கேசத்தை வருடிக்கொண்டிருந்தது அவன் கரம் நேரம் அதிகாலை மூன்றை நெருங்கியிருந்தது.
“பசிக்குதா சக்தி” என்றான்.
“இல்லை” என்று தலை அசைத்தாள்.
சிறு புன்னகையோடு அவள் முகம் நிமிர்த்தியவன் “எப்படிடி பசிக்காம இருக்கும் நான் என்ன செஞ்சு வெச்சிருக்கேன்னு எனக்கே… கண்டிப்பா பசிக்கும்” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு “நீ போய்ப் பிரெஷ் ஆயிக்கோ நான் வெளில கிணத்துல குளிச்சிட்டு அப்படியே சாப்பிட என்ன கிடைக்கும் பாக்குறேன்” என்றான்.
அவளும் எழுந்துகொள்ள அவன் பின்பக்கம் சென்றான் சக்திப்ரியா குளித்துவிட்டு வெளியில் வந்தவள் மாற்றுடை இல்லையே என்று எண்ணி அங்கிருந்த மர பீரோவை திறந்தாள்.
அவனுடைய உடைகள் தான், வேறு என்ன புதிதாக இருக்க போகிறது அதே கருப்பு சட்டை சாம்பல் வேட்டி அவளுக்குச் சிரிப்பு வந்தது அதில் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டாள் நாசியை நிறைத்தது அவன் மனம் முடியை நன்றாகத் துவட்டிக்கொண்டே வெளியில் வந்தாள் அவனைக் காணவில்லை.
பின்பக்கம் லைட் எரிய அங்குச் சென்றாள் கொஞ்சம் தூரே நின்றிருந்தான் சுற்றி சுற்றி பார்த்து ஏதோ எடுத்தான், திரும்பி வந்தவன் கையில் கொஞ்சம் சக்கரைவள்ளி கிழங்கு வாழைப்பழம்.
“இப்போ இதுதான் இருக்கு” என்றவன் உள்ளே நுழைந்து கதைவடைதான் அவன் கையிலிருந்து அதை வாங்கியவள் கிழங்கை வேகவைத்தாள் கூடவே பிளாக் டீயும்.
“தோட்டத்தில உக்காரலாமா” என்றாள் சக்திப்ரியா.
“ஹ்ம்ம்” என்றவன் பொருட்களை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல அவளும் அவனுடன் சென்றாள் நிலவொளியில் கிழங்கையும் சாப்பிட்டு டீயையும் குடித்தனர்.
அப்படியே அவளைத் தன் மாடிக்கு மாற்றிக்கொண்டான் அவனிடம் பெரும் அமைதி, அவள் கழுத்து வளைவில் முகம் பதித்திருந்தவன் நிமிர்ந்து அமர்ந்து அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.
“கணக்கில்லாம பாவம் செஞ்சிருக்கேனோ போன ஜென்மத்துலன்னு நினைச்சுப்பேன் அடிக்கடி, ஆனா இந்த நிமிஷம் தோணுது கொஞ்சமா பாவமும் நிறையா புண்ணியமும் செஞ்சிருக்கேன் போல அதான் சாமி உன்னை எனக்குக் கொடுத்திருக்கு”.
“அம்மாவுக்கு ஏன் என்னைப் பிடிக்கலன்னு அப்போல்லாம் காரணம் தெரியாது அம்மாவுக்கும் பிடிக்கல ஸ்கூல்ல பசங்க கூடச் சேத்துக்கமாட்டாங்க அவங்க வீட்ல சொல்லி அனுப்புவாங்கலாம் தப்பா பொறந்தவன் அவனோட சேரக்கூடாதுன்னு…” என்றவன் இதழ்களை மூடியவள்.
“வேண்டாம் ப்ளீஸ் உங்களைக் கஷ்டப்படுத்தாதீங்க ப்ளீஸ்” என்றாள் விழியில் நீரோடு.
“இல்ல உனக்குத் தெரியணும்” என்றவன் “அங்கேயும் பிரெண்ட்ஸ் கிடையாது வீட்டுக்கு வந்தாலும் தெருவுல கூட யாரும் விளையாட வரமாட்டாங்க, பாட்டிதான் அவங்ககூட கடை கோவில் வயல் தோப்புன்னு கூட்டிட்டு போவாங்க”.
“அவங்க இருந்தவரைக்கும் என்னை நல்லாவே பாத்துக்கிட்டாங்க அம்மாவைக் கல்யாணம் செஞ்சு அனுப்புன அப்புறம் என்னைய எப்படியாவது அம்மாவோட புது குடுமபத்தோட ஓட்ட வெச்சிடணும்னு எனக்கு எப்பவும் அறிவுரை சொல்லிட்டே இருப்பாங்க”.
“அவங்க இறக்குறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடி ஒரு பையை என்கிட்டே குடுத்து நீ பெரியவன் ஆனதும் உனக்குன்னு ஒருத்தியை கல்யாணம் செஞ்சு இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும் அப்போ இந்தச் சீலையை கட்டிட்டு வரச் சொல்லுன்னு சொல்லிக் குடுத்தாங்க”.
“அதைத்தான் உனக்குக் கல்யாணப்புடவையா குடுத்தேன் நீ கட்டிப்பியான்னு எனக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது பாட்டி அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி எடுத்தாங்க, இந்த மேடம் பியூடிஷன் வேற அதனால கொஞ்சம் டவுட்ல இருந்தேன் ஆனா அது உனக்கு அவ்ளோ அழகா இருந்துச்சு” என்றவனை முதலில் முறைத்து பிறகு சிரித்தாள்.
அவள் கன்னம்பற்றி இதழோடு இதழ் பூட்டினான் “அழகிடி நீ” என்றான் மயக்கம் மீளாமல்.
“அந்த அழகியோட கன்னத்தைத் தான் அன்னைக்கு பழுக்க வெச்சீங்க நாலு நாள் செம வலி தெரியுமா சாப்பிடக்கூட முடியல” என்றவள் கன்னத்தை வருடியவன் “சாரி” என்றான் உளமார.
அவள் ஆச்சர்யமாக விழி விரிக்க “சட்டுன்னு ஏதோ கோபத்துல… சத்தியமா இதுவரைக்கும் எந்தப் பொம்பளை பிள்ளையையும் கை நீட்டினதில்ல எதோ புரியாம என்னத்தையோ உளறிக்கிட்டு சுத்துறேன்னு ஒரு கோவம், யாரவது பார்த்துத் தப்பா பேசி உன் வாழ்க்கை வீனா போய்டுமோன்னு ஒரு பயம் அதுதான் என்னையும் மீறி அடிச்சுட்டேன்” என்றான்.
அவளுக்கும் புரிந்தது “அப்புறமும் பயமே இல்லாம எனக்கே போன் போட்டு லவ் பெய்லியரான்னு கேக்குற எவ்ளோ திமிர் உனக்கு” என்றான்.
மெல்ல சிரித்தவள் “உங்ககிட்ட கேக்கும்போது ரொம்ப பயமா இருந்துச்சு ஆமாம்னு சொல்லிடுவீங்களோன்னு” என்றவள் விழிகள் இப்பொழுது கூட மெலிதாகக் கலங்கியது “மச் சக்தி” என்றவன்.
“என்னனு உனக்கு என்னைப் பிடிச்சுது” என்றான்.
“ஏன் என் அர்னால்டுக்கு என்ன குறையாம்” என்றாள்.
“அப்பன் பேர் தெரியாதவனாம்” என்றான்.
“பைத்தியங்க ஏதாவது சொல்லிட்டு போகட்டும்” என்றவள் தயங்கி “அந்த ஆளை நீங்க அப்புறம் பாக்கலயா” என்றாள்.
“பாத்தேன் அவனை ஏதாவது செய்யணும்னு நிறைய தடவை தோனியிருக்கு, அவ என் பேர் சொன்னா அவ பிள்ளைக்கு நான் அப்பன் ஆயிடுவேனா அப்படின்னு தான் ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சான் அப்புறம் அப்புறம் அவனையெல்லாம் நினைக்கிறதையே விட்டுட்டேன்”.
“அத்தை மகளைக் கட்டிக்கிட்டான், ஒரே ஒரு பிள்ளை அப்பனை மாதிரியே தறுதலை ஏதோ பொண்ணை தொல்லை செஞ்சு அந்தப் பொண்ணோட அண்ணன் வெட்டிட்டான் கழுத்துல இப்போ எல்லாமே படுக்கைலதானாம்” என்றான்.
“பெத்தவங்க செய்ற பாவம் பிள்ளைக்கு… அப்படியும் சொல்ல முடியாது மகனும் அப்படித்தானே” என்றாள்.
“ஹ்ம்ம்” என்றவன் அவளைப் பார்த்து “உன்னோட பிடிவாதம் மட்டும்தான் எனக்கு உன்னைக் கொடுத்திருக்கு, இல்லனா உங்க அப்பா அவரோட ராஜகுமாரிக்கு என்னைப் போல ஒருத்தனை மாப்பிள்ளையா நிச்சயமா பாத்திருக்க மாட்டார்” என்றான்.
அவனை முறைத்தவள் எழுந்துகொள்ள போக அவளை இழுத்து அனைத்தவன் “உண்மைய சொன்னேன் சக்தி உன் காதல் மட்டும்தாண்டி நாம சேர்ந்திருக்க காரணம் உங்க வீட்ல சம்மதம் சொன்னதும் அதுக்காகத்தான்” என்றான்.
“இருந்துட்டு போகட்டும் எனக்கு என்ன தேவைன்னு எனக்குத் தானே தெரியும் எனக்கு நீங்கதான் வேணும் வேற யாருக்கும் குடுக்கறதா இல்ல, நீங்க இப்படியே முறுக்கிக்கிட்டு இருந்தா உங்களுக்கு வசியம் வைக்கக் கூட யோசிச்சிருந்தேன் ஆனா அதுக்குள்ள நீங்களே பொண்ணு கேட்டுடீங்க” என்றவளை பார்த்து வாயில் கைவைத்தவன் “அடிப்பாவி” என்க சத்தமாகச் சிரித்தாள்.
“உன்னைமாதிரி உரிமையா என்கிட்டே சண்டை போடுற ஒருத்தர் இருந்தார் சுந்தரேசன் மாமா எனக்கு நியாயம் செய்யலன்னு அவருக்கு உள்ளுக்குள்ள ஒரு தவிப்பு அதனாலேயே என்னைய நல்லா பாத்துக்க நினைச்சார் நான் ஒதுங்கிப் போனா சண்டை கட்டி என்னய பிடிச்சு வைப்பார்”.
“இன்னைக்கு இப்படி வளர்ந்து நிக்குற சிவபாலன் உண்மையா சொல்லனும்னா அவரோட வழிகாட்டுதல் தான் இந்தக் குற்றவுணர்ச்சி எதுவும் இல்லாம அவர் என்னைச் சுலபமா கடந்து போயிருக்கலாம் ஆனா வாழ்க்கைல எல்லா விஷயங்களையும் கத்து குடுத்தார் அவர் எனக்குத் திரும்பிக் குடுத்த அந்தக் காசை வட்டிக்கு விட்டு அந்த லாபத்துலதான் லாரி வாங்கி விட்டேன் இப்போ பெரிய தொழிலா அது வளந்து நிக்குது” என்றான்.
“அவருக்கு என்ன ஆச்சு ஏன் கவிதா அண்ணி வேற கல்யாணம் செய்யல” என்றாள்.
ஆழ மூச்செடுத்தவன் “அநத கல்யாணமே ஒரு பெரிய கலவரம் அக்கா மகளைக் கட்டமாட்டேனு அவர் ஒரே பிடிவாதம் நான் அவளை அப்படி பாக்கல வேற நல்ல பையனா நானே பாக்குறேன் அப்படினு ரொம்ப அடமா நின்னரு”.
“அவங்க அம்மா அதான் பெரியமனுஷி ஒரே அழுகை மிரட்டல் ஏன் சாப்பிடாம கூட இருந்து பார்த்தாங்க அவர் ஒத்துக்கவேயில்ல கடைசில அவங்க… கவிதா பூச்சி மருந்தைக் குடிச்சுட்டாங்க போராடித்தான் காப்பாத்தினாங்க”.
“மாமாவைத் தான் கட்டிப்பேன் இல்லன்னா சாக்குறேன்னு ஒரு அழுகை கடைசில வேற வழியில்லாம கல்யாணம் செஞ்சுக்கிட்டார், அப்புறம் வாழ ஆரம்பிச்சுட்டார் ஆனா அவர் நிம்மதியா வாழல அது மட்டும் எனக்குப் புரிஞ்சுது, கல்யனாதுக்கு அப்புறம் வீட்டில தங்குறதை ரொம்ப குறைச்சிட்டார் ரெண்டு வருஷத்துல சௌமியாவும் பிறந்துட்டா அவரும் போய்ச் சேர்ந்திட்டார்”.
“வேற கல்யாணம் பத்தி நான் பேசிப் பார்த்தேன்” என்றவன் அதைத் தொட்டு பவுனுதாயி உருவாக்கிய பிரச்சனைகளைச் சொன்னான் சுந்தரேசனின் மரணத்தைப் பற்றியும் கூறினான், அதில் எஞ்சினியர் அவளின் தந்தை என்பதையும் கவிதா கேட்டுக்கொண்டதையும் மறைத்தான்.
“இது என்ன நியாயம் அவர் மேல எந்தத் தப்பும் இருக்கிறதா எனக்குத் தோணல இவருக்கு ஏதோ மன கஷ்டம் அதுல கவனிக்காம போய் அவர் உயிர் போய்டுச்சு அதுக்கு அந்த இன்ஜினியர் என்ன செய்வார்” என்றாள்.
“ஹ்ம்ம்” என்றவன் முகத்தில் சிந்தனை கோடுகள் அவன் கையை எடுத்துக் கட்டைவிரல் கொண்டு புருவத்தை நீவிவிட்டாள் அவன் அடக்கப்பட்ட சிரிப்போடு அவளைப் பார்க்க.
“நீங்க இப்படி செய்றது ரொம்ப பிடிக்கும் அவ்ளோ அழகா இருக்கும்” என்று அவள் ரசித்துச் சொல்ல அவனுக்கு வெக்கம் வந்தது இதழ் கடித்தவன்,அவளைத் தான் ஆழ்ந்து பார்த்தான் கண்களில் அத்தனை காதல் உன்னை யாருக்கும் விட்டுத்தரமாட்டேன் என்ற பிடிவாதம்.
அவள் மூக்கோடு மூக்கை உரசியவன் “தூக்கம் வரலையா” என்றான்.
“தூங்கணுமா” என்றாள்.
“ரொம்ப டயர்டா இருக்கடி, கால் வலி இருக்கா இப்போ டேப்லெட் போட்டுக்கோ” என்றான்.
அவன் கைகள் அவள் காலை வருடியது கூச்சத்தோடு அவன் மார்பில் அழுத்தமாக முகத்தைப் புதைத்தாள்.
“சக்தி” என்றான் கிறக்கமாக.
“ஹ்ம்ம்” என்றவள் குரலும் அவனுக்குப் போதையேற்றியது.
“தள்ளிப் போடி தாங்கமாட்ட” என்றான் அதற்க்கு மாறாக அவன் கைகள் அவளை உணரத்தொடங்கியது, கதிரவன் மெல்ல ஒளிக்கீற்றை அவிழ்க்கத் தொடங்கியிருக்க பறவைகளின் கீதமும் காற்றோடு கலந்து வந்தது.
அவளை அப்படியே அள்ளிகொண்டுபோய் அறையில் விட்டுவந்தவன் பின்பக்க கதவைப் பூட்டிவிட்டு அறைக்கு வந்து ஜன்னலையும் அடைத்தவன் மனைவியின் இதழோடு சேர்த்து அவளையும் எடுத்துக்கொண்டான்.
“எங்க இன்னும் காணும்” என்று எட்டி எட்டி பார்த்துக்கொண்டே அடுப்படியில் வேலை பார்த்திருந்தார் அன்புக்கரசி அதிகாலையே எழுந்து வந்து சமையல் வேலையைத் தொடங்கிவிடும் மருமகளை இன்னுமே காணவில்லையே நேரம் ஒன்பதை நெருங்கி இருந்தது.
தோட்டத்திலிருந்து கேட்ட முத்துவின் குரலில் அவர் அவனை நோக்கிச் செல்ல “அண்ணே இல்லையா” என்றான் அவன்.
“தெரியலையே ராத்திரி எப்போ வந்தான்னு” என்றார் அவர்.
“இல்ல வண்டி இல்லையே வெளில எங்கேயும் போய்ட்டாரா என்கிட்டயும் ஒன்னும் சொல்லல” என்றவன் “ராத்திரி பிரியாமாவுக்கு ஒரு சின்ன அடி” என்க.
“ஐயோ என்னாச்சு” என்றார் அவர் பதறி.
“பெருசா ஒண்ணுமில்லேன்னுதான் அண்ணே சொல்லுச்சு தங்கச்சியும் அவரும் ஒன்னாதான் வீட்டுக்குக் கிளம்பினாங்க” என்று சொன்னவன் சிறு யோசனைக்குப் பிறகு ஒரத்தநாட்டில் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பெண்மணிக்கு அழைத்துச் சிவபாலனின் வண்டி நிற்கிறதா என்று பார்க்கச் சொல்ல.
அவரும் பார்த்துவிட்டு “ஆமா தம்பி வண்டி இங்கதான் நிக்குது” என்றார் அவன் இதழ்கள் புன்னகைத்துக்கொண்டது “சரிக்கா” என்றவன்.
“அண்ணனும் பிரியாவும் அங்க வீட்ல இருக்காங்க” என்றுவிட்டு கிளம்பிவிட்டான், காலை முதல் அவன் அத்தனை முறை அழைத்துவிட்டான் சிவபாலனுக்கு எவ்வளவு உடல்நிலை முடியவில்லை என்றாலும் நேரத்துக்கே வந்து அலுவல் பார்ப்பவன் இன்று காலை முதல் தன்னை அழைக்கவும் இல்லை.
இத்தனை நேரத்திற்கு தான் சாப்பிட வராமல் இருந்தால் அழைத்து உரிமையோடு திட்டும் தங்கையும் அழைக்கவில்லை என்றுதான் தேடி வந்தான், ஒருவேளை அவளுக்கு முடியவில்லையோ என்று.
என்னவோ இப்பொழுது அவர்கள் வாழ்வு மலர்வதை போல ஒரு நம்பிக்கை சந்தோஷமாகவே சென்றான் அன்புக்கரசியும் என்னவென்று புரியாத மனநிலையில் வேலைகளைப் பார்த்தார்.
திறக்கமாட்டேன் என்ற இமை பீலிகளை சிரமப்பட்டு பிரித்து விழிகளைச் சுழற்றினாள் சக்திப்ரியா, போர்வையில் சுருண்டிருந்தவள் அப்படியே கால்களை மடக்கி அதில் முகம் புதைத்து அமர்ந்தாள் நேற்று வராத வெட்கம் இன்று முகத்தில் நிறைந்து கிடந்தது.
அவனைக் காணவில்லை அறை கதவும் சாற்றிவைக்கப்பட்டிருக்க குளித்து வந்தவள் அவன் உடையில் ஒன்றையே மீண்டும் அணிந்துகொண்டாள் அப்பொழுது கதவைத் திறந்து வந்தவன் அவளைப் பார்த்துவிட்டு இதழ் கடித்து புன்னகையை மறைக்க.
“அத்தான்” என்றான் சிணுங்களாக.
கையில் இருந்த பையை அருகில் வைத்தவன் அவளைக் கைவளைவில் கொண்டுவந்து “காலைல இருந்து அவ்ளோ போன் வந்திருக்கு கேட்டவங்களுக்கு பதில் சொல்லி முடியல வேலை வேற நிறைய கிடக்கு சக்தி”.
“இப்படி சிணுங்கி என்னை உசுப்பேத்தாத சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டேன் இதுல உனக்குச் சுடி இருக்கு மாத்திக்கோ உன்னை வீட்ல விட்டுட்டு நான் வேலையை முடிச்சிட்டு வரேன் நீ பார்லர் போக வேண்டாம் ரெஸ்ட் எடு” என்றான் அவள் மூக்குத்தியில் முத்தம் வைத்து.
“ஏன் உங்களுக்கு டையர்ட் இல்லையா நீங்களும் ரெஸ்ட் எடுங்க” என்றாள் அவன் விஷமமாகச் சிரிக்க.
“என்ன என்ன” என்றாள்.
முகத்தைத் திருப்பித் தலைமுடியை அழுந்தக் கோதியவன் மூச்சை இழுத்து விட்டான் “வேலை இருக்கு சக்திமா சீக்கிரம் வரப் பாக்குறேன் இம்சையை கூட்டாதடி” என்றவன் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு வெளியேறினான்.
அவன் நிலையைக் கண்டு அவளுக்குச் சிரிப்பு வந்தது “சக்தி சக்தின்னு பின்னாடியே சுத்தவைக்குறேன்” என்ற சபதம் நினைவுவர கதவை அடைத்து அதில் சாய்ந்து நின்றவள் முகத்தை மூடிக்கொண்டாள்.
உண்டு முடித்து அவளை வீட்டில் விட்டவன் லாரி ஆபிஸ் சென்றான் சக்திக்கு உறக்கமும் வரவில்லை வேலையும் ஓடவில்லை, பார்லர் அழைத்துப் பேசினாள் வீட்டிற்கு அழைத்துப் பேசினாள் இரவு சமையலை சீக்கிரமே முடித்திருந்தாள்.
குளித்துப் புடவை கட்டி தளர பின்னலிட்டு பூவைத்து கீழே வந்து உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளின் தோளைத் தொட்டார் அன்புக்கரசி.
அவள் திரும்பிப் பார்க்க அவளைக் கன்னம் வழித்துத் திருஷ்டி கழித்தவர் “சந்தோஷமா இருக்கணும் பிரியாமா இப்போதான் மனசு நிறைஞ்சிருக்கு”.
“அன்னைக்கு கோவில்ல உன்னை முதல்ல பாத்தப்போ என்னமோ உள் மனசு என் பிள்ளைக்குன்னு உன்னைச் சாமி அனுப்பி இருக்கிறதா சொல்லிட்டே இருந்துச்சு அது உண்மைதான், மதியம் வந்தப்போ பாத்தேன் அவன் முகத்தில இந்தச் சிரிப்பை நான் பாத்ததேயில்லை நல்லா இருடா” என்றார் அவளும் புன்னகையோடு அவரைப் பார்த்தாள்.
சிவபாலன் அழைத்திருந்தான் “சக்தி முத்து வருவான் சாப்பாடு எடுத்துட்டு அப்படியே உன்னோட டிரஸ் கொஞ்சம் எடுத்துட்டு அவனோட கிளம்பி ஆபிஸ் வா” என்றான்.
“சரி” என்றவள் அனைத்தையும் எடுத்துவைக்க முத்து வந்தான் அன்புக்கரசியிடம் சொல்லிக்கொண்டு அவனோடு கிளம்பினாள் முத்துவுக்கு உணவை அங்கே வைத்துவிட்டு இவர்கள் அவர்களின் வீட்டிற்க்கே சென்றனர்.
குளித்து வந்தவன் விழிகள் மொத்தமாக மனைவியைக் கொள்ளைகொண்டது அவனை நிமிர்ந்து பார்க்காமல் உணவில் மட்டுமே கவனமாக இருந்தாள்.
“சக்தி” என்றவனை அவள் நிமிர்ந்து பார்க்க அவளின் முன் அவன் கரம் நீண்டிருந்தது அவள் அவனை அதிசயமாகப் பார்க்க “சின்ன வயசுல பாட்டி ஊட்டிவிட்ட ஞாபகம் அதுக்கு அப்பறம் யாரும் ஊட்டிவிட்டதில்ல என்கிட்டயும் யாரும் வாங்கினதில்ல” என்க.
சட்டென்று விழியில் நீர் நிரம்பிவிட்டது அவன் கையைப் பற்றியவள் அந்த உணவை ஆசையாக வாங்கிக்கொண்டாள், எழுந்து அவன் அருகில் சென்றவள் அவன் மடியில் அமர்ந்து “ஊட்டிவிடுங்க” என்றாள்.
அவன் கொடுக்கக் கொடுக்க வயறு நிறைய உண்டாள் அவனுக்கு அவளே ஊட்டிவிட்டாள்.
“நம்ம எல்லா பிள்ளைக்கும் நீங்கதான் ஊட்டிவிட்டு பாத்துக்கணும்” என்றவளை பார்த்துச் சத்தமாக அவன் சிரிக்க அவன் பிடரி முடியைக் கொத்தாகப் பற்றி வேகமாக இழுத்தவள் அந்தச் சிரிப்பைத் தனக்குள் நிறைத்துக்கொண்டாள்.
அதற்குமேல் அவனுக்கும் பொறுமை இல்லை காலை வேலை இருப்பதால் மனமே இல்லாமல் விட்டுச் சென்றவன் அதற்கும் சேர்த்து வசூலித்துக்கொண்டான்.
தன் வாழ்வு இத்தனை அழகான காலை வேளைகளை பரிசளிக்கும் என்று சிவபாலன் கனவிலும் நினைக்கவில்லை தன் நேசத்தில் அவனைத் திண்டாடவைத்தாள் அவன் சக்தி அவனைச் சுற்றியே அவளின் விடியலும் இரவும் சுழன்றது.
சிவபாலனுக்கு இப்பொழுது எந்த ஏக்கங்களும் இல்லை அன்போடு உணவு சமைத்து அதை ஆசையாக அவனுக்கு ஊட்டிவிட, தலை துவட்ட தாயாய் மடி தாங்க, உரிமையாய் சண்டையிட்டு கோபித்து முகம் திருப்ப என்று அழகான நாட்கள் தனக்காக ஒருத்தி காத்திருக்கிறாள் என்பதே எத்தனை அழகான ஒரு உணர்வு அதை அவனுக்குக் கொடுத்துக்கொண்டேயிருந்தாள் சக்திப்ரியா.
அவள் இயல்பாகக் காதலாக அவனுக்குச் செய்தாள் அது அவனுக்குப் பெரிய விஷயம் இதுவரை கிடைக்காத அன்பும் அரவணைப்பும் காதலும்… நாட்கள் உருண்டோட ஆறு மாதங்கள் முடித்திருந்தது.
ஷர்மிக்கு வளைகாப்பு செய்வதை பற்றிப் பேச்சு எழுந்தது சுந்தரேசனின் திதி வருவதால் அது முடிந்து செய்யலாம் என்று பவுனுத்தாயி சொல்லிவிட அன்றைய நாள் பெரிய கலவரமே நடந்து முடிந்தது கவிதாவின் செயலால்.
error: Content is protected !!