Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 5

“பிரியம் பார்லர்”   தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டையில் புதியதாகத் தொடங்கப்பட்டது பஜாரிலிருந்து கொஞ்சம் தள்ளி இடம் வாங்கியிருந்தார் மகேந்திரன்.

 

 

மகளுக்கு அதில்தான் விருப்பம் என்று தெரிந்துவிட்டது,  மற்ற பிள்ளைகள்போல மகளும் ஏதேனும் பெரிய படிப்பிற்கு செல்லுவாள் அதற்க்கு சேமிப்பு வேண்டும் என்று கணவனும் மனைவியும் ஒரு பெரும் தொகையைச் சேமித்துவந்தனர் பத்தாம் வகுப்பு முடிந்து அடுத்து என்ன என்று கேட்டபோதே தெளிவாகச் சொல்லிவிட்டாள்.



Advertisement

 

Advertisement

“பார்லர் தான் வைப்பேன் லக்மே அகாடமியில் சேர்த்துவிடுங்கள்”   என்று,   பள்ளியை முழுதாக முடித்துவிட்டு போ என்று கூறினார்கள் பெற்றவர்கள் ஆகையால் அடுத்த இரண்டு வருடங்களையும் படித்துமுடித்தாள் பிறகு ஒருவருட பயிற்ச்சி அதன் பிறகு சிகை அலங்கார பயிற்ச்சி தனியே என்று கற்றுக்கொண்டாள்.

Advertisement

 

Advertisement

இனி சொந்த ஊரில் வசிக்கப்போகிறோம் என்றதும் தம்பியிடம் சொல்லி இடம் பார்க்கசொல்லியிருந்தார் மகேந்திரன் அப்படி சொந்தமாகவே இடம் வாங்கி மகளுக்காக அனைத்துவசதியும் உள்ள பார்லர் கட்டிடத்தைக் கட்டிக்கொடுத்து பொருட்களையும் வாங்கிப்போட முடிவு செய்ய.

 

“பாதி பணம் நான்தான் கொடுப்பேன்”   என்று மகள் ஒரே அடம் பாங்கில் லோன் போட்டுக்கொண்டாள்  “நீங்களே செஞ்சுட்டா எனக்குப் பொறுப்பு வராதுப்பா”  என்ற மகளைப் பார்க்கப் பெருமையாகக்கூட இருந்தது அவருக்கு.

 

இடத்தை மகள் பேரில்தான் வாங்கியிருந்தார் கீழே முழு தளமும் நாட்டிய பள்ளிக்குக் கொடுத்து மேல் தளம் முழுதும் பார்லர் என்று ஒதுக்கிக் கட்டியிருந்தனர்,  திறப்பு விழா விமர்சியாகவே நடந்தது வீடு வீடாக நோட்டீஸ் போடப்பட்டது மகளுக்காக இறங்கி வேலை செய்தார் மகேந்திரன்.

 

ஆயிற்று பார்லர் திறந்து மூன்று  மாதங்கள் முடிவடைந்துவிட்டது எதிர்பார்த்ததைவிட நன்றாகவே சென்றது.

 

“இதுலேயிருந்து உனக்கு என்ன தெரியுது”  என்றாள் நிர்மலா சக்திப்ரியாவிடம்.

 

“என்ன தெரியுது”  என்றிவள் கேட்க.

 

“பட்டி டிங்கரிங் பாக்காம இப்போ பாதி பேர் வெளிலயே போறதில்ல அதான் உன் காட்டுல மழை”  என்றாள் நிம்மி.

 

“பொறாமையில பொங்காத டி”  என்றவள்   “இன்னும் உன் பிரென்ட் சித்ரா வரல”  என்றாள் நிம்மியை முறைத்துக்கொண்டு.

 

“அவங்க அண்ணாக்கு”   என்று அண்ணாவில் அழுத்தம் கொடுத்த நிம்மி   “பிடிக்காதாம்”   என்றவள் நக்கலாகச் சிரித்து   “பார்லர் போறதே பிடிக்காதாம் இதுல பார்லர் வெச்சு நடத்துற உன்னை…”  என்று சிரிக்க.

 

கையிலிருந்த பிரஷை அவள் மூக்கை குறிபார்த்து எறிந்தாள் சக்திப்ரியா சட்டென்று கீழே குனிந்துகொண்ட நிம்மி   “ஆத்தி ஜஸ்ட் மிஸ்சு”  என்றவள்.

 

“தங்கச்சி வரலைனா என்ன அதான் தம்பியைக் கரெக்ட் பண்ணிட்டியே”  என்க.

 

“எடு செருப்ப”  என்ற ப்ரியா   “என்ன கருமத்தடி பேசுற”   என்றாள்.

 

“ஏய்… நான் சரியா சொன்னேன் நீ தப்பா அர்த்தம் பண்ணிகிட்ட,  நான் சொன்னது அந்த அர்னால்டு கூடவே சுத்துமே ஒரு அப்பரசன்ட் முத்துப்பாண்டி அவனை”   என்ற நிர்மலாவை இப்பொழுது உண்மையிலே முறைத்தாள் சக்திப்ரியா.

 

“ஒழுங்கா மரியாதை குடு நிம்மி அவங்க நம்மளவிட பெரியவங்க”  என்க.

 

“சரிம்மா பாசமலரே அதான் அர்னால்டு பத்தி சொல்ல ஆள் இருக்கே அப்புறம்  எதுக்கு அவளை வேற கேக்குற”  என்றாள்.

 

“முத்துப்பாண்டி அண்ணன் வீட்டுக்குள்ள போகமாட்டர்ல அதுக்குதான்”  என்றாள்.

 

“இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ தெரியல இது சரியாவராது பிரீ சொன்ன கேளு வீணா மனசுல ஆசையை வளத்துக்காத,  முதல்ல அர்னால்டு ஒத்துக்கணும் அப்புறம் அவங்க வீட்டில… முக்கியமா நம்ம வீட்ல,  எங்க அப்பாவை யோசிச்சுப்பாரு அவரு குடும்பத்துல பொறந்துட்டு  உனக்கெல்லாம் காதல் வரலாமா” என்றாள் நிர்மலா.

 

அவளுக்கு எந்தப் பதிலையும் சக்திப்ரியா கூறவில்லை முத்துபாண்டியும்  இதையேதான் சொன்னான்  “வேண்டாம்மா அண்ணா ஒத்துக்க மாட்டார் அவருக்கு இந்தக் காதல் கல்யாணம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல வீணா உன் வாழ்க்கையை கெடுத்துக்காத”  என்றான்.

 

அவளின் மீது கொண்ட அக்கறையில்தான் புரிந்தது,  முத்துபாண்டியிடம் பேசத்தொடங்கியதே சிவபாலனுக்காகத்தானே முத்துவை எங்குப் பார்த்தாலும் ஸ்நேகமாய் புன்னகைத்து   “ஹாய் அண்ணா”  என்பாள்.

 

முதலில் தயக்கமே முத்துவுக்கு   ‘தன்னிடமா பேசுகிறாள்’   என்று அவனும் அவளைப் பார்த்துப் புன்னகைக்க தொடங்கினான் ஒரு நாள்   “பிரெண்ட்ஸ்”  என்று அவள் கை நீட்ட.

 

“நான் எப்படிம்மா?  என் கையெல்லாம் நீங்கப் பிடிக்கக் கூடாது”   என்றான் பின்  நகர்ந்து, அப்படியெல்லாம் பெண் பிள்ளைகளைத் தொட்டு பேசமாட்டார்கள் அதோடு தராதரம் பார்த்து மட்டுமே ஆட்களோடு பேசும் செல்வராஜின் அண்ணன் மகள் அதுவே அவனைத் தள்ளி நிறுத்தியது.

 

அவள் விடவில்லை   “அட தங்கச்சிகிட்ட என்ன”   என்றவள் அவன் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு பேடா ஒன்றை அவனுக்குக் கொடுத்துவிட்டு சென்றாள்.

 

இத்தனை மாதங்களில் பல இடங்களிலும் சிவபாலனை பார்த்த்ருக்கிறாள் தூர நின்று அவனை விழிகளில் நிரப்பிக் கொள்வாள் அவ்வளவே சில நேரம் முத்துவிடம் எங்கே இருக்கிறார் என்று கேட்பாள் முதலில் எல்லாம் சொல்லவே மாட்டான்.

 

“சொன்னா கேளு பிரியாமா அவருக்கு இதெல்லாம் பிடிக்காது எல்லார்கிட்டேயிருந்தும் தள்ளித்தான் நிப்பார்,   இவனுங்கதான் காரணம் எவ்ளோ பேச்சு தெரியுமா நிறைய அவமானப்படுத்தியிருக்குனானுங்க அவளோ கோவம் தனிமைன்னு நிறையா பாத்துட்டார்”.

 

“தொழில்ல வளர்ந்து ஆளும் கொஞ்சம் வந்து பாருன்னு நிக்கவும்தான் இப்போல்லாம் ஒருத்தனும் நேர்ல நின்னு பேசுறதில்ல அப்படியும் பின்னாடி பேசுறவனுங்க இருக்காங்க அதையெல்லாம் அவர் கண்டுக்கமாட்டார்”.

 

“பல வருஷ கோபம் வெறுப்புன்னு உள்ள நிறைய இருக்கு அவருக்கு,  அவர் கோபத்தையெல்லாம் உன்னால தாங்க முடியாது பின்னாடி நீ வருத்தப்படக் கூடாது முக்கியமா உன்னால அண்ணா வருத்தப்படக் கூடாது   வேண்டாம்”   என்றான்.

 

கதிர் ஷர்மிளா நிச்சயம் முடிந்த பிறகுதான் அவள் கேட்டால் உதவ தொடங்கினான்,  இவள் பார்லர் தொடங்கி இருபதாம் நாள் ஷர்மிளா அவளின் தோழியோடு வந்திருந்தாள்   “இன்னும் ரெண்டு வாரத்துல எனக்கு நிச்சயம் உங்ககிட்ட நல்லா இருக்குன்னு பிரெண்ட்ஸ் சொன்னாங்க அதான் பாக்கலாம்னு”  என்றாள்.

 

“கண்டிப்பா”  என்றவள்   “சாரி பிளவுஸ் கொண்டு வந்திருக்கீங்களா அதைப் பார்த்தா என்ன மாதிரி மேக்ப்பனு ஒரு ஐடியா  கிடைக்கும்”   என்றவள் சில போட்டோசை அவளின் மடிக்கணினியில் காண்பித்தாள்.

 

“இதெல்லாம் நீங்கச் செய்வீங்களா”   என்றாள் ஷர்மிளா விழிகள் விரித்து.

 

“அதுக்குதானே இங்க இருக்கேன்”   என்ற சக்திப்ரியா   “இது எல்லாமே நான் பண்றதுதான் நீங்கச் செலக்ட் பண்ணுங்க வேணும்னா சின்னதா ஒரு மேக்கப் டெஸ்ட் செஞ்சு பாக்கலாம் பிடிச்சிருந்தா அட்வான்ஸ் பேப்பண்ணிடுங்க”   என்றாள்.

 

அவளுக்கு அவளின் திறமைமீது அபார நம்பிக்கை,  இரண்டுவருடங்களாகப் பெங்களூரில் பிரபலமான சலூனில் வேலையும்  செய்திருந்தாள் அவள் காட்டிய புகைப்படங்களில் புதியதான பல சிகை அலங்காரம் புடவை கட்டு மேக்கப் என்று அத்தனை அழகாக இருந்தது.

 

“ஒருநிமிஷம்”   என்றவள் வீட்டிற்கு அழைத்துப் புடவையைக் கொடுத்துவிட சொன்னாள்,  சிறிய அளவில் அவள் கேட்டபோலச் சிகை அலங்காரம் மேக்கப்  செய்து காண்பிக்க ஷர்மிளாவிற்கு அத்தனை திருப்தி நிச்சயத்திற்கு புக் செய்துவிட்டே சென்றாள்.

 

சக்திப்ரியாவிற்கு அப்பொழுது தெரியாது இது சிவபாலன் வீட்டு விசேஷம் என்று,   காலையே அந்த மண்டபம் சென்றுவிட்டாள்  ஜனக்கட்டு அதிகம் ஆகையால் மண்டபத்திலே வைத்துவிட்டார்கள் மண்டபத்தை அடைந்தவள் விழிகளில் முதலில் பட்டது அந்தக் கருப்பு நிற மஹிந்திரா தார் அதன் முகப்பில் கம்பீரமாக வீற்றிருக்கும் சூலத்தோடு உடுக்கையும்.

 

அவனின் வண்டி சக்திப்ரியாவின் விழிகள் அலைபாய்ந்தது வந்திருக்கிறானா தெரிந்தவர்களா சொந்தமா இல்லை வேறு ஏதேனும் வேலையாக வந்திருப்பானா என்ற சிந்தனைதான் அவனை எங்கேயும் காணவில்லை.

 

இவள் நேரே மணமகள் அறைக்குச் சென்றாள் அதன் பிறகு நேரமெல்லாம் பெண்ணைத் தயார் செய்வதிலே சென்றது மெல்ல மெல்ல ஆட்கள் வரத் தொடங்கினர் இவள் புடவை மடிப்பை கீழே அமர்ந்து சரி   செய்துகொண்டிருந்தபோது உள்ளே வந்தார் அன்புக்கரசி.

 

முதலில் மருமகளைத்தான் பார்த்தார்   “ரொம்ப அழகா இருக்கமா”   என்றவர் அப்பொழுதுதான் நிமிர்ந்துபார்த்த சக்திப்ரியாவை கண்டுவிட்டு   “பிரியாமா நீ எங்க இங்க”  என்றார்.

 

“நான் தான் மேக்கப் பண்ணேன் ஆண்ட்டி”   என்றவள்   “நீங்க என்ன இங்க உங்க சொந்தமா”  என்றாள் ஆர்வத்தை அடக்கிச் சிவபாலனும் வந்திருக்கிறான் அப்படி என்றால் நெருங்கிய சொந்தமோ என்று.

 

“ஆமாடா எங்க வீட்டுக்கு மருமகளா வரப் போறா ஷர்மி … என் பையன் கதிருக்கும் ஷர்மிக்கும்தான் இன்னைக்கு நிச்சயம்”   என்றதும் அவரை அதிர்வோடு பார்த்தாள் சக்திப்ரியா.

 

‘மகன் என்றால்?  அந்தப் பையன் ஆனால் இவன் இளையவன் அல்லவா இவனுக்கு நிச்சயம் என்றால் மூத்தமகன்’  என்ற கேள்வி அவளுள் எழுந்தது.

 

‘அவனுக்கு இப்போ கல்யாணம் ஆகணுமா உனக்கு’  என்றது மனசாட்சி   ‘இல்ல ஆனா அவருக்குக் கல்யாணம் ஆகலேயே வேண்டாம்னு பிடிவாதமா நிக்குறாரோ’  என்று அவள் குழப்பத்தில் நிற்க.

 

“பொண்ணை கூப்பிடுறாங்க”   என்ற சத்தத்தில் ஷர்மிளாவை அழைத்துக்கொண்டு அனைவரும் சென்றனர் இவள் வேகமாக ஜன்னலின் அருகில் சென்று மேடையைப் பார்த்தாள்,  அனைவரும் நின்றிருந்தனர் யார் யார் என்று தெரியவில்லையென்றாலும் பெண்ணின் சொந்தம் மாப்பிள்ளையின் சொந்தம் என்று இருபக்கமும் நின்றனர்.

 

அவன் மட்டும் இல்லை மனதை என்னவோ செய்தது வேகமாக விழிகள் சுழன்றது நின்றிருந்தான் மேடைக்குக் கீழே ஒரு பக்கமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு அதே உணர்ச்சிகள் காட்டாத முகத்தோடு நிலைத்துவிட்டது அவள் விழிகள் அவனிடமே.

 

அருகிலே நின்றிருந்தான் முத்துப்பாண்டி மேடையில் ஏதோ பேசிக்கொண்டார்கள் கேலி சிரிப்பு என்று அமர்க்களப்பட்டது,  தன்னை குத்தீட்டியாய் குத்திக்கொண்டிருக்கும் பார்வையை அவன் அறிவான் சில நாட்களாக அவனை அது தொடர்வதும் அவன் அறிந்ததே.

 

‘ஆனால் இங்கே எப்படி’  என்ற யோசனை ஓடியது  அசையாமல் நின்றான்,  ஒருகட்டத்தில் அவனால் முடியவில்லை  சட்டென்று திரும்பிப் பார்த்தான் அவள்தான் ஜன்னலில் சாய்ந்து கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி நின்றிருந்தாள்.

 

அவன் பார்த்து விட்டானே என்று அவளிடம் எந்த விதமான படப்படப்போ பதட்டமோ இல்லை அதே பார்வை உன்னைத் தான் பார்க்கிறேன் உன்னை மட்டுமே பார்க்கிறேன் என்று நின்றிருந்தாள்,  அவன் முகத்தில் கடுமை ஏறியது.

 

‘யாரை இப்படி பாக்குறாரு’  என்று எட்டி பார்த்த முத்துப்பாண்டி   ‘அட நம்ம தார்வாட் பேடா’   என்று வேகமாக அவளைப் பார்த்துக் கை அசைக்க அவளும் சிரிப்போடு கையை அசைத்தாள்.

 

சிவபாலன் திரும்பி இவனை முறைக்க மேடையைப் பார்த்துத் திரும்பிக்கொண்டான் முத்துப்பாண்டி,  அதற்குள் பெண்ணிற்கு பரிசப்புடவையைக் கொடுத்திருக்க அதைக் கட்டும் வேலையைச் செய்தவள் கொஞ்சமாக டச்சப் செய்துவிட்டு அனுப்பிவிட்டாள்.

 

உடன் உதவிக்கு ஒரு பெண்ணும் வந்திருந்தாள்  அங்கே மேடையில் போட்டோ எடுத்துக்கொண்டிருக்க “சாப்பிட்டு போமா”   என்றார் பெண்ணின் தாய்.

 

“சரிங்க”   என்றவள் அவளுடைய பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள்,  அன்புக்கரசைக்கு அவளிடம் சரியாகவே பேசமுடியவில்லையே என்ற சிறு வருத்தம்.

 

மெல்ல அறை பக்கம் வந்தவர்   “ரொம்ப அழகா செஞ்சிருந்தடா ரொம்ப நல்லா இருந்துச்சு,  முடி கட்டியிருந்தது புதுசா இருந்துச்சு”   என்றவர்   “சாப்பிட்டுத்தான் போகணும்”  என்க.

 

“ஹ்ம்ம் சரி ஆண்ட்டி நீங்க அங்க பாருங்க வேலை இருக்கும்”   என்று அவரை அனுப்பி வைத்தாள்,   அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு பேகை ஓரமாக வைத்தவர்கள் உணவு பரிமாறும் இடம் சென்றனர்.

 

சக்திப்ரியா எப்பொழுதுமே இது போன்று செல்லும்போது  சாப்பிடமாட்டாள் நாசுக்காக மறுத்துவிட்டு வந்துவிடுவாள் இன்று அவன் வீட்டு விசேஷம் என்றுதான் சாப்பிட சென்றாள்.

 

சிவபாலன் அங்குதான் நின்றான் மேற்ப்பார்வை பார்த்துக்கொண்டு   “வாம்மா தங்கச்சி”   என்ற முத்துவின் குரலில் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

 

“நீதான் பொண்ணுக்கு பெயிண்ட் அடிச்சதா”   என்றவனை இவள் முறைக்க அருகில் நின்ற பெண் சிரித்தாள்     “சரி சரி வா சாப்பிடு” என்றவன் ஒரு இடத்தைப் பிடித்துக்கொடுக்க.

 

சிவபாலனை பார்த்துக்கொண்டே நின்றவள்   “உங்க அண்ணன் இங்க சாப்பிடுவாரா”   என்றாள்.

 

“இங்கன்னு இல்ல எந்த விசேஷத்திலயும் சாப்பிட மாட்டார்”   என்றான்.

இவள் கேள்வியாக அவனைப் பார்க்க    “அவரும் சாப்பிட மாட்டார் யாரும் அவரைக் கேட்கவும் மாட்டாங்க” என்றான்.

 

“அக்கா ஒக்காருங்க”   என்ற பெண்ணைப் பார்த்தவள்   “பசிக்கல நீ சாப்பிட்டு வா நான் வெய்ட் பண்றேன்”   என்று நடந்துவிட்டாள்.

 

“பிரியாமா நில்லு”   என்று பின்னையே  வந்தான்  முத்துப்பாண்டி இவர்களின் மீது ஒரு கவனம் வைத்திருந்த சிவபாலன்   “இங்க எவ்ளோ வேலை கெடக்கு அங்க என்ன வெட்டிப்பேச்சு இவனுக்கு”   என்று பல்லைக் கடித்தான்.

 

“ஏன் சாப்பிடாம போறமா”   என்ற முத்துபாண்டியை திரும்பிப் பார்த்தவள் சிவபாலனை பார்த்துக்கொண்டே   “அவர் என்னைக்கு பந்தியில ஒக்காந்து சாப்பிடுறாரோ அன்னைக்கு அவர் கூட நானும் சாப்பிடுவேன் அண்ணா”   என்றவளுக்கு என்ன முயன்றும் விழிகள் கலங்கிவிட்டது வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள்.

 

முத்துப்பாண்டி அப்படியே நின்றுவிட்டான்   “டேய்”   என்ற சிவபாலனின் அழைப்பில் வேலையைப் பார்க்க நகர்ந்தான்,  அன்புக்கரசி கேட்டபோது சாப்பிட்டோம் என்றுவிட்டாள் சக்திப்ரியா அந்தப் பெண்ணும் சாப்பிட்டு வந்துவிட வண்டியை எடுத்துக்கொண்டு வந்து மண்டப வாசலில் நிறுத்தினாள்.

 

அவர்களை நெருங்கிய முத்துப்பாண்டி   “நாளைல இருந்து மூணு நாள் ஏரி ஓரத்துல இருக்குற பார்க்ல வேலை நடக்கபோவுது அண்ணா அங்கதான் இருப்பார் எட்டு மணில இருந்து  பண்ணெண்டு மணிவரைக்கும்”   என்றான்.

 

மெல்ல அவள் இதழ்கள் விரிய அவனையே பார்த்திருந்தாள்    “நீங்கச் சேர்ந்து சாப்பிடுற நாள் உங்க கல்யாண நாளா இருக்கணும், ஒருத்தனையும் பக்கத்துல விடாம நானே உங்களுக்கு என் கையாள பரிமாறுவேன்”    என்றவன் குரல் கூடக் கலங்கியிருந்தது  அடைத்த தொண்டையயும் நிறையும் விழிகளையும் முயன்று கட்டுப்படுத்தியவள் அங்கிருந்து சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!