Skip to content
Post Views: 430
காதல் – 8
பெண்கள் இருவரையும் பாலாஜியுடன் கல்லூரியின் பின் வாசலில் காத்திருக்குமாறு சொன்னவன், பாலாஜியிடம் கார் சாவியை வாங்கிகொண்டு காரை எடுத்து வருகிறேன் என்று கிளாம்பிவிட்டான்..
வென்முகிலின் அருகில் அவனால் எதுவும் காட்டிகொள்ளாமல் இருப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எங்கே தன்னை மீறி தன செய்கை எதேனும் வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்தே பாலாஜியிடம் தான் வண்டியை எடுத்துவருவதாய் சொல்லி வந்திருந்தான். அதுவும் விதுனா வேறு அவ்வப்பொழுது கண்களில் சிறு யோசனையுடன் பார்ப்பது போல் இருந்தது.
அவள் மனதில் வேறு யாரும் இல்லை என்று அறியும் முன்னர் தன்னை பற்றியோ, முதற் பார்வையிலேயே இடறி விழுந்த மனதை பற்றியோ அவள் அறிந்துகொள்வதை விரும்பவில்லை.
Advertisement
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வென்முகிலின் “சதிஷ் வருவான்” ஒரு வித பொறாமையை எற்படுத்தியிருந்தது.
அவனின் மனதிற்கு தெரியும் தான் எரிச்சல் படுவதில் அர்த்தம் இல்லை. அவள் மனதில் வேறு ஒரு ஆண் இருக்கலாம்.. அதுவும் கல்லூரி மொத்தமும் அவளின் நடனதின் பொழுது அவள் பேர் சொன்னதும் எழுந்த ஆரவாரம் அவள் கல்லூரியில் எந்த அளவிற்கு பிரபளம் என சொல்லாமல் சொல்லியது! பசங்களின் மத்தியில் அவளுக்கு இருக்கும் கிரேஸை அவனுக்கு தெரியவைத்திருந்தது.
அவனும் இந்த பருவத்தை தாண்டி வந்தவன் தானே!
Advertisement
ஆனால் ஏற்றுக்கொள்ள தான் முடியவில்லை! என்ன தான் அவனின் அனலிடிக்கல் பிரைன் இதையெல்லாம் எடுத்து சொன்னாலும் அவனின் ஆள் மனது அவளின் மனதில் யாரும் இல்லை என்று அடித்துக்கொண்டது. அது ஆசை கொண்ட மனதின் பேராசையாக இருக்க கூடாது என்றே முதலில் அவளை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினான்.
Advertisement
பாலாஜியின் காரை அடைந்தவன் பின் சீட்டில் வைத்திருந்த அவனின் ட்றாவல் பாகை எடுத்து பூட்டில் வைத்துவிட்டு அவர்கள் நிற்கும் இடத்தை அடைய, பாலாஜி முன்னால் ஏறிகொள்ள, பெண்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்ந்தனர். சிறிது நேரம் அமைதியாய் கலிய, பாலாஜிதான் முதலில் “வென்முகில், உங்க பெர்ஃபார்மென்ஸ் வாஸ் ஆவ்சொம்.”
“தான்க்ஸ்” என முறுவளித்தவள்
“என்ன மேடம், நீங்க எதுவும் பண்ணலையா?” என சும்மா இருந்த விதுனாவை வம்பிற்க்கு இழுக்க தன் சீட்டிற்கு பின் புறம் அமர்ந்திருந்த விதுனாவை பார்ப்பதற்காக சீட்டில் திரும்பி ஒரு சைடாக காலை சீட்டில் மடித்து உட்கார
Advertisement
“என்ன பண்றது சீனியர், நான் எல்லாம் உங்க இனம் தான். அப்பறம் இவங்க எல்லாம் ஆடுறதுக்கு கை தட்ட ஆள் வேண்டாமா? அதுனால நான் “பெருந்தன்மையாயாயாயா….” ஸ்டேஜை விட்டுகொடுத்துட்டேன்.” என குரலில் கிண்டல் வழிந்தோட சொன்னவள். “சார் எப்படி? என்ன மாதிரி பெருந்தன்மையா?” என புருவங்களை உயர்த்த
“ஹெய் விதுனா, என்னது இது?” என வென்முகில் கண்டன குரலில் அவளை அடக்க முயல
“பரவாயில்லை மேஹா! உன் அளவிற்கு பெருந்தன்மை இல்லைம்மா நான்! ”
“ப்ளீஸ், அந்த மேஹாவ விட்டுடுங்களேன். எதோ பேர் கேட்டதும் இனிமே எங்கே பார்க்கபோறோம்ன்னு சட்டேன தொன்றிய பேரை சொல்லிட்டேன்.”
“இந்த மாதிரி தற்காப்புகள் இப்பொவெல்லாம் தேவையா இருக்கு! I hope you understand” என படபடவேன் சொல்லி முடிக்க…
“ஹேய், கூல் சும்மா கிண்டலுக்காக அப்படி சொன்னேன். No hard feelings… I can totally understand. ” என்று அவளை சமாதானம் படுத்த முயன்றான்.
வீரேஷின் பார்வை ரியர் வியு கண்ணாடியில் அவளின் பதட்டமான முகத்தை அளந்தது. என் ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸாக இருக்கா? அவளின் முகத்தில் இருக்கும் பதட்டம் அவனை யோசிக்க வைத்தது.
இருவரின் பார்வையிம் ஒரே நேரத்தில் சந்திக்க சட்டென பார்வையை கண்ணாடிக்கு வெளியே திருப்பியவள் பதட்டத்தில் சில வருடங்காளாக மறந்திருந்த அவளின் நகம் கடிக்கும் பழக்கத்தை மீட்டவள் அவளின் கட்ட விரலில் இருக்கும் நகத்தை பதம் பாக்க ஆரம்பிக்க அதுவரை அமைதியாய் இருந்த வீரேஷ், “என்னம்ம விதுனா, ஹாஸ்ட்டல்ல சாப்பாடு எல்லாம் போடுறது இல்லையா?”
“அது போடுவாங்க, அது சாப்பாடா இல்லை வேறு எதுவுமான்னு சாப்டுட்டு தான் முடிவு பண்ண முடியும். ” என அழுத்துக்கொள்ள வாயில் இருந்து படகென்று கையை எடுத்தவள் நிமிர்ந்தே பார்க்காமல் மனதிற்குள் விதுனாவை தாளித்துக்கொண்டிருந்தாள், “ஒரு வார்த்தை கேட்டா ஒரு மணி நேரம் பேசுறத எப்போ தான் நிறுத்துவாளோ! இவளை வச்சுகிட்டு!” என பொறுமிக்கொண்டிருக்க
“இன்னைக்கு ஒரு நாள் இங்கயே சாப்பிடுறுக்கலாமே?” மோசமான சாப்படு அதையும் இவ்வளவு நேரம் சென்று சாப்பிட்டால் அது எப்படி இருக்கும் என்று எண்ணியபடியே பாலாஜி கேட்க்க,
“யார் ரூல்ஸ்கிட்ட வாங்குறது?” வென்முகில் கோபத்தில் இவளை தாளிப்பது தெரியாமல் மேலும் அவளை வம்பிழுக்க
பாலாஜி, “ரூல்ஸ் யாரு வார்டனா?”
“விது! இப்போ வாயை மூடலைன்னா அடி பிண்ணிடுவேன்” என இதுவரை இருந்த பொறுமையை துறந்து விதுனாவை கையில் நறுக்கேன்று கிள்ள. “எருமை எப்படி கிள்ளுற! அரை கிலோ சதையை மொத்தமா எடுத்துட்டா” என்று விதுனா அலறிய அலறலில் முன்னால் இருந்த ஆண்கள் இருவரும் சத்தமாய் சிரிக்கவே ஆரம்பித்திருந்தனர்.
“மிச்ச சண்டையை இருவரும் உள்ள போய் டின்னர் முடிச்சுட்டு திவ்யமாய் போடுங்க” என கூறிபடி வீரேஷ் வண்டியை நிறுத்த
இருவரும் கிழே இறங்கும் முன், வென்முகில் வீரேஷிடமும் பாலஜியிடமும், “தன்க்ஸ் சார்! ட்ராப் செய்ததுக்கு! Have a safe journey back!” என்று கூறியபடி இறங்க முற்பட
வென்முகிலின் நன்றி நவிலலை ஒரு சிறு தலை அசைப்புடன் ஏற்ற வீரேஷோ குறும்பு கூத்தாடும் குரலில், “விதுனா, அந்த ரூல்ஸ் யாருன்னு சொல்லவே இல்லையே!”
“ஏன் சீனியர், நான் உயிரோடு இருக்குறது உங்ளுக்கு பொறுக்கலையா? போங்க சார் போய் புள்ள குட்டிய படிக்க வைங்க!” என கடுபடிக்க
“புள்ள குட்டிய படிக்க வைக்க முதல்ல கல்யாணம் ஆகனுமாமே” என்று கூறியபடி கண்ணாடியில் வென்முகிலை பார்க்க வென்முகிலோ இதை கவனித்தாலா இல்லையா என்று புரியாத பாவத்தோடு அவளின் பைகளை சேகரித்துக்கொண்டு இறங்க ஆயத்தமாக
விதுனாவோ, “சுத்தம் சீனியருக்கு ரொம்ப முத்திடுச்சு!” என எண்ணியபடி, “அப்படிதான் போல!”
“ரொம்ப நன்றி சீனியர்! நீங்க மட்டும் இல்லை, இந்நேரத்திற்கு என்னய நடக்கவிட்டுருப்பா! என்ன காப்பத்திய புண்ணியம் உங்கள தான் சேரும்!” என கலகலத்த படி இறங்க இருவரும் காரில் இருந்தபடி அவர்களுக்கு விடை கொடுக்க..
ஹாஸ்ட்டல் கேட் தாண்டி உள்ளே செல்லும் வரை நின்று பார்த்துக்கொண்டிருந்தவன் வண்டியை திருப்பி கிளப்பினான்.
“என்ன மச்சான் சர்பிறைஸ் எப்படி?” என வீரேஷின் முகம் பார்க்க
“நீ சர்பிரைஸ்ன்னு சொல்லும் பொழுத் கூட நான் இதை எதிர்பார்கலை டா! எதாவது இன்பர்மேஷன் தெரிஞ்சுருக்கலாம்ன்னு நினைத்தேனே தவிர சத்தியமாய் நம்ம காலேஜிலேயே எதிர்பார்க்கவே இல்லை.” என முகமும் குரலும் விகசிக்க கூறியபடி ஒற்றை கையால் அவனைன் தோழில் கை போட்டு நெருக்கி கொண்டான்.
“ ஆனா! அவளுக்கான ஆரவாரத்தை பார்த்தல்ல! இப்படி இருக்கும் பெண் யாரையும் காதலிக்காமல் இருக்கனுமே? காலேஜ் நாட்களை பற்றி தெரியாதா? சும்ம போய் தொல்லை பண்ற மாதிரி ஆகிடகூடாது. நாளைக்கு முதல் வேலையா திலிபிடம் பேசனும்.” அவனின் தொழில் முறை நண்பன் டிடக்டீவ் எஜேன்ஸி வைத்திருப்பவன் அவ்வப்பொழுது தொழில் சம்பந்தமாக மீட் செய்த வகையில் பழக்கம்.
“யாரையும் காதலிக்கவில்லை என்றால் தடை எதுவும் இல்லை. ஆனால் சப்போஸ் யாரையாவது காதலித்துக்கொண்டிருந்தால் கண்ணியாமாய் ஒதுங்குவது தான் முறை! ஆனால் அதை நினைத்தால் தன் மனதிற்குள் பாரமாய் ஏதோ அழுத்துவது போல் இருக்கு.” என மனதை மறக்காமல் சொல்லிக்கொண்டே வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான்.
மனதில் நினைப்பதை எந்த ஒரு அலங்கார பூச்சுகளும் இல்லாமல் பகிர்ந்துகொள்ள வாழ்க்கயில் ஒரு நட்பேனும் இருக்க வேண்டும். அந்த வகையில் வீரேஷ் உண்மையிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி தான்.
அதை சொல்லும் பொழுது அவன் குரலில் இருந்த வலி அதில் விரவியிருந்த பரிதவிப்பு பாலாஜிக்கு அவனின் நிலையை எடுத்து சொன்னது. அப்பொழுதும் அவனின் வேறு ஒருவனை காதலிக்கும் பெண்ணை தான் தொந்தரவு செய்யக் கூடாது என்கின்ற அவனின் நேர்மை அவனை அசைத்தது தான் உண்மை.
“எதுவும் தெரியும் முன்னர் எதுக்குடா தேவையில்லாதை எல்லம் நினைச்சு குழப்பிக்கிற? எனக்கு என்னமோ அந்த பெண் யாரையும் காதலிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது! நீ வேனா பாரு உன்னை மாதிரியே அதுவும் “keeping a clean slate”-நு தான் இருக்கும்.”
“பார்க்கலாம் டா! I am hoping so too! சரி அதெல்லாம் இருக்கட்டும் உன் இகியுவேஷன் என்ன வித் விதுனா? ரொம்ப உரிமை எடுத்துக்கிறது மாதிரி இருக்கு? அந்த பொண்ணும் சரிக்கு சரியாய் உன்கூட வாயாடுது! ஏதோ ரொம்ப நாள் பழக்கம் போல? என்ன நடந்தது! அவுட் வித் இட் மேன்!” என அவனின் எண்ணம் பற்றி அறிந்துகொள்ள அவனை இடது கையால் அவனின் வலது தொடையில் ஒரு தட்டு தட்ட!
“நீவேற எண்டா! ” என்று அன்று நடந்தை சொல்ல, “ஆனால் அந்த பொண்ணு என்னை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு ஒரு லுக்கு கொடுத்தது பாரு! நம்மளையெல்லாம் பார்த்தா அப்படியா இருக்குன்னு நொந்துபோய்டேன் தெரியுமா?” என தலையில் கை வைத்து அலுத்துக்கொள்ள
“வென்முகிலாவது பெயரை மாத்தியாவது சொன்னுச்சு! இது கடைசி வரை பேரையே சொல்லலியே! ஆன ஒரு வார்த்தை பேசின ஒன்பது வார்த்தை திரும்ப பேசுவா… அது ஒரு வித்தியாசமான மேக்டா!” என சிலாகித்தவனை திரும்பி பார்த்த வீரேஷ் “சர்ர்ர்ர்ர்ரி! முத்திடுச்சு! ஆனால் முகில் சரியான அழுத்தம் போல! விதுனா அப்படியில்ல சோ ஒனக்கு கொஞ்சம் ஈசியாக தான் இருக்கும் ” என கண்களால் சிரிக்க
“எனக்கு என்னமோ ரெண்டும் ஒரே வகை தான்னு தோனுது! என்ன வென்முகில் ரொம்ப பேசமாட்டாங்க போல ஆனால் விதுனா பேசினாலும் ரெண்டு பேர்க்கிட்ட இருந்தும் மருந்துக்கு கூட விஷயம் வாங்க முடியிரதுல்ல!”
பாலாஜியின் வீட்டில் அனைவரும் ஏதோ விஷேஷதிற்கு திருப்பதி சென்றிருக்க வீடு மிக அமைதியாய் இருந்தது. இருவரும் அதிகாலாயில் விமான நிலையம் செல்ல வேண்டி இருப்பதினால் இருவரும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவர் அவர் அறையில் படுக்க சென்றனர்.
படுக்க செல்லும் முன் வீரேஷ் திலிபிற்கு “need to talk – personal” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட மனதிலும் கண்களிலும் வென்முகிலின் டான்ஸ் மட்டுமே நிறைந்திருந்தது.
நடணம் ஏற்படுத்திய இனிமையான நினைவில் முகத்தில் உறைந்த சிரிப்புடன் கண்ணயர, கண்களுக்குள் கனவிலும் அவள் முகமே! பதட்டமாய், சினேகமாய், காதலாய், சிருங்காரமாய், வாஞ்சையாய் என அவள் முகம் காண்பித்த பாவனையில் மொத்தமாய் சுருண்டிருந்தான்.
அதிகாலை விமானத்தில் மதுரையில் இருந்து சென்னை கிளம்பியவன் திலிப்பை அலுவலகத்தில் சந்திக்கிரேன் என்று கூரியிருந்தான்.
இதுவரை வீரேஷின் அலுவலகத்திலோ அல்லது ஏதேனும் ஹோட்டலிலோ சந்திப்பவன், இன்று காலையில் 7 மணிக்கு உன் அலுவலகத்தில் என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நேராய் வந்து நின்றால் அவனும் என்ன தான் நினைப்பது. ஒருவேளை xxx – நிறுவனத்தை பற்றி அவன் சேகரித்து கொடுத்த தகவல்களினால் ஏதேனும் பிரட்ச்சனையோ ? அப்படி என்றால் அலுவலகதிற்கு வந்து பொறுமையாய் பேசுபவனல்ல வீரேஷ்.
விமான் நிலையத்தில் இருந்து நேராக திலிப்பின் அலுவலகத்திற்க்கு செல்ல, இத்தனை அதிகாலையில் அதுவும் விக்ரம் கூட இல்லாமல் அவன் மட்டும் வந்து நிற்பதை எதிர்ப்பார்க்காத திலிப் ஒரு நிமிடம் அதிர்ந்தே போனான் என்பது தான் உண்மை. அவனே நேரடியாய் வந்திருக்கிறான் என்றால் விஷயம் பெரிதோ? உலகையே ஒரு நொடியில் சுறி வரக்கூடிய சக்திக் கொண்ட மனது எதை எதையோ எதனுடனோ இனைத்து பார்த்து அவன் வந்திருக்கும் காரணத்தை விடுவிக்க பார்க்க. ஆனால் அவனின் முகம் காட்டும் பாவனையி இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை
இன்னும் வேறு யாரும் வந்திருக்காத நிலையில் திலிப்பே அவனை வரவேற்க, “வாங்க வீர்! What would you like to have? ஏதேனும் முக்கியமான விஷயமா?” இல்லை என்றால் நேரடியாய் அலுவலகம் தேடி வரமாட்டானே என்று நேரடியாய் விஷயதிற்கு வர
“சாரி ரொம்ப காலையில உங்கள டிஸ்டர்ப் பண்ணிடேன்.”
“ஹேய், நோ ப்ராப்ளம், முக்கியமான் விஷயம் இல்லைன்னா நீங்களே நேரில் வர மாட்டிங்களே!”
“ஆமாம் மிக முக்கியமான விஷயம் தான்” ஒரு வினாடி முகத்தில் மென்மை பரவ கூற
“எனக்கு ஒருத்தரை பற்றிய டிடைல்ஸ் கலக்ட் பண்ணனும். Obviously, without my name on it. ”
“Sure, யாரை பற்றி?” மனதிற்குள் அடுத்து யாருக்கு செக்குன்னு தெரியலையே என எண்ணிக்கொண்டிருக்க
அவனின் மனதை படித்தவனாய், “நோ… இது …கொஞ்சம் பெர்சனல் ” சிறு தடுமாற்றத்துடன் கூறியவனை எதோ சூ(zoo)வில் பார்ப்பதை போல் பார்த்துக்கொண்டிருந்தான். என்னது வீரேஷிற்கு தடுமாற்றமா?
“பெயர், வென்முகில்.. மதுரை zzz-காலேஜில் B.Arch 4th year படிக்கிறாங்க. I want her full details. ” என்று கூறியவன், சிறிது தயக்கதிற்கு பிறகு சொல்லலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்த. வெகு தயக்கதிற்கு பிறகு, “ஆல்சொ , வெதர் ஷி ஹஸ் சீயிங் சம்வொன் ஆர் நாட் அதுவும் தெரியனும். உங்களை விட்டு விஷய்ம் வெளியே போகாதுங்குற நம்பிக்கையில் வந்திருக்கேன். I want you to handle this personally.” என்று இதுவரை இருந்த மென்மை பொய்யோ எனும் வகையில் குரல் அழுத்தமாய் வந்துவிழுந்தது. “இதை நீ மீறினால் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்பதை குறிக்கும் குரல்.
“வீர், you can count on me. நானே பெர்ச்னலா விசாரிச்சு சொல்றேன்.give me two days!”
அவன் படித்த காலேஜில் அவனால் விஷய்ம் சேகரிக்க முடியாதா? அவன் பெயர் வரக்கூடாது என்பதை விட, அவன் விசாரிப்பது தெரிந்து அவளுக்கு எதுவும் சங்கடம் வந்துவிட கூடாது என்றே அவன் அவளை பற்றி காலேஜில் எதுவும் விசாரிக்கவில்லை.
அதுவும் அவன் ஒரு வார்த்தை கேட்டால் அது வேறு விதமாய் அவளிடம் போய் சேர்ந்துவிட கூடாது என்ற கவணமும் கூட. அவன் இருக்கும் நிலை அப்படி பட்டது. அவன் என்ன செய்தாலும் அதை பெரிதுபண்ணிவிடுவார்கள். அதனாலையே அவனுடன் அவள் பெயர் இனையும் பொழுது அவளுக்கு எந்த ஒரு கௌரவ குறைச்சலும் இருக்க கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான்.
அடுத்து வந்த இரண்டு நாட்கள் போன வேகம் தெரியவில்லை. மூன்றாவது நாள் காலை வீட்டில் இருக்கும் ஜீம்மை(gym) விடுத்து Flex’nGain Studio வில் காலை ஆறு மணிக்கு ஆஜர். காரண்ம் வேறு என்ன, வருங்கால மாமனார் அங்கே தானே காலை நேரத்தில் உடற்பயிற்சிக்கு வருகிறார் !!!
error: Content is protected !!