Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் காதலாய்

காதலால் காதலாய்

அத்தியாயம் 6

“சும்மா என்னையே குறை சொல்லாத ம்மா.. ஆமா! எனக்கு தான் அவனை புடிச்சிருந்துது.. நான் பார்த்த அன்னைக்கு அவன் எப்படி இருந்தான் தெரியுமா? அவ்ளோ அழகா தெரிஞ்சான் மா.. இப்பவும் அழகா தான் தெரியுறான்.. ஆனா ஏதோ ஒன்னு அவன்கிட்ட மிஸ் ஆகுது” என்ற அஞ்சலி,



Advertisement

“ப்பா! எனக்கு அவனை தான் புடிச்சிருக்கு.. அவனை மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்..” என்றவளுக்கு காதல் என்றாள் என்ன என்றே தெரியவில்லை.

“இது நல்லதே இல்லைங்க.. அவ வாழ்க்கையை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. அதுக்காக நீங்க ஜெய்யை குறை சொன்னா நிச்சயம் நான் ஏத்துக்க மாட்டேன்.. வளர்ப்பு சரியா இருந்தா தான் கட்டிக் குடுக்கவன் மேல நாம கோபப்படவும் முடியும்.. நீங்களாவது புரிஞ்சி அவளுக்கு எடுத்து சொல்லுங்க” என்ற காஞ்சனாவிற்கு கணவனிடம் இதற்கு மேல் என்ன கூறி புரிய வைக்க என தெரியவில்லை.

Advertisement

Advertisement

“ஞாயிற்று கிழமை அவங்க வீட்டுல எல்லாரும் அவங்க குல தெய்வ கோவிலுக்கு பத்திரிக்கை வச்சு சாமி கும்பிட போறாங்களாம்.. நம்மையும் இன்வைட் பண்ணி இருக்காங்க.. நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னு கடவுள்கிட்ட கேட்டுக்க நான் போறேன்.. நீங்க ரெண்டு பேரும் வர்றதும் வராததும் உங்க இஷ்டம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட,

“இந்த அம்மா ஏன் ப்பா என்னை புரிஞ்சிக்கவே மாட்றாங்க..அவன் அழகா இருக்கான்.. கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு மேட்சா இருக்கும்.. நானும் அவனுக்கு ஈக்குவளா தானே இருக்கேன்.. அவனுக்கு என்ன தான் பா பிரச்சனை? ஓவரா சீன் போடுறான்!” என்றாள் அஞ்சலி.

Advertisement

“அதை விடு அஞ்சலி.. அப்பா பார்த்துக்குறேன்.. நீயும் வா.. நாமளும் கோவிலுக்கு போய்ட்டு வரலாம்.. ஜெய் கூட வருவான்.. பேசிக்கலாம்..” என்று மகள் முகத்தை குணசீலன் பார்க்க,

ஜெய் வருவதைக் குறித்த எந்த ஒரு முக பாவனைகளும் அவளிடம் இல்லை.

மனைவி அத்தனை அழுத்தமாய் கூறி அழுததில் யோசிக்க தொடங்கிய குணசீலனுக்கு இப்பொழுது என்ன செய்ய வேண்டும் யாரிடம் பேச வேண்டும் என்றும் தெரியவில்லை.

“மகிக்கு இன்னும் சளி இருக்கு க்கா!” என்றாள் ஜனனி பிரியாவிடம்.

“சளி இப்ப தான் இருக்கு ஜேக்! காய்ச்சல் சரி ஆனதும் அவங்க அப்பா கூட குளிக்குறேன்னு நல்லா தலைக்கு ஊத்தி வச்சிருக்கா” என்று குறை கூற,

“இவளுக்கு டாக்டர்க்கு காசு குடுத்தா போதும் சரி ஆகிடும்.. மாசத்துக்கு நாலு நாள் ஹாஸ்பிடல் போக வேண்டியது இருக்கு டி உனக்கு” என்று மகிழினியிடம் கூற, அவளைப் பார்த்து சிரித்தாள் மகிழினி.

“அந்த ஜெய பிரகாஷ் டாக்டர் தான் இவளுக்கு சரி.. வேற யார்கிட்ட பார்த்தாலும் இவளுக்கு சரி ஆகவே ஆகாது..” பிரியா கூற,

“அங்கே போறதுன்னா நீ மட்டும் போய்க்கோ.. இனி நான் அங்கே வர்றதா இல்லை” என்றாள் ஜனனி.

“உன்னை யார் கூப்பிட்டா.. அவர் வர்றேன்னு சொல்லிட்டார். நாளைக்கு வேற கோவிலுக்கு போகணுமே.. அதனால ஈவ்னிங் நான் போய் ஒரு செக்கப் பண்ணிட்டு வந்துடுறேன்.. சிரப் குடுத்தா தான் சரி ஆகும்” என்றாள் பிரியா.

“அப்ப போய்ட்டு வந்துடு பிரியா.. மறுபடியும் காய்ச்சல் வந்துட போகுது..” என்று மீனாட்சி கூற,

“ஆமா ம்மா! எல்லாம் எடுத்து வச்சாச்சு.. வேற எதுவும்னா நீங்க பார்த்து எடுத்து வச்சுடுங்க.. நான் ஹாஸ்பிடல் போய்ட்டு நைட்டுக்கு அவரோட வந்துடறேன்.. அப்ப தான் விடியும் முன்னாடி கிளம்ப சரியா இருக்கும்” என்று கூறி சென்றாள்.

“பார்த்து போய்ட்டு வா பிரியா! பாப்பா பத்திரம்.. அவருகிட்ட வண்டியை மெதுவா ஓட்ட சொல்லு” என்று அனுப்பி வைத்தார் அன்னை.

“மல்லிகா எங்கே?” பால நாதன் கேட்க,

“கிட்சேன்ல தான் இருக்காங்க மாமா.. வேலையா இருக்காங்க.. கூப்பிடவா?” என்றார் பிரேமா.

“தேவை இல்ல..” என்ற பாலா பிரேமா வைத்த சாப்பாட்டினை சாப்பிட ஆரம்பித்தார்.

“ஜெய் வந்தானா?” என்று கேட்க,

“வர்ற நேரம் தான் மாமா..” என்று பிரேமா கூறியவர்,

“நாளைக்கு கோவிலுக்கு போறது பத்தி எதுவும் சொல்லலியே மாமா?” என்று பிரேமா கேட்க,

“அதான் போவோம்னு சொல்லிட்டேனே!” என்றார் பாலா.

“அப்போ நீங்களும் வர்றிங்களா?” என்று கேட்க,

“ஆமா! ஆமா! குண சீலன் குடும்பத்தோட வர்றேன்னு சொல்றான்.. நான் வரலைனா நல்லா இருக்குமா?” என்று அவர் கேட்க, சாப்பிட வந்தான் சூர்யா.

“என்ன டா! அந்த தங்கராஜ்கிட்ட ஜூனியரா சேர்ந்துட்டியா இல்லையா?” என்று அவனிடம் கேட்டார்.

“சேர்ந்துட்டேன் பெரியப்பா.. இன்னைக்கு தான் முதல் நாள் போறேன்” என்றவன் அலுவலகம் செல்வதற்காக தயாராகி தான் வந்திருந்தான்.

“நீயாவது என் பேச்சை கேட்குறீயே!” என்று கூறிய வார்த்தைகள் யாவும் சமையலறையில் வேலை இல்லாமல் சும்மாவே நின்றிருந்த மல்லிகாவின் காதிலும் விழுந்து கொண்டு தான் இருந்தது.

ஜெய்க்காக கணவனிடம் பேசி அதற்கு வாங்கிக் கட்டிக் கொண்ட பின் இன்னும் கணவன் முகத்தை பார்க்கவில்லை.

அது தெரிந்தும் பாலா கண்டு கொள்ளவில்லை மனைவியை. அதுவும் சேர்ந்து இன்னும் எரிச்சலை கூட்டியது கணவன் மேல் மல்லிகாவிற்கு.

இத்தனை வருடத்தில் கணவன் பேச்சிற்கு ஒரு வார்த்தை எதிர்த்து பேசியது இல்லை. அப்படி இருந்தும் இன்று எதிர்க்கிறேன் என்றால் அதை யோசிக்க வேண்டாமா? மகனின் ஆசைகள் எல்லாம் இவருக்கு முக்கியம் இல்லையா? என்று ஆதங்கமாய் இருந்தது.

கிளினிக்கில் இருந்து வந்த ஜெய் சாப்பிடும் இடத்தில் தந்தையுடன் சூர்யா இருப்பதை பார்த்தவன் அங்கே செல்லாமல் நேராய் சமையலறைக்கு செல்ல, அங்கே நின்றிருந்தார் மல்லிகா.

“இங்க என்னம்மா பண்ற? உன் ஆத்துக்காரர்க்கு பணிவிடை செய்ய போகல?” என கிண்டல் செய்தபடி சாப்பாட்டினை எடுத்து தட்டில் வைக்க,

“பேசாம உட்கார்ந்து சாப்பிடு டா!” என்று அவரே அனைத்தையும் எடுத்து கொடுக்க, அங்கிருந்த சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான் ஜெqய்.

“நிவி சாப்பிட்டாச்சா?” என்று கேட்கவும்,

“அவ ரூம்ல போனை நோண்டிட்டு இருப்பா.. நான் போய் கூப்பிட்டா தான் வருவா.. எதாவது மேல படிக்க சொல்லு இல்லைனா வேலைக்கு போக சொல்லு டா” என்றார் மகனிடம்.

“அந்தாளுகிட்ட சொல்ல வேண்டியது தானே? வீட்டுல யார் என்ன பன்றாங்கனு அவருக்கும் தெரியணும்ல? பொண்ணு படிப்பை முடிச்சது அவருக்கு தெரியாதா?” என்று ஜெய் கேட்க,

“நான் உன்கிட்ட தான் கேட்டேன் ஜெய்! நீ எதாவது ஏற்பாடு பண்ணனும்னா பண்ணு.. இல்லைனா விடு” என்று விட,

“என்னம்மா ஆச்சு உங்களுக்கு? இப்ப எதுக்கு அவர் மேல் இவ்வளவு கோபம்?” என்றான்.

“ஒரு அம்மாவா என் கஷ்டம் எனக்கு.. உங்க யாருக்கும் சொன்னா எல்லாம் புரியாது.. நீங்க சின்ன பசங்களா இருந்த வரை அவர் சொன்னதுக்கு எல்லாம் சரின்னு தலையாட்டி பழகிட்டேன்.. இப்ப நீங்க வளர்ந்ததும் அங்கேயா இங்கேயா.. அவர் பக்கமா உங்க பக்கமான்னு அல்லாடுறேன்.. இந்த மனுஷனுக்கு என்ன? புள்ளைக்கு வேண்டாம்னா விட வேண்டியது தானே? கல்யாணம் பண்ணி வச்சு நாளபின்ன எதாவது ஆச்சுன்னா?”

கணவனிடம் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் அங்கே ஜெய்யிடம் மல்லிகா பொரிந்து தள்ள,

“ம்மா! ம்மா! எதுக்கு இவ்வளவு பிரஷர்? இப்ப என்ன நடந்துச்சு? எல்லாரும் நல்லா தானே இருக்கோம்? உங்க வயசுக்கு இவ்வளவு டென்ஷன், பிரஷர் எல்லாம் ஜாஸ்தி.. நடக்குறதை அப்படியே ஏத்துக்கனும்.. நான் ஹப்பியா தானே இருக்கேன்.. புடிக்காத கல்யாணம்னாலும் புடிக்க வாய்ப்பிருக்கு தானே?” என்றான்.

“சும்மா நடிக்காத டா.. இப்ப ஒன்னு சொல்லுவ.. அப்புறம் ஒன்னு சொல்லுவ.. உனக்கு அந்தாளு எவ்வளவோ பரவால்ல.. ஒரு முடிவு எடுத்தா அதை முடிச்சிட்டு தான் உட்காருறாரு” என்றார் மல்லிகா.

“அப்ப நானும் அப்படியே செய்யட்டுமா? உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க..” என்று கண்ணடிக்க,

“சீக்கிரம் சாப்பிட்டு எழுந்து போ டா” என்று கூற, அங்கே வந்தார் பிரேமா.

“மாமா என்னக்கா இப்படி இருக்காரு.. நீங்க கோபமா இருக்கீங்கன்னு தெரிஞ்சும் ஒரு வார்த்தை உங்களை தேடவே இல்லை?” என்று கேட்க,

“இதையே இப்ப தான் கண்டு பிடிக்கிறிங்களா சித்தி நீங்க?” என்றான் ஜெய்.

“ண்ணா! குணசீலன் பத்தி விசாரிச்சேன்.. லீகல் பிசினஸ் தான் ஆனாலும் வட்டிக்கு பணம் குடுக்குறதை கூட இல்லீகலா பண்ற மாதிரி தெரியுது.. வேற ஒன்னும் பெருசா சொல்லிக்குற மாதிரி இல்லை டா” என்றான் சூர்யா.

“ஹ்ம்! என்னவோ! அந்த குணசீலன் மூஞ்சை கிட்டக்க பார்த்தா அம்மன் படத்துல சண்டான்னு வருமே அந்த நியாபகம் தான் வருது.. இருந்தாலும் ஒரு டவுட்.. சரி விடு பார்த்துக்கலாம்” என்றான் ஜெய்யும்.

“ம்மா! நான் நிவிகிட்ட அப்புறமா பேசுறேன்.. நீங்க ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க..” என்றவன்,

“நாளைக்கு கோவிலுக்கு போறதை பத்தி கேட்டீங்களா சித்தி?” என்றான்.

“ம்ம்! ஆமா ப்பா! அவரும் வர்றாராம்” என்றதும்,

“அய்யயோ!” என்று ஜெய் கூற, சூர்யா சிரிக்க,

“அதுவும் அந்த அஞ்சலி வீட்டுல இருந்து எல்லாரும் வர்றாங்களாம்.. அதனால வர்றாராம்” என்றார்.

“அதானே பார்த்தேன்!.. சுவிட்ச் அங்கே இருக்கு.. பல்பு இங்கே இருக்கு.. இல்லை சித்த” என்றான் ஜெய்.

“என்னவோ வர வர மாமா செய்யுற எதுவும் எனக்கு புடிக்கல டா ஜெய்..” என்று பிரேமா கூற,

“நான் இத்தனை வருஷமா சொன்ன டயலாக்கை இப்ப எல்லாரும் சேர்ந்து சொல்றீங்க.. அதுவும் எல்லாம் முடிஞ்ச அப்புறம்..” என்றான் ஜெய்.

“பஸ் எல்லாம் அரரேஞ் பண்ணியாச்சா டா?” என்று சூர்யாவிடம் ஜெய் கேட்க,

“பண்ணிட்டேன் ண்ணா! பெரியப்பாக்கு தெரிஞ்ச ஆளுகிட்ட தான் சொல்லி இருக்கேன்.. இல்லைனா அதுக்கு. எதாவது சொல்லுவாங்க இல்ல..” என்றான்.

“நீ வக்கீல்னு நிரூபிக்கிற டா.. அப்ப மத்ததெல்லாம்? டிபன், லஞ்ச்?” என்று கேட்க,

“ஒரு நாள் தானே டா.. வெளில சாப்பிட்டுக்கலாம்.. அதுக்கும் இல்லைனா ஏதாவது ஏற்பாடு பண்ணனும்.. பாத்திரம் எல்லாம் எடுத்துட்டு போகணும்” என்றார் பிரேமா.

“சரி தான்.. ஆனா உங்களுக்கு, அம்மா, அந்தாளுக்கு எல்லாம் ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காதே” என்று ஜெய் கேட்க,

“மைல்டா எடுத்துக்கட்டும் ண்ணா..ஒரு நாள் தானே? நீயும் டாக்டர்னு நிரூபிக்காத” என்றான் சூர்யா.

“ஹ்ம் ஆல்ரைட்! அப்ப மார்னிங் சீக்கிரமாவே கிளம்பிடலாம்” என்றான் ஜெய்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!