Skip to content
Post Views: 1,872

இரவு வானதியை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்த பின் அவள் யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை… எதையோ வெறித்தவாறே அமர்ந்து இருந்தாள்….
அந்த இரவு அனைவருக்கும் தூங்கா இரவாக மாறியது… அருள் அவளையே பார்த்தவாரு அமர்ந்து இருந்தான்… அப்போது தான் கவனித்தான்… அவள் மோதிர விரலையே கவனித்து கொண்டு இருப்பதை….
Advertisement
மோதிர விரலில் அவர்களின் நிச்சய மோதிரம் இல்லை… அதை தான் வெறித்து கொண்டு இருந்தாள்… வேலு தான் அனைவரையும் உறங்க அனுப்பி வைத்தான்… ஆனால் யாரும் உறங்கவே இல்லை…
Advertisement
Advertisement
அடுத்த நாள் காலை யாரும் எழுந்துகொள்ள விருப்பம் இல்லாமல் அறையிலேயே அமர்ந்து இருந்தனர்…பின் தாயம்மா பாட்டி தான் அனைவரையும் குளிக்க அனுப்பி வைத்தார்… அனைவரும் அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு குளித்து வந்தனர்…
ரஞ்சியின் மாமியார் கமலாவின் உதவியுடன் பத்மினி சமைத்து கொண்டு இருந்தார்… பாரதியும் அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்து கொண்டு இருந்தாள்….ரஞ்சி குழந்தை அழுகிறது என்று பார்த்து கொண்டு இருந்தாள்…
Advertisement
அருளும் வேலுவும் மட்டும் காலையிலேயே போலீஸ் ஸ்டேஷன் சென்று இருந்தனர்…..
நாயகியும் தேவிகாவும் விடியற்காலையிலேயே பஞ்சாயத்தை கூட்டி இருந்தனர்…. பஞ்சாயத்தில் இருந்து வானதியை பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வர கூறி இருந்தனர்….
அருள் வேலுவை தவிர்த்து அனைவரும் பஞ்சாயத்தில் கூடி இருந்தனர்…
“என்ன பிரச்சனை… எதுக்காக பஞ்சாயத்தை கூட்டி இருக்கீங்க” என்று பஞ்சாயத்து தலைவர் தேவிகா நாயகியிடம் கேட்டார்….
தேவிகா நாயகி இருவரும் நீலிகண்ணீருடன் பேச ஆரம்பித்தனர்…. முதலில் நாயகி தான் பஞ்சாயத்தில் “ஐயா இந்த பொண்ணு என் பொண்ணுக்கு பார்த்து இருந்த மாப்பிளயை மயக்கி என் பொண்ணு கிட்ட இருந்து பிரிச்சிட்டா…. இப்போ என் பொண்ணோட வாழ்க்கையே போயிடுச்சு… இதோ பாருங்க அதுக்கான ஆதாரம்…” என்று சில போட்டோவை பார்த்தார்…
பல பேர் அதை நம்ப மறுத்தனர்…. “சின்ன பிள்ளைல இருந்து பாக்குறோம்… இதை வெச்சு எல்லாம் அந்த பொண்ணை சந்தேக பட முடியாது…. உங்களை பத்தி தெரியும்…. உங்களுக்கு வேணும்னா என்ன வேணா செய்விங்கனு…. அருளுக்கும் உங்க பொண்ணுக்கும் ஏற்பாடு பண்ண கல்யாணத்துல பாத்தோமே” என்று கூறினர்….
மேலும் சிலரோ வானதியை தவறாக பேசினர்… அதை கேட்டு அவளுக்கு கண்ணீர் தான் வந்தது…. தன் குடும்பத்தினர் எதுவும் எதிர்த்து கூறவில்லையே…. அவர்களும் அதை நம்புகிறார்களோ என்று அழுது கொண்டு இருந்தாள்…
அவள் நினைப்பே தவறு என்று சிறிது நேரத்தில் அவளுக்கு தெரிய தான் போகிறது….
அவள் யாரின் முகத்தையும் பார்க்காமல் அழுது கொண்டு இருக்க அங்கு பஞ்சாயத்து தலைவர் ” இனிமே இந்த பொண்ணு இங்க இருக்க கூடாது.. ஊரை விட்டு ஒதுக்கி வைக்குறோம்… இந்த பொண்ணு கூட யாரும் பேச கூடாது பழக கூடாது அப்படி யாரோ பழகினா அவங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சிடும் பஞ்சாயத்து…. இது தான் தீர்ப்பு… இப்பயே இந்த பொண்ணு இந்த ஊரை விட்டு போயிடனும்… ” என்று அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே அருளும் வேலுவும் மூச்சு வாங்க ஓடி வந்தனர்…
அருள் வந்தவன் நேராக சென்று தேவிகாவை ஒரு அறை அறைந்து விட்டு பஞ்சாயத்து தலைவரிடம் “யோவ் காசுக்காக என்ன வேணா பேசுவியா நீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா உனக்கு… நீ எல்லாம் ஒரு ஆளு… உனக்கு ஒரு பதவி” என்று காரி துப்பிவிட்டு வானதியை நோக்கி சென்றான் ….
அந்த பஞ்சாயத்து தலைவரோ “ஏய் என்ன மரியாதை இல்லாம பேசுற… கேடு கேட்டவளுக்காக என்ன எதிர்த்து பேசுறியா… உன் குடும்பத்தையே ஒன்னும் இல்லாம பண்ணிடுவேன்….” என்று கோவமாக கூறினர்….
“நீயே கொஞ்ச நேரத்துல ஒன்னும் இல்லாதவனா தான் ஆக போற நீ என்ன சொல்றியா” என்று கேட்டுவிட்டு வானதியின் கையை பிடித்து இழுத்து கொண்டு அங்கு இருக்கும் கருப்புசாமி கோவில் முன் நிற்க வைத்து அவன் சட்டை பையில் இருக்கும் பாக்கெட்டில் இருந்து தங்க தாலியை எடுத்து அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு கருப்புசாமியை ஒருமுறை பார்த்துவிட்டு வேலுவை பார்த்தான்….
அவன் சரி என கண் காட்டியவுடன் தன் குடும்பத்தில் மற்றவர்களை பார்த்தான்…. அவர்களும் சரி என தலையசைத்தவுடன் தன் முன் அழுதுக்கொண்டு நின்று இருந்த வானதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் மனைவியாக்கி கொண்டான் அருள்…
ரஞ்சி வேகமாக வந்து குங்குமத்தை நீட்ட தாலிக்கு வைத்துவிட்டு நெற்றியிலும் வைத்து விட்டான்…
குங்குமத்தை வைத்தவுடன் அவர்களின் நிச்சய மோதிரத்தை போல் வேறு மோதிரத்தை போட்டு விட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டான்…. அந்த ஒற்றை முத்தம் அவளின் அனைத்து கவலையையும் நீக்கியது….
பின் பஞ்சாயத்து நடக்கும் இடத்தின் நடுவில் வந்து நின்று “இப்போ அவ என் பொண்டாட்டி யாரோ தப்பா பேசுனீங்க வாயை கிழிச்சிடுவேன்…..” என்று கோவமாக கூறினான்….
அப்போதும் ஒரு சிலர் அடங்காமல் “இருக்குறதை தானு சொன்னோம்…. போட்டோவோட ஆதாரத்தை காட்டுறாங்களே… அப்போ இவ தப்பான பொண்ணு தானு” என்று கூறினர்…..
“சரியா நீங்க எல்லாம் உத்தமனா… நீங்க என்ன என்ன பொறுக்கிதனம் பண்ணுறீங்கனு சொல்லட்டுமா…..” என்று அவன் கேட்டு கொண்டு இருக்கும் போதே போலீஸ் ஜீப் வந்து நின்றது….
பஞ்சாயத்து தலைவர் தேவிகா நாயகி மூவருக்கும் பயம் இருந்தாலும் இன்ஸ்பெக்டர் முன் வந்து நின்று “சார் என் பொண்ணுக்கு பாத்து வெச்சு இருந்த மாப்பிளைய மயக்கி என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்திட்டா சார்… இவளை அரெஸ்ட் பண்ணுங்க சார்” என்று நாயகி நீலி கண்ணீர் விட்டு அழுதார்….
அதே போல் பஞ்சாயத்து தலைவரும் அருளின் மேல் “சார் தேவையில்லாம பிரச்சனை பண்றான்… அடிக்க வரான்… இவன் மேலயும் கம்பளைண்ட் தரேன் சார் அரெஸ்ட் பண்ணுங்க” என்று கூறினார்….
இன்ஸ்பெக்டரோ “என்ன நியாயவாதீங்க மாதிரி பேசுறீங்க… யோவ் தலைவர்னு சொல்லி ஊரை ஏமாத்தி ரேஷன் அரிசி திருடி விக்குறது…. ஊருக்கு வர பண்ட் பணத்தை உன் சொத்தை பெருக்க யூஸ் பண்றதுனு நீ பண்ண அத்தனை திருட்டுதனதுக்கும் ஆதாரம் இருக்கு…” என்று கூறி விட்டு கான்ஸ்டப்பிலிடம் “இந்த ஆளை அரெஸ்ட் பண்ணுங்க…” என்று கூறினர்..
பின் அம்மா மகளிடம் திரும்பி “என்னம்மா சொன்ன உன் மாப்பிளையா… உன் மாப்பிளை மாமியார் வீட்டுல கம்பி எண்ணிட்டு இருக்கான்.. வந்து துணைக்கு நீங்களும் எண்ணுங்க… நீங்களே கடத்தி வைப்பீங்களாம்… நாங்க எல்லாம் சேர்ந்து காப்பாத்துனா அந்த பொண்ணு மேலயே பழி போடுறீங்க… உன் புருஷனும் ஜெயில்ல தான் இருக்கான்… குடும்பமா போய் கம்பி எண்ணுங்க” என்று கூறிவிட்டு “கான்ஸ்டப்பில் இவங்க ரெண்டு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணுங்க” என்று கூறினார்….
அம்மாவும் மகளும் “நாங்க எதுவுமே பண்ணல எல்லாம் இவ தான் பண்ணா…” என்று வானதியை பார்த்து சத்தம் போட்டனர்….
லேடி கான்ஸ்டப்பிலோ “ரெண்டு பேரும் அமைதியா வண்டில ஏறுங்க… இல்லனா எல்லார் முன்னாடியும் அடிச்சு வண்டில ஏத்தி விடுவேன்” என்று கூறினார்… அதன் பின் மனதில் சபித்து கொண்டே வண்டியில் ஏறினர்….
இன்ஸ்பெக்டர் அருளிடம் திரும்பி “அருள் எந்த பிரச்சனை வந்தாலும் இமிடியட்டா எனக்கு கால் பண்ணுங்க… அன்ட் கங்கிராட்ஸ் பார் யுவர் மேரேஜ் லைப் என்ஜாய் பண்ணுங்க.. இவங்களை கோர்ட்ல பிரோடுயூஸ் பண்ற அப்ப நீங்க வர மாதிரி இருக்கும்….” என்று கூறி கிளம்பி விட்டார்….
யாரவது எதோ சொல்வார்களோ என்று அவளின் குடும்பத்தினர் அனைவர் முகத்தையும் பார்த்தாள் வானதி…. அனைவரும் சந்தோசமாக நின்று இருந்தனர்…
வானதி அருளை வீட்டுக்கு அழைத்து வந்து இருந்தனர்… ரஞ்சி ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தாள்…
நீண்ட ஆண்டுகள் கழித்து பத்மினியின் முன் நின்று பேச சென்றாள்… அவர் பேசினால் சிறு தலையசைப்புடன் நிறுத்திவிடுவாள்… தன் முன் வந்து நின்ற வானதியின் கன்னத்தை பிடித்து “என்னம்மா…” என்று கேட்டார்…
அவளோ “உங்களுக்கு வருத்தம் இல்லல…. நீங்க அவருக்கு எப்படி கல்யாணம் பண்ணி பாக்க ஆசைபட்டீங்கனு தெரியும் உங்க கிட்ட கேட்காம என்னை கல்யாணம் பண்ணது உங்களுக்கு பிரச்சனையா” என்று சைகை செய்து கேட்டாள்…
பத்மினியோ “அவனை நான் தான் தாலி கட்ட சொன்னதே… வீட்டுல இருந்து கிளம்புறப்பயே அருளுக்கு போன் பண்ணி வீட்டுல சாமிகிட்ட தாலி வெச்சி இருக்கேன்… பஞ்சாயத்து நடக்குற இடத்துக்கு வரப்ப எடுத்துட்டு வந்துருனு நான் தான் சொன்னேன்… இன்னிக்கு பஞ்சாயத்து நடக்கலனாலும் உனக்கும் அருளுக்கும் கல்யாணம் பண்ற முடிவுல தான் இருந்தேன்… வீட்டுல எல்லாருக்கும் தெரியும்… உனக்கு தாலி கட்டுற அப்ப யுகேன் கூட சென்னைல இருந்து வந்துட்டான்… நம்ப குடும்பம் எல்லாரும் இந்த கல்யாணத்துல ரொம்ப ரொம்ப சந்தோசம்… எதை பத்தியும் யோசிக்காத சரியா”என்று கேட்டார்…
அவள் சரி என தலையசைத்து விட்டு அவரை அணைத்து கொண்டாள்… அவரும் சந்தோஷத்துடன் அணைத்து கொண்டார்…
error: Content is protected !!