Skip to content
Post Views: 1,589
அத்தியாயம் 14
அதிதி நினைத்ததுபோல் வசீகரன் ஒன்றும் சும்மா இல்லை. அவன் கல்லூரிக்கு போகாவிட்டாலும் அங்கே என்ன நடக்கிறது என்று தன் நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டுதான் இருந்தான்.
இதற்கிடையில் கேசவ் தான் அந்த போட்டோவை எடுத்து லீக் செய்தவன் என்பது தெரியவர..
உடனடியாக செயல்பட்டு அவனது பிரின்சிபலிடம் கூறி அவனை கல்லூரியைவிட்டு தூக்க வைத்தான்.
Advertisement
வைஷாலி அதிதியைப் பற்றி வதந்தி பரப்புவதை அறிந்து அவளை நேரில் அழைத்துப்பேசினான்.
“என்ன வசி அதிசயமா இருக்கு..!! நானே கேட்டாலும் நீ பார்க்க வர மாட்ட..இன்னிக்கி நீயாவே பாக்கனும்னு கூப்பிட்டிருக்க.. சஸ்பெண்ட் ஆனதும்தான் உனக்கு என் நியாபகம் வருதா..?” என்று கேட்டாள் குத்தலாக..
“நான் சஸ்பெண்ட் ஆகிட்டேன்னு உனக்கு யாரு சொன்னா? ஃபைனல் செமஸ்டர்ல காலேஜுக்கு வரனும்னு அவசியமில்லைன்னு உனக்குத் தெரியாதா?”
Advertisement
“இப்படி சொல்லி உன்னை நீயே சமாதானப் படுத்திக்கிட்டாதான் உண்டு.. நீ அவமானப்பட்டுதானே வெளிய வந்த..?” என்றாள் ஏளனமாக..
Advertisement
“அதுல உனக்குதான் ரொம்ப சந்தோஷம் போல..” என்று திருப்பிக்கேட்டான் அதே ஏளனத்துடன்..
“நான் சொன்னத கேட்டிருந்தா உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? என்ன விட்டுட்டு அந்த ‘லோ லைஃப்’(low life) பின்னாடி போனல்ல.. உனக்கு நல்லாவேணும்..”
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் வைஷாலி..” என்று சீறினான் வசி.
Advertisement
“அவள லோ லைஃப்னு சொல்ல உனக்கு எந்த தகுதியும் இல்ல.. ஒரு அப்பாவிப் பொண்ண கூப்ட்டு ரவுடி மாதிரி மெரட்டி இருக்க, இப்போ அவள பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி சீப்பா புரளி பரப்புற.. இதுல லோ லைஃப் யாருன்னு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்ல..”
“ஆமா அவ பெரிய அப்பாவி.. அவளுக்கு ஒன்னுமே தெரியாது, ப்ரெஞ்ச் கிஸ் பண்ணமட்டும்தான் தெரியும் பாவம்..”
“சீ வாய மூடு.. அது எங்க பர்சனல் விஷயம்.. அதைப்பத்தி பேச உனக்கு ரைட்ஸ் இல்ல..”
“எனக்கு ரைட்ஸ் இல்லையா..?நான் உன் கேர்ள்ஃப்ரண்ட் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு..” என்றாள் அதிகாரமாக.
“என்னது கேர்ள்ஃப்ரண்ட்டா காமெடி பண்ணாத..இங்கதான் ஆடியன்ஸ் யாரும் இல்லையே அப்புறம் எதுக்கு நடிக்கிற..?” என்றான் எரிச்சலை மறைக்காத குரலில்.
“நடிக்கல வசி நான் நிஜமாவே இந்த ரிலேஷன்ஷிப்ப நெக்ஸ்ட் லெவலுக்கு எடுத்துட்டுப் போகனும்ன்னு தான் நினைக்கறேன்..”
“ஸ்டாப் இட் வைஷு.. ரிலேஷன்ஷிப் மண்ணாங்கட்டின்னு உளறாத..
ரெண்டு வருஷம் முன்னாடி என்கிட்ட வந்து “ப்ளீஸ் வசி யார் யாரோ என்கிட்ட ப்ரபோஸ் பண்றேங்கற பேர்ல பின்னாடியே வந்து டார்ச்சர் பண்றாங்க என்னோட ஃபேக்(fake) பாய்ஃப்ரண்டா இருக்க முடியுமான்னு கெஞ்சினதெல்லாம் மறந்து போச்சா..?
இங்க பாரு நமக்குள்ள இருக்கறது ஒரு மியூச்சுவல் அக்ரிமெண்ட் அவ்ளோதான். நாம டேட் பண்றோம்ன்னு தெரிஞ்சா தேவையில்லாம வேற யாரும் வந்து ப்ரபோஸ் பண்ணமாட்டாங்கன்னு நமக்குள்ள நாமளே போட்டுகிட்ட ஒரு ஒப்பந்தம் அவ்ளோதான். நீ என்னோட வெறும் ஃபேக் கேர்ள்ஃப்ரண்ட்தான் ரியல் ஆக ட்ரை பண்ணாத..”
“வசி ஃபேக்கா ஆரம்பிச்சாலும் நான் நிஜமாவே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.”
“நான்சென்ஸ்.. நான் உன்கிட்ட தெளிவா சொல்லியிருக்கேன்..இது ஊருக்காகப் போடுற வேஷம், ரியல் ஆக ஒரு பர்செண்ட் கூட வாய்ப்பில்லைன்னு. காலேஜ் முடியறவரைக்கும்தான் நம்ம அக்ரிமெண்ட்..இப்ப காலேஜும் முடிஞ்சிடுச்சி இனியும் வேஷம் போடனும்னு எனக்கு ஒரு அவசியமும் இல்ல.. நீ வேணா என்னை டம்ப்(dump) பண்ணிட்டேன்னு சொல்லிக்கோ எனக்கு பிரச்சனையே இல்ல.. ஆனா இந்த ஃபேக் ரிலேஷன்ஷிப் இன்னிக்கே முடிஞ்சாகனும்..
அப்புறம் தேவையில்லாம அதிதியபத்தி புரளி கெளப்புறதயும் நீ உடனே நிறுத்தனும்..” என்றான் கராராக..
“நெனைச்சேன் என்னடா உலக மகா அதிசயமா எனக்கு கால் பண்ணியிருக்கியேன்னு.. அவளுக்காக பேசதான் என்னை வர சொல்லியிருக்க இல்ல…? எல்லாத்துக்கும் காரணமே அவதான்… போகப்போக உனக்கும் என்னை புடிச்சிருக்கும் ஆனா அதுக்குள்ள அந்த விஷப்பாம்பு நடுவுல வந்து நம்மை பிரிச்சிட்டா..”
“உனக்கு சொன்னா புரியாதா..லூசா நீ…?? அதிதி இருந்தாலும் இல்லாட்டியும் உனக்கும் எனக்கும் எந்த ஜென்மத்துலயும் செட்டே ஆயிருக்காது.அது உனக்கும் தெரியும்.. தேவையில்லாம அவ மேல பழியப்போட்டு உன்னை நீயே ஏமாத்திக்காத..”
“அவகிட்ட அப்படி என்ன இருக்கு .. அவ அவ்ளோ அழகுகூட இல்ல..”
“நீ என்னோட பொறுமைய ரொம்ப சோதிக்கற வைஷு.. நான் சுமூகமா இதை முடிக்கனும்னு பார்க்கறேன்.. நீ அதுக்கு விடமாட்ட போலயே..” என்றான் உணர்ச்சி துடைத்தகுரலில்.
“என்ன மெரட்டுறியா?உன்னோட பேருதான் இப்ப நாறிபோய் இருக்கு தெரியும்ல.. இந்த பிரச்சனைல பாதிக்கப்பட்டவ நான் தான்னு எல்லாரும் என் மேல தான் சிம்பதியோட இருக்காங்க..”
“ஓ அப்படியா..?உனக்கு தெரியுமா..ஒரு புரளிய மறைய வைக்கறது ரொம்ப ஈஸி.. இன்னொரு புரளிய கிளப்பிவிட்டா போதும்..முன்னாடி இருந்தத மக்கள் மறந்துடுவாங்க…” நாளைக்கே உனக்கும் கேசவுக்கும் அஃபயர்(affair) இருக்கு அதை மறைக்கத்தான் என்னை கெட்டவனாக்காட்ட இப்படி ஒரு போட்டோவ ஃபேக்கா கிரியேட்பண்ணி போட்டீங்கன்னு ஒரு புரளிய கெளப்பிவிட்டா அப்போ உன்னோட நல்லவ வேஷம் என்னாகும் சொல்லு?
மக்களுக்கும் இந்த மாதிரி மசாலா கதைன்னா ரொம்பப் பிடிக்கும்.. கிரைம் த்ரில்லர் மாதிரி இருக்குன்னு இன்னும் ஆர்வம் ஆகிடுவாங்க.. என்ன சொல்ற?” என்றான் நக்கலாக, அவள் முகம் போகும் போக்கை ரசித்தபடி..
வைஷாலியின் முகம் முதன்முதலாக பதற்றத்தைக்காட்டியது.
“ நீ அப்படிலாம் பண்ண மாட்ட எனக்கு தெரியும்..”
“ ட்ரை மீ..” என்று கேட்டவனின் குரலில் இருந்த திடமும், பார்வையில் இருந்த தீவிரமும் அவளுக்கு கிலியூட்டியது.
“அதையெல்லாம் யாரும் நம்ப மாட்டாங்க..”
“அதையும் பாக்கலாம்.. ஒரு ஃபோன் பண்ணா போதும் நம்ம பசங்க தீயா வேலைப்பாப்பாங்க.. பாக்குறியா?” என்று மொபைலை கையில் எடுத்தான்.
“இல்ல வேண்டாம் அப்படிலாம் பண்ணிடாத என் மானமே போயிடும்..”
“ஓ உனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா..? நீ பண்ண வேலை எதுவும் எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சியா? கேசவ் அந்த ஃபோட்டோவ எடுத்துட்டு உன்கிட்டதான் வந்து காட்டியிருக்கான், அவன் என்னையும் அதிதியையும் உன்கிட்ட மாட்டிவிடனும்ன்னு மாட்டும்தான் நினைச்சிருக்கான். ஆனா நீ அவன இன்ஸ்டால போஸ்ட் பண்ண சொல்லி தூண்டிவிட்டிருக்க.. இன்னிக்கு நான் அவமானபட்டு நிக்கறதுக்கு காரணமே நீதான்.. அதைக்கூட போனாபோகுதுன்னு நான் மன்னிச்சிடுவேன். ஆனா பாவம் அதிதி அவளும் உன்னை மாதிரி ஒரு பொண்ணுதானே அவமேல இவ்ளோ வன்மத்தோட அலையிற.. உன்னை ஏன் நான் சும்மா விடனும்..? என்று பாறையாய் இறுகிய குரலில் கேட்டான்.
தலை சுற்றியது வைஷாலிக்கு.. இவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதே,கேசவை வெளியேற்றிய மாதிரி என்னையும் வெளியேற்றிவிட்டால்? அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுடுவாரே..”
“ப்ளீஸ் வசி.. நான் செஞ்சதுலாம் தப்பு தான் .. என்னை மாட்டிவிட்டுடாத.. நீ என்ன சொன்னாலும் செய்யறேன்..” என்று வழிக்குவந்தாள்.
“மொதல்ல உன் அல்லக்கைகளை வச்சி அதிதிய இம்சை பண்றத நிப்பாட்டனும்.. அப்புறம் அந்த போட்டோ AIன்னு அதே அல்லக்கைகளை வச்சி எல்லாரையும் நம்ப வைக்கனும்.. நீ இனிமே காலேஜுக்கும் வர கூடாது. அதிதிய பார்க்கவும் கூடாது.”
“சரி.. நான் நீ சொல்ற மாதிரியே பண்றேன். என்னை எதுலையும் மாட்டிவிட்டுடாத ப்ளீஸ்..”
“உன் சைடுல நீ ஒழுங்கா டீலை கடைபிடிச்சா என் சைட்ல இருந்து எந்த பிரச்சனையும் வராது..”
தப்பித்தோம் பிழைத்தோம் என்று வைஷாலி கிளம்பிப்போனாள்.
இரண்டு நாளில் பிரச்சனை கொஞ்சம் அடங்கியதும் வசீகரன் அதிதிக்கு கால் செய்தான், திரும்பத்திரும்ப முயற்சித்தும் அவளுக்கு லைன் போகவே இல்லை..
என்ன செய்வது என்று யோசித்தவன் விஷாலுக்கு அழைத்தான்.
அவன் அப்போது வர்ஷினியுடன் காஃபி ஷாபில் இருந்தான்.
வசீகரனின் நம்பரைப் பார்த்ததும் வர்ஷினியிடம் காட்டினான்.
என்ன ஆனாலும் அதிதியிடம் அவனை நெருங்க விடக்கூடாது என்று அவனிடம் எச்சரித்துவிட்டு
“ஸ்பீக்கர்ல போடு..” என்றாள் அவள்.
“ஹலோ..”
“ஹாய் விஷால், வசீகரன் ஹியர்..”
“தெரியுது சொல்லுங்க..” என்றான் சுருக்கமாக, அவனது குரலில் ஒதுக்கத்தை உணர்ந்தோ என்னவோ வசீகரன் சற்று தயங்கினான்..
“வந்து.. அதிதி கிட்ட பேசனும்..”
“அதுக்கு ஏன் எனக்கு கால் பண்ணீங்க..?”
“இல்ல அவ நம்பர்க்கு ரீச் ஆகல.. அதான்..”
“சீனியர்..இங்க பாருங்க.. எனக்கு உங்க மேல தனிப்பட்ட விதத்துல எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா அதிதி விஷயத்துல அப்படி இல்ல.. நீங்க அவகிட்ட பேசாம இருக்கறதுதான் நல்லது..”
“எனக்கு நீங்க சொல்றது புரியுது.. ஒரே ஒரு வாட்டி நான் அதிதிகிட்ட பேசினா போதும்.. ப்ளீஸ் அதுக்குமட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க..” என்றான் தணிவாக
அந்த தணிந்த குரல் விஷாலை சற்று யோசிக்க வைக்க லைனை மியூட் செய்துவிட்டு “என்ன செய்றது..?” என்று வர்ஷினியிடம் கேட்டான்.
வர்ஷினி.. “இப்பதான் அவ கொஞ்சம் பரவால்லாம இருக்கா.. திரும்ப தேர இழுத்து தெருவுல விட்டுடாத..” என்று எச்சரித்தாள்..
“சாரி சீனியர்..என்னால இந்த விஷயத்துல உங்களுக்கு ஹெல்ப் பண்ணமுடியாது.. ஷி ஹேஸ் கான் த்ரூ அ லாட்..”
“அதிதிகிட்ட நான் ஒரு தடவ பேசினா எல்லாம் சரி ஆயிடும்.. அவளும் நான் பேசனும்ன்னு தான் எதிர்பார்த்துட்டு இருப்பா..” என்றான் குரலில் தவிப்புடன்..
“ஓ அப்படியா.. அப்படி எதிர்பார்க்குறவ எதுக்கு உங்க நம்பர ப்ளாக் பண்ணிவைக்கனும்..?”
“என்னசொல்றீங்க..? நோ வே..அதிதி அப்படி பண்ணமாட்டா..”
“நான் ஏன் பொய் சொல்லனும்..?உங்களுக்கு சந்தேகமா இருந்தா வேற நம்பர்ல இருந்து அவளுக்கு கால் பண்ணிப்பாருங்க..
சீனியர்..தெரிஞ்சோ தெரியாமலோ உங்களால அவ நெறைய பட்டுட்டா..போதும் இனிமேலாவது அவள நிம்மதியா இருக்க விடுங்க..”
“அப்படின்னு அதி சொன்னாளா?அப்ப அவளையே வந்து சொல்ல சொல்லுங்க நான் கேட்டுக்கறேன்..?”
“உங்ககிட்ட பேசவேண்டாம்ன்னுதான் நம்பர ப்ளாக் பண்ணியிருக்கா.. இதுக்குமேல எப்படி சொன்னா உங்களுக்கு புரியும்..?”
என்று விஷால் எதிர்த்துக்கேட்கவும். பேச்சிழந்து போனான் வசீகரன்.
தன் வாழ்வில் மீண்டும் பேரிழப்பைக்கண்டதாக உணர்ந்தான். பேசாமல் அழைப்பைத்துண்டித்தான்.
எதற்கும் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்துகொள்ள எண்ணி தன்னுடைய இன்னொரு எண்ணிலிருந்து அதிதிக்கு அழைத்தான். உடனே ரிங் போனது..
நான்கந்து ரிங்கிற்கு பிறகு
“ஹல்லோ.. “ என்ற அதிதியின் மென்குரல் கேட்டது.. இதயம் நின்று மூளை மரத்துப்போனதுபோல ஆனது..
அதிதி அவனிடம் பேச விரும்பவில்லை.. அவனை வெறுத்துவிட்டாள்..
அவன் யாரெல்லாம் தன் கூடவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அவர்களெல்லாம் அவனைவிட்டுப் போகவேத் துடிக்கிறார்கள். அதிதியும் அவனை வெறுத்து ஒதுக்கிவிட்டாள்.
இனி அவன் வாழ்வில் அவள் இல்லை.. இதையும் ஏற்று வாழப் பழகிக்கொள்கிறேன்..என்று வேதனையுடன் முடிவெடுத்தவன் எதுவும் பேசாமல் இணைப்பைத் துண்டித்தான்.
தொடரும்…
error: Content is protected !!