யுகத்தின் தலைவன் அத்தியாயம் 9
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 9
அந்தி சாயும் பொழுது,
கெளசி,” அம்மா எனக்கு பசிக்குது என சினுங்க ஆரம்பித்தாள்.
லட்சுமி தோசை கல்லை ஸ்டவ்வில் வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாக சுற்ற,
அம்மா! “அப்பா போன் பண்ணிருக்கு”என கங்கா கூற போட்டதை போட்டபடியே விட்டுவிட்டு கெளசியை இடுப்பில் தூக்கிக் கொண்டு, கங்காவை கையில் பிடித்தபடி டீக்கடை போன் முன்பு சென்று நின்றனர் மூவரும்.
ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க சிவராமனே கூப்பிடுவான் என்றார் டீக்கடைகாரர்.
Advertisement
மூவராலும் அந்த இரண்டு நிமிடங்களை கடப்பது ஒரு யுகத்தை கடப்பதாக தோன்றியது.
போன் மணியடித்தது. அம்மா நா பர்ஸ்ட் பேசறே என கெளசி வாங்கிக் கொண்டாள்.
அப்பா நா கெளசி எப்ப ஊருக்கு வரே,வரும் போது எனக்கு புதுத்துணி,பொம்மை எல்லாம் வாங்கிட்டு வரனும் என மூச்சு விடாமல் பேசினாள்.சரி கெளசி அப்பா வரும் போது வாங்கி வரேன். அம்மா கிட்ட கொடு.
Advertisement
சொல்லு,எப்புடி இருக்கே,சாப்பிட்டையா?
Advertisement
நா நல்லா இருக்கே சாப்பிட்டே,நீ எப்படி இருக்கே நீ சாப்பிட்டையா?
ம்…அழுகை.. கண்ணீர் விழுக தயாராக நின்றது லட்சுமி கண்களில்.இருந்தும் அடக்கி கொண்டார்.
கங்கா எங்க பக்கத்துல இல்லையா?
இருக்கா இரு தரே.
Advertisement
ஹலோ! அப்பா எப்போ வீட்டுக்கு வருவே,
சீக்கிரமாக வந்துருவே கங்கா.
நீ ஸ்கூல்க்கு போனையா?
போனேப்பா
சரி கங்கா நல்லா படிக்கனும்..
சேரிப்பா நான் நல்லா படிக்கறே அம்மாகூட சொல்லுச்சு நீ நல்லா படிச்சு இரண்டாவது போனா அப்பா வந்துரும்னு.
அதுனால நா நல்லா படிக்கறேப்பா
சரி கங்கா அம்மாகிட்ட போன் கொடு
லட்சுமி ரொம்ப நேரம் பேச முடியாது. பிள்ளைகள பத்திரமா பாத்துக்க,அவங்க என்ன கேட்டாலும் வாங்கி கொடு. இரண்டு வாரத்துக்கு ஒரு டைம் கூப்டறே.
போன் பில் கட்றே காசை சேர்ந்து வைச்சா பிள்ளைகளுக்கு ரெண்டு துணி எக்ஸ்ட்ரா வரும்போது எடுத்துட்டு வருவே அதா.நான் மீதியை லெட்டர்ல எழுதறே வைக்கறே என வைத்துவிட்டார்.
ஒரு ஐந்து நிமிட உரையாடல்,அதற்குள் எவ்வளவு ஆசைகள், கனவுகள்,லட்சியங்களை நால்வரும் பகிர்ந்து கொண்டனர்.
வீட்டிற்கு திரும்ப வீடு முழுவதும் கரும்புகை மூவருக்கும் ஒரே இரும்பல்,அப்போதுதான் லட்சுமிக்கு நினைவு வந்தது,தோசை ஊற்றி,அதற்கு எண்ணெய் கூட விடாமல் சென்றது.
தோசையோடு சேர்ந்து கல்லும் கருகி போனது.அடுத்த கடிதத்தில் தோசை கல் கருகியதை எழுதி சிவராமனிடம் திட்டும் வாங்கி கொண்டார். மணியார்டரில் புது தோசை கல்லுக்கு பணமும் வாங்கிக் கொண்டார்.
சிவராமன் வெளியூரில் இருப்பதால் சிவகாமி பாப்பம்மாளை அவ்வப்போது தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று வந்தார்.மற்ற நாட்களில் எல்லாம் கங்காவையும் கெளசியையும் பார்த்துக் கொள்வார். இவர்களாவது கடிதப் பரிமாற்றம் ,போன் என சிவராமனோடு தொடர்பில் இருக்க அவர் நிலை பரிதாபம்தான்.
இந்த உணர்வுபிணைப்புகளுக்கு நடுவில் ராதா வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
அதுவும் வேறு சமூகத்தை சேர்ந்தவரை இருவீட்டிலும் பலத்த எதிர்ப்பு போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது பஞ்சாயத்து. இருவரும் மேஜர் என்பதாலும் தங்கள் காதலில் திடமாக நின்றதாலும் இரு வீட்டினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மாப்பிள்ளை சொக்கதங்கம் வீட்டில் எல்லோருக்கும் பிடித்து விட்டது.என்னதான் வீட்டில் வாய்துடுக்கு இருந்தாலும் போன இடத்தில் அனைவரது மனமறிந்து நடந்து கொண்டார் ராதா.
சிவராமனுக்கு கடிதம் மூலம் ராதாவின் கல்யாண செய்தியை கலா தெரியப்படுதினார். ஒரு புறம் கோபம் இருந்தாலும்,கல்யாண கலேபரத்தில் தன்னால் துணையாக நிற்க முடியவில்லையே என வருந்தினார்.மேலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருவரும்
நன்றாக இருக்க வேண்டும் என ஆஸ்தான தெய்வத்திடம் பிரார்த்தனை வைத்தார்.
நாட்கள் அதன் போக்கில் வேகமாக ஓடியது.கங்காவும் ஒன்றாம் வகுப்பில் இருந்து இரண்டாம் வகுப்பு சென்று விட்டாள்.ஆனால் சிவராமன் இன்னமும் ஊர் திரும்ப வில்லை. இன்னும் ஒரு வருடத்திற்கு காண்ட்ராக்ட் நீட்டி எழுதி விட்டார்.
நம் கஷ்டமெல்லாம் இன்னும் கொஞ்ச காலம்தான்.எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து நாலு காசை சேர்த்தி ஊர் திரும்பி விடலாம் என நினைத்தார் சிவராமன்.
அன்று ஞாயிற்று கிழமை.சிவராமன் மகாராஷ்டிரா கிளம்பியதில் இருந்து கலாவும்,ரமேஷும் ஞாயிறு முழுவதும் அவர் வீட்டில் இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
மதிய உணவிற்குபின், கலாவின் தோழியான மங்கை வீட்டிற்கு செல்ல கலாவும், ரமேஷும் கிளம்ப கங்கா தானும் வருவதாக கூறி கிளம்பிவிட்டாள்.
அவர்களது ஊரை அடுத்த ஊர் மங்கையுடையது.தோட்டத்திற்கு நடுவில் வீடு.சுற்றியும் பச்சைபசேல் என்ற வயல்வெளி.
கங்காவிற்கு அங்கே இருந்த ஆட்டுக்குட்டி, வாழை மரம், மிளகாய்ச்செடி இவற்றை எல்லாம் விட்டுவர மனமே இல்லை.
ரமேஷ்,”கங்கா அப்பா ஊருக்கு வந்ததும் இதெல்லா நம்ம வீட்டுலையே வெச்சுக்கலாம் வா”என கூட்டி வந்தனர்.
டிவிஎஸ் எக்ஸலில் கங்கா முன்னாடி நின்று கொள்ள,ரமேஷ் வண்டி ஓட்டினான்.கலா பின்னாடி அமர்ந்து கொண்டாள்.மூவரும் பேசிக் கொண்டே வரே,ஒரு போர் போடும் வண்டி வந்தது.
கங்கா இந்தமாதிரி வண்டிலேதான் இப்ப அப்பா வேலை செய்ராரு என ரமேஷ் காட்டினான்.
அப்போ இந்த வண்டிலே போன அப்பாவை பாக்கலாமா? என கேட்டாள்.
‘ஓ’ பாக்கலாம் என்றான் ரமேஷ் விளையாட்டாக, அப்படி எல்லாம் போய்ராதே கங்கா,மாமா சும்மா சொல்றான் என கலா அறிவுறுத்தினாள்.
அந்த வண்டியை பின்தொடர்ந்து செல்ல “மாமா சீக்கிரமா போ” என ரமேஷை ஊக்கப்படுத்தினாள் கங்கா. போர் வண்டியை தன் இருகண்களிலும் பதித்துக் கொண்டாள்.
அடுத்தநாள் மாலை பள்ளி முடிந்து வெளியே வர லட்சுமியை காணவில்லை.பள்ளி கேட் முன்பு நின்று கொண்டாள்.
கெளசி நன்றாக தூங்கி இருக்க, அவளை எழுப்பி உடை மாற்றி அழைத்து செல்ல கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
பள்ளி முன்பு ஒரு போர் வண்டி சென்றது. கங்காவின் கண்களிலில் பட்டுவிட்டது. நேற்று மாமா சொன்ன அதே வண்டி,பள்ளி முன்பு போடப்பட்டிருந்த ஸ்பீட் ப்ரேக்கரில் சற்று மெதுவாக ஏறி இறங்கி செல்ல, அதில் எழுதி இருந்ததை எழுத்துக் கூட்டி படித்தாள்.
“ம-கா-ரா-ஷ்-டி-ரா”
அப்போ இந்த வண்டிலே போன அப்பாவை பார்த்துக்கலாம் என வண்டி பின்னே ஓட ஆரம்பித்தாள்.சிறிது நேரத்தில் அது வேகமாக சென்று மறைந்தது.
கங்காவிற்கு ஏமாற்றம். இரண்டாவது போனால் அப்பா வந்து விடுவார் என அம்மா கூறினாரே, இன்னமும் ஏன் வரவில்லை? என அழுகை,அதுபோக எங்கே நிற்கிறோம் எனவும் தெரியவில்லை. வீட்டிற்கு செல்லும் வழியும் தவறிவிட்டாள்.
மூச்சு வாங்க பயந்து கொண்டே நடந்து வர,அவளின் பள்ளி தோழி ஹரிப்ரியா அவள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்க, அவளின் அம்மா அருகில் நின்றிருந்தார்.
அவர்களிடம் சென்று வழிதவறி வந்ததை சொல்ல,அவர் அவளை வீட்டிற்கே விடுவதாக அழைத்து சென்றார்.
எவ்வளவு முயன்றும் கங்காவால் அவளது வீட்டிற்கு வழியை கூற முடியவில்லை.
ராதாவும், அவளின் கணவர் சக்திவேலும், அவளின் அம்மா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
வழியில் கங்கா யாருடனோ செல்வதை பார்த்து வண்டியை நிறுத்தி விசாரிக்க, “அப்பாவை தேடி போனதை சொன்னா திட்டுவாங்க என, அம்மா வரலே நானே வீட்டுக்கு போலானு நினைச்சு வழி தெரியாம போய்ருச்சு” என பொய்யுரைத்தாள்.
எங்க அக்கா பொண்ணுதா,நாங்க கூட்டிட்டு போய்க்றோம் என அவளை லட்சுமியின் அம்மா வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.
வண்டி பின்னால் ஓடியதால்,ஒரே புழுதி உடல் எங்கும்.ராதா கங்காவை குளிப்பாட்டி,வேறு உடை அணிவித்தாள்.
ராதா,” நீ எப்ப குளிச்சு விட்டாலும் மூக்குல சோப்பு போட்டு விட்டறே,இனிமேல் நான் உன்கிட்ட குளிக்கவே வர மாட்டேன் “என வியாக்கியானம் பேசினாள்.
சரி இனி நீ உங்க சின்ன சித்தி கிட்டையே குளிச்சுக்கோ,இப்ப வந்து சாப்பிடு என தயிர் சாதத்தையும், உருளை கிழங்கு பொரியலையும் ஊட்டி விட்டார்.
சித்தப்பா எனக்கு பால்டீ வேணும் என கேட்க,அதை வாங்கி வர சென்றார் சக்திவேல்.
ராதா,”அப்படியே எங்க அக்கா வீட்டுவரைக்கும் போய் ஒரு வார்த்தை சொல்லிட்டு வாங்க, கங்கா இங்கதான் இருக்கானு” என சொல்லி அனுப்பினார்.
அது ஆடிமாதம் தூரி(ஊஞ்சள்)ஆடும் நோம்பிக்காக இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தனது மூன்று பேத்திகளுக்கும் அவிநாசியப்பன் தூரி கட்டிவிட்டார்.
இந்த நோம்பிக்கு கங்கா,கொளசி உடன் அருணாச்சலம்,கஸ்தூரியின் மகள் திவ்யாவும் இணைந்து கொண்டாள்.
லட்சுமி அதற்குள் ஊர் முழுவதும் கங்காவை தேடி அலைந்து விட்டார்.சக்தி வேல் வந்து சொல்ல தனது அம்மா வீட்டிற்கு வந்தவர் வரும் வழியிலேயே வேப்பமரத்தில் இருந்து இரண்டு கிளைகளை முறித்து வந்தார்.
கங்கா தூரி ஆடிக் கொண்டிருக்க வந்தவர், அவளது முடியை பிடித்து இழுத்து இரண்டு கால்களிலும்,எங்காது சொல்லாமை போவையா? எங்காது தொலைஞ்சு போன உங்க அப்பன் கிட்ட யாருடி பதில் சொல்றது?என நன்றாக அடித்து விட்டார்.
வலிதாங்காது கங்கா கத்த ஆரம்பித்தாள். குடும்ப உறுப்பினர்கள் வந்து லட்சுமியிடம் இருந்து கங்காவை பிரித்து எடுத்தனர்.
எதுக்கு புள்ளைய இப்படி அடிக்கறே? என ராதா கோபத்தோடு கங்காவை அணைத்துக் கொண்டார்.
அவளைய விடு நா வீட்டுக்கு கூட்டிட்டு போறே என கேட்க,நீ அங்கயும் கூட்டிட்டு போய் அடிப்பே வேண்டா அவள நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறே என்றாள் ராதா.
“இல்லே நா எங்க வீட்டுக்கே போறே” என தேம்பிக் கொண்டே கங்கா சொன்னாள். “சரி அழாதே போ இனிமே இப்படி தனியா எங்கையும் போகக் கூடாது. யாராவது புடிச்சிட்டு போய் இரண்டு கண்ணையும் பிடிங்கி பிச்சை எடுக்க வெச்சுருவாங்க” என அவளுக்கு புரியும் மொழியில் சற்று பயத்தை வரவைத்து இனி தனியாக செல்ல கூடாது என அறிவுறுத்தி அனுப்பினாள் ராதா.
வீட்டிற்கு வந்தவள் அம்மாவுடனும் தங்கையுடனும் எதுவும் பேசாது அழுது கொண்டே படுத்துக் கொண்டாள்.
கெளசி ,”வா கங்கா விளையாடலாம் “என எவ்வளவோ அழைத்தும் வரவில்லை.”அம்மா கங்கா அழுதுட்டே இருக்கா” என்றாள்.
அவர் அடித்த அடியால் கால் இரண்டும் கன்றிப்போய் இருந்தது.என்னதான் கோபத்தில் அடித்து இருந்தாலும் மனம் கேட்க வில்லை.மடியில் எடுத்து படுக்க வைத்துக் கொண்டார்.
கங்கா அவரை தள்ளி விட்டு,”எனக்கு நீ வேண்டா போ , அப்பாதான் வேணும் என அழ ஆரம்பித்தாள்.
கங்கா அழுவதை பார்த்த கெளசியும் எனக்கும் அப்பா வேணும் என அழ, இருவரையும் சமாதான ப்படுத்த முடியாமல் திணறினார் லட்சுமி.
ஏற்கனவே அவரை காணாத ஏக்கம்,இன்று அம்மா அடித்தது என எல்லாம் சேர்ந்து ஜுரத்தை வரவைத்தது.
ஒருநாள் இரண்டுநாள் இல்லை. ஒருவாரம் கடந்து கூட ஒருதுளி ஜுரம் குறையவில்லை.
கலா தனது மாமாவிற்கு கடிதம் மூலம் கங்காவின் உடல்நிலை குறித்து எழுதி விட்டார். ,போன கடிதம் அனுப்பிய போது தங்கள் வீட்டில் வாடகைக்கு குடி இருக்கும் சிறுவன் முத்துக்குமார் உடன் கங்கா எடுத்த போட்டோவை வைத்து அனுப்பி இருந்தார் லட்சுமி.
அதில் பச்சைகலர் பட்டுபாவடையில் சிரித்துக் கொண்டிருந்த கங்காவை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது சிவராமனுக்கு,தற்போது அவளது உடல்நிலை பற்றிய செய்தி அவரை துரிதப்படுத்த,முதலாளி முன்பு சென்று நின்றார்.
ஊரில் என் மகளுக்கு உடம்பு சரியில்லை இரண்டு நாட்கள் லீவு வேணும்,சீக்கிரமாக திரும்பி விடுகிறேன் என்றார்.
முதலாளி வர்க்கம்,” அது உன்பிரச்சனை காண்ட்ராக்ட்ல கையெழுத்து போடும் போது,இப்படி இடைலே லீவு கேட்க கூடாதுனு இருந்தது தானே..
இப்போ இடைலே போன இங்க யாரு வேலை பார்க்கிறது?
இல்லைங்க நா அனாவசியமா லீவு போடறே ஆள் இல்லை. என் புள்ளைக்கு உடம்பு முடிலே,போய் பாத்ததும் திரும்பி வந்துருவே என்று திருப்பியும் சொல்ல..
இதுக்குதா இந்தமாதிரி ஆட்களை எல்லா வேலைக்கு எடுக்கறதே இல்லை.உம்புள்ளைக்கு உடம்பு தானே சரியில்லை.செத்து ஒன்னும் போகலையே. இன்னும் எட்டு மாசம் காண்ட்ராக்ட் பாக்கி இருக்கு முடிச்சிட்டு போ என்றது.
பணிவுக்கும்,அடிமைதனத்திற்கும் வித்தியாசம் தெரியாத முதலாளி வர்க்கத்திடம் சிவராமன் தனது ஸ்டைலில் பதில் கூறினார்.
இதோ பார்.நான் உன்கிட்ட வேலைதான் செய்றேன்.உனக்கு அடிமை வேலை பாக்குல.என்னுடைய உழைப்புக்கு நீ ஊதியம் தரே அவ்வளவுதான்.அதுக்காக நீ தரங்கெட்ட தனமா பேசறதே பொறுத்துட்டு,உன் காலை சுத்தி வேலை செய்றே நாய் நான் இல்லை.
நான் காண்ட்ராக்ட்ல கையெழுத்து போட்டது உண்மைதான்.இப்போ வீட்டு சூழ்நிலை என்னை அழைக்குது. நான் போய்தா ஆகனு. நான் எப்ப வரனும் போகனும்னு முடிவு செய்றே உரிமை உனக்கு இல்லை.நான் உனக்கு அடிமையும் இல்லை.உன் கிட்ட என்னோட சம்பளத்தை தவிர ஒத்த பைசா அதிகமா நா வாங்குல.
இந்த மாசம் பத்துநாள் வேலை செஞ்சிருக்கே. அந்த சம்பளத்தை நீயே வெச்சுக்க எனக்கு வேண்டா.இனி ஒரு நிமிஷம்கூட நான் இங்க இருக்க மாட்டேன் என தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு விருட்டென கிளம்பி விட்டார்.
வரும் வழியில் லட்சுமிக்கு புடவை, தன்னுடைய ஆசை பச்சை கிளிகளுக்கு அவர்கள் கேட்ட புதுத்துணி, விளையாட்டு பொருட்கள், பொம்மை,திண்பண்டம்,கூடவே தன் வீட்டு ஆட்களுக்கும், லட்சுமி வீட்டு ஆட்களும் ஒவ்வொரு பொருளையும் தேடித்தேடி வாங்கி வந்தார்.
லட்சுமி காலை வாசல் கூட்ட வந்தார்.எதிரே சிவராமனை பார்த்து கண்களில் கண்ணீர் தேம்ப வரவேற்றார்.
-தலைவன் வருவான்..
