Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்-27

அத்தியாயம் 27

அதிதி பவித்ராவைத் தேடிப்போன போது அவள் ரெஸ்ட் ஏரியாவில் இருந்தாள்.. இவள் தயங்கியபடியே அவளிடம் சென்று நிற்க..

இவள் முகத்தைப் பார்க்காமல் தவிர்த்தவள் அமைதியாகவே இருந்தாள்.



Advertisement

“மேம்..” என்று இவள் கம்மியகுரலில் அழைக்க..

“அதி.. நீ அங்க மீட்டிங் ரூம்ல நடந்ததப்பத்தி விளக்கம் குடுக்க வந்திருந்தா.. நீ எதுவும் சொல்லத்தேவையில்லை.

ஏன்னா அது உன் பர்சனல்.. ஆனா உன்னோட பர்சனல் உன்னோட இருக்கற வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. அது ஆஃபீஸ் ஸ்பேஸ்ல நடக்கும் போது அதைபார்த்துட்டு சும்மா இருக்க முடியாது.

Advertisement

முக்கியமா நம்ம பிஸ்னச பாதிக்கறத நிச்சயமா அனுமதிக்கவே முடியாது.

Advertisement

யூ ஷுட் கீப் யுவர் பர்சனல் லைஃப் ப்ரைவேட்..” என்றாள் சற்று கடுமையாகவே.

“சாரி மேம், இனிமே இப்படி நடக்காது..” என்றாள் அதிதி தலைகுனிந்து…

“சரி போ..” என்றாள் பவித்ரா.

Advertisement

அப்போதும் போகாமல் அதிதி அங்கேயே தயங்கி நிற்கவும்

“என்ன ?” என்று கேட்டாள்

“மேம் இந்த விஷயத்த.. யார்கிட்டயும்.” என்று இழுக்க

“சொல்லமாட்டேன்..” என்று முடித்தாள் பவித்ரா.

“தாங்க்ஸ் மேம் “ என்று விட்டுப்போனாள் அதிதி.

அதன் பிறகு “ஆர் யூ ஓகே?” என்று வசீகரன் அனுப்பிய மெசேஜுக்கும் அவள் பதில் அளிக்கவில்லை..

அன்று மாலை விக்ரம் வீட்டில் கொலு பூஜைக்கு அழைத்திருந்தான். வருடா வருடம் அவனது அம்மா நவராத்திரி ஒன்பது நாட்களில் எதாவது ஒரு நாளில் இவர்கள் ஆஃபீஸ் பணியாளர்களை அழைத்து தாம்பூலமும் இரவு உணவும் கொடுப்பது வழக்கம்.

அன்றைய தினத்தில் மட்டும் மாலை சீக்கிரமே ஆஃபீஸ் முடித்து அனைவரும் கிளம்பிவிடுவர்.

அதிதி அன்று வீட்டிற்கு சென்று புடவை உடுத்தி தயாராகி விக்ரம் வீட்டிற்கு சென்றாள். புடவைகட்டிக்கொண்டு வண்டி ஓட்ட முடியாது என்று அவளது அப்பாதான் காரில் கொண்டுவிட்டார்.

“முடிஞ்சதும் ஃபோன் பண்ணு பாப்பா.. நான் வரேன்.” என்றவரிடம்

“நானே வந்துடுறேன் பா.. வேற யாராவது அந்த பக்கம் போவாங்க.. அவங்க கூட சேர்ந்து வந்துடுறேன் நீங்க திரும்ப வர வேணாம்..” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

அதிதி அந்த பெரிய வீட்டின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு நிற்க..

வந்து கதவைத் திறந்தவனை அவள் சற்றும் எதிர்பாக்கவில்லை…

வசீகரன் ஐவரி கலரில் கோல்டன் த்ரெட் வேலைப்படுடன் கூடிய ஷார்ட் குர்தாவில் அசத்தலாக நின்றிருந்தான்.

அவனைப்பார்த்ததும் ஒரு கணம் மூச்சுவிடவும் மறந்திருந்தாள் அதிதி..

அந்தப்பக்கம் அவன் நிலைமையும் ஒன்றும் பிரமாதமில்லை..

மெரூன் கலரில் தங்க ஜரிகை கரையிட்ட சாஃப்ட் ஸில்க் சாரியை சிங்கிள் ஃப்ளீட் விட்டு காட்டி,தலைமுடியை ஒரு சின்ன கிளிப் மட்டும் போட்டு பின்னால் தளரவிட்டு,பெரிய ஜிமிக்கிதோடு காதோரம் நடனமாட.. கழுத்தில் ஒரு சின்ன பென்டெண்டுடன் கூடிய மெல்லிய சங்கிலியில் தேவதை போல் நின்றவளை

அவனும் வாய் பிளந்துதான் பார்த்துக்கொண்டிருந்தான்.

முதன்முதலில் அதிதியை சேலையில் பார்த்ததில் கிளீன் போல்டு ஆகியிருந்தான்.

அவன் பார்வையில் நாணி சிவந்தவள் கஷ்டப்பட்டு முகம் சூடாவதைத் தடுத்தாள்.

“யாரு வசி..” என்று உள்ளிருந்து ஒரு பெண் குரல் வர சட்டென்று சுய உணர்வுபெற்றவன்.

“விக்கிண்ணா கம்பெனில இருந்து வந்திருக்காங்க பெரிம்மா..” என்றான் சற்று உரக்க..

அதற்குள் உள்ளிருந்து வந்த விக்ரம் அதிதியைப்பார்த்துவிட்டு

“ஹாய் அதி.. உள்ள வா..” என்று உற்சாகமாக வரவேற்றான். அவனும் வசீகரன் அணிந்திருப்பது போல அதே மாதிரி குர்தா அணிந்திருந்தான்.

வசீகரன் வேண்டுமென்றே கொஞ்சமாக வழிவிட்டு விலகி நிற்க அவள் உள்ளேப்போகும் போது அவனை உரசிக்கொண்டு செல்லவேண்டியதாக இருந்தது..

அந்த சிறிய உராய்வில் அவன் மெய்சிலிர்த்துப்போனான்.

விக்ரமின் அம்மா அபிராமி இவளை இன்முகத்துடன்

“வாம்மா..” என்று வரவேற்றார்.

ஏற்கனவே ஒருமுறை அவரை அதிதி பார்த்திருக்கிறாள் தான் ஆனால் இம்முறை பார்க்கும் போது அவரிடம் வசீகரனின் அம்மாவின் சாயல் நன்றாகத் தெரிந்தது..

அவர்களின் விசாலமான ஹாலில் ஒரு புறமாக ஒன்பது படிகள் கொண்ட கொலு அலங்கரிக்கப்பட்டிருந்தது. தசாவதாரம்,முருகரின் அறுபடைவீடுகள், அஷ்டலட்‌சுமிகள்,இன்னும்பல தெய்வங்கள் மற்றும் பல புராணகதை பாத்திரங்கள் என்று வண்ணம்மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன அந்த கொலுபடிகள்.

ஏற்கனவே சிலர் அங்கு கொலு பூஜைக்கு வந்திருக்க அதிதி அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.

திரும்பிப்பாராமலேயே வசீகரன் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை உள்ளுணர்விலே உணர்ந்தாள்.கொஞ்ச நேரம் அவனைப்பார்க்காமல் தவிர்த்தவள் கடைசியாக முடியாமல் எதிரில் அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்த்துவிட அவன் பார்வையில் அவளுக்கு மயிர்கூச்செரிந்தது.

பவித்ரா வீட்டுப்பெண் போல,வந்தவர்களை கவனிப்பது, விக்ரமின்  அம்மாவிற்கு தாம்பூலம் அடுக்க உதவுவது என்று எல்லாவேலையையும் இழுத்துப்போட்டுக்கொண்டு  செய்தாள்.

அவள் கையில் சுண்டல் பிரசாதத்தை கப்பில் வைத்து வந்தவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

இவர்கள் இருவரது பார்வைபரிமாற்றத்தை கண்டும் காணாதது போல் அதிதியிடம் தட்டை நீட்டினாள்.. அதிதி பவித்ராவை நேராகப்பார்க்காமல் தவிர்த்த படி அவள் நீட்டிய தட்டிலிருந்து ஒரு கப்பை எடுத்துக்கொண்டாள்.

வசீகரன் அந்த வீட்டில் அவன் சொந்த வீடுபோல மிகவும் சகஜமாக பொருந்தியிருந்தான்.

சற்று நேரத்தில் எல்லோரும் வந்துவிட வீடே களைகட்டியது..

அப்போது விக்ரமின் அம்மா

“யாராவது பாட தெரிஞ்சவங்க பாடுங்க..” என்றார்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு யாரும் பாட முன் வரவில்லை.

“என்ன இங்கயும் நான் தான் வொர்க் அசைன் பண்ணனுமா..? என்று விக்ரம் கேட்டான்.

“பாஸ் உங்க வீட்டு கொலுவுல நீங்கதான்  பாடனும்..” என்றாள் லிடியா துடுக்காக..

“வேணாம்..சின்னக் குழந்தைங்கல்லாம் இருக்கு பயந்துடும் பாவம்.” என்று சொல்லி தப்பித்தான்.

“வசீ.. நீ நல்லாப் பாடுவியேடா பாடு..” என்றார் அபிராமி..

“பெரிம்மா..வீட்டுக்கு வந்தவங்கள பாட சொல்லுங்க..” என்றான் ஓரக்கண்ணால் அதிதியைப்பார்த்தபடி..

“சரி நீங்க யாரும் சரிபட்டு வரமாட்டீங்க..நானே இறக்கிவிடுறேன்.. “ என்ற விக்ரம் சுற்றிலும் பார்த்துவிட்டு

“அதி நீ பாடு..” என்றான்.

“அய்யோ பாஸ் எனக்கு பாடவராது..” என்றாள் பதறியபடி

“இங்க ஒன்னும் சூப்பர் சிங்கர் ஆடிஷன் நடக்கல… யாரும் உனக்கு மார்க் போட போறதில்லை.. சும்மா பாடு..” என்றான்

எல்லோரும் அவளையே ஆவலாகப் பார்க்க..வேறு வழியில்லாமல்..

அவள் அம்மா கற்றுக்கொடுத்த பாடலைப்பாடினாள்.

“அருளோடு பொருள் தந்து ஆதரிக்கும் அம்மா

அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா

இருள் நீக்கி ஒளிதந்து எமைகாக்கும் அம்மா

இனிதான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா

அகமாயை அகற்றும்நல் அம்பிகையே நீதான்

அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா

நவ இரவில் நாங்கள் கண்டுகளித்திடவே அம்மா

நவரத்ன பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா..”

அதிதி சிறு வயது முதலே இந்த மாதிரி கொலுபூஜைகளுக்கு  சென்று பாடி பழக்கம் இருப்பதால் இது ஒன்றும் புதியதாகத் தெரியவில்லை.. ஆனால் வசீகரன் பார்க்கிறான் என்ற குறுகுறுப்புமட்டுமே புதிதாக இருந்தது.

அதன் பின் எல்லோரும் உணவருந்த தயாராக.. வீட்டின் ஹாலின் ஒரு பகுதியில் வாழை இலைபோட்டு உணவு பரிமாறினர். தங்கள் குடும்பத்துடன் சிறு பிள்ளைகளைக் கூட்டி வந்தவர்கள் முதல் பந்தியில் உக்கார இளைஞர் பட்டாளம் வெளியில் போர்டிக்கோவில் நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அதிதியின் மொபைல் சத்தமின்றி அதிர அதை எடுத்துப்பார்த்தாள்

“மேல வா..” என்று வசீகரனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

கண்கள் தன்னியல்பாக அலைபாய்ந்து மாடிப்படியின் தொடக்கத்தில் நின்றுகொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் சென்றுநிலைத்தது.

அவள் பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததும் மெதுவாக மேலே ஏறிப்போனான்.

அதிதிக்கு இதயம் படபடவென்று வேகமாகத் துடித்தது.

ஆவலும் அச்சமுமாக

போலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கமுடியாமல் திணறினாள்.

இவள் இப்படி குழம்பித்தவிக்கையில்

“ப்ளீஸ்..” என்று ஒரு குழந்தை கெஞ்சுவது போன்ற ஸ்டிக்கரை அவன் அனுப்பவும்.. அவளுக்கு மனம் கரைந்துவிட்டது.

மெதுவாக யார் கண்ணையும் உறுத்தாதவாறு மெல்ல படிகளில் ஏறி மேலேப்போனாள்.

வசீகரன் மேலே படிக்கட்டு முடியும் இடத்தில் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தான்.

அவளைப்பார்த்ததும் புன்னகை விரிய.. கையைப்பிடித்து அழைத்துப்போனான்.

ஒரு அறையின் உள்ளே சென்று அவன் கதவை சாத்தவும் அதிதிக்கு மனம் திக்கென்றது.. தான் மேலே வந்தது தவறான முடிவு என்று தோன்றத்தொடங்கியது.

அவள் முகத்தில் கலவரத்தைப்பார்த்தவன்

“யம்மா.. உடனே நீ பேனிக்(panic) ஆவாத.. அழகா சாரிலாம் கட்டியிருக்க ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலான்னுதான் வர சொன்னேன்..” என்றான் அவன்.

வெளியேத் தெரியாமல் ஒரு ஆசுவாசப்பெருமூச்சுடன்..

“அதுக்கு எதுக்கு இப்படி திருட்டுத்தனமா இங்க வரனும்.. வெளியவே எடுத்திருக்கலாமே..” என்றாள்.

“அப்போ இப்படி எடுக்க முடியாதே..” என்று அவளை  அருகில் இழுத்து அந்த அறையில் இருந்த பெரிய கண்ணாடியின் முன் நிறுத்தியவன், பின்னாலிருந்து தன் இருகைகளையும் சேர்த்து அவள் இடையை சுற்றி அணைத்தபடி தன் தாடையை அவள் தோள்மேல் வைத்து கண்ணாடியில்  தெரியும் தங்கள் பிம்பத்தை பார்த்தான்.

அதிதி கண்ணாடியானாலும் அவன் பார்வையை சந்திக்கமுடியாமல் கீழே பார்க்க.. அவள் இடையை லேசாக அழுத்தி..

“நிமிர்ந்து பாரு அதி..” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்..

அவன் ஆண்மையின் மொத்த உருவமாக நிற்க இவள் பெண்மையின் பிரதிநிதியாக மென்மையே வடிவாக அவன் மீது கொடிபோல படர்ந்திருக்க.. அவ்வளவு பொருத்தமான இருந்தது.

அதிதி உலகம் மறந்து போனால்.. அவன் பார்வையிலிருந்து விலக முடியாமல் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்திருக்க அவன் தன் செல்போனை எடுத்து மிரர் செல்ஃபி எடுத்தான்.

பின் லேசாக முகம் திருப்பி அவள் காதுமடலில் முத்தமிட்டு

“யூ லுக் சோ ப்யூட்டிஃபுல் கிட்டி..”என்றான்.

அதிதி மூச்சுவிடவும் மறந்து போனாள்.

அவள் நிலையை நன்றாக உணர்ந்தவன் உதட்டோரம் சிரிப்புடன் அவள் அடர்ந்த கூந்தலில் முகம் புதைத்து அவளின் மயக்கும் நறுமணத்தை நுகர்ந்து நாசியில் நிறைத்தான்.

அந்தத் தீண்டலில் மெய்சிலிர்த்தவளின் உடலும் லேசாக நடுங்க.. அவன் தன்னுடனே சேர்த்து ஒட்டவைத்துக்கொள்பவன் போல அவளை இன்னும் இறுக்கி அணைத்தான்.

அதிதியின் மூளை முழு வேலை நிறுத்தம் செய்துவிட அவள் தன்னையறியாமல் அந்த இன்ப அலையில் மூழ்கத்தொடங்கினாள்..

கண்மூடி தன் மீது சாய்ந்திருந்தவளைப் பார்த்தவனும் கள்ளுண்டவன் போல மதி மயங்கிப்போனான்…

“நீ என்னை என்ன பண்ற தெரியுமா..?” என்று கேட்டபடி

அவள் கழுத்துவளைவில் அழுத்தமாக ஈரமுத்தம் வைத்தான்..

அப்போது இடையை  சுற்றியிருந்த அவனது ஒரு கரம் சற்று எல்லைமீற நினைத்து அவள் சேலைக்குள் நுழைந்து அவள் வெற்றிடையை பிடித்து அழுத்த..

சட்டென்று தன்னுணர்வு பெற்றவள்.

அவன் கையை தள்ளிவிட்டுவிட்டு விலகி நின்றாள்.

“என்ன பண்றீங்க..?” என்றாள் அதிர்ச்சியும் ஆத்திரமுமாக..

இன்பக் கனவிலிருந்து திடுமென விழித்தவன் போல் ஒரு கணம் புரியாமல் விழித்தவன்..

“என்ன பண்றாங்க..” என்றான் சற்று எரிச்சலுடன்.

“இதுக்குதான் என்னை வர சொன்னீங்களா..?”

“பின்ன உன்கூட உலக அரசியல் பேச வர சொன்னேன்னு நினைச்சியா..” என்றான் கடுப்பாக

“ஏன் இப்படி சீப்பா பிஹேவ் பண்றீங்க..” என்றாள் அதிதி குற்றம் சாட்டும் குரலில்..

“என்னது சீப்பா..? நான் என்ன ஊருல இருக்க எல்லாப்  பொண்ணுங்ககிட்டயும் இப்படி நடந்துக்குறனா..? சீப்புன்னு சொல்ற?

கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் உனக்கும் பிடிச்சிதானே இருந்தது..?” என்று சொல்லிக்காட்டவும் அவளுக்கு அவமானத்தில் இன்னும் அதிகமாக கோபம் பொங்கியது.

“அசிங்கமா பேசாதீங்க..” என்று சீறினாள்.

“அப்ப நீ மட்டும் என்னவேனா பேசலாமா..?நான் என்ன பொறுக்கியா..?ஆசையா பக்கத்துல வந்தா அலையிறவன்னு சொல்ற.. இனி உன் பக்கதுல வந்தா என்னன்னு கேளுடி..” என்றவன் கோபமாக கதவைத் திறந்து கொண்டு வேகமாக வெளியேறினான்.

அதிதிக்கு தலை சுற்றியது கொஞ்ச நேரம் முன்பு வரை இனிமையாக இருந்த தருணம் எப்படி இப்படி தலைகீழாக மாறியது என்று தெரியவில்லை..

அவன் செய்கை எல்லையை மீறுவதாகத் தோன்றினால் அதை தன்மையாக சொல்லியிருந்தால் அவன் கேட்டிருப்பான்.ஆனால் அதை விட்டுவிட்டு அவனை தவறாக சித்தரித்து பேசியது அவனது தன்மானத்தை சீண்டிவிட்டது என்று புரிந்தது.தான் அவசரப்பட்டுவிட்டோம் என்று அவள் உணரும் போது நிலமை கைமீறிப்போயிருந்தது..

அதன் பிறகு வசீகரன் அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.. இவள்தான்  மனம் கலங்கிப்போனாள். இதற்குமுன் இவள் கோபப்பட்ட போதெல்லாம் அவன் தான் பின்னாடியே வந்து கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்துவான். இப்போது அவன் கோபத்தை எப்படி தணிப்பது என்று அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை..

இவள் கீழே போன போது அடுத்த பந்தி தொடங்கியிருந்தது.. இவளை யாரோ சாப்பிட அழைக்க விருப்பமில்லாமல் அமர்ந்து எதோ கொஞ்சமாக கொரித்துவிட்டு எழுந்தாள்.

வசீகரனின் மனம் கொதித்துக்கொண்டிருந்தது..

என்னை என்னவென்று நினைத்துவிட்டாள். இவள் மேல் பைத்தியமாக சுற்றியதற்கு எனக்கு நல்ல பாடம் கிடைத்தது. எந்த உறவிலும் சுய கவுரவம் இழந்து இருக்கமுடியாது.

அந்த நேர உணர்ச்சிப்பெருக்கில் தான் சற்று எல்லைமீறியதாகவே இருக்கட்டும் அதற்காக என்னை கீழ்தரமானவன் என்று  சொல்லிவிடுவாளா..அவள் இப்படி குற்றம் சாட்டுவது இது முதல் முறையும் இல்லை..என் நடத்தையை பழிகூற தயங்குவதே இல்லையே அவள்..என்ன ஏதென்று யோசியாமலே சட்டென்று குற்றம் சாட்டிவிடுகிறாளே..”என்று மனம் ஆறவில்லை அவனுக்கு..

அதிதியை பார்ப்பதையே தவிர்பதற்காக உள்ளே போனவனை கிச்சனிலிருந்து அழைத்தார் அபிராமி..

“வசீ கண்ணா இங்க வாம்மா..”

“என்ன பெரிம்மா..” என்றபடி அவர் அருகில் சென்றான்.

“கண்ணா.. என்னடா உங்க அண்ணன் இப்படி சொல்றான்..” என்றார் கண்ணை விரித்தபடி

“எப்படி சொல்றான்..” என்று அதே பாவனையுடன் கேட்கும் போதே அவனுக்கு சிரிப்பு வந்தது.

அவனது பெரியம்மா அப்படித்தான் எல்லாவற்றிற்கும் கொஞ்சம் அதிகபடி ரியாக்ஷன் காட்டி பேசுவது அவர் வழக்கம்..

தன் அன்னையின் வழியில் ரத்த சொந்தம் என்று சொல்வதற்கு இருக்கும் ஒரே உறவு அவர்தான்.

அபிராமியும் தன் தங்கையின் மகன் தாயில்லாமல் ஏங்கிவிடக்கூடாது என்று முடிந்தவரை அவன் மீது அன்பைப்பொழிந்தார். சில நேரம் தன் மகனைவிடவும் தங்கையின் மகன் மீதே அதிக பாசம் காட்டுவார்.

“இல்லடா.. உங்க அண்ணன்கிட்ட அடுத்த வருஷமாவது என் மருமக வந்து இந்த கொலுவ வைக்கனும்னு சொன்னேன்.. அதுக்கு இங்க வந்திருக்க பொண்ணுங்கள்ல ஒருத்திதான் உன் மருமக முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கோன்னு சொல்றான் டா.. யாரா இருக்கும்..? உனக்கு எதாவது தெரியுமா..?”என்று அவர் ஆர்வமாக கேட்க..

“தெரியல பெரிம்மா.. இதபத்தி அவன் என்கிட்ட எதுவும் சொல்லல..” என்றான் யோசனையாக..

“இப்ப பேசிட்டு இருக்கானே அந்த பொண்ணா இருக்குமோ..” என்று அவர் கேட்க ..

யார் என்று பார்க்க திரும்பியவன் அதிர்ந்தான்.

விக்ரம் அதிதியிடம் நின்று பேசிக்கொண்டிருந்தான்.அவன் எதோ சொல்ல அவள் புன்சிரிப்புடன் அதைக்கேட்டுக் கொண்டிருந்தாள்.

வசீகரனுக்கு வயிற்றில் சூடாக அமிலம் சுரந்தது..

“அந்த பொண்ணைதானேடா பாட்டுப்பாட கூட சொன்னான்..” என்று அவர் தனது மனதில் கணக்குப்போட தொடங்க..

அவனுக்கு பற்றிக்கொண்டுவந்தது..

அதிதியை வெறித்துப்பார்த்தவன்..

‘என்கிட்ட தவிர எல்லார்கிட்டயும் சிரிப்பா..நான் தானே அவளுக்கு இழிச்சவாயனா போய்ட்டேன்..’ என்று குமைந்தவன்..

“அதெல்லாம் இல்ல பெரிம்மா.. அந்த பொண்ணு அவனுக்கு சிஸ்டர் மாதிரி..”என்று அவனது பெரியம்மாவிடம் சொல்லி அவர் கற்பனைக் கோட்டையில் கொள்ளியை வைத்தான்.

“ஓ அப்போ அந்த பொண்ணு இல்லைங்கறியா..?” என்று ஏமாற்றமடைந்தவர்,

“அப்ப யாரா இருக்கும்..?” என்று அவனையே திருப்பிக் கேட்டார்.

“நான் கண்டுபிடிச்சி சொல்றேன் பெரிம்மா நீங்க கவலைப்படாதீங்க..” என்று அப்போதைக்கு அவர் வாயை அடைத்தான்.

அதேநேரம் கிச்சனுக்கு வந்த பவித்ராவும் அவர்கள் பேசுவதை கேட்க நேர்ந்தது.

வசீகரனின் பார்வையைத் தொடந்து பார்த்தவள் அங்கே அதிதியும் விக்ரமும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து முகம் வாடிப்போனாள்.

அதிதி வசீகரனின் பாராமுகத்திலேயே முழுகவனத்தையும் குவித்திருந்ததால் வீட்டுக்குப்போவதற்கு யாரிடமாவது லிஃப்ட் கேட்க வேண்டும் என்பதையே மறந்திருந்தாள்.

கடைசியாக எல்லோரும் கிளம்பிவிட இவளும் பவித்ராவும் மட்டுமே இருந்தனர்.

அதிதி கேப் புக் பண்ணிக்கொண்டு போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது..

“அதி நீ எப்படி வந்த..?” என்று விசாரித்தான் விக்ரம்.

“அப்பாகூட வந்தேன் பாஸ் .. இப்ப நா கேப் புக் பண்ணிப்போயிடுவேன்..” என்றாள்.

அதைக்கேட்ட அபிராமி

“அதெல்லாம் வேண்டாம்.. விக்கி நீ கொண்டுப்போய் விட்டுட்டுவாப்பா..” என்றார்.

“அய்யோ ஆண்ட்டி வேண்டாம் நான் கேப்லயே போய்க்குவேன் ஒன்னும் பிரச்சனையில்ல.. எங்க வீடு பக்கம்தான்.” என்றாள்.

“அம்மா.. நா பவிய ட்ராப் பண்றேன்னு சொல்லியிருந்தேன்மா..” என்று விக்ரம் தயங்க..

“அது பரவால்ல.. நான் டாக்ஸி புக் பண்ணிபோய்டுவேன்..” என்றாள் பவித்ரா அவசரமாக.

“யாரும் டாக்ஸில போக வேண்டாம்.. அதான் ரெண்டுபேர் இருங்காங்களே..

விக்கி நீ பவித்ராவை கார்ல போய் விட்டுட்டுவா..” என்றவர் வசீகரனிடம்

“கண்ணா நீ விக்கியோட பைக்ல அதிதிய விட்டுட்டு வந்துடு..” என்றார்.

வசீகரனிடம் தனியாக பேச நல்ல வாய்ப்பு என்று அதுவரை சோர்ந்திருந்த மனம் விழித்தெழுந்தது.

ஆனால் வசீகரனோ அவளது கண்கள் பளபளத்ததைப் பார்த்துவிட்டோ என்னவோ..

“பெரிம்மா நான் வேணா பவித்ரா அவங்கள ட்ராப் பண்றேன்.. விக்கி இவங்கள கூட்டிட்டுப்போகட்டும்..” என்றான்.

அதிதிக்கு மனம் வலித்தது என் பேரைக்கூட சொல்லாமல் யாரையோ போல் சொல்லுகிறானே..

“இல்ல தங்கம் பவித்ரா வீடு ரொம்ப தூரம்.. போக வரவே ரெண்டு மணி நேரம் ஆகிடும்..விக்கியே போகட்டும்..

ஆனா அதிதி வீடு பக்கம் தான் அரைமணி நேரத்துக்குள்ள போயிட்டு வந்துடலாம்.. உனக்கு ஏன் கண்ணா அலைச்சல் அவனே போவட்டும்..” என்றார் அவனை பாசமாகபார்த்து..

“அம்மா நிஜமாவே என்னை பெத்தியா இல்ல குப்பை தொட்டில இருந்து எடுத்துட்டு வந்து வளத்தியா..? தெரியாதவங்க யாராவது பார்த்தா அவன்தான் உன் மகன்னு நினைப்பாங்க..” என்றான் விக்கி பொய்க்கோபத்துடன்.

“சொன்னாலும் சொல்லாட்டியும் வசி என் மகன் தான்..” என்றார் அவனைத் தோளோடு அணைத்து..

அந்த அன்பைப்பார்த்து அதிதியின் மனம் நெகிழ்ந்தது..

கடைசியில் அபிராமி அம்மா சொன்னது போல விக்ரம் பவித்ராவை அழைத்துக்கொண்டு செல்ல.. வசீகரன் அதிதியை பைக்கில் கொண்டு விடுவது என்று முடிவானது.

வசீகரன் பைக்கை கொண்டுவந்து இவள் முன் நிறுத்திவிட்டு பேசாமல் அமைதியாக இருந்தான்.

அவன் முகம் பாறையாக இறுகியிருப்பதைப்பார்த்து பெருமூச்சுவிட்டவள்..

பேசாமல் அவன் பின் ஏறி அமர்ந்தாள்.

வசீகரன் வண்டியை ஒரு சிறு அதிர்வுகூட ஏற்படாமல்

மிக ஜாக்ரதையாக ஓட்டினான்..

அதிதிக்கு அவனிடம் என்ன சொல்லி பேச்சை ஆரம்பிப்பது என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை..

வார்த்தைதான் தன்னை வஞ்சிக்கிறது செயலையாவது துணையாகக்கொள்ளலாம் என்று நினைத்து

சற்று அவனை நெருங்கி அவன் இடுப்பை சுற்றி கைப்போட்டு பிடித்துக்கொண்டாள்.

திடுமென வண்டியை நிறுத்தியவன்

“கொஞ்சம் இறங்குங்க..” என்றான்.

அவள் என்னவாயிற்று என்று அறியாமல் விழித்துக்கொண்டே இறங்க,

“நான் ரொம்ப மெதுவாதான் வண்டிய ஓட்டுறேன்.. நீங்க விழ மாட்டீங்க.. ஆனா அப்பவும் உங்களுக்கு விழுந்துடுவீங்கன்னு தோணினா.. சைடுல இருக்கற கம்பிய புடிச்சிக்கோங்க..” என்றான் கொஞ்சமும் இறங்கிவராமல்..

அதன் பிறகு ஏறி அமர்ந்தவள் அவனைப் பிடித்துக்கொள்ளவில்லை..

மனம் அடிவாங்கியது போல வலித்தது.

அதன்பின் அதிதியின் வீடு போய் சேரும் வரை இருவரும் பேசவில்லை..

வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி அவள் இறங்கியதும் ஒரு வார்த்தையில்லாமல் கிளம்பியவனை

“வசி..” என்ற அவளது குரல் நிறுத்தியது.

அவன் அவளை திரும்பியும் பாராமல் நேரேபார்த்தபடியே அமர்ந்திருந்தான்.

“வசி.. ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள்.

அவன் லேசாகத் திரும்பிப்பார்த்து

“என்ன..?” என்றான்.

அவள் அவனைப் பாவமாகப்பார்த்து..

“சாரி..” என்றாள்.

“உள்ளப்போ நா கெளம்பறேன்..” என்றான் கொஞ்சமும் அசைந்துகொடுக்காமல் பிடிவாதமாக இருந்தான்.

அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது..

“நான் தான் சாரி சொல்றேன்ல அப்புறமும் கோபமாவே இருந்தா நான் என்னப்பண்றது..?” என்றவள் அடக்கமுடியாமல் விம்மிவிட்டாள்..

ஒருகணம் கண்ணை மூடித் திறந்தவன் பைக்கைவிட்டு இறங்கினான்.

“இங்க பாரு அழாத..” என்றான் பொறுமையை இழுத்துப்பிடித்த குரலில்..

சாதாரணமாக வசி என்று அழைத்தாலே உருகிவிடுபவன் இன்று அவள் அழுததைப்பார்த்துக்கூட மனமிளகாமல் தள்ளியே நின்றான்.

அதிதி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு

“இப்ப நான் என்ன பண்ணா சமாதானம் ஆவீங்க..?” என்று கேட்டாள்.

“நீ எதுவும் பண்ண வேண்டாம்..நீ சாரியும் கேட்க வேண்டாம்.. உன்னை அன்கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ண வச்சதுக்கு நான்தான் சாரி சொல்லனும்..சாரி.. இனிமே என்னோட பவுண்டரிலயே நான் நின்னுக்கறேன்..” என்றான் உணர்ச்சி துடைத்தக் குரலில்.

வசீகரன் பேசப்பேச தங்களுக்குள் இடைவெளி அதிகரித்துக்கொண்டே போவது போல் தோன்ற சட்டென்று அவன் இடுப்பை கைகளால் சுற்றி அணைத்துக்கொண்டாள்.

அவன் மார்பில் காதைவைத்து இதயத்துடிப்பைக்கேட்டபடி கண்ணை இறுகமூடிக்கொண்டாள்.

அப்படியே சிலையாக சில கணங்கள் நின்றவன்.. அவனை சுற்றியிருந்த அவளது கைகளை மெதுவாக விலக்கிவிட்டு..

“நோ..” என்று மறுப்பாக தலையாட்டினான்.

“இப்ப தெரியுதா நீ காரணமே இல்லாம கடுப்படிக்கும்போது எவ்ளோ காண்டாகும்ன்னு..” என்று கேட்டான்.

“அப்போ என்னைப்பழி வாங்கதான் இப்படி பண்றீங்களா?” என்றாள் அதிர்ச்சியுடன்..

“அதெல்லாம் இல்ல…உனக்கு தெரியனும்ன்னு சொன்னேன் அவ்ளோதான்.. மத்தபடி என்னால இப்ப உன்னோட சகஜமா பேச முடியாது.. ஐ திங்க் வீ போத் நீட் டைம்..இப்ப எதுவும் பேசவேண்டாம்..” என்றுவிட்டுத் திரும்பியவன்..

மீண்டும் அவளைப்பார்த்து

“அப்புறம் ஒரு விஷயம்.. விக்ரம்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இரு..” என்றான்.

அதைக் கேட்டதும் அவளுக்கு சுள்ளென்று கோபம் ஏறியது..

“விக்ரம் என்னோட பாஸ்.. அவர் கிட்ட நான் பேசுறத கூட தப்பா சொல்லுவீங்களா..?” என்று பொங்கினாள்.

“தப்பா எதுவும் சொல்லல..” என்று தொடங்கியவனை இடைமறித்து

“உங்கள தப்பா பேசினதுக்கு பழி வாங்குறதுக்காக என் கேரக்ட்டரை இப்ப தப்பா பேசுறீங்க அப்படித்தானே..”

“ஏய் உளறாத டீ.. நாட் எவ்ரி திங் இஸ் அபவுட் யூ..ஓகே..?”

“அப்போ நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்..?”

“நீ சகஜமா பழகரதால விக்ரமுக்கு உன் மேல இன்டரெஸ்ட் வந்துடப்போகுதுன்னு சொல்றேன்..”

அதிதி முகம் சுளித்தாள்..

“என்ன பேசறீங்க நீங்க.. விக்ரம் சார்க்கு அப்படி ஒரு எண்ணம் துளிகூட கிடையாது..” என்றாள் பட்டென்று..

“உன்னால அதை நூறு சதவீதம் உறுதியா சொல்லமுடியுமா..?” என்று கேட்டான்..

ஆமாம் என்று சொல்ல வாய்த்திறந்தவள் பாதியிலேயே தயங்கினாள்..

அவள் பெரிதாக கண்டுகொள்ளாவிட்டாலும் சமீபகாலமாக விக்ரம் அவளிடம் கொஞ்சம் அதிகபடி ஆர்வம் காட்டுவது போலதான் தெரிந்தது..

அவள் திகைத்து விழிப்பதைப்பார்த்தவன்..

“புரிஞ்சிடுச்சின்னு நெனைக்கறேன்..” என்று விட்டு தனது பைக்கில் ஏறி சென்றுவிட்டான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!