யானை பிளிறும் சத்தத்தில் பயந்த பெண்ணவளை தன்னையும் மீறி அணைத்துக் கொண்டான் வாசுதேவன். நொடிக்கு நொடி இருவரின் அணைப்பும், நெருக்கமும் கூடிக் கொண்டே போக… அந்நேரம் ஊர் பொதுமக்கள் யானையை விரட்டிவிட்டு இவர்களை தேடிக் கொண்டிருப்பது தெரியாமல் தான் போனது இருவருக்கும்…
நொடிகள் நிமிடங்களாக கரைய, இறுகிய அணைப்பிலிருந்த இருவரின் மூச்சுக் காற்றும் சூடாக வெளிவந்தது.
Advertisement
அக்கணம் ஆடவனின் கைகள் பெண்ணின் இடையில் அழுத்தத்தை கூட்டிக் கொண்டே செல்ல, பெண்ணின் கரங்கள் ஆடவனின் முதுகை அழுத்தமாக பற்றிக் கொண்டது.
Advertisement
அந்த நிமிடம் “ச்ச நீ பொண்ணா பிறந்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்…” செவியோரத்தில் நரசமான ஓர் குரல் கேட்க, அவனது முதுகில் அழுத்தமாக ஊர்ந்த கைகளின் தடங்கள் நினைவிற்கு வந்தது. சட்டென பெண்ணைத் தன்னிலிருந்து வேகமாக தள்ளி விட்டான்.
Advertisement
உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவள் ஆடவனின் செயலில் விழி விரித்து பார்த்தாள். ஒருபக்கம் அவளது உணர்வுகள் பேயாட்டம் போட்டது. உணர்வுகளை கட்டுக் கொண்டு வர பெருவிரலை நிலத்தில் ஊன்றி கொண்டவளுக்கு அவன் தள்ளி விட்ட விதம் நினைவு வந்தது. அத்தனை அவமானமாக இருந்தது. மனதில் பெரும் பூகம்பம், அச்சமயம் அவமானமும், உணர்வுகளும் போட்டிப் போட கண்களை நீர் சூழ்ந்து கொண்டது. முகம் கறுத்து, உதடுகள் நடுங்க, கண்களை சூழ்ந்த நீரோடு வாசுவை பார்த்தாள்.
Advertisement
இங்கு, வாசுவின் நினைவுகள் முழுவதும் அந்த கொடூர நாட்களை சுற்றி வளம் வந்தது.
சிறு வயதில் காம கொடூரனான அவனது தந்தை அவனிடம் அத்துமிற துணிந்தது.கொடூரனிடமிருந்து விலகி ஓடியது. மீண்டும் வந்து பிடித்து இறுக்கமாக அணைத்து முதுகில் கைகளை உலாவ விட்டது, அதற்கு பின்னான வலி, என்று அனைத்தும் கண்களின் முன்பு தாண்டவமாடியது…
அன்றைய தினம்.
சுட்டெரிக்கும் வெயில் மெல்ல தணியும் நேரத்தில் அந்த பள்ளியின் மணி அடித்தது. கூண்டிலிருந்து வெளிவரும் பறவைகள் போல அத்தனை உற்சாகமாக வெளிவந்தனர் பள்ளி மாணவர்கள். அதில் பதினான்கு வயதான இதயாவும், பதினைந்து வயதான வாசுவும் ஒன்று.
“இன்னைக்கு லஞ்ச் முடிச்சுட்டு லைப்ரரி போனயா?..” என்ற கேள்வியோடு அவனோடு இணைந்தாள் இதயா.
“நான் போறது இருக்கட்டும் நீயென் வரல?… ஒரு நாளைக்கு பத்து பக்கமாவது வாசிக்கணும்னு சொல்லி இருக்கேன்ல…” எனக் கேட்டுக் கொண்டே அவளிடமிருந்த லஞ்ச் பேக்கை வாங்கிக் கொண்டான்.
“அதனால தானே வாய்விட்டு வாசிக்க சொன்னேன்…” புருவத்தை உயர்த்தினான்.
“ஆமா தான்…” இழுத்தவள் அவனது முறைப்பில் “சரி சரி, கோபப்படாத… நாளைக்கு லஞ்ச் ப்ரேக்ல லைப்ரரி வரேன்…” என்றாள் சமாதானமாக.
“ம்ம்…” என்றவன் அவளோடு வீட்டை நோக்கி பயணித்தான்.
முதலில் வாசுவை அரசு பள்ளியில் தான் சேர்க்கிறேன் என்றார் ஜானகி. ஆனால் சுந்தரமும், மீனாட்சியும் மறுத்து அவனை இதயாவோடு சேர்த்து விட்டனர். அன்றிலிருந்து வாசுவின் படிப்பு முழுவதும் அவர்களின் பொறுப்பென்றனது. அவனும் அவர்களுக்கு சிரமம் வைக்காது நன்றாகவே படித்தான்.
அடுத்த முக்கால்மணி நேரத்தில் இருவரும் வீட்டிலிருந்தனர். இதயா பெரிய வீட்டை நோக்கி நடக்க, வாசு கெஸ்ட் ஹவுஸை நோக்கி நடந்தான். வீட்டை நெருங்க நெருங்க அவனது காதில் ஒரு ஆணின் குரல் விழுந்தது. அது யாராக இருக்குமென்ற கேள்வி மனதில் எழ, வீட்டை நோக்கி வேகமாக நடந்தான்.
வீட்டின் முற்றத்தில் தாயோடு நின்ற ஆடவனைக் கண்டதும் யாரென்று புரிந்தது இளையவனுக்கு. அனுதினமும் வீட்டின் சுவரோடு சுவராக புகைப்படத்தில் இருப்பவனை பார்த்து கொண்டு தானே இருக்கிறான்.
வந்தவனை பார்த்தது பார்த்தபடி நின்றான். ஒருபக்கம் தங்களை தவிக்கவிட்டு சென்று விட்டானே என்ற கோபம் இருந்தாலும் மறுபக்கம் மெல்லிய ஆர்வம் இருந்தது. அது இதுநாள் வரையிலும் தந்தையின் அன்பை அனுபவித்தது இல்லை என்பதால் கூட இருக்கலாம்.
கண்களில் மெல்லிய ஆர்வம் மின்ன இருவரையும் நெருங்கி இருந்தான் வாசுதேவன். இவனது அரவத்தில் இருவரும் வாசல் புறம் திரும்பினர்.
ஜானகியோ முகம் முழுக்க புன்னகையோடு “அப்பா எப்ப வருவாருன்னு கேட்டுட்டே இருப்ப, இப்ப அப்பாவே வந்திருக்காரு. வந்து பேசு வா…” என்றார்.
தற்பொழுது அவளது கணவனின் பார்வை முழுக்க இளையவனிடம் மட்டுமே இருந்தது. தன் மாமனாரை இல்லை அவனது மனைவியின் மற்றொரு உருவமாய் நின்றவனை பார்த்தபடி நின்றான். அந்த பார்வை நிச்சியம் பாசப் பார்வை அல்ல.
இங்கு,வாசுவிற்கு வந்தவனை கண்டதும் அப்பா என்று கட்டிக் கொள்ள தோன்றவில்லை. அதற்கு முதல் காரணம் அவனது பார்வை. அந்த பார்வை சிறுவனுக்கு ஒருவித அசூசையும்,அருவருப்பையும் கொடுத்தது.
“சரி அப்பாவும், பையனும் பேசிட்டு இருங்க. நான் கடை வரைக்கும் போயிட்டு வரேன்…” என ஜானகி நகர்ந்து விடவும் “அம்மா, நானும் வரேன்…” என்ற வாசுவின் குரல் ஜானகிக்கு கேட்காது தான் போனது.
அந்த தொடுதல் வாசுவிற்கு புரிந்தது. பட்டென அவனின் கையை தட்டி விட்டவன் அடுத்த நிமிடம் வேகமாக வீட்டிலிருந்து வெளியேறிருந்தான்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் வாசுவிற்கு அத்தனை எளிதாக செல்லவில்லை என்பதே உண்மை. அதற்கு காரணம் அப்பா என்று வந்தவனின் தவறான தொடுகையும், இறுக்கமான அணைப்பும், முத்தங்களும் தான்.
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது சாதரணமாக தெரியலாம். ஆனால் வாசுவிற்கு அத்தனை உவப்பனாதாக இல்லை. அது திரும்ப திரும்ப நடக்கவும் ஒருவித பயத்தை கொடுத்தது.
அதன் விளைவு அடுத்த நாள் காய்ச்சலில் விழுந்தான். அன்றைகென்று ஜானகியும் முக்கிய அலுவலக கூட்டத்திற்கு சுந்தரம், மீனாட்சியோடு, சென்றிருந்தார்.
மறக்காது மகனின் காய்ச்சலுக்கான மருந்தை கொடுத்துவிட்டு, கணவனிடம் அவனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டு தான் சென்றார்.
ஜானகி சென்றதும் தான் அவளது கணவனுக்கு மூச்சே வந்தது. பின்னே இரண்டு நாட்களாக நல்லவன் வேடம் போடுவதென்றால் சும்மாவா? சோம்பல் முறைத்தப்படி எழுந்தவன் உறங்கும் ஜானகியின் மறு உருவத்தை பார்த்தான். என்ன யோசித்தானோ அடுத்த நிமிடம் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தான்.
இங்கு வாசுவோ மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தான். அவன் கண் விழிக்கும் நேரம் மாலையாகிருந்தது. வீட்டில் எவருமில்லையென்றதும் தான் மூச்சே வந்தது அவனுக்கு.
கண்களை கசக்கி கொண்டே எழுந்து அமர்ந்தவனுக்கு இன்னும் லேசான காய்ச்சல் இருந்தது. ஆனாலும் வீட்டில் அமர பிடிக்காமல் தனக்கு பிடித்த பாடப் புத்தகத்தை எடுத்து கொண்டு தோட்டத்தில் சென்று அமர்ந்தான். படிக்க ஆரம்பித்தவனுக்கு அடுத்த ஒரு மணி நேரம் எப்படி சென்றது என்றே தெரியாத நிலை தான்.
படிப்பும், புத்தக வாசிப்பும், ஓவியங்களும் அவனில் ஊறிப் போய் இருந்தது. அது ஜானகியின் பண்பாக கூட இருக்கலாம். ஆம், ஜானகி தனிமையை அதிகம் ஆக்கிரமிப்பு செய்தது புத்தகங்களும், ஓவியங்கள் மட்டுமே. அந்த பழக்கம் தான் இவனுக்கும் ஒட்டிக் கொண்டது.
“வாசு… காய்ச்சல் சரியாகிடுச்சா?…” என்ற இதயாவின் குரலில் நிமிர்ந்தான். பள்ளி சீருடையை கூட மாற்றமல் இவனை நோக்கி தான் வந்து கொண்டிருந்தாள்.
வந்ததும் வாசுவின் நெற்றியில் கைவைத்து “கொஞ்சம் காய்ச்சல் இருக்கு.இன்னிக்கு நைட் சரியாகிடும் சரியா…” என்றாள் குழந்தைக்கு கூறுவது போல…
“ம்ம்,..” என்றவன் “இன்னைக்கு கிளாஸ் எப்படி போச்சு… லைப்ரரி போனாயா? நாளைக்கு என்ன டெஸ்ட் இருக்கு…” என வரிசையாக அடுக்க, அவனிடம் பதில் கூறிக் கொண்டே அவனது அருகில் அமர்ந்தாள்.
அடுத்து வந்த நிமிடங்கள் சில விசாரிப்புகளோடு செல்ல “சரி நீ போயி ட்ரெஸ் மாத்திட்டு ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டு வா…” என்று அவளை அனுப்பி வைத்தவன் தங்களின் இல்லத்தை நோக்கி நடந்தான்.
அக்கணம்… வெளியில் சென்றிருந்த குரு வீட்டிற்கு வரவும், வாசு தோட்டத்திலிருந்து வரவும் சரியாக இருந்தது.சிறுவனை கண்டதும் அவனது இதழ்கள் விரசமாக வளைந்தன. ‘புது ருசி தேடி செல் செல்லென…’ ஒரு பக்க போதை மனம் கத்தி கொண்டே இருக்க, சிறுவனை வேகமாக நெருங்கினான்.
தன் அருகில் அரவம் உணர்ந்து அண்ணார்ந்து பார்த்தான். கண்கள் இரண்டும் சிவந்து போதையின் உச்சத்தில் தல்லாடியப்படி நின்றான் அந்த கொடூரன்.
பாசத்தின் பிடியும்,விசரத்தின் பிடியும் பதினைந்து வயது சிறுவனுக்கு புரியாத என்ன? பட்டென கையை உதற முயன்றான். அது முடியாமல் போகவும் கண்களை அகல விரித்து அந்த கொடூரனை பார்த்தான். இளையவன் பார்வையை நக்கலாக பார்த்தவன் தரதரவென வீட்டினுள் இழுத்து சென்றான்.
“விடு, என்னை விடு, நான் அம்மாகிட்ட போகணும் என்னை விடு, என்னை விடு…” கத்தியதெல்லாம் துளியும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
அதே கணம் பாதி தூரம் சென்ற இதயா வாசுவின் குரலில் திரும்பி பார்த்தாள்.
அவனது கையை இழுத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான் வாசுவின் தகப்பன். இதை பார்த்த இதயாவிற்கு ஏதோ சரியில்லை என்று மட்டுமே தோன்றியது. நேராக வீட்டினுள் ஓடியவள் அங்கிருந்த வேலையாட்களை அழைக்க சென்றாள். அவள் நேரமோ இல்லை வாசுவின் கெட்ட நேரமோ அவள் கூறுவதை கேட்க தான் ஆளில்லை.
அதேசமயம் இங்கு, வீட்டிற்குள் நுழைந்ததும் தானொரு தகப்பன் என்றும் பாராது சிறுவனை மொத்தமாக பாயந்து அணைத்துக் கொண்டான். அதனை சிறுவன் சுதாரிக்கும் முன்பே அவனிடம் அத்துமீற ஆரம்பித்திருந்தான். அதில் விதிர்விதிர்த்து போனான் சிறியவன்.
அடுத்த நொடியே முழு தைரியம் பெற்றவனாக “விடு, என்னை விடு என்னை விடு…”அவனது அணைப்பில் இருந்தபடியே கத்திய கத்தெல்லாம் அக்கொடியவனின் காதில் துளியும் விழாமல் போனது.
அதே நேரம் முழு பலத்தையும் காட்டி அவனை தள்ளிவிட, அதீத போதையின் விளைவால் சிறுவன் தள்ளி விட்டதும் தடுமாறினான். அதுகூட நொடி மட்டுமே, அடுத்த நிமிடம் சிறுவனை பிடித்த பிடி வன்மையாக இருந்தது…
அக்கணம் சிறுவனின் அனைத்து மறுப்புகளும் நிமிடத்தில் அடங்கி போனது அந்த கொடூரனின் கைகளுக்குள். காய்ச்சலின் விளைவால் அதிகம் போராடவும் முடியவில்லை.
அடுத்து வந்த பத்து நிமிடங்களும் வலி வலி மட்டுமே. அதையும் மீறி வாந்தி வருவது போன்ற உணர்வு. அந்த ஒவ்வொரு நொடியும் நரகத்தில் வாழும் உணர்வை அனுபவித்தான் வாசு.
நிமிடங்கள் கடந்து சிறுவனை விட்டவன் கண்கள் சொருக “சொர்க்கம்…” என்றான்.
அதே சமயம் அந்த கொடூரனின் கைகளிலிருந்து விடுபட்டதும் கதவை நோக்கி ஓடினான். தன்னைவிட்டு ஓடியவனை ஒரே எட்டில் இறுக்கி பிடித்தான் காமுகன். “என்னை விடு, என்னை விடு…” என கத்திய கத்தில், அவனது கழுத்தில் ஒரு கையையும்,வாயில் ஒரு கையையும் வைத்தான்.
மூச்சு வாங்கிக் கொண்டே
“இதோ பாரு, இப்படி கத்தி கூச்சல் போட்ட ஒரே திருப்பு, மொத்தமா பரலோகம் போயிடுவ…” என மிரட்டினான்.
அப்பொழுதும் சிறுவன் துள்ள
“இப்ப நீ அமைதியா நிக்கலைன்னு வை…” பெரிய அதட்டல் போடவும் நடுங்கி போனான் சிறியவன்.
அவனது நடுக்கத்தை சரியாக பயன்படுத்தி கொண்டவன் பேச ஆரம்பித்தான்.
“அப்பான்னு ஒருத்தன் வருவான்னு நீ நினைச்சு இருக்க மாட்ட, சொல்லபோனால் நானுமே நினைக்கல. ஜெயில்ல இருந்து வந்ததும் என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கும் போது தான் உங்கம்மாவை அந்த பக்கம் பார்த்தேன். பதினேழு வயசுல இருந்ததை விட இன்னும் அழகா இருந்தா…”
“வேற கல்யாணம் பண்ணிருப்பான்னு நினைச்சு தான் பேசப் போனேன். ஆனா அங்க தான் எனக்கே டுவிஸ்ட் குடுத்தா உங்கம்மா. என்னை நினைச்சு இத்தனை வருஷமா இருந்திருக்கா முட்டாள்…” இதழோரமாய் நக்கல் வழிந்தது அவனுக்கு…
‘நான் உங்களை தேடினேன். சுந்தரம் அண்ணாவும் ஆள் போட்டு தேடினார் ஆனாலும் நீங்க கிடைக்கல… எங்க இருந்தீங்க, என்ன பண்ணீங்க’ன்னு கேள்வியா கேட்டு கொலையா கொன்னுட்டா, அதையும் மீறி என்மேல அவளுக்கு இருக்கிற அதீத காதல் தா நான் இப்ப இங்க இருக்கிறதுக்கு காரணம்…”
“இங்க வர வரைக்கும் உன் அம்மா தான் என் டார்கெட். இங்க உன்னை பார்த்ததும் என் மூடு அப்படியே மாறிடுச்சு.சும்மா சொல்லக் கூடாது பதினேழு வயசுல உங்கம்மா இருந்த அழகை விட, ஏன் இப்ப உங்கம்மா இருக்கிற அழகை விட பல மடங்கு பேரழகா நீ இருக்க…” அவனை கண்களால் அழந்து கொண்டே..
“இதுல வருத்தம் என்னன்னா நீ பையனா பொறந்தது தான். ஆனாலும் பரவாயில்ல இதுவும் என் நல்லதுக்கு தான்…” இரண்டு கைகளையும் மேல் தூக்கி சோம்பல் முறித்தப்படி கூறியவனை மேலும் பயத்தோடு பார்த்தான் சிறியவன்…
அவனின் பயம் கண்களில் பிரதிபலிக்கவில்லை என்றாலும் அவன் உடலில் பிரதிபலித்தது. அது எதிரில் நின்றவனுக்கு நன்றாகவே புரிந்தது. பெருங் குரலில் சிரித்தான். அவனின் சிரிப்பை உடல் நடுங்க பார்த்தான் சிறியவன்.
“உண்மையா எனக்கும் புதுசு தான். அதான் அவசரமா பண்ண வேண்டியதா போச்சு. ஆனாலும் நல்லா இருந்தது. இனிமே வேகமாக பண்ண மாட்டேன்…” என்றவன் அவனை மேலிருந்து கீழாக அளந்தான்.
தன்னாலயே உஷ்ண மூச்சுகள் வெளிவர “செகண்ட் ரவுண்ட் போலாமா? இப்ப பொறுமையா சாஃப்ட்டா சொல்லி தரேன். பயப்படாம நான் சொல்றத செஞ்சா போதும். நான் செய்யறதை கண்ணை மூடி ரசிச்சா போதும். முதல்ல…” அதற்கு பின் அவன் பேசிய பேச்சுகள் அனைத்துமே காதில் கேட்க முடியாதவைகள் தான்.
காதை இறுக்கமாக மூடிக் கொண்டு தரையில் மடிந்து அமர்ந்தபடி கதறினான். ‘நான் என் அம்மாகிட்ட போகணும்…’ என்று. அவன் கதற கதற அவனை நெருங்கினான் அந்த மிருகம்.
அக்கணம் வீட்டிற்கு வெளியில் “வாசு…வாசு…கதவை திற…” என்ற இதயாவின் குரலும் போலீஸ் வாகனத்தின் சத்தமும் ஒருங்கே கேட்டது.
சட்டென்று வாசுவை விட்டு விலகியவனின் கண்களில் அதீத பயம். மொத்த போதையும் வடிந்திருந்தது. ‘அதற்குள் கண்டுபிடித்து விட்டார்களா? என்ற கேள்வியை அவனே கேட்டுக் கொண்டான். மனதின் கேள்வியில் முகம் முழுக்க வியர்க்க துவங்கி இருந்தது அவனுக்கு. அவனின் மாற்றத்தை கண்களில் வழிந்த கண்ணிரோடு புரியாமல் பார்த்தான் இளையவன்.
தொடர்ந்து…போலீஸ் வாகனத்தின் சத்தமும், இதயாவின் குரலும் மாறி மாறிக் கேட்க, தைரியம் வந்தவனாக கதவை நோக்கி ஓடினான் வாசு. பூட்டிய கதவை எட்டி திறக்க முயன்று கொண்டிருந்தவனின் அருகில் வந்தவன் சிறுவனின் கை மேல் கை வைத்தான்.
அவனது செயலில் திடுக்கிட்டு திரும்பினான் இளையவன். அவன் திரும்பவே காத்திருந்தவன் போல கையிலிருந்த கத்தியை காட்டி, வரவழைக்கபட்ட தைரிய குரலில்
“இதோ பாரு, உன்கிட்ட நான் பேசறது, இப்ப நடந்துக்கிட்டது எல்லாத்தையும் வேற யாராவது கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சது ஒரே ஏத்து, உன்னை இல்லை உன் அம்மாவை. உங்கம்மா உயிரோட இருக்கிறதும் இல்லாம போறதும் உன் கையில தான் இருக்கு…” என்றவன் கத்தியை சட்டை பையில் மறைத்தான்.
பின் அவசரமாக சிறுவனின் காயங்கள் தெரியாத அளவிற்கு சரி செய்துவிட்டு மீண்டுமொருமுறை எச்சரிக்கை விடுத்து விட்டு கதவை திறந்தான். இதயா மட்டுமே அவ்விடத்தில் இருக்க, அவளை குரூரமாக பார்த்தவன் காதில் போலீஸ் வாகனத்தின் சத்தம் கேட்டது அதற்கு மேல் நில்லாமல் இதயாவை தாண்டி அங்கிருந்து ஓடினான்.
அந்த மிருகம் வெளியில் சென்ற அடுத்த கணம் உள்ளே நுழைந்தாள் இளையவள். அக்கணம் பாவையின் கண்கள் பார்த்தது என்னவோ அழுது கொண்டிருந்த வாசுவை தான்… அவளுக்கு என்ன புரிந்ததோ அவனை தோளோடு அரவணைத்து கொண்டாள் ஒரு தாயாக.
போலீஷிற்கு பயந்து வெளியில் சென்றவன் இரவு மீண்டும் வந்தான். அப்பொழுது வாசுவின் காய்ச்சல் அதிகமாக இருந்தது. அவனை மருத்துவமனை அழைத்து சென்றால் தன் குட்டு வெளியில் தெரிந்து விடும் என்று எண்ணியவன் வீட்டிலிருந்த சில நகைகளை திருடி சென்று விட்டான். சென்றவன் அதற்கு பின் வரவே இல்லை.
அங்கிருந்து சென்ற சில நாட்களிலயே கஞ்சா கேஸ்ஷில் மாட்டியிருந்தான். என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த நாளும் வாசுவின் காய்ச்சலுக்கு மருந்தை கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று இருந்தார் ஜானகி. ஒருவேளை அவனை மருத்துவமனை அழைத்து சென்றிருந்தால் அனைத்தும் தெரிந்து இருக்குமோ என்னவோ?