Skip to content
Post Views: 5,319
நீரதி ஆழியனை தீயென முறைத்தவள்”ஓஓஓ எனக்கு மௌத் பீஸ் நீங்க கிடையாது தான் எனக்கு வாய் இருக்கு தான். இல்லைன்னு யார் சொன்னா. என் பிரச்சினை நான் பார்த்துக்கணும் இதைத்தானே நீங்க சொல்றீங்க”என்றாள்.
அதை ஆமோதிப்பது போல அவன் அமைதி காக்க கடுப்பாகிப் போனவள்”அப்போ நான் அடிச்சதுக்கு உங்க தொங்கச்சி கிட்ட சாரி எதுக்கு கேட்க சொன்னீங்க? அவளுக்கு மௌத் பீஸா நீங்க”என்றாள் சுள்ளென்று.
Advertisement
அவன் பேசாமல் இருக்க “வாயைத் திறந்து பேசித் தொலைங்க. கல்யாணம் பண்ணி வச்சது பெருசுனு இவரே சொல்வாராம், என்ன பிரச்சினை னு கேட்காம தொங்கச்சி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்வாராம் நாங்க எல்லாம் செய்யணும் ஆனா இவர் மட்டும் எனக்காக போய் நிற்க மாட்டாரு. அப்போ என்னத்துக்கு தான் இந்த கல்யாணம். சத்தம் இல்லாமல் சேர்ந்து மிச்சம் இல்லாமல் ரெண்டு பிள்ளையை பெத்துக்க மட்டுமா?”கோபத்தில் கொந்தளிக்க அவளின் கைபேசி விடாது அலறியது.
Advertisement
“இது வேற.. “என்று திட்டியபடி அழைப்பை ஏற்று “ஹலோ”என்றிட எதிர்பக்கம் வளர்மதி வாசுகியாய் விஷத்தை கக்கினார். அத்தனையையும் அமைதியாக கேட்டவள் கணவனை விட்டு பார்வையை அகற்றவில்லை நீரதி.
Advertisement
அமைதியாக இணைப்பைத் துண்டித்தவள் கைபேசியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கைகளை உதறியவள் “நீயெல்லாம் மனுசனே இல்லை”என்று கத்தி விட்டு செல்ல நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தான் ஆழியன்.
Advertisement
பேசியது தன் அம்மா என்று தான் ஸ்பீக்கர் போடாமலேயே கேட்டதே அவனுக்கு.
வளர்மதி பேசியதில் ஒரு பக்கம் மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் ஆழியன் தனக்காக அங்கே சண்டை போட்டு இருக்கிறான் என்பதே அவளுக்கு இதமாக இருந்தது. ஆனாலும் ஒரு கோபம் அதை தன்னிடம் கூறினால் இவனுக்கு என்ன குறைந்து விடும். எதையும் பேசாமல் கல்லூளிமங்கன் போல இருக்கிறானே என்ற கோபம்.
“என்னடி ரதி?”என்றவாறு வாசலில் நின்றவனிடம் “நேத்து வரைக்கும் நமக்கு கல்யாணம் செஞ்சு வச்சதே பெருசு ரதி. அதனால அமைதியா இரு ன்னு சொன்னீங்க இன்றைக்கு என்ன புதுசா என்னை சண்டை எல்லாம் போட சொல்றீங்க. எது உண்மை. ஹ்ம்ம் பொறுமையா இருந்தவ பொங்கிட்டா இனிமே நாம அடக்கி வைக்க முடியாது ன்ற எண்ணத்தினாலா?”என்று நிதானமாக கேட்டு விட்டாள். மனம் தாளவில்லை அவளுக்கு. ஆறேழு வருடங்களாக தன் உணர்வுகளை அடக்கி இவனுக்காக நாம் பொறுத்து போனால் இப்போது அசட்டையாக பேசுகிறான். என்ற தார்மீக கோபம் அவளுள்.
“என் குற்றவுணர்ச்சியை உன் தலையில் சுமத்திட்டதாலன்னு வச்சுக்கோயேன். இனி அதுக்கும் அவசியம் இல்லை னு தெரிஞ்சதாலன்னு வச்சுக்கோயேன்”என்றான். எல்லாவற்றுக்கும் பதில் இருந்தது அவனிடத்தில்.
“புரியலை”என்றவளிடம் “இனி அந்த வார்த்தை என் வாயில் இருந்து வராது ரதி. நமக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவங்க தியாகம் எல்லாம் செய்யலைனு செருப்பால அடிச்ச மாதிரி உணர்த்திட்டாங்க உணர்ந்துட்டேன். அதனால் கூட”என்று அவன் பேசும் முன்பே தடுத்தவள்
“ஸோ இதை உணர்ந்து நீங்க பர்மிஷன் தர்ற வரைக்கும் நான் வெய்ட் பண்ணனும் இல்ல. நீங்க அடக்கி வச்சதில் மரத்துப் போன என் உணர்வுக்கு மரியாதை என்ன… எவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க.”என்றாள் அலுப்பாக.
“வயசுப் பொண்ணு இருக்கா ரதி பக்கத்தில் நெருங்கி நின்று பேசாத”
“வயசும் பையன் இருக்கான் ரதி நானே போட்டு சாப்பிட்டுக்கிறேன்.”
“அவங்க பெரியவங்க ரதி. விட்டுடு”
“நிலா சின்னப் பொண்ணு ரதி அவளுக்கு எதுவும் தெரியாது”
“தருவும் அமுதனும் சின்னப் பிள்ளையில் இருந்து நெருங்கி தான் இருப்பாங்க அதனால நிலாவுக்கு அது பெருசா தெரியாது நீங்க புதுசுல்ல”இது உங்க பாட்டி.
“அவங்க நெருக்கம் கெடுக்காததையா நம்ம இன்டிமேஷி கெடுத்துடுச்சு அவங்களை”என்றாள் சுள்ளென்று.
“நான் காதல் கல்யாணம் பண்ணதால நிலாவும் அப்படி செய்வேன்னு அடம் பிடிச்சா என்ன செய்ய ரதினு கேட்ட மனுசனுக்கு தெரியாது உங்க தங்கச்சி பண்ணது”சாட்டையாக விழுந்தது அவள் வார்த்தைகள்.
“அமுதனும் தரங்கினியும் சேர்ந்து நின்னா அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க…அதே நாம நின்னா மத்தவங்க கண்ணுல விழற மாதிரி ஏன் நிக்கிறனு ஒரு கேவலமான கேள்வி உங்க அம்மா”
“கல்யாணம் ஆகி ஒரு மாசத்துல கர்ப்பம் தரிச்ச மருமகளை தூக்கி வச்சு கொண்டாடின குடும்பத்தை பார்த்த எனக்கு, யாரோ நக்கலா சிரிச்சாங்கன்றதால இப்ப இதுக்கு என்ன அவசரம் னு கேட்ட உங்க பாட்டி கிட்ட பேசாம அமைதியா இருந்தேனே அதுவும் உங்களுக்காக தான்”
“அட கெரகம் எல்லாத்தையும் விட்டுத் தொலைஞ்சேன். நான் பிள்ளை பெத்தா மூணா மாசம் வரணும் அவங்க மூத்த மருமக இளைய மருமக பிள்ளை பெத்தா அவங்க இஷ்டமா வரலாம் இல்லை வராமலே போகலாம் அப்படி தானே?!”
“உங்களுக்கும் சின்னவன் தன் பொண்டாட்டியை அண்ணின்னு கூப்பிடலைனு தங்கச்சியை கண்டிக்கிறான் ஆனா இங்கே”என்று வரிசையாக தன் ஆற்றாமையை கொட்டியவள் அதற்கு மேல் பேசாமல் “அதை எல்லாம் தாங்கிடுவேன். ஆனா நீங்க செஞ்சது.”என்று கண்கள் பளபளக்க கேட்டவளை விக்கித்துப் பார்த்தான் ஆழியன்.
எத்தனை காதல்பார்வை எவ்வளவு தேடல் என்ன விதமான எதிர்பார்ப்பு எல்லாம் வடிந்தது போல ஒரு திருமணம். இந்த திருமணம் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த நிலையில் இப்படி ஒரு திருமணம் செய்திருக்க தான் வேண்டுமா என்ற எண்ணம் உருவாகி விட்டதே என்ற வேதனை அவளுள்.
தலையை கவிழ்ந்து நின்றிருந்தான்.
என்ன பேச முடியும் எதைப் பேச முடியும். குடும்பம் குடும்பம் என்று பார்த்ததற்கு தான் காதலை கானல் ஆக்கி நிர்க்கதியாக நிற்கிறானே தனக்கு தானே விளக்கம் தர முடியாத நிலையில் அவளுக்கு என்ன விளக்கம் தருவான்.
“இதை எல்லாம் சொல்லணும் னு நினைக்கலை. ஆனா முடியல எவ்வளவு தான் நானும் தாங்கறது”என்றவள் “தரு ஆன்னா ஊன்னா அம்மா வீட்டை கூட்டிட்டு வந்து பஞ்சாயத்து வைக்கும் போது மனசுக்குள்ள ஒரு மாதிரி ஏக்கமா இருக்கும். நிலா கூட எங்க வீட்டில் இதை சொல்லிட்டாங்க அதை சொல்லிட்டாங்கனு அத்தை மாமாவை உங்களை எல்லாம் கூப்பிட்டு பேசி அழும்போது பேசாம வீட்டில் பார்த்த மாப்ளைக்கு தலையாட்டி இருக்கணுமோன்னு நினைச்சிருக்கேன்”என்றதும் அதிர்வாய் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“ஹ்ம்ம் நிஜமா நினைச்சிருக்கேன். ஏதாவது மனசுக்கு வேதனையா இருந்து அதை என் அம்மா கிட்ட சொன்னா அவங்கல்ல’நீயா தேடிக்கிட்டது தானே இதெல்லாம் எவ்வளவு சொன்னேன் கேட்டியான்னு ஒரு பாடு அழுது தீர்ப்பாங்க.’ சரி அதுதான் போகுதுனு அண்ணன் கிட்ட பேசினா அவன் நான் என்னடா செய்யட்டும் நீ தான் சமாளிக்கணும் இதுக்காக துபாய் ல இருந்து வர முடியுமா நான் னு கேட்டான்.
ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசினா அவங்க உனக்காவது ஆசைப்பட்டவனோட கல்யாணம் நடந்து அதுல கஷ்டப்படுற உன் புருஷன் ஆறுதலா இருப்பார் ஆனா இங்கே அப்படி ரெண்டும் இல்லாமல் நாங்க கஷ்டப்படறோம்னு பெருமூச்சு விடுவாங்க. அவங்களுக்கு எங்க தெரிய போகுது. இங்கே ரெண்டும் ஒண்ணு தான்னு. மனசுக்குள் போட்டு அழுத்தி அழுத்தி அதுவே பெரிய பாரமா இருக்கு. எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு போக மனசு துடிக்கும் ஆனா அதையும் என் வீட்டில் ஏன் காதலிச்சன்னு பேசினா என்னடா செய்றது னு அங்கேயும் போகலை.”என்றவள் நிற்காமல் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இன்னும் பேசினாள்.
அருகில் செல்லத் துடித்த மனதை அடக்கி நின்றான். போய் விட்டால் மனதில் உள்ளதை கொட்ட மாட்டாளே…என்ற பயம் அவனுள்.
“உங்க வீட்டு ஆளுங்களுக்காக வேலை செஞ்சது எல்லாம் பெரிய விஷயமாவே எனக்கு தோணினது கிடையாது. ஏன்னா அது என் வீடு என் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் செய்றேன் இந்த மனப்பான்மை தான் என் கிட்ட இருந்தது. அதுல நிலா என்னை அண்ணினு கூப்பிடாததையோ உங்க அம்மா தரு கிட்ட ஒரு மாதிரியும், என் கிட்ட ஒரு மாதிரியும் நடந்ததையோ பெருசா எடுக்க எனக்கு தோணவே இல்லை. ஆரம்பத்தில் சங்கடமா இருந்தாலும் பழகிப்போன பிறகு இதெல்லாம் ஒரு விஷயமா நீ மதிச்சு பேசலைன்னா நானும் பேசலை அந்த மாதிரி தான் ஒதுங்கி நின்னேன். ஆனா நீங்க நின்னீங்க பாருங்க”என்றவள் அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை.
ஆழியன் ஏதோ பேச வருவதற்குள் தடுத்தவள் “ப்ளீஸ் எந்த விளக்கமும் சொல்லிடாதீங்க. நிஜத்துக்குமே தாங்க முடியாது.”என்றாள்.
சில நிமிடங்கள் மௌனம் அங்கே ஆட்சி செய்ய நீரதியின் வெறுமையான விரக்தி புன்னகையே அதைக் கலைத்தது.
“போதும் எதுவுமே வேண்டாம். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. இன்னும் உங்களை திட்டணும் கேள்வி கேட்க எல்லாம் தோணுது. ஆனா வேண்டாம். ம்ஹூம் கேட்டா மட்டும் என்ன ஆகிடப் போகுது காலம் கடந்து கிடைக்கிற எதுக்கும் மதிப்பு இருக்காது அது போல தான் இதுவும்”என்றவள் அயர்ந்து சோர்ந்து படுத்துக் கொண்டாள். எல்லாம் கொட்டிவிட்ட நிம்மதியோ ஒரு கட்டத்தில் உறங்கியும் போனாள்.
உறங்கியவளை அசையாது பார்த்தவன் சற்று நிதானித்து அவள் தலைக்கு தலையணை வைத்து விட்டு வெளியே வந்தான்.
தொட்டிலில் ஸ்வாதிகா மெல்ல சிணுங்க எழுந்து பிள்ளையைப் பார்த்தவன் தொட்டிலை ஆட்டி விட்டதும் மீண்டும் உறங்கினாள் குழந்தை.
ஸ்வர்ணிகா வரவும் பிள்ளைக்கு அவள் கேட்டதை வாங்கித் தந்து சாப்பிட வைத்து பள்ளிக்கூட பாடம் செய்ய வைத்து உறங்க வைத்தவன் மீண்டும் தன் மனைவியைப் பார்தபடி அங்கேயே அமர்ந்திருந்தான். ஒரு கட்டத்தில் உறக்கம் கண்களை எட்ட வெறும் தரையில் அப்படியே படுத்து விட்டான். பிள்ளைகள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க கணவனும் மனைவியும் இறுக்கமும் உறக்கமுமாய் இருந்தனர்.
மனிதர்கள் இந்த நேரம் கடந்து விட்டால் போதும் என பலரும் இந்த நேரம் இப்படியே உறையக் கூடாதா என்று சிலரும் நினைத்தாலும் காலம் நான் யாருக்கும் அடங்கிய ஆள் இல்லை என்று ஓடி இருளைப் போக்கி விடியலை உண்டாக்கி இருந்தது.
முதலில் நீரதியே கண்விழிக்க மற்ற மூவரும் உறக்கத்தில். வெறும் தரையில் பரிதாபமாக படுத்துக் கிடந்தவனைக் காணும் போது மனம் பரிதவித்தாலும் அதை அடக்கிக் கொண்டு அவனுக்கான தலையணையை வைத்து விட்டாள்.
பாலுக்கு அழாமல் உறங்கும் பிள்ளையை தூக்கப் போக ஸ்வாதி ஈர நசநசப்புடன் உறக்கத்தின் பிடியில் இருக்க டயப்பரை மாற்றி விட்டு உறங்கியப் பிள்ளையை எழுப்பி அமுதூட்டியவள் மீண்டும் உறங்க வைத்த பின்னர் கழிவறை செல்ல ஆழியன் உறக்கம் கலைந்து எழாமல் அப்படியே படுத்திருந்தான்.
அவனைப் பார்த்து விட்டு கடந்து செல்ல ஆழியனுக்கு மனைவியிடம் நெருங்கும் வழி தெரியவில்லை. விழி பிதுங்கி அமர்ந்திருந்தவனின் எதிரில் காஃபியை வைத்தாள். அவன் எடுத்து குடிக்கவும் “நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாமா”என்று கேட்டிருந்தாள் ஆழியனின் நீரதி.
…… தொடரும்
error: Content is protected !!