Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kaatril un vaasam

காற்றில் உன் வாசம் -6

கமிஷனர் ஆபீஸ் ,

மித்ரனும் அரவிந்தும் அந்த device -ஐ வைத்து கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.

மித்ரன் , என்ன பண்ணலாம் அரவிந்த்.

அரவிந்த் , ஹ்ம்ம் டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்…

மித்ரன் , ஹ்ம்ம் ஓகே என்று கூறி அந்த device-ஐ  கையில் எடுத்தான்.

அதை  அவன்  கைகளில்  எடுத்ததும் அறையை  ப்ரகாஷமாக மாற்றியது அதில் இருந்து வந்த வெளிச்சம்.

நேரம் என்ற வார்த்தை தோன்றியது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

மித்ரன் அதன் கீழே காலையில் பிரியாவிற்கு அருள் வந்த அந்த நேரத்தை பதித்தான்.

பின், இடம் என்ற வார்த்தை தோன்றியது அதற்கு மித்ரன் தன் வீட்டு  முகவரியை பதித்தான்.

அப்போது அவர்கள் முன் ஒரு திரை தோன்றியது.அதில் இன்று காலை நடந்த அத்தனையும் கண்முன் விரிந்தது.ஆனால்…….

அரவிந்த் , என்ன அண்ணா இது எல்லாமே இருக்கு பட் யாரோட முகமும் கிலேயரா இல்ல அண்ணி முகம் கூட சுத்தமா தெரியலையே என்றான் அதிர்ச்சியுடன்.

மித்ரன் , ஆமா அரவிந்த் குரல் மட்டும் தா தெளீவா கேக்குது….ஓகே எதிர்காலத்தை பற்றி கொடுத்து பார்க்கலாம்.

அரவிந்த் , ஓகே அண்ணா

மித்ரன் மறுபடியும் அதை இயக்கினான்.
இப்போது  பிரியா பள்ளியில் இருந்து வரும் நேரமும் ,முதல் முதலில் தாங்கள் இருவரும் சந்தித்த இடத்தின் பெயரையும் கொடுத்தான். அதனை பார்த்த
அரவிந்த் , அண்ணா அண்ணி எப்படி அங்க வருவாங்க ஸ்கூல் முடிந்ததும் கோவிலுக்குத்தான போவாங்க ஆனா நீங்க ??? என்று கேள்வியாக முடித்தான்.

மித்ரன் , எனக்கே தெரியலடா நான் சும்மாதான் கையை  வைச்சேன்  எதுவோ ஒன்னு என்னை  இயக்குன மாதிரி இருந்தது முடிச்சதும்தான் நானே கவனிச்சேன் அது எனக்கே ஷாக்காத்தான் இருக்கு என்று இவன் முடிக்கவும் காட்சிகள் திரையில் விரியவும் சரியாக இருந்தது.

அதில் ஏதோ ஒரு கும்பல் ஒரு பெண்ணை தாக்குவது போலவும் பின் அப்பெண்ணை ஒரு ஆண் கொலை செய்ய வருவது போலவும் அதை இன்னொரு பெண் தடுப்பது போலவும் காட்சிகள் தோன்றி மறைந்தது.

அங்கிருந்த இருவருமே உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தனர்.

அரவிந்த் , என்னண்ணா இது யாரு இந்த பொண்ணு என்ன நடக்குது ஒன்னும்புரியல…..

மித்ரன்  , அரவிந்த் எனக்கு பயமா இருக்கு ப்ரியாவுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு….என்றான் சிறு நடுக்கத்துடன்…

அரவிந்த் , ஐயோ அண்ணா அதெல்லாம்  ஒன்னும் ஆகாது அண்ணி எதுக்கு அங்க வரப்போறாங்க இந்த device ஏதோ தப்பா காட்டுது…

மித்ரன் , இல்லடா இதுல ஏதோ இருக்கு என்னமோ நடக்க போகுதுனு என்னோட உள் மனசு சொல்லுது… இப்போ டைம் என்ன ????

அரவிந்த் , டைம் ஒன்னு தான் ஆகுது நாலு மணிக்கு தான் ஸ்கூல் விடும் எல்லாம் முடிச்சிட்டு அண்ணி கிளம்ப எப்படியும் 6 மணி ஆகிடும். ஆனால் நீங்க கொடுத்த டைம் 5 மணி எப்படி அண்ணா….. நான்தான் சொல்றன்ல இதையெல்லாம் நம்பாதீங்க pls….

மித்ரன் , இல்ல அரவிந்த் என்னால அவ்ளோ ஈஸியா எடுத்திக்க முடியாது….இப்போவே அவளுக்கு கால் பண்ணி carefull – ஆ  இருக்க சொல்லு என்றான்.

அவனின் தவிப்பை புரிந்து கொண்ட அரவிந்த் தனது போனை எடுத்து ப்ரியாவுக்கு கால் செய்தான்.ஒன்று அல்ல ஐந்து முறை கால் செய்து விட்டான் ஆனால் ப்ரியாவின் மொபைல் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

அரவிந்த் , அண்ணா சுவிட்ச் ஆஃப் ன்னு வருது

மித்ரன் , கார்த்திக்கு கால் பண்ணு

அரவிந்த் , கார்த்திக்கு கால் பண்ண அதுவும் சுவிட்ச் ஆஃப் என்று வர அதையும் தன் அண்ணனிடம் கூறினான்.

மித்ரன் , ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் புனிதாவுக்கு கால் பண்ணிப்பாரு

அரவிந்த் , அண்ணா…….அது….

மித்ரன் , என்ன அதுவும் சுவிட்ச் ஆஃப்- ஆ ??????

அரவிந்த , இல்லை என்கிட்ட அவங்க நம்பர் இல்ல என்றான் தலையை குனிந்தவாறு…

மித்ரன் புனிதாவிற்கு கால் செய்தான் அரவிந்தை யோசனையாக பார்த்தவாறு.
கடைசி ரிங்கில் காலை எடுத்தாள் புனிதா.

புனிதா ,  ஹலோ

மித்ரன் , ஹலோ நான் மித்ரன் பேசுறேன்

புனிதா , தெரியுதுண்ணா சொல்லுங்க

மித்ரன் , அது ப்ரியாக்கு கால் பண்ண சுவிட்ச் ஆப் னு வருதா அதா அவகிட்ட கொஞ்சம் பேசணும் என்றான் தயங்கியவாறு….

புனிதா , அண்ணா இது லஞ்ச் ஹவர்  kindergarten students கு leaving time so gate ல இருப்பாங்க அதா சுவிட்ச் ஆஃப் பண்ணிருப்பாங்கண்ணா என்றாள்.

மித்ரன் , ஓகே மா thanks நான் வச்சிரேன்….

புனிதா , சரிண்ணா

போனை கட் செய்துவிட்டு யோசனையாக அமர்ந்திருந்தான் மித்ரன். அவனை பார்த்த அரவிந்த் , என்ன ஆச்சுண்ணா???

மித்ரன் , லஞ்ச் டைம் அதான்  சுவிட்ச் ஆஃப் பண்ணிருக்கா  வேற ஒன்னும் இல்ல…..ஆமா உங்கிட்ட எப்படி  புனிதாவோட நம்பர்  இல்லாம போச்சு என்றான் கேள்வியுடன்.

அரவிந்த் ,  அது அண்ணிதான் delete பண்ண சொன்னாங்க….அப்பறம் அவங்ககூட பேசக்கூடாதுனு சத்தியம் வாங்கிட்டாங்க என்றான் வருத்தத்துடன்.

மித்ரன் , ஹ்ம்ம்……அப்போ பிரியா என்கிட்ட சண்டை போட்ட மாதிரிதான் எல்லாமே நடந்து இருக்கு…… வீட்டுல நடக்குற எதுவுமே எனக்கு தெரியறது இல்லை எனக்கும் தெரிஜிக்கணும்னு தோன்றவும் இல்லை ஹ்ம்ம் என்றான் பெருமூச்சியுடன்..

அரவிந்த் , அண்ணா……

மித்ரன் , உண்மைதான் அரவிந்த்….. கொஞ்சம் நான் குடும்பத்தையும் கவனிச்சிருந்தால் இன்னைக்கு உன் வாழ்க்கை கேள்விக்குறியா  இருந்திருக்காது. இப்போதுதான் ப்ரியாவோட கோவம் எனக்கு புரியுது….

அரவிந்த் புரியாமல் பார்க்க மித்ரன் தொடர்ந்தான் , இன்றைக்கு காலையில ப்ரியா  அருள் வந்து பேசிட்டிருக்கும் போது அம்மாவை கவனிச்சியா??? அவங்க முகமே சரியில்ல  அவங்களுக்கும்  இதுல சம்பந்தம் இருக்கு……அதுமட்டும் இல்ல என்று நிறுத்த

அரவிந்த் , இன்னும் என்னண்ணா????

பிரியா , மித்ராவுக்கும் ப்ரகாஷுக்கும் கூட ஏதோ சம்பந்தம் இருக்கு அவங்க முகம் கூட ஏதோ வித்தியாசமா இருந்தது  என்றான்.

அரவிந்த் , உங்களுக்கு இன்னைக்கு தான் அவங்கமேல doubt வந்திருக்கு ஆனால் அண்ணி என்கிட்ட முதலையே சொல்லிட்டாங்க என்றான் .

மித்ரன் , என்ன சொன்னா ???  என்று வினவினான் ஆச்சரியத்துடன்.

அரவிந்த் , ஹ்ம்ம் பிரச்சனை முடிஞ்ச மறுநாள் சொன்னாங்க ‘கூட பிறந்திட்டா  அவங்கள முழுசா நம்பிரணுமா??’அப்படினு சொன்னாங்க… எனக்கும் குழப்பம்தான் ஆனால் மித்ரா, பிரகாஷோட நடவடிக்கைய பார்க்கும் போதும் எனக்கு doubt வந்திட்டு என்றான்….

மித்ரன் , ஹ்ம்ம் பிரியா எல்லாரையும் correct – ஆ கணிச்சி வச்சிருக்கா  ஆனால் நாந்தான் எதையும் புரிந்துகொள்ளாமல் அன்னைக்கு உனக்கு என்ன தெரியும் கல்யாணத்திற்கு அப்பறம் ரொம்ப மாறிட்டேன்னு சண்டை போட்டுட்டேன்  ஹ்ம்ம் இப்போ பார்த்த நாந்தான் ரொம்ப மாறியிருக்க….ஏன் பாரதிக்குட்டிக்கூட என்ன வெறுக்குற அளவுக்கு நடந்திருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாயிருக்கு  என்றான் வருத்தத்துடன்.

அரவிந்த் , என்னண்ணா சொல்றீங்க ??

மித்ரன் , ஹ்ம்ம் ஆமாடா ….. அதைப்பற்றி இன்னொரு நாள் சொல்றேன் இப்போ டைம் ஆகிட்டு ப்ரியாவுக்கு கால் பண்ணி அலெர்ட்டா இருக்க சொல்லு என்றான் .

அரவிந்த் ப்ரியாவுக்கு கால் செய்ய முதல் ரிங்ளையே எடுத்துவிட்டால்.

அரவிந்த் , ஹலோ அண்ணி

பிரியா , ஹ்ம்ம் எனக்கு meeting இருக்கு என்ன விஷயன்னு சீக்கிரம் சொன்னா நல்லா இருக்கும் என்றாள் வேண்டா வெறுப்பாக.

அரவிந்த் , sorry அண்ணி but விஷயம் கொஞ்சம் important என்றவன் கமிஷனர் ஆஃபீசில் நடந்ததை ஒன்று விடாமல் கூறினான் பின்  அண்ணி please கொஞ்சம் carefull – ஆ  இருங்க என்று முடிக்கவும் பிரியா காலை கட் செய்தாள். அரவிந்த் போனை கையில் வைத்துக்கொண்டு முழித்து கொண்டிருந்தான்.

மித்ரன் , என்ன கட் பண்ணிட்டாளா ??? அரவிந்த் ஆமாம் என்று தலையசைக்கவும் ஒரு பெருமூச்சை வெளியிட்டவன்  ஒரு முடிவோடு பைக் சாவியை கையில் எடுத்தான் பின் அரவிந்தை பார்த்து
நீ gh ல போய் postmartem ரிப்போர்ட் வாங்கிட்டு வந்திரு நான் கிளம்புறேன் என்று கூறி வெளியில் சென்றுவிட்டான்.
அரவிந்தும் அவனது பணியை செய்ய கிளம்பினான்.

          மித்ரன் தனது ‘royal enfield’ பைக்கை செலுத்தி கொண்டிருந்தான். ஆனால் அவனது மனமோ 8 வருடங்களுக்கு முன் ப்ரியாவை முதல் முதலில் சந்தித்த நாளுக்கு சென்றது.

8 வருடங்களுக்கு முன்……..

தொடரும்………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!