Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 20

அத்தியாயம்….20

அந்த ஊரில் திருமணம் முன் ஜோடியாக சபையில்  அனைவரும் பார்க்கும் படி நிற்க வைக்க மாட்டார்கள். அதற்க்கு காரணம் அனைவரின் கண் பட்டு ஏதாவது  ஒரு காரணத்தால் திருமணம் நின்று  விடப்போகிறது என்ற காரணம் ஒன்று என்றால், மற்றொரு காரணம் அப்படி  திருமணம் தடைப்பட்டு விட்டால்… மற்றொருவன் பக்கத்தில் ஜோடியாக நின்ற பெண்ணை மணக்க தயங்குவர்.

அதனால் காலையில் கல்யாணம் மாலையில் வரவேற்ப்பு என்ற அந்த ஊரின் வழக்கப்படி…விடியற்காலை   முகூர்த்தமான நாலரையில் இருந்து ஆறுமணிக்குள்  பிரம்ம முகூர்தத்தில் தாலி கட்டும் சடங்குக்கு…விடியற்காலை மூன்று மணியில் இருந்தே அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து விட்டனர்.

நெருங்கிய உறவு முறை மட்டும் இல்லாது அந்த ஊர் ஜன்ங்களே அந்த வீட்டில் மைய்யம் கொண்டு இருந்ததால்… குளிக்கும் அறைக்கு காத்திருக்காமல்..இருட்டு தானே என்று பல பெண்கள் கிணற்று அடியிலேயே இரண்டு சொம்பு தண்னீரை மேலுக்கு ஊற்றிக் கொண்டு கிளம்பி  தயாராகி நின்றனர் என்றால்…



Advertisement

ஒரு சில பெண்களோ குளிக்கா விட்டால் தெரியவா போகிறது என்று… முகத்தை மட்டும் அலம்பிக் கொண்டு ஜோராக பட்டு படவையிலும் நகைநட்டுக்கள் போட்டு சும்மா ஜொலிக்க…பந்தலுக்கு முன் உட்கார்ந்துக் கொண்டு அவர் அவர் உறவு முறைகளை அழைத்துக் கொண்டு பல கதைகள் பேசிக் கொண்டு இருந்தனர்.

ஒரு சில ஆண்கள் அரசியல் பேச ….ஒரு சில ஆண்கள் சமையல் செய்யும் இடத்தில் சமையல்காரனிடம்.. “ம் நெய் மிதக்கனும். இன்னும் கொஞ்சம் ஊத்துமய்யா…உன் அப்பன் வீட்டு சொத்தா குறைய போகுது.” அடுத்தவன் நெய்யே என் பொண்டாட்டி கைய்யே என்ற பழ மொழியை நிரூபிக்கும் வகையில் தன் நாட்டாமையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தனர்.

தெய்வநாயகியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், குறைந்தது  இரண்டு அங்குல ஜரிகையில் காஞ்சிபுரம் பட்டில் …காதிலும்,  கழுத்திலும், கைய்யிலும் வைரங்கள் ஜொலிக்க  மல்லிகை சரத்தை  தங்கள் கூந்தலில் சூடியவர்கள் வீட்டு உரிமையாளர்களாய் வருவோர்களை வரவேற்றுக் கொண்டு இருந்தனர்.

Advertisement

வரலட்சுமி தன்  மகளுக்கு தனக்கு தெரிந்த அளவு முக அலங்காரத்தை முடித்தவர். முடி அலங்காரம் செய்யும் போது மட்டும்… “வசு மாதிரி நீயும் அந்த அழகு படுத்தற பெண்ணை வெச்சி இருக்கலாம்லே …அவங்க அளவுக்கு எல்லாம் என்னால செய்ய முடியலடி..” என்று தனக்கு தெரிந்த அளவுக்கு செய்து விட்டு தன் பெண்ணை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துக் கொண்டு இருக்கும் தன் அன்னையை பார்த்த மணிமேகலைக்கு என்னவோ போல் ஆனது.

Advertisement

தன் அன்னை எப்போதும்  அந்த  ஒற்றை  சரடோடு மிக எளிமையாக தான் இருப்பார். அதுவே அவளுக்கு அவ்வளவு அழகாய் தான் இருக்கும். ஆனால் இன்றும் அதே எளிமையோடு இருப்பதை பார்த்து மணிமேகலைக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

இவர்களின் இந்த நிலை மாற தானே மேல் படிப்பு படிக்க வெளிநாடு சென்றேன். ஆனால் நான் போன காரியம் மட்டும் பார்க்காது …பார்க்க கூடாதது எல்லாம் பார்த்ததால் தான் நான் எதற்க்கு போனேனோ அதை நிறைவேற்ற முடியாது…இதோ தோல்வியோடு வந்து நிற்கிறேன் என்று பழையதை நினைக்கும் போதே மணிமேகலையின் முகம் தன்னால் வாடலாயிற்று.

அதை பார்த்த வரலட்சுமி… “என்னடா என்ன ஒரு மாதிரியா இருக்க…?” என்று  கேட்டவர்…பின் அவரே ஏதோ நினைத்தவராய்… “ஓ ஜடை நல்ல பின்னலேன்னு நினைக்கிறியாமா…நான் பின்னும் போது எப்படியோ தான் இருந்தது.

Advertisement

ஆனால் முழுசா பின்னி விட்டு பார்த்த பிறகு ரொம்ப அழகா இருக்கு மணி. நீயே வேணா பாரேன்.” என்று சொன்னதோடு தங்கள் முன் இருந்த கண்னாடி முன் தன் மகளை நிற்க வைத்து விட்டு…அவளுக்கு பின் நின்றுக் கொண்ட வரலட்சுமி…

“நல்லா இருக்கு தானே…?” என்று கேள்வியும் எழுப்பினார். ஆனால் அதற்க்கு விடை தான் மணிமேகலையால் கொடுக்க முடியவில்லை.

காரணம் தன் பின் நின்றுக் கொண்டு இருந்த தன் அன்னையின் பிம்பத்தை பார்த்தவள். அதுவும் அவள் கழுத்தில் மாட்டி இருந்த விரல் அளவே ஆன தங்க சங்கிலியோடு தன் அன்னை நிற்க…

அவருக்கு முன் கழுத்தே தெரியாத அளவுக்கு, தங்கமும் வைரமும் கலந்து தன் கழுத்தை அலங்கரித்ததை பார்த்தவளுக்கு…அதை ரசிக்க முடியாது தன் கண்னை இறுக்கி மூடிக் கொண்டாள்.

தான் அணிந்த அணிகலன் மொத்தமும் வீரா வீட்டவர்கள் தான் வாங்கி கொடுத்தது. அமெரிக்காவில் இருந்து வந்த அன்று  சென்னையில் வாங்கிய நகைக்களை தான் இப்போது போட்டு இருக்கிறாள்.

அன்று  அவ்வளவு வாங்கிய எனக்கு அப்போது ஏன் தன் அன்னையை பற்றி நினைக்கவில்லை. காலம் கடந்து ஞானோதையும் வந்து என்ன பயன்…?

எப்போதும் மணிமேகலை இவ்வளவு நகை அணிந்தது கிடையாது. எங்கு சென்றாலும் அன்னை போலவே மெல்லிய கழுத்து ஜெயின் மட்டுமே போட்டு கொள்வாள்.

வீட்டில் உள்ளவர்களும் இவளை பார்த்து… ஏன் போடவில்லை…?” என்று கேள்வி எழுப்பியது கிடையாது. அதனால் தன் அன்னையோடு சேர்ந்து நிற்க்கும் போது அவளுக்கு அவ்வளவு வித்தியாசமாக தெரிந்ததும் கிடையாது.

ஆனால் இன்று நான் நகையாள் ஜொலிக்க..தன் பக்கத்தில் தன் அன்னை இப்படி…?நான் எப்படி மறந்தேன் என்று கண் மூடி யோசிக்கும் போதே…

“அத்தை…” என்று அழைத்துக் கொண்டே அந்த இடத்திற்க்கு வீரேந்திரன் வந்தான்.  வீரேந்திரன் அழைத்தது என்னவோ அத்தையைய் தான்.ஆனால் அந்த அறையில் காலடி எடுத்து வைக்கும் போதே கண்ணாடி முன்  கண் மூடி நின்றுக் கொண்டு இருந்த மணிமேகலையை பார்த்த வாறே தான் உள் நுழைந்தான்.

அதுவும் தன் குரல் கேட்டு கண் திறந்த மணிமேகலையின் கலங்கிய  கண்ணை பார்த்த வாரே…

 

 

[the_ad id=”6605″]

 

 

 

மனதில்.. ‘எதுக்கு இப்படி கலங்கி இருக்கா…?’ என்று மனதில் நினைத்தாலும், அது எதற்க்கு என்று கேட்க நேரம் இல்லாத காரணத்தால், தான் கொண்டு வந்த நகை பெட்டியை வரலட்சுகியிடம் நீட்டினான்.

அதை வாங்கி திறந்து பார்த்த வரலட்சுமி அதில் இருந்த இரட்டை வடை சங்கிலி…தோடு…நான்கு வளையல் …கழுத்தை ஒட்டியது போல் போட  அட்டிகை…என்று ஒரு செட் நகை அடுக்கி இருக்க…

தன் மகள் கழுத்தை பார்த்த வாரே… “இது எல்லாம் போட அவ கழுத்தில் இடம் இல்லையேப்பா…” என்று கிண்டல் போல்  பேசினார். ஒரு வார்த்தை. ஒரு சொல். என்று பேசும் வரலட்சுமியின்  இந்த கிண்டல் பேச்சு கூட மணிமேகலைக்கு புதியதாய் தான் தெரிந்தது.

மகள் தான் வாழ முடியாத வாழ்க்கையை வாழ போகிறாள். தனக்கு கிடைக்காத அனைத்தும் அவளுக்கு கிடைக்க  போகிறது. இதோ இன்று போட்டு இருக்கும் நகை அனைத்தும் தன் மகளுக்காக வீரா தான் வாங்கியது. அது பத்தாது என்று இதோ கையில் நகை பெட்டி எடுத்து வந்து நீட்டுகிறான். இவன் என் மகளை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்வான்.

வரலட்சுமியின் இந்த மகிழ்ச்சிக்கு காரணம்…வீரா நகை வாங்கி கொடுத்ததால் மட்டும் இல்லை. தன் மகளுக்காக  தன் பாட்டியிடம் பேசிய பேச்சு அனைத்தும் கேட்டவளுக்கு தன் மகள் கவுரவம் குறையாது வாழ்வாள்…வரலட்சுமியின் இன்றைய பூரித்த முகத்திற்க்கு அதுவே முதல் காரணம்.

வரலட்சுமியின் இந்த கிண்டல் பேச்சில் மகள் மருமகன் அதிசயத்து அவரை பார்த்தனர். வீரா… “அத்த இது உங்க மகளுக்கு இல்லை. இவ்வளவு அழகான மகளை பெத்த என் அத்தைக்கு…ம் சீக்கிரம் என்னை ஐய்யர் கூப்பிடும் நேரமாகி விட்டது. இதை போட்டு காட்டுங்க என் செலக்க்ஷன் எப்படி இருக்குன்னு  நானே பார்க்கனும்.” என்று சொல்லி  வரலட்சுமியை அவசரப்படுத்தினான்.

வீரேந்திரன்  சொன்ன உங்களுக்கு தான் என்ற வார்த்தையில் வரலட்சுமி கண்கலங்கியது என்றால், கண்கலங்கி தெரிந்த மணிமேகலையின் கண்களில் பளிச் என்று  மின்னி தெரிந்த அந்த வெளிச்சத்தையும் பார்த்த வீரேந்திரனுக்கு, மணிமேகலையின் கலங்கிய கண்ணுக்கு காரணம் விளங்கி விட்டது.

‘அவளுக்கு நான் வாங்கி கொடுக்கும் போதே… “என் அம்மாவுக்கும் வாங்குங்க…” என்று தன்னிடம்  கேட்டு இருந்து இருக்கலாமே…ஏன் தன்னிடம் அவளுக்கு அந்த உரிமை இல்லையா…?’என்று அவன் மனதில் நினைத்தான்.

உரிமை இல்லை என்பது போல் வரலட்சுமி… “எனக்கு இது வேண்டாம் தம்பி. மணிக்கு நீங்க வாங்கி கொடுத்திங்க பாரு…அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம்பா…இது எல்லாம் எனக்கு  வேண்டாம்.” என்று வரலட்சுமி மறுத்தார்.

“ஏன் அத்தை உங்களுக்கு நான் வாங்கி கொடுக்க கூடாதா…உங்க மகனோ இதோ நிக்கிறாளே  சிட்டு வாங்கி கொடுத்தா போட்டுக்க மாட்டிங்கலா…?” என்று உரிமையுடன் வீரேந்திரன் கேட்டான்.

“இல்லப்பா..என் கிட்ட எல்லா உரிமையும் உனக்கு இருக்குப்பா…”

வரலட்சுமிக்கு அந்த நகைப்பெட்டியை கையில் வைத்திருப்பது ஏதோ நெருப்பை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போல் இருக்க..அதை  எப்போது வீரேந்திரனிடம்  கொடுத்து விடுவோம் என்று காத்திருந்தார்.

“அத்தை அதான் சொன்னனே  இது போல் அழகான பெண்ணை பெத்து கொடுத்து இருக்கிங்க..அதுக்கு தான் இந்த பரிசுன்னு…” என்று  வீரேந்திரன் பேச்சையும் பார்வையையும்  வரலட்சுமியிடன் வைத்திருந்தவன்,  அழகான பெண் என்று சொல்லும் போது மட்டும் மணிமேகலையிடம்  தன் பார்வையை செலுத்தி கண் அடித்தவன் பின் தன் அத்தை பக்கம் பார்வையை செலுத்தியவனாய்…

தொடர்ந்து… “நானும் அது போல் என் பரிசுன்னு சொல்லி இதை உங்க கிட்ட கொடுத்துட்டு பெருமை சேர்த்துக்க தான் பார்த்தேன். ஆனா பாருங்க இதை நான் வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சதாலே… உண்மைய சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விட்டேன்.” என்ற வீரேந்திரன் பேச்சில் குழம்பி போய் இரு பெண்களும் அவனை பார்த்தனர்.

“இந்த நகை வாங்கினது நான் தான் அத்தை. ஆனா என் பணத்தில் வாங்கல….மாமா பணம் கொண்டு தான் வாங்கினேன்.” என்று சொன்ன வீரேந்திரனின்  பேச்சை இரு பெண்களும் நம்ப வில்லை.

அவர்கள் முகத்தை பார்த்தே…அவர்களின் நம்பக தன்மையை தெரிந்துக்  கொண்டே வீரேந்திரன்… “என்ன அத்தை நம்பலையா…?நிஜம் இந்த நகை வாங்கினது எல்லாம் நம் கண்ணன் மாமா பணத்தால் தான்.” என்று தன் கழுத்தில் கைய் வைத்து உண்மை தான் என்று வீரேந்திரன்  சொன்னாலும், அதை நம்ப தான் இருபெண்களாளும் முடியவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

அதற்க்கு காரணம்  இது வரை  அவர்கள் அறிந்து கமலக்கண்ணன் வேலைக்கு என்று இது வரை சென்றது  கிடையாது. அவரால் பேச முடியாது. கேட்க முடியாது என்ற காரணத்தால்  அவ்வளவு விவசாய நிலம் இருந்தும், பல தொழில் இருந்தும்…அதை பார்க்க கவனிக்க அந்த வீட்டில் இரு மகன்கள் மட்டுமே பார்த்திருக்க…கமலகண்ணன் வீட்டிலேயே தான் இருப்பார்.

அது அந்த வீட்டில் யாருக்கும் பெரியதாய் தெரியவில்லை. ஆனால் கமலக்கண்ணனின் மனைவி மகளுக்கு   அது ஒரு பெரிய குறையாக தான் இது தெரிந்தது.

மணிமேகலையின் அத்தியாவசியா  தேவைக்கு  கூட  கேட்க தயங்கி தயங்கி தான் வீட்டில் கேட்பாள். வரலட்சுமி கூட இன்று வரை தன் வீட்டில் போட்ட அந்த ஒற்றை சரடில் இருக்க காரணமும் அது தான்.

தன் கணவன் உழைக்காது இருக்க…மச்சினர் உழைத்த உழைப்பில் வரும் பணத்தில்  வருடத்திற்க்கு வாங்கி கொடுக்கும்  அந்த இரு புடவையை கைய் நீட்டி வாங்கவே கூசி தான் போவார்.

அப்படி இருக்கும் போது  நகை என்பது அவள் கனவில் கூட நினைத்து  பார்க்க கூடாத பொருளாய் தான் இருந்து வந்தது இது வரை…

அவ்வப்போது வரலட்சுமி கூட  நினைப்பார் இது போல் இருப்பவர்கள் எத்தனை பேர் தன்னிடம் உள்ள மற்ற திறனை வைத்து சம்பாதிக்கிறார்கள்…இவர் மட்டும் ஏன் இப்படி…?என்று நினைத்தது இன்று வரை கணவரிடம் வாய் திறந்து வரலட்சுமி கேட்டது இல்லை.

அப்படி இருக்கும் போது தன் கணவர் பணம் கொண்டு தான் இதை வாங்கினேன் என்று சொன்ன வீரேந்திரன் பேச்சை நம்ப முடியாததோடு…இன்று  தன் கணவர் ஒன்றும் இல்லாதவர் என்பதை நினைத்து வரலட்சுமியின் மனம் பெரிதாக அடிவாங்கியது.

வரலட்சுமியை பொறுத்த வரை ஒரு  பெண் திருமணத்திற்க்கு முன்  தந்தையின் வருமானத்தில் இருக்க வேண்டும் . திருமணத்திற்க்கு பின் கணவரின் வருமானத்தில் இருக்க வேண்டும். இல்லை என்றால் தன் வருமானத்தில் நிற்க்கலாம் அதில் தவறு இல்லை.

ஆனால் இது போல் மற்றவர்களின் உழைப்பில் வாழ்வது என்பது ஒவ்வொரு  நாளும் ஒரு வாய் கவளத்தை எடுத்து வாயில் வைக்கும் போது எல்லாம், வரலட்சுமி கூசி போய் விடுவார்.

அதனால் தான்  மற்றவர்கள் வேலை செய்யாது தன்னை வேலை வாங்கிக் கொண்டு இருக்கும் போது …அதற்க்கு கோபம் படாது..நாம் சாப்பிடும் சாப்பிட்டிற்க்கு இதாவது செய்கிறோமே..அது வரை  வரலட்சுமிக்கு திருப்தி தான்.

தான் மட்டும் வேலை செய்வதை பார்த்து சிறுபெண்ணாய் இருந்த  மணிமேகலை… “நீங்க  மட்டும் ஏன்மா எல்லா வேலையும் செய்யனும். ஏன் சித்தி கூட தானே சாப்பிடுறாங்க அவங்க  இது செய்ய  மாட்டாங்களா…?” சிறு குழந்தையின் மனம்…இவ்வாறு கேட்க வைக்கும்.

அதற்க்கு வரலட்சுமி உண்மையை சொன்னா குழந்தையின் மனம்  பாதிப்பதோடு, தனக்கு வேண்டியதை எதையும் கேட்க மாட்டாள் என்று நினைத்து…

“நம்ம  வீட்டு வேலை செய்வதில் போட்டி போட கூடாதுடா…யாரு செஞ்சா என்ன…?” என்பது போல் தான் வரலட்சுமி சொல்வார்.

ஆனால்  தான் சொல்லாத விட்ட விசயத்தை குழந்தை பருவத்தில் இருந்து,  குமரி  பருவத்தை எட்டிய போது மணிமேகலைக்கு தானே புரிந்து போய்…

முன் போல் கேள்வி கேட்காது..தன் அன்னைக்கு  தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்து விட்டு தான் பள்ளிகூடத்திற்க்கும், கல்லூரிக்கும் சென்று  வந்தாள். தன்னை போலவே தனக்கு தேவையானதை  கேட்கவே தயங்கியதை புரிந்துக் கொண்ட  வரலட்சுமியால் ஒன்றும் சொல்ல முடியாது அவருமே அமைதி காத்தார் தான்.

ஆனால் இன்று தன் கணவர் பணம்  தான் என்று தன் மருமகன் பொய் சொல்லி கொடுக்கும் போது தன் கணவரின்  மெத்தன தன்மை இன்று  பலமாக தாக்கியது.

“வேண்டாம் தம்பி…பெண் கொடுக்கும் இடத்தில் கை நீட்ட கூடாது. எல்லாத்தையிம் விட்டு தான் நான் இங்கு வாழ்கிறேன். ஆனால் என் மகளாவது தன் புகுந்த வீட்டில் மரியாதையோடு வாழனும். எனக்கு இந்த நகை  வேண்டாம்.” என்று சொல்லி திட்ட வட்டமாய் மறுத்து விட்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

“உண்மை தான் அத்தை இது உங்க பணத்தால் தான் வாங்கியது.” என்று சொன்ன வீரேந்திரன்…

பத்து வருடம் முன்னவே நம் திருமண மண்டபத்தை நம்ம  தாத்தா பெரிய மாமா பேருக்கு எழுதி வெச்சிட்டார். இந்த பத்து வருடமா அதில் வரும்  வருமானத்தை அவர் பெயரில் தான் வங்கியில் போட்டு இருந்தது.

நான் தான் தாத்தா கிட்ட… “இது போல் வங்கியில் இருப்பதோடு என் கிட்ட கொடுங்க. அதை நான் என்னுடை பைனான்சுல போடுறேன் என்று மூன்று வருடம் முன் நான் வாங்கினேன்.

அந்த  மண்டபத்தின் மூலம் வரும் வருமானம் இப்போ வரை நான் தான் வாங்கிட்டு இருக்கேன். அந்த வருமானத்தில் தான் நான் இந்த நகை வாங்கியது. போதுமா…இப்போவாவது போட்டுக்குங்க…நான் போகனும்.

நான் போகலேன்னா அப்புறம் மாப்பிள்ளை காணும் என்று ஊரு  முழுக்க  பரப்பி விட்டுடுவாங்க.” என்று வீரேந்திரன் படுத்திய அவசரத்தில் அந்த நகைகளை வரலட்சுமி போட்டுக் கொண்டாலும்…

“இந்த பணத்தை உங்க பைனான்சுல இருந்தாலாவது பெருகும். இப்படி நகைகளையா வாங்கிட்டியேப்பா…” என்று அப்போதும் இதில் தனக்கு விருப்பம் இல்லை என்பது போல் தான் வரலட்சுமி சொன்னார்.

“இதுவும் ஒரு வகை வட்டி தான் அத்தை. இருபது வருடம் முன் ஒரு சவரன்  நகை நான்காயிரம்…இப்போ அந்த பணத்தில்  ஒரு கிராம் கூட வராது.அப்போ இதுவும் நல்ல இன்வெஸ்மென்ட் தானே…?” என்று கேட்டு தான் ஒரு நல்ல வட்டிக்காரன் என்று நம் மணிமேகலைக்கு மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டு இருப்பவன்…தான் ஒரு நல்ல காதலன் என்று எப்போது நிரூபிப்பான்.

இதோ அதற்க்கு நேரம் வந்து விட்டது என்பது போல் வசுந்தராவுக்கு என்று கொடுத்து இருந்த அறையில் இருந்து தெய்வநாயகியின் சத்தம் கேட்டு அங்கு குடும்ப உறுப்பினர் அனைவரும் கூட…

வசுந்தரா தலை குனிந்து அமர்ந்து இருந்தாள். பக்கத்தில் வாசுதேவன் கையை  பிசைந்து கொண்டு ஆடு திருடிய கள்ளனை போல் முழித்துக் கொண்டு இருக்க…

தெய்வநாயகி மணிமேகலையை பார்த்து… “வாடியம்மா வாடி..உன் சிநேகிதிகாரி செய்த காரியத்தை பார்த்தியா..?” என்ற  அவர் அந்த வார்த்தையோடு விட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

ஆனால் தொடர்ந்து அவர் சொன்ன… “சென்னைக்கு போனவளே இப்படி…நீ வெளிநாட்டுக்கு எல்லாம் போய் வந்து இருக்க….நீ எத்தனை மாசம் …?” என்ற அவர் கேள்வியில்…

அவர் முன் வீரு கொண்ட சிங்கம் போல் விட்டால் அவரை அடித்து விடுவது போல் அவர் முன் நின்ற வீரேந்திரன்..தன் ஒரு விரலை காட்டி…

“வயசுக்கு தகுந்தா போல பாத்து பேசுங்க…இல்லேன்னா உங்க வயசை கூட பாக்காது நான் நடந்துக்க வேண்டி இருக்கும்.” என்று அவன் கர்ஜித்ததில்  தெய்வநாயகி பயந்து போய் தன்னால் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றுக் கொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!