Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kaatril un vaasam

காற்றில் உன் வாசம்-6(2)

8 வருடங்களுக்கு முன்…… 

bungalow nagar

காலை   6 மணி   மார்கழி மாதம் அந்த தெருவில் இருக்கும்  பெருமாள் கோவிலில் சுப்ரபாதம் ஒலித்து கொண்டிருந்தது. தெருவில் உள்ள பெண்கள் அனைவரும் அவர்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தனர். 

அந்த பெரிய வீட்டு வாசலில் 45 வயது மிக்க ஒரு பெண் கோலமிட்டு கொண்டிருந்தார் அவள் பெயர் வள்ளி. அந்த வீட்டுக்கு அவள் வரும்போது அவருக்கு வயது 10. தாய் தந்தை இல்லாமல் அனாதையாக ஒரு வேலை உணவுக்காக வீட்டு வாசலில் கையேந்தி நின்றவரை வீட்டுகுள் அழைத்து சென்று பசித்த வயிறுக்கு உணவளித்து உடுக்க உடை கொடுத்து தங்குவதற்கு வீடும் வேலையும் கொடுத்துவர் காமாட்சியம்மாள். 
   அங்கே வள்ளியை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாரே அவர் தான் காமாட்சியம்மாள் வயது 60 . பட்டு சேலையை கிராமத்து பாணியில் கட்டி கழுத்தில் தங்க தாலியுடன் வைர அட்டிகை அணிந்து கையில் கல் பதித்த  தங்க வளையல் காலில் தண்டை நெற்றியில் ஒரு ரூபாய் அளவில் பொட்டு நெற்றிவகுட்டில் குங்குமம்  வைத்து , பார்த்தால் கையெடுத்து கும்பிடும் அம்மன் போல் தோற்றம் கொண்ட அவருக்கு மனமும் அப்படியே. 

( இனி நாம காமாட்சியம்மாளை பாட்டி என்றே அழைப்போம்….. ???)  

வள்ளி , ஏன்ம்மா நான் ஒன்னு சொன்னா கோபப்படமாட்டீகளே?? என்றாள் பீடிக்கையுடன் .  

பாட்டி , என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு என்னனு சொல்லு முதல்ல என்றார். 

வள்ளி , அதுவந்தும்மா….. உங்களுக்கு 60 வயசு ஆச்சு இன்னும் வீட்டு வேலையெல்லாம் பார்க்குறீங்க ஆனால் உங்க மருமக 8  மணிக்கு முன்னாடி எழுந்திக்கிறதே இல்ல நீங்களும் என்னனு கேக்கமாட்டேங்குறீங்க அவங்களும் இதுதான் சாக்குன்னு இருக்காங்க அப்பறம் எப்படி பொறுப்பு வரும் என்றாள் ஆதங்கத்துடன். 

பாட்டி , அடியே!! நான் எதையும் கவனிக்காம இல்ல அவள் செய்யுறதுக்குத்தான் இன்னும் இந்த வீட்டோட பொறுப்பை அவள்கிட்ட கொடுக்காம இருக்க அவளோட பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி மருமகள் வந்ததும் என் பேத்தி கிட்ட தான் இந்த வீட்டோட பொறுப்பையும் இந்தா இருக்கு பாரு கொத்துச்சாவி இதையும் ஒப்படைப்பேன் அதுக்கு அப்பறம் தான் இந்த உயிர் என்னோட உடம்பை விட்டு போகும் என்றார் கலங்கிய குரலில். 

வள்ளி , ஐயோ ஆத்தா என்ன நீ நல்ல நாள் அதுவுமா இப்படி பேசுற….நான் ஒரு லூசு உனக்கு தெரியாத விஷயமா ஏதோ ஒரு ஆதங்கத்தில கேட்டுட்டேன் என்ன மன்னிச்சிரு  நீ கலங்காத ஆத்தா எனக்கு கஷ்டமா இருக்கு என்றாள் விழிநீருடன் .

பாட்டி , அடி கூறுகெட்டவளே நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன் அதுக்கு நீ ஏன்  அழுற ??? போ போய் எல்லாருக்கும் காபி போடு என்று அனுப்பி வைத்தாள். 

ஆனால் பாட்டியின் மனதில் வேறு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. ( வாங்க என்ன ஓடுதுனு கேப்போம் …. ஒட்டு கேக்கபோறணு சொல்லு ( என்னோட மைண்ட்  வாய்ஸ் )…. ஹி ஹி ஹி…???) 

பாட்டி மனதில் , வள்ளி சொல்றதும் உண்மைதான் தன் மருமகள் சகுந்தலா தேவி இந்த வீட்டிற்கு ஏற்றவள் இல்லை என்பதை அவள் இந்த வீட்டில் காலடி வைத்த அன்றே தெரிந்து கொண்டார். 

     பொதுவாக பாட்டி சகுனம் பார்ப்பவர் அல்ல.. ஆனால் சகுந்தலா தேவிக்கும் தன் மகனுக்கும் கல்யாணம் ஆன நாளில் நடந்த அனைத்தும் நினைவில் வந்தது. 

காமாட்சி அம்மாளின் கணவர் மித்ரேந்திர ராஜா ( இனி நாம் இவரை தாத்தா என்றே அழைப்போம் ) பெரிய ஜமின் குடும்பம் அவரோடது. ஏகப்பட்ட சொத்துக்கள் கொண்டவர்.  தயாளு குணமும் எதிர்பவரை தன்  பார்வையால் பொசுக்கும் சிவனையும்  போன்றவர் . அவர்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி அவருக்கு இரு அண்ணன்மார்கள். இருவரும் இப்போது உயிரோடு இல்லை. அவர்களின் குடும்பமும்  தாத்தாவை நம்பியே இருந்தது. 

      தாத்தா தன் 25  வயதில் காமாட்சி பாட்டியை கரம் பிடித்தார். வந்த ஒரு வருடத்திலே மாமியாரின் மனதில் இடம்பிடித்தார் காமாட்சி பாட்டி. வீட்டின் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு  ஒய்வு எடுத்து கொண்டார் காமாட்சி பாட்டியின் மாமியார் .அதன்பின் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தாத்தா அந்த முடிவை எடுத்தார். 

தாத்தா ,  காமாட்சி நமக்கு இந்த ஒரு குழந்தை போதும்மா….ஏன் என்று விழிகளிலால் கேட்டவரிடம்….உன்னோட பிரசவ வலியை பார்க்கும் போது எனக்கு உயிர் போயி திரும்ப வந்த மாதிரி இருந்ததும்மா போதும் இனி உனக்கு அந்த வலி வேண்டாம் என்று முடித்து விட்டார்.அதை கேட்ட காமாட்சி பாட்டி பெருமையாக உணர்ந்தார்.

( தாத்தா நீங்க ரொம்ப கிரேட் தாத்தா…..????????????) 

அதன்பின்  குழந்தைக்கு வேதநாயகம் என்று பெயரிட்டு நல்லமுறையில் வளர்த்தனர். வேதநாயகத்திற்கு 20 வயது நடக்கும் பொழுது அனைத்து சொத்தையும் தாத்தா மீது எழுதி வைத்துவிட்டு அவரின் அம்மாவும் அப்பாவும் இயற்கை எய்தினர் . அதில் பொறாமை கொண்ட அவரின் அண்ணன்மார்கள் அவரையும் காமாட்சி பாட்டியையும் கொல்ல முயன்றனர். ஆனால்  அந்த முயற்சி அவர்களையே காவு வாங்கியது. 

வேதநாயகத்திற்கு 23 வயது இருக்கும்பொழுது சில பொறுப்புகளை ஒப்படைத்தார் தாத்தா. தனக்கு கிடைத்த சிறு பொறுப்பையும் பெரியதாக கருதி அதில் சாதித்தும் காட்டினார் வேதநாயகம்.

   தன் மகனின் வெற்றியை கண்ட தாத்தா இன்னும் சில பொறுப்புகளை கூடுதலாக கொடுத்தார். அதிலும் தன் திறமையை காட்டினார் வேதநாயகம். 
   தன் மகனை நினைத்து பெருமை கொண்ட பெரியவர் தன் குடும்பம் இத்தனை காலம்  பாதுகாத்து வந்த மூன்று பொக்கிஷங்களை  தன் மகனிடம் ஒப்படைக்க நினைத்தார். 

ஆனால் காமாட்சியம்மாளோ அதற்கு சம்மதிக்கவில்லை . பெரியவர் காரணம் கேட்டதற்கு , நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் தானே எல்லா பொறுப்பையும் நம்மகிட்ட கொடுத்தாங்க நீங்க ஏன் அவசர படுறீங்க ??? பெரியவங்க அப்படி செஞ்சதுல ஏதாவது காரணம் இருக்கும் நீங்க எதுவா இருந்தாலும் யோசிச்சு செய்ங்க என்று கூறிவிட்டார் .

  ஆனால் பெரியவர் வேறு மாதிரி யோசித்தார். 

வெயிட் வெயிட்……. அந்த 3 பொக்கிஷம் என்ன என்னன்னு சொல்லுறேன். 

1. நவரத்தினங்கள் பதித்த தங்க  திரிசூலம் 
2. நவரத்தினங்கள் பதித்த வெள்ளி வீச்சரிவாள் 
3. மரகத லிங்கம் 

     இந்த 3 பொக்கிஷமும் அவர்களின் பூஜை அறையில் தனி தனி பெட்டகத்தில் இருக்கிறது.

    இப்போ வாங்க தாத்தா என்ன முடிவு எடுக்குறாங்கனு பார்க்கலாம். 

     ஒரு நல்ல நாளில் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து பூஜைகள் செய்து வீச்சரிவாள் அடங்கிய பெட்டகத்தின்  சாவியை வேதநாயகத்திடம் ஒப்படைத்தார் மித்ரேந்திர ராஜா .

       பாட்டிக்கு இதில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது. அவரின் வருத்தத்தை பார்த்த தாத்தா , என்னவென்று கேட்க அதற்கு பாட்டியோ , இப்போவும் சொல்ற நீங்க அவசர பட்டுடிங்கனு தோணுது..

தாத்தா , சாவி மட்டும் தான் கொடுத்திருக்க அதுல என்ன இருக்கு ??????

பாட்டி , எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கே நான் ஏன் பயப்படுறேனு புரியலை இதுக்குமேல நான் என்ன சொல்றது. 

தாத்தா , எனக்கு புரியுதும்மா கருப்பனோட அருள் இல்லாத வேதநாயகத்து கிட்ட பொறுப்பை கொடுக்குறது சாமீ குத்தம்ன்னு  
நீ நினைக்கிற சரிதானா ????

பாட்டி , ஆமா என்றார் இன்னும் தெளியாத பயத்துடன் .

தாத்தா , எனக்கு அடுத்து அவனுக்குதான அருள்  வரும் என்றார் .

பாட்டி , இது நம்ம பரம்பரையில யாராவது ஒருத்தருக்கு தான் வரும் அதுல சந்தேகம் இல்லை ஆனால் அது நம்ம குடும்பத்தில யாருக்குனாலும் வரலாம் என்றார் கோபத்துடன். 

தாத்தா ,   நீ என்ன சொல்லவரா காமாட்சி  

பாட்டி , உங்க அப்பாவுக்கு வந்த அருள் உங்க  அண்ணன்களுக்கு வராம ஏன் உங்களுக்கு வந்தது ?????

தாத்தா , அது அது அவங்க குடி அது இதுன்னு சுத்தம் இல்லாம இருந்தாங்க ஆனால் நான் அப்படி இல்லை. 

பாட்டி , ஹ்ம்ம் சுத்தமா இருக்கனும் அப்போதுதான்  அருள் வரும் என்றார் கவலையுடன் 

தாத்தா , அப்போ நம்ம பையன் சுத்தம் இல்லனு சொல்றியா?? என்றார் காட்டமாக 

பாட்டி , என்னோட புள்ளைய நானே அப்படி சொல்லுவேனா ??? உங்களுக்கு அருள் எந்த வயசுல வந்துச்சு?? சொல்லுங்க 

தாத்தா , 20 வயசுல வந்துச்சு என்றார் யோசனையாக  

பாட்டி , ஹ்ம்ம் நம்ம பையனுக்கு 23 வயசு ஆச்சு இன்னும் எந்த அறிகுறியும் இல்லை அதுதான் எனக்கு பயமா இருக்கு 

தாத்தா , இல்லம்மா நீ  தேவை இல்லமா பயப்படுற விடும்மா என்றார் 

பாட்டி , இல்லைங்க நீக்க பொறுப்பை கொடுத்திட்டீங்க அதனால உங்களுக்கு அருள் நிக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு…. 5 வருஷத்துக்கு அப்பறம் இந்த வருஷம் தான் திருவிழா நடக்க போகுது சாமீ உக்கிரமா வரும் எனக்கு அதை நினைச்சாதான் பயமா இருக்கு.. 

தாத்தா , ஹ்ம்ம் எனக்கும் ஏதோ தப்பு பண்ண மாதிரி தோணுது பார்ப்போம் என்ன நடக்குனு என்றார் கலக்கத்துடன் 

பாட்டி , ஹ்ம்ம் அந்த பெரியாச்சியும் கருப்பனும்   தான் நமக்கு துணையா இருந்து காக்கணும் என்று வேண்டிக்கொண்டார் . 

காமாட்சியம்மாள் நினைத்தது போலவே தான் நடந்திருந்தது. வேதநாயகத்திற்கு சில தீய பழக்கங்கள் இருந்தது. கல்லூரியில் படிக்கும் போது சில கூடா நட்பாள் புகை பிடிக்க கற்று கொண்டார். அதன் பின் தொழிலை கையில் எடுத்ததும் சில business பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அங்கு அவர் கற்றுக்கொண்டது குடிப்பழக்கம். 

இப்படியிருக்க திருவிழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்க அனைவரும் கிளம்பி அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலிக்கு சென்றனர். 

கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. 
வெள்ளி வீச்சரிவாளையும் , தங்க திரிசூலத்தையும் அம்மனின் பாதத்தில் வைத்துவிட்டு பெரியாச்சி அம்மனை வணங்கி நின்றார் மித்ரேந்திர ராஜா. 

     ஒரு கையில் ஆயுதத்தையும் இன்னொரு கையில் குழந்தையும் மடியில் ஒரு பெண்ணின் உடலை கிழிப்பதுபோலவும் காலில் ஒரு ஆணினை ஆக்ரோஷமாக  மிதித்திருப்பது போலவும் இருந்த அந்த  அன்னையின் கண்ணில் கருணை மட்டுமே இருந்தது . 

அதனை கண்ட தாத்தாவின் கண்ணில் கண்ணீர் கொட்டியது. 

திருவிழா நாளும் வந்தது…….

அம்மனுக்கு அலங்காரம் முடிந்து அன்னை ஜொலித்தால்…….

மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு ஆரத்தி எடுக்க காமாட்சியம்மாளுக்கு அருள் உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்தார்.
அவரை பார்த்த மக்கள் கன்னத்தில் போட்டுகொண்டு ஆத்தா மகமாயி பெரியாச்சியம்மா என்று பக்தி மிகுதியில் ஆர்ப்பரித்து கொண்டிருந்தனர். 

அப்போது பூசாரி திரிசூலத்தை கொண்டுவந்து காமாட்சியம்மாளிடம் கொடுத்தார். அவரோ  இன்னும் அதிகமாக அருள் வந்து ஆடினார். அதே ஆக்ரோஷத்துடன் கருப்பசாமி சிலை இருந்த இடம் நோக்கி ஆடிகொண்டே சென்றார்.அவரின் பின் பூசாரி வெள்ளி வீச்சரிவாளோடு சென்றார்.  
    அங்கு கருப்பசாமிக்கு பூஜை நடக்க தாத்தாவுக்கு அருள் வரும் என்று ஊர் மக்கள் எதிர் பார்க்க, தாத்தாவோ தன் மகன்  வேதநாயகத்துக்கு  அருள் வரும் என்று எதிர் பார்க்க ஆனால் நடந்தது……….

தொடரும்……….

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!