Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 14 1

மழைத்துளி 14

 

வரு தன் தாத்தா வீட்டிற்குள் நுழைய , அங்கு தன் தந்தையின் கையை தன் கையினுள் வைத்து கண்ணீர் மல்க பேசிக் கொண்டிருந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டே தந்தை அருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

 



Advertisement

மகளைக் கண்ட விஸ்வநாதன் , “அம்மு எப்பம்மா வந்த … ” என மகளை அணைத்துக் கொண்ட விஸ்வநாதன் தன் தாய் மாமனான விக்ரமராஜாவிடம் நலம் விசாரித்தவர் , தன் தங்கை பரணி கையைப் பிடித்துக் கொண்டார்.

 

“தங்கச்சி மக கல்யாணத்துக்கு வந்திருக்கிறியா … இல்ல அண்ணன் மகன் கல்யாணத்துக்கு வந்திருக்கிறியா…. அம்மா வீட்ல உன்னைய பார்க்குறது எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா….” என கண்களில் நீர் தேங்க உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் பரணி.

Advertisement

 

Advertisement

“எனக்கு உங்களத் தவிர யாருமா இருக்கா … இனி அடிக்கடி வரப்போக இருக்கிறேன்…. சரி பெரிய தூக்கு வாளியோட காலையிலயே வந்திருக்கிற … அண்ணனுக்கு என்ன கொண்டு வந்திருக்க … ”

 

“அண்ணா வெயிலுக்கு கேழ்வரகு கூல் எடுத்துட்டு வந்தேன் நீ விரும்பி சாப்பிடுவேனு… ”

Advertisement

 

“குடுமா … ரொம்ப நாள் ஆச்சு…. அம்மு அத்தைக்கும் பெரியம்மாக்கும் ஹெல்ப் பண்ணுமா..” என அவளை அனுப்பி விட்டவர் தாய் மாமனோடு உரையாட ஆரம்பித்தார்.

 

“மருமகனே நீ செஞ்சது தப்போ சரியோ மச்சான் தான் பிடிவாதமா இருந்துட்டாரு …. ஆனா உங்கம்மா என்ன பண்ணினா … என் தங்கச்சிங்கிறதுக்காகவோ இல்ல இந்த வீட்ல நான் சம்மந்தம் பண்ணிருக்கிறதுக்காகவோ நான் இப்ப பேசல ….. அவளுக்கு வாய் மட்டும் தான் பேசும் மனசுல எதையும் வச்சிக்கத் தெரியாது…. ஏதோ புருஷன் போன ஆதங்கத்துல அன்னைக்கு அப்படி பேசிட்டா… அதுக்கு இப்படி ஊர் பக்கமே வரலனா எப்படி ….ஃபோன்ல முகம் பார்த்து பேசுனாலும் அவளுக்கு நீ இப்ப பக்கத்துல இருக்கிறது எவ்வளவு சந்தோஷத்த தருது பார்த்தியா ….. பழச மறந்துட்டு இனியாவது வரப்போக இரு  …. நீ பொறந்ததுலருந்து தூக்கி வளர்த்த பாசத்துல சொல்லிட்டேன் … இனி உன் இஷ்டம் ….. சரி நான் அப்புறமா கல்யாண விஷயமா பேச எல்லோரையும் கூட்டிட்டு வாறேன்… கனி பிள்ளைகிட்ட எதுவும் கோபமா பேசாத…” என தங்கையிடமும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

 

[the_ad id=”6605″]

 

 

 

கனி மகனிடம் “பார்த்தியா எங்கண்ணனும் என்னைய தான் சொல்லிட்டுப் போறார்… ” என மறுபடியும் கண்களை புடவையால் துடைத்தவரிடம் ,

 

“ம்மா நீ இப்படியே அழுதுட்டு இருந்தா இப்பவே பிள்ளைகளக் கூட்டிட்டு கிளம்பிருவேன்.. ” அதற்குள் வரு கையில் ஒரு டம்ளேராடு வரவும் ,

 

” என் பிரின்ஸஸ்க்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சிருச்சுப் போல… ”

 

“ஆமாம் பா… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு …. நீங்க ஏன் பா என்னைய இங்க கூட்டிட்டே வரல… ”

 

” எப்படி கூட்டிட்டு வருவான் … எனக்கு பயந்தே உன்னையக் கூட்டிட்டு வர மாட்டான்….”

 

“ம்மா …சும்மாயிருங்க … அப்படிலாம் இல்ல … எனக்கு வேலையே சரியா இருக்கும் … ”

 

“ஏன்டா இந்த குடும்பத்துக்கு ஒரே பொட்ட புள்ள … இந்த வீட்டு மகாலட்சுமி ..ஆனா நீ அவள தனியா என்கிட்ட அனுப்ப பயந்துட்டு அனுப்பல…. உன்னையப் பெத்தவ நான்…. இதுக்கூட யா தெரியாம இருப்பேன்….. நீ பயந்தத விட நான் பயந்து பயந்து பேசினது தான் அதிகம்…..”

 

” பாட்டீ….. ” என வரு அழைக்க , ” நிஜமா தான்டா சொல்றேன் … உன் மவ போடுற உடுப்பு எதுவுமே எனக்குப் பிடிக்கல … எங்க நாம சொன்னா கோவிச்சுக்குவாளோனு பயந்துட்டு நான் சொன்னதே இல்ல… சரினு உன் அண்ணன் பொண்டாட்டிய சொல்ல சொன்னா ,

 

“அத்தை அவ சின்னபுள்ள… இதெல்லாம் இப்ப சாதாரண உடுப்பு தான் … ரொம்ப மோசமா இருந்தா நானே பக்குவமா சொல்லிக்கிறேன்னு சொல்றா…. எய்யா நான் என்ன சொல்றேன் … ஒரு பாவாடை சட்டை … தாவணி இத போட்டா பார்க்கவும் நல்லாருக்கும்னு தானே சொல்றேன்…. பெத்தவ சொன்னா தப்பில்ல…. ஆனா நாங்க ஒரு வார்த்தை சாதாரணமா சொன்னாலும் தப்பாகிருது … இங்க இருக்கிற வரை மட்டும் தானே  இதெல்லாம் செய்ய சொல்றேன்… இந்த ஊருக்குள்ள முட்டி தெரியற கையில்லாத சட்டை மட்டும் வேண்டாம்னு சொல்லு…..”

 

விஸ்வனாதன் பேசும் முன்னமே வரு ,

 

“ஏன் பாட்டி என்கிட்ட சொன்னா நான் கேட்டுருப்பேன் தானே…. உங்ககிட்ட நான் கோவிப்பேனா… ஐ லைக் யு தாதிமா…” என்று அவர் தோளைக் கட்டிக் கொள்ள ,

 

” என்ன தாதியா… விசு உன் மவள இந்தியில அப்ப அப்ப பேசுறதையும் நிறுத்தச் சொல்லுயா…” என மகனிடம் சொல்ல ,

 

“பாட்டி நீங்களே என்கிட்ட எதுனாலும் சொல்லுங்க…. எனக்கு இப்பதான் உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்குது… வித்யா பாட்டியும் இப்படி தான் அவள உரிமையா அரட்டுறாங்க … இப்ப என் பாட்டியும் ….”

 

“ம்மா அப்ப என் பொண்ண இத்தனை நாள் விருந்தாளியா நடத்தியிருக்க…. பெரியவங்க என்ன சொன்னாலும் நன்மைக்குனு அவளுக்கு தெரியும் …. , போடா போய் அண்ணனக் கூட்டிட்டு வா … நான் வர்றவரைக்கும் அவன் தூங்கல….” என்றதும் அரவிந்தை அழைக்க மாடிக்குச் சென்றாள்.

 

விஸ்வனாதன் கனியிடம் ,

 

“ம்மா … பொண்ணுங்க அவங்க வசதிக்கு தகுந்த மாதிரி ட்ரஸ் பண்ணட்டுமே… உன்னால…” என்றவர் அதற்கு மேல் பேச இயலாது வாய் மூடிக்கொண்டார்.

 

“சொல்லு… என்னால ….. என்னடா என்னால ….” என அவர் கோபமாக பேசவும் ,

 

“ப்ச்…. விடும்மா…” என்றவர் வேறு பேச ஆரம்பித்து விட்டார்.

 

வருவின் மனதிலோ ,”பாட்டி விக்கிக் கூட உங்களப் போல எனக்கு நல்லது நல்லதுனு நிறைய சொல்றான்… நிறைய செய்றான்…. உங்க அம்மா போல என்னைய நினைச்சுக்க சொல்றான் …. எனக்கு அவனையும் பிடிச்சிருக்கு…. “விக்ரமை நினைத்து புன்னகைத் தோன்ற அரவிந்தைக் காணச் செல்ல , அங்கு திலீபன் அவனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

[the_ad id=”6605”]

 

 

“அரவிந்தா உண்மையச் சொல்லுடா நாயெல்லாம் எங்களத் துரத்தல சரி …. எங்களுக்குள்ள அடிதடி சண்டை எதுவாது போட்டுக்கிட்டோமா…. ”

 

“இல்ல இல்லனு எத்தனை தடவை டா சொல்றது…. உங்கள எல்லாம் வீடு கொண்டு வந்து சேர்க்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும் …. ”

 

சரியாக அப்போது தான் வரு அறையினுள் வர ,

” விக்ரம் கைய யாரோ .. இல்ல எதுவோ கடிச்ச மாதிரி வீங்கி போய் இருக்காம் … அது தான் … ”

 

” நான் வீட்டுக் காலிங் பெல் அடிக்க வா கேட்டதுக்கு மொட்டை மாடிக்கு போறேன்னு மச்சான் சொல்லவும் நான் வந்துட்டேன் … அதுவரை ஒன்னும் ஆகலடா … இருட்டுல மாடியில பூச்சி எதுவும் கடிச்சிருக்கும்… இங்க வந்தா எதுக்கும் டீடி போட்டு விடுறேன். இப்ப கொஞ்ச நேரம் என்னைத் தூங்க விடு….” திலீபனும் சரி என்பதாக சென்று விட்டான். ஆனால் வருவுக்குத் தான் மனது கேட்கவில்லை.

 

“அச்சோ நான் கடிச்சதுக்கூடத் தெரியலயா … இப்ப என்ன செய்ய ….” நினைத்துக் கொண்டே உள்ளே வந்த வரு… அரவிந்திடம் தகவல் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

 

விக்ரம் குளித்து முடித்து கீழே வர , அவனின் தாத்தா , இன்றைய பொன்னுருக்கும் விழாவுக்கான சிலப் பொருட்களை லதாவோடு சென்று வாங்கி வரப்பணிக்க உற்சாகத்தோடு கிளம்பி விட்டான்.

 

தாலிக்கு பொன்னுருக்கும் சடங்கானது தூத்துக்குடி நெல்லை வட்டாரங்களில் மிகவும் முக்கியமான திருமண நிகழ்வாகும் … அதற்குத்தான் அங்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

 

மணப் பெண்ணைத் தவிர மற்ற உறவுகள் கலந்துக் கொள்வர். மணமகனுக்கும் மணமகனின் தாய் மாமனுக்கும் முக்கிய பங்களிப்பு உண்டு. அனைவரும் அந்த பரபரப்பில் இருக்க , வித்யாவின் கையிலிருந்த மொபைல் வெறும் எண்களை மட்டும் தாங்கி ஒளிர்ந்தது. அவள் பள்ளி மாணவி என்பதால் அவளுக்கென்று தனி ஃபோன் கிடையாது ,லதாவுடையதை உபயோகித்துக் கொண்டிருந்தாள்.

 

பெயரில்லாது புதிய எண்ணாக இருக்கவும் விக்ரமிற்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த லதாவிடம் ,

 

“ம்மா ஏதோ புது நம்பர்” என்றுக் கொடுத்துவிட்டு அவளும் சாப்பிட அமர ,

 

” ஹலோ … ஸ்வர்ணலதா ஹியர் ..” என்று அழகிய ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்.

 

“அத்…அத்தை நான் அரவிந்த் … விக்ரம் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் … அம்மு தான் இந்த நம்பர் தந்தா….”

 

[the_ad id=”6605″]

 

 

 

“இதோ கொடுக்கிறேன் பா… அரவிந்த்” என விக்ரமிடம் தந்தவர் , சங்கர வள்ளி ஏதோ கேட்கவும் ஃபோனில் பேசிய கம்பீரத்திற்கு மாறாக மிகவும் பவ்யமாக பதிலளித்ததோடு நெல்லைத் தமிழில் அவருடன் உரையாட ஆரம்பித்தார்.

 

லதா அப்படித்தான் எங்கு யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதை அறிந்த திறமையான நிர்வாகி. ஆனால் குடும்பத்தில் அதிக படிப்பறிவில்லாத தன் மாமியாரிடத்தில் புதிதாக கற்றுக் கொள்ளும் மாணவியாகத் தான் இன்று வரை இருக்கிறார்.

 

அவர் மட்டுமல்லவே இன்று எத்தனையோ பெண்கள் படித்து பட்டம் பெற்று பெரிய பெரிய வேலைகளில் அமர்ந்திருந்தாலும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார்கள். சிலருக்கு இது அடிமைத்தனமாக தெரியலாம்…. சிலருக்கு பாசத்தின் ,அன்பின், மரியாதையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

 

அம்மாவை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டவன் ஃபோனை வாங்கி காதில் வைத்த விக்ரம் , அரவிந்திடம் பேசிவிட்டு வித்யாவிடம் தந்து விட்டு சென்று விட்டான்.

 

ஆனால் வித்யாவோ லதாவின் அரவிந்த் என்ற வார்த்தையிலயே யோசனையில் ஆழ்ந்து விட்டாள். விக்ரம் ஃபோனைக் கையில் தரவும் தான் உணர்வுக்கு வந்தவள் அதை எடுத்துக் கொண்டு அறைக்குச் செல்ல , அங்கு சங்கீதா இருக்கவும் , இதயம் படபடக்க மொட்டை மாடிக்குச் சென்று ஒரு ஓரமாக அமர்ந்துக் கொண்டு , அரவிந்த் அழைத்த எண்ணிற்கு மறுபடி அழைத்தாள்.

 

உடனேயும் எடுக்கப்பட்டு விட , “கால் எப்படியிருக்கு இப்ப பரவாயில்லயா….”ஆச்சரியப்பட்டவள்,

 

” எப்… எப்படி நான்னுத் தெரியும் …..”

 

“இதுக்குப் பேர்தான் காதல் … இது அத்தை ஃபோனா … நான் உனக்கு ஃபோன் வாங்கித் தரட்டா…. ”

 

“ஐயோ…. காலேஜ் ஜாய்ன் பண்ணதும் தான் எனக்குனு ஃபோன் வாங்கித் தாரேன்னு சொன்னாங்க … அம்மா ஃபோன்ல பேசவே ஏதோ தப்பு பண்ற ஃபீல் … ” என்றவள் , கண்ணீர் குரலில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!