Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kaatril un vaasam

காற்றில் உன் வாசம் – 9

காரிலிருந்து இறங்கிய புதியவனை அந்த vesba பெண்  அறைந்ததில் அந்த புதியவன் மட்டும் இல்லை மித்ரனும் அதிர்ந்தான். 

அந்த புதியவனோ , ஏய் அறிவிருக்கா?? எதுக்கு இப்போ அடிச்ச ???? என்றான். 

vesba பெண் , உனக்கு முதல்ல அறிவு இருக்கா ?? எதுக்கு குட்டி நாயை அடிச்ச?? என்றாள் அவனுக்கும் சற்று சளைக்காத கோவத்தில். 

புதியவன் , கேவலம் ஒரு தெரு நாய்க்காக என்னையே அடிச்சிட்டல உன்னை என்ன பண்றனு பாரு என்றான்.   

vesba பெண் , என்னது கேவலம் தெருநாயா ???? இந்த வார்த்தை சொன்னதுக்கே உன்ன கொன்னுருக்கணும் பெரியப்பா முகத்துக்காக உன்ன சும்மா விடுறேன் இல்லைனா இப்போ நீ ஜெயிலில் கம்பிதான் எண்ணிட்டு இருந்திருக்கணும் என்றாள் ஏளனமாக. 

புதியவன் , ஏய் என்ன டி ரொம்ப பேசுற போனாப்போகுது சித்தி பொண்ணாச்சேன்னு அமைதியா இருந்தா  அதிகாரம் பண்ணிட்டு இருக்க ??? பொண்ணா லக்ஷணமா வீட்டுல அடக்கஒடுக்கமா இல்லாமல் இப்படி ரோட்டுல திரிஞ்சிட்டு கண்டதுக்காக என்னை அடிக்கிற idiot என்றான் எரிச்சலுடன்.

Vesba பெண் , விதுன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்று கத்தினாள். 

அதுவரை காருக்குள்  ஓட்டுனர் இருக்கையில் ஓட்டுனர் உடையில் இருந்த பெரியவர் நிலைமை கை  மீறுவதை உணர்ந்து வேகமாக இறங்கி வந்தார் . 

வந்தவர் , பாப்பா கோவப்படாதீங்க ஏதோ சின்ன பையன் தெரியாம பண்ணிட்டான் எதுவாயிருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் பாப்பா என்றார் பணிவுடன். 
அதுவரை கோபத்துடன் கத்திக்கொண்டிருந்தவள் அவர் வந்து சொன்னதும் 

vesba பெண் , சாரி சந்தானம் தாத்தா நீங்க முன்னாடி போங்க நான் என்னோட வண்டியில வரேன் என்றாள் சற்று கோபம் தணிந்தவளாக. 

சந்தானம் , சரி பாப்பா என்றவர் கையோடு விதுனையும் அழைத்து சென்றார்.தணியாத கோபத்துடன் விதுனும் அவருடன் சென்றான். 

இதுவரை நடந்ததை பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்த மித்ரன் அந்த vesba  பெண் தனது அருகில் வருவதை பார்த்து , என்ன என்றான் கேள்வியாக. 

vesba பெண் , ஹ்ம்ம் பப்பி என்றாள். 

மித்ரன் , என்னது ??? என்றான் கேள்வியாக .  

vesba பெண் , உங்க கையில பப்பி இருக்கு அதை என்கிட்ட தாங்க என்றாள் . 

மித்ரன் , ஓ சாரி இந்தாங்க என்றவன் அவளது கைகளில் பப்பியை கொடுத்தான். 

அதை வாங்கியவள் , என்னோட பெயர் பாப்பா இல்லை என்றவள் நிறுத்த “சாய்ப்ரியா” என்று முடித்தான் மித்ரன் . 

பக்கத்தில் கேட்ட  ஹாரன் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்த மித்ரன் தன் மனதிற்குள் , எவ்ளோ அழகான நாட்கள் ஆனால் அவளுடைய குணம் அறிந்தும் தப்பாக பேசிவிட்டோமே என்னை மன்னிப்பாளா என்னோட சபி என்று வருந்தி கொண்டிருந்தான். 

அதே நேரம் அங்கு பள்ளியில் ப்ரியாவுக்கு 
CEO ஆபீஸில் இருந்து மெயில் வந்திருந்தது . மாலை 3.30 மணிக்கு meeting என்று. 

கணக்கு பிரிவின் சம்மந்தமான meeting என்பதால் புனிதாவும் உடன் சென்றாள். மீட்டிங் முடிவதற்கு 4.30 மணி ஆனதால் புனிதாவை அவளது வீட்டில் விடுவதற்காக புனிதாவின் தந்தை வீட்டிற்கு முன் காரை நிறுத்தினாள் பிரியா.

புனிதாவின் அண்ணன் வெளிநாட்டில் செட்டில் ஆனதால் தந்தையை தனியாக விட மனமில்லாமல் தந்தை வீட்டிலே தங்கிவிட்டால் புனிதா. கார்த்திகேயனுக்கு யாருமில்லா  காரணத்தால் அவனும் சம்மதித்துவிட்டான். 

கார் வீட்டின் வாசலில் நிற்கவும் இறங்கிய புனிதா , உள்ள வாங்க mam என்றாள் .

அவளை முறைத்த பிரியா , இது ஸ்கூல் இல்ல வீடு இங்க madam தேவையில்லை என்றாள் .. 

அதற்கு புனிதா சிரித்துவிட்டு , சரி டி நிறைய பேசாத உள்ள வா என்றாள். 

சற்று தயங்கிய பிரியா , இல்லை டி  இன்னொரு  நாள் வரேன் என்று தயங்கி தயங்கியே கூறினாள் . 

புனிதா , எதுக்கு தயங்குற என்னாச்சு? நான் கூப்பிடலனாலும் நீயே உள்ள போயிருப்ப இப்போ என்ன?? என்றாள் . 

பிரியா, சற்று யோசித்தவள் மதியம் அரவிந்த் கால் செய்து கூறிய விஷயத்தை கூறினாள் . 

பின்னர் , எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் இப்போ இருக்குற நிலைமையில எது வேணுனாலும் நடக்கலாம்  புனி என்றாள். 

புனிதா , ஹ்ம்ம் எனக்கும் மித்து அண்ணா கால் பண்ணாங்க அவங்களோட குரலே சரியில்லை ஹ்ம்ம் நீ முதல்லயே சொல்லிருந்தாள் நான் கார்த்திக் கூட வந்திருப்பேன்ல சரி நீ கிளம்பு என்றாள். 

பிரியா , மா ……. மித்ரன் உனக்கு கால்  பண்ணாறா???  என்றாள் 

பிரியா எதையோ கூறவந்து மறைத்தது போல் இருந்தது புனிதாவுக்கு பின்னர் நம்மகிட்ட எதை மறைக்கப்போறா நம்மளோட கற்பனையா இருக்கும் என்று அதை  விடுத்து ப்ரியாவிடம் ,’ஆமா கால் பண்ணாரு first உனக்கு தான் பண்ணிருக்காரு நீ எடுக்கலைனு எனக்கு பண்ணாங்க’ என்றாள். 

பிரியா , ஓஹ் ஹோ சரி டி நான் கிளம்புறேன் என்று காரை start செய்தால். புனிதாவும் சரி என்று கூற வண்டி கிளம்பியது. 

வண்டி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அப்போது மணி 5 .அந்த தெருவின் வளைவில் திரும்பும் போது ஒரு பெண்ணை ஒரு கும்பல் வேனுக்குள் ஏற்ற முயல்வது தெரிந்தது.வண்டியை அவர்களின் அருகில் சென்று நிறுத்தினாள். அப்போது தான் தெரிந்தது அது மித்ரா தேவி என்று.காரின் டாஷ்போர்டில் இருந்த தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிழே இறங்கினாள். 

ப்ரியாவின் வண்டி அவர்களின் அருகில் வரும்போதே கவனித்துவிட்ட கும்பல்  மித்ராவை வேகமாக வேனில் ஏற்றிவிட்டு இவளிடம் திரும்பியது. 
பிரியா அவர்கள் முன் துப்பாக்கியை நீட்டி ‘ஒழுங்கா அந்த பெண்ணை  என்கிட்ட ஒப்படைச்சிருங்க இல்லை ஒருத்தனும் உயிரோட இருக்கமாட்டீங்க’ என்றாள் ஆவேசத்துடன். 

முதலில் அவளை பார்த்து பயந்தாலும் அவளால் என்ன செய்துவிடமுடியும் என்று தோன்ற அந்த கும்பலில் ஒருவன் , இந்தாம்மா என்ன பூச்சாண்டி காட்டுறியா ?? பேசாம போயிடு அதுதான் உனக்கு நல்லது என்று மிரட்டினான். 

அப்போது பிரியா மேல் நோக்கி சுட்டாள் , என்ன டா சுட மாட்டேன்னு நினைச்சீங்களா??? கொன்றுவேன் மரியாதையா அவளை இறக்கிவிடுங்க என்றாள். அதே சமயம் இன்னொரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது.. 

பிரியா சுதாரிக்கும் முன்பே அவளை பிடித்து அவளது கையிலிருந்த துப்பாக்கியை பிடிங்கினான் அந்த கும்பலின் தலைவன். 

தலைவன் , ஏய் ! நீ என்ன எத்தனை தடவை அடிச்சாலும் சாகாமல் திரும்ப திரும்ப பொழச்சி வந்திட்டே இருக்க ஹான் …. என்றான்.

ப்ரியா , உன்னால என்னை ஒன்னும் பண்ணமுடியாது டா என்றாள் கோவமாக .

தலைவன் , என்னடி திமிரா?? உன்னோட ரெண்டு கையையும் நாலு பேரு பிடிச்சிருக்காங்க நான் இப்போ இந்த கத்தியால குத்த போறேன் இனி எப்படி பேசுறேன்னு பார்க்கிறேன் என்று கூறியவன் கத்தியை கொண்டு அவளை குத்த போக அப்போது எங்கிருந்தோ ஒரு கட்டை பறந்து வந்து அவன் கையை தட்டிவிட கத்தியை கீழே போட்டான். 

எல்லாரும் கட்டை வந்த திசை நோக்கி பார்க்க அங்கே கார்த்திகேயன் பைக்கில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். 

கார்த்திக் , ஏன்டா எத்தனை தடவை அடிவாங்கினாலும் திருந்தமாட்டியா ??விடுங்கடா அவளை என்றவன் வேக எட்டுக்கள் வைத்து அவர்கள் அருகில் வந்தான். 

கார்த்திக்கை பார்த்த அந்த கூட்டத்தின் தலைவன் சற்று நடுங்கித்தான் போனான். பின்னர் தையிரியத்தை வரவழைத்து கொண்டு தன் சகாக்களிடம் ,’அவனையும் பிடிங்க டா இன்னைக்கு ரெண்டு பேரையும் போட்டு தள்ளிருவோம்’ என்று கட்டளையிட அவனை அடிக்க சென்றவர்கள் அடிவாங்கி தரையில் உருண்டனர். 

அப்போது வேனில் இருந்த மித்ரா கீழே இறங்க அவளை கடத்த வந்த கும்பல் அவளை அடிக்க வர அதை பார்த்த பிரியா அவர்களை தடுக்க அப்போது அந்த கூட்டத்தின் தலைவன் கீழே கிடந்த கத்தியை எடுத்து கொண்டு ப்ரியாவை குத்த வேகமாக ஓடி வந்தான். 

அப்போது எங்கிருந்தோ வந்த புனிதா அவனை தடுக்க அவளை தள்ளிவிட்டு விட்டு ப்ரியாவின் வயிற்றில் கத்தியால் குத்தினான்.

புனிதா , ஐயோ ப்ரியாயாயாயா ………..

கார்த்திக் , ப்ரியாயாயாயா………..   

மித்ரா , அண்ணிணிணிணி………..   

இந்த காட்சியை தான் ப்ரியாவை தேடி பள்ளிக்கு சென்று அதன்பின் CEO ஆபீஸ் சென்று கடைசியாக இங்கு வந்த மித்ரன்  கண்ணில் விழுந்தது மித்ரனை பார்த்த அந்த கும்பல் ஆளுக்கு ஒரு திசையில் ஓட ,

பிரியா , மாமாமாமாமமாமா……..என்று கத்தினாள்.

மித்ரனுக்கு ஒரே ஒரு நொடி அதிர்ச்சி பின்னர் வேகமாக அவள் அருகில் சென்றவன் அவளை தன் கைகளில் அள்ளி எடுத்தான்.
பின்னர் அவளை ப்ரியாவின் காரில் படுக்க வைத்து கார்த்திக்கை வண்டியை எடுக்க சொன்னான். 

வண்டியில் ஏறும் முன் புனிதாவை ஒரு பார்வை பார்த்தான். அதில் மித்ராவை அழைத்து செல் என்ற கட்டளை  பொதிந்திருந்தது. 

வண்டியில் ஏறிய மித்ரன் ப்ரியா மயக்கத்திற்கு செல்வதை உணர்ந்து அவளை மடியில் கிடைத்தி அவளது  கன்னத்தை தட்டினான் அவனது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது .
மிகவும் சிரம பட்டு கண்களை திறந்தாள் 
பிரியா ,    மா…..மா மா….மா நா….ன்…..என்…..னை……….

மித்ரன் , என்னடா என்று பதிலளித்தவன் கார்த்திக்கை பார்த்து , வேகமா போடா இரத்தம் ரொம்ப வருது என்றான். கார்த்திக்கின் நிலையோ இன்னும் மோசமாக இருப்பதை உணர்ந்தான்.
அப்போது பிரியா மித்ரனின் சட்டையை பற்றி இழுக்க என்ன என்று கேட்டான். 

பிரியா , மா…….மா…..மா……மா…நா….ன்……. என்று அவள் ஏதோ சொல்ல தவிக்க அதை புரிந்துகொண்ட 

மித்ரன் , எனக்கு தெரியும் டா நீ…நீ……. “சாய்பிரியா இல்லை சாய்லக்ஷ்மி” என்று அவன் கூறவும் ஹாஸ்பிடல் வாசலில் கார் நிற்கவும் சரியாக இருந்தது. 

ஸ்ட்ரெச்சரில் அவளை படுக்கவைத்து அவளுடன் மித்ரனும் கார்த்திக்கும் சென்றனர். 

மனநிம்மதியுடன் கண்களை மூடினாள் “சாய்லஷ்மி”.  

தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!