Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi aval

காவலனின் கைதி அவள்-15 (2)

காவலனின் கைதி அவள்-15 (2)

என்னடா இப்பவே கிளம்பிட்டீங்களா?”, என்றார் மீனாட்சி வருத்தமாக.

 

சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு, சாப்பிட்டு கிளம்புங்க”, என்றார் வாணி.



Advertisement

 

இல்ல, நாங்க போற வழியில பார்த்துக்குறோம்”, என்றான் விக்ரம் முடிவாக.

 

Advertisement

ம்ம்.. சரி அண்ணா. ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு. பேக் பண்ணி தரேன், போற வழியில சாப்பிட்டு போங்க”, என்றாள் ஸ்ரீ வேகமாக.

Advertisement

 

ஸ்ரீ, அமருக்கு தனியா பேக் பண்ணு”, என்றான் ராகவ்.

 

Advertisement

சரி அண்ணா”, என்று மிருணா மற்றும் சங்கவியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

 

எங்க தங்கச்சி எள்ளுன்னா எண்ணையா நிக்கிறா’, என்று மனதிலேயே இரு அண்ணன்மார்களும் மெச்சி கொண்டனர். அப்பா மிருணாவ வெளிய விடாதீங்க. அவன் ஊட்டி வர ஐடியால இருக்கான்”, என்றான் நிதானமாக.

 

என்னடா சொல்ற ?”, என்று நால்வரும் பதறினர்.

 

ஆமாம், இன்ஃபர்மேஷன் இப்ப தான் வந்தது”, என்றான் ராகவ்.

 

சரிப்பா, நாங்க பார்த்துக்குறோம்”, என்றனர் நால்வரும்.

 

ம்ம்.. சரி”, என்றனர். மூவருக்கும் பேக் செய்ததை வெளியே எடுத்து வந்தனர். ஆண்கள் மூவரின் முகத்திலும் எந்த பதட்டமும் எதுவும் தெரியவில்லை. அதனால் சங்கவியாலும் மிருணாவாலும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

ஆறுமுகம் அங்கிள்”, என்று சத்தம் போட்டான்.

 

சொல்லுங்க பெரிய தம்பி”, என்றார் பவ்யமாக வந்து.

 

அங்கிள், என்னைய விக்கின்னு  கூப்பிடுங்கன்னு எத்தன தடவ சொல்றது?”, என்றான் சலிப்புடன்.

 

தலையை சொரிந்து கொண்டே, பழகுகிருச்சு தம்பி”.

 

சரி, அத விடுங்க. நீங்க அமர போற வழியில இருக்க பஸ் ஸ்டாப் கிட்ட  இறக்கி விடுங்க. இன்னொரு கார் வரும் அதுல ஏறிப்பான். அவன ஃபாலோ பண்ணுங்க. அடுத்து இன்னொரு பஸ் ஸ்டாப்ல இறங்கிப்பான். இன்னொரு கார்ல ஏறுவான், அதையும் ஃபாலோ பண்ணிக்கிட்டே போங்க. கோவை ஏர்போர்ட்டுக்கு போய் சேர்ந்ததுக்கு அப்பறம், அவன் கிட்ட  எதுவும் பேசக்கூடாது. அப்படியே பேசுனாலும் போன்ல பேசுங்க. அவன் ஃப்ளைட் ஏறி கிளம்புனதுக்கு அப்பறம் வாங்க”, என்றான் தீவிரமாக சொல்லிக் கொண்டே அவர் பக்கெட்டில் இரண்டு ஆயிரம் பணம் வைத்தான்.

 

எதுக்கு தம்பி?”, என்றார் பதறி.

 

சாப்பிட, வேற ஏதாச்சும் வாங்க வச்சுக்கோங்க, பத்திரமா போயி விட்டுட்டு வாங்க”.

 

சரி தம்பி, நான் போய் கார ரெடி பண்றேன்”, என்று வெளியே சென்றார்.

 

அமர், நீ முதல்ல கிளம்பு. கொஞ்ச நேரத்துல நாங்க கிளம்புறோம்”, என்றான் ராகவ்.

 

சரி”, என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு ஸ்ரீ மற்றும் மிருணாவின் பக்கத்தில் வந்தான். மற்றவர்கள் இவர்களை கவனிக்காமல் வேறு பேசிக் கொண்டிருந்தனர். ஸ்ரீ அழுகையுடன்  அணைத்துக் கொண்டு, பத்திரமா போயிட்டு வாங்க, போனதும் போன்ல இருந்து பண்ணாம, எஸ்டிடி பூத்துல்ல இருந்து பண்ணுங்க”, என்றாள் கலங்கிய குரலில்.

 

ஹனி, இப்படி அழுதா நான் எப்படி கிளம்ப முடியும்?”, என்று விலகி கண்ணீரைத் துடைத்தான்.

 

எங்க இருந்தாலும் கால் பண்ணுங்க ப்ளீஸ்”, என்றாள் அழுகையுடன்.

 

ஹேய்! அழக் கூடாது டா, கண்டிப்பா கால் பண்றேன் சரியா, மிருணா பத்திரம்”, என்றான் கண்ணீரை அழுத்தித் துடைத்து.

 

அத நீங்க சொல்லவே வேணாம். இவள நான் பார்த்துக்குறேன்”, என்றாள் உறுதியாக.

 

குட்”, என்று நெற்றியில் இதழ் பதித்து விட்டு விலகி,பாப்பா”, என்றான்.

 

அண்ணா, ஏதாச்சும் ப்ராப்ளமா? எதுக்கு இத்தன கார் மாத்தி மாத்தி”, என்றாள் குழப்பமாக.

 

இல்லடா, எந்த துருப்புச் சீட்டும் நாம விடக் கூடாது. இது இங்க வரதுக்கு முன்னாடியே போட்ட ப்ளான் தான்”, என்று அவள் தலை முடியை கோதினான்.

 

சரி, பத்திரமா போயிட்டு வா. மிஸ் யூ அண்ணா”, என்றாள் அழுகையுடன் அணைத்துக் கொண்டு.

 

அச்சோ! நீ எங்க மிருணாவே இல்ல போ. அவளுக்கு அழவே தெரியாது. இவ எப்ப பாரு அழுதுட்டே இருக்கா”, என்று பேச்சை மாத்தி அவள் தலையில் லேசாக கொட்டினான்.

 

அமர், எனக்கு தலையில்ல கொட்டுனா பிடிக்காதுன்னு தெரியுமில்ல”, என்றாள் கோபமாக.

 

என் தங்கச்சி மறுபடியும் வெளிய வந்துட்டா. இங்க பாருடா என்னைய புரோடக்ட் பண்ணிக்க ஏற்பாடு பண்ணியாச்சு. தேவை இல்லாம மனசை போட்டு குழப்பிக்காத. அப்பா அம்மா கிட்ட சொல்லிடு, நான் கிளம்புறேன்”, என்று நெற்றியில் இதழ் பதித்து விட்டு விலகினான். விக்ரம் மற்றும் ராகவை அணைத்துவிட்டு கிளம்பினான்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவன் கிளம்பிய சிறிது நேரத்தில்,சோமுப்பா வாங்க நாம கிளம்பலாம்”, என்றான் விக்ரம் மணியை பார்த்தபடி.

 

கண்ணா”, என்றனர் அம்மாக்கள் இருவரும்.

 

என்னம்மா?”.

 

பிள்ளைங்க கிட்ட பேசாம, ரெண்டு பேரும் கிளம்புறீங்க”, என்றார் சக்கரவர்த்தி.

 

ம்ம்.”, என்று பெருமூச்சுடன் மூவரின் பக்கத்தில் சென்றான். ராகவும் அவனுடன் வந்தான்.சங்கவி சண்ட போடாத, ஜாலியா இரு டா”, என்றான் விக்ரம்.

 

ம்ம்.. சரி அத்தான்”.

 

சங்கு, நீ என்ஜாய் பண்ண தான் வந்திருக்க. உன் கூட ரெண்டு பேர் இருக்காங்க. அவங்க கூட சேர்ந்து நல்லா என்ஜாய் பண்ணனும் சரியா”, என்றான் ராகவ்.

 

ம்ம்.. கண்டிப்பா அத்தான்”, என்றாள் சிரிப்புடன்.

 

விக்ரம் லேசாக இருமிக்கொண்டே, சங்கவி, தண்ணி கொண்டு வா”, என்றான்.

 

இதோ அத்தான்”, என்று உள்ளே போக போனாள்.

 

ஹாட் வாட்டர் டா”.

 

ம்ம்.. சரி அத்தான்”, என்று உள்ளே சென்றாள்.

 

ஸ்ரீ, உனக்கு நாங்க சொல்ல தேவையே இல்ல. எங்க அனுபவமே உன் அறிவ வளத்திருக்கும். பத்திரமா இரு, நைட் ஜாக்கி வீட்டை பார்த்துப்பான்”, என்றான் விக்ரம்.

 

நாங்க எள்ளுனா, நீ எண்ணெயா நிப்ப. உனக்கு சொல்ல தேவையில்ல, இருந்தாலும் சொல்றேன், வெளிய போறப்ப ஜாக்கிரதையா இரு”, என்றான் ராகவ்.

 

சரி அண்ணா, நான் பார்த்துக்குறேன்”, என்றாள் இருவரையும் அணைத்து உறுதியாக.

 

சரி, இப்ப வா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்”, என்று ராகவ் இழுத்து சென்றான்.

 

விக்ரம் மிருணாவை பக்கத்தில் இருக்கும் அறைக்கு இழுத்துச் சென்று,மிரு நான் சொல்றத கவனமா கேளு, வீட்டை விட்டு வெளிய போகாத. உனக்கு பாதுகாப்பை பலப்படுத்தியாச்சு. இருந்தாலும் நீயும் கேர்ஃபுல்லா இருக்கணும். நைட்டு பல்கெனில உட்காராத. ஈவ்னிங் ஆறு மணிக்கு மேல தோட்டத்துல கூட உட்கார வேண்டாம்”, என்றான் படபடவென்று.

 

ஏதாச்சும் ப்ராப்ளமா?”, என்றாள் குழப்பமாக.

 

நான் எப்ப அப்படி சொன்னேன்?”, என்றான் அவள் முகத்தை பார்த்து.

 

அப்புறம் ஏன் இவ்ளோ ஏற்பாடு? என்னாச்சு?”, என்றாள் லேசான பயத்துடன்.

 

ஏய்!;எதுக்கு பயப்படுற? உன் மாமா இருக்குறப்ப பயமேன்”, என்றான் குறும்பாக.

 

இல்ல, சம்திங் ராங். என்னாச்சு? ஏன் இவ்ளோ அவசரமா கிளம்புறீங்க?”, என்றாள் பயத்துடன்.

 

எனக்கு கேஸ் ப்ராப்ளம், அதான் ராகவையும் இழுத்துட்டு போறேன்”, என்றான் பொறுமையாக.

 

என்கிட்ட பொய் சொல்றீங்களா?”, என்றாள் கூர்மையான பார்வையுடன்.

 

உன்கிட்ட பொய் சொல்லி ஒன்னும் ஆக போறது இல்ல, பத்திரமா இரு டைமாச்சு”, என்று மணியை பார்த்துவிட்டு அணைத்தான்.

 

மிருணாவும் அவனிடமிருந்து விலகாமல் அவன் மார்பிலே  புதைத்தாள். என்னாச்சுடா?”, என்றான் அவள் தலை முடியை கோதியபடி.

 

எனக்கு என்னனு தெரியல மனசு படபடப்பா இருக்கு”, என்றாள் பயத்துடன். விக்ரம் இறுக்கமாக அணைத்தான். அவன் அணைப்பில் அவள் உடல் வலித்தது. இது இப்போதைக்கு தேவைப்பட்டதால் அமைதியாக இருந்தாள்.

 

விக்கி”, என்றான் ராகவ் கதவை லேசாக தட்டி.

 

வரேன் டா”, என்று விலகி,நான் சொன்னத நியாபகம் வச்சுக்கோ டா”, என்று கன்னத்தை தட்டி விட்டு வெளியே வந்தான். அவன் பின்னாடியே மிருணாவும் வந்தாள்.

 

சங்கவிக்கு இதை பார்த்ததும் கோபம் வந்தது, எதுவும் சொல்ல முடியாமல் அடக்கிக்கொண்டு,அத்தான் தண்ணி”, என்று தந்தாள்.

 

சங்கவி, அத ஃபிளாஸ்குல ஊத்தி தரியா?”, என்றான்.

 

சரி அத்தான்”, என்று அவள் செல்வதற்கு முன், மீனாட்சி ஃபிளாஸ்குடன் வந்தார். இதுல காப்பி இருக்கு, வேணும்னா குடிங்க டா”, என்று  தந்தார்.

 

சரிமா”, என்றனர் இருவரும். பிறகு அம்மாக்கள், அப்பாக்கள், ஸ்ரீயையும், சங்கவியையும் அணைத்து விடுவித்து வெளியே வந்தனர்.

 

ஜாக்கி”, என்றான் விக்ரம் சத்தமாக. ஜாக்கி வேகமாக ஓடி வந்தது. ஜாக்கி நாங்க கிளம்புறோம், இனி இந்த வீடு உன் பொறுப்பு”, என்றான் உட்கார்ந்து அதன் தலையை கோதி.

 

ஜாக்கி, நீதான் இனி காவலுக்கு இங்க”, என்றான் ராகவ் மறுபக்கம் உட்கார்ந்து அதன் உடலை தடவியபடி.

 

ஜாக்கி தலையை ஆட்டி குறைத்தது. இருவரும் அதனை அப்படியே சேர்ந்து அணைத்து விட்டு, காரில் பின்னால் ஏறினர். அப்பாக்கள் இருவரும் முன்னால் உட்கார்ந்தனர். “பாய் “, என்று கிளம்பி  கிளம்பினர்.

 

சென்னை:

 

குரு, ஊட்டிக்கு கிளம்ப ஏற்பாடு பண்ணிட்டியா?”, என்றான் சிவா.

 

அண்ணே, எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்”.

 

சரி, பன்னிரெண்டு மணிக்கு மேல கிளம்பலாம்”.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

சரி அண்ணே!”.

 

சிவா ஊட்டி வருவானா? விக்ரம் போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? ராகவ் மற்றும் விக்ரம் போனில் பேசிய அந்த நபர்கள் யார்? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…

 

கைதியின் சிறை தொடரும்…………………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!