Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi aval

காவலனின் கைதி அவள் -16 (2)

காவலனின் கைதி அவள்-16(2)

அப்புறம் என்ன சிவா சார்? மிருணா உங்க கண்ணுல மண்ணை தூவிவிட்டு  போயிருக்காங்க. அவங்களுக்கு தெரியாதா? அவங்கள கண்டுபிடிக்க அவங்க ஃப்ரெண்ட் கிட்ட போவீங்கன்னு. அப்புறம் எப்படி சுதா கிட்ட சொல்லிட்டு போவாங்க“, என்றான் கோவமாக.

 

நீ சொல்றது சரிதான் டா போலீஸு. நான் இத யோசிக்கவே இல்ல, ஆனா அவ அண்ணே அமர் மேல எனக்கு சந்தேகம் இருக்கு“, என்றான் யோசனையுடன்.



Advertisement

 

சிவா சார், மறுபடியும் தப்பா யோசிக்கிறீங்க பார்த்தீர்களா. உங்க கேஸை பத்தி விசாரிக்க ஆரம்பிக்கும் போது எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன். உங்க முன்னாடி தான் அவருக்கும் எனக்கும் இனி எந்த உறவும் இல்லைன்னு மிருணா சொல்லிருகாங்க. அப்புறம் எப்படி  இந்த கேஸ்ல அமர் இருப்பாரு?”, என்றான் தீவிரமாக.

 

Advertisement

அண்ணே, இவன் சொல்றது சரிதான்னு தோணுது“, என்றான் யோசனையுடன்.

Advertisement

 

ம்ம். ஆமாண்டா சுதாவுக்கு போட்ட ஆளுங்கள வர சொல்லிடு, அப்புறம் அமருக்கு போட்டுருக்க ஆளையும் வர சொல்லிடு“.

 

Advertisement

அண்ணே! சுதாவுக்கு போட்டா ஆள உடனே வர சொல்லிடுறேன். அமர் இன்னும் சென்னைக்கு வரல, அதனால அவன ஃபாலோ பண்ணிட்டே இருக்கட்டும் பாத்துக்கலாம்“.

 

ம்ம்சரி போலீஸ். நான் ஆள அனுப்பி தேட சொல்லுறேன்“.

 

சரி சிவா சார், எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. ஏதாச்சும் உதவி வேணும்னா கூப்பிடுங்க“.

 

சரியா கமிஷனர் நானும் கிளம்புறேன். தேவப்பட்டா கூப்பிடுறேன் போலீஸு, வா குரு“, என்று அழைத்து சென்றான்.

 

ஸ்சப்பாஇவன் வந்தாலே மூச்சு கூட விட முடியல ராகவ். என்ன கலவரம் வருமோன்னு பயமா இருக்கு“, என்றார் பெருமூச்சுடன்.

 

சார் நீங்க கமிஷனர், இவன பார்த்து இப்படி பயப்படுறீங்க? சரி உங்க கிட்ட பேசுறது வேஸ்ட் தான், நான் கிளம்புறேன்“, என்று கிளம்பினான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

ஊட்டி:

 

அத்த, மிருணாக்கு என்ன பிரச்சன? அத முதல்ல சொல்லுங்க“, என்றாள் சங்கவி மீனாட்சி மற்றும் வாணியிடம்.

 

இப்பவே சொல்லனுமா? இல்ல அப்புறம் சொல்லுட்டா?”, என்றார் வாணி.

 

அத்த, இப்பவே சொல்லுங்க. ஸ்ரீயும் மிருணாவும் ரூம்ல கேம் விளையாடிட்டு இருக்காங்க“.

 

சரி, இங்க வந்து உட்காரு“, என்று டைனிங் டேபிளில் மீனாட்சி உட்கார வைத்து தானும் பக்கத்தில் உட்கார்ந்தார். வாணி மறு பக்கத்தில் உட்கார்ந்தார். மிருணா வாழ்வில் சிவா செய்யும் அட்டகாசத்தை இருவரும் சொல்லி முடித்தனர்.

 

இவங்கலாம் என்ன லூசா? மிருணா அழகிதான் ஒத்துக்குறேன். ஆனா அவள விட எத்தனையோ அழகிங்க இந்த உலகத்துல இருக்காங்க, அந்த ரவுடி இவள தேடி அலையிறான்னு நம்புறாங்க, நம்புற மாதிரியா இருக்கு, இவங்க இப்படி வெள்ளந்தியா இருக்காங்களே!’, என்று மனதிலேயே புலம்பினாள்.

 

பார்த்தியா சங்கு, அவ வாழ்க்கைய பத்தி  கேட்டு உனக்கே கஷ்டமா இருக்குல்ல. அந்த நடு ராத்திரியில, அவள துரத்திக்கிட்டு வந்த ரவுடிங்க கிட்ட இருந்து நம்ம விக்கியும் ராக்கியும் தான் காப்பாத்தி டிரெயின் ஏத்தி விட்டாங்க“, என்றார் வாணி பெருமூச்சுடன்.

 

அந்த நடு ராத்திரி அவ தப்பிச்சு வந்தது ரொம்ப பெரிய விஷயம் தான். அவள அந்த சம்பாவத்த மறக்க வைக்கனும், அத விட்டுட்டு இவங்க அதே விஷயத்தையே நினைச்சுட்டு இருக்காங்க. இதுல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியலையே. இவ்ளோ அறியாமையோட இருக்காங்களே‘, என்று மனதில் நினைத்துக் கொண்டு இருவரையும் கவலையாக பார்த்தாள்.

 

ஸ்ரீ மற்றும் மிருணா பேசிக் கொண்டே கீழே வந்தனர்.உனக்கு தெரிஞ்ச மாதிரி கட்டிக்காத நாங்க போறோம்“, என்று மீனாட்சி வாணியை அழைத்துச் சென்றார்.

 

ஏய்! சங்கு ஏன் தனியா உட்கார்ந்து இருக்க?”.

 

சும்மாதான் ஸ்ரீ“, என்று எழுந்து அவர்கள் பக்கத்தில் வந்தாள்.

 

மூவரும் சோபாவில் உட்கார்ந்தனர். மிருணா டிவியை ஆன் செய்து செய்தியை போட்டாள். சிவாவின் குடோன் எரிந்தது பற்றிய செய்தி வந்தது. ஏய்! உன் அண்ணாங்க நேத்து அவசரமா கிளம்புனதுக்கு இது தான்டி காரணம். எருமைங்க ஏதாச்சும் பண்ணாம இருக்கானுங்களா பாரு“, என்றாள் எரிச்சலுடன்.

 

[the_ad id=”6605″]

 

 

 

ஓய்! என்னடி? என் அண்ணாவையே திட்டுற“, என்றாள் பொய்யான கோபத்துடன்.

 

சங்கவி இருவரின் முகத்தையும் பார்த்துக்கொண்டே, ஏன் ஸ்ரீ கோவப்பாடாம இருக்கா? இது மட்டும் காரணம் இல்ல மிருணா இங்க இருக்க‘, என்று நினைத்துக்கொண்டாள்.

 

அப்புறம் என்னடி சும்மா இருக்காங்களா பாரு. திட்டமா கொஞ்ச சொல்றியா?”, என்றாள் எரிச்சலுடன்.

 

ஸ்ரீ சிரிப்புடன், சரி சரி எனக்கு காபி போட்டு தரியா?”, என்று பேச்சை மாற்றினாள்.

 

சரி, சங்கு உனக்கு?”.

 

ம்ம் எனக்கும் வேணும். நானும் ஸ்ரீயும் பின்னால இருக்க தோட்டத்துல இருக்கோம். நீ வா, நாம மூணு பேரும் அங்க உட்கார்ந்து அரட்டை அடிக்கலாம்“, என்றாள் சிரிப்புடன்.

 

ஓகே! டன்“, என்று சிரிப்புடன் உள்ளே சென்றாள்.

 

சங்கவி ஸ்ரீயை இழுத்துக்கொண்டு பின்னால் சென்று,உண்மைய சொல்லு ஸ்ரீ, மிருணாக்கும் விக்கி அத்தானுக்கும் என்ன உறவு?”, என்றாள் கோவமாக.

 

எதுவும் இல்லையே சங்கவி. என் நாத்தனார் அவ்வளவுதான்“, என்றாள் வேகமாக.

 

ஸ்ரீ, நான் உங்க கூட சின்னவயசுல இருந்து பழகிட்டு இருக்கேன். எனக்கு தெரியாதா? அத்தான் ஏன் மிருணா கூட ரொம்ப க்ளோசா பழகுறாங்க? நீங்க யாருமே அத பெருசா எடுத்துக்காம இருக்கீங்க, அப்ப உங்களுக்கு ஏதோ விஷயம் தெரியும், சொல்லு“, என்றாள் கோபமாக.

 

அதெல்லாம் ஒன்னும் இல்ல சங்கு, நீ  தேவையில்லாதத மனசுல போட்டு குழப்பிக்காத“.

 

ஏன் டி! உனக்கு நான் அவ்ளோ வேண்டாதவளா ஆயிட்டேனா?”, என்றாள் கலங்கிய குரலில்.

 

ஹேய்! அப்படி எல்லாம் இல்ல“, என்று விக்ரம் அமரிடம் சொன்ன காதல் கதையை அப்படியே சொன்னாள். ஞாபகப்படுத்த முயற்சி செய்தால் ரிஸ்க் என்பதை சொல்லாமல் விட்டாள்.

 

.. இதுதான் விஷயமா? அத்தானுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்ல“, என்றாள் உண்மையான வருத்தத்துடன்.

 

சங்கவி, உனக்கு அண்ணா மேல…”, என்றாள் தயங்கியபடி.

 

எனக்கு அத்தான பிடிக்கும் ஸ்ரீ, அதுக்காக அவர அடையானும்னுலாம் நான் நினைச்சது இல்ல. இன்னும் சொல்லா போனா லவ் கூட இல்ல“, என்றாள் சிரிப்புடன்.

 

அப்பாஇத சொன்னா உனக்கு கஷ்டமா இருக்குன்னு நினைச்சு தான் சொல்லல“.

 

கஷ்டமா தான் இருக்கு, அத்தான் கஷ்டப்படுறதப் பார்த்து. தன்னோட காதலிக்கு தன்னையே ஞாபகம் இல்லன்னு நினைச்சு எவ்ளோ கஷ்டப்படுவாங்கல்ல“, என்றாள் வருத்தத்துடன்.

 

ம்ம்ஆமா சங்கு, அதான் எனக்கும் கஷ்டமா இருக்கு“.

 

[the_ad id=”6605″]

 

 

 

மிருணா காபியுடன் வந்தாள். மூவரும் காபியை குடித்து கொண்டு அரடை அடித்தனர். மிருணாவுக்கு எப்படியாச்சும் அத்தான ஞாபகப்படுத்தனும், அவகிட்ட இந்த விஷயத்த சொல்றதுதான் நல்லது, ஸ்ரீ இல்லாதப்ப இந்த விஷயத்த சொல்லிடணும்‘, என்று முடிவெடுத்தாள் சங்கவி.

 

சங்கவி மிருணாவிடம் சொல்வதால் என்ன நடக்கப்போகுது? குரு அந்த நான்கு ரவுடிகளை எதற்காக விட சொன்னான்? அவர்களிடமிருந்து என்ன கண்டுபிடிக்க போகிறான்? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்……………………..

 

கைதியின் சிறை தொடரும்…………………….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!