Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi aval

காவலனின் கைதி அவள் -20

காவலனின் கைதி அவள்-20

“குரு அந்த சிபிஐ பத்தி விசாரிக்கச் சொன்னேனே!!  ஏதாச்சும் விஷயம் தெரிஞ்சதா???”, என்றான் சிவா கோபமாக.

 

“பதினைந்து நாள் தேடி இப்பதான் அண்ணா கிடைச்சது, அந்த விக்ரம் வேற யாரும் இல்ல, அந்த சிஐடி ராகவனோட அண்ணன் தான்”, என்றான்  கோபமாக.



Advertisement

 

“என்னடா சொல்ற!!??”, என்றான் அதிர்ச்சியுடன்.

 

Advertisement

“ஆமா  இத கண்டுபிடிக்கிறதுக்குள்ள  போதும் போதும்னாயிடுச்சு”, என்றான் சலிப்புடன்.

Advertisement

 

“மிருணாவ துரத்துன அந்த நாலு பேரு கிட்டயும்  இவங்க ரெண்டு பேரோட போட்டோவ காட்டி கேளு டா, இவனுங்க தான் மிருணா தப்பிக்க உதவுனதான்னு”, என்றான் கோபமாக.

 

Advertisement

“கேட்டுட்டேன்! தெரியலன்னு சொல்லிட்டானுங்க”.

 

“ச்ச…”, என்றான் எரிச்சலுடன்.

 

“அண்ணே! இன்னொரு விஷயம் நம்ம பெரியய்யா, மரம் கடத்துன  வண்டி இப்ப அவங்க கிட்ட மாட்டிகிச்சு”.

 

“எப்படிடா அவன் இதெல்லாம் கண்டுபிடிச்சான்”, என்றான் கோபமாக.

 

“தெரியலண்ணே!! அவன ஏதாச்சும் பண்ணனும்”, என்றான் கோபமாக.

 

“ஆமாடா!! என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்”, என்றான் யோசனையுடன்.

 

“அண்ணா!! ஒரு பிரச்சன!!”, என்றான், முகில்  விக்ரமின் வீட்டிற்கு வந்து விக்ரமிடம்.

 

“என்ன பிராப்ளம் டா??”.

 

“அண்ணா! மிருணாவ தொரத்துன அந்த நாலு பேரும் தப்பிச்சுப் போய்ட்டாங்க”, என்றான் பாவமாக.

 

“டேய்!! எரும! நான் தானே அவங்கள விட சொன்னேன்”, என்று தலையில் தட்டினான் ராகவ்.

 

“அண்ணா! நீ எப்ப வந்த??”, என்றான் தலையைத் தடவிக் கொண்டே.

 

“நீ வீட்டுக்குள்ள வரப்ப உன் பின்னாடி தான் நானும் வந்தேன், நீ கவனிக்கல”, என்று விக்ரமின் பக்கத்தில் உட்கார்ந்தான்.

 

“நான் விக்கி அண்ணாவப் பதற வைக்கலாம்னு வந்தேன்”, என்று சிரித்துக் கொண்டே எதிரே உட்கார்ந்தான்.

 

“டேய்!! லூசு! அவங்கள விடச் சொன்னதே.. இவன்தான்டா, அண்ணா! காபி கொண்டு வாங்க”, என்று முகிலிடம் ஆரம்பித்து வேலையாளிடம் முடித்தான்.

 

“ஓ.. அப்படியா!! ஈஈஈ…”, என்று இழித்தான்.

 

 

“ஹாய்!! டா”, என்று உள்ளே வந்தான், அமர்.

 

“வாடா”, என்று வரவேற்றனர்.

 

“என்னன்ணா!! உங்களையும் பார்க்க அனுப்பி விட்டாளா???”, என்றான், முகில் சிரிப்புடன்.

 

“ம்ம்… ஆமா டா”, என்று அவன் பக்கத்தில் உட்கார்ந்தான்.

 

“யாருடா???”, என்றனர் இருவரும்.

 

“மிருணா தான் உங்க ரெண்டு பேரையும் போய்ப் பார்த்துட்டு கால் பண்ண சொன்னா”, என்றான் அமர்.

 

“அண்ணா! இன்னொரு காபி எக்ஸ்ட்ரா கொண்டு வாங்க”, என்றான் ராகவ்.

 

“எதுக்குடா??”.

 

“விக்கி அண்ணா!! அவ உங்க ரெண்டு பேரையும் நினைச்சு பயத்துல இருக்கா”.

 

காபி மற்றும் சினாக்ஸ் நால்வருக்கும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வேலையாள் உள்ளே சென்றார். “முகில்! அஜீ கிட்ட பேசுறப்ப அவளும் ஏதோ!! மாதிரி இருக்கானு சொன்னாடா”.

 

“அஜீ யாரு அண்ணா!! உங்க ஆளு அனுவா?!”, என்றான் கிண்டலாக.

 

“ஆமாடா”, என்றான் சிரித்துக்கொண்டே.

 

“விக்கி!! மிருணா ரொம்ப தைரியமான பொண்ணு டா, யாரும் அவள பிளாக் மெயில் பண்ணக் கூடாதுன்னு நினைச்சு அப்பா, அம்மா ,தங்கச்சிய அந்த இக்கட்டான சமயத்துல கூட யூஎஸ் அனுப்பினா, இப்ப திடீர்னு எனக்கு பயமா இருக்கு நீ வா அண்ணானு கூப்பிடுறா”, என்றான் வருத்தமாக.

 

“அமர் அண்ணா!! உங்களையுமா?? என்னையும் வர சொன்னா, நான்தான் விக்கி அண்ணாவும் ராக்கி அண்ணாவும் வரப்ப வரேன்னு சொல்லிட்டேன்”, என்றான் வேகமாக.

 

விக்ரம் யோசனையுடன் இருந்தான்.” விக்கி!! மிருணா கிட்ட பேசுனியா??”.

 

“இல்ல ராக்கி, நான் பேசல, ஆனா அவ ஏன் இப்படி பயப்படுறான்னு தெரியலையே!!!”, என்றான் குழப்பமாக.

 

“சரி இரு மிருணா கிட்டயே கேட்கலாம்”, என்று அமர் மிருணாவுக்கு போன் செய்தான்.

 

“சொல்லு அமர், அவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? “, என்றாள் வேகமாக. முகில்  போனைப் பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டான்.

 

“நல்லா இருக்காங்க”.

 

“சரி அண்ணா, உன்ன வரச் சொன்னேன்ல”.

 

“வர ட்ரை பண்றேன் டா, ஆமா, திடீர்னு என் தங்கச்சிக்கு என்ன பயம்???”.

 

“அது ஒன்னும் இல்ல, சும்மாதான் சரி நீ சொல்லு எப்ப வர ??”, என்று பேச்சை மாற்றினாள்.

 

“மிருணா பேச்ச மாத்தாத”, என்றான் கண்டிப்பான குரலில்.

 

“என்னன்னு தெரியல அமர், எனக்கு ஒரே கெட்ட கெட்ட கனவா வருது, நியூஸ் பார்க்கவே பயமா இருக்கு, என்னால அவங்க ரெண்டு பேருக்கும் ஏதாச்சும் ஆயிடுமோன்னு  பயமா இருக்கு”, என்றாள் அழுகையுடன்.

 

“பாப்பா!! அழுகுறியா??”, என்றான் ஆச்சரியமாக.

 

[the_ad id=”6605″]

 

 

 

“அது அண்ணா, எனக்கு இத அவங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லத் தயக்கமா இருக்கு, சொன்னா கேப்பாங்களான்னு தெரியல, அந்த சிவா எப்ப என்ன பண்ணுவான்னு தெரியாது, விக்ரமன் வேற சிவாவோட தோப்பு வீட்டுல இருந்த  சரக்க கண்டுபிடிச்சுட்டாரு, பாம்பு இருக்குன்னு தெரிஞ்சு பாம்பு புத்து குள்ள யாராச்சும் கைவிடலாமா???”, என்றாள் அழுகையுடன்.

 

“ஏய்!! மிருணா  உனக்கு அழுக தெரியுமா?? ஊட்டில ஆல்ரெடி மழை பெய்யுது இதுல நீ வேற அழுது கால கீழ வைக்க முடியாம பண்ணிடுவ போலயே!!”, என்றான் கிண்டலாக.

 

“முகில் நீயும் கூட தான் இருக்கியா?? நான் அழுகலாம் இல்ல, உன்னால முடிஞ்ச வரைக்கும் அவங்க ரெண்டு பேருக்கும் செக்யூரிட்டி கொடு”, என்றாள் கரகரத்த குரலில்.

 

“அவங்க தான் எனக்கு செக்யூரிட்டி கொடுக்குறாங்க, உனக்காக நான் அவங்களுக்குத் தரேன்”, என்றான் கிண்டலாக.

 

“பாப்பா இத பத்தி ஹனி  அண்ட் அனு கிட்ட  சொன்னியா???”.

 

“ஸ்ரீ ரொம்ப தைரியமானவ, அவளுக்கு ஆல்ரெடி எல்லாம் தெரியும் ஆனா அனு அப்படி இல்ல ராகவ் பாக்காம போனதுக்கு ரொம்ப பீல் பண்ணுனா, என் பயத்த சொன்னா அவ்ளோ!! தான் அவ ரொம்ப பயந்துருவா”.

 

“நீ அப்படியே தைரியசாலி பாரு, என்ன அழுக??”, என்றான் கிண்டலாக.

 

“முகில் என் பயம் உனக்குப் புரியல, அதான் இப்படி பேசுற என் கெஸ் படி பார்த்தா  இந்நேரம் நான் எந்த ஊர்ல இருப்பேன்னு அந்த சிவா கண்டுபிடிச்சி இருப்பான், என்னைய டிரெயின் ஏத்திவிட்டது இவங்க ரெண்டு பேரும்தானு தெரிஞ்சா கம்முனு இருக்க மாட்டான்”, என்றாள் பயத்துடன்.

 

“நீ விக்கி இல்ல ராக்கி கிட்ட கால் பண்ணி பேசிருந்தா உன் பயம் போய் இருக்கும்”.

 

“இல்ல அமர் அவங்க ரெண்டு பேரும் எப்போதுமே பிஸி,என் நியாபகம் வந்தா அவங்களே கால் பண்ணி பேசட்டும்”.

 

“என்ன மேடம்  கோவமா பேசுற மாதிரி இருக்கு”, என்றான் கிண்டலாக.

 

“டேய்!! முகில் நான் உனக்கு அண்ணி டா!! என் தயவு இல்லாம விஷாவ நீ கல்யாணம் பண்ண முடியாது பார்த்துக்கோ!!”, என்றாள் பொய்யான கோபத்துடன்.

 

“நீ சொன்னனு நான் அண்ணாவப் பார்க்க வந்தேன்ல, இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ, இப்ப நீ நார்மலாகிட்டல “, என்று கிண்டலாக ஆரம்பித்துக் கவலையாக முடித்தான்.

 

“ம்ம்.. நீ அப்பப்ப வந்து பாத்துக்கோ, ராகவ் கூட டெய்லியும் அனு கிட்ட பேசுறனால எப்படி இருக்காருன்னு தெரியும், விக்ரம் பத்தி எதுவுமே தெரியாது, அவருக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவாருனு தெரியாது அதான் பயமாவே இருக்கு”, என்றாள் சோகமாக.

 

“மிரு”, என்றான் மென்மையாக. மிருணா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.“மிரு பேசுடி”, என்று போனை வாங்கி ஸ்பீக்கரை அணைத்துப் பேசினான்.

 

“ம்ம்.. சொல்லுங்க”.

 

“மிரு நான் நல்லா இருக்கேன் டி, நீ பயப்படாத”, என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

 

“ம்ம்.. கவனமா இருங்க”.

 

“நான் தள்ளி வந்து தான் பேசுறேன், நீ எதுக்கு இப்படி பயப்படுற??”.

 

“ஒரே கெட்ட கெட்ட கனவா வருது மனு”, என்றாள் சோகமாக.

 

“எங்கள பத்தியே நினைச்சுகிட்டு படுத்திருப்ப அதான்”, என்றான் பொறுமையாக.

 

“உங்களப் பத்தி நினைக்க என்ன இருக்கு?? நான் ஏன் நினைக்கப் போறேன்??”.

 

“மிரு என்னையப் பத்தி கனவு வந்ததா??”.

 

“ம்ம்.. ஆமா மனு, எனக்கு படபடப்பா பயமாவே இருக்குடா”, என்றாள் பயத்துடன்.

 

“மிரு நா நல்லா இருக்கேன் டா, நீ ரொம்ப தைரியமான பொண்ணு, என்ன நடந்தாலும் சமாளிக்கிற தைரியம் உனக்கு இருக்குடா, அப்புறம் ஏன் இந்த பயம்??”, என்றான் பொறுமையாக.

 

“மனு!! ப்ளீஸ் கவனமாயிரு”, என்றாள் பயத்துடன்.

 

“அடியே!! குட்டிமா, இப்படி பயந்தா நா எப்படி கவனமா இருக்குறது??!!  இவ்ளோ!! நேரம்  பேசுறியே எங்க உன் பாடிகாட்ஸ் டி??”, என்றான் கிண்டலாக.

 

“பாடிகார்ட்ஸா யாரு??”, என்றாள் புரியாமல்.

 

“வேற யாரு?! என் உடன்பிறப்பும் என் மாமா பெத்த ரத்தினமும் தான்”, என்றான் கிண்டலாக.

 

“டேய்!! அவங்க ரெண்டு பேரும் என் ஃப்ரெண்ட்ஸ்”, என்றாள் கோபமாக.

 

“ஓ.. அப்ப  அனு பாடிகாட் இன்னும் வரலையா??”, என்றான் கிண்டலாக.

 

“நீ மட்டும் இப்ப என் கண்ணு முன்னாடி இருந்த அவளோதான்… என் ஃப்ரெண்ட்ஸ கிண்டல் பண்றியா??”, என்றாள் கோவமாக.

 

“பின்ன என்னடி?! எப்பப் பார்த்தாலும் கூட்டமா தானே இருக்க, ஏதோ!! அதிசயமா அன்னைக்கு அடி வாங்கிட்டுத் தனியா ரூமுக்கு வந்த, இல்லனா வரப் போறியா என்ன??”, என்றான் கிண்டலாக.

 

“உன்ன தனியா வந்து பார்க்க என்ன இருக்கு??”, என்றாள் கோபமாக.

 

“ஒன்னும் இல்லையா?? மிரு”, என்றான் மென்மையாக. மிருணா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். “ம்ம்.. இப்ப நீ ஓகேனு நினைக்கிறேன்”.

 

“ம்ம்.. ஓகே தான், சரி நான் வச்சுரட்டா??”.

 

“ம்ம்.. சரி”.

 

“எப்படா வச்சுருவான்னு கேட்பான்னு வெயிட் பண்ண போல?!! வச்சுட்டு போடா”, என்றாள் எரிச்சலுடன்.

 

விக்ரமின் முகம் மென்மை பரவியது,” என்னைய ரொம்ப மிஸ் பண்றியா குட்டிமா??”, என்றான் சிரிப்புடன்.

 

“அது.. அது.. நா ஏன் மிஸ் பண்ண போறேன்?? எனக்கு ஆயிரம் வேல இருக்கு, பாய்!!”, என்று வேகமாக வைத்துவிட்டாள்.

 

விக்ரம் சிரிப்புடன் உள்ளே வந்தான். “என்னாச்சு??”, என்றனர் மூவரும்.

 

“மிரு நார்மலாகிட்டா”, என்று உட்கார்ந்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“உன் லவ்வ சொல்லிட்டியா டா??”.

 

“சொன்னா தான் நான் லவ் பண்றேன்னு அவளுக்குத் தெரியுமா?? அமர், நான் சொல்லாமலயே அவளுக்குத் தெரியும்”, என்றான் சிரிப்புடன்.

 

“இல்ல விக்கி, மிருணா புரிஞ்சு கிட்டாலும் நீ வாயால சொல்ற வரைக்கும் அவ நம்ப மாட்டா”.

 

“இல்லா அவ எனக்கு சொந்தமானவனு அவ நம்புறா”.

 

“இல்ல விக்கி அவ கிட்ட நீ சொல்றது தான் நல்லது”.

 

“ம்ம்… பார்க்கலாம்”, என்று வேறு விஷயம் பேச ஆரம்பித்தான். இவனைப் பற்றி தெரிந்ததால் அவர்களும் மீண்டும் கேள்வி கேட்கவில்லை.

 

மறுநாள் அதிகாலையில் விக்ரம் தனக்குக் கீழே இருக்கும் ஆட்களை அழைத்துக் கொண்டு ஈசிஆரில்  வசதியான ஆட்கள் இருக்கும் ஏரியா வழியாக பீச்சுக்கு சென்று அங்கு இருக்கும் மணலைத் தொண்டி சிலைகளை வெளியே எடுத்தான். உடனே பத்திரிகையாளர்களை வர வைத்தான்.

 

“விக்ரம் சார்!! இந்த சிலை உங்களுக்கு எப்படி கிடைச்சது???  இதெல்லாம் பழமைவாய்ந்த சிலையா???”, என்று பேட்டி எடுக்க ஆரம்பித்தனர்.

 

“இது ராஜா காலத்து கோவில்ல இருந்த சிலைகள்”.

 

“நீங்க ஏற்கனவே சோதனை செஞ்ச தோப்பு வீட்டிற்கும் இதுக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்குமா??”.

 

“இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு”.

 

“குற்றவாளி  யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா??”.

 

“கிட்டத்தட்ட எதிரி யார்னு தெரிஞ்சுகிட்டோம், நாங்க அவர்தான்னு உறுதிசெய்ததுக்கு அப்புறமா யார்ங்குற விவரம் உங்க முன்னாடி நிரூபிப்போம்”.

 

“சார் அந்த கந்தசாமிங்குற நபரைக்  கண்டுபிடிச்சிட்டீங்களா???”.

 

“இல்ல அப்படி ஒரு ஆளே இல்ல, அதனால அந்த வீட்டுக்கு சீல் வைக்க ஏற்பாடு பண்ணியிருக்கோம், நன்றி!!”, என்று விலகி செல்லப் போனான்.

 

“சார்! சார்!! கடைசியா ஒரே ஒரு கேள்வி.. சிபிஐ ராகவன் சார் செம்மரக்கடத்தல் வண்டியப் பிடித்து இருக்கிறாரு, அந்த வண்டி சிவாக்கு சொந்தமான வண்டின்னு சொல்றாங்க, அந்த கேஸிற்கும் இதுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்குமா??? இந்த கேஸ் பத்தி நீங்க பல ஆலோசனை சொன்னதா எங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கு”.

 

“ம்ம்… இருக்க அதிக வாய்ப்பு இருக்கு, மிக்க நன்றி!!”, என்று விலகிச் சென்றான்.” சார்! சார்!!”, என்று பின்னால் வந்தவரை இவனுக்குக் கீழே வேலைப் பார்த்தவர்கள்  தடுத்தனர்.

 

“இந்த சிலைய நம்ம கஷ்டடில்ல வையுங்க “, என்று ஒருவனிடம் சொல்லி விட்டு வண்டியில் ஏறி வீட்டிற்கு வந்தான்‌.

 

“சூப்பர் டா!! விக்கி! நியூஸ் பார்த்தேன், செம்ம!! டா “, என்று அணைத்தான்.

 

விக்ரம் சிரிப்புடன்,” ராகவ்!! இதுக்கு வீரய்யாக்குத் தான் நன்றி சொல்லணும், நாம போட்ட சாப்பாடுக்கு நல்லா வேல பாக்குறாங்க, சிவாவ க்ளோஸ் பண்ணிட்டு இவங்க நாலு பேருக்கும் நம் எஸ்டேட்ல ஏதாச்சும் வேல போட்டுத் தரனும்”.

 

“கண்டிப்பா டா”, என்றாள் சிரிப்புடன்.

 

விக்ரம் ஆபீஸ் போன் அடித்தது. “விக்ரம் ஹியர்”, என்றான் கம்பீரமாக.

 

“நான் நிதியமைச்சர் பேசுறேன், என்னய்யா வேல பார்க்குற?! சிவாவோட விஷயத்துல நீ ஏன் தலையிடுற??”, என்றார் கோபமாக.

 

“சார்! மரியாத மரியாத.. நீங்க மரியாத கொடுத்தா மரியாத கிடைக்கும், யார் சார் அந்த சிவா?! அவன் கேஸ நா ஏன் நடத்தக் கூடாது?? இப்படி எல்லாம் பேசுனீங்க.. உங்கள பத்தி நான் மேல் இடத்துல புகார் கொடுக்குறதா இருக்கும்”, என்று கோபமாக வைத்தான்.

 

“எவன்டா???”.

 

“நிதி அமைச்சர் டா, வாங்குற சம்பளத்துக்கு வேல பார்க்காம கண்டவனுக்கு வேலை பார்க்குறான்”,  என்றான் கோவமாக.

 

மீண்டும் விக்ரமின் போன் அடித்தது. “விக்ரம் ஹியர்”.

 

“நான் கல்வி அமைச்சர் பேசுறேன், விக்ரம் இந்த கேஸ இதோட நிறுத்திடுங்க”.

 

“சார் என் வேலைய பாக்க விடுங்க, என் வேல எதுன்னு எனக்கு நல்லாவே தெரியும், அத நீங்க சொல்லாதீங்க”, என்று கோவமாக வைத்தான்.

 

“மறுபடி எவன்டா???”, என்றான் கோவமாக.

 

“கல்வியமைச்சர் டா”, என்றான் கோவமாக.

 

“இவங்க வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறது இல்ல, பாக்குற நம்மலையும் பார்க்க விட மாட்டானுங்க”, என்றான் கோவமாக.

 

மறுபடியும் விக்ரம் போன் அடித்தது. “ஹலோ”, என்றான் கோபமாக.

 

“நான் கமிஷனர் பேசுறேன் விக்ரம், பின்விளைவு தெரியாம இப்படி பிடிவாதம் பிடிக்காதீங்க”, என்றார் கெஞ்சலாக.

 

“சார்! நான் ஏற்கனவே செம்ம கோவத்துல இருக்கேன், என்கிட்ட வந்து பேசினீங்க… கொதறி வச்சுருவேன், வைங்க சார்”, என்று போனைக் கோவமாக வைத்தான்.

 

“ச்ச… என்னடா இவனுங்க இப்படி இருக்கானுங்க”, என்றான் ராகவ் கோபமாக.

 

விக்ரமின் போன் மீண்டும் அடித்தது.“ஹலோ எதுக்குக் கால் பண்ணி கால் பண்ணி என் வேலையக் கெடுக்குறீங்க”, என்றான் உச்சகட்ட கோபத்தில்.

 

“மனு!! நான் இப்பதான் கால் பண்ணுனேன், வேலையா இருக்கனா வச்சுடு”, என்றாள் பாவமாக.

 

அப்பொழுது தான் பர்சனல் போனில் பேசுவதை கவனித்தான். “மிரு!! சாரிடி நான் வேற டென்ஷன்ல கத்திட்டேன்”, என்றான் வேகமாக.

 

“சரி பரவால்ல, நீ வேலையப் பாரு, நான் வச்சுறேன்”, என்று வைக்கப் போனாள்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

“மிரு! மிரு!! நீ பேசுடி.. எனக்கு வேலை எல்லாம் இல்ல”, என்றான் வேகமாக.

 

“ம்ம்… சரி”.

 

“ஏய்!!! குட்டிமா! அதான் சாரி சொல்லிட்டேன்ல, காலைல கால் பண்ணியிருக்க, நியூஸ் பாத்தியா??”.

 

“ஆமா! மாமா தான் கூப்பிட்டு காட்டுனாங்க”.

 

“மிரு!! பயப்படாத டா, நா நல்லா தான் இருக்கேன், டோன்ட் வொரி”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஆபீஸ் போன் அடித்தது.”மிரு!! ஆபீஸ் போன் அடிக்குது டா, அப்புறம் பண்றேன்”, என்று வைத்து விட்டு, “ஹலோ விக்ரம் ஹியர்”.

 

 

“அண்ணா!! நா தான் ஒரே கலவரமா இருக்கு,  அந்த மொபைல்க்கு பண்ணுனேன், பிசினு வந்தது”.

 

“மிரு கிட்ட பேசிட்டு இருந்தேன் முகில், என்ன கலவரம்??”.

 

“எதுக்குன்னு தெரியலணா, இப்பதான் எனக்கு நியூஸ் வந்தது, நா ஸ்பாட்டுக்குப் போயிட்டு இருக்கேன்”.

 

“ம்ம்.. சரிடா இது வெறும் பூச்சாண்டி காட்ட சிவா பண்ற வேலை தான், நீ கேர் ஃபுல்லா இரு”, என்று வைத்து விட்டான்.

 

“என்னடா கலவரம் போல நியூசில வருது “, என்றான் ராகவ்.

 

“அத விடு நீ அமர் ஃபேமிலிய உடனே கிளம்பி ஊட்டி போக சொல்லு, நாம தான் மிருணாவ அனுப்புனது தெரிஞ்சதும் அடுத்து அமர் பேமிலி தான் பாதிக்கும் , நம்ம ஆள வச்சு உடனே அவங்க எல்லாரையும் கிளம்ப சொல்லு”, என்றான் வேகமாக.

 

“சரிடா”, என்று கிளம்பிச் சென்றான்.

 

விக்ரம் போன் அடித்தது,” அண்ணா”.

 

“சொல்லு ராம்”.

 

“அண்ணா நீங்க வெளிய விட்ட நாலு ரவுடிங்க எங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க, எப்ப வேணாலும் சிவா உங்கள அட்டாக் பண்ணலாம்”.

 

“நா பாத்துக்குறேன் டா”.

 

“அண்ணி இருக்க இடம் தெரிஞ்சா உடனே கிளம்பிடுவான்”.

 

“ம்ம்.. தெரியும்டா, வரட்டும் பாத்துக்கலாம், நாம பிளான் போட்டபடி தான் எல்லாம் நடக்குது, நான் இன்னும் சில விஷயம் சொல்றேன், அத பண்ணு”, என்று தன் திட்டத்தைச் சொன்னான்.

 

“ஓகே அண்ணா”, என்று வைத்தான்.

 

விக்ரம் என்ன திட்டம் போட்டான்??? சிவாவினால் விக்ரமிற்கு வரும் ஆபத்தில் இருந்து அவன் தப்பிப்பானா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…..

கைதியின் சிறை தொடரும்……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!