Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi aval

காவலனின் கைதி அவள் -25 (1)

காவலனின் கைதி அவள்-25 (1)

 

அம்மாக்கள் மூவரும் மேலே வந்து சிவாவிடம் நடந்த உரையாடலைச் சொல்லி மிருணாவுக்கு விக்ரமைக் கல்யாணம் செய்ய முடிவு எடுத்ததைச் சொன்னார்கள். மிருணா அமைதியாகவே இருந்தாள். ”  கல்யாணம் அப்பா அம்மா இல்லாம நடக்குதுன்னு கவலைப்படாத,  ரிசப்ஷன் பெரிய மேடையில அப்பா அம்மா வந்ததும்  பண்ணிடலாம்”, என்றார் கோதை ஆறுதலாக.



Advertisement

 

“இப்ப உனக்கு அலங்காரம் பண்ண டைம் இல்ல டா, நல்ல நேரம்  முடியப் போகுது டா”, என்றார் மீனாட்சி.

Advertisement

Advertisement

 

“எத பத்தியும் யோசிக்காத, வா டா!! போலாம்”, என்றார் வாணி. மூவரும் அழைத்து வந்தனர். மிருணாவின்‌ முகம் நிர்மலமாக இருந்தது. அவள் முகத்தை வைத்து யாராலும் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் போனது. விக்ரமுக்கு மிருணாவின் மனம் புரிந்தது,  சமாதானம் செய்ய நேரம் இல்லாமல் தவித்தான்.

Advertisement

 

ஐயர், வீட்டில் இருந்த சாமி அறையில் பூஜை செய்து பொன் தாலியை எடுத்து வந்து கொடுத்தார். விக்ரம் தாலியை எடுத்ததும் மிருவின்  கண்களைப் பார்த்தான்.மிருணாவும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். விக்ரம் லேசான சிரிப்புடன், ‘ நீ என் சரி பாதி, உன் துக்கம், சந்தோஷம் எல்லாத்துலயும் உன் கூடவே இருப்பேன். எப்போதுமே உன்ன காக்கும் அரணா இருப்பேன் டி மிரு’, என்று மனதில் நினைத்துக் கொண்டு தாலியைப் போட்டுவிட்டான். பின் குங்குமத்தை நெற்றி வகுட்டிலும் தாலியிலும் வைத்தான்.

 

மிருணா எதையும் சிந்திக்க முடியாமல் தடுமாறினாள். திருமணத்தை உறுதி செய்ய இருவரும் கையெழுத்துப் போட்டனர். ஐயர் மற்றும் ரிஜிஸ்டரரை அப்பாக்கள் வழி அனுப்பினர். “மிருணா!! எங்க கூட வாடா!”,  என்று மீனாட்சி மற்றும் வாணி கீழே இருக்கும் ஓர் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

 

“சாப்பிட வாங்க “, என்றார் கோதை. அப்பாக்கள் சாப்பிட ஆரம்பித்தனர். மற்றவர்கள் மிருணாவை அழைத்துச் சென்ற ரூமின் கதவைப் பார்த்தபடி நின்றனர். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. மிருணாவிற்கு மெரூன் வண்ணப் பட்டுப் புடவை அணிந்து அதற்கு  ஏற்றார் போல் கழுத்திலும் காதில் ஜிமிக்கி தோடும் தலையில் மல்லிகைச் சரத்தை ஒருபக்கம்   தொங்கவிட்டு அம்மாக்கள் இருவரும் வெளியே அழைத்து வந்தனர்.

 

விக்ரமின் பார்வை வேறு எங்கும் செலுத்த முடியாமல் மிருணாவைப் பார்வையால் விழுங்கிக் கொண்டு நின்றான். மற்றவர்கள் மிருணாவைப் பார்த்து அசந்து நின்றனர். பெண்கள் நால்வரும் வேகமாக ஓடிச் சென்று அணைத்து விடுவித்து, ” சூப்பரா..!!! இருக்கடி “, என்றனர்.

 

“ஹேய்!! மிருணா!! நீ இவ்ளோ..!! அழகா டி! “, என்றான் அமர் கிண்டலாக.

 

“மிருணா! உன்ன நானே கல்யாணம் பண்ணி இருக்கலாம்..! மிஸ் பண்ணிட்டேன்”, என்று போலியாக அழுத்துக் கொண்டான் ராகவ்.

 

“என்ன சொன்ன..??”, என்றாள் அனு முறைப்புடன்.

 

“சும்மா!! அஜு டார்லிங்”, என்று இழித்தான்.

 

அமர் அவன் முதுகில் லேசாகத் தட்டி, “மிருணா!! அழகா இருக்க டா”, என்றான் சிரிப்புடன்.

 

கோதை மிருணாவின் முகத்தை வழித்து நெற்றி முடித்தார். ” வாடா!! வந்து விளக்கேத்து”, என்று அம்மாக்கள் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று தீபம் ஏற்ற வைத்து சாமி கும்பிட்டனர்.

 

“சரி! வாங்க!! எல்லோரும் சாப்பிடலாம்”, என்றனர் அம்மாக்கள் மூவரும்.

 

“அத்த!! எனக்கு எதுவும் வேணா”.

 

“பசிக்குதுன்னு சொன்னல்ல, கொஞ்சம் சாப்பிடு”, என்றார் வாணி.

 

“இப்ப பசிக்கல”.

 

“அதெல்லாம் பசிக்கும், நீ வா, நீயும் விக்ரமும் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடனும்”, என்று மீனாட்சி கையைப் பிடித்து வந்த உட்கார வைத்துப் பரிமாறினார். அனைவரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

 

மிருணா சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்ததும் விக்ரம் மிருணாவிற்கு ஊட்ட வந்தான், ” வேணாம்! நானே..!”, என்று வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள். அதில் புரை ஏறியது.அனைவரும் மிருணாவை அறிந்து கிண்டல் செய்யாமல் அமைதியாக இருந்தனர்.

 

“மெதுவா!! மிரு”, என்று தலையைத் தட்டி தண்ணீர் கொடுத்தான்.

 

“நானே! குடிச்சுக்குறேன்”, என்று லேசாக விலகி தண்ணீரைக்  குடித்தாள். விக்ரம் முறைத்தான். “போதும்!! “, என்று எழுந்து சென்றாள். போனவளை அனைவரும் கவலையாகப் பார்த்தனர். சாப்பிட்டு முடித்ததும் ஹாலுக்கு வந்தனர். மிருணா தோட்டத்தில்  உட்கார்ந்து இருந்தாள்.

 

விக்ரம் வெளியே வந்து ராமிற்கு போன் செய்து, ” நா சொன்ன வேலையப் பண்ணிடு டா, நைட்டு எல்லாரையும் நம்ம இடத்தில அனுப்பிடு ஒருத்தனும் உயிரோட போகக்கூடாது”, என்றான் தீவிரமாக.

 

“அண்ணா!! அதுக்கான வேலையத்தான் பாக்குறேன்”.

 

“அப்புறம் எனக்கும் மிருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு”.

 

“என்ன சொல்ற?? சூப்பர்!! அண்ணா, வாழ்த்துக்கள்”, என்றான் சந்தோஷமாக.

 

“தேங்க்ஸ் டா”, என்று திரும்பினான். சங்கவி அவனையே பார்த்தபடி நின்றாள்.

 

“ஏழு மணிக்குள்ள வந்துடு டா”, என்று போனை வைத்தான்.

 

“அத்தான்!! இப்ப நீங்க ராம் கிட்ட தானே பேசினீங்க??”, என்றாள் ஆர்வமாக.

 

“அது… ஆமா”.

 

“என்கிட்ட கொடுத்து இருக்கலாம்ல அத்தான், அப்படி என்ன கோபம்?? அவனுக்கு என் மேல, இப்படி பேசாமலயே இருக்கான்”, என்றாள் அழுகையுடன்.

 

“அப்படி எல்லாம் இல்ல டா, ஒரு இம்பார்டன்ட் கேஸ், அதான்”.

 

“அதுக்காக இத்தன மாசம் பேசாம இருப்பானா?? அவன நா பாக்கணும் அத்தான், கூட்டிட்டு போங்க, ப்ளீஸ்”, என்றாள் அவன் கையைப் பிடித்து கெஞ்சலாக.

 

“கூடிய சீக்கிரம் உன் பிரச்சன முடிஞ்சதும் ராம் வந்துருவான், கவலைப்படாத”, என்று கண்ணீரைத் துடைத்தான்.

 

“நிஜமாவா அத்தான்!!??”, என்றாள் சந்தோஷமாக.

 

“நிஜமாதான் “, என்றான் சிரிப்புடன்.

 

“ஹேய்!! ஜாலி! நா மிருணாவப் போய்  பார்க்குறேன்”, என்று சிரிப்புடன் மிருணாவிடம் ஓடினாள். “மிருணா!!”.

 

“ம்ம்.. என்னடி??”, என்றாள் சலிப்புடன்.

 

“உன்னப் பத்திச் சொல்லுன்னு  சொன்னல்ல “, என்றாள் சிரிப்புடன் அவள் பக்கத்தில் உட்கார்ந்து.

 

“ஆமா “, என்றாள் குழப்பமாக.

 

“இப்ப நா சொல்லுறேன் டி”, என்றாள் சந்தோஷமாக.

 

“மிருணாவுக்கு மட்டும் தானா?? இல்ல எங்களுக்குமா??”, என்றனர் மற்றச் சிறுவர்கள் அனைவரும் பக்கத்தில் வந்து.

 

“மிருணா தான் ஃபர்ஸ்ட் என் கிட்ட கேட்டா, அவ கேட்டா தான் சொல்லுவேன்”, என்றாள் மிருணாவைப் பார்த்துச் சிரிப்புடன்.

 

“ஹேய்!! மிருணா!! சொல்லச் சொல்லுடி”, என்றாள் அனு அவள் பக்கத்தில் உட்கார்ந்து.

 

“ஆமா “, என்றனர் மற்றவர்களும் அங்கே வட்டமாக உட்கார்ந்து.

 

“சரி! சங்கு!! சொல்லு”.

 

“அவ சொல்றதுக்கு முன்னாடி ராம பத்தி நாங்க சொல்லணும்”, என்றான் ராகவ்.

 

“ராம் யாரு ??”, என்றனர் அனு மற்றும் விஷா குழப்பமாக.

 

“ராம் அண்ணா எனக்கு இன்னொரு அண்ணா டி “, என்றாள் ஸ்ரீ.

 

“நீ சொன்னதே இல்லயே..!”, என்றாள் மிருணா குழப்பமாக.

 

“ராமண்ணா சிவா கேஸ்ல இப்ப மாட்டிக்கிட்டாங்க, அவங்க ஃபேமிலி யாரு?? என்ன?? இது மாதிரி எதுவும் வெளியே வரக்கூடாதுன்னு சீக்கிரட்டா வச்சிருக்காங்க, அதனால்தான் சொல்லல, ராமண்ணா இந்த குடும்பத்தோட வாரிசு இல்லை, ஆனா இந்த வீட்டுப் பிள்ளை தான், என் மூனாவது அண்ணா தான்”, என்றாள் சிரிப்புடன்.

 

“ஹனி!! என்கிட்டக் கூடச் சொல்லல!”.

 

“இல்ல அமர்! அத்த மாமாவுக்குத்  தெரியும் , உன் கிட்டச் சொன்னா மனசுல வச்சுக்காம எல்லார்கிட்டயும் உலரிடுவ, அதான் சொல்லல”, என்றாள். அமர் பொய்யாக முறைத்தான்.

 

“ராம்கு பதிமூனு வயசு இருக்குறப்பத் தான் அவன முதன்முதலா  நானும் ராகவும் பார்த்தோம்”, என்றான் விக்ரம் சிரிப்புடன்.

 

“எனக்கும் விக்கிக்கும் அன்னைக்கு சைக்கிள் ரேஸ், ஒரு சந்துல நுழையும்போது ஒரு சின்ன பையன் குறுக்கே வந்துட்டான். பிரேக் பிடிச்சுட்டோம், ஆனாலும் கீழ விழுந்துட்டான், கல்லு கைல குத்திருச்சு, அவன்தான் ராம், அப்ப தீடிர்னு கும்பல் கூடிருச்சு, எங்கள எல்லாரும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க, விக்ரம்கு அப்பவே செம்ம கோவம் வரும்,  கும்பல் கும்பலா நின்னு என்ன பேச்சு, உங்க வேலையப் பாருங்க, இந்தப் பையன நாங்க பார்த்துக்குறோம்னு சொல்லிட்டான், எல்லாரும் போயிட்டாங்க”, என்றான் ராகவ் சிரிப்புடன்.

 

“அப்புறம் ராம் அண்ணாவ வீட்டுக்கு ரெண்டு பேரும் அழைச்சுட்டு வந்தாங்க, வந்தப்பதான் தெரிஞ்சது அண்ணாவோட அப்பாவும் அம்மாவும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இறந்துட்டாங்கன்னு, பாவம்!! அண்ணா, அண்ணா ஓட சொந்தக்காரங்க எல்லாச் சொத்தையும் பிடிங்கிட்டு அண்ணாவத் துரத்திட்டாங்க, நல்ல வேல அண்ணா இவங்க ரெண்டு பேரோட கண்ணுல பட்டாங்க, கடவுள் தான்  அவர எங்க கிட்டச் சேர்த்திருக்காரு”, என்றாள்  சந்தோஷமாக.

 

“அந்த சொந்தக்காரங்களச் சும்மாவா விட்டீங்க??”, என்றான் அமர் கோபமாக.

 

“இல்ல! அப்பா கிட்ட பேசுனோம், அப்பா அவன் சொத்தைத் திருப்பி வாங்கிக் கொடுத்தாரு, அதிலிருந்து ராம் எப்போதுமே எங்கள்ள ஒருத்தன் தான், இரண்டு அப்பா அம்மாவுக்கும்  ராம்னா உயிரு, அவனப் பிரிஞ்சு  இருக்கவே மாட்டாங்க, இந்த கேஸ்னால தான் பிரிஞ்சுருக்காங்க, மதியானம் அம்மா ரெண்டுபேரும் ஒரே ரூம்ல இருப்பாங்களே, யாராச்சும் கவனிச்சீங்களா?? அது ராம்கான டைம்‌ அவன் கிட்ட பேசப் போயிடுவாங்க”, என்றான் விக்ரம் சிரிப்புடன்.

 

“விக்ரம் ரொம்ப தைரியமானவன், அவனப் பார்த்துதான் நாங்க மூணு பேருமே வளர்ந்தோம் , இன்னொரு டிபார்ட்மெண்ட்ல நம்ம ஆளு யாராச்சும் இருக்கணும்னு தான் நான் சிஐடி சேர்ந்தேன், ராம் விக்ரமத்தான் ஃபாலோ பண்ணுவேன்னு சிபிஐ சேர்ந்துட்டான், ஸ்ரீ எங்களப் பார்த்து வளர்ந்தனால அவளுக்குத் தைரியம் ரொம்ப அதிகம்”, என்றான் ராகவ் சிரிப்புடன்.

 

“சங்கவி அக்கா!! எப்ப நீ லவ்வ ஸ்டார்ட் பண்ணுன??”,  என்றாள்  விஷா.

 

“அப்பதான் ராமுக்கு சிபிஐ ட்ரெயினிங் முடிஞ்சது, விக்ரம் அத்தானும் ராகவ் அத்தானும் ஒரு கேஸ் விஷயமா மும்பை வந்தாங்க, அப்ப தான் ராம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்க, அவனப் பார்த்து நாலஞ்சு வருசமாச்சு, அன்னைக்குத் தான் பார்த்தேன்”.

 

“அடிப்பாவி!! கேஸ் விஷயமா வந்த ராம்ம கரெக்ட் பண்ணிட்டீயே!!”, என்றான் விக்ரம் கிண்டலாக.

 

“அடிக்கள்ளி”, என்றான் ராகவ் கிண்டலாக.

 

“அத்தான்!! நா லவ்வச் சொல்லவே இல்ல, ராம் தான்..!”, என்றாள் தயங்கியபடி.

 

“ஓ….”, என்றனர் இருவரும் கிண்டலாக.

 

“நீ உன் லவ் ஸ்டோரி சொல்லுடி, இவங்க இப்படித்தான் ஏதாச்சும் பேசிட்டே இருப்பாங்க “, என்றாள் அனு ஆர்வமாக, ராகவும் விக்ரமும் சிரித்தனர்.

 

“அத்தான் மூணு பேரும் வந்த அன்னைக்கு என் ஃப்ரெண்ட்கு பர்த்டே, நா ஈவினிங் பார்டிக்குக் கிளம்பி வெளிய வந்தேன், அப்பாதான் ராம் கூடப் போகச் சொன்னாரு, நானும் அழைச்சிட்டுப் போயிட்டேன், அவன் கிட்டப் பேச ஏதோ ஒன்னு தடுத்தது, அப்ப நா அத கண்டுக்கல, போன இடத்துல எனக்கு ஒரு நாய், ட்ரிங்ஸ் கலந்து கொடுத்து  மிஸ்பிஹேவ் பண்ணப் பார்த்தான், அத்தான் தான் சண்ட போட்டு என்னை வெளிய  இழுத்துட்டு வந்து, ஒரு அடி விட்டான்..!! பாரு!! தலைல ஏறுன  போதையெல்லாம் இறங்கி கன்னம் எரிஞ்சது”, என்றாள் பாவமாக.

 

“உனக்கு நல்லா… வேணும்”, என்றான் முகில் கிண்டலாக.

 

“போயா! நீ வேற, நா என்ன தெரிஞ்சா குடிச்சேன், நீ இவ்ளோ மோசமா  இருப்பேன்னு தெரியாதுனு கன்னாபின்னானு திட்ட ஆரம்பிச்சிட்டாரு”.

 

“நீ என்ன பண்ணுன?? அழுதியா??”.

 

“இல்ல அமர் அண்ணா!! அவன் மேலயே வாந்தி எடுத்துட்டேன்”, என்றாள் சோகமாக.

 

“என்ன!!??”, என்றனர் அனைவரும் ஆச்சரியமாக.

 

“ஆமா! நா அன்னைக்குத் தானே முதல் தடவக் குடிச்சேன், ஒத்துக்கல, அதான் அவன் மேலேயே எடுத்துட்டேன், அப்புறம் சாரி சொல்லி எனக்கு இந்த விஷயம் தெரியாதுன்னு சொன்னேன், சரி இனிமே இப்படி பார்டிக்குலாம் போகாதன்னு சொன்னாரு , நானும் ஓகே சொல்லிட்டேன், கொஞ்ச நாளுலயே விக்ரம் ராகவ் அத்தான் டெல்லிக்குப் போயிட்டாங்க, மும்பைல இருக்குற வரைக்கும் அவன் தான் காலேஜில் ட்ராப் பண்ணுவான், அதுல நாங்க ரெண்டு பேரும் ரொம்பக் க்ளோஸ் ஆகிட்டோம் , ராம் மும்பைய விட்டுப் போறதுக்கு முன்னாடி என்கிட்ட அவனோட லவ்வச் சொன்னான் நா எதுவுமே சொல்லல, ராம் நேரா அத்தகிட்ட லவ் விஷயத்தச் சொல்லிட்டாரு , அத்தையும் அப்பா அம்மா கிட்டப் பேசி சம்மதம் வாங்கிட்டாங்க, இந்த விஷயமே.. எனக்கு இங்க வந்தப்ப தான் தெரியும் , என் லவ்வ சர்ப்ரைஸா அவன் பர்த்டே அன்னைக்குச் சொல்லலாம்னு நினைச்சேன், ஆனா ராம்கு நேரம் இல்லாம என்னை விட்டுட்டுக்  கிளம்பிப் போயிட்டான், அதுக்கப்புறம் ஒரு போன்கால் கூட இல்ல, அப்பதான்  காதல் சொல்ல நேரம் காலம் பார்க்கக் கூடாது, காதலச் சொல்ற எல்லா நேரமும் நல்ல நேரம்தான், காதலச் சொல்ல காக்க வைக்கக் கூடாதுன்னு புரிஞ்சுகிட்டேன், இங்க வரப்பல்லாம்  விக்ரம் அத்தான் ரூமுக்குப் பக்கத்து ரூமுக்கு அடிக்கடி போவேன், அங்க தான் ரொம்ப நேரம் இருப்பேன், அதுதான் என் ராம் ரூம், அவன் வரவுக்காகத் தான் நா காத்துட்டு இருக்கேன், அத்தான்!! ப்ளீஸ் அவன சீக்கிரம் வரச் சொல்லுங்க “, என்றாள் அழுகையுடன்.

 

“சீக்கிரம் வந்துருவான்”, என்றனர் விக்ரம் மற்றும் ராகவ்.

 

“உனக்காகவே  சீக்கிரம் வருவாரு டி”, என்றாள் மிருணா ஆறுதலாக.

 

“ஆமாடி.. ஆமாக்கா”, என்றனர் ஸ்ரீ அனு மற்றும் விஷா.

 

“சரி!! எங்களுக்கு வெளியில கொஞ்சம் வேல இருக்கு, முகில்!! வா டா!”, என்றான் ராகவ். மூவரும் கிளம்பிச் சென்றனர். இரவு பத்து மணி ஆகியும் மூவரும் வீட்டிற்கு வரவில்லை. மிருணாவிற்குச் சாதாரணப் புடவைக் கட்டி விக்ரம் ரூமில் அம்மாக்கள் விட்டுச் சென்றனர்.

 

இரவு பன்னிரண்டு மணி போல் மூவரும் வீட்டுக்கு வந்தனர். விக்ரம் ரூமுக்கு வந்து பார்க்கும்போது மிருணா ஓவியம் போல் ஜன்னல் பக்கத்தில் கைகளைக் கட்டி வெளியே  பார்த்துக் கொண்டு நின்றாள். விக்ரம் தன்னை மறந்து அவள் பக்கத்தில் நெருங்கினான். உடலில் மூச்சுக்காற்று பட்டதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள் .

 

விக்ரம் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு, ” மாமா அத்த கிட்ட பேசுனியா மிரு??”, என்றான் விலகி அவள் முகத்தைப் பார்த்து.

 

“ம்ம்..”.

 

“என்ன சொன்னாங்க??”.

 

“அவங்க கல்யாணத்த வீடியோ கால்லப் பார்த்தேன்னு சொன்னாங்க”.

 

“அப்புறம் ஏன் இப்படி இருக்க?? உடம்பு ஏதும் சரியில்லையா??”, என்றான் கன்னம் நெற்றி தொட்டுப் பார்த்து.

 

“இல்ல! எனக்காக உங்க வாழ்க்கையத் தியாகம் பண்ணிட்டீங்களா.. அதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு “, என்றாள் கலங்கிய குரலில் அவனை விட்டுத் தள்ளி நின்று.

 

“என்ன சொல்ற?? எனக்கு ஒன்னுமே புரியல”, என்றான் குழப்பமாக.

 

“அந்த சிவா கிட்ட இருந்து என்னைய காப்பாத்தத் தானே கல்யாணம் பண்ணுனீங்க, அவன் சவால் விட்டனால தானே இன்னைக்கு அவசர அவசரமா என் அம்மா அப்பா கூட இல்லாம என் கழுத்துலத் தாலியக் கட்டுனீங்க”, என்றாள் அழுகையுடன்.

 

“உனக்கு என்னப் பைத்தியமாடி??  நா ஏன் அப்படி நினைச்சுத் தாலி கட்டப் போறேன்?? என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே..,

 

“வேற வழி இல்லையே பாவம்னு தானே கட்டுனீங்க”, என்றாள் அழுகையுடன்.

 

“ஹேய்!! லூசு மாதிரி பேசாதடி, இந்த சிவா சவால் விட்டான்னு பாவம் பார்த்துத் தாலி கட்டுனேன்னு நினைச்சியா?? இல்ல! என்னைக்கா இருந்தாலும் நீ தான் என் மனைவி, அத யாராலையும் மாத்த முடியாது”, என்றான் அழுத்தமாக.

 

“என்ன சொல்றீங்க??”, என்றாள் குழப்பமாக.

 

“உன்ன என் உயிர்க்கு மேல லவ் பண்றேன் மிரு, அதனால தான் கல்யாணம் பண்ணுனேன், நீ தான் என் உயிரே!!”, என்றான் காதலுடன்.

 

மிருணா கோவமாக அவன் சட்டையைப் பிடித்து, ” என்னடா நினைச்சுட்டு இருக்க?? காலையில கைதின்னு சொன்ன, அடுத்த கொஞ்ச நேரத்துல மனைவியாக்குன, இப்பக் காதல்னு சொல்லுற என்னையப் பாத்தா உனக்கு எப்படி தெரியுது?? அந்த சிவா வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணப் பார்த்தான், நீ என்கிட்ட கல்யாணம் பண்ண சம்பந்தமான்னு ஒரு வார்த்தைக் கூட கேட்கல, இந்த சந்தர்ப்பத்தப் பயன்படுத்தி என் கழுத்துலத் தாலி கட்டிட்ட, இப்ப  உனக்கும் அந்த சிவாவுக்கும் என்ன வித்தியாசம்???”,  என்று ஆத்திரத்தில் வார்த்தையை விட்டாள்.

 

இதன் தொடர்ச்சி அடுத்த லிங்க்கில்………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!