Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) சிறப்புப் பதிவு

கிரேக்க மணிமகுடம்

(வரலாற்று நெடும்தொடர்)

சிறப்புப் பகுதி

கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள்



Advertisement

I. கதாநாயகன் பக்கத்து கதாபாத்திரங்கள்:

1. இளமாறன்:

@. சோழ தனிப்படை தளபதி.

Advertisement

@. சோழ இளவல் நலங்கிள்ளி, பாண்டிய அரசன் நன்மாறனின் உயிர் தோழன்.

Advertisement

@. கதையின் மையப்புள்ளி இந்த கதாபாத்திரம் தான்.

2. சோழ இளவல் நலங்கிள்ளி:

@. ஆவூர் கோட்டையின் தலைவன்.

Advertisement

@. கரிகால சோழனின் இளைய மகன் என்று வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்படுபவன்.

@. வேல்விழி தேவியின் காதலன்.

3. பாண்டிய அரசன் நன்மாறன்:

@. வேல்விழி தேவியின் மூத்த சகோதரன்.

@. நலங்கிள்ளியின் அரச கனவில் உள்ள நியாயம் காரணமாக அவனை முழுமையாக ஆதரிப்பவன்.

4. வேல்விழி தேவி:

@. பாண்டியன் நன்மாறனின் சகோதரி.

@. நலங்கிள்ளியின் காதலி.

@. இளமாறனின் பாசத்திற்குரிய உடன்பிறவா சகோதரி.

5. ஞானபிரம்மர்:

@. சோழ தேசத்தின் பிரதம அமைச்சர்.

@. சோழ அரசர்களின் குரு, போர்க்கலைகளையும் வியூகங்களையும் வகுப்பதில் வல்லவர்.

6. பூவிழி:

@. சோழத்தின் பெண் ஒற்றர் படை தலைவி. சேந்தனின் மனைவி.

7. சேந்தன்:

@ ஞானபிரம்மரின் சீடன். பூவிழியின் கணவன். இளமாறனின் ஆஸ்தான ஒற்றன்.

8. போரிடஸ்:

@. இளமாறனின் சோழ தனிப்படையின் தலைவன்.

@ கிரேக்கத்தில் இருந்து மரக்கலனில் அடிமை மாலுமியாக வந்த பொறியாளன். போர்க்கலையிலும் பொறிகள் வடிவமமைப்பதிலும்  நிபுணன்.

9. பர்ஷீத்:

@. அராபிய தாய்க்கும் கறுப்பினத்து தந்தைக்கும் பிறந்த அடிமை. போரிடஸ் உடன் வந்தவன். இளமாறனால் இருவரும் சோழத்தில் தங்கி பெருமைக்குரிய நிலையை பெற்றனர். இளமாறனின் நிழல்கள் இருவரும்

10. மாரப்பதேவன்:

@.  மணிமேகலையின் தந்தை. இளமாறனின் தாய் மாமன்

@ காந்தளூர்ச்சாலை பாசறையின் தலைவன்.

………………………..

II. கிரேக்க ஆதரவாளர்கள் வரிசை:

1. ஆலிமா:

@. கதையின் கிரேக்க, மற்றும் அரபிக்கடல் பகுதிக்கும் மூன்றாம் பாகத்தில் வரும் இறுதிப்போர் பகுதிக்கும் நாயகி.

@. செலுக்கியசின் மகள். கடல் அரசி என்று ஏஜியன் கடல் பகுதியில் அழைக்கப்படும் கடற் கொள்ளைக்காரி.

@. அக்கோட்டஸின் பரம எதிரி. அக்கோட்டஸை கடலில் ஆதிக்கம் செலுத்த விடாமல் தடுப்பவள். கிரேக்கத்தின் பேரரசு மேலும் கிழக்கு பகுதிக்கு பரவுவதை தடுப்பவள்.

@. ரினீவா தீவின் ராணி

2. சவ்ஜித்தா:

@. ரினீவா தீவின் ஆளுநர் பொறுப்பில் இருப்பவள்.

@.  ஆலிமாவின் உயிர்தோழி.

3. பாஹ்லாஸ்:

@. ஆலிமாவின் உடன்பிறவா மூத்த சகோதரன். சீன நாட்டை சேர்ந்த அற்புதமான போர் வீரன்.

@. ஸ்கேட்ஸ் மரக்கலனை வடிவமைத்தவன். ஆலிமாவின் நிழல்.

@. இறுதிப்போரில் இவனது ருத்திரதாண்டவத்தை பார்க்கலாம்.

4. மேக்கண்டிஸ்:

@. ரினீவா கடல் தளத்தின் பொறுப்பு அதிகாரி.

@. அக்கோட்டஸை வீழ்த்த நேரம் பார்ப்பவன். ஆலிமாவின் சகோதரன். செலுக்கியசின் மனைவி ஈரோவின் மகன்.

…………………….

@@@. மணிமேகலை:

@. சேரத்து காந்தளூர்ச்சாலை பாசறை தலைவர் மகள். இளமாறனின் முறைப்பெண்.

@. பாண்டியன் நன்மாறனால் ஒருதலையாக நேசிக்கப்பட்டவள்.

@ இந்த கதையின் இரண்டாம் பாகத்தின் அரசியல் சதுரங்கத்தில் முக்கிய பகடைக் காய்.

@@@. ஏதென்னா:

@. கிரேக்க இளவரசி. இளவரசன் டையோனிசின் இளைய சகோதரி.

@ இளமாறனின் மீது கொண்ட காதலால், கிரேக்கம் விட்டு சோழ தேசம் வரப் போகின்றவள். கதையின் முக்கிய கதாபாத்திரம்.

@. கதையின் இரண்டாம் மூன்றாம் பாகத்தில் வரப்போகும் அழகிய புயல். கதையின் நாயகியும் இவளே.

…………………

III. எதிர் அணி பாத்திரங்கள்:

1. சேரன் இரும்பொறை:

@ கதையின் அடிப்படையான ராஜ்ஜிய விஸ்தரிப்பின் வியூகக்காரன் இவனே.

@ வெண்ணிப்போரின் தோல்விக்கு பழிவாங்கும் திட்டத்துடன் இவன் வகுக்கும் சதி வலைகள் மிகவும் முக்கியம்.

2. அக்கோட்டஸ்:

@. கிரேக்க  பெரும்படையின் கடற்ப்போர் தளபதி.

@ கிரேக்க அரசரின் மைத்துனன். இளவரசன் டையோனிசின் மாமா. அரசரின் நெடிய கனவையும் சதியையும்  நிறைவேற்ற கிளம்பியவன்.

@ கடல் அரக்கன், வில்லன், கொடூரன் எல்லா பெயரும் செயலும் இவனுக்குப் பொருந்தும். மாபெரும் பலசாலி.

3. மீர்காலீஸ்:

@ அக்கோட்டஸ் மற்றும், இரும்பொறைக்கு தூதுவன். இந்த கதையின் கடற்போர் பகுதிகள் இவனாலேயே அதிகம் நடக்கும்.

@. சதிக்கும் இவனுக்கும் அப்படியொரு பொருத்தம். சதியின்றி இவனில்லை.

4. ஸ்ரீவராகநம்பி @ சீத்தலையார்

@ ஒட்டுமொத்த கதையின் சூத்திரதாரி. சேரன் இரும்பொறையின் குரு. சேரத்தின் பிரதம அமைச்சர்.

@.  சோழத்தில் சீத்தலையார் வேடமிட்டு சதிகள் செய்பவர்.

@ கிரேக்கர்கள் சோழத்தை கைப்பற்ற வியூகம் போட்டுக் கொடுத்தவர்.

5. ஆதிரை நம்பி:

@ ஸ்ரீவராகநம்பியின் சீடன். சேர உளவாளி. மிகவும் குரூரமான சிந்தனை உள்ளவன்.

6. இரும்பிடைவல்லன்:

@. நெடுங்கிள்ளியின் தாய்மாமன். சோழத்தின் நிர்வாகி.

@. கரிகாலன் சிம்மாசனத்திற்கு ஆசைப்பட்டவன். சோழ சக்ரவர்த்தி கனவில் இருப்பவன்

@ சீத்தலையாருடன் சேர்ந்து கொண்டு, கிரேக்க பெண்ணுக்கும், பொன்னுக்கும் ஆசைப்படுபவன்.

7. நெடுங்கிள்ளி:

@. கரிகாலன் மூத்த மகன். இளவரசு பட்டம் கட்டியிருப்பவன்.

@. இரும்பிடையானின் துர்போதனைகள் காரணமாக நலங்கிள்ளி மீது பொறாமை கொண்டவன்.

@ கதையில் முக்கிய கதாபாத்திரம் இவனே. இவனது சோழ அர்சனாகும் கனவும், வாரிசுப் போட்டியுமே

கதை நடக்கும் காலத்து தோராயமான வரைபடங்கள் வாசகர்கள் புரிதலுக்காக. கீழே:

கதை நடைபெறும் காலத்தில் தமிழக அரசுகள் மற்றும் முக்கிய இடங்கள்

 

சேரத்தின் பகுதிகள்
மும்முடி அரசர்கள் ஆண்ட பகுதி
கிரேக்கத்தின் தற்போதைய வரைபடம்
கதை நடக்கும் போது கிரேக்க சாம்ராஜ்யம் 

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!