Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

High on kaadhal

கெளதம் பேகனின் ” High on காதல் – 10 “

November 2019,

 

அபர்ணா வந்ததற்கு பிறகு ஸ்ருதியை பற்றி எதோ ஒரு வகையில் முன்பு போல் நியாபகம் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டே இருந்தது …

இந்த பக்கம் அருண் இப்படி ஸ்ருதியை பற்றி நினைக்கையில் அபர்ணாவோ  மறுபடி அருணிற்கு whatsapp-ல்..



Advertisement

ஒவ்வொரு நாள் இரவும் Kiss smileயுடன் Wink smileயும் அனுப்பி விட்டு அங்கு Teddy bear – ஐ அருணாக நினைத்து கட்டி பிடித்து கொண்டே தூங்க போனாள் அபர்ணா..

 

இப்போதெல்லாம்  அருணிடம் எல்லா விஷயத்தையும் சொல்ல ஆரம்பித்தாள் அபர்ணா.. அவளை பொறுத்த மட்டும் அருண் தான் அவளுக்கு Boy friend. அப்பொழுது தான் அருணிற்கு ஒன்று உரைத்தது.. ஸ்ருதியின் சில குணங்கள் அபர்ணாவிடமும் இருந்தது .. சரி எல்லா பெண்களுக்கும் இருக்கும் குணம் தான் என்று பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..

Advertisement

 

Advertisement

ஒரு வேளை அதனால் தான் அபர்ணாவிடம் சீக்கிரமே Attract ஆகி விட்டானோ??  யோசித்து பார்த்தால் உண்மையாக தான் பட்டது.. வேற ஏதும் நடக்காம  இருந்தா  சரி.. என்று யோசித்து கொண்டே இருந்த பொழுது தான் அடுத்த நாள் அபர்ணாவிடம் இருந்து வந்தது ஒரு மெசேஜ்!!

 

நான் உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா..

Advertisement

 

சொல்லுயா

 

என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா??

 

பிடிக்காம பேசுவேனா ??

 

அந்த பிடிக்கிறத நான் கேக்கல.. என் மேல உங்களுக்கு Interest  இருக்கா?

 

Interest – னா?? புரியாத மாதிரி கேட்டான்  அருண்.

 

உங்களுக்கு உண்மையிலேயே புரியலையா இல்ல. புரியாத மாதிரி இருக்கீங்களா?? Am in love with you.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா ??

 

அப்பொழுது தான் Seriousness-ஸை உணர்ந்தான்

 

அபர்ணா உனக்கு இருக்குறது just ஒரு Crush and Infactuation தான்..So எதையாவது போட்டு குழப்பிக்காத marriage வரைக்கும் நமக்கு செட் ஆகாது..

 

அப்போ என்னை பிடிக்கலையா ?? ஏட்டிக்கு போட்டியாய் ஸ்ருதியை போலவே அபர்ணா..

 

இது பிடிக்குதா பிடிக்கலையானு விஷயம் இல்ல.. என்னை பத்தி உனக்கு என்ன தெரியும் சொல்லு ??

 

நீங்க ரொம்ப ஸ்வீட்.. ரொம்ப நல்லவங்க..

 

சின்ன பிள்ளை மாதிரி பேசாத அபர்ணா..  என் நெலமை உனக்கு என்னனு தெரியாது

உங்க நெலம எனக்கு நல்ல தெரியும்.. நான் நல்ல பாத்துப்பேன் உங்கள.. Please.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..

 

நான் கல்யாணம் பண்ணிக்குற ஐடியாவே இல்லசெட் eh ஆகாது.. Already  நெறய  Hurt ஆகிருக்கேன்..  இனிமேல் Hurt ஆக தயாரில்லை புரிஞ்சுக்கோ.

 

நான் அதை heal பண்றேன்.. உங்கள நல்ல பாத்துப்பேன்

 

[the_ad id=”6605″]

 

 

ஏன்டா பேசினோம் என்பது போல் ஆனது அருணிற்கு சொல்வதை கேட்கும் நிலையில் அவள் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

 

ஸ்ருதியின் இன்னொரு Format தான் அபர்ணா என்பது தெளிவாக தெரிய தொடங்கியது..  அவளிடம் இருக்கும் அதே அடம்.

 

இதே போல் அபர்ணா compel செய்து, ஒரு கட்டத்தில் அவளை Accept செய்து பிறகு இருவரும் Relationship- இல்.. அதே போல் மீண்டும் நடு தெருவில் அருண்.

காட்சி கண் முன் விரிய, மரண பயம் வந்து போனது அவனுக்கு..

 

இந்த கதையே வேணாம் பா.. வாழ்க்கை பூரா நான் தனியாகவே இருந்துகிறேன். என்று முடிவு செய்தான்.

 

இதுக்கு மேல இது மாதிரி நீ பேசுறதா இருந்தா நாம பேச வேணாம்

 

Cut and right ஆக சொல்லிவிட்டான்…

 

ஒரு பக்கம் பாவமாக தான் இருந்தது. ஆனால் This is really too fast. அவளே ஒருநாள் புரிஞ்சுக்கவா என்று தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

 

அதுவும் அபர்ணா வேற 2k கிட்.. சுத்தமாக நம்பிக்கையே இல்லை அருணிற்கு. ஒன்று இவர்கள் பக்கமே போக கூடாது அல்லது இவர்களை போல Take it Easy ஆக Relationship- இல் இருக்க வேண்டும். நமக்கு அது ல set -eh ஆகாது!!

 

இரண்டு நாட்கள் இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை. ஹாய், பை தவிர.  அடுத்த நாள் அபர்ணாவிடம் மெசேஜ்

சாரி என் மேல தான் தப்பு. நான் இனிமேல் எதுவும் உங்களை disturb பண்ண மாட்டேன் நீங்க சந்தோஷமா இருங்க sorry !!

 

disturb பண்ண மாட்டேன்னா

 

நீங்க இதுக்கு முன்னாடி எப்படி இருந்திங்களோ அப்படியே இருங்க உங்க Life நான் நடுல வர மாட்டேன்!

 

அப்போ பேச போறதில்லனு சொல்ல வரியா ??

 

அமைதியாக அவள்…

 

ஒரு நல்ல Friend-டா தானே உன்னை பாத்தேன் ..என்னோட பிரச்னை எல்லாம் மனசு விட்டு சொன்னேன். ஒரு வேளை நான் சொன்னது தான் தப்பா ??

 

உங்க மேல எந்த தப்பும் இல்ல, நான் தான் ரொம்ப serious ஆயிட்டேன். உங்க கிட்ட பேசினாலே எனக்கு எதோ தோணுது !!

 

 

சரி அப்போ நீயும் விட்டு போக போற அதானே !!!

 

அருணிற்கு என்ன வேண்டும் என்று அவனுக்கே தெரியாத சூழ்நிலையில் சூழ்ந்து விட்டான் …

 

ஒன்னு நீங்க என்னை Love பண்ணனும்.. இல்ல உங்க life- நான் இருக்க கூடாது!! இத தவிர எனக்கு வேற வழி தெரியல!! உங்க கிட்ட பேசின நான் இன்னும் hurt தான் ஆகிட்டு இருப்பேன், நான் பேசாம உங்களை block பண்ணிட்றேன்!!

 

சரி உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு.. Sorry If I have hurted you by any means!

 

 

July 2017,

மாலை நந்திதாவே அருணுக்கு கால் செய்தாள்..

Hey..சொல்லு நந்திதா !!!

 

Arun..It seems shruthi is very strong with her decision.. You better carry on with your life..

 

புரியல ..

 

எனக்கு புரியுது bro.. It is very hard for you too.. Please move on.. And also she needs some time to unlove you..

 

unlove?? புதிதாக இப்படி ஒரு வார்த்தையை பற்றி கேள்வி பட்டான் அருண்!!  ஒஹோ, ஒருத்தரை வெறுப்பதற்கு Unlove னு Term ah ?

 

எங்க ரெண்டு பேரு நடுல நீ யாரு மொதல்ல ?? கோபம் பொத்திக்கொண்டு வந்தது

 

……

[the_ad id=”6605″]

 

 

எவ்ளோ வருஷமா உனக்கு ஸ்ருதியை தெரியும் ..நானும் ஸ்ருதியும் கம்மிட் ஆகுறதுக்கு முன்னாடி eh Friends தெரியுமா?? எதுக்கு உன்னை விட்டு பேச சொல்ற அவ?

 

அதெல்லாம் சரி bro.. but எந்த பொண்ணுக்கும் தன்னை அடிமை மாதிரி பாக்கிற பையனை பிடிக்காது !!

 

பெண்ணடிமை எங்க இருந்து வந்துச்சுஇங்க நான் ஒரு பொண்ணா இருந்து ஸ்ருதி பையனா இருந்த கூட இதே மாதிரி தான் சண்டை போட்ருப்பேன்!!! உரிமையோடு argue பண்ணிருப்பேன்.. எங்க இருந்து தான் இவங்க கெளம்புவாங்களோ என்று நினைத்தபடி!!

இதெல்லாம் உனக்கு சொல்லணும்னு இல்ல.. அவளை பேச சொல்லு,, ரத்தம் கொதித்தது அருணிற்கு!!

 

மொபைலை வாங்கினாள்  ஸ்ருதி.

 

 

அருண் அடலீஸ்ட் என் Friends கிட்டகொஞ்சம் மரியாதையா நடந்துக்கோ!!!

 

ஸ்ருதி நீ எதுவா இருந்தாலும் பேசு!! இவளுக்கு என்ன தெரியும் நம்மள பத்தி சொல்லு?? நமக்குள்ள ஆயிரம் இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் !! அவ என்ன பேசுறா தெரியுமா??

 

ஏன் இதுவே உன் Friends என்ன லா  பேசினாங்க என் கிட்ட நியாபகம் இருக்குல ? அப்போ கேக்க உன்னால முடியலஇப்போ என் Friend எனக்காக பேச கூடாதா ??

 

எப்போவோ அருண் நண்பர்களோடு சண்டை வந்த தருணத்தை நியாபகம் வைத்து குத்தி காட்டினாள் ஸ்ருதி ..

 

எப்போவோ நடந்தத இப்போ ஏன் கொண்டு வர?? சரி விடு நேர்ல நம்ம பேசி தீர்த்துக்கலாம் ..

 

அந்த ஸ்டேஜ் தாண்டிடுச்சு அருண்..

 

Am very  stubborn!! Am not going to come back again that’s all!!  this is not working anymore!! Let’s Move on! என்று கூறி காலை துண்டித்தாள்

 

அதற்கு பிறகு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அருண் பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை அவள்..

 

Hyderabad- இல் இருப்பதால் நேரில் சென்று பேச முடியாத சூழ்நிலை.. Almost  ஸ்ருதியின்  எல்லா நண்பர்களிடமும் பேசினான்.. அவளின் அனைத்து நண்பர்களும் சொல்லிவைத்தால் போல அவனிடம்.

 

அருண் !! Please move on with your life!

 

கண்டிப்பாக over night-இல் நடந்த விஷயம் அவனது breakup என்பது மட்டும் தெரிந்தது..

 

தங்களுக்குள் இத்தனை ஆண்டுகளில் நடந்து கொண்டு இருந்த கருத்து வேறுபாடுகள், சண்டைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரிவிற்கும் ஸ்ருதியின் முடிவிற்கும்  விதை போட்டிருப்பதை உணர்ந்தான்..

 

Long distance relationship இது தான் பிரச்சனையே!!!

 

ஆனா இவ்வளவு நாள் எல்லாத்தையும் பொறுத்துகிட்டு இப்போ மட்டும் ஏன் ??

 

இந்த மாதிரி ஒவ்வொரு தடவையும் பிரச்னை வரும் போது அவளின் எல்லா நண்பர்களுக்கும் தெரிஞ்சுருக்கும்  போல.. அவளோட Point of view la இருந்து அவ அவங்க கிட்ட சொல்லும் பொது அவங்களால மட்டும் என்ன சொல்ல முடியும்??

 

ஸ்ருதி you deserve a better life ya!“

 

“Worth aana relationship மாதிரி தெரியல.. எதுக்கும் யோசிச்சுக்கோ !!!”

 

இப்படியே எவ்ளோ நாள் சண்டை போட்டு வாழ்ந்தது இருப்பிங்க? அப்படி எதுக்கு ஒரு Relationship!!”

 

ஒருவேளை இப்படி அவ friends சொல்லிருந்தா  இப்படி ஒரு முடிவு எடுத்துருப்பாளோ ஸ்ருதி!!

இன்னும் எப்படியோ எல்லாம் யோசிக்க ஆரம்பித்தான்!!

 

இதை பற்றி ஒவ்வொரு நாளும் நெனைக்க நெனைக்க தலை சுற்றியது.. இதயம் வெடித்து விடும் வேகத்தில் துடித்து கொண்டு இருந்தது.

 

இரவு நேரங்களில்  என்பதால் புரண்டு புரண்டு படுத்தான் தூக்கம் வரவில்லை இப்படி தானே அவளுக்கும் இருந்துருக்கும் நான் அவளை avoid பண்ணிய பொழுது!!  பாவம் எவ்வளவு வேதனை இருந்திருந்தால் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பாள்!!!

தன்னையே வெறுக்க ஆரம்பித்தான் அருண்.

 

பிறகு அவளின் பிறந்தநாளிற்கு Surprise ஆக கேக் -odu ஹைதெராபாத் சென்றான்…  கூடவே ஒரு Sorry card-um!!

 

வெடித்து அழுது என் பர்த்டே அன்னிக்கு கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா ?? தயவு செஞ்சு என் life- இருந்து போய்டு!!  நண்பர்கள் அத்தனை பேர் மத்தியிலும் அவமானப்பட்டான் அருண் !!

 

அவள் சென்னை வந்த பொழுது வீட்டிற்கு ஓடினான் அருண்!! Hug பண்ணிட்டா எல்லா பிரச்னையும் சரி ஆகிடுமே என்று அற்பமாக

 

வீட்டுக்கு  வர வேலை வெச்சிக்காத இனிமேல் !!

 

இன்னும் பல அவமானத்தையும் அவன் தவிர்க்க பட்டதையும் தாங்கி கொண்டான்  என்றாவது அவள் மீண்டும் அவனுக்காக வருவாள் என்று.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவளுக்கு  எல்லாமுமாய் இருந்த அவன்  இப்பொழுது ஒன்றுமே இல்லாதவன் ஆனான் !!”

 

மலேஷியா விமானம் போல எங்கோ மாயமாய் மறைந்தாள் அவள்.. சென்னை விமான நிலைய கண்ணாடி போல தினம் தினம் உடைந்து கொண்டே இருக்கிறேன் நான்.. “

 

இன்னும் இது போன்ற பல கவிதைகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்தான்.

 

ஸ்ருதியை பற்றிய அபிப்ராயம் பிரிவுக்கு பிறகு அருணிற்கு அடிக்கடி மாறி கொண்டே இருந்தது.

 

இப்படி விட்டுட்டு தான் போகணும்னா எதுக்கு இவ்ளோ வருஷம் இவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டு இருக்கணும்!!!  அப்போவே போயிருக்க வேண்டியது தானே

 

Cha.. என்ன தான் இருந்தாலும் நான் அப்படி react பண்ணிருக்க கூடாது ரொம்பவும் hurt பண்ணிட்டேன்!!

 

Relationship- இந்த மாதிரி  சண்டை சகஜம் தான்!!! அதுக்கு னு இப்படி தான் விட்டு போய்டுவாங்களா

 

என் மேல மட்டுமே தப்பு இருக்கு??  அதான் இவ்ளோ இறங்கி வந்து இருக்கிறனே!!  இதுக்கு மேல என்ன Expect பண்றா அவ? கால்ல விழணும்னா ???

 

எவ்ளோ மன்னிப்பு கேட்டாலும் நான் செஞ்ச தப்பை சரி செய்யவே  முடியாது. !!

 

தான் நினைக்கும் பல விஷயங்களை யாருக்கும் சொல்ல முடியாமல்

உள்ளுக்குள் தவித்தான் அருண்!!!

 

அப்போது தான் ஷிவா சொன்னான் …

டேய் நீ திரும்பி திரும்பி அவ பின்னாடி போகுறதால தான் அவ உன்னை மதிக்க மாட்டுறா

நீ silent ah இரு அவளா தேடி வருவா

அப்படியும் ஸ்ருதி வருவதாக தெரியவில்லை … இன்று வரை

gowthambegan

An Entrepreneur!! கன்னி எழுத்தாளன்.. தவழ தொடங்கி இருக்கும் எனது எழுத்து நடையிலும் கதை சொல்லிய விதத்திலும் பிழைகள் இருந்திருந்தால் ஒரு குழந்தையை கைபிடித்து நடத்திச்செல்லும் வகையில் ஏற்றுக்கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துக்களுக்கும் கனிவுக்கும் தொடர்பு கொள்க .. https://www.facebook.com/gowtham.began

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!