காலையில் விழித்து பார்த்தால் மணி 8. என்னதான் Sunday என்றாலும் எழுந்து உட்கார்ந்து கொண்டான். ஸ்ருதியிடம் இருந்து எதாவது Message வந்திருக்கிறதா என்று (வழக்கம் போல் !) போனை செக் செய்ய எடுத்த போது தான் தெரிந்தது Battery Dead!
சலித்து கொண்டே சார்ஜ் போட்டு விட்டு அன்றாட வேலைகளை செய்ய தொடங்கினான். Charge ஏறிய மொபைலை on செய்த போது தான் தெரிந்தது. யாமினி நேற்று இரவு 11.45- க்கு Message அனுப்பியிருக்கிறாள்…
Hey there?
Yeah. என்று அனுப்பி 2 நிமிடத்துக்கு ஒரு முறை Notifcations -ஐ Check செய்து கொண்டு இருந்தவனுக்கு வந்தது 5வது நிமிடத்தில் பதில்!!!
Thoongitya??? , Good morning!! – என்று ஸ்மைலியுடன்!!!
பதில் வணக்கம் போட்டு இருவரின் School மற்றும் College விவரங்களை பரஸ்பரம் விசாரித்து கொண்டனர். அருணிற்கு உள்ளுக்குள் அவனது Shortfilm பற்றி இவள் ஒன்றும் சொல்லாதது ஒரு பக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் அவள் Initiative எடுத்து பேசுவது Comfortable ஆக இருந்தது.
பேச ஆரம்பித்த அரை மணி நேரத்தில், அதுவும் ஒரு நாள் கூட கடந்திராத சூழ்நிலையில் அவள் அவனிடம் அப்படி கேட்டது அருணிற்கு தூக்கி வாரி போட்டது!!!
If you are okay, Shall we start sexting?
ஸ்ருதியிடம் பல சந்தர்ப்பங்களில் நெருக்கமாக அவ்வப்போது இருந்தாலும் முக்கியமான “அந்த” Matter- eh கல்யாணத்திற்கு பிறகு தான் என்ற கொள்கையோடு இருந்தவனுக்கு யாமினியின் இந்த கேள்வி சற்று திக்கு முக்காட தான் வைத்து இருந்தது.
இப்போ நான் என்ன பெருசா பண்ணிட்டேன்??? அவளா தானே கேக்குறா ??அதெல்லாம் ஒன்னும் தப்பில்லை!!! நானும் மனுஷன் தானே!!
தனக்கு தானே நியாயம் சொல்லி கைகள் நடுங்கிக்கொண்டே ரிப்ளை செய்ய தயாரானான்..
I don’t mind actually.
[the_ad id=”6605″]
இந்த மாதிரி எல்லாம் Adult texts அவனுக்கு பழக்கம் இருந்ததே இல்லை… அவனுடன் இருக்கும் நண்பர்களும் அவனை சார்ந்தவர்களும் ‘கரெக்ட்’ செய்த கதைகளை Over Exaggeration -odu சொல்லும் பொழுது தானும் இப்படி செய்ய வேண்டும் என்று அருணிற்கு அவ்வப்போது தோன்றியது உண்டு… பின்னர் ஸ்ருதியை நினைத்து
அவளும் இதே மாதிரி வேறு ஒரு பையன்கூட இருந்தா எனக்கு எப்படி இருக்கும் என்ற செய்து கொண்டு அது போன்ற எண்ணங்களை தவிர்த்து விடுவான்…
ஆனால் இந்த முறை என்னதான் ஆகுது ஒரு கை பார்த்து விடுவோம் என்ற முனைப்புடன் Texting – ஐ Continue செய்தான்…
எதை பற்றியும் அலட்டி கொள்ளாமல் எந்த வித Serious Relationship – um இல்லாமல் Fling செய்ய தான் யாமினி விரும்புகிறாள் என்று தெள்ள தெளிவாக அருணிற்கு புரிந்தது. அவன் நினைத்ததை விட வேகமாக இருந்தாள் அருணிடம் இருந்து Positive response வரவும் நம்பரை வாங்கி Call – eh செய்து விட்டாள்!!!
“Hey hiiii….” – அப்படி ஒரு Husky குரலை அது வரை அருண் கேட்டிருக்கவில்லை
Hello Yamini..
உன் voice ரொம்ப Manly a இருக்குடா. முந்திக்கொண்டாள் அவள்..
Hey thanks!! நீ கூட ஹஸ்கி -ya பேசுற – கிட்ட தட்ட வழிந்தான் அருண் நடுங்கிக்கொண்டே!!!
“Thankieee” – Cuteness overloaded moodil யாமினி!!
என்ன பண்ற ya இப்போ?
நான் இன்னும் எழுந்திருக்கவே இல்ல டா, Bed- ல தான் இருக்கேன் இன்னும் –
அடுத்து என்ன சொல்வது என்று விக்கித்து நின்றான் அருண்!!! தாறுமாறாக யோசித்து அமைதியாய் இருந்தவனை மறுமுனை யில் யாமினி,
ஹலோ.. ஹலோ கேட்குதா?
சிக்னல் இல்ல நெனைக்கிறேன் வெளிய வரேன் இரு! என்று பொய் சொல்லிவிட்டு சில Seconds Time எடுத்துக்கொண்டான் அருண்.
Yamini-ku என்ன சொல்வது என்று தெரியாமல்..
இப்போ கேட்குதா ?? இன்னுமா தூங்குற???
ஆமா… ஏன் நீ என்ன பண்ற??
குளிக்க போறேன்.. அவசரப்பட்டு எடுத்து கொடுத்து விட்டோமோ என்று அருண் நினைப்பதற்குள்….
அப்போ நானும் வரவா??– கீச்சு குரலில் சிணுங்கிக்கொண்டே யாமினி
உடலெல்லாம் வேர்த்து விட்டது அருணிற்கு… இருப்பினும் கெத்தை விட கூடாது என்று நினைத்து,
வந்தா? என்று கேட்டு தொலைத்தான் !!!
சொல்ல மாட்டேன் செய்வேன் என்று Husky Voice-ல் அதகளம் பண்ணி கொண்டு இருந்தாள் யாமினி!!
கிட்ட தட்ட ஸ்ருதியை பற்றி மறந்தே போன நிலையில் அருண்.
எப்போ?
என் வீடு வேளச்சேரி ல இருக்கு நாளைக்கு யாரும் இருக்க மாட்டாங்க… வரியா?
ஸ்ருதியுடன் தான் நெருக்கமாக இருந்த அத்தனை தருணங்களும் நொடி பொழுதில் மனதில் தோன்றி விட்டு மறைந்து குப்பென வேர்த்து விட தொடங்கியது அருணிற்கு…
கண்டிப்பா என்ற செயற்கை சிரிப்புடன், Hey Sorry yamini Will call you back in 10 Minutes என்று சொல்லி Call-ஐ துண்டித்தான்…
அப்படியே பத்து நிமிடம் Blank ஆனான்… Bed- இல் படுத்து கொண்டே ஏதேதோ நினைக்க தொடங்கினான்… மிகப்பெரிய பாவ செயலை செய்து விட்ட எண்ணத்தோடு மனதில் குமுறி கொண்டு இருந்தவனின் உடல் கொதிக்க தொடங்கியது… பயத்தில் ஜூரமே வந்து விட்டது…
இந்த விஷயம் மட்டும் ஸ்ருதிக்கு தெரிந்தால் ஜென்மத்துக்கு இனிமேல் திரும்பி கூட பார்க்க மாட்டாள் என்று நடுங்கியபடியே போர்வையை எடுத்து போர்த்தி கொண்டான்…
குளிக்க போறேன்னு சொல்லிட்டு என்னடா படுத்து கெடக்கற
என்றபடியே வந்த அருணின் அம்மா ஜுரத்தை கண்டு கஷாயம் வைத்து கொடுத்து அவனை தூங்க சொன்னாள்…
மாலை நான்கு மணிக்கு எழுந்தவன் சற்று பரவாயில்லை என்பது போல் உணர்ந்தான்.. மொபைல் -ஐ எடுத்து பார்க்கவே பயந்தான்.. சற்று ஆசுவாசமடைந்தே எடுத்து பார்த்த பொழுது யாமினியிடம் இருந்து Messages..
ஹேய் பேபி என்ன பிஸி ah?
[the_ad id=”6605″]
Guilt மனநிலையின் உச்சக்கட்டத்தில் நொந்து கொண்டு இருந்தான்…
அப்பொழுது தான் அவள் நேற்று சொன்னது நினைவுக்கு வந்தது.. Net disconnect செய்து விட்டு Messenger- இல் அவளின் Chat-ai மேலே Scroll செய்தான்..
I was in serious relationship with a guy but he ditched me.
மொத்தமும் புரிந்து விட்டது அவனுக்கு.. Serious Relationship – இல் தன்னை Ditch செய்தவனை பழிவாங்கவே தன்னிடம் இப்படி பேச ஆரம்பித்திருக்கிறாள் யாமினி…
ஒரு வேளை இது ஸ்ருதிக்கு தெரிந்து நான் Ditch செய்ததற்கு இது போல் அவளும் என்னை பழிவாங்க வேறு ஒரு பையனுடன்…………..
அய்யயோ…. மேற்கொண்டு நினைக்கவே பயம் கவ்வியது…. அதே அவசரத்தில் யாமினிக்கு Message Type செய்ய முனைந்தான்…
Am really very sorry yamini. I am actually in a relationship with someone. I should have told you. But I feel guilty now. Let’s forget everything and sorry for everything.
அனுப்பி விட்ட கையோடு யாமினியை Fb-யில் Block-ம் செய்தான் கூடவே … Delete all Messages- ம்…
“ தன்னை ஸ்ருதி வேவு பார்க்க தனது தோழியை விட்டு இப்படி Messages அனுப்பியிருப்பாளோ??”
இப்படி எதற்கெடுத்தாலும் ஸ்ருதியோடும் தன் காதலோடும் தொடர்பு படுத்தி கொண்டான் அருண்…
June 2017,
மதியம் Kipling Café Restaurant- இல் Lunch plan. ஸ்ருதியை பிக்கப் செய்துகொண்டான் அருண்.
“hey கேட்கணும்னு நெனச்சேன். நேத்து எதோ உங்க அப்பா கூட Passport size போட்டோ எடுக்கணும்னு போயிருந்தியாமே… என்ன Matter-u?
ஆமாடா US – Onsite Project Meeting சொல்லிட்டு இருந்தேன்ல அது ஒகே ஆயிடுச்சு.. அதுக்கான verification-காக தான் Photos எடுக்க போயிருந்தேன்… And You know what என்னோட CPA exam அங்க எழுதறதுக்கு Plan பண்ணிட்டேன் இந்த வாட்டி miss eh ஆகாது …
ஹே congrats!!!! செம்ம போ… கண்டிப்பா சூப்பரா பண்ணுவ.. எவ்ளோ நாள் ஆகும் திரும்பி வர??? எங்க stay???? மகிழ்ச்சியுடன் கேட்டான் அருண்.
Project meeting 3 Days தான்… அப்போ Accomodation ஆபீஸ் ல பாத்துப்பாங்க.. But Exams.. என் ஸ்கூல் Friend அங்க இருக்கான்.. அவன் Okay No problem..என் வீட்ல stay பண்ணிக்கோ– னு சொல்லிட்டான்… Ticket-ஸ் எல்லாம் போட்டாச்சு..
வண்டியின் வேகம் சற்று குறைந்தது….
வார்த்தையில் தடுமாற்றமாய் அருண்,
யார் அந்த Friend? எனக்கு தெரியுமா?
Prashanthu-னு சொல்லிட்டு உனக்கு தெரியாது. என் கிளாஸ் Mate School-ல
7 வருடமாக Relatonship ல இருக்கோம் எனக்கே தெரியாத Friend.. Close Friend மாதிரி தெரியலயே.. யோசித்து கொண்டே இருந்தபோது.
Hey என்னாச்சு??? என்ன யோசிச்சுட்டு வர??
ஒன்னும் இல்ல… ஏன் என்கிட்டே டிக்கெட்ஸ் போட்டது ல சொல்லவே இல்ல??? எனக்கு எதுவுமே தெரியலே!!!
நாம அப்போ சண்டை போட்டிருந்தோம்… உன்மேல ரொம்ப கோவமா இருந்தேன்.. அதான் சொல்லல ..
இருந்தாலும் இது மிகவும் முக்கியமான Sensitive விஷயம் தானே !!!! ஸ்ருதி தன்னிடம் சொல்லி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான் அருண்..
பிரஷாந்த் அங்க Family Oda இருக்கானா எப்படி ??
இல்ல தனி வீட்ல பிரண்ட்ஸ் கூட இருக்கான் !!!
உன் Friend ஒகே… அவன் Friends- ல இருக்காங்களே Safe –ஆ இருப்பியா ???
அக்கறையுடன் அவன் கேட்டது ஸ்ருதிக்கு உஷ்ணத்தை கிளப்பி விட்டது.
கேட்ட பிறகு தான் கேட்ட விதம் தப்பு என்று அருண் மண்டைக்கு உரைத்தது.
Safe na?? என்ன சொல்ல வர அருண்?? புரியல ??
hey இல்ல யா… தெரிஞ்ச பசங்க தானா??? US வேற.. Drugs, Guns அது இதுனு எதாவது பிரச்னை ஆகிட கூடாதுல உனக்கு…. தனியா வேற போற ….
அருண் என்ன ஒளறுற ???
உண்மையில் உளறி தான் கொட்டினான் அருண்….
உன் Safety- காக சொல்றேன் ஸ்ருதி…
[the_ad id=”6605″]
கொஞ்சம் பொறுமையுடன். அதெல்லாம் நான் பாத்துப்பேன். Don’t Worry I Will Manage.. எப்படியாச்சும் இந்த தடவ நான் Certificate வாங்கிடணும்.
அருணும் அந்த Topic- இல் இருந்து விடு பட எண்ணினான்..
ஆமா கண்டிப்பா. இவ்ளோ நாள் கஷ்டப்பட்டதுக்கு.. Definitely you will clear with flying colours.. Don’t Worry..
பைக்கை நிறுத்தியவுடன் நண்பர்களும் வந்து சேர இதை பற்றி இருவரும் பேசி கொள்ளவில்லை.
ஸ்ருதியின் ட்ரிப் முடிந்த பின்னர் எல்லாம் பேசி சரி செய்துகொள்ளலாம் என்று எண்ணினான் அருண். Plan படியே சில நாட்களில் அவளும் U.S. சென்றாள். ஆனால் அருண் மட்டும் எதோ ஒரு வித Non-sync இவர்கள் Relationship – இல் பின்தொடருவதை உணர்ந்தான்.
Something is not right!