Skip to content
Post Views: 3,073
“டேய், உனக்கு எதுக்குடா ஆர்ம் ஸ்லிங் பவுச் பெல்ட் (Arm Sling Pouch Belt) போட்டு விட சொல்ற?
அந்த அளவு ஒண்ணும் உனக்கு இஞ்சுரி இல்ல! ரெண்டே ரெண்டு ஸ்டிச் போட்டுருக்கேன்! அவ்வளவு தான்!
இந்த பெல்ட் எல்லாம் கைக்கு ரொம்ப மொபிலிட்டி கொடுக்காம ( கையை ரொம்ப அசைக்காமல்) இருக்கறதுக்கு போட்டு விடறது!
உனக்கு அதெல்லாம் தேவையே இல்லை!” ஆச்சர்யமுடன் கேட்டான் டாக்டர் தினேஷ்.
Advertisement
“டேய் எனக்கும் அது தெரியும்டா! எல்லாம் காரணமா தான் சொல்றேன்! வெளியில இருக்கா இல்ல, ப்ரீத்தி, அவளோட சிம்பதி இப்ப எனக்கு வேணும்!”
“டேய் ஒரு பொண்ண நீ ஏமாத்த, நான் ஹெல்ப் பண்ணனுமா? அதெல்லாம் முடியாது! எனக்குன்னு எத்திக்ஸ் இருக்கு!”
“என்னடா பொல்லாத எத்திக்ஸ், அன்னிக்கு நான் மட்டும் டுவல்த் பப்ளிக் பிராக்டிக்கல் எக்ஸாம்ல ஹெல்ப் பண்ணலன்னா, அன்னிக்கு எக்ஸ்டெர்னலா வந்த என்னோட மாமா ஹெல்ப் பண்ணலன்னா, நீ பிளஸ்டூவே பாஸ் பண்ணியிருக்க மாட்ட!”
Advertisement
“அப்புறம் எங்க டாக்டர் ஆறது! மனுசன்னா நன்றி மறக்க கூடா..” என்று மேலே பேசப் போன ராகுலின் வாயைப் பொத்திய தினேஷ்,
Advertisement
“போதும்டா, இதோட நீ இத ஆயிரம் வாட்டி சொல்லிட்ட! இப்ப என்ன, உனக்கு இந்த பெல்ட்டை போடணும் அவ்வளவு தானே, போட்டு விட சொல்றேன்!”
“அது மட்டும் பத்தாது, நான் அவ கிட்ட கொஞ்சம் ப்ரைவசியா பேசணும், என்னை இங்க அட்மிசன் போட்டுடு”
“டேய்.. இதுக்குப் போய் அட்மிசன் போட சொன்னா, அந்த பொண்ணுக்கே என் மேலே டவுட் வந்துடும்! வேணுமின்னா ஒரு மணி நேரம் அப்சர்வேஷன் வேணுமின்னா இருந்துட்டு போகணும்னு சொல்றேன்!”
Advertisement
“அப்ப, சீக்கிரம் எங்கள ரூமுக்கு அனுப்பு!”
“டேய், என்னடா என் தொழிலையே மாத்திடுவ போல!
இது எல்லாம் நல்லா இல்ல ஆமா!
ஊருக்குள்ள ஒருஒருத்தனுக்கு எப்படி எப்படியோ உயிரக் கொடுக்கிற பிரண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க, இவன் ஒருத்தன் இருந்துட்டு என்னைப் படுத்தறான்!”
“டேய்! ரொம்ப பேசாத! நான் அப்படி எத்தன பொண்ணுங்களடா இப்படி இங்க கூட்டிட்டு வந்து உன்கிட்ட ஹெல்ப் கேட்டு இருக்கேன்?
அவ இன்னும் சாப்பிடலடா! அவளை சாப்பிட வைக்க ஒரு ப்ரைவசியான இடம் வேணும்! அதுக்கு தான்!”
“சாப்பிட எதுக்குடா ப்ரைவசி? நேரா எதாச்சும் ரெஸ்டாரண்ட்டுக்கு கூட்டிட்டு போக வேண்டியது தானே!”
“அப்படி சாப்பிட அவ கொஞ்சம் ஹெசிடேட் பண்றா அது தான்!”
“சாப்பிட ஹெசிடேட் பண்றாங்களா? என்னடா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல!”
ராகுல் அவளுக்கு தன்னால் ஏற்பட்ட “இஞ்சுரியை” பற்றி சொன்னான்,
“அடப்பாவி, இப்படி அவங்க வீட்டுக்கே போய் இந்த அளவு அட்ராசிட்டி பண்ணியிருக்க!
அப்ப உன்னை நம்பி எப்படிடா இப்ப ஒரு ரூம்குள்ள அந்த பொண்ண தனியே அனுப்புறது?”
“டேய்… கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிச்சி, அத விட ரொம்ப கஷ்டப்பட்டு இந்த ஹாஸ்பிட்டல் கட்டி நடத்திட்டு இருக்கோம்டா, என் பொழப்ப கெடுத்துடாதே!”
“ச்சே ச்சே. அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது! காலையில ஏதோ ஒரு எமொசன்ல அப்படி அவ கிட்ட நடந்து கிட்டேன், அதுக்குன்னு எப்பவுமா அப்படியே நடப்பேன்! நம்புடா!”
“என்னமோ சொல்ற, நம்புறேன்! மத்தபடி என் கரியரே உன் கையில் தாண்டா இருக்கு! பார்த்து நட!”
“போடா, அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.”
“ம்ம். எல்லாம் என்னோட நேரம்!
அவன் சொல்ற மாதிரி, இப்ப தான் முதல் தடவையா, அவன் ஒரு பொண்ணோட வந்து ஹெல்ப் கேக்குறான்!
செய்வோம். இல்லன்னா செஞ்ச நன்றிய மறந்தவனுக்கு, அதிலும் நண்பனோட லவ்வுக்கு ஹெல்ப் பண்ணலைன்னா நரகத்தில் கும்பி பாகம் தான் தண்டனைன்னு எதாவது அடிச்சி விடுவான்!” என்று புலம்பியபடி அந்த டாக்டர் தினேஷ், ப்ரீத்தியை அழைத்து, பேசினான்.
“பாருங்க மேடம், ராகுலுக்கு அவனுக்கு பயப்படறா மாதிரியெல்லாம் ஒண்ணும் காயம் இல்ல, ஆனா, ஒரு வாரமாச்சும் கையை கொஞ்சம் அசைக்காம பார்த்துக்கணும்! அதுக்காக பெல்ட் போட்டு விட்டுருக்கேன். கேர் புல்லா பார்த்துக்கங்க!”
“சரி டாக்டர், நாங்க இப்ப போலாமா?”
“இல்ல ஒரு மணி நேரம் அப்சர்வேஷன்ல இருந்துட்டு போகட்டும்!
உங்க ப்ரிஸ்க்ரிப்சன் பார்மசிக்கு சென்ட் பண்ணிட்டேன். நீங்க அங்கப் போய் பேசன்ட்
ஐ டி சொல்லி வாங்கிக்கங்க!”
ப்ரீத்தி பார்மசிக்கு போய் மெடிசன்ஸ் வாங்கிட்டு வருவதற்குள், ராகுல் அவளுக்காக நாகு அண்ணாவை விட்டு அவளுக்காக சாப்பாடு வாங்கி வர வைத்து இருந்தான்.
அவன் இருந்த அறைக்குள் அவள் போனவுடன், “இப்ப எப்படி இருக்கு உங்க பெயின்?” என்று கேட்டபடியே அவனது மருந்துகளைப் பிரித்துப் பார்க்க தொடங்கினாள்.
“ப்ரீத்தி, முதல்ல நீ சாப்பிடு!” சாப்பாடு பார்சலைக் காட்டினான்.
“இல்ல வேணாம்!”
“ப்ச்ச். சாப்பிடும்மா!” அவன் கிட்ட வந்து அவள் மாஸ்க்கை கழற்றி விட்டு, அவள் உதட்டுகளை தன் இடது கை ஆள் காட்டி விரலால் மென்மையாக தடவி விட்டு, “சாரிம்மா!” என்றான்.
அவள் அவன் கையை தட்டி விட்டு கோபமாக முறைக்க,
“ஏய். இப்படி முறைக்காத, இது தான் என்னை அப்ப அப்படி நடந்துக்க வச்சுது! ப்ளீஸ்! அப்படி முறைக்காத! முதல்ல சாப்பிடு!”
அவளுக்கும் நல்ல பசி! எனவே ஒன்றும் சொல்லாது, சாப்பாட்டை பிரித்து பார்த்து விட்டு “என்ன இவ்வளவு இருக்கு! என்னால இவ்வளவையும் சாப்பிட முடியாது!” என்றாள்.
“உனக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடு! மிச்சம் இருந்தால் நான் சாப்பிடுறேன்!”
அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்து விட்டு, “கொஞ்சம் தயிர் சாதமாவது சாப்பிடுங்க!” என்று அவனிடம் அதை பிரித்துக் கொடுத்தாள்.
“நீ முதல்ல சாப்பிடு!” என்று அவன் சொல்ல, அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
ராகுல் அவனது இடது கையால் ஸ்பூன் கொண்டு சாப்பிட ஆரம்பிக்க, கொஞ்ச நேரத்தில் அது கீழே விழுந்து விட்டது! (நம்பிட்டோம்!)
“அச்சச்சோ” என்ற ப்ரீத்தி, இன்னும் ஸ்பூன் இருக்கிறதா என்று பார்சலில் பார்க்க, அது இல்லை!
“பரவாயில்லை ப்ரீத்தி, நீ சாப்டுட்டு, உன் ஸ்பூனைக் கொடு!”
“அய்யோ இதுவா வேணாம் இது எச்சில்!”
“பரவாயில்லை கொடு!” அவன் வாங்க கை நீட்ட, “இருங்க கழுவிட்டாவது கொண்டு வரேன்” என்று ப்ரீத்தி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அவன் அதைப் பிடுங்கி கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்!
ரெண்டு வாய் சாப்பிடுவதற்குள் அந்த ஸ்பூனும் கீழே விழுந்து விட்டது!
(இப்பவும் நம்பித் தொலைக்கிறோம்!)
“அச்சச்சோ, இதுவும் போச்சே! இப்ப என்னப் பண்றது, இத அப்படியே டஸ்ட் பின்ல போட்டுடு!” ராகுல் சொல்ல,
கொஞ்சம் யோசித்த ப்ரீத்தி, சட்டென அந்த பார்சலை அவனிடம் இருந்து வாங்கி, அவனுக்கு ஊட்டி விட்டாள்!
(இதற்கு தானே… ஆசைப்பட்டாய் ராகுல் குமாரா…!).
சாப்பிடும் போது ராகுல் கேட்டான்.
“ஏன் ப்ரீத்தி, என் மேல இருந்த கோபம் போயிடுச்சா?”
“ம்ம். அது எப்படி போகும்! அப்படிப்பட்ட வேலையா நீங்க செஞ்சு வைச்சுருக்கீங்க! ஆனா, இது ஒரு இரக்கம். ஒருத்தர் பாதி சாப்பாட்டுல இப்படி சாப்பிட முடியாம போனா பார்க்க, கொஞ்சம் பாவமா இருக்கு அதான்!”
ராகுல் அவளையேப் பார்த்தான்!
“ஏய் லூஸு!, உனக்கு என்மேல இருக்கிறது வெறும் சிம்பதி மட்டுமில்லடி! கூடவே லவ்வும் இருக்கு!
அத நான் உன் கண்ணுல பார்த்தேன், இன்னிக்கு காலையில, உன்னை அப்படி நெருக்கமா பார்க்கும் போது!
அது தான் எனக்கு அவ்வளவு தைரியம் கொடுத்துச்சு! இல்லன்னா நான் மட்டும் என்ன பொண்ணுங்க கிட்ட இப்படி மோசமா நடக்கிற ஆளா?
நீ மட்டும் என்ன, உன்கிட்ட வேற யாராவது இப்படி நடந்து கிட்டா, இப்படியா இருப்ப? கொன்னு தூக்குல போட்டு இருக்க மாட்ட?
இது உனக்கு எப்போ புரிய போவுதுன்னு தான் தெரியல!”
“என்ன அப்படி பார்க்குறீங்க?” ப்ரீத்திக் கேட்டாள்.
“ஒண்ணுமில்ல”, என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டு முடித்து, வாய் துடைக்க அவன் சட்டென்று யோசிக்காது அவள் சாரியின் முந்தானையில் துடைத்து விட, அவள் மீண்டும் முறைத்தாள்!
“ஷ்..ஷ் சாரி சாரி! நான் அப்படியே என் அம்மா நினைப்பில்.. சாரி சாரி! ப்ரீத்தி .. சாரிம்மா.” அவன் பதறி சொல்ல,
இப்போது ப்ரீத்தியை அவனின் அந்த “சாரிம்மா” உள்ளுக்குள் என்னமோ பண்ணியது!
அவள் ஒன்றும் சொல்லாமல், “நாகு அண்ணாவை வர சொல்லுங்க, நாம போகலாம்” என்றாள்.
“அவர் இல்ல ப்ரீத்தி, அனுவை ஸ்கூலில் இருந்து பிக் அப் செய்யணும் அவர் போய்ட்டார். நாம் எதாச்சும் கேப் புக் பண்ணிப் போகலாம்! நான் உன்னை உன் வீட்டில் விட்டு விட்டு போறேன்!”
“ம்ம்.” என்று சொல்லி விட்டு அவள் கேப் புக் செய்தாள்.
அவனின் மெடிசன்ஸ் இருக்கும் கவரை ப்ரீத்தி எடுத்துக் கொள்ள, இருவரும் லிப்ட்டில் வந்து நின்ற போது, ஒரு வார்ட் பாய், ஸ்ட்ரெச்சரில் ஒரு பேசண்டை தள்ளிக் கொண்டு லிப்டில் நுழைய, கூடவே இன்னும் இருவர் அந்த பெரிய லிப்டினுள் வந்தார்கள்.
அதில் ஒருவரைப் பார்த்த ப்ரீத்தி அதிர்ந்து, “அய்யோ” என்று சொல்லிக் கொண்டு, அப்படியே அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்!
தன் முகத்தின் வெகு அருகே பதட்டமுடன் இருந்த அவள் முகத்தைப் பார்த்த ராகுல் “என்ன ஆச்சு?” என்று மெல்ல கேட்க,
“என் பெரியப்பாவோட தம்பி!” அவள் இன்னும் அவனுள் ஒடுங்கினாள்!
“என்னது பெரியப்பாவோட தம்பியா? அப்ப அது உன்னோட அப்பா! உன் அப்பாவா அது?” அப்பாவ அப்பான்னு சொல்லாம இவ ஏன் இப்படி சொல்றா அவன் குழப்பத்துடன் கேட்டான்!
“ரொம்ப முக்கியம் இப்ப இந்த விளக்கம்! பெரியப்பான்னா, சொந்த பெரியப்பா இல்ல, என் அபி அத்தானோட மாமனார்! இங்க இருக்கிறது அவன் சின்ன மாமனார்!”
“அப்ப சரி, இப்படியே என் மேல சாஞ்சுக்கோ!”
“என்ன ஆச்சு தம்பி இந்த பொண்ணுக்கு?”
வந்தவரும் விடுவதாக இல்லை!
“ஒண்ணுமில்லங்க, இது என் ஒய்ப், கன்சீவா இருக்காங்க, லிப்டில் ஏறினதும் கொஞ்சம் கேரா இருக்காம்!” அள்ளி விட்டான் ராகுல்!
“ஓ! அப்படியா ஜாக்கிரதையா பார்த்துக்கப்பா!” அவர் ஒரு மாதிரி சிரித்து விட்டுப் போனார்!
அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை!
பெரியப்பா சிவக்குமாருக்கு ராதாகிருஷ்ணன் மாமா முறை என்றால் அவரது தம்பிக்கும் தானே!
அவருக்கு ராகுலை நன்றாக அடையாளம் தெரிந்தது! அவனுக்கு தான் தெரியவில்லை!
இவர்களை இங்கு வைத்துப் பார்த்தவர், உடனே கான் கால் போட்டு, இருவருக்கும் போட்டுக் கொடுத்து விட்டார்!
ப்ரீத்தியை அவள் வீட்டுக்கு கொஞ்சம் முன்னாடியே இறக்கி விட்டு சென்றான் ராகுல்!
வீடு அருகே அவனைப் பார்க்கும் போது, அவளுக்கு காலையில் நடந்தது மீண்டும் நினைவிற்கு வந்து மீண்டும் முருங்கை மரம் ஏறி விடக் கூடாது என்றே அப்படி செய்தான்.
வீட்டுக்குப் போன அவன, செய்த முதல் காரியம் சுமிக்கு போன் செய்தது தான்!
போனை எடுத்த சுமியிடம் இருந்து வாங்கிக் கொண்ட கிஷோர்,
“ப்ரோ, ரொம்ப தாங்க்ஸ் ப்ரோ! இப்ப தான் என் பொண்டாட்டிக்கு என் மேல கருணை வந்துருக்கு! நீங்களும் மறுக்காம லீவ் கொடுத்துட்டீங்க! உங்க ஆபிஸ் ப்ரீத்திக்கும் என்னோட தாங்க்ஸ கன்வே பண்ணிடுங்க சார்! அந்த பொண்ணு தான் சுமியோட மாற்றத்துக்கே காரணம்!”
“என்ன சொல்றீங்க?”
“ஆமா அவங்க தான்!” கிஷோர் ப்ரீத்தி தன்னிடம் பேசியதை சுமி கிஷோருக்கு சொல்லியிருக்க, இப்ப அதை ராகுலுக்கு சொன்னான்!
“அட! நம்ம ஆங்ரி பேர்ட் இந்த வேலையெல்லாம் கூட செய்து இருக்கா?” ராகுல் ஆச்சரியப்பட்டான்!
“இருங்க ப்ரோ தாங்க்சை கொஞ்சம் மிச்சம் வைங்க, இன்னும் சொல்ல வேண்டியிருக்கும்! நீங்க என்ன பண்றீங்க, இப்ப என்ன கொடைக்கானல்ல இருக்கீங்களா, அப்படியே நேர கோவா போயிட்டு ஒரு வாரம் கழிச்சு வாங்க! சுமிக்கும் உங்களுக்கும் டிக்கெட் இப்பவே அனுப்புறேன்.”
“உங்க ஆபிஸ்ல லீவ் கிடைக்கும் இல்ல?” ராகுல் கேட்டான்.
“ப்ரோ..!” கிஷோர் வாயைப் பிளந்தான்!
“இந்த கொடுக்கிற தெய்வம் கூரையைபிச்சிக்கிட்டு கொடுக்கும்னு சொல்வாங்க இல்ல, அது இது தான் ப்ரோ! எனக்கு லீவ் எல்லாம் ஒரு பிரச்சினை இல்ல!”
“பட் ஒன் கண்டிசன்!”
“ஆபிஸ்ல யார் கேட்டாலும், முக்கியமா ப்ரீத்தி போன் செஞ்சு கேட்பா, அப்ப இந்த மாதிரி உங்க அம்மா பாத்ரூம்ல கால் தடுக்கி விழுந்துட்டாங்க, சுமி தான் அவங்கள பார்த்துக்கணும், அதனால தான் ஒரு வாரம் லீவ்னு சொல்லணும்! இது ரொம்ப முக்கியம்!”
“சரி ப்ரோ!”
“இருங்க.. இருங்க. உங்க அம்மாவை கேரளா ல இருக்கிற ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கீங்கன்னு சொல்லணும்! இல்லன்னா ப்ரீத்தி ப்ரூட்ஸ் வாங்கிட்டு உங்க வீட்டுக்கே வந்துடுவா உங்கம்மாவ பார்க்க!”
“சரிங்க ப்ரோ!”
“சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கணும் ஓகேயா!”
“டபுள் ஓகே!”
போனை வைத்து விட்டு ராகுல் அவர்களுக்கு டிக்கெட் புக் செய்து அனுப்பினான்!
அந்த வாரம் முழுவதும் ப்ரீத்தியை தனக்கு அசிஸ்ட் பண்ண சொல்லி தன் கேபினிலேயே அவளை இருக்க வைத்தான் ராகுல்!
இத்தனை விசயங்களை அவன் பார்த்து பார்த்து செய்தும் அவன் ப்ரீத்தியிடம் வசமாக மாட்டிக் கொள்ளவும் நேர்ந்தது!
அது சுமியின் மாமியாரால்!
error: Content is protected !!