Skip to content
Post Views: 842
அத்தியாயம் – 3
இந்தியா கேட், புது தில்லி.
Advertisement
ஓடுவதற்கு இலகுவான டிராக் பேண்ட், ‘ஹூடி’யுடன் வசுந்தரா இந்தியா கேட்டில் இறங்கிய போது, பொழுது மெல்ல புலர ஆரம்பித்திருந்தது. அதற்கு முன் வந்து காத்திருந்த வருணை, முழு பாதுகாப்பு பரிசோதனை செய்த பின்னரே வசுந்தராவிற்கு அருகில் அழைத்து வந்தனர்.
காலையில் கிளம்புவதற்கு முன்னரே, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ப்ரதாப் வசுந்தராவிற்கு விளக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
“மேம், நீங்க இங்க கேம்பஸ்குள்ளயே ஜாக் பண்றது அட்வைசபிள். பப்ளிக் பிளேஸ் போனும்னா எல்லாம் செக்யூரிட்டி கிளியரன்ஸ் பண்ணனும். சில சமயம் தேவை இல்லாத அட்டென்ஷன் கிரியேட் பண்ணும் மேம்” என்று எடுத்துரைக்க,
சில நிமிடங்கள் யோசித்தவர்,
Advertisement
“எனக்கு இங்க மூச்சு முட்டுற மாதிரி இருக்கு ப்ரதாப் . கொஞ்சம் எல்லாம் ஒதுக்கி வைச்சி ஐ வாண்ட் டு கிளியர் மை ஹெட். யு கேன் டிரஸ்ட் வருண் லைக் யு டிரஸ்ட் மைசெல்ஃப். சோ, ப்ளீஸ் மேக் இட் வொர்க்” என்று விட்டார்.
ப்ரதாப் லலிதாவிடமும் தகவல் தெரிவிக்க, அவர்
“போய்ட்டு வரட்டும் ப்ரதாப் . அவங்களே சீக்கிரம் ரியலைஸ் பண்ணிடுவாங்க, இது ரிஸ்கின்னு. சோ நீங்க எப்பவும் போல ப்ரொசிஜர்ஸ் பாத்துகோங்க” என்று சொல்லி விட, அதற்கு மேல் கட்டளைகளை நிறைவேற்றுவதைத் தவிர ப்ரதாப்புக்கும் வேறு வழி இருக்கவில்லை.
கண் கொத்திப் பாம்பாக சுற்றுபுறத்தை அவதானித்துக் கொண்டே, பாதுகாப்பு படையுயின் சில வீரர்களுடன் வசுந்தரா மற்றும் வருணின் பின்னே, சில அடிகள் தள்ளி அவர்களைத் தொடர்ந்தார் ப்ரதாப் சிங். தலைமை அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களும் அவர்களுக்கு பின்னே மெதுவாக ஊர்ந்து வந்தது.
அதிகாலை வேளை என்பதால் அந்த இடத்திலும் அவ்வளவு கூட்டம் ஒன்றும் இல்லை. நடைபயிற்சி, மெல்லோட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலரின் ஆர்வமான பார்வைகளைத் தவிர பெரிதாக ஆட்கள் நடமாட்டம் இல்லை.
வசுந்தரா அருகில் வந்ததுமே, “குட் மார்னிங் மேடம் பிரைம் மினிஸ்டர்!” என்றார் வருண் உற்சாகம் பொங்க.
அவரது உற்சாகம் வசுந்தராவையும் உடனே தொற்றிக் கொண்டது. இரவு சரியான உறக்கம் இல்லாததால் இருந்த சோர்வு கூட மெல்ல விலகத் தொடங்கி விட்டது தனது ஆருயிர் நண்பனைக் கண்டதும்!
“ஹேய் குட் மார்னிங், சாரி அபவுட் ஆல் த செக்யூரிட்டி ஹைப்! நான் சொன்னேன். பட் ஐ திங்க் இட்ஸ் பார்ட் ஆஃப் தி பேக்கேஜ் அண்ட் அ நெசசரி ஈவில்” என்க,
“நாட் அட் ஆல்! அவங்க டியூட்டி, சோ நோ இஸ்யூஸ். அதுக்கு தான் நேத்தே உன்கிட்ட கேட்டேன். சிங் மாமா வேண்டாம்னு கட்டைய போட்டிருவாருன்னு தான் நினைச்சேன். ஆனா ஒத்துக்கிட்டாரு டு மை சர்ப்ரைஸ்” என்றார் வருண் சிரித்தபடி.
வருணன் தேவராஜன். நெருங்கிய வட்டத்துக்கு சுருக்கமாக வருண். ம.ம.க கட்சியின் வியூக வல்லுநர் (Political Strategist). தற்போதைய வசுந்தராவின் மத்திய அரசு பதவியில் அமர, மூளையாக செயல்பட்டவர். கட்சியின் தலைவி தாரா தேவியின் வலது கை. ம.ம.க வின் தமிழ் நாட்டிற்கான மாநில தலைவர் தேவராஜனின் ஒரே மகன். எல்லாவற்றுக்கும் மேலாக வசுந்தராவின் ஜிகிரி தோஸ்த்!
தேவராஜன் ஒரு வகையில் வசுந்தராவின் அன்னை அஞ்சலிக்கு தூரத்து சொந்தம். அண்ணன் முறை. வனதேவனின் பணி மாற்றல்களை கருத்தில் கொண்டு, கோவையில் தேவராஜனின் வீட்டின் அருகிலேயே, அவரது பாதுகாப்பில் தான் அஞ்சலியும், வசுந்தராவும் பல வருடங்கள் இருந்தனர்.
நினைவு தெரிந்த நாள் முதலே, வருணுக்கும் வசுந்தராவிற்கும் இடையே நெருங்கிய நட்பு தான். சம வயது, ஒரே பள்ளி, இருவரும் வீட்டில் ஒற்றைப் பிள்ளைகள், கூடவே அருகருகே வசிக்கும் உறவினர் என்பதும் சேர்ந்து விட, இயல்பாகவே அவர்கள் நட்பு நகமும், சதையும் போலத்தான் வளர்ந்தது.
வருண், ‘சிங் மாமா’ என்று ப்ரதாப்புக்கே செல்லப் பெயர் வைக்கும் அளவுக்கு போய் விட்டதில் சிரித்த வசு,
“நீ இருக்கப் பாரு…ப்ரதாப் உனக்கு மாமாவா?” என்று போலிக் கோபம் காட்ட,
“இல்லையா பின்ன? உங்கப்பாவே தேவலை. இவர் என்னைய உன் பக்கத்துல கூட வர விட மாட்டேங்குறாரு. வந்ததில் இருந்து உர்ர்னு முறைச்சு முறைச்சு பாத்துக்கிட்டு இருக்காரு. நீ சொல்லலையா அவர்கிட்ட? நான் உன் முறைப்பையன். உனக்காகவே வருஷக்கணக்கா கட்ட பிரம்மச்சாரியா வெயிட் பண்ணிட்டிருக்கேன்” என்று கண் சிமிட்டினார் வருண்.
வருண் கூறியதைக் கேட்டு சில நொடிகள் இதற்கு என்ன பதில் சொல்வது என அதிர்ந்து விழித்தார் வசுந்தரா. பின்னர் எப்போதும் போல்,
“அய்ய, எப்பப் பாரு இதையே சொல்றது. யாராச்சும் கேட்டா நீ ஏதோ சீரியசா தான் பேசுறன்னு தப்பா நினைக்கப் போறாங்க” என்று விளையாட்டாகவே அந்த விஷயத்தைப் புறந்தள்ளி, சூழலின் கனத்தைக் கடக்க முயன்றார்.
‘யாரு சரியா நினைச்சாலும், நீ தான்டி எப்பவும் தப்பாவே நினைச்சிட்டு இருக்க’ என்ற பெரும் ஏக்கப் பெருமூச்சு மட்டுமே வருணிடம்.
தான் கூறியதற்கு எந்த எதிர்வினையும் வராமல் போக, மூச்சு வாங்க ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து வருணைத் திரும்பிப் பார்த்தார் வசுந்தரா. அதற்குள்ளாகவே ப்ரதாப் ,
“எனி பிராப்ளம் மேம்?” என்று அருகில் வந்து தண்ணீரை நீட்ட, நின்று அதை வாங்கிப் பருகியவர்,
“நத்திங் ப்ரதாப். அல்மோஸ்ட் டன். இன்னும் ஒரு குட்டி ரவுண்ட்” என்று வருணைப் பார்க்க, அவரும் தலையசைக்க, இருவரும் மீண்டும் ஓடத் துவங்கினர்.
“பாரு, நான் தான் சொன்னேன்ல. பார்த்தியா…சிங் மாமா எப்டி பொசுக்குன்னு வந்து தண்ணீய குடுக்குறார்ன்னு” என்று வருண் தன் இயல்புக்குத் திரும்பி விட, அதில் சிறிது ஆசுவாசப்பட்ட வசுந்தரா,
“நீ மாமான்னு சொன்னப்புறம் தான் ஞாபகம் வருது. நேத்தே பேசணும்னு நினைச்சேன், முடியல. தேவா மாமா எப்டி இருக்காங்க? ஊருக்குக் கிளம்பிட்டாங்களா?” என்றார் வசுந்தரா.
“இல்ல வசு இங்க நம்ம வீட்ல தான் இருக்காங்க. தாரா மேம் இருக்க சொன்னாங்க போல. இன்னைக்கு ஃபர்ஸ்ட் கேபினட் மீட்டிங். அதுக்கப்புறம் நம்ம பார்ட்டி மீட்டிங்கும் இருக்குல்ல. சோ எல்லாம் முடிச்சிட்டு ஒரு ரெண்டு மூனு நாள் கழிச்சிப் போறதா தான் பிளான்”
“சரி நான் கேட்டேன்னு சொல்லு. நான் அப்புறமா பேசுறேன்” என்ற வசுந்தரா சிறிது தயங்கி,
“வரு, உனக்குத் தெரியுமா?” என்றார்.
“என்னது எனக்கு தெரியுமா?”
“சித்தார்த் ஜோஷி!” என்க, வருணிடம் மௌனம்.
பதிலளிக்காமல் வருண் ஓட்டத்தைத் தொடர,
“சோ உனக்குத் தெரியும்!” என பல்லைக் கடித்தார் வசுந்தரா.
“ஹேய், அது நேஷனல் நியூஸ். எனக்குத் தெரியாம எப்டி இருக்கும்?” என்ற வருண்,
“யூ நோ இந்த ஜாகிங் எனக்கு நம்ம J.N.U டேய்ஸ் தான் ஞாபகம் வருது. வாரத்துல எப்படியும் மூனு, நாலு நாளாச்சும் பைக் எடுத்துட்டு வந்துடுவோம்ல. என்னவோ அப்ப இருந்தே உனக்கு இந்த இடம் மேல ஒரு க்ரேஸ்” என்று பேச்சைத் திருப்பினார்.
“ரைட், சார் என்னைய டைவர்ட் பண்றீங்க. டோண்ட் ஈவன் டிரை தேட்! சிட், தாரா மேம்க்கு தெரியும்னு சொன்னார். சோ உனக்கும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். நான் கமிட்டி ரெகமெண்டேஷன் மட்டும் தான் நினைச்சு அப்ரூவ் பண்ணேன். ஆனா இதுல அதுக்கும் மேல கண்டிப்பா ஏதோ இருக்கு. அவுட் வித் இட் வருண்” என குரலை உயர்த்தாமல், வார்த்தைகளைக் கடித்து துப்பினார் வசுந்தரா.
“கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?”
“யூ ஹேவ் நோ சாய்ஸ். இதுவே லேட்”
“ம்ஹ்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவர்,
“என்ன இருந்தாலும் நானும், தாரா மேமும் வெளியாட்கள் தான்…உன் கவர்ன்மெண்ட்ல இல்ல. இன்னிக்கு பார்த்தேல்ல, உன் கூட ஒரு ஜாகிங் வர்றதுக்கு என்ன அக்கப்போருன்னு?
நேத்து பிரசிடெண்ட்டோட டின்னர்க்கு கூட எங்களுக்கு இன்வைட் இல்ல, ஃபார் த சேம் ரீசன். கட்சித் தலைமையும், அரசு தலைமையும் வேற வேற. இது நாம எல்லாரும் ரொம்ப கான்சியசா எடுத்த டிசிசன் தான்.
அண்ட் இந்த ஸ்ட்ரேடஜி முதல் முறையா நம்ம அட்வாண்டேஜுக்கு வொர்க்கும் ஆகிருக்கு! சமர்ஜித், தாராவை அவங்கப்பாவோட அரசியல் வாரிசுன்ற ஒரு காரணத்த வைச்சு ஓரம் கட்டப் பார்த்தாரு. அது இப்போ அவருக்கே பேக்ஃபயர் ஆகிடுச்சு”
“வருண், இதெல்லாம் எனக்கே தெரிஞ்ச விஷயம் தான். இதுல சிட் எங்க வர்றார்?” என்றார் வசுந்தரா பொறுமை இழந்தவராக.
“இரும்மா, மனுஷன முதல்ல முழுசா சொல்ல விடு” என்று அலுத்துக் கொண்ட வருண்,
“சோ, எங்களுக்கு கவர்ன்மெண்ட்குள்ள ரொம்ப நம்பகமான ஒரு ஆள் தேவைப்பட்டுச்சு. சம் ஒன் யூ கேன் ஆல்சோ டிரஸ்ட் வித் அவுட் எனி டவுட். அதுக்காக தான் சித்தார்த்த உள்ள கொண்டு வந்தோம்” என்று முடித்தார்.
“சீரியஸ்லி? என் மேல உங்க யாருக்கும் நம்பிக்கையே இல்லையா? ஏன் இதெல்லாம் என்னால ஹேண்டில் பண்ண முடியாதுன்னு நினைக்கிறீங்க? அவ்ளோ நம்பிக்கை இல்லாட்டி எதுக்கு என் பேரை பி.எம் கேண்டிடேட்கு ப்ரபோஸ் பண்ணீங்க? கடைசில நானும், உனக்கும் தாரா மேம்கும் ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி யூஸ் பண்ண கிடைச்ச ஆள் தான் இல்ல”
“லிசன் வசுந்தரா, திஸ் இஸ் பியாண்ட் யூ அன்ட் மீ! முதல்ல அதைப் புரிஞ்சுக்கோ. அண்ட் இது எதுவும் உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லை. ஃபார் ஃபிரம் இட்! நிறைய நம்பிக்கை இருக்கு அதுனால தான்.
யூ லீட் த கன்ட்ரி வசு. தட்ஸ் யுவர் ஒன்லி ஜாப் அட் ஹாண்ட். லீவ் ஆல் த டேர்ட்டி பாலிட்டிக்ஸ் டு அஸ். அந்த நாய் சமர்ஜித் பேக் கிரவுண்ட்ல எல்லாத்தையும் விலை பேசிட்டு இருக்கான்”
“அதெல்லாம் எனக்குத் தெரியாம இருக்கும்னு நினைக்கிறியா வருண்?” என்றார் வசுந்தரா அடிபட்டவராக.
அவரது பாவனை வருணையும் வருத்த, சற்றே மென்மையாய்,
“ஹேய், ஏன் எல்லாத்தையும் பெர்சனலா எடுக்குற? திஸ் இஸ் ஒன் அண்ட் ஒன்லி சான்ஸ் ஃபார் SPP டு ஃப்ரூவ் அஸ் வசு! நீ ஸ்டெரயிட் ஃபார்வார்ட். லெட் இட் பீ. அண்ட் ஸ்டே அஸ் மிஸ். க்ளீன். அந்த இமேஜ் தான் எங்களுக்கு வேணும்.
சமரைக் கூட விடு. நம்ம கூட்டணிலயே இருக்க விக்ரம் தேசாய் என்னவெல்லாம் டிமாண்ட் வைச்சிருக்கான் தெரியுமா, அவங்க கட்சி சப்போர்ட்டுக்கு. அவனுக்கு டிவென்ஸ் மினிஸ்டிரி, அவன் கட்சிக்கு ஃபைனான்ஸ் மினிஸ்டிரின்னு கொடுத்துருக்கது எவ்ளோ பெரிய ரிஸ்க் தெரியுமா?
இந்த குள்ள நரிக்கூட்டத்துக்கிட்ட இருந்து உன்னைய சீல் பண்ணி உன் வேலைய தக்க வைக்க தான் சித்தார்த் இஸ் ஹியர்” என்றார் வருண், வசுந்தராவை சமாதானப்படுத்தும் நோக்கில்.
அந்த சமாதானங்கள் எதுவும் எடுபடவில்லை வசுந்தராவிடம்.
“சோ நீங்க எல்லாம் சேர்ந்து என்னால இந்த வேலைய தனியா, சரியா செய்ய முடியாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. பட், ஐ ஸ்டில் டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் வொய் சிட்? வொய் பிரேக் த ரூல்ஸ் டு டூ தேட்?”
“நோ வசு. நாட் பிரேக் த ரூல்ஸ், அ வெரி ஸ்மால் பெண்ட் த ரூல்ஸ் ஃபார் அ கிரேட்டர் குட். தேட்ஸ் ஆல்! அப்புறம் என்ன கேட்ட, வொய் சிட்னா? பிகாஸ் ஹி வில் டை ஃபார் யூ!” என்றார் உணர்ச்சிகளற்ற குரலில்.
வசுந்தராவால் தான் கேட்டதை நம்ப முடியவில்லை. அப்படியே நின்று விட்டார்.
ஆக, அவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் அவரது வாழ்க்கை எப்படி நகர வேண்டும் என்ற திட்டம் இருந்திருக்கிறது. அதற்கேற்ப காய்களும் நகர்த்தி இருக்கிறார்கள்.
யாரிடம் இருந்து இது போன்ற செயல்களை எதிர்பார்த்திருந்தாலும், வருணிடம் இருந்து இந்த செய்கையை வசுந்தரா சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை. காலையில் வருணை எதிர்பார்த்துக் காத்திருந்த மனநிலை, நம்பிக்கை உடைபட்டதில் இப்போது நேரெதிர் நிலைக்கு சென்றிருந்தது.
‘ஹௌ குட் யூ டு திஸ் டு மீ வருண். அவுட் ஆஃப் ஆல் பியூப்பில் யூ ஹேவ் பிக்ட் சிட். எங்க பாஸ்ட் தெரிஞ்சும் நீ இப்டி பண்ணது அன் அக்செப்டபிள்’ என்று வசுந்தராவின் மனம் அரற்றியது.
மனக் குமுறல்களை வெளியிட, திறந்து வைத்திருந்த ஒரு கதவும் மூடப்பட்டு விட்டது போல் தோன்ற, இன்னுமே அழுத்தமும், இறுக்கமும் வந்தமர்ந்து கொண்டது வசுந்தராவிடம்.
ஓடியதில் முகத்தில் வியர்வை வழிந்தோட, அதோடு மனதின் புழுக்கமும் சேர்ந்து கொள்ள சூடான பெருமூச்சுகளுடன், தனது வாகனத்தில் அருகில் வந்து விட்ட வசுந்தரா,
“ஐ நீட் அ மொமெண்ட் ப்ரதாப். அஞ்சு நிமிஷத்துல கிளம்பலாம்” என்று ஏறி அமர்ந்து விட, வருண் வெளியிலேயே நின்றார். அவர்களுக்கிடையே வெகு சமீபமாக வந்து விட்டிருந்த, இந்த இடைவெளியையும், ஏற்றத்தாழ்வுகளையும் அறவே வெறுத்த வருண்,
“நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு மட்டும் தான் செய்வேன்னு நம்பு வசு. நீ கிளம்ப டைம் ஆகிடுச்சு. குட் லக் வித் த கேபினட் மீட்டிங் டுடே. வில் கேட்ச் யூ லேட்டர்” என்க, அமைதியாகத் தலையசைத்தார் வசுந்தரா.
அந்த எதிர்வினையில் சிறிது சுணக்கம் கொண்டவராய், வசுந்தராவை அழுத்தமாகப் பார்த்தபடி வருண் இன்னும் சற்று தூரம் தள்ளி நிற்க, கதவுகள் மூடப்பட்டு, தலைமை அமைச்சரின் இல்லத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது வாகனம்.
மூடப்பட்டது வாகனத்தின் கதவுகள் மட்டுமா அல்லது சில மனக்கதவுகளும் தானா?
error: Content is protected !!