Skip to content
Post Views: 2,078
அத்தியாயம் – 25
இன்றைய விடியல் கொஞ்சம் உச்சமாகத் தான் விடிந்தது லட்சுமணனுக்கு.வந்த வேலை முடிந்த நிலையில் மெட்ராசில் இருந்து நாளை கிளம்பி காரைக்குடிக்கு செல்ல வேண்டும் அந்த எண்ணமே சுறு, சுறுப்பைக் கொடுத்தது போலும் வெகு உற்சாமாக இருந்தான்.
நாளை ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதால், அவனுக்கு என்று கொடுத்த அறையில் சிறு ஓய்வு கொண்டவன் பிறகு கொஞ்சமாக வீட்டினருக்கு சிறு, சிறு பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்ததை வெகு பாந்தமாகப் பையில் வைத்து அடுக்கி கொண்டிருந்தான் .மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தவனை கலைத்தது நண்பன் ரவியின் குரல்.
Advertisement
“லட்சு!”
Advertisement
திரும்பி பார்க்காமலே நண்பனின் குரலை கண்டு கொண்டவன்,” வாடா நல்லவனே! ஊருக்கு கிளம்பல?” ரவி அவனுடன் பயலும் சக மருத்துவன் நெருங்கிய நண்பனும் கூட.
Advertisement
“கிளம்பிட்டு தான் இருந்தேன் உன் அத்தை மக ரெத்தினம் உன்னைத் தேடி வரவும் உங்கிட்ட சொல்லிட்டு போக வந்தேன்” என்றதும் புருவம் சுருக்கியவன்.
Advertisement
“நாகம்மைய்யா?”
“அவ தானே இங்க படிக்கிறா?”
“ப்ச்! சலித்தவன் வேகமாகப் பொருட்களை அடுக்கி நேர்த்தியாக வைத்து விட்டு.
“வா போலாம்” என்று வெளியில் வந்து அறையைப் பூட்ட அவனுடனே வந்த ரவி.
“நீங்க பேசி பழகினதை பார்த்து இந்த பொண்ணை தான் நீ கல்யாணம் பண்ணிப்பேன்னு எண்ணி வச்சேன் லட்சு ” என்றதும் நின்று அவனை ஒரு பார்வை பார்த்தவன் கைகளை விரித்து ஏண்டா! என்க. அவனது பாவனையில் சிரித்தவன்.
“சரி! சரி! அழுகாத சாலா தான் எப்பவும் போதுமா,ஆனா உனக்கு உள்ளையும் ஓர் கள்ளம் இருந்திருக்கு பாரேன்” என்று கண் அடித்தவனை பார்த்து, சலிப்பாகத் தலையை ஆட்டி கொண்டவன் நாகம்மை இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.அவளும் இங்கு தான் மருத்துவத் துறையை சார்ந்த படிப்பை படிக்கிறாள் அதனை கொண்டு தான் அவர்களது நட்பு.இவர்களது நட்பை தவறாக எண்ணி தான் பெரியவர்கள் கணக்கு வைத்து இவர்கள் இருவருக்கும் திருமணம் பேச வந்தது போலும்.
ரவி,”நீ பேசிட்டு வா லட்சு நான் என் வேலையை முடிச்சிட்டு வரேன் இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்றவன் லட்சுவிடம் விடைபெற.அவனுக்கு விடைகொடுத்த லட்சுமணன் நாகம்மையை நெருங்கினான்.
லட்சுமணனை கண்டதும் சிறு புன்னகையைக் கொடுத்த நாகம்மை,”என்ன மாமா எப்படி இருக்கீக?” என்றவாறு அவனுக்கு உட்கார இடம் தர.
அவளது அருகில் சிறு இடைவெளி விட்டு அமர்ந்தவன் “நல்ல இருக்கேன் நாகு அங்கன எல்லாம் நல்ல இருக்காகளா?”
“நல்ல இருக்காக மாமா அப்புறம் அக்கா என்ன சொல்றாக?”
“அவுக சங்கதியா சொல்றாக மனைவிய எண்ணி சிறு குறும்போடு சொன்ன லட்சுமணனை பார்த்து மெல்ல சிரித்தாள் நாகம்மை.
“என்ன என்னை தேடி வச்சதா சொன்னான் ரவி” என்ன பேச வேண்டும் என்பதை நாசுக்காக கேட்டவனை பார்த்து கொஞ்சமாக தயங்கி,
“ஆச்சி உங்க கிட்ட சில செய்தி விளக்க சொல்ல சொன்னாக அதுக்குதேன் வந்தேன் மாமா” என்றதும் அவளைக் கேள்வியாகப் பார்த்த லட்சுமணனிடம் அன்று நடந்த அனைத்தையும் சொல்லி அவன் முகம் பார்த்து நிற்க.சில நொடிகள் மௌனத்திற்குப் பின் ஒரு பெருமூச்சை வெளியிட்டவன்.
“அவுக பயந்து வைக்கிற மாதிரி நான் இல்ல நாகு. நான் அங்க வர மாட்டேன் ,ஆனா அவுக இங்க எப்போ வேணா வரலாம்.அவுக கிட்ட எங்க ஐயாவை கொண்டு வஞ்சம் பாராட்ட எதுவுமே இல்லை என்று இடைவெளி விட்டவன்.அவுக பக்கம் கேட்டு சொன்னீகள இப்போ என் பக்கத்தைக் கேட்டு அவுங்களுக்குப் புரிய வைக” என்றவனைக் கொஞ்சம் பதட்டமாகப் பார்த்தால் நாகம்மை.
“நான் பேசுனதுல கோபமா மாமா?”
“இல்லம்மா என் ஆதங்கம் அதுவும் போக வள்ளி மாமாக்கு நான் நியாயம் செய்யனும் என்னை கொண்டு இப்ப அவுகளும் பேச்சு வாங்கி நிக்கிறாக அதை எண்ணி ரொம்ப உறுத்தி வைக்குது “
எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவானோ என்று பதறி, “ஐயோ! அவுகளப் பேச்சுக்கு நான் இழுக்கவே இல்லை மாமா”
“நீக இழுக்கள, ஆனா அவுக குணத்தைச் சொல்லி வச்சா நாளை பின்ன அவுகளைப் பார்க்கும் போது ஏளனம் பேச தோணாது. என்னை கொண்டு அவுக மேல வஞ்சம் வைக்க தோணாது அதேன்” அவளது அன்னையே வள்ளியப்பனை கொஞ்சமாக பேசி தான் நின்றார் அல்லவா அதனை எண்ணி அமைதியாகி விட்டாள்.
“ஒரு செய்திய நல்லா மனசுல பதிய வைக்கச் சொல்லுக நாகு. வெறும் நன்றிக்காக நான் சாலாவ கல்யாணம் கட்டி வைக்கல.எனக்கு சிறுசுல இருந்தே அவுங்கள புடிக்கும் அந்த வயசுலயே என்னைத் தங்கமா பார்த்துகிட்ட பொண்ணு அவுக.விவரம் தெரிய வரும் போது அவுக குணம் பிடிபட அவுக மேலையும் வள்ளி மாமா மேலையும் ரொம்பப் பிரியம் கூடி போச்சு.
ஒரு உண்மை சொல்லட்டுமா? இதை கேட்டு உங்களுக்கு கசப்பை தந்த மாதிரி இருக்கும், ஆனா அதேன் உண்மை வள்ளி மாமாக்கு யோசிக்காம கண்ணை மூடி கிட்டு ஐயா ஸ்தானத்தை கொடுப்பேன் நாகு.அந்த அளவுக்கு என்னை வழி நடத்தி வந்தாக.அப்போ மாமாவ கொண்டு சாலா மேல இன்னும் பிரியம். அந்த அளவுக்கு வேற்றுமை பார்க்காம என்னைத் தட்டி கொடுத்து தாங்கி நின்னாக.உறவுல தொலைவா இருந்தாலும் எனக்கும், ஆத்தாளுக்கும் இத்தினி செய்ய வேண்டிய அவசியம் இல்லை நாகு.
எத்தினி சொந்தம் அந்த பக்கம் எண்ணி பாருக? எங்களுக்கு வேண்டி யாரு வந்தா? நாங்க முன்னேறி வர நேரம் மாமா சறுக்கி நின்னாக அப்போ கூடப் பெருந்தன்மையா எங்க வளர்ச்சியைப் பத்தி மட்டுமே எண்ணி வச்சு காரைக்குடிக்கு அனுப்பி வச்சாக. ஆத்தாதேன் மனசு கேட்காம வேலைக்குக் காசுன்னு பேசி அவுகளை கரைச்சது.
சும்மா சொல்ல கூடாது நாகு அதுக்கு தோதா கண்ணு அயித்தையும் உழைச்சாக.உழைச்ச காசுக்கு மேல கொடுத்தாலும் வாக மாட்டாக இன்னொரு சங்கதியும் சொல்லுதேன் கேளுக.நான் மருத்துவனா ஆன பின்னுக்கு மாமா அவுக பொண்ண கொடுக்க வரல.அதுக்கு முன்னுக்கே அவுக எண்ணம் அதேன்.
இதே நான் மருத்துவனா இல்லாம எங்க ஆத்தாளை கொண்டு சமையல் காரனாவோ, இல்லை மசாலா போடுறவனவோ இருந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காம வள்ளி மாமா சாலாவை தூக்கி என் கையில கொடுத்திருப்பாக.அந்த மனசுக்கு இப்பவரை நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல நாகு.
உங்க ஐயா தாத்தா சொல்ற மாதிரியெல்லாம் அவுகளுக்கு எண்ணமே இல்லை.நான் மிரட்டி வம்பு பண்ணித்தேன் அவுகள இங்கன தங்க வச்சிருக்கேன் நாகு.கொண்டான் குடுத்தான் வூட்டுல உட்காந்து சாப்பிட கூடாதுன்னு அயித்த ரொம்ப மறுப்பு வச்சாக.
நாந்தேன் பிடிவாதம் செஞ்சேன். அங்க செய்யிற உழைப்பை இங்க கொடுக்கன்னு சொல்லி கூட்டிகிட்டு வந்தேன்.பூர்வீக வீட்டை பிரிச்சு அதுல வாடகை வருது. விடியலுக்கு வேலை தொடங்கி வச்சா ராவுக்குத தேன் அவுக ஓய்வு.
அவுக சம்பாத்தியம் கொண்டுதேன் இப்பவரை அவுக ஜீவனம். என் பேச்சுக்கு மறு பேச்சு இல்லாம நான் சொல்றதை எல்லாம் நம்பி செய்வாக.அப்படி இருக்கிறவுகள நான் எப்படி விட்டுக் கொடுப்பேன் நாகு? இதெல்லாம் ஏன் சொல்றேன்னு உங்களுக்கு விளங்குதா?” என்றவனைப் பார்த்து தலையை ஆட்டியவள்.
“எனக்கு அவுக இத்தினி எல்லாம் செஞ்சிருக்காகனு தெரியாது மாமா எனக்கு மட்டும் இல்ல ஆச்சி, ஐயா தாத்தாக்கு கூடத் தெரிஞ்சிருக்காதுன்னு தான் நினைக்கிறேன் ஒருத்தரை பத்தி தெரியாம பேசுறதும் தப்புதேன் “
“நீக சொன்னபடியே இருக்கட்டுமே அப்போ தெரியாதவுகள அவதூறு பேசி வைக்கிறது நியாயமா நாகு? சரி இதை விடுக என்னைப் பேசி வச்சாகளே அதுக்கு? என்னைப் பார்த்தா …” என்றவன் மேலும் பேச முடியாமல் உணர்வுகள் தாக்க கண்கள் கலங்கி நிற்க பதறி போனாள் நாகு.
உறவை தாண்டி இருவரும் சிறு வயது தோழர்கள் என்பதால் அவளிடம் பேசுவது இலகுவாக இருந்தது போலும் உணர்வுகளை கொட்டி விட்டான்.தன்னை எத்தனையாக நம்பிருந்தால் இத்தனை தூரம் தனது மனதினை திறந்திருப்பான் என்ற எண்ணம் வர.
“லட்சு!”
“ஒன்னுமில்லை நாகு அப்பா இல்லாத பிள்ளைகள் வளர்ந்து நிக்கிறது ரொம்பக் கஷ்டம். நான் இப்படி சொல்றேன்னு நீக தப்பு எடுத்துக்கிட்டாலும் சரித்தேன்.இப்போ செத்த ஐயா அப்பவே போயிருந்திருக்கலாம்” என்றதும் லட்சுமணனை அதிர்ந்து பார்த்தாள் நாகம்மை.
“உண்மைக்கும் நாகு அப்போ ஒவ்வொரு இடத்துலயும் உங்க ஐயா எங்கன்னு கேட்கும் போது எங்க அம்மா பதில் சொல்ல தவிச்ச தவிப்பு எங்களுக்குத் தேன் தெரியும். கணவன் உயிரோட இருந்து பிரிஞ்சிருந்தா இந்தச் சமூகத்துல பொண்ணுக்கு கிடக்கிற மரியாதைய நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேணுமா என்ன?”
லட்சுமணன் சொல்வது சரிதானே தனித்து வாழும் ஆண்களை விட அதிகம் பாதிக்கப் படுவது பெண்ணும் அவள் பெற்ற பிள்ளையும் தான்.அதுவும் பள்ளி படிப்பு தொடங்கி ஒவ்வொரு வளர்ச்சியிலும் பெயருக்கு முன் இருக்கும் எழுத்துக்கு விளக்கம் சொல்லியே நோவது பிள்ளைகள் தான்.
“உங்க மனசுல உள்ள எண்ணம் புரியுது மாமா. இத்தினி உள்ளுக்கு இருக்கும்னு எங்களுக்கு தெரியல, நான் ஆச்சிகிட்ட பேசுறேன்.நீக எதையும் எண்ணி வைக்காதீக மாமா. நீக இழந்த இழப்புக்கு ஈடுகட்ட தேன் கடவுள் உங்களுக்கு இத்தினி அழாகான உறவுகளைக் கொடுத்திருக்காகப் போல”என்றவளை பார்த்துப் புன்னகை செய்தவன்.
“கண்டிப்பா நாகு சாலா இடத்துல வேற யாரும் இருந்திருந்தா ஐயா, ஐயா தாத்தா இவுக பண்ண கூத்துக்கு நல்ல குடும்பம் போன்னு நிக்க வச்சு நாக்கை சாட்டையா சுழட்டி வைச்சிருப்பாக”
“நீங்க சொல்லவுந் தேன் இதுவும் புரியுது மாமா பார்த்து பழகி குணம் கண்டவுக அதைக் கொண்டு அமைதியா இருக்காக. இதே பிரத்தியா இருந்தா ஏன் நானும் கூடச் சறுக்கித்தேன் வச்சிருப்பேன்” நிதர்சனம் பேசியவளுக்கு சிறு புன்னகையை கொடுத்தவன்.
“ஹ்ம்ம்! அவுகள புடிக்கக் கொஞ்சம் சுயநலமும் இருக்கு”
“ப்ச்! அப்படியெல்லாம் சொல்ல முடியாது மாமா, ஆனா இதையும் ஒரு காரணமா நீக சொல்லிக்கலாம்” என்றவள் எழுந்து கொண்டு.சரி மாமா நான் கிளம்புறேன்”
“சரி நாகு பார்த்து போய் வாக”
“நீங்களும் பார்த்திருக” புன்னகையோடு விடைபெற்று செல்ல. போகும் அவனைச் சில நொடிகள் பார்த்தவள் ‘சாலா கொடுத்து வச்சவுக’ முணு முணுத்து கொண்டவள் பின்பு தன்னுடைய இடத்துக்கு நடையைக் கட்டினாள்.
நாகம்மைக்கு தெரியவில்லை வள்ளி தொடங்கி கண்ணாத்தாள், மீனாள்,லட்சு,சாலா என்று இவர்கள் நால்வருமே கொடுத்து வைத்தவர்கள் தான்.அன்று தொடங்கி இன்று வரை நெருங்கிய உறவுகளை விட இவர்கள் உறவு பலப்பட்டு நிற்க காரணம் ஒவ்வொருவர் குணமும் தனித்துவம் வாய்ந்தவை என்பதால் தான் .
பெரியவர்களின் நம்பிக்கை கொண்டு அன்பும் சிறியவர்களின் கண்ணியம் கொண்ட காதலும் போற்ற படத்தான் வேண்டும் போலும்.
error: Content is protected !!