Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 5(2)

“ஏன்டா, இப்ப தான் தமிழ்நாட்டுல வெள்ள நிவாரணப் பணியெல்லாம் முடிச்சு கொஞ்சம் நிமிந்து உக்காந்துருக்கோம். மீண்டும் போட் விட வைச்சிடுவ போலயே” என்றார் உதயன் எடுத்ததுமே.

 

அதிலேயே வருணின் படபடப்பு சற்று நீங்கி விட்டது போலும்.

 



Advertisement

“ஹா, ஹா. ஐ மிஸ்ட் திஸ் உதய் அண்ணா” என்றார் வருணன் அடக்க மாட்டாத சிரிப்புடன்.

 

“கிழிஞ்சுது! நல்ல வேளை, ஐ மிஸ் யூன்னு சொல்லாம போனியே. இதுக்கு தான்டா காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்றது. பொண்டாட்டிய கொஞ்சிட்டு, புள்ள குட்டிய படிக்க வைக்க வேண்டிய வயசுல, நான் சொல்ற மொக்கை ஜோக்கை மிஸ் பண்ணேன்னு வேற சொல்ற. எல்லாம் காலக் கொடுமை!”

Advertisement

 

Advertisement

“ஹ்ம்ம்ம், நான் என்ன மாட்டேனா சொல்றேண்ணா. சரின்னு சொல்ல வேண்டியவங்க சொல்லணுமே” என்று ஏக்கப் பெருமூச்சு விட்ட வருணன்,

 

“அதை விடுங்க. ஃபர்ஸ்ட் கேபினட் மீட்டிங். எப்படி போச்சு?” என்றார் மிகுந்த ஆர்வத்துடன்.

Advertisement

 

“ம்ம்ம்… கேபினட் மீட்டிங் ***ல போச்சு. நான் அதுக்கு தான் உனக்கு காலே பண்ணேன்! ஏன்டா, அந்த அம்மாவ பெருசா பிரதமர்னு நிப்பாட்டினா மட்டும் போதுமா? இந்தக் கூட்டத்தை கட்டி மேய்க்க முடியுமான்னு ஒரு யோசனை வேணாம்? அது பாட்டுக்கு வந்து மீட்டிங்ல மிஷன், மண்ணாங்கட்டின்னு கூவின்னு இருக்கு. 

 

அந்த விக்ரம் தேசாய் என்னமா மிரட்டினாரு தெரியுமா? இன்னும் ஆறு மாசத்துல தமிழ்நாட்டுல எலெக்‌ஷன் வருது. அதுக்கு என்ன திட்டம் அறிவிப்பீங்கன்னு நான் கேட்டா கண்ணுலயே ஃபயர் விடுதுடா அந்தம்மா. உடனே என் கட்சி அல்லக்கைங்க எல்லாம் நாங்கெல்லாம் யார் தெரியுமான்னு எங்கிட்டயே பொங்கிட்டு வர்றாங்க. 

 

சொல்லி வை வருண் உன் ஃப்ரெண்ட் கிட்ட. இந்த ரேஞ்சுல போச்சுன்னா ஆட்சிய ஒரு மாசத்துல கவுத்திட்டு போய்ட்டே இருப்பாங்க!” என்று உதயன் பொரிந்து தள்ள, அந்தப் பேச்சு சிறிதளவும் வருணனுக்கு ஒப்பவில்லை.

 

பல்லைக் கடித்து, தன் கோபத்தைக் கட்டுப்படுத்திய வருணன்,

 

“ணா, திஸ் இஸ் நாட் ரைட். வசுந்தராவோட பதவிக்காவது நீங்க மரியாதை கொடுத்து தான் ஆகணும்” என்றார் அழுத்தமாக.

 

“அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்! ஆனா இப்படி தான் அமைச்சரவைல இருக்குற மத்த அமைச்சர்கள் பேசுறாங்க. அது தெரியுமா உனக்கு? விக்ரம் ஓப்பனாவே அவங்க கேப்பளிட்டிய சேலஞ்ச் பண்ணாரு இன்னிக்கு.

 

என் கட்சியோட அமைச்சர் என்கிட்டயே வந்து இதை விட மரியாதைக் குறைச்சலா தான் பேசினாரு. அவரை நான் கண்டிச்சு செட் ரைட் பண்ணிட்டு தான் உனக்கு கால் பண்ணேன். உனக்கு உரைக்கட்டுமேன்னு தான் பேசினேன். சொல்லு, ஒவ்வொருத்தர் கிட்டயா மரியாதை கொடுக்க சொல்லி விளக்க முடியுமா வருண்?”

 

“ணா, பதவியேத்து ஒரு நாள் தான் ஆயிருக்கு. ஃபர்ஸ்ட் கேபினட் மீட்டிங். அதுக்கு எவ்ளோ முயற்சி எடுத்து இதெல்லாம் பண்ணிருக்காங்கன்னு உங்களுக்குமா புரியல?”

 

“எனக்கு புரியுது, புரியல… அது விஷயம் இல்ல வருண்! அதிகாரம், பொறுப்பு இது ரெண்டும் நாணயத்தோட ரெண்டு பக்கங்கள் மாதிரி. ஆரம்பத்துலயே இது ரெண்டையும் சரியா செஞ்சிட்டா மரியாதை தானா வரும். இல்ல லூஸ் டாக் விடுறதுக்கு ஒரு பயமாச்சும் வர வைக்கணும். 

 

இந்த மாதிரி எந்த யோசனையும் இல்லாம, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ அப்டின்ற மாதிரி தான் உங்க மேடம் ப்ரைம் மினிஸ்டர் நடந்துக்கிறாங்க. நீ கொஞ்சம் சொல்லி வை. நான்றதுனால தான் உன்கிட்ட பொறுமையா சொல்லிட்டு இருக்கேன். உனக்குத் தெரியும்ல… அப்பா டீலிங் கம்ப்ளீட்டா வேற மாதிரி தான் இருக்கும்! சோ பார்த்து நடந்துக்கங்க”

 

“நீங்க பேசுறது எல்லாம் பார்த்தா அரசியல் வாதி மாதிரி இல்ல. ஏதோ சினிமால வர்ற வில்லன் மாதிரி இருக்கு!” என்றார் வருணன் சற்று சுணக்கத்துடன்.

 

“மாதிரி இல்ல, வில்லனே தான்! அப்டியே இருக்கட்டும். என்ன இப்போ? ஆமா நீ என்ன நினைச்ச… 

 

‘நிலவைப் பிடித்துச் – சிறு

கறைகள் துடைத்துக் – குறு

முறுவல் பதிந்த முகம்’ னு எழுதிக் கொடுத்த மூட்லயே இருப்பேன்னு நினைச்சியா?

 

அது தான் உன் பிரெண்ட் கிழிச்சி என் மூஞ்சிலயே தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டாளே. பின்ன என்ன?” என்றடவுடன், வருணனுக்கு சிரிப்பு பீறிட்டது.

 

“ணா, அப்போ அவ சின்னப் பொண்ணுண்ணா! இன்னுமா அதை மனசில வைச்சிட்டு இருக்கீங்க?”

 

“எதையும் மறக்க மாட்டான்டா இந்த உதயன். கிழிச்சதோட இல்லாம உங்க அப்பாட்ட சொல்லி, அவரு எங்கப்பாட்ட வகையா மாட்டி விட்டுட்டாரு. அவளால வீட்ல என் இமேஜே போய்ருச்சு!”

 

“ம்ப்ச், அவளுக்கும் லவ்வுக்கும் எல்லாம் செட் ஆகாதுண்ணா”

 

“அதான் தெரியுதே! ஒன்னு நீ உங்கப்பாட்ட சொல்லி கல்யாணம் பண்ற வழியப் பாரு. இல்லாட்டி வேற நல்லா பொண்ணா பாக்கலாம். இவங்கள கட்சிக்கும், நாட்டுக்கும் நேர்ந்து விட்டுடலாம்!”

 

“என் சோகக்கதை உங்களுக்கு சிரிப்பா போச்சு!”

 

“ஏன்டா எவ்வளவு பேர்டா லிஸ்ட்ல இருக்கீங்க? அந்த மைதா மாவு வேற மீட்டிங் ரூம்ல உட்கார்ந்துட்டு இருந்தான்? அவன் கூட தானே ஒரே கசமுசா ஆச்சு?” என்று லேசாக கிசுகிசுத்தார் உதயன்.

 

“ணா…”

 

“சரி, சரி. உடனே பொங்காத. நான் கேட்ட உண்மைய சொன்னேன்”

 

“நீங்க கேள்விப் படுறது எல்லாம் உண்மை இல்ல. காசிப்!”

 

“நீ சொன்னா கரெக்டா தான் இருக்கும்”

 

“மப்ச். அண்ணி உங்கள எப்டி சமாளிக்கிறாங்க தெரியல!”

 

“அவ என்ன என்னைய சமாளிக்கிறது. நான் தான் அவளை சமாளிக்க டிசைன் டிசைனா யோசிக்கணும். அதுக்கு தான் சொல்றேன். நீயும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. அப்புறம் பி.எம் மேடம்க்கும் ரூட் கிளியர் ஆகிடும். அவங்களும் ஒரு மைதா மாவையோ, கோதுமை மாவையோ கல்யாணம் பண்ணிட்டாங்கன்னா, அப்புறம் என் விருப்பப்படி தமிழ்நாட்டோட நலத்திட்டங்கள் செவ்வனே நடைபெறும்!”

 

“அப்போ நான் கல்யாணம் பண்ணாம இருக்கிறது தான் இப்போ நாட்டோட பெரிய பிரச்சனை?”

 

“இல்லியா பின்ன?”

 

“நான் வைக்கிறேன். நீங்க ஓவரா போறீங்க!”

 

“ஹா ஹா, சரி ஐ’ல் ஸ்டாப். வருண், ஜோக்ஸ் அப்பார்ட், யூ ஹேவ் டு சீரியஸ்லி வார்ன் யுவர் ஃப்ரெண்ட். அவங்க சரியான டைரக்‌ஷன்ல போற மாதிரி தெரியல. இதெல்லாம் ஆரம்பத்துலயே அட்ரஸ் பண்ணாட்டி, பிளான் எல்லாம் புட்டுக்கும்!. 

 

என்ன ஆனாலும் எனக்கு அசெம்பிளி எலெக்ஷன் ரொம்ப முக்கியம் வருண். உங்க பி.எம் மேடம் ஊடேல புகுந்து ஏதாச்சும் ஆட்டய கலைச்சாங்க, அப்புறம் இந்த உதயனோட வேற முகத்தைப் பார்ப்பீங்க தம்பி. புரியுதுல?”

 

“புரியுதுணா. அன்ட் அதுக்கு நீங்களும் எங்களுக்கு சப்போர்ட் பண்ணனும். தாரா மேம், சி.எம் சார் கிட்ட ரெகுலர் காண்டாக்ட்ல தான் இருக்காங்க. நீங்க கொஞ்சம் பேக் பென்ச்சர்ஸ் டேக்கில் பண்ணீங்கன்னா, வசுக்கு இட்’ல் கிவ் சம் ப்ரீத்திங் டைம்” 

 

“சரிடா, நான் என்ன பண்றதுன்னு பாக்குறேன். ஆனா அம்மணிய கண்ல ஃபயர் விடக்கூடாது சொல்லு”

 

“ம்ப்ச், என்னண்ணா?”

 

“என்ன, அதுவும் சொல்ல கூடாதா?”

 

“அதில்ல! சொன்னா தான் இன்னும் பண்ணுவாங்க மேடம். ஏற்கனவே இன்னிக்கு காலைல ரெண்டு பேருக்கும் முட்டிக்கிச்சு!”

 

“சுத்தம்! வாழ்க வளமுடன்!” என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது. 

 

உதயனிடம் பேசிய பின் வருணனிடம் சற்று இளக்கம். சதுரங்க ஆட்டத்தில் எதிர்பார்த்த விதமாய் தான் காய்கள் நகர்கின்றன என்பது போன்ற ஒரு சிறு ஆசுவாசம்!

 

மத்தியில் கூட்டணி. மாநிலத்தில் எதிரணி. தனிப்பட்ட வாழ்க்கையில் வெளியுலகிற்கு புலப்படாத மெல்லிய நட்பிழை! சற்றே முரணானது தான் இவர்களது நட்பு. இருவருக்குமே அவரவர்க்கு எது முதன்மையான விஷயம் என்பதில் தெளிவு இருப்பதால், இன்று வரை போட்டியாக இருந்தாலும் ஆரோக்யமாகத் தான் அவர்கள் உறவுப் பாதை சென்று கொண்டிருக்கிறது. 

 

இந்த முரண்பாடான நட்பு இன்று நேற்று உருவானது அல்ல; ஒரு தலைமுறை தாண்டியது. தேவராஜனும், மணிவாசகமுமே அரசியலுக்கு வெளியில் அண்ணன், தம்பி என்றே உறவு வைத்து அழைத்துக் கொள்வார்கள். அதனால் இரு குடும்பங்களுக்குமே நல்ல பரிச்சயம் தான். அதன் பொருட்டே உதயனுக்கும், வசுந்தராவுக்கும் ஆகாது போயிற்று. உதயன் சிறு வயதிலிருந்தே கைதேர்ந்த அரசியல் வாரிசாகத் தான் செயல்படுவார்.

 

செல்வாக்கும் அதிகம். இரு முதலமைச்சர்களை தந்த குடும்பம் அல்லவா. கடந்த ஐம்பது ஆண்டுகளில், இவர்களது கட்சி ஆட்சியில் இல்லாத காலங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தப் பெருமை உதயனிடம் எப்போதும் இருக்கும். வருணனை வால்பிடித்துக் கொண்டே, வசுந்தராவும் தேவராஜனோடு கட்சி கூட்டங்களுக்கு செல்வதுண்டு. 

 

வருணனோடு சேர்ந்து சுவரொட்டி ஒட்டுவதில் இருந்து எல்லா வேலைகளையும் வசுந்தராவும் செய்வார். அரசியல் விழாக்களுக்கும் கூட தேவராஜன் இருவரையும் அழைத்துச் செல்ல, அப்படித்தான் உதயனுக்கு வசுந்தரா முதல் அறிமுகம். பதின் பருவத்தின் துவக்கத்தில் இருந்த வசுந்தராவின் துள்ளலும், ஈடுபாடும் அதன் முடிவில் இருந்த உதயனை வெகுவாக ஈர்த்தது. 

 

வசுந்தராவிடம் இருந்த நேர்த்தி, எதையும் ஆழ்ந்து கவனிப்பது, கேள்விகள் கேட்பது என்று அவருடைய எல்லா குணாதிசயங்களும், அவர் வயதுப் பெண்களிடம் இருந்து முற்றிலும் வேறாகக் காட்டியது கூட ஈர்ப்புக்கான காரணமாக இருக்கலாம்.

 

உதயன் தன் அரசியல் வாழ்க்கையைப் பற்றி பெரிதாக யோசிக்காமல் செய்த அரிதான வெகு சில விஷயங்களில், வசுந்தராவிடம் விளையாட்டாகக் காதலைச் சொல்லியதும் ஒன்று! இன்னும் சொல்லப் போனால், அந்த சம்பவம் தான் வருணனுக்கு வசுந்தராவின் மீதான அவரது எண்ணங்களின் போக்கை பின்னாட்களில் தெளிவு படுத்தியது.

 

யாருக்கு தெரிந்து என்ன? தெரியாவிட்டால் தான் என்ன? இவர்களது எண்ணங்களின் நாயகியின் எண்ணமெல்லாம் வேறு எதிலோ இருந்தது. 

 

“மீட்டிங் எப்டி போச்சு மேம்?” என்று சித்தார்த் கேட்க, ‘ஓகே’ என்பது போலான தலையசைப்பு மட்டுமே வசுந்தராவிடம்.

 

சித்தார்த்தும் அன்றைய நாளுக்கான அட்டவணைப்படி, ஒவ்வொரு சந்திப்புக்கும் தேவையான தரவுகளை சரி பார்த்துக் கொடுக்க, அதன் பின் இருவருக்கும் தனியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பமே அமையவில்லை. 

 

கிடைத்த சிறு இடைவேளையில் சித்தார்த் மெல்ல ப்ரதாப்பிடம், அமைச்சரவை கூட்டத்தில் நடந்தவைகளின் சாராம்சத்தை கேட்டு தெரிந்து கொண்டார். லலிதா வந்ததும், 

 

“லலிதா, இன்னிக்கு ஈவ்னிங் SPP மீட்டிங்கு சீக்கிரமே போற மாதிரி ஸ்கெட்யூல் மாத்திடுங்க” என்கவும் அவரிடம் சிறு தயக்கம்.

 

“என்ன லலிதா? ஏன் யோசிக்கிறீங்க?” 

 

“இல்ல சார், மேம் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே?” 

 

“அவங்க வேண்டாம்னு தான் சொல்லுவாங்க. பட், இன்னிக்கு நடந்தது பார்த்தப்புறம் ஐ ஹேவ் நோ டௌட்ஸ் அட் ஆல்! தாரா மேம் கிட்ட கண்டிப்பா பேசியே ஆகணும். நாம போக முடியாது. அதுக்கு நான் வேற ஒரு ஆள் கிட்ட பேசுறேன்.” 

 

அவ்வளவு தான் பேச்சு என்பது போல், சித்தார்த் காரில் ஏறி விட சரி என்று தலையாட்டுவதைத் தவிர லலிதாவிற்கும் வேறு வழி இருக்கவில்லை. முதல் வேலையாக சித்தார்த் வருணனுக்கு அலைபேசியில் அழைக்க, வருணணின் மைண்ட் வாய்ஸ் ‘ம்கூம்…ஊர்ல இருக்குற எல்லாரும் கூப்பிடுறாங்க. கூப்பிட வேண்டியவங்க மட்டும் கூப்பிடுறது இல்ல’ என்ற ஏக்கப் பெருமூச்சு மட்டுமே.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!