Skip to content
Post Views: 5,556
இங்கு அவந்திகா வண்டியை எடுத்துக் கொண்டே, “தர்ஷி..வண்டியில ஏறு.. வீட்டுக்கு போய்ட்டு டிரஸ் எடுத்துட்டு சீக்கரம் திரும்பணும்.. ஆறு மணிக்கு இங்க இருக்கணும்ல..”
“போலாம் டி.. அப்பறம் மேடம் போனையே காலைல இருந்து கண்ணு பாத்துட்டு இருக்குற மாறி ஒரு சேதி வந்ததே.. என்ன சங்கத்தினு கொஞ்சம் விளக்குறது..”
“அப்படிலாம் இல்லையே.. யாரு உனக்கு சொன்னது..”
“ஹாஹான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்ன, வண்டியை எடுக்குற முன்னாடி.. யாரோ போன்ல டெக்ஸ்ட் பண்ணிட்டே சிரிச்சாங்களே.. நீ பாத்த அவங்களை..?”
Advertisement
“அப்படியா தர்ஷி.. நான் பாக்கவே இல்லையே.. யாரடி அது..”
“அடிங்க ராஸ்கல்.. என்கிட்ட மட்டும் நல்லா வாய் கிழியப் பேசு.. அன்னைக்கு அந்த அண்ணா மட்டும் தான், அன்னைக்கு பேசிட்டு இருக்காரு.. நீ அவரு மூஞ்சையே பாக்குற..”
“ம்க்கும்.. உங்க நொண்ணன் தானே..” என்று சத்தமாக கூறிவிட்டு, “என்னைய எப்படி ஆஃப் பண்ணுறாருனு எனக்கு தானே தெரியும்” என்று மெதுவாக அவனை செல்லமாக சளித்துக் கொண்டே முணுமுணுத்தாள்.
Advertisement
“என்னடி அங்க முணுமுணுக்குற.. சத்தமா சொல்லு..”
Advertisement
“ஒன்னும் இல்லடி.. சீக்கரம் போயிட்டு எடுத்து ஹாஸ்டல் போனும்னு சொல்லுறேன்..”
“ஆமா ஆமா.. சீக்கரம் வரணும் தானே.. அப்போ தானே ஹலோ ஹலோ .. சுகமான்னு பேச முடியும்..”
“தர்ஷி..” என்று இழுக்க,
Advertisement
“நானே தான்.. நைட் நான் அந்த கெஸ்ட் ஹவுஸ் ரூம்ல தங்கிக்குறேன்.. நான் நைட் தூங்கணும்ப்பா.. உன்கூடலாம் இனிமே தூங்க முடியாது..”
“தர்ஷி.. ப்ளீஸ்டி..”
“பாரேன்.. அவந்தி.. என்கிட்ட நீ பதில் பேச முடியாம ப்ளீஸ் சொல்லுற முதல் தடவை.. ஹைய்யா! எனக்கு ஜாலி ஆஹ் இருக்குடி..”
“ச்சீ..போடி.. “
“ச்சீ…இஇஇஇஇஇ.. அவந்திக்கு வெக்கலாம் வருதுப்பா.. பாரேன்.. அண்ணா உன்னை ஒரு நாள்ல எப்படி மாத்தி வச்சிருக்காங்க..”
“ஹையோ.. விடுடி போதும்..”
“சரி சரி.. இப்போ போதும்.. இனிமே நைட் பேசிக்குறேன் என்றாள் பெரியமனதாக.
– – – –
பெரியவனே, மணி ஆறாகப் போகுது.. இன்னும் ஒரு லாரி வரணும்.. எப்போ வருதுன்னு போன் பண்ணி கேளுப்பா.. என் போனை எடுத்து வா.. இல்லனா நானே பேசி என்ன இவ்வளவு நேரம் பண்ணுறான்னு கேக்குறேன்..
சரிப்பா.. நீங்களே அப்போ பேசுங்க.. உங்க போனை எடுத்து வரேன் என்று உள்ளே சென்றான்.
அவரின் போனை எடுக்க, அதில் வந்து இருந்த அத்தையின் எண்ணற்ற அழைப்புகளை பார்த்துவிட்டு, என்னடா இது இப்படி கூப்பிட்டுட்டே இருந்திருக்காங்க என்று யோசித்து விட்டு, ஒரு வேளை அம்மா சொன்ன மாறி, இவங்களுக்கு பொண்ணு பாத்துருக்க விஷயம் தெரிஞ்சிருக்குமோ என்று யோசித்துக்கொண்டே இருக்கும் போது, மீண்டும் கலையரசியின் அழைப்பு வர, அப்படி என்னத்துக்கு காள் பண்றங்கனு பாக்கும் என்று முடிவெடுத்து அழைப்பை ஏற்க,
இதற்காக காத்திருந்த கலையரசியோ, எதிரிலிருப்பவரை ஹலோ என்றுக் கூற விடாமல், என்னண்ணே.. உனக்கு நான் எத்தனை தடவ நானும் காலைல இருந்து கூப்புடுறேன், நீ என்னனா பொழுது சாயிரா நேரத்துக்கு சாவகாசமா எடுக்குற.. என்ன உன் பொண்டாட்டி உங்கிட்ட சொல்லிக்குடுத்தாளா, என்கிட்டே பேசிக் கூடாதுனு.. அப்படி என்ன சொக்கும்படி போட்டா உனக்கு.. என்று பேசிக் கொண்டே போக,
இவன் என்ன உள்ள பண்ணுறான் என்று தானே பேசிக் கொண்டே உள்ளே வர, இவன் போனை காதில் வைத்திருப்பை பார்த்த வீரபாண்டியனோ, இவனே பேசுறானா.. என்கிட்டே வந்து சொல்லிட்டு வந்து பேசவேண்டியது தானே, இவன் வருவான்னு நான் அங்க நிக்குறேன் என்று பேசிக் கொண்டே திரும்ப வெளியே செல்ல, அங்கு லாரி உள்ளே நுழைந்தது.
“ஏன்டா.. சொன்ன நேரத்துக்கு வர மாட்டியா நீ..” என்று இங்கு வீர பாண்டியன் ஓட்டுனரிடம் எகிற, அங்கு அவரின் தங்கச்சியோ, விடாமல் பேசிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத ராஜா, “ஏய்.. இந்தம்மா.. போன போட்டா, யாரு பேசுறாங்கனு கேட்டுட்டு பேச மாட்டியா நீ.. உன் இஷ்டத்துக்கு பேசுற என்று இவனும் மாற்று குரலில் பேச,
“யோவ்.. யாருடா நீ.. என் அண்ணண் போன்ல பேசிட்டு.. என்னை சொல்லுற..”
“யம்மா.. முதல்ல யாரு பேசுறாங்கனு கேட்டுட்டு அப்பறம் பேசு.. யப்பா.. என்ன பேச்சு பேசுற.. போன வைம்மா.. முதல்ல.. என்று வைத்து விட்டான்.
“இங்கு கலையரசியோ, ஒன்றும் புரியாமல் குழம்பி தன் அண்ணனின் எண்ணையே திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தார்.
இங்கு ராஜாவோ,” ஐயோ! காது வலிக்குதே எனக்கு.. இந்த அப்பா எப்படி இந்த அத்தை பேச்சை கேக்குறாருனு தெரியலே.. பாவம்..”
“டேய் ராஜா.. என்ன பண்ணுறா அங்க..” என்று வீரபாண்டியன் சத்தமிட,
“அய்யயோ.. இதோ வரேன் ப்பா..”
“இவ்வளோ நேரம் உள்ள என்ன பண்ணுன..”
“ப்பா.. அது..அது..” ஒரு பொய்யும் வாயில வர மாட்டுதே என்று மைண்ட் வாய்ஸ்- இல் பேச,
“என்ன ராஜா.. யாருடா பேசுனா?”
“ப்பா.. அது சின்ன அத்தை தான் பேசுனாங்க.. நீங்க ஒன்னும் இப்போ முன்னாடி மாறி தர்றது இல்ல அப்பறம்… ஆஹ் கொடுக்குறது இல்லனு சொல்லுறாங்க ப்பா.. என்ன ப்பா அது?.. என்று அவனாகவே எதோ ஒன்றைப் பேச,
“அதுவா பெரியவனே.. நீ உங்க அம்மாட்ட கிட்ட சொல்லிடாதே..”
“என்னப்பா.. அதுலாம் நான் சொல்லமாட்டேன் என்று அவரிடம் கூறிவிட்டு, எப்பயும் வெறப்பா இருக்குற மனுஷன் இப்படி சொல்லுறாரு.. எதுவும் வீட்டுக்கு தெரியாம தப்பு பண்ணுறாரோ.. நான் சும்மா என்னத்தையோ சொல்லப் போய், பூதம் வெளில வரும் போல..” என்று இவன் தீவிரமாக அவர் முகத்தை பார்த்துக் கொண்டே நினைக்க,
“உங்க சின்னத்தை கல்யாண ஆனா புதுசுல, என் புருஷன் ஒன்னும் அவ்வளோ சம்பாதிக்கல, என் வாழ்க்கையை இப்படி வீணாகிட்ட, இதுக்கு எனக்கு நீ ஜாதகம் பக்கமா கல்யாணம் பண்ணிருந்தாக் கூட நான் நல்லா இருந்திருப்பேன். உன் பெரிய தங்கச்சிக்கு மட்டும் நல்லா மாப்பிள்ளை பாத்துட்டு என்னைய நீ விட்டுடனு வந்து அழுத்துச்சி..”
“சரிப்பா.. நீங்க என்ன சொன்னிங்கனு சொல்லுங்க.. எனக்கு பக்குனு இருக்கு.. ஆனாலும் மாமா ரொம்ப நல்ல மனுஷன்.. உங்களுக்கும் தெரியும்ல ப்பா..”
“ஆமாம் ப்பா.. என்ன அவ்வளோ சொத்து பத்து இல்லை.. அது மட்டும் தான் குறை.. அதுனால தான், உனக்கு எப்போ பணத்தேவை இருந்தாலும் இந்த அண்ணண் இருக்கேன்.. நான் உனக்கு பணம் தருவேன் சொன்னேன் டா பெரியவனே.. மாசா மாசம், நானே கொஞ்சம் காசு குடுத்து விடுவேன்..”
“சரிப்பா.. இதுலாம் அம்மாக்கு தெரிஞ்சா கூட ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. விடுங்க ப்பா..”
“ஆமா டா.. அது என்னவோ வாஸ்த்வம் தான்.. அதுக்கு அப்பறம் விலைவாசி ஏறிடுச்சுனு, ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை பத்தாயிரம் வேணும்னு வந்து கேட்டுச்சு.. அப்பறம் எனக்கு ரெண்டு பொண்ணு, நானும் நக, நட்டு வாங்கணும் அப்படினு காரணம் சொல்லுச்சு.. அதுனால அது எப்போ வந்து கேட்டாலும் காசு குடுத்துவேன்.. இதுலாம் அம்மாக்கு தெரியாது.. அதான் அம்மா கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன்டா பெரியவனே..”
“என்னப்பா.. இது..என்று அதிற்சியாகி, இப்போ குடுக்கலையை நீங்க?.. இதுலாம் மாமாக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப் பாடுவாங்க ப்பா..”
“நான் அவருகிட்ட சொல்லிருக்குறேன்னு சொல்லுச்சு டா தங்கச்சி.. இப்போ ஒரு வருசமா அவ்வளோ தர்றது இல்ல.. அந்த சண்டைக்கு அப்பறம்..”
“சரிப்பா.. அதை விடுங்க.. அன்னைக்கு அத்தை வீட்டுக்கு போனீங்கள்ல.. என்ன சொல்லிட்டு வந்திங்க ப்பா.. திரும்ப நந்தா கிட்ட பேச போறிங்களா?.. அவங்க பொண்ணை கல்யாணம் பண்ண சொல்லி? என்று பொறுமையா நூல் விட்டு பார்க்க,
“இல்லடா ராஜா.. அவ்வளோ பொருத்தம் இல்ல.. அந்த ஜாதகம்.. பத்துக்கு அஞ்சு தான் இருக்கு பொருத்தம்.. திரும்ப உன்னை கூட்டிட்டு போயிட்டு பொருத்தம் பாக்குறேன்.. அதுக்கு அப்பறம் பேசலாம்னு சொல்லிட்டு வந்தேன்.”
“ப்பா.. என்னப்பா.. இருந்திருந்து இப்போ தான் நந்தா பொண்ணை பிடிச்சிருக்குனு சொல்லிருக்கான்.. நீங்க மறுபடியும் இப்படி சொல்லுறீங்க.. இதுனால திரும்ப உங்களுக்கும் அவனுக்கும் சண்டை வருமோனு பயமா இருக்குப்பா எனக்கு.. என்ன இருந்தாலும், யோசிச்சி பண்ணுங்க.. உங்களுக்கு தெரியாதது ஏதும் இல்ல.. என்று உருக்கமாக பேச,
“சரிப்பா சரிப்பா.. நீ சொல்லி நான் கேக்காம இருப்பேனா.. இருந்தாலும் உங்க சின்னத்தைக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருக்கேன் ப்பா..”
“சரிப்பா.. நீங்க நம்ம குடும்பத்துக்கு எப்பவும் நல்லது தான் பண்ணுவீங்க.. நான் உங்கள நம்புறேன்.. வாங்கப்பா.. லேட் ஆச்சு.. வீட்டுக்கு போவோம்..”
பெரிய மகனை பெருமையுடன் பார்த்தபடி அவனை பின் தொடர்ந்தார்.
– – – –
அவந்தி என்று அழைத்துக் கொண்டே உள்ளே நுழைய, அவளோ போனிலிருந்து தலையை வெளியே எடுத்து, திருத் திருவெனெ முழித்துக் கொண்டு அவளை பார்த்து ஒன்றும் தெரியாதது போல் அழகாக சிரிக்க,
தர்ஷியோ அவளை நக்கலாக ஒரு பார்வை, அவளையும், அவள் கையில் உள்ள போனையும் பார்க்க, அவந்தியோ போனை அவள் பின்னால் ஒளித்துக் வைத்துக்கொண்டு, “வா வா.. தர்ஷி.. என்ன வேணும்.. ஏதாவது சொல்லனுமா.. என்ன ஆச்சு..” என்று படபடவென்று கேட்க,
தர்ஷி எதுவும் சொல்லாமல் அவளையே பார்க்க,
“அது ஒன்னும் இல்லடி.. இப்போ தான் அவங்க வீட்டுக்கு வந்தங்களாம்.. அது தான் எப்போ போன் பண்றதுனு கேட்டாங்க.. என்று சொல்லி முடித்த நேரம் அவளின் போன் சத்தம் எழுப்ப, அவள் பாவமாய் அவளை பார்க்க,
“ஹ்ம்ம்.. எப்படி இருந்த அவந்தி இப்படி முழிக்கறா.. பாரேன்..”
“ப்ளீஸ்டி தர்ஷி..”
“சரி.. உனக்கு ரெண்டு நிமிஷம் தரேன்.. சாப்பிட்டு வந்து நீ இப்படி சிரிச்சிக்கோ.. ஓகே வா..”
“ஓகே ஓகே..” என்று கூறி விட்டு, “டெக்ஸ்ட் யு அஃபிடேர் டின்னர்”.. உங்களால என் மானம் போது இந்த தர்ஷி கிட்ட.. உங்களை வந்து பேசிக்குறேன்.. என்று மனதில் அவனை செல்லமாக கடிந்துக் கொண்டே தர்ஷியுடன் சென்றாள்.
இரவு உணவு முடிந்து, செகண்ட் இயர் மாணவிகளுக்கு அட்டெண்டன்ஸ் எடுத்து விட்டு, ஏதாவது எமெர்ஜென்சி அப்படினா உடனே எனக்கு சொல்லுங்க.. நான் உங்க ப்ரீத்தி மேம் ரூம்ல தான் இருப்பேன். அவர்கள் அறையை ஒரு முறை நோட்டமிட்டு விட்டு, தன்னுடைய அறைக்கு செல்ல,
இங்கு தர்ஷியோ, ஒகே மேடம்.. நான் என் ரூம் போறேன்.. நீங்க கன்டினியூ பண்ணுங்க, மோர்னிங் லேட் ஆஹ் எழுந்தாக் கூட ஒன்னும் பிரச்சனை இல்ல.. நான் பார்த்துக்கிறேன் மேடம்.. குட் நைட் என்று விடைப்பெற்றாள்.
“குட் நைட் தர்ஷி” என்று சிரித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
உள்ளே வந்து தன்னை ரெபிரஷ் செய்து விட்டு, போனை எடுக்க.. ஹலோ தங்கப் பொண்ணு என்று மெசேஜ் வர,
“இவரை..” என்று மெசேஜ்-ஐ ஓபன் செய்ய,
“வாங்க செல்லக்குட்டி.. நான் வீடியோ காள் பண்றேன்.”
“நோ நோ.. நீங்க ரொம்ப சேட்டை பண்றீங்க.. என்னை பேசவே விட மாட்டேங்குறீங்க..”
“அடப்பாவி.. நான் உன்கிட்டவே வரலையே இன்னும்.. இப்படிலாம் டர்ட்டி ஆஹ் பேச கூடாது தங்கம்..”
“ஏங்க..” என்று டைப் செய்து இவள் சிணுங்க, “இப்படியே தான் பண்றீங்க நீங்க.. தர்ஷி என்னை ரொம்ப கிண்டல் பண்ணுறா..”
“என் முயல் குட்டியை கிண்டல் பண்ணுறலா.. சரி விடு அவளை நாமா நல்லா கலாய்ச்சிடலாம்..”
“போங்க.. நீங்க..”
“எங்கன்னு சொல்லு..ஓடிப்போய்டுவோம்..”
“அவ்வா.. டாக்டர் மாறிப் பேசுங்க..”
“அது பேஷண்ட்ஸ் கிட்ட மட்டும் தான்.. பொண்டாட்டி கிட்ட பேச முடியாதே..”
இவள் அதிர்ச்சி ஸ்மைலியை அனுப்ப,
“சரி, சரி.. நான் காள் பண்ணுறேன்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் ஆடியோ காள்.. அதுவும் உனக்காக மட்டும் தான் ..” என்று அனுப்பி விட்டு, அவளுக்கு போன் செய்ய, அவள் எடுத்தவுடன்..
“சொல்லுங்க அவந்திகா நந்தகுமார்..”
“ஏங்க..” என்று சிணுங்க,
“என்னங்க சொல்லுங்க தங்கமயிலு..”
“அச்சோ.. போங்க நீங்க.. நான் ஒன்னும் பேசல..”
“ஹா ஹா.. இப்போ இப்படி உன்னை பேச விடாம பண்ணுறேன்.. கல்யாணத்துக்கு அப்பறம் வேற மாறி பண்ணுவேன்.. சரியா?”
“அய்ய.. எவ்ளோ கவுச்சியா பேசுறீங்க.. நீங்க..”
“பேசுறதுக்கே கவுச்சியா.. கொஞ்சம் கஷ்டம் தான் போல..”
“ஹேய்..போங்க.. நான் வைக்க போறேன்..”
“சரிடி தங்கம்.. நீ பேசு நான் கேக்குறேன்..”
“காலைல எனக்கு ஸ்பெஷல் நேம் கண்டுபிடிக்குறேன் சொன்னிங்க.. என்னாச்சு?”
“வாவ்.. இதுக்காக தான் காத்திருந்தேன்.. என் அதிகுட்டியே கேக்கணும்னு.. எப்படி இருக்கு உன் நந்து உனக்கு வச்சிருக்க பேரு..”
“நந்து..நந்து.. உங்களுக்கு எப்படி தெரியும்..”
“நீங்க தான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன நான் வீடியோ காள் பேசும் போது சொன்னிங்க.. அதுவே உங்களுக்கு தெரியலையா..”
“நீங்க எங்க என்னைய ஒழுங்கா பேச விட்டீங்க.. அதுல எதோ நானே தெரியாம உளறிட்டேன் உங்க கிட்ட..”
“இது நல்லா கதையை இருக்கே.. நீ பேசுவதை நான் எப்படி கவனிச்சிருக்கேன் பாரு.. எங்க நான் பேசுவதை சொல்லு..”
“போங்க..போங்க.. அதுலாம் சொல்ல முடியாது..”
“ஹா ஹா.. சரி.. அதிக்கு எப்படி இந்த நந்துவை பிடிச்சது..”
“இதே கேள்வியை நீங்க எத்தனை முறை கேக்குறீங்க.. எனக்கே தெரியல.. ஆனா உங்கள பிடிச்சிட்டு போதுமா..”
“பாரு.. நீயும் அதையே தான் சொல்லுற..”
“சரி பதில் சொல்லுறேன்.. கேட்டுக்கோங்க..”
“சொல்லு சொல்லு.. அது தானே அப்போ இருந்து கேட்டுட்டு இருக்கேன்..”
“அதுவா.. ஒரு ஆளு வந்து எங்க அப்பா கிட்ட வழிஞ்சாராம்.. பொண்ணு கிட்ட பேசணும்னு நேரா சொல்லாம, சுத்தி வளைச்சி மூக்கை தொட்டாராம்.. யாருடா அது பொண்ணுகிட்ட வழியாம, இப்படி பொண்ணோட அப்பாகிட்ட யாரு வழியிறாருனு பாக்க வந்தேனா.. அப்போ அவரை எனக்கு அப்படியே பிடிச்சிடுச்சாம்.. அவளோ தான் கதை.. போதுமா..”
“ஓஹோ.. அப்போ பொண்ணுகிட்ட வழிஞ்சா பரவால்லை போல..”
“அப்போ டாக்டர் சார் இன்னும் பொண்ணுகிட்ட வழியவே இல்ல.. அப்படியா..”
“நான் எங்க அப்படி சொன்னேன்.. பையன் பொண்ணுகிட்ட முழுசா விழுந்துட்டேனே.. எப்படி சீக்கரம் கடத்துறது தான் இப்போ மும்மரமா பிளான் போடுறேன்.. இந்த வீட்டுலலாம் சொல்றத கேட்டா, அது இப்போதைக்கு நமக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க போல.. அதுதான் இந்த பிளான் எப்படி..”
“அவ்வா அவ்வா.. “
“அவ்வா தான்.. இன்னும் எவ்ளோ வருஷம் நான் காத்திருக்கிறது..”
“என்னது! வருசமா” என்று அதிர்ச்சியாக,
“ஹான்.. ஆமா.. பின்ன வயசாகுதுல்ல.. அதை சொல்லுறேன்..” என்று அப்படியே பேச்சை மாற்றினான். “அடேய் நந்தா.. நீயே உளறிடாத..” என்று தன்னையே மனதில் கடிந்துக் கொண்டான்.
“சரி.. நான் ஹாஸ்டெல்ல இருக்குறேனு எப்படி சரியா சொன்னிங்க.. அப்பறம் மோர்னிங் – உம் பிரேக் டைம்னு சொன்னிங்க.. எப்படி?”
“என் உடல் மட்டும் தான் இங்க இருக்கு, உயிரரெல்லாம் உன்கிட்டேதான் இருக்கு.. அது தான் சொல்றேன்..”
“நந்து… உங்களை..”
“உன் நந்து தான்.. என்ன பண்ண போற என்னை..”
“ஏங்க.. நந்து.. பாருங்க.. நீங்க இப்படி தான் பண்றீங்க..”
“நீ இனிமே இப்படி போன்ல சிணுங்காத..”
“ச்சீ.. வெரி பேட் பாய்.. சொல்லுங்க எப்படி தெரியும்னு..”
“ஹா ஹா.. வைஷாலி, பைனல் இயர்.. இ.சி.இ.. என் தங்கச்சி அங்க தான் படிக்குறா..”
“ஓஹ்.. அப்படியா..சூப்பர் சூப்பர்..”
“ஆமா.. நீ இப்போ போயிட்டு எதுவும் பேசாத.. நானே சர்ப்ரைஸ் ஆஹ் சொல்லுறேன் அவகிட்ட..”
“ஓஹ் சரி.. எனக்கு அவ்வளோ தெரியாது மத்த டிபார்ட்மெண்ட் பசங்கள.. தர்ஷி டிபார்ட்மெண்ட் தான்.. அவளுக்கு தெரிஞ்சிருக்கும் கண்டிப்பா..”
“ஹ்ம் இருக்கலாம்.. சரி ஹாஸ்டெல்ல பத்திரம்.. புரிஞ்சிதா..”
“சரிங்க டாக்டர்.. அப்படியே ஆகட்டும்..”
“சரி.. நான் வீடியோ காள் வரேன்.. எனக்கு உன்னை இப்போ பாக்கணும்..”
“நோ நோ.. அப்பறம் நீங்க என்ன ஆஃப் பண்ணிடுங்க..”
“இதுலாம் போங்கு.. அதி ப்ளீஸ்.. என் முயல்குட்டி, தங்க குட்டி, மான் குட்டி..”
“போதும் போதும்.. வரேன்..”
வீடியோவில் அவளின் முகத்தையே பார்க்க,
“எதுக்கு இப்போ இப்படி பாக்குறீங்க .. இதுக்கு தான் சொன்னேன்..” என்று தலைகவிழ்த்தாள்.
“அதி.. சீக்கரம் என்கிட்ட வந்திடு.. ரொம்ப நாள் தாக்கு பிடிக்காதுப் போல..”
“ம்ம்..” என்று சிவந்தாள்.
“இப்படிலாம் நீ பண்ணுனானு வை.. அப்பறம் நான் ஏடாகூடமா தான் பேசுவேன்.. பிறகு என்னை எதுவும் சொல்லக் கூடாது.. இப்போவே சொல்லிட்டேன்..”
“நந்து.. ஏன் இப்படி பண்றீங்க..”
“நீ தான் என்னை இப்படி ஆக்குற..”
“ரொம்பத்தான்.. போங்கப்பா..”
“போக சொல்லாத.. வர சொல்லு..”
அவந்திக்கு தூக்கத்திற்கு கண்கள் சொருக, அதை பார்த்த நந்தா.. ஹே அதி.. தூங்கு.. கண்ட்ரோல் பண்ணாத.. இப்போவே நல்லா தூங்கிக்கோ.. அப்பறம் இப்படி தூங்குன்னுளம் சொல்லமாட்டேன்..ஓகேவா” என்று கண்ணடித்தான்.
“ஆரம்பிச்சிட்டீங்களா.. சரி சரி.. தூங்கலாம்.. குட் நைட்..”
“ஒகே.. குட் நைட் அதி.. கனவிலயும் வருவேன்..” என்று கண்ணடித்துவிட்டு புன்னகையுடன் உறக்கத்திற்கு சென்றான்.
error: Content is protected !!