Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் – 5

மாதங்கள் கடந்தன அனு இந்தியாக்கு கிளம்பும் நாளும் வந்தது. பிட்டர், ஸ்டெல்லா, லயா மூவரும் ஏர்போர்ட்க்கு வந்து வலியனுப்பி வைத்தனர் சிறு வருத்தத்துடன். லயாவுக்கு கவின் கிரிஷ் பிரிவது மிகுந்த வருத்தமாக இருந்தது.

கவின் லயாவிடம் ” லயா இப்போ எதுக்கு அழுகுற “.

“என்ன மட்டும் விட்டுட்டு நீங்க மட்டும் இந்தியா போறீங்க, நானும் வருவேன் உங்க கூட என்று அதிகமாக அழ ஆரம்பித்தால் லயா “. 

“லயா என்னோட அம்மாவும், ஜெனிமாவும் இந்தியா போறாங்க அதுனால நாங்களும் போறோம், உன்னோட அம்மா அப்பா போகும் போதும் நீயும் போ “என்றான் கிரிஷ்.



Advertisement

“அம்மா அப்பா வாங்க நாமளும் போகலாம் இந்தியாக்கு “என்றால் லயா.

பிட்டாரும் ஸ்டெல்லாவும் லயாவை சமாதானம் செய்தனர்.

“அனு மதுரைக்கு போறல அப்படியே ஒட்டன்சாத்திரத்துக்கும் போ ” என்றான் பிட்டர்.

Advertisement

“அண்ணா ப்ளீஸ் அங்க மட்டும் போக சொல்லாதீங்க ” என்றாள் அனு.

Advertisement

“நீ பண்ணுறது ரொம்ப தப்பு அனு,உன் புருஷன் மேல தானா உனக்கு கோவம், பாவம் உன் அத்தை மாமா அவங்க என்ன தப்பு பண்ணாங்க ” 

“உன் அத்தை மாமா உன் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. உன்ன அவங்க பொண்ணு மாதிரி பாத்துபாங்கனு சொல்லுவா, அவங்களுக்காகவது நீ உன் வீட்டுக்கு போ அனு “

“உன் பசங்களா அவங்க கிட்ட கூட்டிடு போ , அவங்களுக்கும் அவங்க பேரங்க கூட இருக்க உரிமை இருக்கு அனு ” என்றான் பிட்டர்

Advertisement

“என்ன பிட்டர் பேசுறீங்க நீங்க, அனுவா அவ வீட்டுக்கு போக சொல்லுறீங்க இது ரொம்ப தப்பு, அனு வீட்டை விட்டு வந்து அஞ்சு வருஷம் ஆச்சு “

” இந்த நேரம் அனு ஓட ஹஸ்பண்ட்க்கு வேற கல்யாணம் ஆகி பசங்க கூட இருக்கலாம் ” என்றாள் ஸ்டெல்லா.

“சீச்சீ அப்படிலாம் எதும் ஆகி இருக்காது “என்றாள் அனு வேகமாக.

“அப்படி கல்யாணம் ஆகி இருந்தாலும் எந்த தப்பும் இல்லையே, உனக்கு அவரு கூட வாழ பிடிக்கலைனு தானா வீட்டை விட்டு வந்தா அப்பறம் என்ன “

அனு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தால், ஸ்டெல்லா பிட்டருக்கு ஜாடை கட்டினால்.உடனே பிட்டர்

” ஸ்டெல்லா இப்போ எதுக்கு அவனை பத்தி பேசுற, கட்டுன பொண்டாட்டி மேல கோவப்படுறவன், சந்தேகம் படுறவன்,அடிக்குறவன் வீட்டை விட்டு வெளிய அனுப்புனவன் அவன் எல்லாம் மனுசனா, மிருகம் அவனை எல்லாம் நிக்க வச்சி கல்லாலையே அடிச்சீ கொள்ளணும் “என்றான் பிட்டர்.

” அண்ணா ப்ளீஸ் அவரப்பத்தி இப்படிலாம் சொல்லாதீங்க “என்றாள் அனு கண் கலங்க.

“அனு உனக்கு தான் அவர பிடிக்காதுல, அவரு எப்படியாது போறாரு உனக்கு என்ன, பிட்டர் அவர பத்தி சொன்ன நீ என் பீல் பண்ணுற “என்றாள் ஸ்டெல்லா.

” ப்ளீஸ் ஸ்டெல்லா அவரை பத்தி தப்பா பேசாதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு “என்றாள் அனு 

“அம்மா அம்மா எனக்கு சூசூ போகணும் என்றான் கிரிஷ், எனக்கும் சூசூ போகணும் என்றான் கவின் “இருவரையும் அனு ரெஸ்ட்ரூம் அழைத்து சென்றால்.

“பிட்டர் என்ன இவ இப்படி இருக்குறா அவ புருஷன் கூட வாழவும் மாட்டேன்கிறா, அவரை பத்தி ஏதாவது சொன்ன வருதமும் படுறா, கோவமும் படுற இவளை என்னால புரிஞ்சிக்கவே முடியல “என்றாள் ஸ்டெல்லா.

“அனுக்கு அவ புருஷன் மேல ரொம்ப காதலும், பாசமும் இருக்கு,அதே அளவுக்கு அவரு மேல கோவமும் வருத்தமும் இருக்கு, அனு ரொம்ப குழப்பத்தில இருக்குறா, அந்த குழப்பம் தான் அவளை அவ புருஷன் கூட சேரவிடமா தடுக்குது “என்றாள் ஜெனி.

” ஜெனி சொல்லுறது கரெக்ட் தான் ஸ்டெல்லா, அவ வீட்டை விட்டு வந்து இவளோ நாள் ஆச்சி ஒரு நாளாது அவ புருஷனை பத்தி தப்பா சொல்லிருக்காளா, இல்லல ” என்றான் பிட்டர்

“ஜெனி நீ மதுரைக்கு போனது எப்படியது அனு ஹஸ்பண்டை காண்டாக்ட் பண்ணி அனுவா பத்தி சொல்லு, அனுவையும் அவரையும் மீட் பண்ணவை,அனு அவரை பார்த்து பேசினாலே சரி ஆகிருவா ” என்றான் பிட்டர்.

“கண்டிப்பா அவங்கள மீட் பண்ண வைக்குறேன் அண்ணா, எனக்கு அனு அவ புருஷன் கூட சந்தோசமா வாழணும் அது போதும் “என்றாள் ஜெனி.

“ஜெனி சொல்லுறேன்னு தப்பா நினைக்காத உனக்கு ஒன்னும் நிறைய வயசு ஆகிடல, நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது”என்றான் பிட்டர்

“நான் அதை பத்தி யோசிக்கவே இல்லனா, ஒரு வேளை என்னோட மனசுக்கு தோணுன பார்க்கலாம் ” என்றாள் ஜெனி.

விமானத்திற்கான அறிவிப்பு வந்தது. ஜெனி அனு கவின் மட்டும் கிரிஷ் அனைவரிடமும் விடை பெற்று சென்றனர்.

அனு லண்டனில் இருந்து துபாய்க்கு சென்று, அங்கிருந்து வேறு விமானம் மூலம் மதுரைக்கு செல்கிறாள்.

கதிரவன் சக்கரவர்த்தி மதுரையில் இருந்து துபாய்க்கு பயணம் செய்து கொண்டிருந்தான் விமானத்தில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை துபாய்க்கு சென்று தன் கடைகளுக்கு தேவையான விலை உயர்ந்த செல்போன், வாட்ச், சென்ட் மற்றும் தங்கக்கட்டி ஆகியவற்றை வாங்கி வருவான், இப்போது அதற்காக தான் சென்று கொண்டிருக்கிறான்.

அனு துபாய்க்கு வந்து இறங்கி விட்டால். அடுத்த விமானத்திற்காக காத்திருந்தாள்.

“அம்மா எனக்கு ரொம்ப பசிக்குதுமா ஐஸ்கிரீம் வாங்கிதா என்றான் கிரிஷ்”.

“இப்போ தானாடா சாப்பிட அதுக்குள்ள பசிக்குதா உனக்கு ” என்றாள் அனு.

“அம்மா ஐஸ்கிரீம் பாத்ததும் பசிக்குதுமா ப்ளீஸ் வாங்கி தாங்க ப்ளீஸ் ப்ளீஸ் என்றான் கிரிஷ் அவனுடன் கவின் இணைந்து கொண்டான் “.

“அனு நீ ஏதோ வாங்கணுன்னு சொன்னாலே நீ போய் அதை வாங்கிட்டுவா நான் இவங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தாரேன்” என்றாள் ஜெனி

அனு ஷாப்பிங் செய்ய போய் விட்டால், கதிரவன் மட்டும் அவன் நண்பன் குரு இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வந்தனர்.

“மச்சான் வாடா போய் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் இந்த ஷாப்ல ஐஸ்கிரீம் சூப்பரா இருக்கும்” என்றான் குரு.

ஜெனி கவின் மட்டும் கிரிஷ் மூவரும் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்த டேபிள்க்கு எதிர் டேபிளில் கதிரவன், குரு இருவரும் அமர்த்தனர்.

“மச்சான் அந்த குட்டி பசங்கள பாருடா பார்க்க ஒரே மாதிரி அழகா இருக்காங்க “என்றான் குரு.

“கதிரவன் கவின் மட்டும் கிரிஷ் இருவரையும் பார்த்தான், குழந்தைகள் இருவரும் ஐஸ்கிரீமை வாயலும் முக்காலும் சாப்பிட்டு கொண்டிருந்தனர் “.

கதிரவனுக்கு குழந்தைகளை பார்த்ததும் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. ரஞ்சுக்கும் எனக்கும் இவங்கள மாதிரி பசங்க பிறந்திருந்தா எவளோ நல்லா இருந்திருக்கும் என்று ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டான்.

“குழந்தைகளையும் அவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடும் அழகையும் விழி களை சிமிடாமல் பார்த்து கொண்டிருந்தான் கதிரவன் “.

“கதிரவா டைம் ஆச்சு வா என்றாள் குரு ” குழந்தைகளை பிரிய மனம் இல்லாமல் அவர்களை பார்த்துக்கொண்டே அங்கிருந்து வெளியேறினான்.

குழந்தைகளை பார்த்துக் கொண்டே வந்தா கதிரவன் எதிரே வந்தா அனுவை பார்க்காமல் போய்விட்டான், அனுவும் கதிரவனை பார்க்கவில்லை.

“மச்சான் லிப்ட் காலியா தான் இருக்கு வாடா அதுல போகலாம்” என்றான் குரு.

இருவரும் லிப்டினுள் சென்றனர்.

கதிரவன் உள்ளே சென்று திரும்பும் போது தான் எதிரில் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த அனுவை பார்த்தான்.

அனுவை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் சிலை போல் மாறி விட்டான். கதிரவன் சுதாரிக்கும் முன்பு லிப்ட்யின் கதவு முடிவிட்டது.

கதவு முடியதும் தான் அவன் சுய நினைவுக்கு வந்தான். லிப்ட் கதவை திறக்க முயற்சி செய்தான், லிப்ட் ஆனது தரைதளத்திற்கு சென்று தான் திறந்தது.

அவன் வேகமா வெளியே வந்து, தானியங்கி படிகட்டின் மூலம் மேலே சென்றான். அங்கு அனு இல்லாமல் போகவே சுற்றி தேட ஆரம்பித்தான்.

“அனு வேகாம வா போர்டிங் ஆரம்பிச்சிருச்சி என்றாள் ஜெனி “

“ஜெனி இரண்டு குழந்தைகளையும் கூடிக்கொண்டு முன்னால் சென்றால் அனு ஹாண்ட் லக்கேஜ் எடுத்துக்கொண்டு பின்னால் சென்றால்”.

“கதிரவன் சுற்றி தேடிக்கொண்டு இருக்கும் போது, மதுரைக்கு செல்லும் விமானத்திற்கு அழைத்து செல்லும் பஸ் ஏறுவதற்காக நின்றுந்தால், கதிரவன் அனுவை பார்த்து விட்டு அவள் அருகில் செல்ல முயன்றான்”.

“அவனிடம் டிக்கெட், போர்டிங் பாஸ் இல்லாததால் அவனை உள்ளே அனுமதிக்கவில்லை எவளோ முயன்றும் முடியாமல் போனது அவனால் “

“அருகில் இருந்த கண்ணாடி வழியாக ரஞ்சனியை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் கண்ணில் கண்ணீர் வழிய “.

“அனு பஸ்சில் ஏறும்போது அவனுடைய போனில் போட்டோ எடுத்துக் கொண்டான்”.

ஐந்து வருடங்கள் கழித்து ரஞ்சனியை பார்த்தும் அவளிடம் பேசமுடியாமல் சோர்ந்து போய் அமர்ந்துவிட்டான்.

கண்களில் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது அவனுடைய அனுரஞ்சனியை நினைத்து.

“என்னடா ஆச்சு ஏன்டா இப்படி உக்காந்து அழுதுடு இருக்குற ” என்றான் குரு

“மச்சான் என் ரஞ்சனிய பாத்தேன்டா”

“எங்கடா, எப்போடா “

“இங்க தாண்டா பார்த்தேன். அவ பக்கத்துல கூட போய் பேச முடியலடா”என்று கூறி அழுதான்.

“அழாதடா மச்சான் அடுத்து என்ன பண்ணலாம்னு வேகமா சொல்லுடா ” என்றான் குரு

“குரு, ரஞ்சனி மதுரைக்கு போற பிலைட்ல தான்டா போன, அடுத்த மதுரை பிலைட் எப்போன்னு பார்த்து உடனே டிக்கெட் எடுடா “

“எனக்கு மட்டும் டிக்கெட் எடு, நீ வந்த வேலைய முடிச்சிடு வாடா “என்றான் கதிரவன்.

குரு டிக்கெட் வாங்க சென்று விட்டான்.கதிரவன் ஹரிக்கு போன் செய்தான்.

” ஹரி நான் துபாய்ல ரஞ்சனிய பார்த்தேன்டா, அவ மதுரைக்கு தான் இப்போ வந்துட்டு இருக்குறா இன்னும் மூணு மணி நேரத்துல வந்துருவா “

“நீ ஏர்போர்ட்க்கு போய் அவ வந்ததும் அவ எங்க போற, யாரு வீட்டுக்கு போறான்னு பார்த்து சொல்லுடா “

என்றான் கதிரவன்

“உனக்கு ரஞ்சனி போட்டோ வா அனுப்பிருக்கேன்டா என்றான் கதிரவன் “.

“என்கிட்ட ரஞ்சனி போட்டோ இருக்குடா “

“டேய் முன்னாடி இருந்த மாதிரி இல்லடா அவ இப்போ, ஜீன்ஸ் டிஷர்ட் போட்டு ரொம்ப மாடன்னா இருக்குறடா” என்றான் சிறு வெட்கத்துடன்.

“ஓகே மச்சான் நான் ரஞ்சனிய வாட்ச் பண்ணி பாக்குறேன் “என்றான் ஹரி

இரண்டு மணி நேரம் கழித்து துபாயில் இருந்து மதுரைக்கு செல்லும் விமானத்தில் போய் கொண்டிருந்தான் கதிரவன்.

அனு மதுரையை நெருங்க நெருங்க அவளுக்கு அவளுடைய புருஷன் கதிரவனின் நியாபகம் அதிகமாக வந்தது. பழைய நினைவுகளில் இருந்தால், அதே நேரம் கதிரவனும் அனுரஞ்சனியின் நினைவில் இருந்தான்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு

 

   அனுரஞ்சனி ஓட்டன்சத்திரத்தில் உள்ள சக்தி கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.அன்று சனிக்கிழமை என்பதால் அனுவிற்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்தது.

கதிரவன் சக்கரவர்த்தி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக வீட்டில் சும்மா தான் இருக்கிறான்.

 அவனுக்கு நான்கு பேப்பரில் அரியர் இருப்பதால் அதை கிளியர் செய்வதற்காக படித்து கொண்டிருப்பதாக கூறிக்கொண்டு வெட்டியாக சுற்றிக்கொண்டு இருக்கிறான்.

கதிரவன் தன் நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். அந்த மைதானம் சக்தி கல்லூரிக்கு அருகில் இருந்தது அப்பொழுது ஒருவன் அடித்த பந்து கல்லூரிக்கு உள்ளே சென்று விட்டது.

     

கதிரவனும், பாபுவும் கல்லூரின் சுவற்றை ஏறி குதித்து உள்ளே சென்றனர். இருவரும் பந்தை தேடி கொண்டிருந்தனர் அப்பொழுது பெண்கள் சிலரின் கைத்தட்டும் ஓசை கேட்டது.

என்ன சத்தம் என்று இவர்கள் எட்டி பார்த்தனர். அங்கு பெண்கள் கூட்டமாக அமர்த்திருந்தனர்.கல்லூரி வழியாக சாவு ஊர்வலம் போய் கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தில் தப்பு மட்டும் பேண்டு வாத்தியம் இசைக்க பட்டது.

 பெண்கள் கூட்டத்தின் நடுவில் இரண்டு பெண்கள் ஷால்லை இடுப்பில் கட்டிக்கொண்டு நாக்கை மடித்து சாவுகுத்து ஆட்டம் ஆடி கொண்டிருந்தனார்,

பாபு கதிரவனிடம் என்னடா இந்த பொண்ணுங்க இப்படி ஆடுறாங்க சரியான ஆடுகாளிக்கலா இருப்பாங்க போலடா என்றான்.

கதிரவன் கூடத்தில் குத்தாட்டம் ஆடி கொண்டிருந்த அனுரஞ்சனியை ஆசார்யமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!