Skip to content
Post Views: 6,414
சாரல் – 15
இன்னைக்கு டே வச்சி செஞ்சிட்டு டா.. நம்ம நிலைமையை பார்த்தியா, நைட்- உம் எமெர்ஜென்சினு வந்து, அதை பாத்து, முடிஞ்சி போறதுக்குள்ளயே நடு ஜாமம் தாண்டிடுச்சு, இதுல சரியாய் தூங்காம அப்படியே காலைல டியூட்டிக்கு வந்தாச்சு.. ஆனாலும் பாரேன், இந்த நவீன் பையன் மட்டும் நைட் ஷிபிட் முடிஞ்சி ஜாலி ஆஹ் கிளம்பிட்டான். இப்போ நல்லா தூங்கி எழுந்து பயபுள்ள ஜம்முனு வந்து நிக்கும். சே.. வரவர எனக்கு இந்த டாக்டர் வாழ்க்கை பிடிக்கல டா.. வேற ஏதாது நல்லா வேலையா இருந்தா சொல்லுடா நந்தா.. கொஞ்ச நாள் அப்படி வாழ்ந்து பாக்குறேன்.. என்று அரவி புலம்ப,
“எனக்கு தெரிஞ்ச டாக்டர்ஸ் யாரும் என்கிட்ட இப்படி சொல்லி நான் இன்னும் பாக்கல அரவி..” பட் நீ என்கிட்ட இப்படி புலம்புறதுனால என்று கூறி நிறுத்திவிட்டு அவனை மேலிருந்து கீழே பார்த்துக் கொண்டு, “உனக்காக வேணும்னா ஒரு வேலை சொல்லுறேன்.. உனக்கு தான் அந்த வேலைக்கான பத்து பொருத்தமும் அம்சமா பொருந்தும்னு வேணா நான் சொல்லுறேன்..”
“அப்படியாடா சொல்ற.. அப்போ நான் அந்த வேலைக்கு முயற்சி பண்ணி பாக்குறேன்டா.. என்ன பண்ணனும் அந்த வேலையில?..”
Advertisement
“நீ ஒன்னும் பண்ண வேணாம்.. சும்மா உக்காந்திருந்தாலே போதும்.. சாப்பாடு கூட பிரீ தான் உனக்கு அங்க..”
“இது ரொம்ப நல்லா இருக்கே.. எந்த ஊருக்கு போகணும் அந்த வேலையை பார்க்க?..”
“இன்னும் கொஞ்ச நேரத்துல டியூட்டி முடியபோதுல.. அதை முடிச்சிட்டு என்னை ஒரு டிரஸ் கடைக்கு கூட்டிட்டு போ..”
Advertisement
“ஏன் டா.. டிரஸ் கடைக்கு?.. அதுலாம் கூட்டிட்டு போறேன்.. நீ முதல்ல எனக்கு அந்த வேலையை பத்தி சொல்லு..”
Advertisement
“உனக்காக தான் டா சொல்லுறேன்.. டிரஸ் உனக்கு வாங்க தான்..”
“ஏன் டா.. என்கிட்டே இருக்குற சட்டைலாம் போடா கூடாதா?.. அங்க யூனிபோர்ம் ஆஹ் போடணும்..”
“ஹ்ம் ஹ்ம்.. ஆமா..சரியாய் சொல்லிருக்க.. யூனிபோர்ம்னு கூட அந்த ட்ரெஸ்ஸை சொல்லலாம்..”
Advertisement
“ஓஹ்.. சரி.. எந்தக் கடைக்கு போகணும்..”
“காவி வேஷ்டி, சட்டை எந்த கடையில இருக்கோ அந்த கடைக்கு கூட்டிட்டு போ, போதும்..”
“என்னாத்துக்கு காவி வேட்டி, சட்டை? என்று சந்தேகமாக பார்க்க,
“அப்படி சந்தேகப்பட்டுலாம் என்னைய பாக்காத.. நீ என்ன வேலைனு இப்போ யோசிச்சியோ, அதே வேலையை தான் சொன்னேன்..”
“உன்னைய நான் என்னதான்டா பண்றது.. எப்பயும் உன்கிட்டயே வந்து சிக்குறேன் பாத்தியா.. இதுக்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா, என்னோட இந்த வாய் தான்.. அதனால என் வாயை நானே ஒரு நல்ல பிளாஸ்டர் போடு ஒட்டிக்கணும்.. அப்போதான் உங்கிட்ட இப்படி பேசாது அது..”
“ச்ச..ச்ச.. என்னடா, இப்படிலாம் சொல்லுற.. உன்னை நீயே சொல்லுப்பியா..”
“பின்ன நீ சொல்லுறீயா?…”
“நான் ஏன் டா சொல்லப்போறேன்.. நீ இப்படி பேசுனா தானே உன்னைய வச்சி நான் என்னை என்டர்டெய்ன் பண்ணிக்க முடியும்..”
“நீயெல்லாம் மனுஷ ஜென்மமே இல்லடா.. இந்த நவீன் எரும கூட இல்ல பாரு.. என்னை உன்கூட கோர்த்து விட்டுட்டு அவன் ஜாலி ஆஹ் நைட் ஷிஃப்ட் போயிடுறான்.. ரெண்டு வாரத்துக்கு நைட் ஷிஃப்ட் எடுத்துக்குறான் டா..”
“அவன் ஜாலி ஆஹ் இருக்க நைட் ஷிஃப்ட் போறான்.. உனக்கு ஏன்டா காண்டு..”
“நைட் ஷிப்ட்ல என்னடா ஜாலி வேண்டி கிடக்கு..”
“இதுக்கு தான் சொல்லுறேன்.. நீ எங்க கேக்குற.. இதுல என்கிட்டயே வேற கேக்குற..”
“என்னனு சொல்லித் தொலைடா தடிமாடு..”
“எதுக்கு இப்போ காண்டாகுற.. நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட..”
“டேய்.. டேய்.. என்னனு சொல்லிட்டு அப்பறம் இதுல்லாம் சொல்லு.. இல்லனு வையேன்.. உன்னை.. உன்னை..”
“ஹா ஹா ஹா.. என்னடா உனக்கு பேச்சுக்கு கூட வர மாட்டுது.. அப்போ உனக்கு உறுதியா சன்னியாசம் தான்..”
“அடேய்.. திரும்ப திரும்ப இதையே சொல்லாதடா.. உங்களையே விட ஒரு வயசு தான் டா பெரியவன்.. அதுலாம் விடு, நைட் ஷிப்ட்ல அவனுக்கு என்ன ஜாலின்னு முதல்ல சொல்லு.. அப்பறம் நீ என்னைய என்ன வேணும்னாலும் சொல்லு..”
“இன்னுமாடா உனக்கு புரியல, அவன் அந்த தேவி நர்ஸை கரெக்ட் பண்ணிட்டான்.. அந்த பொண்ணும் ஓகே சொல்லிடுச்சி.. அவங்க மாசத்துக்கு ரெண்டு வீக் நைட் ஷிஃப்ட் எடுக்கணும்ல.. அதுக்கு தான் தலைவர் நைட் ஷிஃப்ட் போறார்.”
“என்னடா சொல்ற.. எனக்கு மயக்கம் வர போல இருக்கு..”
“வயசானவங்களுக்கு இப்படி தான்டா இருக்கும்.. இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தி கேட்டா.. பாரு உனக்கும் வருது.. வயசாயிடுச்சினு சொன்னா எங்க கேக்குற நீ.. இந்தா தண்ணிய குடி..”
“டேய்.. நான் இதுக்கப்பறம் அழுதுடுவேன்டா.. ஒரு வயசு தான் டா பெரியவன்..”
“பெரியவனா இருந்து என்ன புண்ணியம்.. இதைக் கூட உன்னால கண்டுபிடிக்க முடியலையே..”
“இதுலாம் உனக்கே அநியாயமா தெரியல.. பெரியவனா இருந்தா இதுலாம் தெரியனுமாடா?…”
“இல்லையா பின்ன.. உன்னோட சின்ன வயசுல உள்ளவங்களுக்குலாம் கல்யாணம் ஆகபோது.. இப்பவே நீ அங்கிள், இதுல உன்னோட பிரெண்ட்க்குலாம் கல்யாணம் ஆகிடுச்சினு தெரிஞ்சா, யாரு உனக்கு பொண்ணு குடுப்பா.. அதுனால நீ கடைசி வரைக்கும் இப்படி தான் இருக்க போற போல..”
அரவிந்த் அவனை பார்த்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிடுபோட்டபடி.. “ஐயா ராசா.. போதும்.. சாபம் விட்டுடாதீங்க எசமான்.. மேல எந்த தேவதையாது ததாஸ்துனு சொல்லிட்டு போயிட போது.. உங்களுக்கு புண்ணியமா போகும்..”
“ஹா ஹா ஹா.. பாத்தியா! காவி வேட்டி கட்டிருக்க போல இப்போவே நல்லா கும்பிடுலாம் போடுற.. இதுவும் நல்லது தான் பின்னாடி உனக்கு யூஸ் ஆகும்..”
“உன்னையெல்லாம் உங்க அம்மா எப்படி பெத்தாங்கன்னு தெரியலடா… ஆனா ஒன்னும் மட்டும் சொல்லுறேன்டா.. எனக்கு மட்டும் கல்யாணம் ஆகுலனு வை.. அப்பறம் இருக்குடா உங்களுக்குலாம். இந்த நவீன் வரட்டும் அவனுக்கும் இருக்கு..”
“அதுலாம் இப்போ வாய்ப்பு இல்ல.. நீ வா.. நாம ரௌண்ட்ஸ் போயிட்டு வருவோம்.. இன்னைக்கு நான் சீக்கரம் கிளம்ப போறேன்.. நீ மேனேஜ் பண்ணிக்கோ.. என் டார்லிங் வைட்டிங்..”
“ஆண்டவா.. என்னைய ஏன் வீட்ல கடைசி பையனா பிறக்க வச்ச.. எப்படியாது என் அண்ணனுக்கு ஒரு பொண்ணை கண்ணுல காட்டிட்டு என் ரூட்டை கிளியர் பண்ணி விடுற.. பாரு இப்போ இவன் சொல்லறதெல்லாம் கேக்க வேண்டியதை இருக்கு..”
“இப்படி நீ கடவுள் கிட்டயே ஆர்டர் போட்டனு கடவுளுக்கு தெரிஞ்சிச்சு, அவரு உனக்கு கடைசி வரைக்கும் பச்சை கோடி காட்ட மாட்டாரு பாத்துக்கோ.. அதனால உனக்கு காவி தா.. அப்பறம்.. ” என்று கூற வர,
பாய்ந்து வந்து நந்தாவின் வாயை மூடி, யப்பா சாமி போதும் டா.. இப்போ நீ என்கிட்ட பேசுனதுல பாதி வார்த்தை அந்த காவி தான் டா.. இதுக்கு மேல இந்த பாடி தாங்காது.. நீ சொன்னது வரைக்கும் போதும்..
“சரி சரி.. வா வா.. நாம போலாம் ரௌண்ட்ஸ்க்கு…” என்று அவனை இழுத்து சென்றான்.
– – – – –
“க்கா.. க்கா.. நீ சொன்ன மாறியே பேசுனாங்க..” என்று பின் காலையில் கலையரசிடம் போனில் ஒருவர் பேச,
“ஏய்.. என்னானு சொல்லாம மொட்டையா கேக்குற.. எவடி இவ, எந்த அறிவுகெட்டவ பேசுறதுனு சொல்லித் தொலைஞ்சிட்டு, அப்பறம் கேள்வியை கேளுடி.. காலையிலேயே வந்துட்டாளுங்க பேசுறதுக்கு..”
“க்கா க்கா.. நான் தான் கல்யாணி.. என்ன தெரியலையா.. உங்க அக்கா வீட்டுக்கு வேலை செய்றவ..”
“ஓஹ்.. நீயா.. என்று அலட்சியப் படுத்திவிட்டு, உன்கிட்ட எல்லாம் என்ன நடக்குதுன்னு கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதா இருக்கு பாத்தியா..”
“அப்பறம் எதுக்கு என்னைய ஏதாது நடந்த சொல்ல சொன்ன.. இப்போ நீ இப்படி சடைச்சிக்குற..”
“என்ன.. ரொம்ப ஏத்தமா உனக்கு..நீ என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லிட்டு வை.. “
“இந்தா ம்மா.. நீ குடுத்ததுக்கு நாம நியாமா நடந்துக்கலாம்னு பாத்தா, என்னையவே இந்த பேச்சு பேசுற..”
“ஏய்.. என்ன.. ரொம்ப வாய் நீளுது.. என் கூட பொறந்தது, ஒழுங்கா இருந்தா, நான் ஏன் உன்கிட்ட எல்லாம் கேக்க போறேன்.. இருக்கட்டும் இருக்கட்டும் எல்லாரையும் அப்பறமா ஒரு கை பாத்துக்குறேன்..”
“உன் வாயை விட என் வாய் ரொம்ப நீளுல, எதோ கல்யாணம் சீக்கரம் கூடி வரணும்னு பேசுனாங்க.. அவ்வளோ தான் எனக்கு தெரியும்.. நீ குடுத்த காசுக்கு உனக்கு சேதி சொல்லிட்டேன்.. இதுக்கு மேல ஒன்னும் இல்ல.. இனிமே காச தூக்கிட்டு இங்க வந்துறாத.. நான் வக்கிறேன்..”
“இந்தாடி.. ஒண்ணுத்தையும் உருப்படியா சொல்லாம போன வச்சிட்டா பாரு. இவகிட்ட காசு கொடுத்து ரொம்ப தப்பு பண்ணிட்டேன். என்கிட்டயே என்ன எகத்தாளம் பேசுறா.. இருக்கட்டும், எங்க போயிட போறா.. இந்த கலையரசி யாருனு நான் காமிக்குறேன்..”
என் அண்ணங்காரன் அன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டு, கண்டிப்பா உனக்கு ஒரு நல்லா முடிவு சொல்லுறேன். இந்த அண்ணனை நம்பு, சோம்புனு லாம் பேசிச்சு.. நீ இப்படிலாம் பேசாதம்மானு கஷ்டமா இருக்குனு வந்து பாசமா பேசுனாரு.. இன்னும் ஒரு பதிலையும் காணும்.. என்னைய பாத்தா எப்பிடி இருக்கு.. இதோ வரேன்.. என்று தன் பேசியை எடுக்க,
அப்போது மதிய சத்துணவு மேற்பார்வை பார்ப்பதற்காக, மெய்யப்பன் கிளம்ப, இந்தாயா!.. என்னமோ மினிஸ்டர் உத்தியோகம் மாறி, நேரத்துக்கு கிளம்புற.. மத்தியானம் என்னால சமைக்க முடியாது.. “உன் பள்ளிக்கூடத்திலிருந்து போடுறத ஒழுங்கா குடுத்தனுப்புற.. இல்லைனு வை உனக்கு வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் இருக்கு சேதி..என்ன பண்ணுவேன்னு தெரியுமுள்ள?.. இன்னைக்கு முட்ட இருக்கா.. இல்லனாலும் ரெண்டு போட்டு எடுத்து வந்து குடுத்துட்டு போற..”
எப்பொழுதும் போல அவர் ஒன்றும் கூறாமல் புறப்பட, “வாயத்தொறந்து பேசுனா முத்துக் கொட்டிடும்.. போறதப் பாரு பெரிய இவனாட்டம்..”
மெய்யப்பன் இதை காதுல வாங்கிக்கொண்டே வெளியே வந்து தன் வண்டியை எடுத்துக் கொண்டே, இவளுக்கு என்னைக்கு தான் புத்தி வர போதோ, காலைல சாப்பாடும் என் பெரிய பொண்ணு பண்ணி வச்சிட்டு காலேஜ் போது, காலேஜ் விட்டு வந்து வீடு வேலையெல்லாம் பாத்து ராத்திரி சாப்பாடும் பாவம் புள்ளையே தான் பண்ணுறா.. மத்தியானம் ஒரு வேலைக்கு கூட இவளுக்கு சமைக்க முடியல.. என்னமோ போ, ஏதாது எழுத்து கேட்ட உடனே மண்ணெண்ணெய்யை தூக்கிட்டு வந்துருவா.. இப்போ என்னனா இவளும் சின்ன பொண்ணை கூட சேர்த்துக்கிட்டு கொடுமை படுத்துறேன்னு மகளிர் ஆணையத்துல புகாரளிப்பேன்னு சொல்லிட்டு திரியுறா.. இதுலாம் எங்க போய் முடிய போகுதோ.. என்று புலம்பிக் கொண்டே மனைவிக்கு மதிய சாப்பாட்டை ஒரு கடையில் வாங்கிக் கொண்டு வீட்டில் அதை வைத்து விட்டு மறுபடியும் வேலைக்கு சென்றார்.
அவர் வைத்துவிட்டு சென்றவுடன், அந்த பார்சலை பிரித்து பார்த்த கலையரசி.. “இந்த ஆளு சொந்த காச போட்டு வாங்கி வந்திருக்கறதப் பாரு, இவரு அப்படியே பெரிய நேர்மையான வள்ளலு, வேலை செய்யிற எடத்துலிருந்து ஒரு காசும் எடுக்க மாட்டாரு.. இதையெல்லாம் வச்சிக்கிட்டு நான் எங்க இருந்து நாலு காசு சேக்குறது.. ஒண்ணுத்துக்கும் வழி இல்ல..” என்று தன் புருஷனை கரித்துக் கொண்டே தன் அண்ணனிற்கு போன் செய்தார்.
அங்கு வீரபாண்டியோ வேலையின் பொருட்டு தனது அலைபேசியை தன்னுடைய இடத்தில வைத்து விட்டு, லாரியில் நெல் ஏற்றுவதை மும்மரமாக கவனித்துக் கொண்டிருந்தார். அனாவசியமாக அலைபேசியை தொட மாட்டார், வீட்டிலிருந்து கடைக்கு வந்துவிட்டால்.
வீரபாண்டி அழைப்பை எடுக்காமல் போக, கொஞ்ச நேர இடைவெளியில் திரும்ப திரும்ப அழைக்க, அப்பொழுதும் அவர் ஒரு அழைப்பையும் எடுக்காமல் போக, இங்கு கலையரசியோ எரிமலையாக மாறிருந்தார்.
“எப்படியும் நீ, நான் இத்தனை முறை உனக்கு கூப்பிட்டு இருக்கறதை பாத்துட்டு பேசுவல, அப்போ பேசிக்குறேன் உன்னை.. எப்படி உன்னை இங்க வர வைக்கிறேன்னு பாரு” என்று கருவி கொண்டே அன்றைய நாள் முழுவதும் சமைக்க கூட செய்யாமல் போனை பார்த்துக் கொண்டே இருந்தார்.
கலையரசியின் சின்ன மகள் ஆர்த்தி, கல்லூரி முடிந்து வீட்டுக்கு வர, தன் அம்மா, கூடத்தில் போனை பார்ப்பதை பார்த்துக் கொண்டே, ம்மா.. ‘ஏதாது இருக்க சாப்புட’ என்று கேட்டுக் கொண்டே அவரின் அருகில் அமர்ந்தாள்.
“நான் ஒன்னும் பண்ணலடி.. இரு உங்க அக்கா வந்ததும் எதையாது செய்ய சொல்லுறேன்” என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் போனை பார்க்க,
“ம்க்கும் போமா.. அவ வாரத்துக்கு இன்னும் ஒரு மணி நேரம் மேல ஆகும்.. அது வரைக்கும் நான் இப்படியே உக்காந்திருக்கணுமா..”
“இல்லனா நீ போய் செய்யிறியா..”
“எதுக்கு நான் பண்ணனும்.. அதுக்கெல்லாம் வேற ஆளப்பாரு.. நீ உன் புருசனுக்கு போன போட்டு சொல்லி வாங்கி வரச்சொல்லு..”
“அடப்போடி.. எனக்கு இப்போ போன் வருமான்னு நானும் காலையில இருந்து பார்த்துட்டு இருக்கேன்.. இப்போ உன் அப்பனுக்குலாம் போட முடியாது.. வேணும்னா நீயே கடைக்கு போயிட்டு வாங்கிவா.. எனக்கும் சேர்த்து..”
“அதுலாம் என்னால முடியாது.. இப்போ தான் நான் வீட்டுக்கு வந்தேன்.. காலு வலிக்குது எனக்கு.. நீ எதுக்கு இப்போ போனையே பாத்துட்டு இருக்க..” என்று அவரின் போனை பறிக்க போக,
“ஏய்.. எதுக்கு இப்ப புடுங்குற.. உன் பெரிய மாமன் பேசுறதுக்கு தான் பாத்துட்டு இருக்கேன்.. செத்த கம்முனு இரு..”
“அப்படியா ம்மா.. மாமா என்ன சொன்னாரு..”
“அவரு எந்த சொல்லுறது.. உனக்கும், உன் மாமன் நந்தாக்கும் எப்படி கல்யாணம் பண்றதுனு தான் யோசிச்சிட்டு இருக்கேன்..”
“அப்படியா ம்மா.. எப்படியாவது எனக்கு மாமாவை கல்யாணம் பண்ணிவை ம்மா.. “
“ஏண்டி பறக்கிற.. எப்படியும் இந்த அம்மா உனக்கு அவனை கட்டி வைக்கிறேன்..”
“அப்படி சொல்லு ம்மா.. அதுக்கப்பறோம் அந்த வீட்டுக்கு போயிட்டு நான் நல்லா சொகுசா இருப்பேன்.. நல்ல வேளை அந்த நித்யா அம்முக்குணி ஜாதகம் ஒத்துப்போல.. இல்லனா அவ நல்ல சொகுசா அங்க வாழ்ந்திருப்பா.. அப்பறம் நான் மட்டும் இந்த ஓட்டு வீட்டுல இருந்திருக்கணும்.. இதுலாம் ஒரு வீடா.. “
“சரிடி..சரிடி.. அவ ஒரு மூதேவி.. நீ அவள பத்தி பேசாத..”
“சரியா சொன்ன ம்மா.. மூதேவி தான் அவ.. நான் மட்டும் அந்த வீட்டுக்கு போய்ட்டேனு வை ம்மா.. முதல்ல அந்த அத்தையை ஒரு வழி ஆக்குவேன் ம்மா.. அடுக்கு எவ்வளோ திமிரு தெரியுமாம்மா.. என் ஜாதகத்தை பார்த்து சரி வந்தா, எனக்கு பண்ணலாம்னு நீ பேசும் போது, அந்த அத்தை பெரிய மாமா முறைச்சி பார்த்துட்டு, ஒன்னும் சொல்லாம அது பாட்டுக்கு உள்ள போது ம்மா..”
“நீ தாண்டி என் பொண்ணு.. உன் அத்தகாரிக்கு உடம்பு பூரா கொழுப்பு வச்சி நிக்குதுடி.. என் அண்ணண் சம்பாரிச்சி போடுறத சொகுசா உக்காந்து திங்குறால.. அந்த திமிருடி அவளுக்கு..”
“நான் அந்த வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் அதை நல்லா வச்சி செய்யணும் ம்மா.. அது பின்னாடியே ஓட்டு பில்லு ஒன்னு சுத்துது பாரு, அந்த காவியா.. அவளையும், உன் அண்ணியையும் எல்லா வேலையையும் செய்ய வச்சிட்டு நான் அந்த வீட்டுல மஹாராணி போல இருக்கனும் ம்மா..”
“ஆமாடி என் ராசாத்தி.. நீ தான் அந்த வீட்டு மகாராணி.. நான் நடத்தி காட்டுறேன்டி..”
“சூப்பர் ம்மா.. எனக்கு மட்டும் கல்யாணம் ஆகிட்டா, நீயும் என்கூட வந்திடு ம்மா.. நாம அங்கேயே இருந்துக்கலாம்..”
“உன் கல்யாணம் ஆகிட்டா, நான் எதுக்கு டி அடுத்து இங்க இருக்க போறேன்.. நம்ம ராஜ்ஜியம் தான் அப்பறம் அந்த வீட்டுல..” என்று அவளிடம் பேசி கொண்டே திரும்ப, அங்கே வீட்டினுள் நுழைந்தாள், நித்யா – அவ்வீட்டின் மூத்த மகள்.
அம்மாவின் பார்வை சென்ற இடத்தை தானும் நோக்க, “அம்மா வராப் பாரு மூதேவி.. போய் எனக்கு சீக்கரம் ஸ்னாக்ஸ் செஞ்சி தர சொல்லு.. எப்படி ஆடி அசைஞ்சி வர்றதைப் பாரு..”
“ஏய்.. அவ சொல்றது கேட்டுச்சா.. நீ போய் முதல்ல எங்களுக்கு நல்லா சுடச்சுட எதாது செஞ்சி எடுத்து வா..”
“சரி..” என்று தலையாட்டி விட்டு நகர,
“எப்படி போறா பாரும்மா.. அம்முகுன்னி.. அவ மூஞ்சியும் மொகரையும் பாரு.. சரியான ஊமைக்கோட்டான்..” என்று கண்ட மேனிக்கு பேச,
“நீ போய் வேற நல்ல சட்டையை மாட்டிட்டு வா.. உன் மாமன் வருவாரு..”
“தோ போறேன் ம்மா.. மாமா வரும் போது அந்த கோட்டானை வெளியே வர சொல்லாதீங்க..” என்று கூறிக்கொண்டே அறைக்கு சென்றாள்.
– – – –
அன்றைய தினம் முடிந்ததும், வைஸ் பிரின்சிபால் அறைக்கு சென்ற ப்ரீத்தி, மேம்.. “நான் அந்த அவந்திகாவை மட்டும் தானே ஹாஸ்டெல்ல தங்கற மாறி உங்ககிட்ட சொன்னேன்.. நீங்க எதுக்கு அவ பிரெண்டையும் கூட தங்க சொல்லிருக்கீங்க..” என்றாள் கோவமாக,
“எதுக்கு இப்போ கோவப்படுற, ஒண்ணுக்கு ஒன்னு இலவசம்.. இவளும் அவளோட சேர்த்து மாட்ட வச்சிடலாம்..”
“என்னத்தையோ சொல்லுறீங்க.. நீங்க என்ன பிளான் பண்ணிருக்கீங்க, அதை சொல்லுங்க முதல்ல..”
“நான் ஏதும் பிளான்லாம் பண்ணல.. ஒரு வாரம் இருக்குல்ல.. எதாது பண்ணிடலாம்..”
“நான் ஒன்னு பிளான் பண்ணிருக்கேன்.. எனக்கு அது நடந்தா போதும்.. ஒரு ரெண்டு நாளுக்கு அப்பறம் தான் ஏற்பாடு பண்ணிருக்கேன்.. இந்த தர்ஷினி அதுல மாட்டுனாலும், இல்லனாலும் எனக்கு அவளை பத்தி கவலை இல்ல.. ஆனா அவ அந்த அவந்திகாவை காப்பாத்தக் கூடாது.. அதை மட்டும் நீங்க பாத்துக்கோங்க..”
“அப்படி என்ன பிளான் பண்ணிருக்க நீ..”
“இப்போவே உங்க கிட்ட சொல்லி அது நடக்காம போய்டுச்சின்னா… அதுனால நடக்கும் போது நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.. நான் இப்போ ஊருக்கு கிளம்புறேன்..”
“ஹ்ம்.. பாக்குறேன்.. என்ன பண்ணிருக்கணு..”
“பாத்துட்டு எனக்கு போனை போட்டு சொல்லுங்க.. வரேன்..” என்று வெளியேறினாள்.
error: Content is protected !!