Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 20

சாரல் – 20

அவந்தி, “தர்ஷி என்னடி பண்ணுற இன்னும்… நாம்ம காலேஜ்க்கு போகணும்… நீ என்ன இன்னும் பீரோக்குள்ள தலையை விட்டுட்டு இருக்க…”

“அட இருடி… இவ்வளோ சாறி இருந்து என்ன பிரயோஜனம்… ஒரு நல்ல சாறின்னு கண்ணனுக்கு ஒன்னும் தோன மாட்டேங்குது… இதுக்கு தான் நேத்தியே சொன்னேன், ஒரு நல்ல சாப்ட் சில்க் புடவை கடைக்கு போயிட்டு வாங்கிட்டு வரலாம்னு, நான் சொன்னதை கேட்டியா நீ…?”

“தர்ஷி… அடி வாங்க போற நீ…ஒழுங்கா ஒரு புடவை கட்டிட்டு வெளில வா…”



Advertisement

“அடப்போடி… நாம பதினோரு மணிக்கு தான் அங்க இருக்கணும்… அதுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு… போடி, வந்துட்டா பஞ்சூவாலிட்டிக்கு பொறந்தவ…”

“இப்போ இப்படி சொல்லிட்டு, லேட் பண்ணு… அப்பறம் உன் மூஞ்சிய நான்  பஞ்சர் பண்ணிடுறேன்…” என்று வெளியில் சென்றாள்.

“இந்த அண்ணண் ரொம்ப பாவம், இவளை வச்சிக்கிட்டு என்ன பண்ண போறாரோ… கிளம்பும் போது ஒரு ரொமான்ஸ் கூட பண்ண விடமாட்டா, இந்த பஞ்சூவாலிட்டி பஞ்சுமிட்டாய்…”

Advertisement

“என்னடி அங்க முனகுற?…”

Advertisement

“அடியேய் உனக்கு போன் வரலையா?… போய் போன் வருதான்னு பாரு, என்னைய புலம்ப கூட விட மாட்டுற…”

“அதான் நானும் கேட்டேன்… என்னத்த வாய்க்குள்ளேயே போட்டு மெல்லுறனு…”

தர்ஷியோ வெளியில் வந்து, “ஏண்டி… ஏன்… ஏன்…” என்று கேட்டுக் கொண்டே அவந்தியின் அறையின் உள்ளே நுழைய, 

Advertisement

“இதையே தான் டி, நீ குளிச்சிட்டு வந்ததுல இருந்து பண்ணிட்டு இருக்க, எதுக்குடி இவ்வளோ அலப்பறை பண்ணுற…”

“நீயும் இதையே தான் சொல்லிட்டு இருக்க, நான் உங்கிட்ட ஏதாவது கேட்டேன்?… நீயும் அப்படி இரேன் டி…”

“என்னைத்தையோ பண்ணு… மணி இப்போவே ஒன்பதே முக்கால்… சொல்லிட்டேன்…”

ஒரு ஐந்து நிமிடம் கழித்து, “அவந்தி இங்க பாரேன்” என்று கையில் மூணு சேலையுடன் வெளியே வர,

“என்ன… மூணுத்தையும் சுத்திக்க போறியா?”

“ஹி ஹி… அவளோ சிரிப்பு வரல… இதுல ஒன்னை செலக்ட் பண்ணு…”

“நான் சூஸ் பண்றதையா கட்ட போற?…”

“நான் நினைச்சதை நீ சொல்லுறியா பாக்குறேன்…”

“ஒழுங்கா என்கிட்ட அடிவாங்க ஓடிடு… கைல மாட்டுன, பிச்சிடுவேன்…”

“அந்த அடியை தான் அன்னைக்கு பாத்தேனே… என்னா அடி… நாங்க வந்து உன்னைய, கைய பிடிச்சி இழுக்கிற வரைக்கும் அடிச்சியே…”

“அதே தான், நீ இப்போ என்கிட்ட வாங்க போற… இப்போ நீ வாங்க போறத  தடுக்க யாரும் இல்ல…”

“அடியாத்தி… இந்தா கிளம்பிட்டேன்…” என்று ஓடினாள்.

சிறிது நேரத்தில் தர்ஷி கிளம்பி வெளியே வர, அவளை மேலும் கீழுமாக பார்க்க, “நீ என்ன பங்க்ஷன் மோட்க்கு கிளம்பிருக்க…”

“இல்லையா பின்ன, ரெண்டு பேரை அவாளோட வீட்டுக்கு வழியனுப்பி வைக்கணும்ல… அதான் ஸ்பெஷல் ஆஹ் ரெடி ஆகிருக்கேன்…”

“அது சரி… அது என்ன கையில ஒரு பேக்…”

“கேள்விக்கு பொறந்தவளே… அங்க வந்து பாரு எதுக்குன்னு?”

“என்ன, நீ இதை வச்சி பெர்பாமன்ஸ் பண்ண போறியா?…”

“அதான் தெரியுதுல்ல… அப்பறம் என்ன கேள்வி?… வேற ஏதும் எடுக்கணும்னா எடுத்துக்கோ, மச மசன்னு நின்னுட்டு இவ லேட்டாக்குறா… இதுல என்னைய சொல்ல வந்துடுவா…”

“நீ இன்னைக்கு ஒரு மார்கமாத்தான் இருக்க…”

“இருந்துட்டு போறேன்… எல்லாம் நேத்திக்கே பக்கவா கொடுத்தாச்சுல்ல, இன்னைக்கு வெறும் ஆக்க்ஷன் மட்டும் தானே…”

“ஆமாடி வாயாடி… போலாம் வா…” என்று இருவரும் கடைசி கட்ட விசாரணைக்கு புறப்பட்டனர்.

– – – –

அரவி, “டேய், தங்கச்சி என்ன சொன்னுச்சிடா… எல்லாம் ஒகே வா?…”

நந்தா, “அங்க வெயிட் பன்றாங்க ரெண்டு பேரும்… இன்னும் உள்ள போல… முடிச்சிட்டு பேசுறேன்னு சொல்லிருக்கா…”

“அப்போ முடிச்சிட்டு நாம ட்ரீட் போறோம்… கொண்டாடுறோம்…”

“எப்போடா போறோம் ட்ரீட்க்கு…” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் நவீன்…”

அரவி, “நைட் ஷிபிட்காரனுக்கு இப்போ இங்க என்னடா வேலை…”

நந்தா, “அதானே… பதில் சொல்லுடா அவன் கேட்டதுக்கு …”

“அப்போ உனக்கு அவன் எதுக்கு வந்திருக்கான்னு தெரியும்…” என்று நந்தாவை பார்த்துக் கேட்க,

நவீன், “டேய்… அரவி எப்போயிருந்து டா இவ்வளோ அறிவாளியா மாறின?…”

“நீ அடங்குடா ஆந்தைகாரா… அவன் சொல்லட்டும்…”

நந்தா, “என்னையவே சந்தேகபடுறீங்களா டாக்டர் அரவிந்த்…”

“அன்னைக்கு அப்படி தானேடா பண்ணீங்க என்னை… பெருசா சொல்ல வந்துட்டான்… போடா தடிமாடு…”

“அடேய் தடிமாடோட எருமைமாடே, அன்னைக்கு நடந்ததுக்கு, என்னை இன்னைக்கு இப்படி கேப்பியா நீ?… இந்த பொடலங்கா எதுக்கு வந்திருக்கான்னு தெரியலடா… நீயே டீல் பண்ணிக்கோ…”

நவீன், “அது என்னடா தடிமாடோட எருமைமாடே?…”

“இப்போ இது ரொம்ப முக்கியம்… அவன் ஏதாது சொல்லுவான் உனக்கென்ன… நீ எதுக்கு வந்தேன்னு சொல்லிட்டு கெளம்புடா… பெருசா டவுட் கேக்க வந்துட்டான்…”

“டூ பேட்… நீங்கல்லாம் டாக்டர்ஸ் ஆஹ் ?… எப்போ பாத்தாலும் இப்படி தான் தடிமாடு, எருமைமாடுனு பேசுவீங்களா… என்னைக்காவது பேஷண்ட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கீங்களா… என்னைய பாருங்க ரெபெரென்ஸ் புக்லாம் வச்சி எப்படி ரெபர் பன்றேன்னு…” என்று தன கையில் வைத்திருந்த புக்கை காமிக்க,

அரவி, நந்தாவை ஒரு முறை பார்த்துவிட்டு, நவீனை முறைத்துப் பார்க்க,

இங்கு நந்தவோ வேகமாக எழுந்து, “தேங்க்ஸ் டா நவீன்… இதே புக் தான் டீன் கேட்டாரு, குடுடா…” என்று நவீன் சுதாரிப்பதற்குள் அவனிடம் இருந்து  பிடிங்கினான்.

“பாத்துகோடா அரவி, இவனோட ஆளுக்கு புக்கை எடுக்க வந்துட்டு… நம்மகிட்ட என்னமா பிட் ஓட்டுறான் பாரு… அதும் எப்படி எப்படி ரெபெரென்ஸ் புக் இது…”

“ஆமாடா, சார்…ர்ர்ர், அதும்  ‘நர்சிங் மேனேஜ்மென்ட்’ எடுத்து வந்திருக்காரு… நவீனுக்கு ரொம்ப தேவையான புக் இல்லடா நந்தா ?…”

“டேய்…டேய்… போதும் விடுங்கடா… புக்கை குடுடா… நான் கிளம்புறேன்… தேவி அங்க வெயிட் பண்ணுவா…”

நந்தா, “புக்கைலாம் தர முடியாது… நீ எங்கள  பேசுன பேச்சிக்கு, புக்கை நான் டீன் கிட்ட குடுத்துறேன்… நீ அவருகிட்ட பேசிக்கோ…”

“டேய் நவீ, இந்த தவளை தெரியுமாடா உனக்கு… அதன் ப்ரொஃக் ( frog )…”

அவனை முறைத்துக் கொண்டே, “ஆமா தெரியும்… அதுக்கென்ன இப்போ?”

அரவி, “வெரி குட்… அது என்ன பண்ணுமா, சும்மா இல்லாம அதோட வாயாலையே கெடும்மா… நீயும் அப்படி தான்… ஒழுங்கா புக்கை எடுத்தோமா, போனோமான்னு இல்லாம…”

“உனக்கு இது தேவையா சொல்லு…” என்று நந்தா முடித்து வைத்தான்.

“அதே தான் டா…” என்று அரவி கூறிவிட்டு, நந்தாவுடன்  ஹைய்-பை அடித்து சிரித்தான்.

இருவரையும் முறைத்து பார்க்க,

நந்தா, “எங்களை முறைக்காதடா… வெளில உங்க தேவி, நீ புக் இல்லாம போகும் போது காளி அவதாரம் எடுப்பாங்க… அப்போ எப்படி மேனேஜ் பண்ணுவ நீ… அச்சோ அதும் மேனேஜ்மென்ட் புக் வேற என்கிட்டே இருக்கே டா…”

“ஹா ஹா ஹா… என்ன பேச்சு பேசுன… மாட்டுடா மவனே நீ… எப்போ வரேன்னு சொல்லிட்டு வந்த?… லேட் ஆஹ் போனன்னு வை, அதுக்கும் சேர்த்து வாங்கணும்… என்னடா நவீ உன் நிலைமை இப்படியா ஆகணும்… அய்யகோ…” என்று மேலும் எதுவோ பேச வர,

அங்கு நந்தாவின் தொலைபேசி அழைக்க, அவனின் கவனம் அங்கு போக… அந்த நொடி நேரத்தில், புக்கை அவனுடைய டேபிளில் இருந்து எடுத்து விட்டு, “போங்கடா எருமைங்களா… உங்கள அப்பறம் பேசிக்குறேன்…” என்று கூறிவிட்டு ஓடினான்.

“நீ அப்படியே ஓடிடு… இங்க வந்துடாத…” என்று சொல்லிவிட்டு, நந்தாவிடம், “யாருடா தங்கச்சியா?…”

“இல்லடா அம்மா…” என்று கூறிவிட்டு, போனை அட்டென்ட் செய்து, “சொல்லுங்க அம்மா…”

“நந்தா, நான் அம்மா பேசுறேன் டா…”

“என்னை பெத்தவங்க தான் பேசுறீங்க தெரியுது… என்ன ரொம்ப சமத்தா பேசுறீங்க?…. என்ன காரணம்னு சொல்லுறது…”

“என்னடா… இப்படிலாம் கேக்குற…”

“நீங்க அப்படி பேசுறதால தான் கேக்குறேன்… என்ன பண்ணனும் நான் உங்களுக்கு…”

“இதான் என் புள்ளைன்றது… அப்படியே அம்மா மாறியே இருக்க டா நந்தா…”

“இன்னும் நீங்க என்னனு சொல்லவே இல்லையே ம்மா… நீங்க கேட்டு நான் பதில் சொன்னதுக்கு அப்பறம் இப்படி கொஞ்சுங்க பாக்குறேன்…”

“உனக்கு இப்போ டியூட்டி இல்லையே டா கண்ணா…”

“போன் பேச ஆரம்பிக்கும் போது இதை கேக்கணும் தாயே… கண்ணான்னு லாம் எக்ஸ்ட்ரா பிட் வருது… இது அவ்ளோ நல்லதா எனக்கு படலையே… சரி, சரி… சீக்கரம் விஷயத்துக்கு வாங்க…”

“நீ இன்னும் சொல்லவே இல்லையே நந்தா, பிரீ ஆஹ்னு…”

“அப்போ விஷயம் ரொம்ப பெருசு… ரைட்?”

“அது… அது வந்து நந்தா, நீ…நீ… சின்ன அத்தைகிட்ட ஒரு வார்த்தை பேசிடேன்… எனக்காக… உங்க அப்பாவே இப்போ தான் கொஞ்சம் நல்ல மாறியா உன்னை பத்தியெல்லாம் பேசியிருக்காரு… அதனால…”

“ம்மா… போதும்… அதையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு என்கிட்ட பேசாதிங்கனு உங்ககிட்ட சொல்லிட்டேன் தானே… பின்ன என்ன ம்மா…”

“இல்ல நந்தா… உன்னோட கல்யாணத்துல எதையாவது பண்ணி விட்டுற போறாங்கன்னு பயமா இருக்குடா… அதுக்கு தான் சொல்லுறேன்…”

“அதால ஒரு ஆணியும்…. ” என்று இழுத்துக் சொல்லி, “புரிஞ்சிதா ம்மா உங்களுக்கு…”

“இருந்தாலும் நந்தா, நீ ஒரே முறை பேசிடேன்…”

“அது என்ன காரியம் பண்ணிருக்குனு உங்ககிட்ட சொன்னேன் தானே… அதுகிட்ட போயிட்டு என்னைய பேச சொல்லுறீங்க… முதல்ல அதுக்கு மரியாதை குடுத்து பேசுறதை நிறுத்துங்க… ஆடு, மாட்டுக்கு கூட மரியாதை குடுங்க, ஆனா அதுக்கு குடுக்காதிங்க… அதுலாம் எந்த ஜென்மத்திலும் சேர்த்தியே கிடையாது…”

“நந்தா… அதுனால தான் சொல்றேன்டா, அவ பொண்ணையே அப்படி பண்ணிருக்கா… அது மாறி திரும்ப எதுவும் ஏடாகூடமா பண்ணி விற்ற போறானு பயமா இருக்குடா…”

“அது அப்படிதான் என்னத்தையோ பிளான் பண்ணுது… நித்யா எனக்கு போன் பண்ணி அது என்ன பேசுச்சுனு சொன்னதா, சொன்னேன்ல உங்க கிட்ட… என்ன பிளான் வேணும்னாலும் போடட்டும்… நான் பாத்துக்குறேன்… நீங்க ஒன்னும் புலம்பிட்டு இருக்காதிங்க… வெள்ளிக்கிழமைக்கு நான் சொன்ன போல,  நிச்சயம் பண்ணிட்டு வர்றது போல, முதல்ல உங்க புருஷன்கிட்ட முதல்ல பேசுங்க… இதை நான் பார்த்துக்கறேன்…”

“அம்மாக்காக ஒரு முறை பேசிடேன்டா கண்ணா… நல்ல பிள்ளையை அம்மா சொல்றதை இந்த முறை கேட்டினா, நான் நீ சொல்றதை பண்ணுறேன்… இல்லனா என்ற புருஷன் சொல்றது தான் சொல்லிட்டேன்…”

“ஓஹோ… நீங்க அப்படி வரீங்க… சரி விடுங்க… நானே டைரக்ட் ஆஹ் மிஸ்டர் வீரபாண்டியன் கிட்ட பேசிக்குறேன்…”

“இப்போதான் உங்க அப்பா உருப்படியா இருக்கார்… உனக்கு அது பொறுக்கலையா… நீ ஒன்னும் அவருகிட்ட பேசி கிழிக்க வேணாம்… நானே உன் கல்யாணம் நல்லபடியா முடியனும், தினமும் வேண்டிட்டு இருக்கேன்… நீ எதையாவது சொல்லி, அவரு அதுக்கு கும்மி அடிச்சிட போறாரு… நீ கொஞ்சம் அடக்கியே வாசி…”

“அம்மா தான் உங்க கிட்ட என்னைய பேசக்கூடாதுனு சொல்லிட்டாங்கனு அப்பாவிடம் சொல்லுறேன்…”

“நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ…. என்ற புருஷனை எப்படி சமாளிக்கணும் எங்களுக்கு தெரியும்…”

“அதானே, கோமதினா சும்மாவா…”

“போதும்… நான் சொன்னதை பண்ணிடு… உனக்கு புண்ணியமா போகும்…”

“எப்படில்லாம் பேசுறீங்க நீங்க?…”

“பேசி என்ன பிரயோஜனம்… நீ ஒண்ணுத்துக்கும் ஒத்துவர மாற்றியே…”

“ஹா ஹா… உங்க கிட்டயிருந்து வந்தது தான்…ஆமா… வேலன்னு ஒரு மாமா எனக்கு இருந்தாரே, அவரை எங்கயாவது பாத்தீங்க…”

“உனக்கு பொண்ணு பாத்து குடுத்ததுக்கு, நீ நல்ல மரியாதை பண்ணுறடா…”

“ஆமா… ஆமா… அவரு தான் பொண்ணு பாத்தாரு… அடுத்து எங்க காணப் போய்ட்டாரு…”

“அவங்க வயல்ல, வாழை அறுக்குறாங்க… அதனால அங்க பார்த்துட்டு இருக்காரு… அப்பறம் சொல்ல மறந்துட்டேன் டா… நான் வைஷாலி கிட்ட உனக்கு பொண்ணு பார்த்து இருக்கறதை சொல்லிட்டேன் டா… உன்கிட்ட பேசிக்குறேன்னு சொல்லிட்டா…”

“ம்மா…ஆ, சும்மாவே இருக்க மாட்டிங்களா, நான் சொல்லிக்குறேன்னு தானே சொன்னேன்…”

“போடா… நான் என் பொண்ணுகிட்ட சொல்லிட்டேன்… நீ சமாளிச்சிக்கோ… அவ்வளோதான்…”

“சரி,சரி… நீ ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லு… நான் வைக்கிறேன்…” என்று வைத்துவிட்டார்.

“இவங்களோட…” என்று பல்கலைக் கடித்தான்.

அரவிந்த்க்கு ஒரு காள் செய்து, நீ பாருடா… நான் கொஞ்ச நேரம் கழிச்சி ஜோஇன் பண்ணுறேன் என்று கூறிவிட்டு, கலையரசிக்கு ஒரு முடிவோடு அழைத்தான்.

அங்கு அவனின் அழைப்பை பார்த்துவிட்டு, வாயெல்லாம் பல்லாக,

“நந்தா… நல்லா இருக்கியா ப்பா… இப்போ தான் இந்த அத்தைகிட்ட பேசணும்னு தோணுச்சாப்பா உனக்கு…”

“அச்சோ சின்ன அத்தை… என்ன இப்படி கேக்குறீங்க, நான் தான் எதோ சின்ன பையன் பேசல, உங்களுக்கு தான் என்னை ரொம்ப பிடிக்கும்ல… ஏன் நந்தா எனக்கு பேசலு கூப்பிட்டு கேட்ருக்கலாம்ல சின்ன அத்தை…”

“என்னடா இது இவன் இப்படி பேசுறான்… உண்மையா இவனா பேசுறான்” என்று சிந்திக்க,

“சின்ன அத்தை… சின்ன அத்தை…” என்று அழைக்க,

“சொல்லு நந்தா… லைன்ல தான் இருக்கேன்…”

“பாத்திங்களா சின்ன அத்தை… இப்போ கூட நீங்க தான் ஒழுங்கா என்கிட்ட பேச மாட்டேங்குறீங்க… ஆனா நீங்க என்னை பேசலன்னு கேக்குறீங்க…”

“உண்மையா தான் பேசுறான் போல… நாம தான் ரொம்ப யோசிக்குறோம் போல..” என்று திரும்ப நினைத்து விட்டு, “அப்படிலாம் இல்ல நந்தா… இனிமே நீ பேசலன்னு சொல்லமாட்டேன்…”

“ஆடு தலை சிக்கிடுச்சி… என்று மனதில் சிரித்துக் கொண்டு, “அப்பறம் அத்தை உங்களுக்கு என் மேல ரொம்ப பாசமாம்… அப்படியா அத்தை?…”

“என்னப்பா நந்தா இப்படி கேக்குற… என் பெண்ணைவிட உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கேன் ப்பா…”

“என்ன சின்னத்தை, இவ்வளோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க… எனக்கு கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு சின்ன அத்தை…”

“எனக்கும் ரொம்ப சந்தோசம் ப்பா… நீ இப்படி சொல்லுறது…”.

“எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும்… அதனால கண்டிப்பா என் சின்ன பொண்ணை அவனுக்கு கட்டிக்குடுத்து அவனை நானே நல்லா பாத்துப்பேன்னு சொன்னிங்களா சின்ன அத்தை அப்பாகிட்ட…”

“ஆமா… ஆமா… நந்தா, பெரியவளுக்கு தான் உன்னோட ஜாதகம் சேரலை… சின்னவளுக்கு பொருத்தம் இருக்கும் போது, உனக்கு அவளை காட்டிக்கொடுத்து அழகுபாக்கணும்னு ஒரு ஆசை ப்பா… இந்த அத்தைக்கு…”

“அதுதான் சின்னத்தை அப்பாவும் சொன்னாங்க, நீயே பேசி புரிய வச்சிடுனு சொன்னாங்க… அதுதான் விவரம் சொல்லலாம்னு உங்களுக்கு பேசுறேன்… பின்னாடி மறைச்சிட்டேன்னு சொல்லிட கூடாதுல்ல… அதுக்குதான் சின்னத்தை… சரி தானே நான் சொல்லுறது…”

“என்ன?… என்ன விவரம் நந்தா?…”

“அது தான் சொல்ல வரேன் சின்னத்தை…கேக்குறீங்களா?”

“சொல்லு ப்பா… சொல்லு கேக்குறேன்…”

“நான் கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல் தானே அத்தை வேல பாக்குறேன்… அதும் நிரந்தரமான வேலலாம் இல்ல சின்னத்தை… இங்க நிறைய டாக்டர்ஸ் காலேஜ்ல இருக்கறதுனால அவங்கள பாக்க சொல்லிட்டு, எங்களை எப்போ வேணும்னாலும் போக சொல்லிடுவாங்க… அப்படி சொல்லிட்டா அவங்க எங்களுக்கு குடுக்குற சம்பளம் மிச்சம்ல… அதுனால அவங்க எந்த நேரம் என்ன பண்ணுவாங்கனே தெரியாது சின்னத்தை…”

“என்னப்பா நந்தா… இப்படிலாம் சொல்லுற… இல்லனா வேற எங்கயாவது தனியார் ஆஸ்பித்திரில வேளைக்கு போலாம்ல நந்தா?… அங்க நல்ல சம்பளம் தருவாங்கள்ள?”

“அது ரொம்ப கஷ்டம் சின்னத்தை… இந்தமாறி கவர்ன்மெண்ட்ல இருந்து அனுப்பிச்சிட்டாங்கன்னு தெரிஞ்சா, பிரைவேட்ல எடுக்க மாட்டாங்க… சின்னதா கிளினிக் போல வச்சி ஊரோட வந்துட வேண்டியது தான்… என்ன ஒன்னு  நல்ல வருமானம் வராது…”

“அதனால என்ன ப்பா… அண்ணண் தான் அவ்வளவும், உங்களுக்காக தானே சேர்த்து வச்சிருக்காரு… உனக்கு வருமானம் வரலானும், நீ கவலை படாதே நந்தா…”

“அச்சோ சின்னத்தை… உங்களுக்கு விவரம் தெரியாதா?”

“எந்த விவரம் சொல்ற நந்தா?”

“நிலமெல்லாம் பெரியவன், பாக்குறதுனால அவனுக்கு எழுதிவச்சிட்டார்… அப்பறம் சின்னவன் இன்னும் வேலைக்கு போகலைல, அதுனால அவனுக்கு அந்த நெல்லு மண்டி… வேறன்ன சின்னத்தை, வைஷாலிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்குற நகையெல்லாம் போட்டு கட்டிக் குடுத்துடுவாங்க… இருக்குற வீடு அம்மா பேருள்ள இருக்கு… அப்படினு எல்லாருக்கும் பிரிச்சி எழுதிட்டாங்க சின்னத்தை…”

“என்ன! இது எப்போ நடந்துச்சி… எனக்கு தெரியாம?…” என்று அதிர்ச்சியாகி, பின்பு உனக்கு ஒன்னும் இல்லையே நந்தா,

“நான் தான், எனக்கு எதுவும் வேணாம்னு சொல்லிட்டேன் சின்னத்தை… அப்பா காசு நமக்கெதுக்கு… நீங்களே சொல்லுங்க… ஆனாலும் இப்போ எனக்கு கவலையே இல்ல சின்னத்தை… அதான் என்னைய பாத்துக்க நீங்க  இருக்கீங்களே… அது போதும் எனக்கு… நான் சரியாய் தானே சொல்லுறேன் சின்னத்தை…”

“ஆஆ… ஆமா…மா…”

“சின்னத்தைனா சின்னத்தை தான்… நீங்க உங்க மாப்பிள்ளை என்ன போடலாம்னு யோசிச்சி வைங்க… நான் இந்த வாரம் பொண்ணு பாக்க ஊருக்கு வரேன்… வந்து உங்ககிட்ட இன்னும் நல்ல்லா பேசுறேன்… இப்ப வச்சிடுறேன் சின்னத்தை…” என்று போனை வைத்தான்.

இங்கு அவனின் சின்ன அத்தையோ நந்தா பேசியதை கேட்டு வாயடைத்து அமர்ந்து விட்டார்…

சாரல் வருடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!