Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலாகுமோ உறவு

காதலாகுமோ உறவு

காதலாகுமோ உறவு!!!!

 

அத்தியாயம் 1



Advertisement

வாசலின் இருபுறமும் வாழைமரம் வரவேற்க,தரையில் போட்ட கோலம் வானவில்லாய் கண்களை கவர,வழி நெடுக்க அலங்கரிக்கப்பட்ட மலர்களின் வாசம் வந்தவர்களின் மனதை மயக்க,அந்த இடமே இந்திரலோகம் போல் இருந்தது.

வருகிறவர்களை வரவேற்க இளம் பிள்ளைகளும் பெண்களும் மண்டப வாசலில் தயாராக இருக்க,அங்கே பரபரப்புடன் வந்தார் மனோகர்.

“ வரவங்கல சிரிச்ச முகத்தோட வாங்க வாங்கன்னு சொல்லி கூப்படனும் இங்க பேசிட்டு கிண்டல் பண்ணிக்கிட்டு வரவங்கல கவனிக்காம விட்டுடாதிங்க,என்ன நான் சொல்றது” அவருடைய நரை கூடிய தலையும் , பட்டு வேஷ்டியும், பதட்டமான முகமும் ,கடுப்பான பேச்சுமே உணர்த்தியது அவர் மணப்பெண்ணின் தந்தை என.

Advertisement

“ஏங்க இங்க வாங்க உங்கள ஐயர் கூப்பிடுறாரு”என ஒரு குரல் அவர் பின்னால் இருந்து வந்தது.

Advertisement

நடுத்தர வயது, பட்டு புடவை கட்டி,வட்டமாக திலகமிட்டு,கொண்டையிட்ட கூந்தலில் அடுக்காக பூ வைத்து, கைகளில் கண்ணாடி வளையல், பார்த்தவுடேனே கைகூப்ப தோன்றும் மகாலட்சுமி என இருந்தார் அவர். அவர்கள் தான் மணப்பெண்ணின் தாய் லட்சுமி.இருவரும் உள்ளே சென்றனர்.

“ஏய்,எங்க அப்பா எப்பவும் இப்படி தான்டா சும்மாவே டென்ஷனா இருப்பாரு இவரு அப்படியே வரவங்கல சிரிச்சி சிரிச்சி கவனிப்பாராக்கும், இவர் முகத்த பார்த்தாவே வந்தவங்க எல்லாம் ஓடிடுவாங்க, இவர் வந்துட்டாரு சொல்றதுக்கு”மனோகர் உள்ளே சென்றதும் அவரை தன் நண்பர்களிடம் வறுத்தெடுத்தான் சங்கர்.

சங்கர், மனோகரின் இளைய மகன். மகனுக்கும் தந்தைக்கும் வட தென் துருவம்.

Advertisement

இளமையின் துள்ளல் எப்பொழுதும் அனுபவத்தை கேள்வி கேட்பதும் எதிர்பதும் ஒரு வித அழகு தான் இல்லை,நாம் அனைவரும் இளம் வயதில் அப்படித்தானே, நம் பெற்றோறின் முடிவுகள்,பேச்சு, கட்டுபாடு அனைத்துமே நமக்கு பிடிக்காது,அதை எதிர்ப்பதே நம் தலையாய கடமையென செய்வோம் முக்கியமாக ஆண் பிள்ளைகள் பற்றி சொல்லவே தேவை இல்லை,அப்பாவை கண்டால் பம்ப வேண்டியது, அவர் தலை மறைந்தால் துள்ள வேண்டியது.

சங்கரும் அப்படி தான், பதிணெட்டு வயது கல்லூரி படிக்கும் அவன், வேறு எப்படி இருப்பான்.

இவர்களை பற்றி பேசும் பொழுது தான் எனக்கும் ஒன்று தோன்றுகிறது, நம்மில் பலரும் இளம் வயதில் துடுக்காக பேசி,திமிராக நடந்தது உண்டு,பெரியவர்கள் சொல்வதை கேலி செய்து சிரித்ததுண்டு,அது வாழ்வின் அழகான பருவம்.

நாம் என்ன தான் கிண்டல், கேலியாக, திமிராக இருந்தாலும், நம் பெற்றோரின் நம்பிக்கையை உடைக்க கூடாது, அவர்களது முடிவுகளை மதிக்க தவர கூடாது, நம் பார்வை ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் இருக்கும், அவர்களின் முடிவு நம் எதிர்காலத்தின் ஆரோக்கியத்தையும் கொண்டதாக இருக்கும்,இன்றைய துள்ளல், நாளைய உன்னை வருத்தத்தில் தள்ள கூடாது.பெரியவர்களின் எண்ணங்களை மதிக்கும் குணம் நம் வாழ்வை நிச்சயம் மேம்படுத்தும்.

எனக்கு திடிரென்று தத்துவம் சொல்ல மிகவும் பிடிக்கும்,சரி நாம் கதையை விட்டு எங்கோ போய்விட்டோம் என நினைக்கிறேன்.

திரைக்கடலெனெ சொந்தமும் பந்தமும்,கலகலவென பேச்சுக்குரல்கள்,மங்கள வாத்தியத்தின் நடுவே,ப்ரோகிதரின் மந்திரம்,சின்னஞ்சிறு பிள்ளைகளின் விளையாட்டு சத்தம், என அந்த இடமே சப்தசவரமாய் இருந்தது.

இந்த சத்ததில் புரோகிதரின் குரல் கணீரென்று ஒலித்தது, “பொண்ண அழைச்சிட்டு வாங்கோ”

அனைவரின் கண்களும் மணப்பெண் அறையை நோக்க, மங்கள வாத்தியம் முழங்க வெளியே வந்தார் நம் கதையின் நாயகி.

கருஞ்சிவப்பு பட்டு சேலை, நிலவென தெளிந்த முகம், கைநிறைய போடபட்ட பச்சை சிகப்பு திருமண வளையல்கள்,அத்தை போட்ட ரோஜா பூ மாலை, கைலாச நாயகி தேவி பார்வதியே பூலோகம் வந்தது போல் இருந்தால்,அகல்யா.

அகல்யா வந்ததும் அவளை அவளது தோழிகள் சூழ்ந்து நின்று,”ஹே, வாழ்த்துக்கள் டி, செம அழகா இருக்க, மாப்பிள்ளை பார்த்தா அப்படியே சரண்டர் தான்.”என கூறி கிண்டலாக சிரித்தனர்.

“வழிவிடுங்க முகர்தத்துக்கு டைம் ஆச்சு அப்புறமா வச்சிக்கோங்க உங்க கிண்டல் கேலி எல்லாம்”செல்லமாக அதட்டினார் அகல்யாவின் அத்தை.

அகல்யா அனைவருக்கும் வணக்கம் சொல்லி மணமேடையில் அமர்ந்தாள்.

“மாப்பிள்ளைய வரச்சொல்லுங்கோ”மறுபடியும் புரோகிதரின் குரல் கணீரென்று கேட்க அனைவரின் பார்வையும் மணமகனின் அறையை நோக்கியது.

பட்டு வேஷ்டி, பட்டு சட்டை போட்டு,கழுத்தில் மாலையிட்டு,மகாராஜன் போல கம்பீராமய் வந்தான் செல்வம்.

அவன் முகத்தில் தெரிந்த ஆனந்தம், அகல்யாவின் முகத்தில் ஒல்லை,எல்லோர் முன்னிலையில் சிரித்தாலும் அவள் முகத்தில் உண்மையான சந்தோஷம் இல்லை என செல்வத்திற்க்கு நன்கு தெறிந்து இருந்தது.

இருப்பினும் அவன் எதையும் வெளிக்காட்டி கொள்ளவவில்லை.நாளடைவில் சரியாகி விடுவாள் என நம்பினான்.

மந்தரிங்கள் சொல்லி, தாய் தந்தை, சொந்த பந்தம்,உற்றார் உறவினர் அனைவரும் ஆசிர்வதிக்க ,அக்னி தேவன் சாட்சியாக, கெட்டிமேளம் முழங்க, செல்வம் அகல்யா கழுத்தில் தாலி கட்டினான்.

திருமணம் ஓர் அழகிய பந்தம், கடவுளால் நிச்சியக்கபட்ட ஓர் அற்புத உறவு, ஒரு ஆணும் பெண்ணும் குடும்பமாய் வாழ எத்தனை சம்பிரதாயம், எத்தனை வழிமுறைகள், எத்தனை ஆராவாரம்,ஏனென்று யோசிக்கும் போது தான் புரிகிறது அதன் முக்கியத்துவம்.

இத்தனை ஆராவாரத்துடன் நடந்த இவர்களது திருமணம், இவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது, அகல்யா செல்வம் இடையே காதல் மலர்ந்தாத இல்லையா, இப்படி பல கேள்விகள் நம் மனதில் எழும் அதே நேரம் , செல்வம் அகல்யாவின் நெற்றியில் குங்கும் இட்டான்,அகல்யாவின் கண்கள் குளமென இருப்பதை கண்டு கலக்கமுற்றான்.

சிறிது நேரத்தில் அகல்யா சுதாரித்து கொண்டதும் தான், செல்வத்திற்க்கு சற்று நிம்மதியாய் இருந்தது.

மணமக்கள் அனைத்து சம்பிராதயங்களையும் முடித்து வீட்டிற்க்கு வந்தனர்.

அரண்மனை போல வீடு,அந்த ஊரிலே பெரிய குடும்பம் என்றால் பின் வீடு மாளிகை போல் தான் இருக்கும். செல்வத்தின் தந்தை பரந்தாமன் விவசாயம், மண்டபம், காம்பளக்ஸ், என பல தொழில்கள் செய்து வந்தார்,ஊரில் பெரிய தலைக்கட்டு, செல்வத்தின் அண்ணன் படித்து விட்டு சென்னையில் வக்கிலாக இநருந்தார்.அக்கா பெங்களூரில் செட்டில் ஆகி இருந்தார்.செல்வத்திற்க்கு படிப்பில் பெரியதாக நாட்டம் இல்லை, பணக்கார வீட்டு பிள்ளை, செல்ல பிள்ளை, பேருக்கு ஒரு டிகிரி முடித்து இருந்தான், செல்வத்திற்க்கு திருமணம் செய்ய வேண்டும் என அவர் தந்தை முடிவெடுத்த போது தான் அனைவரும் அவனுக்கு ஏதுனும் ஒரு வருமானம் இருந்தால் தான் பெண் கொடுப்பார்கள் எனக்கூற,பரந்தாமனும் அவர் பிள்ளைக்கு மார்டன் ரைஸ்மில் ஒன்றை கட்டி கொடுத்தார்.ஆக இது தான் செல்வத்தின் வரலாறு, இப்பொழுது வாசலில் விட்ட புதுமண தம்பதியை வீட்டிற்க்குள் அழைத்து செல்வோமா!

அவர்களை வரவேற்க்க செல்வத்தின் தாயார், தந்தை, அக்கா, மாமா,அண்ணன், அண்ணி,அவர்களின் குட்டி வாண்டுகள், அத்தை ,மாமா என பெரிய பட்டாளமே அங்கு இருந்தார்கள்.

செல்வத்தின் அக்கா சுலோக்க்ஷனா ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்து சென்றார்.

அகல்யாவும் செல்வமும் பூஜை அறைக்குள் செல்ல, அகல்யாவை விளக்கேற்ற சொன்னார், செல்வத்தின் தாயார் பர்வதம்.அகல்யா விளக்கேற்ற அனைவரும் கைகூப்பி கும்பிட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!