Skip to content
Post Views: 5,437
சாரல் – 23
நல்லூரில் உள்ள அவந்தியின் அறையில், “சரஸ்… நாம ரெண்டு பெரும் நாளைக்கு ஒரே கலர்ல கட்டலாம்னு நினச்சேன். நீ என்னடானா மஞ்ச கலரை எடுத்து வந்திருக்க… என்கிட்டே இந்த கலர் இல்லையே…”
பானுக்கா, இந்த மஞ்சள்லேயே வர மாறி காட்டுங்களேன்… அதும் ஒரே மாறியே வந்துட போது… “
“அப்படின்ற?..இல்லனா, உன் ப்ளௌஸ்க்கு என்கிட்டே ஏதாது உனக்கு பிடிச்சிருக்கானு பாக்கறியா…”
Advertisement
“க்கா… நீங்க என்ன ஒரே கலர்ல ரெண்டு புடவைய வச்சிருக்கீங்க?… அப்பறம் எப்படி கட்ட முடியும்..”
“ஓஹ்… இது வேற இருக்குல்ல… அந்த யோசனை வருல பாரேன் எனக்கு…”
இதை பார்த்துக் கொண்டிருந்த அவந்தியோ, ஹலோ தாய்மார்களே, நாளைக்கு என்ன தான் பொண்ணு பாக்க வாராங்கனு நான் நினைச்சிட்டு இருக்கேன்… நீங்க என்னமோ உங்கள ரெடி பண்றதை பத்தி ரொம்ப தீவிரமா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க… இதுலாம் ரொம்ப ஓவர் ஆஹ் இருக்கு…”
Advertisement
பானு, “உனக்கு தான் எல்லாம் எடுத்து வச்சாச்சில்ல, அப்பறம் என்ன?…”
Advertisement
“அது தான் நானும் சொல்லுறேன்… பொண்ணு நான் தான், உங்களுக்கு என்ன இப்போ?… பொண்ணு தான் பாக்க வராங்க… நீங்க நாளைக்கே கல்யாணம்ன்ற மாறி பேசிட்டு இருக்கீங்க… தாங்க முடியல…”
சரஸ், “அவந்தி என்னடி இப்படி சொல்லுற, பொண்ணோட அம்மாக்கள், பொண்ணுக்கு ஏத்த மாறி இருக்க வேணாம்..”
“சித்தி, இந்த அம்மாவோட நீங்களும் சேந்துடீங்களா… இப்போ எனக்கு ஒரு டவுட் வருது உங்கள பார்த்து… கேக்குறேன், பதில் சொல்லுங்க…”
Advertisement
“பானு, “நாங்க இங்க முக்கியமா பேசிட்டு இருக்கோம்ல, உனக்கு என்னடி இப்போ டவுட்?”
“இருங்க க்கா… அப்படி என்னனு தான்னு கேப்போம்…”
“இல்ல, இந்த ஓரகத்தி எல்லாம் இவ்வளோ ஒத்துமையா இருக்க மாட்டாங்களே… இங்க உங்களோட ஓவர் லவ்ஸ் ஆஹ் போதே… அதான் டவுட்?”
பானு, “ஏண்டி… எங்களை இப்போதான் பாக்கறியா நீ… இப்படி இருந்து நீ பாத்ததே இல்லையா?”
“அது தான் தெரியுமே… இருந்தாலும் இப்போ கேக்கணும்னு தோணுதே…”
“இங்க பாரு அவந்தி, எனக்கும், அக்காக்கும் எப்போதும் ஒத்து போகும்னுலாம் இல்ல… நெறைய மாற்று கருத்து இருக்கும்… அதுக்குன்னு எப்போதும் குடிமிப்புடி சண்டைன்னு நிக்க மாட்டோம்… இது எல்லாத்தையும் விட, நம்ம வீட்டுல ஒரு விசேஷம் அப்படினா, அதையே பிடிச்சிட்டு மூஞ்சி காமிச்சிட்டு இருக்க மாட்டோம்… அவ்ளோ தான் விஷயம்…”
“ஓஹோ… அருமையான பதில் சித்தி அவர்களே…”
“இங்க பாருடி… எப்போதும் சண்டை போடுனும்னே இருக்காதா, எப்படி ஒத்துபோலாம்னு பாக்கணும்… அவ்ளோதான், புரிஞ்சிதா?…”
“என்ன மம்மி, சீரியல் பாத்தும் இப்படி சொல்லுறீங்க…”
“நீ என்கிட்டே அடி வாங்க போற… சீரியல் பாக்குறது என்னோட பொழுபோக்கு… உனக்கு எப்படி கட்டிடம் கட்ட பிடிக்கும்… அதுமாறி எனக்கு இது…” என்றார் சற்று முறைப்புடன்.
“ஹா ஹா… சும்மா ம்மா… நோ கோவம்…”
“இங்க பாருடி… சீரியல் பாத்து கூட ஒருத்தவங்க எப்படி இருக்க கூடாதுனு தெரிஞ்சிக்கலாம்… அப்பறம்…” என்று கூற வர,
“ம்மா…ஆஆ…. தெரியாம சொல்லிட்டேன்… சித்தியும், நீங்களும் முதல்ல புடவைய சூஸ் பண்ணுங்க… மணி ஒன்பதாக போகுது… நான் தூங்க வேணாமா?… அப்போதான் காலைல எழுந்திரிக்க முடியும்…”
“இந்த அறிவு பேசுறதுக்கு முன்னைடியே இருந்திருக்கணும்… இப்போ வந்து சொல்லு…”
“க்கா… வெளில மாமா எதோ சத்தமா பேசுற மாறி இல்ல?…”
“ஆமா சரஸ்… வா என்னனு பாக்குறேன்…” என்று வெளியில் வேகமாக செல்ல,
அங்கே சேகரோ, “இது என்னங்க தம்பி இப்போ வந்து சொல்லுறீங்க… நான் இங்க எல்லாருக்கும் சொல்லிட்டேன்… இப்போ வந்து இப்படி சொன்னா, என்ன அர்த்தம்…” என்று போனில் பேச,
மறுபுறம் என்னவோ சொல்ல,
“எனக்கு என்ன பண்றதுனே தெரியலீங்க தம்பி… நான் எப்போதும் முன்கூட்டியே திட்டம் தீட்டி தான் அதை செயல் படுத்துவேன்… இந்த கடைசி நிமிசத்துல மாத்தி பண்றதுலாம்… நமக்கு சரிவராது… நீங்க என்னனா கடைசி நேரத்துல வந்து, சாயந்தரம் வரோம் மாமான்னு தகவல் சொல்லுறீங்க…”
மறுபுறம் ———-
“இப்போ சாயிந்தரம்னு சொல்லிட்டு அடுத்து வரலன்னு சொன்னிங்கன்னா… நான் என்ன பண்றது… என் பொண்ணு விஷயம் தம்பி…”
இதுவரை பேசிக் கொண்டிருந்ததை காதில் வாங்கிய பானுவோ, சேகரின் முன் சென்று, போனை தன்னிடம் தருமாறு கேட்க, அவரோ கடுப்புடன் நீ இப்போ என்ன பேச போற…
அவர் பதில் சொல்லாது போனை அவருமிடமிருந்து வாங்கி கொண்டு, சிறிது தள்ளிச் சென்று, “மாப்பிள்ளை… நான் அத்தை பேசுறேன்… சொல்லுங்க, எதுவும் பிரச்சனையா…”
“அத்தை… ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன்… எனக்கு புரியுது மாமாவோட கோவம்… இருந்தாலும்…”
“நீங்க என்னனு முதல்ல சொல்லுங்க மாப்பிள்ளை…”
“அத்தை… நாளைக்கு காலைல ஒரு எமெர்ஜெண்சினு என்னை இங்க தஞ்சாவூர் ஹாஸ்பிடல்க்கு ஆபிரேஷன்க்கு வர சொல்லிருக்காங்க… கண்டிப்பா ஈவினிங் பொண்ணு பாக்க வந்துருவோம்… என்னை நம்புங்க ப்ளீஸ்… உங்க பொண்ணை தவிர வேற யாருக்கும் இந்த ஜென்மத்துல என் மனசுல இடம் இல்ல… அத்தை ப்ளீஸ்… நான்… நான் சொல்றது உங்களுக்காது புரியுதா ப்ளீஸ்…”
“சரி விடுங்க மாப்பிள்ளை… அவரு முதல்லே இப்படி தடுக்குதேன்னு பேசிருப்பாரு… நான் சொல்லிடுறேன்… ஆனா நீங்க சாயிந்தரம் என்று பேச வர,
“அத்தை… ரொம்ப தேங்க்ஸ்… புரிஞ்சிக்கிட்டதுக்கு… என்ன ஆனாலும், கண்டிப்பா ஈவினிங் வந்துருவோம்… நீங்க கவலைப் படாதீங்க அத்தை… உங்களுக்கு நான் வாக்கு தரேன்… அவந்திகா மட்டும் தான் எனக்கு… ப்ளீஸ் அத்தை…”
“சரிங்க மாப்பிளை.. நான் அப்போ வைக்கிறேன்…”
“ஊப்..” என்று பெருமூச்சினை வெளியேற்றி, அவனின் அதிக்கு, “வெரி சாரிடா தங்க பொண்ணு… எனக்காக காத்திரு… ப்ளீஸ்… மிஸ் யு…” என்று அவளுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு, தனது சின்ன அத்தையின் வீட்டினுள் நுழைந்தான்.
தனது அம்மாவிடம் சென்று, “ம்மா… நான் அவந்தி வீட்டுல, ஈவினிங் வரேன்னு பேசியிருக்கேன்…”
“ரொம்ப நல்லதுடா… இவளை பத்தி சொன்னேன்… கேட்டியா நீ…”
“அதுலாம் நான் பாத்துக்குறேன்… நீ போயிட்டு இப்போ உன் புருஷன் கிட்ட பேசி அவங்களுக்கு அவரை பேசி தகவல் சொல்ல சொல்லு…”
“நான் அதை போயிட்டு பார்க்குறேன்…” என்று அறையின் உள்ளே சென்றான்.
– – – –
சேகரோ, அதிருப்தியுடன் அமர்ந்திருக்க,
“என்னங்க… எதுக்கு இப்போ இப்படி உக்காந்திருக்கிங்க?”
“என்ன சொல்ல சொல்லுற பானு… எனக்கு இது ஒன்னும் அவளோ சரிப்பட்டு வரல…”
“என்ன பேசுறீங்க நீங்க?… இப்போ என்ன ஆகிப்போயிடுச்சினு இப்படி பேசுறீங்க… அங்க பாருங்க உங்க பொண்ணு மூஞ்சியை…”
அவர் நிமிர்த்து அவந்தியை பார்க்க, அவளோ அதிர்ச்சியுடன் இங்கு நடப்பதை கவனிக்க, பின்பே சற்று நிதானத்திற்கு வந்தார்.
“காலைல வரேன்னு சொன்னவங்க, சாயிந்தரம் வராங்க அவ்ளோதான்… ஒரு உயிரை காப்பாத்துறதுக்கு தான போறாங்க… அதுனால நாம சந்தோசத்தான் படுனும்… நீங்க என்ன இப்படி பேசிட்டு இருக்கீங்க…”
“இல்ல பானு… முதன் முதல்ல வரும் போதே தடங்கல் வருதேன்னு பேசிட்டேன்… நாளைக்கு இப்படினு போயிட்டு சொல்லணுமேன்னு ஒரு யோசனை வேற… அவங்களாம் என்னவோன்னு மனசு நோக ஏதாவது பேசுனா… ” என்று இழுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் பானுவை பார்க்க,
“விடுங்க மாமா… இப்போவே த்ரிஷ்டி கழிஞ்சதுனு நெனச்சிக்குவோம்… இதுக்கேன் இப்படி யோசிக்குறீங்க…”
“அப்படி சொல்லு சரஸ்… எப்போ இருந்து ஊரு பேசுறத கேக்க ஆரம்பிச்சீங்க, அவங்க நல்லா இருந்தாலும் பேசுவாங்க, இல்லனாலும் பேசுவாங்க… என்ன தம்பி, உங்க அண்ணாக்கு நீங்களாச்சும் சொல்லுங்க…”
ராஜசேகர், “அண்ணே… அதான் அண்ணி சொல்லுறாங்கள… டாக்டர் வேலைனா சும்மாவா என்ன… இப்போ என்ன நம்ம கூப்பிட்டவங்களுக்கு தானே சொல்லணும்… விடுங்க அதை காலைல பாத்துக்கலாம்… அங்க அவந்தியை பாருங்க…”
சேகர் எழுந்து அவந்தியின் அருகில் சென்று, அவளின் தலை கோதி, ஒன்னும் இல்லடா… ஊருக்கே உபதேசம் பண்ணுனாலும், என் பொண்ணுன்னு வரும் போது நானும் யோசிக்கமாதான் பேசிட்டேன்… நீ ஒன்னும் யோசிக்காத அவந்தி… நாளைக்கு அவங்க வரும் போது வரட்டும்…”
“அப்பறம் என்னடி மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்க, கொஞ்சம் சிரிச்ச மாறி இரு… அப்போதான் உன்னைய கொஞ்சமாச்சும் பாக்குற போல இருக்கும்…”
“ம்மா.. ஆ ” என்று பல்லை கடிக்க,
“அம்மா தான்டி… உண்மையை சொன்னா கூட வந்துடுவா… அம்மா.. நொம்மானு…”
“நாளைக்கு சாயிந்தரம் தானே வராங்க… நமக்கு தான் இன்னும் நேரம் இருக்கே… எல்லாரும் தூங்க போலாம்… எல்லாரும் நடையை கட்டுங்க…” என்று அனைவரையும் அனுப்பிவைத்தார்.
– – – – – – – –
நந்தா, கலையரசி இருந்த அறைக்குள் நுழைய, அவனை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு, “நான் பார்த்து பொறந்த பய நீ… எனக்கே மணி கட்ட பாத்தல்ல… இப்போ பாத்தியா, உனக்கு பொண்ணு பாக்க போறதே சங்கு ஊதிட்டேன்…”
“ஹ்ம்… என்கிட்ட சொல்லிருந்தனா, நானே உன் காலை நல்லா உடைச்சி விட்ருப்பேன்… நாளைக்கு பொண்ணு பாக்க போணும்னு உன்கிட்ட சொல்லிட்டு, நாங்க வீட்டுக்கு போன கொஞ்ச நேரத்துல உனக்கு இப்படி ஆகிட்டா…”
“ஆமாடா… நானே தான் அடி கம்மியா படுற மாறி விழுந்தேன்… நீ என்கிட்டயே என்னா கத விட்ட… இனி உனக்கு எப்படி கல்யாணம் நடக்குதுன்னு பாக்குறேன்…”
“ஓஹ் சேலஞ்சு பண்ணுறியா நீ…”
“அப்படின்னே வச்சிக்கோ… பாத்தல்ல எங்க அண்ணன் கிட்ட நான் நடிச்ச நடிப்புல… உனக்கு முதல்ல சரி ஆகட்டும், அப்பறம் ஒரு நாள் பாக்க போலாம்னு சொல்லிட்டாரு…”
“நீயே இவ்வளோ யோசிக்குறப்போ, நான் நீ நடிக்குறத பாத்து வேடிக்க பாப்பேன்னு உனக்கு நினைப்போ…”
“உன்னால என்னடா பண்ண முடியும்…”
“நீ சுளுக்கே இல்லாத காலுக்கு சுளுக்கு வலினு நடிச்சு, நான் இல்லாம பொண்ணு பாக்க போவியானு உருக்கமா நடிச்சி உக்காந்திருக்க உனக்கே இப்படின்னா… நான் யாருனு நீ மறந்துட்டியா…”
“நீ யாருடா… உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணி தான் பாரேன்..”
“இப்போ நான் சொல்லப்போற விசயத்துல கேட்டு உன் மூஞ்சி இருக்குல்ல மூஞ்சி எப்படி மாறுதுன்னு பாப்போமா… அப்பறம் நீயே குடுகுடு ஓடிப்போய் உங்க அண்ணா கிட்ட, நந்தாக்கு பொண்ணு பாக்க போலாம்னு சொல்லுவ…”
கலையரசியோ அலட்சியமாக அவனை பார்க்க…
அவன் காமித்த விஷயத்தை பார்த்துவிட்டு… முகம் வெளிறி நந்தா சொன்னதை அச்சு பிசகாமல் தன் அண்ணனிடம் சொல்லி பெண் பார்க்க சென்றனர்…
சாரல் வருடும்…
error: Content is protected !!