Skip to content
Post Views: 2,222
அத்தியாயம் 5
இதயாவை புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி விட்டு திரும்பவனின் கண்களில் கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த சுந்தரமும், மீனாட்சியும் விழுந்தனர்.
இத்தனை வருடங்களாக அவள் ஒருவளுக்காக தானே இவர்களின் இத்தனை ஓட்டமும், உழைப்பும் என நினைத்தவன் மெல்லிய புன்னகையோடு இருவரையும் நோக்கி நடந்தான்.
Advertisement
அவர்களை நெருங்க நெருங்கவே
“அத்தை, மாமா…” என்றழைத்தான்.
Advertisement
இவனது குரலில் இருவரின் கவனமும் வாசுவின் புறம் திரும்பியது.
Advertisement
அவர்களைப் பார்த்தவன் மெல்லிய புன்னகையோடு இமை மூடித் திறந்தான் ‘நான் இருக்கிறேன்….’ என்பதைப் போல்…
Advertisement
அதில் பெரியவர்கள் இருவருக்கும் மெல்லிய புன்னகை எட்டிப் பார்க்க அப்புன்னகையோடு வந்தவர்களை கவனிக்க சென்றுவிட்டனர் இருவரும்…
அவர்களின் மீது ஒரு கண் வைத்தபடியே மண்டப வேலைகளை கவனித்து கொண்டிருந்தான் வாசுதேவன்…
****
இங்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த இதயாவின் கண்களில் வழிந்த கண்ணீர் நிற்பேனா என்றது.
புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வந்தவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் ஹரி…
வெளியில் கேட்காத அளவிற்கு குரலை செருமியவன் “நிலா…” என்றழைக்க, அவளிடம் பதிலில்லை… அடுத்த நிமிடம் எதை பற்றியும் யோசிக்காது மங்கையை நெருங்கியமர்ந்தவன் “நிலவே…” என்று தோள் தொட,
அவன் நெருங்கவே காத்திருந்தவள் போல ஆடவனது தோளில் சாய்ந்துக் கொண்டு “கொஞ்சம் கஷ்டமா இருக்கு. சரியாகிடும்…” என்றாள்.
மனைவியை ஆறுதலாக அணைத்து கொண்டவன் “நிலா என்ன டா…” அத்தனை மென்மையாக ஒலித்தது அவனது குரல். கணவனின் தீடிரணைப்பில் அழக் கூட மறந்தவளாக விழி விரித்து மணாளனை அண்ணார்ந்துப் பார்த்தாள்.
சையோகையின் விடாதப் பார்வையில் புருவத்தை உயர்த்தி “என்னமா…” எனக் கேட்க,
அவனது அணைப்பிலிருந்துப விலகியப்படி ‘ஒன்னுமில்லை…’ என்பதைப் போல் மெல்லத் தலையசைத்தாள்.
இதயா விலகி செல்லவும் தான் அவளது நிலைப் புரிந்தது ஆடவனுக்கு ‘தொப்பை மவனே அந்நியாயத்துக்கு சொதப்பி வைக்கிற டா நீ…’ மனம் கடிந்து கொள்ள, அவஸ்தையாக மனைவியைப் பார்த்தான்.
அவளோ ஜன்னல் புறம் பார்வையை பதித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது விலகலை பற்றி யோசித்தவனுக்கு புரியவில்லை அவள் அணைப்பிலிருந்து மட்டுமே விலகினாள் என்று. ஆம் இப்பொழுதும் தோளோடு தோள் உரச தான் அமர்ந்திருந்தனர் இருவரும்.
நிமிடங்கள் மெளனமாக கடக்க
அந்த மெளனத்தை ஹரியே களைத்தான் “வாசுக்கு நெக்ஸ்ட் மந்த் ரிசல்ட் வருது. எப்படி இன்டர்வியூ பண்ணிருக்கான்னு கேட்டியா? ..” எனக் கேட்டான்.
“ஏன் நீங்க கேட்கலையா? இப்பெல்லாம் என்கிட்ட சொல்றானோ இல்லையோ உங்ககிட்ட தான் முதல்ல சொல்றான். இதை சொல்லாமயா விட்டு இருப்பான்…” என்றாள் முகத்தை ஒருபோல வைத்துக் கொண்டு. வாசுவைப் பற்றி கேட்டதுமே பழைய நிலா மெல்ல வெளிவர ஆரம்பித்து இருந்தாள்.
அவளது பொறாமை நிறைந்த குரலில் “ஹாஹா… என்ன நிலா பொறாமையா?…” சத்தமாக சிரித்தபடி கேட்டான்.
“ஆமாமா பெரிய ஆமை…” உதட்டை சுழித்து அழகு காமித்துவிட்டு ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள்.
அது கூட நிமிடங்கள் மட்டுமே என்ன நினைத்தாலோ சட்டென ஹரியின் புறம் திரும்பி
“ஆனா அவன் உங்களோட இந்தளவுக்கு ஒட்டிப்பான்னு கனவுல கூட நினைக்கலைங்க.அது மட்டுமில்லை ஆப்டர் கோமாக்கு அப்பறம் அவனில் ரொம்ப மாற்றம். என் வாசு பையன் இந்தளவுக்கு ஒரு சேஞ்ச்சைக் காட்டுவான்னு நானே எதிர்ப் பார்க்கல…” என்றாள் ஆச்சரியம் கலந்த குரலில்
“ம்ம்,எனக்கு தெரிஞ்சு ஆக்சிடென்ட் முன்னாடியே அவனுக்குள்ள ஒரு மாற்றம் வந்திருக்கணும், அந்த மாற்றம் தான் அவனை இந்தளவுக்கு கொண்டு வந்திருக்கு…” என்றான் யூகம் போல..
“இருக்கலாம்…” என்றவளின் மனக்கண்ணில் அன்றைய நாட்கள் மின்னி மறைய கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அக்கணம் மங்கையின் கலங்கிய தோற்றத்தை காண முடியவில்லை அவனால்… பட்டென மங்கையின் விரல்களோடு தன் விரல் கோர்த்து க்கொண்டான் இறுக்கமாக.
பத்து விரல்களும் பிண்ணி பிணைந்து முத்தமிட்டு கொண்டிருந்த கணம்
‘மறுபடியும் மறுபடியும் தப்பு பண்றீங்க ஹரிஹரசுதன்…’ என்றது அவனது மனம். அதனை துளியும் கண்டுக் கொள்ளமால் மங்கையின் கைவிரல்களில் தன் கை விரல்களை ஆழப் புதைத்து கொண்டான்.
அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் தான் இதயா இல்லை..
நொடி நேர மெளனத்திற்கு பிறகு
“அன்னிக்கு தான் உங்களையும் பார்த்தேன்…” இதழ்களில் புன்னகை தவழ, அன்றைய நாளை மனக்கண்ணில் பல ஓட்டிவிட்டப்படி கூறினாள்.
“பார்க்க மட்டுமா செஞ்ச?…” புருவத்தை உயர்த்தி கேலியாக கேட்டான் ஹரி.
“வேற என்ன செஞ்சாங்களாம்?…” எனக் கேட்டவள் அவனது கேலி சிரிப்பை கண்டு
“ஹாலோ மிஸ்டர் ஸ்டெஞ்சர் சார்… உங்களை எல்லாம் சும்மா பார்க்குறதே பெருசு. இதுல உங்களை நாங்க சைட் அடிச்சோம்னு நினைப்பு வேற இருக்கா உங்களுக்கு…” உதட்டைச் சுழித்து அழகு காட்டியவளின் நயனங்கள் இரண்டும் புன்னகையில் மலர்ந்து கிடந்தது.
அதே புன்னகை ஈரோடு வரையிலும் தொடர்ந்தது… முகம் முழுக்க புன்னகையோடும், பூரிப்போடும் தன் கணவனின் கைகளைப் பிடித்தபடி புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள் இதய நிலா…
அப்பொழுது வரை ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த காமாட்சியோ மணமக்கள் தங்களின் இல்லம் வந்ததும் வீட்டிற்கு பெரியவராக முன்னிருந்து அனைத்தும் செய்ய, அவருக்கு உதவியாக ஜானகியும் இருந்தார். ஆம் பெண் வீட்டின் சார்பில் இதயாவோடு ஜானகி தான் வந்திருந்தார்.
அதற்கு பின்னான நிமிடங்கள் முழுவதும் மணமக்கள் செய்ய வேண்டிய சாங்கியங்கள், மணமகள் செய்ய வேண்டிய முறைகள் என்று ஒவ்வொன்றாக கூறினார் காமாட்சி… அது முடிந்து மாலை நெருங்கியதும் அருகிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் மருமகளைப் பொங்கல் வைக்க கூறினார்.
‘மாட்டேன் எனக்கு தெரியாது.நான் ஏன் பண்ண வேணும்…’ இப்படியான பதிலை தான் அவளிடம் எதிர்ப் பார்த்தார் காமாட்சி. ஆனால் அவளோ அதெல்லாம் தெரியும் என்பதைப் போல் அவர் சொல்வதையெல்லாம் செய்ய… அக்கணத்தில் இருந்தே அவரின் மனதில் இதயாவை பற்றிய எண்ணம் மெல்ல சரியத் தொடங்கியது…
அப்படி இப்படியென்று அன்றைய பொழுது கடந்திருக்க இரவிற்கான முகூர்த்தமும் நெருங்கி இருந்தது. இத்தனை நேரம் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென்று இருந்தவர்கள் மெல்ல மெல்ல களைய ஆரம்பித்தனர்.
வந்தவர்களுக்கு அறைகளை காட்டிக் கொண்டிருந்த காமாட்சியோ நல்ல நேரம் நெருங்கியதும் ஜானகியோடு பேசியப்படி அமர்ந்திருந்த மருமகளை அழைத்து இரவு சாங்கியத்திற்காக எடுத்த புதுப் புடவையைக் கொடுத்தார்.
இத்தனை நேரம் எவ்வித படப்படப்பும் இல்லாமல் இருந்தவளுக்கு சாந்தி முகூர்த்த புடவையை கண்டதும் மெல்லிய படபடப்பு… மனதின் படபடப்பு நீங்காமல் ஜானகியை பார்க்க, அவரோ இமை மூடித் திறந்தார்.
அவரின் பார்வைக்கு பதில் சொல்லும் விதமாக
மெல்லியதாக சிரித்து வைத்தவள் மனதின் நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காமாட்சி கொடுத்த புது புடவையை வாங்கி கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் புது புடவையில் மெல்லிய அலங்காரத்தில் அறையிலிருந்து வெளிவந்தவளிடம் பால் சொம்பை கொடுத்தவர் “இங்க இதுக்கெல்லாம் பெருசா சாங்கியம் பண்ண மாட்டோம் மா. எப்பவும் போல தான் ரூம் இருக்கும்…” என்றார்.
அதற்கு சிரித்தாலே தவிர பதில் பேசவில்லை. அவரிடம் பாலை வாங்கிக் கொண்டு தங்களின் அறையை நோக்கி நடந்தாள்.
அறையை நெருங்க நெருங்க
மெல்லிய நடுக்கம் இதயாவிற்கு. மனதின் படப்படப்பு சற்றும் குறையாமல் அறைக்கதவைத் தட்டினாள்.
“எஸ்…” என்று குரல் மட்டுமே கேட்டது. நீண்ட நெடிய பெருமூச்சுடன் அறைக்குள் நுழைந்தாள்.
எவ்வித அலங்காரமும் இல்லாமல் இருந்த அறையை ஒரு பார்வைப் பார்த்தபடி அறைக்குள் நுழைந்தாள் இதயா…
நிமிடங்கள் அவளது கண்கள் அந்த அறையை சுற்றி வட்டமிட்டது. பெரிய அறை தான். அட்டச் பாத்ரூம், டிரெஸ்ஸிங் ரூம் என்று பார்க்க நன்றாகவே இருந்தது. நொடிகள் கடக்க “ரூம் முழுக்க பார்த்தாச்சா நீட்டா இருக்கா?…” மெல்லிய புன்னகையோடு கேட்டான் ஹரி…
அவனது புன்னகையில் அவளில் எழுந்த நடுக்கம் கூட மாயமாய் மறைய “ம்ம்…” என்றாள்.
மனைவியின் அமைதியான பதிலில் மேலும் சிரித்தவன் “ரொம்ப படுத்திட்டாங்களோ?…” எனக் கேட்டவன் அவளது கையில் இருந்த பாலை வாங்கி டேபிளில் வைத்தான்.
“ம்ம் லைட்டா…” புன்முறுவலோடு கூறினாள்…
இன்னும் அவளது கண்கள் பயத்தைக் காட்டிக் கொண்டே இருந்தது. அதை சுதனுமே உணர்ந்தான். அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்
“லைட்டாவா? உன் வாய் தான் லைட்டான்னு சொல்லுது…உன் கண்ணு வேற சொல்லுதே…” என்றவன் சோம்பல் முறித்தப்படி
“ரொம்ப டயர்டா இருக்கு நிலா தூங்கலாமா?…” எனக் கேட்டான். “ஹான் என்ன…” என்பதை போல விழி விரித்து பார்த்தவள் பின் என்ன நினைத்தாளோ “ம்ம்…”என்றாள்.
அவளது பாவனையில் சிரிப்பு வந்தது ஆடவனுக்கு. மெல்லிய புன்னகையுடன் மங்கையை நெறுங்கியவன் அவளது தலையில் கைவைத்து அழுத்தம் கொடுத்து “குட் நைட்..” என்க
“ம்…குட் நைட்…” என்றாள் மெல்லிய குரலில்.
“டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து தூங்கு…” என்றபடி படுக்கையில் விழுந்தவன் அடுத்த சில நிமிடங்களில் உறங்கியும் போனான்.
கணவனையே இமைக்காது பார்த்தவள் நீண்ட நெடிய பெருமூச்சுடன் புடவையை மாற்றிவிட்டு படுக்கையில் விழுந்தவளை நித்திராதேவி அணைத்துக் கொண்டாள். கூடவே அவளது கணவனும்…
*வெறும் அணைப்பு தான் வேற கற்பனைக்கு போயிட கூடாது*
******
இங்கு சேலத்தில் பெரியவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு மற்ற அனைத்தையும் வாசு தான் பார்த்து கொண்டான். திருமணத்திற்கான செலவுகளைக் கணக்கிட்டு அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து முடித்துவிட்டு வீடு வரவே இரவு பன்னிரெண்டு மணியாகியிருந்தது.
நன்றாக குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தவனுக்கு இதயாவை நல்ல இடத்தில் அதுவும் அவள் ஆசைப்பட்டவனுக்கே கட்டிக் கொடுத்து விட்டோம் என்ற திருப்தி இருந்தது…
மனம் முழுக்க சந்தோசத்தில் மிதந்து கிடந்ததாலோ என்னவோ அவனவளின் நினைவுகள் கண்களில் மின்னி மறைந்தன…
“பொண்ணு மாதிரியா பார்க்குறா…” என்றவன் தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டான் வெட்கத்திலோ?
என்ன தான் முகத்தை மூடிக் கொண்டாலும் பாவையின் சிரிப்பும், விடாமல் துரத்தும் பார்வையும் நினைவு வர வாசுவின் இதழ்கள் புன்னகையை பூசிக் கொண்டது…
‘பார்த்தது போதும் டி…’ அவளிடம் கூற துடித்த மனதை அடக்க முடியாமல் மணமகள் அறைக்கு ஓடியது நினைவு வந்தது…
“ராட்சசி…” செல்லமாக அதட்டியவன் இதழ்களில் மலராக மலர்ந்த புன்னகை அலராக விரிந்தது.
‘சிரிச்சா ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க தேவ்…’ என்ற குரல் கேட்பது போலிருக்கே சட்டென தலையை தூக்கி பார்த்தான். அவள் தான் நின்றிருந்தாள். கண்களை தேய்த்து பார்க்க அவள் நின்ற இடம் காலியாக இருந்தது.
தலையில் அடித்து கொண்டப்படி
‘ரொம்ப கொடுமை பண்ற டி என்னை…’ என்று மனதில் இருப்பவளை திட்டியவன் இதழ்கள் சிரிப்பில் மலர்ந்து கிடந்தது…
பாவையின் நினைவில் உறங்க முயற்சித்தவன் சில நிமிடங்களில் உறங்கியும் போனான்… அவனது கனவிலும் அவள் மட்டுமே வளம் வர உறக்கத்தில் கூட வாசுவின் இதழ்கள் புன்னகையை பூசிக் கொண்டிருந்தது…
*****
error: Content is protected !!