Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே

பூவே  11



Advertisement

முனிஸ் ‘கைகள் இரண்டையும் தெய்த்துக்கொண்டிருந்தாள்.. ஆங்கில வாத்தியார் அடித்த அடியில் கைகள் இரண்டும் இரத்த சிவப்பாய் சிவந்திருந்தது’..

Advertisement

“ச்சே, இன்னைக்கு நா முழிச்சு முழியே சரியில்லை” என்று புலம்பலுடன் முனிஸ் இருக்க,

Advertisement

“நா, முழிச்ச முழிகூட சரியில்ல டி” என்று முகத்தை தூக்கி வைத்து சொன்னாள் வேல்விழி

Advertisement

தன் அருகிலிருந்தவளை ஒரு மார்க்கமாக பார்த்தவள் “நா, காலையிலே! எங்கம்மா கிட்ட வெலக்குமாத்தாலே அடி வாங்கி, இப்போ பாரி சார் அடிச்சிட்டதால புலம்புறேன்.. உனக்கு என்னடி நீ தான் டெஸ்ட் சரியா எழுதுட்டியே! இப்போ நான் தான் இம்போசிஷன் எழுதனும்.. அதுவும் ஒவ்வொரு கேள்வியும் பத்து தடவை ,அஞ்சி கேள்வி அம்பது தடவை எழுதனும்.. இதுல கைய வேற செவக்க வச்சிட்டாரு , நா எப்படி எழுத போறேன்னு தெரியல”  என்று மீண்டும் தன் புலம்பலை தொடங்கியிருந்தாள் முனிஸ்…

“எப்பவுமே உன் பிரச்சினையை மட்டும் பூத கண்ணாடி வச்சி பாப்பியாடி, நா சொல்லுறதை எங்கேன்னா கேக்குறீயாடி நீ” என்று அவள் தோளிலே அடித்து சொன்னாள் வேல்விழி..

“எருமை , அதை வாயால சொன்னா கேக்க போறேன்டி.. அதை விட்டு அடிக்கிற ! ஏற்கனவே கையும், காலும் புண்ணா இருக்குறது உனக்கு பத்தல! என் தோளையும் புண்ணாக்கனும் அதானே உன் எண்ணம்னு” தோளை ஒரு குலுக்கு குலுக்கினாள்..

அவள் திட்டினதும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு திரும்பி உட்கார்ந்தாள்..

“மூஞ்ச திருப்பாம, என்ன நடந்ததுன்னு சீக்கிரம் சொல்லிமுடி, உனக்கு  வருத்தப்பட்டு , நா என்ன வருத்தத்தை தண்ணீ தெளிச்சு ஆத்திக்கிறேன்னு” இவள் கன்னத்தில் கை வைத்து

திவிரமாக சொன்னதை கேட்டு ,

‘வேலு வாய் விட்டு சிரித்தாள்’ அவள் சொன்னதை கேட்டு இவள் நெனைச்சு நெனைச்சு சிரித்தவளுக்கு வயிறு வலியே வந்தது..

“இப்ப நா என்ன சொல்லிட்டேன்னு.. நீ கெக்க பெக்கனு சிரிக்குறடி” என்றாள் , அவளை பாத்து” கடுப்பாக ,

சிரித்துக்கொண்டே ” இல்லடி உன் சோகத்தை தண்ணீ தெளிச்சு ஆத்திக்கிறேன்னு சொல்லுறீயே! அது என்ன நெருப்பா , தண்ணீ தெளிச்சதும் அமிஞ்சு போறதுக்கு” என்று சிரித்துக்கொண்டே சொல்லி முடித்தாள்..

‘இவள் முகத்தில் சிரிப்பை பாக்க தானே! நா அப்படி சொன்னது’ என்று மனதில் நினைத்து..

“சரி இப்ப சொல்லு.. என்ன நடத்திச்சு வீட்டுல”..

இவளும் மூச்சு விடாமல் , காலையில் வீட்டில் நடந்ததை சொல்லி முடித்தாள்.. “வர வர என்னன்னே தெரியலடி ,சின்ன பாட்டி ரொம்ப கோவபடுறாங்கடி எனக்கு இப்பெல்லாம் வீட்டுல இருக்கவே பயமா இருக்குடி” என்று சொல்லும்போதே! அவள் குரல் உடைந்திருந்தது..

சின்ன பாட்டியின் கோவத்துக்கு காரணம் வேலுவுக்கு தெரியாமல் இருக்கலாம்.. ‘ஆனா, எனக்கு தெரியும்டினு’ மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்..

“ச்சே! நீ என்னடி இப்டி சின்னபுள்ளை தனமா அழுதுட்டிருக்க, நாளைய வரலாறு நம்மளை பத்தி தெரிஞ்சுக்கும்போது! யாருடா இவங்க ,நமக்கே பாக்கணும் போல இருக்கேன்னு நெனைக்கணும்.. அதை விட்டு சின்னபுள்ள தனமா அழுது நம்ம வரலாறை அசிங்கபடுத்தாதடி” என்றாள் வீரவசனமாக,

அவள் சொன்னது புரியாமல் “என்ன வரலாறுடி சொல்லுற நீ” என்றாள்..

“நம்ம வரலாறு தாண்டி, போன் இல்லாத காலத்திலே அரசர்கள் வரலாறை எழுதியிருக்கும் போது! இப்ப போன், கம்பியூட்டர்னு கண்டுபுடிச்சிருக்கும்போது! நம்ப வரலாறை நம்ப தீவிரமா எழுதும் போது! உப்பு சப்பு பேறாதா காரணத்துக்கெல்லாம் அழுததை தெரிஞ்சு , நாளைக்கு நம்ப பேரபுள்ளைங்க சிரிக்க மாட்டாங்க” என்று கன்னத்தில் ஒரு விரலால் தட்டிக்கொண்டு சொன்னாள் முனிஸ்..

மீண்டும் ஒரு வெடி சிரிப்பு தான் அவளிடம்…

இவளின் சிரிப்பு சத்தம் கேட்டு அங்கங்கே விளையாடிக்கொண்டிருந்த மாணவ, மாணவிகள் திரும்பி பார்த்தனர்..

“அடியே! நீ  இப்ப என்னாத்துகுடி சிரிக்குற, எல்லாரும் நம்மளை பைத்தியம்னு நெனைக்க போறாங்கடி” என்று அவள் வாய் பொத்தினாள்..

வாயிலிருந்து கையை தட்டி விட்டவள்.. “இன்னும் ஸ்கூலு கூட ஒழுங்கா முடிக்கல இதுல மேடம் பேரப்புள்ளைங்க வரை போயிட்டீங்க” என்றாள் அவளை பார்த்து..

“பின்ன உன்னை மாறி மூளையில முட்டு கொடுத்து அழுக சொல்லுறீயா! பொண்ணுங்க கண்ணீர் விலைமதிப்பில்லாதுதுடி அதை போய் வீணாக்குற, உங்க சின்ன பாட்டி எப்பவும் பேசுறது தான்… இப்ப கொஞ்சம் கூட சேர்ந்து பேசுது அவ்ளோ! தானே அதை விட்டு அழுதுட்டிருக்க நீ.. அவங்க பேசுறதை வலது காதுல வாங்கி, இடது காது வழியா வெளியே விடனும்டி?” என்றாள்..

“நீ சொல்லுற மாறி இனி இருக்க பாக்குறேன்டி..”

“இப்படியே இரு , அப்பறம் இப்ப நீ சொன்னது.. நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்.. இதை போய் கலையரசிகிட்டையும், விஜயாகிட்டையும் சொல்லிட்டு இருக்காத” என்றாள் அவளை பார்த்து..

“ஏண்டி , அவங்களும் நம்ம பிரண்ட்ஸ் தானே? சொன்னா என்ன தப்பு” என்று கேட்க,

“பிரண்ட்ஸ்ஸா இருந்தா , எல்லாத்தையும் அவளுங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை , புரியுதா” என்று முறைத்து சொன்னாள் முனிஸ்..

“என்னைய பத்தி தப்பா பேசுனாங்களாடி” என்று முகம் சோகம் தாங்கி கேட்க,

“அப்படியில்லடி, சில விஷயம் உனக்குன்னு இருக்குறதை மத்தவங்களுக்கு சொல்லனும்னு அவசியமில்லைன்னு சொல்லுறேன்டி” என்றாள் , அவள் முகத்தை கைகளில் ஏந்தி..

“ஈசு, எனக்கு இதுவரை அம்மா இல்லைன்ற எண்ணமே வந்தது இல்லடி, ஒரு அம்மா மகளுக்கு எப்டி வழிகாட்டுவாங்களோ! அந்த மாறி நீ என்னை வழி நடத்துறடி” என்று வேலு சொன்னதும்..

எதிரே இருந்தவளுக்கு ஒரு வித மயிர்கூச்சம் கண்டது அவள் தேகம்.. “ஏய் , என்னடி பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுற‌ எருமை.. எனக்கு தெரிஞ்சதை நா உனக்கு சொல்லுறேன்டி, இதுக்கு போய் என்னை பெரிய மனிஷியாக்காத, நா உன்னை விட சின்ன பொண்ணு‌” என்றாள் வேலுவின் தலையையாட்டி..

“ஆமாமா, ரொம்ப சின்ன பொண்ணு தான் நீ” என்றாள் சிரித்துக்கொண்டே,

அதே நேரம் மதிய இடைவெளிக்கான நேரம் முடிந்திருந்ததை அறிவிக்க மணி சத்தம் கேட்டது..

குளத்தங்கரையருகே அமர்ந்திருந்த தோழிகள் இருவரும் எழுந்து வகுப்பறைக்குள் வந்தனர்..

“ஏய்! எங்கடி போனீங்க ரெண்டு பேரும்” என்று கலையரசி கேட்க,

“நீ ,‌பேசாதாடி எங்களை விட்டு நீங்க ரெண்டு பேரும் மட்டும்  போய் வீட்டுல கொட்டிட்டு வந்துட்டீங்க.. நாங்க அப்படியா ஆயம்மா போட்ட சோறு சாப்பிட்டு கொளத்துல  (குளத்துல) எத்தனை தாமரைப்பூ பூத்திருக்குன்னு எண்ணிட்டு வந்தோம்” என்றாள் முனிஸ்..

“இவ ஏண்டி ஒரு மாறி இருக்கா” என்று விஜயா கேட்க,

“அது” என்று வேலு வாய் திறக்க,

“அது அவளுக்கு வயித்தவலிடி அதான் ஒரு மாறி இருக்கா, இன்னைக்கு ஆயம்மா சாம்பார்ல கத்திரிக்காயை அதிகமா போட்டது அவளுக்கு ஒத்துகல போல , சாப்பிட்டதிலிருந்து வயிறு வலின்னு சொல்லிட்டு இருக்கா” என்று வாயில் வந்ததை சொல்லி சமாளித்தாள் முனிஸ்..

“நீ சொல்லுற எதுவும் நம்புற மாறி இல்லடி” என்ற விஜயா  இருவரையும் மேலிருந்து கீழ் வரை பார்த்து வைத்தாள்..

“ஆமா , இவ பெரிய ஜேம்ஸ் பாண்ட்டு பார்வையாலே கண்டு புடிச்சிடுவாளுங்க, தள்ளுங்கடி வழியை மறைச்சிக்கிட்டு..” இருவரையும் விலக்கி தங்கள் இடத்தில் போய் அமர்ந்தனர்..

அறிவியல் ஆசிரியை உள்ளே வந்தார்..

“குட் ஆஃப்ட்டர்னூன் டீச்சர்” என்று மாணவ , மாணவிகள் கோரசாய் எழுந்து நின்றனர்…

“குட் ஆஃப்ட்டர்னூன் சிட் டவுன்”‌ என்றார் தேன்மொழி டீச்சர்..

“ஆத்தி” என்று நெஞ்சில் கை வைத்தாள் முனிஸ்..

“எதுக்குடி இப்ப நெஞ்சில கை வைக்குற நீ” என்று அருகிலிருந்த தோழிகள் மூவரும் முனிஸை சூழ்ந்து கேட்க..

“இல்லடி , இவங்க கிளாஸ் அடுத்து தானேடி ! இப்பவே வந்து நிக்குறாங்க”  என்று

முணுமுணுத்தாள்..

“அதுவா, கிளாஸ்ல பாதி பேர் டான்ஸ் பிராக்டிஸ்னு ஓடி போயிடுறீங்க.. அதனால் மேக்ஸ் டீச்சர்கிட்ட அவங்க கிளாஸை இவங்க எடுக்குறதா கடன் வாங்கி இருக்காங்க” என்றாள் ஆல் இன் ஆல் விஜயா,

“அடிப்பாவி இதை முதல்லே சொல்ல வேண்டி தானே” என்று அவளை முறைத்தாள் முனிஸ்..

“என்ன சத்தம் அங்க” என்று டீச்சர் குரல் கேட்டு இவர்கள் அமைதி காத்தனர்..

மதிய உண்ட மயக்கத்துடன் சேர்ந்து அறிவியல் பாடம் தாலாட்டாய், பின்னிருக்கையில் இருந்த மாணவ , மாணவிகளை தூங்க வைத்தது…

“ஐய்யோ! என்னால முடியலடி, யாராவது நிறுத்த சொல்லுங்கடி இந்த ரேடியா பொட்டியை” என்று புலம்பவே செய்தாள் முனிஸ்..

“ஏய்! சும்மா இருடி டீச்சர் நம்ம பக்கம் தான் பாக்குறாங்க” என்றாள் வேல்விழி ..

கரும்பலகையில் எழுதிகொண்டிருந்த தேன்மொழி டீச்சர், பேச்சு சத்தம் கேட்டு இவர்கள் பக்கம் திரும்பி பார்த்தவர் கண்களில் ‘அனல்’ தெறித்தது..

“முனிஸ்வரி” என்று சத்தம் போட்டு கூப்பிட்டார்..

“ஹாங் டீச்சர்” என்று பதறி எழுந்து நின்றாள்..

“பாயும் ,தலையணையும் சேர்த்து தரேன்..  படுத்து நல்லா தூங்குறீயா” என்றார் அவளை முறைத்து பார்த்து..

‘ஆத்தி , இப்படி மாட்டிட்டியேடி போச்சு போ! இனி பாடத்துல இருக்குற மொத்த கேள்வியும் நம்ம பக்கம் மட்டுமே திரும்ப போகுதே’ என்று அவள் மனதில் நினைத்த நேரத்தில்,

“சொல்லு , தாவர செல்க்கும் விலங்கு செல்க்கும் என்ன வித்தியாசம்?” என்று முனிஸை பார்த்தார்..

அவர் கேள்வி அவளுக்கு உண்மையிலே புரயவில்லை “டீச்சர் மறுபடியும் கேள்வியை சொல்லுறீங்களா” என்றாள்

அவர் பல்லை கடிக்கும் சத்தம் மொத்த வகுப்பறைக்குமே கேட்க,

“தாவர செல்லுக்கும், விலங்கு செல்லுக்கும் உள்ள வித்தியாசம் என்ன” என்றார்..

“தாவர செல்க்கு செல் சுவர் இருக்கும் டீச்சர்… விலங்கு செல்க்கு இருக்காது” என்றாள்..

டீச்சர் ஆச்சரியமாக, “பரவாயில்லையே! உனக்கு தெரியுமா?” என்றார்..

“நேத்து இராத்திரி தூக்கம் வரலன்னு புத்தகத்தை எடுத்து படிக்க தான் முயற்சி செய்தேன் டீச்சர் ஆனா ,தலையணைக்குக் கீழே வச்சிட்டு தூங்கிட்டேன் டீச்சர்” என்றாள் முகத்தை பாவமாக வைத்து..

அவள் சொன்னதை கேட்டு மாணவர்கள் அனைவரும் சிரித்தனர்..

“சிரிக்க வைக்கிற திறமை மட்டும் இல்ல… படிக்கிற திறமையும் உனக்கு இருக்கு. கொஞ்சம் கவனம் வச்சா நல்லா படிப்ப” என்றார் தேன்மொழி..

முனிஸ் அமைதியாக தலையசைத்தாள்..

அருகில் இருந்த வேல்விழி, “கேட்டியாடி!” என்று மெதுவாக சொல்ல,

“ஆமாடி , நா கூட கேள்விக்கு பதில் சொல்லிட்டேன்னு.” என்று முணுமுணுத்தாள் முனிஸ்..

பத்தாம் வகுப்பு மாணவன் அறைக்கு வெளியே வந்து நின்றான்.. “உள்ள வரலாமா டீச்சர்”..

“வாப்பா”

” டீச்சர் டான்ஸ்ல இருக்குறவங்களை, ராணி டீச்சர் வரச்சொன்னாங்க” என்றான் அந்த மாணவன்..

“அதுக்குள்ள இந்த பீரியட் முடிஞ்சிடிச்சா” என்று சத்தமாக சொல்லி , திரும்பி மாணவர்களிடம் “யாரெல்லாம் டான்ஸ்ல  இருக்கிங்களோ! அவங்க மட்டும் போகனும்” என்றார்

எழுந்து நின்றிருந்த முனிஸ் அனைவருக்கும் முன்னாள் போய் நின்றாள்..

அவளை பார்த்து முறைத்தவர் ” படிப்புல மட்டும் முன்னாடி வரனும்னு நெனைக்காத நீ” என்றார் கடுப்பாக ,

பாவமாக கைகளை கட்டி நின்றிருந்தாள் முனிஸூம்.

வகுப்பு மொத்தமும் கிளம்பிருக்க , இருக்க ஆறேழு பேரை வச்சு என்ன செய்ய என்ற கடுப்பில் இருக்க, அந்த நேரம் பக்கத்து ஆசிரியை வந்தவர் அவர் கிளாஸ் பசங்களையும் இ

வர் தலையில் கட்டிவிட்டு டான்ஸ் பிராக்டீஸ் கிளம்பிவிட்டார்..

எல்லா மாணவர்களையும் அந்த ஆலமரத்தடியில் வரிசையாக அமர வைத்து.. சின்ன சின்ன கேள்வி பதில் நடத்தினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!