இன்ஸ்பெக்டர் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தார்.. “இங்க பாருய்யா, அந்த புள்ளையை நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல சொல்லு.. இல்லைன்னா உனக்கு தான் பிரச்சினை” என்றார்…
Advertisement
“சரிங்க சார்” என்றவன்.
Advertisement
வேல்விழியை தன்னிடமிருந்து பிரித்தான்..
Advertisement
“போலாமா மாமா.. வா” என்று அவன் கை பிடித்தாள்..
“இல்லை வேலு.. நீ அவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொன்னாதான் இங்கிருந்து நம்ம போக முடியும்னு” அவள் கண்ணை பார்த்தான் வெற்றி..
அவளுக்கு இன்னும் பயமாக இருந்தது.. ‘ தன் மாமனை பயத்துடன் பார்த்தாள்’..
“பயப்பிடாத வேலு அவங்க உன்கிட்ட தப்பா கேக்க மாட்டாங்க” என்று அவள் கண்ணை துடைத்து ” போ” என்று அனுப்பி வைத்தான்..
மாமனையே திரும்பி பார்த்துக்கொண்டே, போனாள்..
அவளை அப்படி பார்க்க அவனுக்கும் மனம் தாங்கவில்லை தான்.. என்ன பண்ண முடியும் சூழ்நிலை கைதியாக அவனே நிற்கும் போது…
அடி மீது அடி வைத்து அவர்களை நெருங்கியவள் பார்வை மொத்தமும் பயம் மட்டும் தான் இருந்தது.. மறுபடியும் திரும்பி மாமனை பார்த்தாள்..
“போ” என்றான் அவளுக்கு தைரியம் சொல்லி,
“மேடம் அவ பயப்படுற மாறி கேள்வி கேக்காதிங்க மேடம்” என்றான் தயவாக,
அவர்களாலும் என்ன பண்ண முடியும் அவர்களுக்கு கொடுத்த வேலையை தான் அவர்களும் செய்ய முடியும்..
தனி அறைக்கு கூட்டி வந்தனர்..
இதயமே வெளியே குதிக்கும் அளவுக்கு படபடவென துடித்தது வேல்விழிக்கு..
“பயப்படாதம்மா நாங்க எதுவும் உன்னை கேக்கல” எனக் சொல்லிக்கொண்டே அவளுக்கு தண்ணீரை கொடுத்தனர்..
“இல்லை வேணாம்” என்றாள் உள்ளே போன குரலில்..
“ஏன் ம்மா வேணாம்னு சொல்லுற, இங்க வந்ததிலிருந்து நீ எதுவுமே சாப்பிடல , தண்ணீயாவது கொஞ்சமா குடி” என்றார் மற்றொரு பெண் காவலர்..
“மாமாவும் காலையிலிருந்து எதுவுமே குடிக்கல , அவரை விட்டு நா மட்டும் எப்படி குடிக்க முடியும்னு” பயத்துடன் தான் சொன்னாள்..
இருவரும் மெல்ல சிரித்துக்கொண்டனர்..
“மாமான்னா உனக்கு அவ்ளோ புடிக்குமா” என்று சுதா கேட்க,
“அப்படியா எப்படி கலியாணம் நடந்திச்சு” என்று இன்னும் பேச்சுக்கொடுத்தாள் அவள்..
அருகிலிருந்தவளோ, ரெக்கார்ட் பண்ணும் வேலையை தொடங்கினாள்..
அவர் சொன்னதை கேட்டு இவள் சோகமாக ,
“என்னாச்சும்மா.. முகம் மாறுது”..
“மாமா பாவம் சின்னப்பாட்டி மாமவை ரொம்ப திட்டிட்டாங்க” என்று மூக்கு உறிஞ்சினாள்.
“அப்ப உங்க சின்னபாட்டிக்கு தெரியாமல்தான் கலியாணம் பண்ணீங்களா” என்று அவள் முகம் பார்த்தார் அந்த பெண் காவலர்..
“அது… அது.. “என அவள் தயங்கினாள்..
“நீ உனக்கு எப்படி கலியாணம் ஆனதுன்னு சொன்னாதான்.. அவரை வெளியே விடுவாங்க இல்லைன்னா உன் மாமா ஜெயிலுக்கு தான் போகனும்” என்றதும்..
“இல்லை இல்லை நா சொல்லுறேன்னு… நேற்று காலையில் ஆரம்பிச்சு இப்போது இங்கே வந்ததை வரை சொல்லி முடித்தாள்…
அவள் சொன்னதை கேட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..
“உங்கமாமா உன்பக்கத்துல வந்து படுக்கலையா” என்றாள் மற்றொருத்தி..
“அவரு ஏன் என் பக்கத்துல படுக்க போறாங்க.. இராத்திரி திண்ணையிலே தான் படுத்தாங்க, நா பெரியபாட்டிக்கூட படுத்துக்கிட்டேன்” என்றாள் சற்று தெளிந்த குரலில்,
“இந்தா தண்ணீ நீ குடிச்சிட்டு உன் மாமனுக்கு கொடு” என்று அவள் கையில் பாட்டிலை திணித்தாள்..
அவளும் சந்தோஷத்துடன் வெளியே வந்தாள்..
பாவம் அவள் சந்தோஷத்துக்கு ஆயுள் குறைவு என்று தெரியாமல் போனது அவளுக்கு..
இங்கு வெற்றியும் நடந்ததை சொல்லி முடித்தான்..
“மாமா தண்ணீ குடி” என்று அவன் கைகளில் கொடுத்தாள்..
“நீ குடிச்சியா” என்றான் அவள் முகம் பார்த்து..
“ம்ஹூம்… நீ குடிச்சிட்டு குடு” என்றாள்..
அவன் கொஞ்சமாக குடிச்சிட்டு மீதியை அவளிடம் தந்தான்..
மீதி இருந்த தண்ணீ மொத்தமும் அவள் குடித்து.. பாட்டிலை அவர்களிடம் கொடுத்தாள்..
“தேங்க்ஸ்” என்றாள் சிரிப்புடன்..
அவர்களும் அதை வாங்கி அருகிலிருந்த டேபிளில் வைத்தனர்..
வேல்விழி நகர்ந்ததை கண்டு, ” இது தான் லவ்வா சுதா” என்றாள் மற்றோருத்தி..
“ஆமா நா பத்து பேரை லவ் பண்ணி கட்டிக்கிட்டேன் பாரு , என்கிட்ட கேளு கதை கதையா சொல்ல, வாடி இந்த இன்ஸ்பெக்டர் என்ன பண்ண போறான்னு தெரியல” என்று முணுமுணுத்தாள் சுதா..
முதல் ஆளாக அவனின் “அக்காவும், அன்னையும் அத்து வுட்டுடுங்க சாமி” என்று இருவரும் சத்தமாக சொன்னதும்..
“மாட்டேன் நா என் மாமா கூட தான் இருப்பேன்” என்று ஓடிப்போய் அவன் கைகளை பற்றிக்கொண்டாள்…
வெற்றியின் பார்வை வேல்விழி மீது படிந்து.. தன் அக்கா, அம்மா பக்கம் திரும்பியது…
“இங்க பாரும்மா.. நீ உன் மாமாகூட தான் இருப்பேன்னு சொன்னாலும்.. அதுக்கு சட்டத்துல இடமில்லை , ஒன்னு நீ உங்கப்பம்மா கூட போகனும் இல்லையா.. ஹோம்ல விடுவோம்” என்றதும்…
“பாவி பாவி இன்னும் என்ன தாண்டி பண்ண போற , உன்னால நா எம்புள்ளையை பிரிஞ்சி இருக்கணுமா முடியாது.. போடி போ” என்று அவளை நெருங்கினார் காளியம்மா..
வேல்விழியை மொத்தமாக தன் பின்பக்கம் மறைத்தான் வெற்றி…
தன் மகனின் செய்கையை கண்டு கண் மண் தெரியாத அளவுக்கு கோபம் கண்ணை மறைக்க,
“இன்னமும் உனக்கு அவமேல இருக்க மயக்கம் தீரலயாடா , ஒரு இராத்திரி கூட இருந்ததுக்கு எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கா பாருய்யா” என்று ஆத்திரத்தில் நெருப்பை அள்ளிக்கொட்டிருந்தார் அந்த மகராசி..
“எப்படிம்மா அவன் விடுவான்.. அவளுக்கு மூத்த என் பொண்ணுங்கமேல அவனுக்கு எந்த எண்ணமும் வரலையே! இவ மட்டும் அப்படியென்ன சொக்கும் பொடி போட்டாளோ! வயசுக்கு வராதப்பவே! அவனையே சுத்தி வந்தா , இப்ப சொல்லவா வேணும்” என்று சரசும் கொட்டிய நெருப்பில் எண்ணெய் ஊற்றியிருந்தார்..
“போதும் நிறுத்துங்க , என் மகளை நா கூட்டிட்டு போறேன்.. இன்னும் வார்த்தையாலே அவளை கொண்ணுடாதிங்க” என்ற தேவகி மகளை நெருங்கினாள்…
தம்பி பின்னே மறைந்திருந்தவளை தன் பக்கமாக இழுக்க முயற்சி பண்ணியவருக்கு…
அவள் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை , “நா மாட்டேன் எம்மாமாவை விட்டு போகமாட்டேன்” என்றாள் அழுகையுடன்..
“ஏய் நிறுத்துங்க இது என்ன சந்தைக்கடையா இப்படி சத்தம் போடுறீங்க” என்று சத்தம் போட்டார் இதுவரை வேடிக்கை பார்த்த இன்ஸ்பெக்டர்…
அனைவரும் வாய் மூடினாலும்
வெற்றி பக்கம் திரும்பினான்,” நீ என்ன சொல்லுற, நா சொன்னதுக்கு” என்றார் அவனை பார்த்து..