Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 28 1

சீதா கல்யாண வைபோகமே..

அத்தியாயம் -28



Advertisement

இறுதி அத்தியாயம்

Advertisement

Advertisement

Advertisement

  சீதா  சிவன் கோவில் வாசலில் வேதனையோடு அமர்ந்திருந்தாள்.

சற்று முன்பு தான் கோவில் கருவறைக்கு சென்றிருந்தவள்.

அப்பன் ஈசனை பார்த்து கையேந்தி நின்றிருந்தவள், என் கணவன் எந்த தப்பும் செய்ய வில்லை என்று நிருபித்து என் கையில் கொடுத்து விடு  ஈஸ்வரா,.

என்னால முடிந்தவரைக்கும்  நான் போராடி பாத்துட்டேன், என்னால முடியல, நீ எனக்கு ஒரு வழி காட்டு.

எனக்கு நீ ஒரு வழியை காட்டிய ஆக வேண்டும், நீ வழி காட்டாம நான் உன் சன்னதியை விட்டு போக மாட்டேன், என்றவள்.

கோவில் வாசலில் அமர்ந்து கொண்டவளுக்கு  வேதனையாக இருந்தது,,..

தப்பு பண்றவன் வெளியே உல்லாசமாக  இருக்கான், தப்பு பண்ணாத என் ரவி பாதிக்க படுவதா?,, ..

இது என்ன நீதி, தப்பு பண்ணவனுக்கு தண்டனை கண்டிப்பா கிடைத்தே  ஆக  வேண்டும், அந்த மூனு பெண்களுக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும்,,.

இந்த இயற்கைக்கு சக்தி இருந்தால், இன்னும் நியாயம் சாக வில்லை என்றால்….

எனக்கு  வழியை காட்டுங்கள், ஏதாவது ஒரு ஆதாரம் கிடைத்து விடதா? என் கணவனை காப்பாற்ற, என்றவளுக்கு அவளையும்  மீறி கண்ணீர் வந்தது,,

“சீதா” என்று மாமியாரின் குரலை கேட்ட சீதா திமிர்ந்து பார்க்க.

பத்மா கதிரை தூக்கிய படியே அவள் முன் நின்றிருந்தார்..

“அத்தை” என்றவள் பத்மாவை கட்டிக்கொண்டு அழுதாள்.

“என்னால முடியல அத்தை, எனக்கு பயமா இருக்கு அத்தை உங்க பிள்ளை காப்பாத்த என்னால முடியாது போலயே”, என்று அழுத மருமகளை அணைத்து ஆறுதல் படுத்தியவர்..

“என் மகன் தப்பு பண்ணல சீதா,  உன் கணவன், என் ரவி தப்பு பண்ண மாட்டான்,  என் பையன் பல பெண்கள் கூட பழகுறவன் தான், நான் இல்லன்னு சொல்லல்ல.

ஆனா நீ வந்ததுக்கு பிறகு ,  அவன் தப்பே பண்ணலா சீதா, ரவி தப்பு  பண்ணவும்  மாட்டான் “. என்றவர்.

ரவியின் பழய லாப்டாப்பை எடுத்து வந்திருந்தவர், “இதில் நீ எதிர் பார்த்த அத்தனை  வீடியோவும் சேவ் வாகி இருக்கு பாரு” என்று பத்மா கூற.

“என்ன அத்தை ஆதாரம்”  என்று கேட்க சீதா அந்த லாப்டாப்பை, திறந்து உள்ளே உள்ள வீடியோவில்   பதிவாகி இருந்தா வீடியோ வை பார்த்தாள்,, அதில் ரவி ரூம்பில் நடந்த அத்தனை நிகழ்வு பதிவாகி இருக்க.

அதை பார்த்தவள், உடனே அதை சிரஞ்சீவிக்கு, சிவாவுக்கு அனுப்பி வைத்தாள், ‘இந்த ஆதாரம் இருந்தாலே போதும் ரவியை வெளியில் எடுத்து விடுலாம்’ என்று சீதா பெருமூச்சை விட.

 புது நம்பரில் இருந்து சீதாவுக்கு ஒரு போன் வந்திருந்தது   சீதா அதை கண்டு கொள்ளாமல், ரவியை காப்பாத்திவிடலாம்,  ஆனால் தப்பு பண்ணியவர்க்கு, தண்டனை எப்படி வாங்கி கொடுப்பது, தப்பு  பண்ணி அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டுமே, அதற்கு  என்ன செய்ய..

ரவிவை இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து காப்பாற்றி விடலாம்,

அந்த மூன்று பெண்கள் இறந்தது காரணமானவனை சும்மா விடுவதா?, என்று யோசித்த படியே இருக்க.

 புது நம்பரிலிருந்து சீதாவுக்கு மறுபடியும்  ஒரு போன் வந்தது..

 யாரது போன்ல புது நம்பரா இருக்கே  எடுக்கவா வேண்டாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே போன் கட் ஆகிய விட்டது.. மீண்டும் ஒலித்த போனை எடுத்து ஆன் பண்ணி  காதுக்கு கொடுத்தாள் சீதா.

 “ஹலோ யாருங்க”?. என்று சீதா  அவரை கேட்க.

” சீதா சீதாதானே மா நீ.. ரவி பொண்டாட்டி  தானே” என்று கேட்க

“ஆமாம் சார்” என்றாள் சீதா.

 ” நான் கான்ஸ்டெபல்  பேசுறேன் மா, ஏன்மா   நான் ஏற்கனவே உனக்கு ஒரு ஆடியோ  அனுப்பி இருந்தேன் அதை நீ இன்னும் நீ கேட்கவில்லையா”?  என்றார்..

“என்ன ஆடியோ நான் எதுவும் கேட்கவில்லையே” என்றாள்,

“உன் கணவர் எப்பவோ உனக்கு ஒரு ஆடியோ அனுப்பி வச்சார் அந்த  ஆடியோ மெசேஜ்ஜை நீ கேட்க வில்லையா” என்று அவர் கூற.

“என் கணவர் ரவியா”?

“ஆமாம் மா ” என்று கூற.

“மறுபடியும் அந்த ஆடியோவை எனக்கு  அனுப்பி வைக்குறீங்களா, பா” என்று கூற.

“இருடாமா நான் அனுப்புறேன்”, என்றவர் ரவி அன்று பேசிய ஆடியோவை சீதாவிற்கு  மறுபடியும் அனுப்பி வைக்க.

ரவி எனக்கு ஆடியோ அனுப்பி இருந்தாரா, ஐ யோ அதை நான் பார்க்கவில்லை, கேட்க வில்லையே,  பல  பேர்  சீதா போனிற்க்கு  வீடியோ, ஆடியோ அனுப்பியதால்   சீதா அதை பார்க்க வில்லை..

அந்த கான்ஸ்டெபல்  ரவி பேசிய ஆடியோவை சீதாவிற்க்கு அனுப்பி வைக்க.

கனத்த மனத்துடன் ஆடியோவை  ஆன் பண்ணி கேட்டாள்.

“சீதா, சீதா டேய் கண்ணம்மாள்” என்றவனுக்கு  குரல் உடைந்திருந்தது.

இங்கே சீதாவும் ரவி குரலை கேட்டு “ரவி” என்று அழுதிருந்தாள்.

சீதாவை அழுவதை பக்கத்தில் இருந்த பார்த்த பத்மா மருமகளை  அணைத்துக்கொண்டவர், “அவன் பேசுறதை கேளு அழாத” என்று மருமகளை தேற்ற.

நீண்ட நாட்களுக்கு பிறகு கணவனின் குரல் கேட்டு அழுதிருந்தவள், கண்களை துடைத்து விட்டு. ரவி பேசியதை கேட்டாள்.

“சீதா, சீதா நான் சொல்லுறத கேளு, நம்ம ஷிப்பல உனக்கு தேவையான ஆதாரம் இருக்கு.

ஷிப்புக்கு போ, இது எல்லாம் ரூம்புலையும் இருக்கும், என்னுடைய மீட்டிங் ரூம்புலயையும் இருக்கும்,, இது ஒரு பொருள், இது நம்முடைய அடையாளம், உனக்கு ஆதாரம் வேணுமா அதை தூக்கி போட்டு ஒட.

உனக்கு தேவையான ஆதாரம் கிடைக்கும் சீதா, சீக்கிரம் போ, உன் உடம்ப பாத்துக்கோ, என்னை மன்னிச்சிடு சீதா” என்று அந்த ஆடியோ பதிவு முடிந்திருக்க.

ஐ யோ இந்த வீடியோவை முதலிலே நான் கேட்டு இருக்க கூடாதா, என் ரவியை நான் எப்போதே வெளியே எடுத்திருப்பேன் என்று நினைத்தவள்.

 சிரஞ்சீவிக்கு போன் செய்து அவனை வரச் சொல்ல. உடனே வந்து சேர்ந்தான் அவன்.

 அவனிடம் அனைத்தையும் சொன்னவள். லேப்டாப்பை  அவனிடம் குடுத்து விட்டு பத்திரம் என்றவள். தன்னுடைய ஃபோனிலும்  அனைத்து ஆதாரத்தை  சேவ் செய்துவிட்டு,, இன்னும் சிலருக்கு அனுப்பி இருந்தாள், அதில் ஒருவர் சீ எம்.

 சீதா  அனுப்பிய வீடியோவை பார்த்த சீ, எம்.   உடனே அந்த வீடியோவை, நாளை தீர்பளிக்கும் ஐந்து ஜட்ஜுகளுக்கும் இதை அனுப்பி இருந்தார் …

 அந்த வீடியோ காணோலில் ரவிக்கு ஏதோ மயக்கம் மருந்து கொடுத்து அவன் தூங்குவது போலவும்.

 அதற்குப் பிறகு சோணாலியும் தீப்தியையும் இருவர் தூக்கி வந்து ரவியின் பக்கத்தில் அவன் கொலை செய்தது போல் படுக்க போட்டு சென்றதும் பதிவாகி இருக்க.. பின்பு போலீசார் வந்து  ரவியை   கொலை செய்தது நீ என்று அழைத்து செல்வது பதிவாகி இருக்க.

இந்த ஒரு ஆதாரம் போதும் இந்த பெண்களை ரவி கொலை செய்ய வில்லை, யாரோ கொலை செய்து அந்த பெண்களை ரவி அருகில் கொண்டு வந்து போட்டு சென்றிருக்கிறார்கள் என்று.

இந்த ஒரு வீடியோ போதும் ரவி வெளியே வர.

 ஆனால்  இரண்டு பெண்களை யார் கொலை செய்தது எப்படி கொலை செய்தார்கள் என்று கண்டுபிடித்தாலே இந்த கேசின் முடிவு வரும் என்பதால் சீதா அந்த ஆதாரத்தை தேடி ஷிப்புக்கு சென்றாள்..

 பத்மாவை கதிரோடு வீட்டிற்கு போக சொல்லி விட்டு..

 சிவா, வெங்கட், சீதா , சிரஞ்சீவி என்று நான்கு பேரும் ஷிப்பிற்க்கு   சென்றனர்.

 தாங்கள் ஆதாரத்தை தேடி   சொல்லும்போது அந்த ஆதாரத்தை எடுக்க அங்கு உள்ளவர்கள் ஏதாவது தடை செய்தாலோ, அந்த  ஆதாரத்தை அவர் எடுத்தால் என்ன செய்வது என்று யோசித்த சீதா,  ஷிப்பில் உள்ள அனைவரையும் அசெம்பிளி ஹாலுக்கு  அனைவரையும் வரச் சொன்னவள்.

 ஷிப்புக்கு வந்து சேர்ந்தாள்.

 அனைவரையும் பார்த்து “ஒரு  மணி நேரம் இங்கேயே  இருங்க நான் வந்து என்ன செய்யணும் சொல்கிறேன்” என்றவள்.. அந்த அசெம்பிளி ஹாலின் கதவை பூட்டிவிட்டு சிவாவை ‘இங்கு பார்த்துக் கொள்” என்று சொல்லிவிட்டு ஆதாரத்தை தேடிச் சென்றார்கள்.

 சீதாவுக்கு கண்ணை கட்டி காட்டிவிட்டது போல் இருந்தது இரண்டு மூணு அறையை சுற்றிப் பார்த்தால் அதில் என்னென்ன ஒரே மாதிரி இருக்கிறது என்று..

 பல பொருட்கள் ஒரே மாதிரி தான் இருந்தது ஒரே கலர் கடிகாரம் ஒரே டிசைன்  ஜாடி, பெட், சிறிய வகை பேன்,  ரூம் வால் போட்டோ பின்பு இந்த கப்பலின் புகைபடம், அதில் ரவியின் கையெழுத்து போட்ட போட்டோ பிரேம் இருக்க.எல்லாமே இருந்தது ரவி சொல்லியதே மீண்டும் மீண்டும் யோசித்தாள், சீதா இது ஒரு பொருள் இது நம் கப்பலின் அடையாளம் என்று கூறியது ஞாபகம் வர..

ரவியின் ஆபிஸ் ரூம் சென்று பார்த்தாள் சீதா.

அங்கே அனைத்து ரூம்பில் இருந்தது போல் ஒன்றுமில்லை கப்பலில் போட்டோ பிரேம் மட்டுமே  இருக்க.

 ரவி சொன்னது இதுவாக தான் இருக்குமோ என்றவள்..

அந்த போட்டோ பிரேம்மை  எடுத்து கீழே தூக்கி போட்டு உடைக்க.

அந்த போட்டோ பிரேம்மில்  உள்ளே சிறிய வகை கேரமா பட்டன் வடிவில் இருக்க.

அப்போ ரவி எல்லா ரூமிபிலும் கேமரா வைத்துள்ளான் என்று சீதாவுக்கு தெரிந்தது.

இது தவறு தான் என்று ரவிக்குமே தெரியும்,  சில தவிர்க்க முடியாத தவறுகள் நடந்தால் கண்டு பிடிக்கவே அவன் இந்த ஏற்பாட்டை செய்திருந்தான்,  இன்று அவனுக்கே இது உதவும் என்று தெரியாது.

உடனே அனைத்து செக்குருட்டியையும் அழைத்த சீதா, “எல்லா ரூம்கலில் உள்ள  கப்பல் லோக போட்டோ பிரேம் களை எடுத்து வாருங்கள்” என்று சொன்னாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!