Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 21

கொஞ்சம் தயங்கிய படியே தான் வீட்டிற்குள் நுழைந்தான் பரணி.

அவன் வீட்டிற்குள் செல்வதற்கே தயங்கி நிற்க வேண்டிய  வினோத சூழ்நிலையை எண்ணி மனம் நொந்தபடியே!

உள்ளே நுழைந்தவுடன், செக்யுரிட்டி செக்!

அதாவது, கனகுவின் என்குயரி!



Advertisement

“வாப்பா, பரணி, இப்ப தான் வர்றியா?”

“ஆமா ஆத்தா”, அடுத்து அவர் “ஜானு எங்கே?” என்று கேட்பதற்கு முன், அவன் அறைக்கு ஓடிவிட கால்கள் பரபரத்தன!

ஆனால், கனகு ஒன்றுமே கேட்காதது, அவனுக்கு ஒரே ஆச்சர்யம்!

Advertisement

அடுத்து அவன் ரூம் கதவைத் திறக்க முயன்றால், அது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது!

Advertisement

கதவைத் தட்டினான்.

கதவைத் தட்டியது தான் அவனுக்குத் தெரியும்!

கதவைத் திறந்து அவனை கண்ட  அடுத்த நொடி, வேகமாக முட்டிக் கொண்டு வந்த அழுகையுடன் அவனை இறுகக் கட்டிக் கொண்டாள் ஜான்வி!

Advertisement

“ஜான்வி.. நீ எப்படி இங்க? அதுவும் எனக்கு முன்னாடியே வந்து?” பரணி ஆச்சர்யப்பட்டு கொஞ்சம் சத்தமாகவே கேட்டான்.

கண்ணீரைத் துடைத்தவாறே, “ஷ். மெல்ல, பேசுங்க.. ஏன் இவ்வளவு சத்தமா?” ஜான்வி அறைக்கு வெளியே பார்த்துக் கொண்டு சொன்னாள்.

அவள் எதிர்பார்த்த மாதிரியே எதிர் ரூம் கதவு திறக்கப்படட்டு, நிகில் வெளியே வந்தான்!

“யார் ஜான்வி?” என்றவாறே!

“ம்ம்.. பரணி தான் நிகில், நீ போய் தூங்கு”, என்று வேகமாக சொன்னவள், பரணியையும் உள்ளே இழுத்துக்கொண்டு கதவை வேகமாக சார்த்தினாள்!

“ஏண்டி.. இவ்வளவு வேகமா?” பரணி கேட்டான்.

மனதிலும் கேள்வி!

இவன் எப்போ இங்க வந்தான்? எதுக்கு?

“ம்ம். கொஞ்சம் விட்டாலும் அந்த நிகில் இங்க உள்ளே வந்து மொக்கை போட ஆரம்பிச்சுடுவான்!

நானே இப்ப தான் ரொம்ப கஷ்டப்பட்டு, தூக்கமா வருதுன்னு சொல்லி துரத்தி விட்டுருக்கேன்!” என்றாள் ஜான்வி அலுப்பாக!

பரணிக்குள் உள்ளே சந்தோசமாக இருந்தது!

ஆனாலும் இவள் எப்படி தனக்கு முன்னமே இங்கு வந்தாள்? அதுவும் இந்த நிகிலோடு?

அதைப் புரிந்துக் கொண்டு ஜான்வியே சொன்னாள்.

“நீங்க இந்தூர்ல இருந்து கிளம்பி போனவுடன், இங்கே ஜானு அம்மாச்சிக்கு நெஞ்சு வலி வந்துட்டுதுன்னு போன்!

நான் உடனே அடுத்த பிளைட் பிடிச்சு இங்க வந்துட்டேன்.

பப்பா தான், ஜான்வி ரொம்ப அப்செட்டா இருக்கா, அவ தனியா ட்ராவல் பண்ண வேண்டாம், நீயும் துணைக்குப் போ என்று சொல்லி நிகிலையும் கூடவே அனுப்பி விட்டார்!

ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் சம்மந்தமா மீட்டிங்க்ஸ் எல்லாத்தையும்  கொஞ்ச நாள் போஸ்ட்போன் பண்ணிட்டாரு பப்பா! “

ஓ..!  பெத்த பொண்ணை அவ புருஷன்கிட்ட இருந்து காப்பாத்த ஆள் அனுப்புன ஒரே அப்பன் உன்னோட பப்பா தான் !

பரணியின் மனதில் ஒரே எரிச்சல்!

கூடவே அவள் ஒன்றும் பரணியைப் பிரிந்து இருக்க முடியாமல் ஒன்றும் இங்கே பறந்து வந்து விட வில்லை.

பாட்டிக்கு உடம்பு சரியில்லாததால் வந்திருக்கா, அதுவும் சீக்கிரமே திரும்பிப் போய் விடும் ப்ளானில்!

பரணிக்குள் அவனது நொந்து போயிருந்த மனசு, எல்லாவற்றையும் தப்பு தப்பாக  எண்ணத் தொடங்கி விட்டது!

கட்டிக் கொண்டிருந்த ஜான்வியை விலக்கி விட்டு, பாத்ரூம் நோக்கி சென்றான்.

அவன் வந்தவுடன் “நீங்க சாப்பிட்டுடிங்களா இல்ல, நான் எதுவும் கொண்டு வரட்டா?” என்றாள் ஜான்வி அவனின் சோர்ந்த முகத்தைக் கண்டு!

“சாப்பிடல, ஆனா எதுவும் வேணா இப்ப, ஒரு டம்ளர் பால் மட்டும் கொண்டு வா!”

“ம்ம்.” என்று சொல்லி ஜான்வி கீழே போய் பாலைக் கொண்டு வருமுன் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான் பரணி!

அவனை ஒன்றும் புரியாமல் பார்த்த ஜான்வி, அவன் பக்கத்தில் படுத்து, அவனைக் கட்டிக் கொண்டு அவளும் தூங்கி விட்டாள்.

அதுவரை தூங்கவது போல் நடித்துக் கொண்டிருந்த பரணி, அவளிடமிருந்து நகர்ந்து படுத்து தூங்கினான்!

ஒரு வேளை ஜான்விக்கு அவள் பப்பாவின் பிசினெசை பார்த்துக் கொள்ள ஆசை வந்து விட்டால், அவர் அமைத்து தரும் அந்த லக்சரியான நகர வாழ்க்கை  அவளுக்குப் பிடித்துப் போய் விட்டால்,  அவள் கண்டிப்பாக அந்த நிகிலை கல்யாணமும் செய்ய வேண்டி வரும்!

அப்போது அவளுக்கு இந்த பழைய வாழ்க்கைப் பற்றின சங்கடங்கள் எதுவும் இருக்க கூடாது என்று நினைத்து அவளிடம் இருந்து விலக எண்ணினான் பரணி!

ரொம்ப சரியாக, தப்பான ரூட்டில் சிந்தித்துக் கொண்டு!

தான் இப்படி யோசிப்பது சரியா தவறா? என்று அவனுள் ஒரே குழப்பம்!

“என் ஜான்வி, அவளை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றும்,

இல்லை, எந்த சூழ்நிலையிலும்  என் ஜானு என்னை விட்டு போக மாட்டாள்” என்ற நினைப்பும் உள்ளுக்குள் ரொம்பவும் உறுதியாக இருந்த போதும்,

ஜான்விக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கை, நல்ல பிரமாதமான எதிர்காலம்,

அவள் பப்பா சொன்னது போல, இந்த சிறிய கூட்டுக்குள் அடைத்து விடக் கூடாது என்ற எண்ணமும் மாறி மாறி அவனைக் குழப்பிக் கொண்டிருந்தது!

குழப்பத்தோடே அவனும் தூங்கினான்!

———–

“பரணி.. பரணி.. சீக்கிரம் வாங்க.. அய்யோ.. எனக்கு பயமா இருக்கு.. சீக்கிரம் வாங்க !” ஜான்வியின் பதட்டமான குரல் கேட்டு கண் விழித்தான் பரணி!

ஜான்வி எங்கே என்று  கண் விழித்துப் பார்த்தால், பாத்ரூமில் இருந்து தான் ஜான்வியின் பயந்த குரல்!

“என்னாச்சு ஜானு..”

“இங்கே. இங்கே ஒரு.. பெரிய தேள்…” அவள் பதறியபடி டவல் கட்டியிருந்த உடலோடு வெளியே வந்து அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்! பயத்தில் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது!

“தேளா.. இங்கயா.. இரு.. நான் பார்க்கிறேன்..” என்று சொல்லி உள்ளே போனவன் அங்கு கண்டது, ஒரு பெரிய சைஸ் நட்டுவாக்கிளி!

இது எப்படி இங்கே?

பாத்ரூம் மேலே இருந்த சரிவாக கண்ணாடிகள் பதிக்கப்பட்ட அந்த ஜன்னலைப் பார்த்தான்!

சரியாக அவன் ரூமை ஒட்டி ஒரு பழைய தென்னை மரம் உண்டு!

அதிலிருந்து ஜன்னல் வழியே வந்திருக்க வேண்டும் என்று கணித்தவன், அதை ஒரு கட்டையைக் கொண்டு அடித்துப் போட்டான்.

“செத்துப் போய்டுச்சு, நீ இப்ப போய் குளி!”

“அய்யோ நான் மாட்டேன்! நீங்க வந்து துணைக்கு நில்லுங்க!” அவனையும் உள்ளே அழைத்தாள்.

“ஏது.. நான் உள்ள வரணுமா?” சோதிக்கறாளே!

இதுவே முன்பு மாதிரி என்றால், “வித் ப்ளசர்!” என்றல்லவா ஓடி இருப்பான்!

இப்போது அவனே அவளை விட்டு தள்ளி இருக்க நினைக்கும் போது..

“ஏய். நான் எப்படி.. நீ போ..பயப்படாம போ..” பரணி தடுமாறினான்! அவன் கஷ்டம்  அவனுக்கு!

“ஏன், அன்னிக்கு பம்ப் செட்ல என் கூட குளிக்க வரேன்னு சொன்னீங்க, இப்ப என்ன?

நான் உங்க பொண்டாட்டி தானே பேய் இல்லையே?” ஜான்வியும் விடாப்பிடியாக பேசினாள்!

“போம்மா, வில்லேஜ்ல இருந்தா, இதெல்லாம் சகஜம் தான்! இது உனக்கு செட்டாகல”, என்றவன் , “செட்டாகாது” என்று மெதுவாக சொன்னான்!

“ஏதோ அதைப் பார்த்த பயத்துல கொஞ்சம் கத்திட்டேன், அதுக்கு எனக்கு வில்லேஜ் செட்டாகாதுன்னு எல்லாம் சொல்லாதீங்க” என்று முணுமுணுத்த படியே சொன்னவள்,

“நீங்க ஒண்ணும் உள்ள வர வேணாம், ஆனா நான் கதவைத் திறந்து வச்சுட்டு தான் குளிப்பேன்.

எனக்கு இன்னும் கொஞ்சம் பயமா தான் இருக்கு, நீங்க எங்கயும் வெளியே போய்டாதீங்க.” என்றவாறு குளிக்கப் போனாள்!

பரணி அப்படியே கட்டிலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தவன், பின் இனி இங்கு இருக்க முடியாது என்று நினைத்தவனாய், கதவை வெளியே பூட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டான்!

குளித்துக்கொண்டிருந்த ஜான்விக்கு என்னமோ தப்பாக பட்டது!

பரணி இப்படிப்பட்ட ஆள் இல்லையே! என்ன ஆச்சு இவனுக்கு!

அவள் பெரிய ரொமாண்டிக் பரணியை எதிர்பார்த்திருந்தாள்!

இந்த மாதிரி சூழ்நிலையில் சான்சோ, சாய்சோ கொடுத்தால், இரண்டையுமே எடுத்துக் கொள்கிற ஆள் அவளின் பரணி!

ஆனால், இன்று அவனது நடவடிக்கைகள் அவளுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தின!

குளித்து விட்டு வெளியே வந்தால், அவனை இங்கு காணோம்!

கதவைத் திறந்து வெளியே வரப் பார்த்தாள். வெளியே தாழ் போடப்பட்டிருந்தது தெரிந்தது!

கொஞ்சம் ஆச்சர்யப்பட்டவள், பரணியைப் போனில் அழைத்தாள்.

வந்து கதவைத் திறந்து விட்டான்.

சாரியைப் போர்த்திக்கொண்டு நின்றிருந்த அவள்,

“பரணி கொஞ்சம் இந்த பின்பக்க ஹூக்சை போட்டு விடுங்களேன்” என்று  போட முடியாத இரண்டு ப்ளவுஸ் ஹூக்ஸை காட்டினாள்!

“எது? இதெல்லாம் நான் போட்டு விடணுமா உனக்கு?”

“ஏன், நீங்க போடாம பின்னே நிகிலா போட்டு விடுவான்?”,

என்று ஒரு ப்ளோவில்.. ஒரு ரைமிங்கில் சொல்லி விட்ட ஜான்வியின் நாக்கில் சனியோ?

“ஓ.. கூப்பிடேன். அதுக்கு தான் அவனும் காத்துட்டு இருக்கான்! போ, போய் அவனையே கூப்பிட்டுக்கோ!” பரணியின் நாக்கிலும் அதே!

அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டாள் ஜான்வி!

என்ன வார்த்தை இது!

அவனை நோக்கி நெருப்புப் பார்வை ஒன்று பார்த்தவள், கோபமாக, வேறு உடைகளை எடுத்துக் கொண்டு பாத்ரூம் உள்ளே சென்று விட்டாள்!

பரணியும் வெளியே சென்று விட்டான்!

ரொம்ப நேரம் ஆகியும் ஜான்வியைக் காணாது, பாட்டிகள் இருவரும் அவள் அறைக்கு வந்தார்கள்.

“என்னாச்சு ஜானும்மா..” கனகு கேட்டவுடன்.

“அம்மாச்சி..” என்று கதறியபடி கனகுவின் மடியில் படுத்துக் கொண்டாள் ஜான்வி!

“என்னம்மா, பரணிக்கும் உனக்கும் சண்டையா, அது தான் அந்த பயல் மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு வெளியே போனானா?” என்றார் ஜகது.

கனகு ஜான்வியின் முகத்தை ஆழமாக ஊன்றிக் கவனித்தவர்,

“ஜகது. நீ போய் பரணி எங்க போனான்னு பாரு, நான் இங்க ஜானுவைப் பார்த்துக்கிறேன்” என்று  சொல்லி அனுப்பி விட்டார்!

“சொல்லு ஜானும்மா, என்ன பிரச்சினை உங்களுக்குள்ள?

நீயே ஒரு டாக்டர்! உனக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறேன், என்கிட்ட எதையும் மறைக்காம பேசுடாம்மா, அம்மாச்சிங்க  இருக்கோம் உனக்கு, சொல்லும்மா” என்று மீண்டும் அழுத்திக் கேட்கவும்,

ஜான்வி உடைந்து போய் அழுது விட்டாள்!

அழுதுக் கொண்டே பரணியின் நடவடிக்கைகள் பற்றியும் சொல்லியே விட்டாள்!

“என்னம்மா சொல்ற, அப்ப நீங்க இன்னும் உங்க வாழ்க்கையைத் தொடங்கவே இல்லையா?” கனகு அதிர்ந்து போய் விட்டார்!

எங்கேர்ந்துடா வருது பிரச்சினைகள் எங்க பேரப்பிள்ளைகளுக்கு தொல்லைக் கொடுக்கவென்று?

முன்னாடி அந்த ஜனனி தீபிகா, இப்போது யாரு?

கனகு மேலும் துருவித்துருவி அவளைக் கேட்டு, பரணி இந்தூர் போய் வந்த பிறகு, அதுவும் அவள் பப்பாவுடன் வெளியே சென்று வந்த பிறகு தான் இப்படி நடந்துக் கொள்கிறான் என்று அறிந்து கொண்டார்!

அப்போ, அங்க தான் என்னமோ நடந்துருக்கு? ஊர்மி சந்தேகப்பட்டது சரி தான்!

இந்த ஜகதீஸ் தான் ஏதோ தில்லாலங்கடி வேலை பண்ணி இருக்கணும்!

“டேய், ஜகதீஸ், இந்த கனகுவா, இல்ல நீயான்னு பார்த்துடலாம், நீ பெரிய டாக்டர், கோடீஸ்வரனா இருக்கலாம். ஆனா உனக்கே தெரியாம, எப்படி உன் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வச்சோம். அதும் நீயே வந்து அட்சதை போட்டு ஆசீர்வாதம் பண்ற அளவுக்கு!

எவ்வளவோ பண்ணிட்டோம், உன்னோட இந்த தில்லாங்கலடி வேலையைத் தடுக்க மாட்டோமோ என்ன?” கனகு மனதிற்குள் சங்கல்பம்!

அவர் நிகிலை கவனிக்க ஆரம்பித்தார்!

அவன் சதா நேரமும் ஜான்வி பரணிக்கு இடையில் வந்து வந்து போவதையும், அவர்களை தனியே இருக்க விடாமல் செய்து கொண்டிருப்பதையும் யாரும் அறியா வண்ணம் கண்டு கொண்டார்!

முதலில் இவனை இங்கிருந்து கிளப்ப வேண்டும்!

அடுத்த நாள் காலை.

“நிகில் தம்பி, நாளைக்கு நம்ம ஊர் திருவிழாவுக்கு காப்பு கட்டப் போறாங்க!

காப்பு கட்டும் போது இங்க இருக்கிறவங்க, திருவிழா முடியும் வரை எங்கயும் போகக் கூடாது.

நீங்க டாக்டர், உங்களுக்கு ஆயிரம் சோலி இருக்கும்.

நீங்க கிளம்பறதா இருந்தா இன்னிக்கே ஊருக்கு கிளம்பிடுங்க தம்பி, ஜான்விய அவங்கப்பா ஊருக்கு கொண்டு வந்து விட அவ புருஷன் பரணி இருக்கான்!

நீங்க ஏன் இப்படி சிரமப்பட்டு கிட்டு, இந்த கிராமத்தில் இருக்கணும்? மணிய கொண்டு வந்து ஏர்போர்ட்ல விட சொல்றேன்!” என்றவர்,

“டேய் மணி, டாக்டர் அய்யாவ கொண்டு போய் எர்போர்டல் பத்திரமா இறக்கி விட்டுட்டு வந்திடு.” என்றார் கனகு!

“இல்ல பாட்டிம்மா, எனக்கு ஒண்ணும் இதிலே கஷ்டமே இல்ல! நான் பார்த்துக்கிறேன்!” என்றான் நிகிலும் விடாப்பிடியாக.

“அடச்சே! என்ன ஜென்மமடா நீ? வீட்டை விட்டு கிளம்புன்னு சொன்ன பிறகு கூட இங்கேயே இருக்கேன்னு சொல்ற?” கனகுக்கு இவன் சாமான்யப் பட்டவன் இல்லையென்றே  தோன்றியது!

அடுத்த நாள், பரத்திடம் சொல்லி காப்பு கட்டும் சமயம் அவனை டவுனுக்கு செகண்ட் ஷோ சினிமாவுக்கு கூட்டி செல்ல சொன்னார் கனகு!

அப்படி ஊர் எல்லையை விட்டு இரவைக் கழித்து விட்டால், திருவிழா முடியும் வரை இருக்க வேண்டியது இல்லை என்பதால்!

ஆனால் அவனோ விடாக் கொண்டனாக இருந்தான்!

“நான் வரலை” என்று சொல்லி வீட்டிலேயே இருந்து கொண்டான்.

“ஆமா, உங்க ஊர்ல திருவிழாவில் ரெக்கார்ட் டான்ஸ் எல்லாம் உண்டா?’ என்ற கேள்வி வேறு!

யாரோ எதார்த்தமாய் சொல்லியிருக்கிறார்கள் போல, அதனால் கனகுவின் ஊர் எல்லையை தாண்ட வைக்கும் முயற்சி தோற்றுவிட்டது!

நிகில், ஜான்வியை கொஞ்ச நேரம் கூட தனியே விடுவதாக இல்லை! கூடவே ஒட்டிக் கொண்டு வந்தான் எல்லா இடத்திற்கும்!

அவனின் உண்மை நோக்கம் பற்றி தெரியாமலே கூட, ஜான்விக்கு எரிச்சலாக இருந்தது அவனின் இந்த நடவடிக்கையால்!

கல்யாணத்திற்கு முன்பு, அவள் சின்ன வயதில் இருந்தே அவள் அங்கே ஊருக்கு போகும் போதெல்லாம் கூட அவன் அப்படி தான்!

 ஊர்மி தான் அவனை வலுக்கட்டாயமாக அவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பாள்.

இல்லையென்றால் ஜான்வியை விட்டு கொஞ்சம் கூட நகராமல் காவல் இருப்பாள்!

அப்போது தான் அப்படி என்றால், இப்போது எனக்கும் பரணிக்கும் கொஞ்சம் கூட ப்ரைவசியே இல்லாமல் பண்ணுகிறான்!

ஏற்கனவே பரணி முரண்டுப் பிடித்துக் கொண்டிருக்கிறான்!

இதில் இவன் வேற இருக்கும் கொஞ்ச நஞ்ச சந்தர்ப்பங்களையும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்து கெடுத்து விடுகிறான் என்ற கடுப்பில் இருந்தாள் ஜான்வியும்!

திருவிழா பூஜையின் போது, கணவன் மனைவியாக பரணியும் ஜான்வியும் சேர்ந்து நிற்கும் போதெல்லாம் நிகில் முகம் கருத்துப் போவதை கனகு கவனித்தார்!

வேண்டுமென்றே இல்லாத சாங்கியங்கள் எல்லாம் சொல்லி, அவர்களை இன்னும் நெருங்க வைத்து, நிகிலை கவனித்தார் கனகு!

இவனோட ப்ளான் தான் என்ன? எப்படி தெரிந்து கொள்வது!

கனகு மூளையில் சின்ன ப்ளாஷ்!

“டேய்.. பரத்..” சத்தமாக அழைத்தார் கனகு.

“என்ன ஆத்தா?” என்றபடியே வந்தான் பரத். கூடவே நிகிலும் மணியும்.

“டேய், டாக்டர் தம்பி, நம்ம விருந்தாளி. நம்ம ஜானுவோட முக்கியமான சொந்தம்.

அவரை நல்ல கவனிச்சுகிட்டீங்களாடா? நீங்க பாட்டுக்கு திருவிழா ஜோர்ல அவர நல்லபடியா கவனிக்காம விட்டுடப் போறீங்க!”

“இல்ல ஆத்தா, நல்லா தான் கவனிச்சுக்கிறோம்!”

“நல்லா கவனிச்சுக்கிறேன் பேர்வழின்னு, நீ பாட்டுக்கு அந்த சுப்பிரமணி தோப்புக்கு கூட்டிட்டு போய்டாதீங்க! அங்க கள்ளு ஆறா ஓடிட்டு இருக்காம்!

நீ ஏதும் அவர அங்க கூட்டிட்டுப் போய்டாத! அப்படி ஏதும் போனீங்க, நம்ம மணி இருக்கான், எல்லாத்தையும் அவன் செல்லுல ரெக்கார்ட் பண்ணிடுவான்!” என்றார் அர்த்தமுள்ள பார்வை ஒன்றை பரத்தை நோக்கியும், மணியை நோக்கியும்!

நிகிலுக்கு தான் ஒன்றும் புரியவில்லை!

ஆனால் கனகுவின் பேச்சில் இருந்த குறிப்பை நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள் பரத்தும் மணியும்!

அதாகப்பட்டது, பரத் அந்த நிகிலுக்கு ஆர்கானிக் லிக்கர் என்று சொல்லி மூக்கு முட்ட கள்ளைக் குடிக்க வைத்து , அவன் வாயைக் கிளறி, அவன் சொல்லுவதை மணியின் போனில் ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்பதே கனகுவின் குறிப்பு!

குறிப்பறிந்து செயல்படுவதில் சமர்த்தர்கள் அவர்கள்!

 அவர்களும் நிகில் மேல் கடுப்பில் தான் இருந்தார்கள்!

பரத்தின் அம்மா வத்சலாவும் பரணியின் அம்மா தமிழரசியும் கூட அவர்களது அதிருப்தியை காட்டியிருந்தார்கள்.

தாமரையும் கூட எரிச்சலாக சொல்லியிருந்தாள்.

“டேய். பரத், யார்டா இவன்? என்னையும் ஒரு மாதிரி பார்க்கிறான், பாரதி, பவியையும் அதே மாதிரி பார்க்கிறான்!

மகிழினியை, செல்வி அக்காவைக் கூட அவன் தப்பாக பார்க்கிறான்!

இவனெல்லாம் ஒரு டாக்டர்! சும்மா ஜான்வி கூடவே ஒட்டிக்கிட்டே வரான்.

இவனை எப்படியாவது இங்க இருந்து கிளப்பு” என்றே சொல்லி இருந்தாள்!

கனகுவின் சொல்படி செய்து நிகிலை உளற வைத்து ரெக்கார்ட் செய்து கொண்டு வந்து போட்டுக் காட்டினார்கள்!

கூடுதல் இணைப்பாக பரணியின் உளறலையும்!

இல்லாத பழக்கமாக அவனும் குடித்திருந்தான் அவனுக்கு இருந்த மன உளைச்சலில்!

ரெண்டையும் போட்டுப் பார்த்து விட்ட கனகு திகைத்துப் போய் விட்டார்!

ஊர்மிக்கு போன் பறந்தது!

கனகுவோடு  ஊர்மியுடன் சேர்ந்து அடுத்த ஆபரேசனை, ஜகதீஸ்க்கு ஆப்பு வைக்கும் ஆபரேசனை திட்டமிட்டார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!