Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -14

அத்தியாயம் -14

“உன்ன எனக்கு ஒரு வருசமா தான் கதிர் தெரியும், அகில் அத்தான்ன எனக்கு நினைவு தெரிஞ்ச நல்ல இருந்து தெரியும், சின்ன வயசுல இருந்தே நானும் அவரும் ஒன்னாவே வளர்ந்தவங்க”.

அகில் அத்தான் பாவம் கதிர் சின்ன வயசுல இருந்து அவரு எவளோ கஷ்ட பட்டுருக்கார்ன்னு உனக்கு தெரியாது கதிர்.

 



Advertisement

அகில் அத்தானோட அப்பா துரை மாமா அடிக்கடி குடிச்சிட்டு வந்து ராஜி அத்தையை அகில் அத்தான் முன்னாடியே அசிங்கமா திட்டுவும் அடிக்கவும் செய்வாங்க. அத்தை வலி தாங்க முடியாம கத்துவாங்க அழுவாங்க. அகில் அத்தான் போய் மாமா கிட்ட “அடிக்காதிங்க பா அடிக்காதிங்க அம்மா பாவம் பா ” சொல்லி கெஞ்சுவங்க.

 

“நீ என்னடா உங்க அம்மா வா காப்பாத்த வந்துட்டய்யா பெரிய இவன் மாதிரி “இன்னும் நிறைய அசிங்கமான வார்த்தைல திட்டி அத்தானையும் சேர்த்து அடிப்பாங்க.

Advertisement

 

Advertisement

அம்மா அடிவாங்குறத பாக்கவும் முடியாம, காப்பாத்தவும் முடியமா அந்த சின்ன பையன் எவளோ அழுத்துருப்பான்.அகில் அத்தான் வளர வளர அவங்க அப்பா வா பார்த்தாலே நடுங்க ஆரம்பிச்சிரு வாரு, அந்த நடுக்கம் 16வயசு ஆகியும் மாறவே இல்ல.

 

என்னோட அப்பாவும், வள்ளி பாட்டியும் எவளோ சொன்னாங்க “துரை குடிகாரன் ராஜி அவனை நீ கல்யாணம் பண்ணிக்காத பின்னாடி நீ தான் கஷ்ட படுவ,வேண்டாம் மா இந்த மாப்பிளை நான் வேற மாப்பிளை பாக்குறேன் ராஜி ” என்றார் ராமசந்திரன்.

Advertisement

 

“எனக்கு இந்த மாப்பிளைய தான் அண்ணா பிடிச்சிக்கு, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவரை தான் பண்ணிப்பேன் ” என்றாள் ராஜி.

 

“ராமசந்திரா ராஜிக்கு அந்த துரை பையன தான் பிடிச்சிருக்குனா அவனையே கட்டி வச்சிருவோம்பா, அந்த பையனுக்கு சொத்துபத்து நிறைய இருக்கு.என்ன அப்போ அப்போ குடிக்குறான் கல்யாணத்து க்கு அப்பறம் நாம ராஜி அந்த பையன மாத்திருவா,என் பொண்ணு கெட்டிக்காரி ” என்றார் ராமசந்திரனின் தந்தை.

 

துரை ராஜியை அடிக்கும் போது எல்லாம் ராமசந்திரன் கூறிய “அவனை கல்யாணம் பண்ண ரொம்ப கஷ்ட படுவமா வேண்டாம் அவன் “என்ற வார்த்தைகள் தான் நியாபகம் வரும், அண்ணா சொன்ன வார்த்தையை கேட்கமா போய்டேனே .

 

துரை மாமா போதையில்ல இருக்கும் போது அத்தையும், அகில்லையும் அடிச்சிட்டு போதை தெளிஞ்சதும் அதுக்கு மருந்தும் போட்டு விடுவாரு. போதையில இருக்கும் போது நடந்த ஏதுவும் அவருக்கு அப்பறம் நியாபகம் இருக்காது.

 

ராஜி அத்தை கஷ்ட படுறதா பாத்துட்டு எங்க அப்பா போய் துரை கிட்ட சண்டை போடுவாங்க. மாமா அப்பாவையும் திட்டி அசிங்க படுத்திரு வாங்க. அப்பா அசிங்க படுறதா பாக்க முடியாம அத்தை அப்பா கிட்ட “இது என்னோட தலையெழுத்து அண்ணே, நீங்க அவளோ சொல்லியும் கேக்காம நான் இவரை கல்யாணம் பண்ணுனேல எனக்கு இது தேவை தான், இனிமேல் அவரு கிட்ட எனக்காக ஏதும் பேசாதீங்க அண்ணே “.என்றாள் ராஜி.

 

அகில் அத்தான் அடிக்கடி துரை மாமா கிட்ட அடிவாங்க கஷ்டப்பட்டு தான் இருந்தாங்க.எனக்கு 11வயசு இருக்கும் போது ராஜி அத்தை ஊருல திருவிழானு அங்க போயிருந்தேன்.

 

எல்லாரும் கோவிலுக்கு கிளம்பி போய்ட்டாங்க நான் மட்டும் தூக்கம் வருதுன்னு சொல்லி விட்டுலயே இருந்துட்டேன். நான் ஹால்ல படுத்து தூங்கிட்டு இருந்தப்போ அகில் அத்தான் ஓட அப்பா துரை மாமா வந்தாரு.

 

மாமா வந்து என்ன எழுப்பி என்கூட கொஞ்சம் வா பாப்பா சின்ன வேலை இருக்குனு கூப்புடாரு. மாமா பக்கத்துல வந்ததுமே ஒரு மாதிரி வாசம் வந்துச்சி. மாமா குடிச்சிருக்காருனு புரிஞ்சிக்கிட்டேன்.

 

நான் வரல மாமா எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு நான் மறுபடியும் தூங்க போனே,மாமா நான் வரலன்னு சொல்லியும் கேக்காம என் கைய பிடிச்சி வழுகட்டாயமா ரூம்க்குள்ள இழுத்துடு போனாங்க நான் விடுங்க மாமா கை வலிக்குது சொல்லி கெஞ்சுனே மாமா விடவே இல்ல.

 

மாமா ரூம்க்குள்ள கூட்டிடுப் போய் தள்ளி விட்டுட்டு ரூம் கதவை லாக் பண்ணிட்டு, அவரோட ஷர்ட் எல்லாம் கழட்டிடு என் பக்கத்துல வந்து என் டிரஸ்யும் கழட்ட பாத்தாங்க நான் விடுங்க மாமா விடுங்க மாமான்னு கத்துனேன் விட்டவே இல்ல, நான் மாமாவ தள்ளிடு அங்க இருந்து ஓட பார்த்தேன்.

 

மாமா என் முடிய பிடிச்சி இழுத்துடாங்க நான் பயத்துல பயங்கரமா காத்த ஆரம்பிச் சிட்டேன். நான் கத்துற சத்தம் கேட்டு. அகில் அத்தான் வந்து ரூம் கதவை தட்ட ஆரம்பிச்சாரு அப்போ கூட மாமா என்ன விடவே இல்ல.

 

மாமா முழு போதைல இருந்தனால கதவை சரியா லாக் பண்ணல அகில் அத்தான் ஓங்கி இடிச்சதும் கதவு திறந்துருச்சி.அகில் அத்தான் உள்ள வந்ததும் மாமா கிட்ட இருந்து என்ன பிடிச்சி இழுத்து ஒரு அம்மா கோழி எப்படி தான் குஞ்சுகளை காக்கா கிட்ட இருந்து காப்பாத்த தான் ரெக்கை குள்ள பொத்தி வச்சி காப்பாத்துமோ அப்படி என்ன அவரு முதுகுக்கு பின்னாடி வச்சிக்கிட்டு மாமா கை என் மேல படமா தடுத்தாறு.

 

அகில் அத்தான் மாமாவை பார்த்தாலே ரொம்ப பயப்புடு வாங்க,அப்படி இருந்தும் அன்னைக்கு எனக்காக மாமா வா எதிர்த்து நின்னாங்க.

“டேய் அகிலா நீ ஏன்டா உள்ள வந்த வெளிய போடா, அனு நீ இங்க வா ” என்று கூறி அனுவின் கையை பிடிக்க முயன்றார்

 

“அப்பா இப்படிலாம் பண்ணாதீங்க அப்பா, அனு பாவம் பா பயந்து போயிருக்க அவளை ஏதும் பண்ணிராதீங்க “

 

“எல்லாம் எனக்கு தெரியும் அவளை விட்டுட்டு நீ போடா வெளிய “என்று கூறி அகிலனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ஐந்து விரல்களும் அகில் கன்னத்தில் பதிந்து இருந்தது.

 

அப்பா வேண்டாம் அப்பா அனு பாவம் பா என்று கூறி கொண்டே இருந்தான் அகில். துரையும் விடாமல் அடித்து கொண்டே இருந்தார் ரத்தம் வரும் வரை இருந்தும் அகில் அனுவை விட்டு நகரவில்லை.

 

தொடர்ந்து அடி வாங்கி கொண்டிருந்த அகிலனுக்கு மயக்கம் வருவது போல இருக்க. எங்கே தான் மயங்கி விழுந்து விட்டாள். அப்பா அனுவை ஏதாவது செய்து விடுவாரோ என்ற பயத்தில் துரை அசந்த நேரத்தில் அவரை தள்ளி விட்டு விட்டு அனுவை இழுத்துக் கொண்டு வெளியே ஓடி விட்டான்.

 

தோட்டத்திற்கு அனுவை அழைத்து வந்துவிட்டான். அவன் முகம் கழுவி விட்டு, அவளையும் முகம் கழுவி தண்ணி குடிக்க செய்தான். குட்டிமா அழுக்காதடா அதான் அத்தான் வந்து உன்ன கூட்டிடு வந்துட்டேன்ல அழாதடா.

 

அத்தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு அத்தான். மாமா என் அப்படி பண்ணாரு,நான் அம்மா கிட்ட போறேன் என்ன கூட்டிடு போ என்றாள்.

 

“அனு வீட்டுல இன்னைக்கு நடந்த விஷயத்தைப் பத்தி நீ யாரு கிட்டையும் சொல்ல கூடாது மா”.

 

“எதுக்கு சொல்ல கூடாது நான் போய் எல்லார் கிட்டையும் சொல்லுவேன்”.

 

“அனு நீ போய் சொன்ன அவரை யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்கடா, குடிகாரன் ஏதோ போதைல பண்ணிட்டான்னு சொல்லி விட்டுரு வாங்க.ஆனா இந்த ஊருக்காரங்க உன்ன சும்மா விட மாட்டாங்கமா நடக்காத விஷயத்தை நடந்த மாதிரியே ஆளாளுக்கு பேசி அது தான் உண்மைன்னு புதுசா கதை கட்டி விட்டுருவாங்க”

 

“இந்த விஷயம் வெளியே தெரிஞ்ச அவருக்கு எந்த பாதிப்பும் இல்லடா.உன்ன தான்டா அசிங்கமா பேசுவாங்க”

“தப்பு பண்ணவனா விட பாதிக்க பட்ட பொண்ணு தான் அதிகமா அசிங்க படுறா அவமானம் படுறா,நான் சொல்லுறதுலாம் உனக்கு புரிஞ்சிருக்குமான்னு கூட எனக்கு தெரியலடா”.

 

“அனு என் மேல சத்தியம் பண்ணுடா இந்த விஷயத்தை யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்னு”.

 

” சரி அத்தான் நான் சொல்ல மாட்டேன் “

 

“ஒரு வேளை நீ யாரு கிட்டயாது சொன்ன எனக்கு ஏதாவது ஆகிரும்”.

 

“நான் யாரு கிட்டையும் சொல்ல மாட்டேன் அத்தான் ” என்று கூறி அகிலை கட்டிக் கொண்டு அழுதாள்.

 

அகிலன் கன்னம் வீங்கி இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று ராஜி கேட்டதற்கு. வழக்கம் போல அப்பா குடிச்சிட்டு வந்து அடிச்சிட்டாங்க என்று மட்டும் சொல்லி விட்டான்.

 

“அன்னைக்கு அகில் அத்தான் மட்டும் இல்லனா என் நிலைமை என்ன ஆகிருக்கும்” என்று கதிரவனிடம் கூறி அழுதாள் அனு.

 

“அந்த விசயம் நடந்து பத்து வருஷம் ஆக போகுது இன்னைக்கு வரைக்கும் அத்தான் யாரு கிட்டயும் அதை பத்தி சொன்னது இல்ல என்னையும் சொல்ல விட்டது இல்ல “.

 

ஒரு நாள் அகில் அத்தான் என்னையும் கீதா அண்ணி உக்கார வச்சி “உங்களுக்கு கல்யாணம் வயசு வரும் போது உங்க அம்மா அப்பா பார்த்து சொல்லுற பையன தான் கல்யாணம் pannikanum”

 

“ஒரு வேளை வேற யாரையாவது பிடிச்சிருந்தா அந்த பையன் கிட்ட பணம் இருக்க நல்லா வேலைல இருக்கானான்னு பாக்காதீங்க “

 

“நல்ல பையனா எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவான, நல்ல குணம் இருக்குற பையனனு பார்த்து ஆசை படுங்க “என்றான் அகில்.

 

“அண்ணா எனக்கு இப்போ தான் 14வயசு ஆகுது, அனுக்கு 12தான் ஆகுது இப்போவே எதுக்கு அண்ணா கல்யாணம் பத்தி பேசுற “என்றாள் கீதா.

 

“நானும், அம்மாவும் பட்ட கஷ்டத்தை நீங்க பட கூடாதுமா, நான் சொன்னதை நல்லா மனசுல பத்திய வச்சிக்கோங்க “என்றான் அகில் 

 

 எனக்கு அகில் அத்தான் கூட இருக்கும் போது என் அப்பா கூட இருக்குற மாதிரி பாதுகாப்பா பீல் பண்ணுவேன், நமக்கு ஏதாவது பிரச்சனைனா அத்தான் பாத்து பாருன்னு ஒரு தைரியம் இருக்கும். நான் அகில் அத்தான்ன ஒரு நல்லா நண்பனா தான் பாக்குறேன்”.

 

“அவரு மேல எனக்கு அன்பு மட்டும் தான் கதிர் இருக்கு காதல் இல்லை, இந்த இதயத்துல உனக்கு மட்டும் தான் கதிர் இடம் இருக்கு,இது எப்பவும் மாறாது”.

 

“எனக்கு உன் மேல வந்த பீலிங் அகில் அத்தான் மேல வந்தது. இல்ல வரவும் வராது. ப்ளீஸ் கதிர் புரிஞ்சிக்கோ”என்று கூறிவிட்டு அழுத்துக்கொண்டே பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினால் அங்கிருந்து.

 

கதிர் அனுவின் கையை பிடித்து இழுத்துக் இறுக்கமாக கட்டிக் கொண்டான்.அனுவும் கதிரை கட்டிக் கொண்டு அழுதாள்.

 

“சாரி செல்லம் சாரிடா இனிமேல் அந்த மாதிரி பேச மாட்டேன், நிஜமாவே அகில் கிரேட் தான் ரஞ்சு “.

 

“அந்த ஆளு துரை இப்போ எங்க ரஞ்சு இருக்கான் “

 

“அவரு இறந்து 5வருஷம் ஆச்சு கதிர், அன்னைக்கு என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தாருல அதுக்கு இரண்டு நாள் கழிச்சு குடிச்சிட்டு வண்டில போகும் போது அசிஸ்டன்ட் ஆகி ரெண்டு காலும் போயிருச்சு “

 

“அப்பறம் அஞ்சு வருஷம் படுத்த படுக்கையா இருந்து ஒரு நாள் போய் சேர்ந்துட்டாங்க “என்றாள் அனு.

 

“நல்ல வேளை போய் சேர்ந்துடான் இல்ல நானே கொன்னுருப்பேன் அவனை”என்றான் கதிர்.

 

“ப்ளீஸ் கதிர் இனிமேல் அவரை பத்தி பேச வேண்டாம் நாம சரியா “.

 

“ரஞ்சு அகில் சொன்னதால தான் நீ என் கிட்ட குடிக்க கூடாதுன்னு சொன்னாய “

 

“ஆமா கதிர், நீ குடிப்பழக்கத்தை விட்டதும் எப்படி மாதிரிட்ட பாத்தியா “

அனுவும், கதிரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.மூர்த்தி சார் சொன்ன விஷத்தை பற்றி அனுவிடம் கூற அனுவும் கதிரை புது ஆபிஸ் திறக்க சொன்னால்.  

 

 “புது ஆபிஸ்க்கு அப்போ இடம் பாக்கவா ரஞ்சு “

 

“எதுக்கு கதிர் புது இடம் பார்க்குற, இந்த குடோன் கூட நல்லா தானா இருக்குது. பேசாம இங்கையே ஆபிஸ் செட் பண்ணுருங்க”என்றாள் அனு.

 

“நீ சொல்லுற ஐடியா நல்லா தான் இருக்கு நான் அப்பா கிட்ட கேட்டுட்டு வேலைய ஆரம்பிக்கிறேன் “

 

“மாமு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்,20நாள் எனக்கு லீவு, லீவு முடிஞ்சதும் பாக்கலாம் சரியா “

 

“ரஞ்சு மா அம்மா அப்பா அக்காலாம் அடுத்த வாரம் வராங்க, இனிமேல் நாம கடைல வச்சி பேச முடியாதுடா ” என்றான் கதிர்.அனு சிரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!