Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -2

அத்தியாயம் – 2

                  லண்டனின் மெர்டன் மாநகரத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற கணினி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தால் அனு.அனு மிகுந்த அழகும் அறிவும் தைரியமும் பெற்ற அழகுப்பதுமை. ஜீன்ஸ் டிஷார்ட் அணிந்து, முதுகுவரை நீண்ட தலைமுடியை கலர் செய்து விரித்துவிட்டு மார்டன் மகாலட்சுமி ஆக இருந்தால்.

“அனு பிஸியா இருக்கியா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றால் ஸ்டெல்லா. என்ன விஷயம் சொல்லுமா

“உன்னோட ப்ராஜெக்ட் இந்த மாசம் கடைசில முடிஞ்சுரும் அதுக்கு அப்பறம் என்ன பண்ணப் போற” என்றாள் ஸ்டெல்லா.



Advertisement

“தெரியல ஸ்டெல்லா, இங்கையே வேலை செய்யவா இல்ல புது வேலை தேடவானு யோசிச்சுட்டு இருக்குறேன்”. என்றாள் அனு.

“அனு யோசிக்கலாம் நிறைய டைம் இல்லடி, உன்னோட விசா இன்னும் மூன்று மாசத்துல முடிய போகுது அதுக்குள்ள புது விசா வாங்கனும்”. என்றாள் ஸ்டெல்லா

“ஸ்டெல்லா இந்த கம்பெனிலையே தொடர்ந்து வேலை பாக்க சொல்லுறாங்க விசா அவங்களே வாங்கி தரேன்னு சொல்லிட்டாங்க, நான் தான் வேண்டாம்ணு சொல்லிட்டேன் “என்றாள் அனு.

Advertisement

“ஏன் அனு இங்க வேலை பாக்க பிடிக்கலையா “என்றாள் ஸ்டெல்லா.

Advertisement

“ஜான் என்கிட்ட ப்ரோபோஸ் பண்ணினனு சொன்னேல, ரெண்டு நாளைக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கலாம்ணு சொல்லுறான் “

” ஸ்டெல்லா ஜான் கிட்ட நான் பிரண்ட் தான் பழகுறேன் ஆனால் அவன்” என்று கூறி கொண்டே அழுதால் அனு.

“அனு அழாதடா, பேசாம நீ ஜான்ன கல்யாணம் பண்ணிக்கோ மா, இந்த நாட்டுல இதுலாம் சகஜம், ஜான் ரொம்ப நல்லவன் உங்கள நல்ல பார்த்துப்பான் “

Advertisement

“நீயும் எவளோ நாள் தான் தனியா இருப்ப, உனக்குன்னு ஒரு வாழ்க்கை துணை வேணுமா “என்றாள் ஸ்டெல்லா.

“போதும் ஸ்டெல்லா இதுக்கு மேல கல்யாணத்தை பத்தி பேசாத, அந்த வார்த்தையை கேட்டாலே உடம்புலாம் எரியுது “என்றாள் அனு.

“சாரி அனு, இனிமேல் ஜான் பத்தி பேச மாட்டேன். உனக்கு இங்க வேலை பாக்க பிடிக்கலைன்னா, பிட்டர் ஆபீஸ்லா ஜாய்ண்ட் பண்ணிக்கிறைய நான் அவரு கிட்ட பேசுறேன் “என்றாள் ஸ்டெல்லா

“இல்ல ஸ்டெல்லா வேண்டாம் ” என்றாள் அனு.

அனு பேசுவதை கேட்டு ஸ்டெல்லாவிற்கு கோவம் வந்துவிட்டது.

” அனு இன்னும் மூணு மாசத்துல நீ இந்த நாட்டுல இருந்து கிளம்பி ஆகணும். இரண்டு சின்ன பசங்களை வச்சிடு ஜெனிபர் அக்காவையும் கூட்டிடு எங்கடி போக போற “என்றாள் ஸ்டெல்லா கோவத்துடன் .

“ஒழுங்கா நான் சொல்லுறத கேளு அனு, உனக்கு இங்க வேலை பார்க்க பிடிக்கல, பிட்டர் ஓட கம்பெனியும் வேண்டாம் விடு, வேற கம்பெனிலா ஜாப் தேடலாம் இந்த நாட்டுல வேலைகா பஞ்சம்” என்றாள் ஸ்டெல்லா.

“ஸ்டெல்லா, ஜெனி அக்கா இந்தியா போகணுன்னு நினைக்குறாங்க, எனக்கும் அது தான் சரினு தோணுது”

“இந்தியால எங்க போக போற, அங்க போய் என்ன பண்ண போற, பேசாம மும்பைக்கு போயிருங்க அங்க ஒரு பிளாட் வாங்கி அங்கேயே இருந்துக்கோங்க”.

“நீ இதுக்கு முன்னாடி மும்பைல ஒர்க் பண்ண கம்பெனிலையே ஜாப் வாங்கித்தர சொல்லுறேன் பிட்டர் கிட்ட சரியா “என்றாள் ஸ்டெல்லா

“வேண்டாம் ஸ்டெல்லா ஏற்கனவே நீயும் பிட்டர் அண்ணாவும் எனக்கு நிறைய உதவி பண்ணிருக்கிங்க அதுவே போதும்மா “

” மும்பைல விட்டு வேலை பார்த்துகிட்டு,வந்தா சம்பளத்துல நானும் ஜெனி அக்காவும் ஆறுமாச கைக் குழந்தைகள் இரண்டு பேர வச்சிகிட்டு கஷ்டப்படுறத பார்த்து. நீயும் பிட்டர் அண்ணாவும் எங்கள இங்க கூட்டிடு வந்து எனக்கு வேலையும் வாங்கி தந்திங்க”.

“அது மட்டும் இல்லாம என்னோட சம்பளத்தை பங்குச்சந்தைல முதலீடு செஞ்சு இப்போ என்கிட்ட சொந்தமா வீடு, கார்,கோடிக்கணக்குல பணம் இருக்கு இது எல்லாத்துக்கும் நீயும் பிட்டர் அண்ணாவும் தான் காரணம் நீங்க செஞ்ச உதவிக்கு நான் என்ன கைமாறுசெய்ய போறேன்னே தெரியல”என்றாள் அனு.

“அனு என்னமா இப்படிலாம் பேசுற. நானும் பிட்டாரும் உன்னையும் ஜெனி அக்காவையும் எங்களோட குடும்பமா தான் பாக்குறோம். இனிமேல் உதவி அது இதுனு பேசாத ப்ளீஸ் “. என்றாள் ஸ்டெல்லா.

“சாரி ஸ்டெல்லா இனிமேல் இப்படி பேசல “.

“அனு இந்தியா போய் என்ன பண்ண போற தெளிவா சொல்லு “

“நான் தமிழ்நாடுக்கு போறேன் “

“தமிழ்நாடுக்கா,அங்க ஒன்னும் நீ போக வேண்டாம், வடஇந்தியால எங்க வேணுனாலும் போ, தமிழ்நாடு மட்டும் வேண்டாம் அனு ப்ளீஸ் “

“இங்க நீ வந்தா போ எந்த அளவுக்கு மனசாலையும், உடம்பலையும் காயப்பட்டு இருந்த மறந்துடைய “.

“மறக்கல ஸ்டெல்லா மறக்கவும் முடியாது.என்னோட காயங்களுக்காகவும் வலிக்காகவும் நான் ஜெனிஅக்கா ஓட சந்தோசத்தை கெடுக்க முடியாதுமா “.

” ஜெனிஅக்கா எனக்காக நிறைய உதவி பன்னிருக்காங்க, அவங்களுக்காக நான் ஏதாவது செய்யணுன்னு நினைக்குறேன், எனக்கு இந்தியா போக விருப்பம் இல்லதான் ஜெனி அக்காகாக போலாம்ணு நினைக்குறேன்”. என்றாள் அனு.

“ஜெனி அக்கா பாவம் ஸ்டெல்லா, இருபது வயசுலயே வீட்டை விட்டு ஓடி வந்து காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு மும்பைல அவங்க புருஷன் கூட ரெண்டு வருஷம் சந்தோசமா வாழ்ந்துருக்காங்க “.

“ரெண்டு பேரோட வீட்டுலயுமே சேர்த்துக்கல இவங்கள “.

“ஜெனி அக்கா புருஷன் வேலைக்கு போன இடத்துல ஒரு கார்ல அடிபட்டு அந்த இடத்துலயே இறந்துட்டாங்க, அவங்க புருஷன் இறந்துப்போன செய்தி கேட்டு, அதிர்ச்சில மூணுமாச கருவா இருந்த குழந்தை அவங்க வயித்துலயே கலைஞ்சிருச்சி”.

“ஒரே நாள்ல புருஷனையும் குழந்தையும் இழந்துட்டாங்க ஜெனி அக்கா”.

“இருபத்திமூணு வயசுலையே வாழ்க்கையை இழந்து தனியா இருந்தாங்க “

“நான் இருந்த ஆதரவாற்றோர் இல்லதுக்கு அடிக்கடி வருவாங்க அப்போ தான் அவங்கள எனக்கு தெரியும் “

” நிறைமாசமா இருந்த என்ன அவங்களோடவே கூட்டிடு போனாங்க, அவங்களுக்கு நான் எனக்கு அவங்கணு வாழ ஆரம்பிசோம்,ஜெனி அக்கா விட்டுவேலைக்குலாம் போய் சம்பாதிசா பணத்துல தான் எனக்கு பிரசவம் பாத்தாங்க “.

“பெத்தவங்கள மதிக்காம காதல் தான் முக்கியம், காதலன் தான் எல்லாம்ணு நினைச்சி வந்தா எங்களுக்கு கிடைச்சது தனிமை மட்டும் தான் “என்றாள் அனு விரக்தியுடன்.

“உங்களால எங்களோட வாழ்க்கையே மாறிடுச்சி ஸ்டெல்லா “

“இப்போ நான் ஜெனி அக்கா என்னோட பசங்க கவின் கிரீஷ் எல்லாரும் சந்தோசமா இருக்கோம், எங்களோட தேவைக்கு அதிகமாவே எங்க கிட்ட பணம் இருக்கு எல்லாத்துக்கும் நீயும் அண்ணாவும் தான் காரணம் ஸ்டெல்லா “என்றாள் அனு

“போதும் போதும் ரொம்ப ஓவரா பீல் பண்ணாத வலிக்குது அழுதுருவேன்” என்றாள் ஸ்டெல்லா சிரித்து கொண்டே.

“அனு நீ பீல் பண்ணுறேன்னுகிற என்ற பேருல ரொம்ப பிளேடு போடுற நான் கிளம்புறேன் நீ வேலைய பாரு “என்றாள் ஸ்டெல்லா.

 ” வேலையெல்லாம் முடிஞ்சதுடி நான் வீடுக்கு கிளம்பிட்டேன், இன்னைக்கு ஒரு மீட்டிங் மட்டும் தான் இருந்தது அதுவும் நீ வரதுக்கு முன்னாடியே முடிஞ்சது “என்றாள் அனு.

“ஸ்டெல்லா என்கூட வீட்டுக்கு வரையா இன்னைக்கு உனக்கு பிடிச்ச பிஷ் பிரை பண்ண போறேன்”.

“பிஷ் பிரையா, எனக்கும் வரணும்ணு ஆசையா தான் இருக்கு, பாவம் பிட்டாரும், லயாவும் தனியா சாப்பிடணுமே “

“பேசாம நீ அண்ணா லயா மூணு பெரும் நைட் டின்னர்க்கு வாங்க ரொம்ப நாள் ஆச்சுல எல்லாரும் ஒண்ணா சாப்பிட்டு “என்றாள் அனு

” சூப்பர் ஐடியா அனு, நாங்க டின்னர் க்கு அங்க வந்துறோம் சரியா நான் கிளம்புறேன் பாய் “என்றாள் ஸ்டெல்லா

அனு காரில் வீட்டுக்கு சென்றால், அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தாள் “கிரிஷ் நான் தான் கதவை திறப்பேன் நீ வராத போ” என்றான் பெரியவன் கவின்.

” நோ நோ கவி நான் தான் திறப்பேன் நீ போ “என்றான் சிறியவன் கிரிஷ்.

“ரெண்டு பெரும் தள்ளுங்க நானே கதவை திறக்குறேன் “என்று கூறிவிட்டு கதவை திறந்தார் ஜெனிபர்.

அனு உள்ளே வந்ததும் “அம்மா என்று கத்திக்கொண்டே ஓடி சென்று அவளை கட்டிக் கொண்டனர் ஒரே மாதிரி உருவம் கொண்ட இரட்டையர்கள் கவின் மட்டும் கிரிஷ்”.

“என் தங்கக்குட்டிங்க ரெண்டு பெரும் சேட்டை பண்ணாம குட் பாய்ஸ் இருந்திங்களா “என்றாள் அனு

“நான் குட் பாய் அம்மா, சேட்டை பண்ணல கிரிஷ் தான் என்னோட டாய்ஸ்லாம் ஒடச்சிட்டான் “என்றான் தான் மழலை மொழில் கவின்

“கவி தான் அம்மா என்ன அடிச்சான், நான் எதும் பண்ணலமா “என்றான் கிரிஷ்

கவின்,கிரிஷ் என்ற இரு ஆண் தேவதை களால் ஜெனி மட்டும் அனுவின் வாழ்க்கை உயிர்ப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறது.

இவர்களின் மகிழ்ச்சி நிலைக்குமா காலம் தான் பதில் கூற வேண்டும். 🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!