Skip to content
Post Views: 3,119
“ரித்து கண்ணா எப்படிடா இருக்க? உடம்பு இப்ப பரவாயில்லயா? ரொம்ப வலி இருக்காடா இன்னமும்? எப்போ டிஸ்சார்ஜ் பண்றதா சொல்றாங்க!
இங்க, நான் வந்த வேலை எல்லாம் முடிஞ்சுட்டுதுடா.
உன் வேலை தான் இன்னமும் முடியல. அந்த ஜப்பான் கம்பெனிக் காரனோட டீல் இன்னமும் முடிஞ்ச பாடில்ல. நான் டெல்டா டிஸ்ட்ரிக்ஸ் பூராவும் டிஸ்ட்ரிபியூஷன் பண்ண கேக்குறேன்.
அவன் இல்ல பிரிச்சு தான் கொடுப்பேன்னு சொல்றான்! டீல் இன்னமும் முடியல. பேசிட்டு இருக்கோம். அங்க எப்படிடா, உன்னால இன்னமும் தனியா மேனேஜ் பண்ண முடியுதுல்ல? ப்ராப்ளம் ஒன்னும் இல்லையே?” சஷி பாலா போனில் ரித்துவிடம் கேட்டார்.
Advertisement
“அதெல்லாம் எனக்கு ஒரு ப்ராப்லமும் இங்க இல்லம்மி, இன்னும் சொல்லப் போனா நான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்!” என்றான் குரலில் ரொம்பவும் உற்சாகத்துடன் ரித்து.
“ம்ம். தெரியுது.. தெரியுது. அய்யா ரொம்ப ஹாப்பியா இருக்கீங்கன்னு! ரொம்ப நாளுக்கப்புறம் உன்னோட குரல்லயே சந்தோசத்தைப் பாக்குறேன்டா கண்ணா! இத்தனை நாள் சந்தோசமா பேசுனா கூட, ஏதோ எனக்காக வர வச்சுகிட்ட சந்தோசம் போல தான் தெரியும் எனக்கு!
மம்மி ரொம்ப ஹாப்பிடா கண்ணா!” சஷி பாலாவின் குரல் கொஞ்சம் உடைந்தது!
Advertisement
“மம்மி, நீ இப்ப எதுக்கு இப்படி இமோசனல் ஆகுற? இனி உன் ரித்து எப்பவுமே இப்படி தான் இருக்க போறான்! நீ கவலையே படாதம்மி!
Advertisement
மம்மி அப்புறம் இன்னொரு விஷயம்! எனக்கு இப்ப கால் சரியாகிடுச்சு. கை தான் இன்னமும் கட்டு பிரிக்கல! மம்மி எனக்கு இப்படி ஹாஸ்பிட்டல் ரூம்ல அடைஞ்சு கிடக்கிறதுக்கு முடியல.
நான் இங்கேயே சேலத்துல என்னோட பிரன்ட் வீட்டுல தங்கிகிட்டு, அப்பப்போ செக்கப்க்கு மட்டும் வரலாம்னு இருக்கேன். ஹெல்ப்புக்கு மேல் நர்ஸ் ஒரு பையனை ஏற்பாடு செஞ்சுக்கறேன்!”
“நோ.நோ. அதெல்லாம் கூடாது. முழுசா சரியாகுற வரை நீ அவங்க கேர்ல தான் இருக்கணும்”.
Advertisement
“ம்மி. ப்ளீஸ் ம்மி..”
“அப்போ ஒண்ணு செய். நீ பானு ஆண்ட்டி வீட்டுல போய் தங்கிக்கோ. கூட ஹெல்ப்புக்கு மேல் நர்ஸ் வேண்டாம். அங்க அந்த ஹாஸ்பிட்டலில் யாரோ ஒரு நர்ஸ் உன்னை ரொம்ப நல்லா பார்த்துகிட்டாங்களாமே!
மனோஜ் சொன்னாப்ல.
அந்த பொண்ணையே முடிஞ்சா வர வச்சுக்கோ. பானுவுக்கும் ஹெல்ப் பண்ண மாதிரி இருக்கும். உன்னையும் கேர் பண்ணிட்ட மாதிரி இருக்கும். நீ பேசுறியா? இல்ல நானே பேசட்டுமா?”
“இல்ல.. இல்ல வேணாம்மி. நானே பேசிக்கிறேன். நீ எனக்கு வேற ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு. இங்க என்னோட பிரன்ட் ஒருத்தர்.
பேர் மனீஷ்ன்னு. அவரோட வொய்ப் ஒரு கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் நர்ஸ். அவங்களுக்கு ஒரு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வாங்கித் தரணும். உன்னோட இன்ப்ளுசன்சில்!”
“ட்ரான்ஸ்பரா? ம்ம். சரி.. நான் பேசுறேன். நீ அவங்க கிட்ட டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிக் கொடு”.
“சரிம்மி. பை.”
“பை டா செல்லம். டேக் கேர். நான் பானு கிட்ட பேசுறேன். நீ அங்க தான் தங்கணும். ஓகேயா?”
“டபுள் ஒகேம்மி” என்று சொல்லி வெற்றி சிரிப்புடன் போனை வைத்தான் ரித்து. சக்சஸ்புல் பிசினெஸ் வுமனின் வாரிசு! வழித்தோன்றல்!
அடுத்து அவன் பேசியது மனீஷ் மற்றும் மாலுவுடன்!
“நான் வீக் ஆப்ல தான் வந்திருக்கேன். நானும் அவரும் நேர்ல வந்து உங்கள பார்க்குறோம்” என்று சொல்லி அவனைக் காண வந்து விட்டனர், ரிதன்யா குட்டியையும் தூக்கிக் கொண்டு!
மானு இன்னமும் வந்திருக்க வில்லை! அவளுக்கு முன்னர் இவர்கள் வந்து விட்டனர்.
“சொல்லுங்க மச்சான். உங்க உடம்பு இப்ப எப்படி இருக்கு? பரவாயில்லையா?” என்றான் மனீஷ்.
“கால் சரியாகிடுச்சு. கையில் தான் இன்னும் கொஞ்சம் பெயின் அப்பப்போ வருது. இன்னமும் ஒரு வாரத்தில் சரியாகிடும்னு டாக்டர் சொல்றாங்க. மத்தபடி நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்!”
“ம்ம். அது உங்கள பார்த்தாவே தான் தெரியுதே! முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பல்ப் எரியுது! அதை பார்க்க எங்களுக்கும் சந்தோசம் தான்!”
“ம்ம். எல்லாம் என் குட்டிமாவின் எபெக்ட்! அப்புறம் நான் உங்க கிட்ட பேச நினைச்சது, சிஸ்டரோட ட்ரான்ஸ்பர் விசயமா!
என் மம்மிக்கு கொஞ்சம் பொலிடிக்கல் சைட் இன்ப்ளுயன்ஸ் உண்டு! உங்க ட்ரான்ஸ்பர் விசயமா மம்மி கிட்ட பேசினேன். உங்க டீடைல்ஸ் வாங்கி அனுப்ப சொன்னாங்க.
அப்புறம்.. கேக்கனும்னு நினைச்சேன். உங்களுக்கு சொந்த ஊரே சேலம் தானா?”
“இல்ல.. நான் நாகர்கோவில். இவ மாயவரம்! இவளுக்கு போஸ்டிங் போட்டது சேலத்தில்!
அதான் இங்க குடி வந்து விட்டோம். அப்புறம் மானுவுக்கும் இங்கேயே வேலை கிடைச்சுடுச்சா, அதான் இங்கயே கண்டினியு பண்ணிட்டு இருந்தோம்! இப்ப கொஞ்ச நாள் முன்னாடி இவளுக்கு கிருஷ்ணகிரிக்கு மாத்திட்டாங்க!”
“அப்போ உங்களுக்கு சேலத்தில் தான் இருக்கணும் எல்லாம் ஒண்ணும் இல்லையில்ல?”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. ஆனா மானுவுக்காக தான் இங்க இருக்கோம்! மானுவும் அவ அம்மாவும் தான் என் பொண்ணைப் பார்த்துகிறாங்க, நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போன பின்னே!
ரெண்டு பேருக்கும் உதவியா இருக்கட்டுமே தான் இந்த ஊர்ல இருக்கோம்”
“அப்ப நான் ஒன்னு பண்றேன். சிஷ்டருக்கு திருச்சிக்கே ட்ரான்ஸ்பர் ஏற்பாடு பண்ண சொல்றேன்.
ஏன்னா நான் குட்டிமாவை என் கூட கூட்டிட்டுப் போகணும். அவ அம்மாவோட!
நான் ஆரம்பிக்க போற பிசினெஸ் ஹெட் க்வாட்ரஸ் திருச்சி தான்!
அங்க எனக்கு ஒரு பிளாட் இருக்கு! நான் அங்க தான் குட்டிமாவோட இருக்கப் போறேன்! நீங்களும் எங்க கூட அங்க வந்திருங்க.
எப்போதும் போல ரித்து பாப்பா, குட்டிமா கேர்ல இருப்பா! நாம எல்லோருக்குமே இது தான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்”
“அது எப்படி ப்ரோ.. சரியா வரும்? நாங்க எப்படி உங்க வீட்டுல வந்து?” மாலு தயங்க.
“இத்தனை வருசமா என்னோட பொண்டாட்டியையும் மாமியாரையும் பார்த்துக் கிட்ட உங்களுக்கு நான் இது கூட செய்யலைன்னா எப்படி?”
“அதெல்லாம் சரி தான்! ஆனா வீடு வேணுமின்னா பக்கத்துல பாருங்களேன்!”
“அதெல்லாம் முடியாது. நீங்க வர்றீங்க. அவ்வளவு தான்! அது உங்க தங்கச்சி வீடு தான்! இன்பாக்ட் அந்த வீட்டை அவ பேருக்கு மாத்த தான், நான் அவளை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணியதே! அது ஒரு பெரிய பிளாஷ்பேக்!” என்று சொல்லி அப்போது நடந்ததை எதையும் மறைக்காமல் சொன்னான்!
“சான்சே இல்லங்க. மானு உங்க மேல வைச்சுருந்த நம்பிக்கை!” மாலு வியக்க,
“மச்சான் மட்டும் என்ன மாலும்மா, அவர் கூட இங்க என்னை, மானும்மாவை, ரித்துக் குட்டியை ஒண்ணா குடும்பமா பார்த்தும் கூட கொஞ்சம் கூட தப்பாவே நினைக்கல தெரியுமா?
நான் கூட அவர் எங்கள எதுவும் தப்பா நினைச்சுடக் கூடாதுன்னு தான் மானு என் குழந்தைக்கு அத்தைன்னு ஒரு ஹின்ட் கொடுத்துட்டுப் போனேன், ஆனா அது கூட தேவைப்படல தெரியுமா?”
“அட! நீங்க வேற, நான் ரித்துக் குட்டிய எனக்கும் குட்டிமாவுக்கும் பிறந்த பொண்ணா இருக்குமோன்னு கூட நினைச்சேன்” என்றான் கொஞ்சம் அசட்டு சிரிப்புடன் ரித்து.
“உம்..ம் இது என் பாப்பா, நீங்க வேணுமின்னா உங்க குட்டிமா கிட்ட சொல்லி வேற ஒரு பாப்பா பெத்துக்கங்க” என்று பொய்க் கோபத்துடன் அது வரை ரித்துவின் மடியில் இருந்த ரிதன்யா பாப்பாவை வேகமாக வாங்கிக் கொண்டாள் மாலு.
சிரித்துக்கொண்டே, “எங்க சிஸ்டர், என் பொண்டாட்டிய பிரிஞ்சு அஞ்சு வருஷம் ஆச்சு. ஆசையா ஒரு ஹக் கூட பண்ண முடியல இங்க. கேட்டா டுயுட்டில இருக்கேன், டுயுட்டில இருக்கேன்னு சொல்றா! ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று ரித்து புலம்பினான்.
“கொஞ்ச நாள் மச்சான். டிஸ்சார்ஜ் ஆற வரைக்கும். அப்புறம் உங்க பொண்டாட்டி ஆச்சு. நீங்களாச்சு”. என்றான் மனீஷ் சிரித்துக் கொண்டே!
“அதுக்கு தான் நான் ஒரு ஐடியா பண்ணி இருக்கேன். அவங்க பண்றத்துக்கு முன்னாடி நானே டிஸ்சார்ஜ் ஆகிட்டு, இங்க என் ஆண்ட்டி வீடு இருக்கு, அங்க அவளை தினமும் வர சொல்லலாம்னு இருக்கேன். கை சரியாகிடுச்சுன்னா உடனே கிளம்பிட வேண்டியது தான்!” என்று சொல்லி விட்டு அவன் மம்மி சொன்னதை சொன்னான்.
“அப்படி பண்ண முடியாது. இங்க ஹோம் நர்ஸா யாரையும் அனுப்ப மாட்டாங்க.
அதுக்குன்னு தனியே சர்வீஸ் ஏஜென்சி இருக்காங்க. அவங்க மூலமா ஏற்பாடு பண்ணலாம். ஆனா மானு வர முடியாது.
சீப் டாக்டர் அனுப்பவே மாட்டாங்க! அவங்க ஸ்பெசல் கேரில் இருக்கா மானு! அவ சேப்டிய ரொம்ப யோசிப்பாங்க” என்றான் மனீஷ்.
“அப்ப அவ வேலையை விடட்டும். எப்படியும் விட வேண்டியது தானே! காண்ட்ராக்ட் ப்ரேக் பண்ண பணம் கட்டணும்னா கூட கட்டிடலாம்.”
“அதுக்கு மானு ஒத்துக்க மாட்டா! அவளுக்கு அவங்க கிட்ட ரொம்ப நன்றியுணர்ச்சி வேற இருக்கு! மத்தபடி இந்த காண்ட்ராக்ட் எல்லாம் வெறும் பார்மாலிட்டி தான்!
நீங்க பேச வேண்டியது அவ கிட்ட தான்!”
வேறு சிலதும் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் இருவரும் விடைப்பற்று சென்றார்கள்!
பின் ரித்து டாக்டரிடம் முன்பாகவே டிஸ்சார்ஜ் ஆக ஏற்பாடு செய்து கொண்டான்.
அவனுக்கு பெரிதாக ஒன்றும் காம்ப்ளிகேசன்ஸ் இல்லை என்பதால் அவரும் ஒத்துக் கொண்டு ஒரு முறை ரிவ்யூ மட்டும் வந்து போக சொல்லி விட்டார்.
——
கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மானு.
அன்று அவளுக்கு செகன்ட் ஷிப்ட் என்பதால் முற்பகல் நேரம் தான் வந்தாள்.
ஏற்கனவே முதல் நாள் வார விடுமறை என்பதை சொல்லாமல் சென்று விட்டு அவனிடம் திட்டு வாங்கியிருக்கிறாள்!
இன்று அவளுக்கு செகன்ட் ஷிப்ட் என்பதையும் சொல்ல மறந்து விட்டிருந்தாள். நாளைக்கு வந்து விடுவேன் என்று சொல்லி சமாதானம் செய்தவள், இதை சொல்லியிருக்க வில்லை!
போச்சு. இன்னிக்கு அவ்வளவு தான் ருத்ர தாண்டவம் தான் ஆடப் போறான்!
காலையிலேயே வராமல், லேட்டாக வருவதால் அவனின் கோபத்தை சந்திக்க துணிவு இல்லாமல், முதலில் மனீஷ் மாலுவை அவனை சந்திக்க அனுப்பி விட்டு, அவன் கோபம் கொஞ்சம் தணிந்தவுடன் செல்ல முடிவெடுத்தே அவள் வந்திருந்தாள்!
கதவைத் திறந்து கொண்டு அவள் உள்ளே வந்தால்,
“வாங்க எம்.எம் மேடம்! லீவு எல்லாம் சந்தோசமா போச்சா?” என்று நக்கலாக சிரித்தபடி கேட்டான் ரித்து.
அவனை ஒரு பயப்பார்வை பார்த்தவளுக்கு ஆச்சர்யம்!
அவன் குரலில் கொஞ்சம் நக்கல் இருந்தாலும் கோபம் இல்லை! ரொம்ப உற்சாகமாக இருந்தான்!
அப்பாடா என்று பெருமூச்சு விட்ட படி, கதவை லாக் செய்து விட்டு உள்ளே வந்தவள், அவன் கேஸ் ஷீட்டைப் பார்த்து, அவனுக்கு போட வேண்டிய ஊசி மருந்தை எடுத்து சிரிஞ்சில் லோட் பண்ணிக் கொண்டு, அவன் கையில் இருந்த வென்ப்லானில் குத்தினாள்.
“சார் இன்னிக்கு ரொம்ப ஜாலி மூட்ல இருக்கீங்க போல?” குத்திக் கொண்டே கேட்டாள்.
“ஆமா, ரொம்ப ஹாப்பி!” சொன்ன அவனின் நன்றாக இருந்த கை அவளிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்தது!
“நோ. ரித்து. இப்படி பண்ணாதேன்னு சொல்லியிருக்கேன்ல! ஆமா.. யாரோ ஒரு பொண்ணு உன்னை இன்னிக்கு பாக்க வந்தாளா?”
“பொண்ணா? உன் பிரன்ட் மாலுவும் மனீஷ் மச்சானும் தான் வந்தாங்க”.
“இல்ல யாரோ ஒரு பொண்ணும் அவங்க அப்பாவும் வந்தாங்கன்னு ரிசப்ஸனில் சொன்னாங்களே! கையில் பொக்கே கூட இருந்துச்சாம்! என்று சொன்னவள், அருகில் இருந்த டேபிளில் இருந்த பொக்கேயை கண்டு விட்டு, இதோ பொக்கே கூட இங்க இருக்கே?” என்றாள் கொஞ்சம் கோபமாக!
“ஓ.. அதுவா.. அது மோனிக் குட்டி கொடுத்தது!”
“மோனிக் குட்டியா யார் அது?” அவள் குரலில் பொசசிவ்நெஸ் தன்னாலே யாரும் கேட்காமல் வந்தே விட்டது!
அவனை நேரில் பார்க்காமல் இருந்தவரை பெரிய தியாகி மாதிரி நினைத்து விலகி இருந்தவளுக்கு, இப்போது நேரில் காண ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
“உனக்கு நான் மட்டும் தானே குட்டிமா, வேற யாரையும் நீ அப்படி கூப்பிட மாட்டியே! அது தான் இது யாருன்னு கேட்டேன்” என்று உடனே சமாளித்துக் கொண்டு கேட்டாள்!
ஹை.. இப்ப தான் நம்ம பொண்டாட்டி பார்ம்க்கு வர்றா! உள்ளுக்குள் மகிழ்ந்தவன், கொஞ்சம் விளையாடலாமா என்று நினைத்தவன், பின் வேண்டாம், அப்புறம் விட்டு தருகிறேன் பேர்வழின்னு எங்காச்சும் மறுபடியும் கிளம்பிட்டா சிக்கல்! அதனால வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!
“எங்கம்மாவோட மேனேஜர் மனோஜ் அண்ணாவோட பொண்ணு! இங்க சேலத்தில் தான் பிடிஎஸ் படிக்கிறா!
நான் தான் படிக்க வைக்கிறேன் அவளை!
மனோஜ் அண்ணா ஹாஸ்பிட்டல் பில் கட்ட வந்திருந்தவரோடு அவளும் வந்து என்னை விசாரிச்சுட்டு போனா! சின்னப் பொண்ணுடி அவ மோனிஷா குட்டி!”
“ஓ”. என்றாள் மானு. அவன் கேஸ் சீட்டை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயல, “எங்க போறே”, என்று அவளை இடையுடன் சேர்த்து வளைத்துப் பிடித்தான் ரித்து.
“இப்ப தானே சொன்னேன். இப்படி பண்ணக் கூடாதுன்னு” அவள் கண்டிக்க,
“போடி.. அப்படி தான் பண்ணுவேன்! இந்த ரெஸ்ட்ரிக்சன் எல்லாம் இன்னியோட சரி! நான் நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகப் போறேன்!”
“என்ன?” அவள் அதிர்ச்சியாகி கேட்டாள்.
“ஆமா, டாக்டர் கிட்ட பேசிட்டேன். சரின்னு சொல்லிட்டார். ரிவ்யூ மட்டும் வர சொல்லியிருக்கார். வீட்டில் இருந்தே மெடிக்கேசன்ஸ் எடுத்துட்டா போதுமாம்!
அதனால இனி இப்படி கக்கூஸ்ல போய் கிஸ் பண்ணிக்க வேண்டாம்! இப்படியே பண்ணிக்கலாம்” என்றவன் அவளை முத்தமிட முயல, அவள் விலகிக் கொண்டாள்.
“உனக்கு கை இன்னும் சரியாகலையே ரித்து. வீட்டுக்கு போய்ட்டா யாரு உன்னைப் பார்த்துப்பா!” அவள் கவலையோடு கேட்க,
“வேற யாரு என் பொண்டாட்டி நீ தான்!“
“நானா? நான் எப்படி? நான் கும்பகோணம் எல்லாம் வர மாட்டேன்!”
“அங்க உன்னைக் கூட்டிட்டுப் போக நான் என்ன லூஸா? நாம இங்க தான் சேலத்துல தான் இருக்கப் போறோம். என் மம்மியோட பிரன்ட் பானு ஆண்ட்டி வீட்டுல!”
“நான் எப்படி வர முடியும்? எனக்கு இங்க டுயுட்டி இருக்கே!”
“புருஷனைப் பார்த்துக்கிற டுயுட்டி தான் ஒரு பொண்டாட்டி பர்ஸ்ட் கடமை! நீ வர்ற. அவ்வளவு தான்! மம்மியும் உன்னை தான் ஹோம் நர்ஸா கூட்டிட்டு வர சொல்லியிருக்காங்க!”
“இல்ல இங்க யாரையும் அப்படி அனுப்ப மாட்டாங்க சீப் டாக்டர்!”
“அப்ப வேலைய ரிசைன் பண்ணிட்டு வா!”
“அது எப்படி ரித்து முடியும்? நான் தான் அன்னிக்கே சொன்னேனே! காண்ட்ராக்ட் இருக்குன்னு!”
“அத எல்லாம் ஈசியா ப்ரேக் பண்ணிடலாம்! அதெல்லாம் ஒரு விசயமே இல்ல!”
“ரித்துக் குட்டி அழுவா!”
“அவளையும் வேணுமின்னா அங்க கூப்பிட்டுக்கோ! எனக்கு கை சரியாகுற வரைக்கும் தான் அந்த ஆண்ட்டி வீட்டில் இருக்கப் போறோம்!
அப்புறம் நீ, நான், உன் அம்மா , மனீஷ் குடும்பம் எல்லாம் திருச்சிக்கே போகப் போறோம்!”
“நீ ரொம்ப வேகமா பெரிய முடிவெல்லாம் எடுக்கிற ரித்து!”
“என்ன பெரிய முடிவு, இன்னும் உன்னை விட்டுட்டு எல்லாம் என்னால இருக்க முடியாது! கிளம்பு நீ..”
“இல்ல ரித்து அது கொஞ்சம் கஷ்டம்!”
“ஓ.. நான் சொல்ல சொல்ல மறுத்துப் பேசுற அளவு நீ பெரிய ஆளாகிட்ட இல்ல! உன் ரித்து சொன்னா கண்ணை மூடிட்டு செய்றவ நீ! நமக்கு கல்யாணம் ஆனது கூட உனக்கு தெரியல! போட சொன்ன இடத்தில் கண்ணை மூடிக் கொண்டு சைன் பண்ணின என்னோட குட்டிமா, நான் இவ்வளவு சொல்லியும் பிடிவாதமா வர மாட்டேங்கிற இல்ல. நீ வரவே வேண்டாம். நீ இங்கயே இருந்துட்டு, எந்த கவலையும் இல்லாம உன் சேவையைப் பண்ணிட்டு இரு! அடுத்த நைட்டிங்கேல் நீ தான் போ..” என்று அவன் கோபத்தோடு எழுந்தான்!
“நான் போறேன். இப்பவே போறேன். இந்த ஒத்த கையோட வண்டியோட்டிகிட்டுப் போய் எங்கயாச்சும் விழுந்து செத்து..” அவனை மேலும் சொல்ல விடாமல் அவன் உதட்டைக் கவ்விக் கொண்டு விட்டாள் மானு.
அவ்வளவு தான் ரித்துவின் கோபம் போன மாயம் தெரியவில்லை!
அவளோடு முத்தத்தில் ஒன்றியவன், பின் அவள் விலகியதும் கேட்டான்.
“என்னடி உன் உதடு இனிக்குது?”
“ம்ம். நீ செஞ்ச வேலையால் தான்! காயமா இருக்கு! அதான் கிளிசரின் போட்டுருக்கேன்!”
“அப்ப எல்லா பார்ட்ஸ்க்கும் மருந்து வாங்கி வச்சுக்கோ. தேவைப்படும்! “அவன் அவளை முழுவதுமாக ஒரு கணவன் பார்வை பார்த்து சொன்னான்!
அவள் முகம் சிவந்து, “ரித்து..” என்று பத்திரம் காட்டி விட்டு வெளியே சென்றாள்.
வெளியே சென்றவள் நேராக சீப் டாக்டர் அறைக்கு சென்றாள்.
கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வந்தவள்,
“நான் வரேன் ரித்து உன் கூட! ஆனா டே டைமில் மட்டும் தான் உன் கூட இருப்பேன். ராத்திரி ரித்துகுட்டிக்கு நானோ இல்ல மாலுவோ பக்கத்துல இருக்கணும்! காலையில் வந்துட்டு, ராத்திரி நான் கிளம்பிடுவேன்! ஓகேயா?”
“ம்ம். ஓகே.” என்றான் ரித்துவும்!
கேட்டுக்குள்ள முதல்ல வாடி பொண்டாட்டி. அப்புறம் உன்னை என் வழிக்கு கொண்டு வரேன் செல்லம்! என்று மனதுள் நினைத்துக் கொண்டான் குட்டிமாவின் கணவன்!
error: Content is protected !!