Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

ஜதி தரும் அமுதம் 2 1

 ஜதி தரும் அமுதம்

  அத்தியாயம் -2



Advertisement

Advertisement

Advertisement

  அந்த டெல்லியில் உள்ள   டான்ஸ் அகடாமியே  சத்தத்தால் அதிர்ந்தது.

சீனியர், ஜூனியர் டான்ஸ்  போட்டியாளர்களை     தனி, தனியே பிரித்து வேறு, வேறு  இடங்களில்  போட்டிகள்  நடைபெற்றுக்கொண்டிருந்தது..

Advertisement

ஒரு வாரம்  நடக்கும் இந்த டான்ஸ் போட்டி.

டான்சில் திறமை உள்ளவர் இதில் கலந்து கொள்ளலாம் ஜூனியர் பிரிவில் 6 வயதுக்கு மேல் இருந்து 14 வயது  வரை உள்ள பிள்ளைகள் கலந்து கொள்ளலாம்..

அந்த நடன  வயது பிரிவில் தான் யாழினிஸ்ரீயும், கம்யாஸ்ரீயும் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

இதில் குருப் கிடையாது,  டான்சில் தமக்கு  உள்ள தனி திறமையை வெளிபடுத்துவதே..

ஜூனியர் பிரிவில் 50 பிள்ளைகள் செலக்டாகி  இருந்தனர்,

ஐம்பது பிள்ளைகளுக்கும் தனி, தனியே இரண்டு நிமிடம் கொடுக்கப்படும். அவர்கள் ஆடி முடித்ததும், அவர்கள் அடுத்த கட்ட போட்டிக்கு  செலக்ட்டாகி விட்டார்களா, இல்லையா  என்று நடுவர்  தெரிவிப்பார்..

முதலாம் கட்ட டான்ஸ் முடிவில் 30 பிள்ளைகள் மட்டும் செலக்டாகி இருந்தனர். அதில் கம்யாஸ்ரீயும், யாழினிஸ்ரீயும் இருந்தார்கள்.

அடுத்த நாள் 30  பிள்ளைகளுக்கு போட்டி நடைபெறும். அதில் 3நிமிடம் நடனம் ஆட தரப்படும்.. அதில் ஆடி வெற்றி பெற்ற பிள்ளைகள் அடுத்த கட்ட நடன போட்டிக்கு தகுதி ஆனவர்கள்.. இப்படியாக நான்கு போட்டியில் வெற்றி பெற்ற  பிள்ளைகள், பைனல் போட்டியில் ஆடுவார்கள்.

பைனல் போட்டிக்கு  நான்கு  பிள்ளைகள் தேர்வாகினர், அதில் கம்யாஸ்ரீ, யாழினிஸ்ரீ  செலக்டாகி இருந்தனர்.

யாழினி முதலில் இருந்தே  பரதநாட்டியம் மட்டுமே ஆடினாள்.

அவளோடு தனி இசைகுழுவினரோடு  ஆடினாள், அதை பார்க்க, கேட்க மிக அருமையாக இருந்தது.

அனைவரும்  மியூசிக்  ஆடியோ ஒலி கேட்டு ஆடினார்கள். யாழினியின்  இந்த தனித்துவம் அனைவருக்கும் பிடித்திருந்தது.

இந்த டான்ஸ் சோவில் இந்தியா மாநிலத்தின் ட்ரெடிசினல் டான்ஸ் ஒன்லி  என்று தலைப்பு கொடுத்து இருக்க.

ஒவ்வொருவரும் அவர்கள்  ஊரின் பராம்பரியம் நடனம், இல்லை என்றால் அவர்களுக்கு  பிடித்த, கற்ற நடனத்தை ஆடலாம்..

யாழினி பரதம் ஆட.

கம்யாஸ்ரீ  பரதத்தோடு கதக் சேர்ந்து நடனம் ஆட. பார்ப்பதற்கு அவள் வேகமாக ஆடுவது போல் தெரியும்.

நாளை  இறுதி நடன போட்டிகளுக்காக   அனைவரும் கடுமையாக  நடனமாடி   தன்னை தயார் பண்ணிக்கொண்டு இருந்தனர்.

இங்கே கம்யாஸ்ரீயின் சித்தி அவளை கண்டபடி வீடியோ காலில் திட்டிக்கொண்டு இருந்தாள். “உன் பினிஸ்சிங் போஸ் சரியில்ல, கீழ குனிஞ்சு  ஆடுற, முகத்தில் சிரிப்புஇல்ல, கோபமா முகபாவனைக்கு உம்முனு  முகத்து வச்சு இருக்க,, நீயெல்லாம் ஒரு டான்ஸ்சரா” என்று அரைமணி நேரம் அவளின் குறைக்களை சுட்டிகாட்டா, “சரி சித்த அடுத்தது நல்லா ஆடி வீடியோ அனுப்புறேன்” என்று சொல்ல..

 “நீ வீடியோவை  டிவியில  கனெக்ட் பண்ணு , நான் ஆடிக்காட்டுறேன்”என்ற வைஷ்ணவி சொல்ல.. “சரி சித்தி” என்று தன் அம்மாவிடம் சொல்ல..

மகள்   ஆடுவதை டி.வியில்   உள்ள   வீடியோவை வைஷ்ணவிக்கு கனெக்ட் பண்ண..

வைஷ்ணவி அவள் அறையின் டிவியில் கம்யாஸ்ரீ ஆடுவதை கனெக்ட் பண்ணி ஆட சொல்ல..

கம்யாஸ்ரீயை  முதலில் ஆட சொன்ன வைஷு, அவள் ஆடிமுடித்தது. அவள் தவறுகளை இவள் ஆடி காட்டி சரிசெய்து மறுபடியும் ஆடா. இரவு நேரம் நீண்டு கொண்டே போனது.. சௌமி தங்கை வைஷுவிடம் போதும்டி மணி 12, ஆச்சு. காலையில பார்த்துக்கலாம் என்று கூற.

“நீ படு,  நாங்க ஆடுறோம்” என்று  அக்காவிடம் சொல்ல.

“போங்கடி”   என்று தங்கையையும்,  மகளையும் பார்த்து கூறிவிட்டு சோபாவில் படுத்துக்கொள்ள..

தன் அக்காவின் மகளை, தன் மகள் போல் நினைப்பவள் வைஷு., அவள் சரியாக ஆடும் வரை அவளை, விடவில்லை கையை கொஞ்சம் தூங்கி காட்டு, நல்லா நிமிர்ந்து எல்லாரையும் பாரு, சிரித்த மாதிரி  ஆடனும், என்று காலை 5 மணி ஆகிற்று இவர் ஆடி  சரி பார்த்து முடிக்க..

“வெறிகுட்  டா, நல்லா பண்ணு, போய் தூங்கு நைட்டு தானே டான்ஸ் சோ, நல்லா தூங்கி எழுந்துட்டு  மறுபடியும் ஒரு வாட்டி டான்ஸ் ஆடி எனக்கு  வீடியோ அனுப்பு பாய்டா குட்டி”.. என்று சொல்லி போனை கட் பண்ணி இருந்தாள் வைஷு..

தூங்கும் அம்மாவை பார்த்து விட்டு, கம்யாவும் தூங்கி எழுந்து ரெடி ஆனாள்..

இரவு 7மணிக்கு மேல் நடனபோட்டி தொடங்கியது..

இரவு ஒளியில் அந்த ஆடிட்டோரியம் மின்ன. நான்கு இறுதி போட்டியாளர்கள் தயராகி நிற்க.. போட்டி தொடங்கியது.. போட்டியாளர்களுக்கு  10  நிமிடம் தரப்படும் அதில் அவர்களின நடன திறமையை  காட்ட  வேண்டும்.

முதலில் கேரளாவை சேர்ந்த ஒரு குட்டி பெண்  பிள்ளை வந்து மேடையில்   மோகினி ஆட்டத்தை நடனத்தில் ஆடினாள்..

பாரம்பரியா வெண்மை நிற  பட்டுடுத்தி தலையில்  பெரிய கொண்டை போட்டு, அழகாக தன் கண்களை விறித்து ஆடினாள். கடைசியாக தன் கைகளில் தீபம் ஏற்றி முட்டி போட்ட படியே கஷ்டபட்டு  ஆடினாள்..

அனைவரும் அவள் ஆடி முடித்தது கைதட்டினார்கள்..

அடுத்ததாக  குஜராத்தை   சேர்ந்த  பையன்  தான்டீயா  நடனமும்,, கார்பா  என இரண்டு சேர்த்து ஆடினான்.. அவனின் பாட்டு  செலக்ஷன்   காதை பிளந்தது. அசைவுகள்  ஒவ்வொன்றும் படு வேகமாக  ஆட.. பத்து நிமிடம் ஆனதே தெரியவில்லை அவ்வளவு அழகாய் ஆடினான் அந்த பையன்..

அடுத்தது யாழினிஸ்ரீ  நடனம் ஆட மேடை ஏறினாள் அவள்  இசை குழுவினரோடு, அனைவரும் மேடை ஏறி அமர்ந்து கொள்ள.. மேடையின் முன்பு  அழகான  பெருமாள்  சிலை  வைத்திருக்க..

யாழினி ஆண்டாள் போல வேடம் உடை அணிந்து இருந்தாள்.. தலையில் ஆண்டாள் போல் கொண்டையிட்டு, கழுத்தில்  பூ மாலை அணிந்திருந்தாள்.

முதலில் இசை மீண்டி  ஜதி  சேர்த்து, மார்கழி திங்களை பற்றி பாடலுக்கு அவள் நடனமாட.. அடுத்தது  அவள் பெருமாளுக்காக  கட்டிய மாலையை அவளே கழுத்தில் அணிந்த அழகு பார்த்ததை. அவள் தந்தை பார்த்து விட, பயந்து போய் இருப்பது போல் நடன அசைவுகளில்  நடித்தவள்…

அவர் தந்தை இவளை திட்டுவதை போல்  நடித்தாள்..

அவர்  வேறு மாலையைகொண்டு வந்து பெருமாளுக்கு சூட்ட.  அது  அறுந்து,  கீழே வில. அடுத்த மாலையையும் பெருமாளுக்கு அவர் அணிவிக்க, அடுத்ததும் அறுந்து கீழே  வில,

என்ன ஆச்சரியம்  “நான் என்ன தவறு செய்தேன் இறைவா” என்று அவளின் தந்தை வருத்தப்படுவது போல் இவளே நடனம் ஆடி.. பின்பு   அழுவதை போல  யாழினி  நடனம் ஆட.. தன் கழுத்தில் இருந்த மாலையை  இறைவனுக்கு சூட்ட சொல்ல, அந்த மாலையை பெருமாள் ஏற்றுக்கொண்டவுடன்…

அந்த சந்தோஷத்தில் ஆனந்த நடனம்  ஆடினாள் யாழினி… அவள் இச்சிறுவயதில்  இத்தனை பாவத்தை முகத்தில் காட்டி ஆடிய நடனத்தை அனைவரும் ரசித்தனர்,  கடைசியாக யாழினி  தலை மேல் சிறிய பானை வைத்து, அதற்கு மேல் 101 விளக்குகள் ஏறியும் விளக்கை பானை மேல் வைத்து, பானையும் வில கூடாது விளக்கும் விலாமல் பேலன்ஸ் பண்ணி ஆடிய நடனத்தை பார்த்து அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

மகளின் ஆட்டத்தை நீயூயார்கிலிருந்து வீடியோ காலின் மூலம் பார்த்த விஜயேந்திரனுக்கு  உடல்  சிலிர்த்தது, தன் மகள்  நடனத்தில்  இத்தனை ஆர்வம் கொண்டுள்ளதை  பார்த்தவனுக்கு.  இவள்  தன் தாய் இந்திரா தேவியை மிஞ்சி விடுவாள் என்றே  தோன்றியது, அவனுக்கு நேரில் வந்து மகள்  ஆடுவதை பார்க்க முடியவில்லையே  என்று வருத்தப்பட்டவன்.

மகளுக்கு நிறைய பரிசு பொருள்களை  வாங்கிக்கொண்டு  இந்தியா செல்ல விமானம் ஏறினான்.

கடைசியாக கம்யாஸ்ரீ  மேடை ஏறினாள்.. வெண்நிற லாங் சுடி அணிந்து, வெண்கற்களான அணிகலங்கள்   அணிந்து இருந்தாள்.

மீயூசிக் ஒலிக்க ஆட தயார் ஆனாள். அவளின் பின்னாடி பெரிய திரையில் அவள் நடனமாடும்  நடனத்தை பற்றி  புகைப்படத்துடன் எந்த மாநிலத்தை சேர்த்த நடனம் இது, அந்த நடனத்தில் பேர் புகைப்படத்துடன் வர.

கம்யாஸ்ரீ  அவளுக்கு நன்கு தெரிந்த  உத்திரபிரதேசத்தின் கதக் நடனத்தை ஒரு நிமிடம் கூட கேப்  விடாமல்  வேகமாக ஆட, அவளோடு சேர்ந்து அவள் ஊடையும் ஆடியது..

அடுத்த ஒரு நிமிடத்திற்கு கர்நாடகாவின்  புகழ் பெற்ற யாக்ஜன்கா  நடனத்தை  ஆங்ரோஷமாக  குதித்து  கொண்டு ஆடியவள்.

அடுத்த ஒரு நிமிடத்துக்கு அந்த  ஆங்ரோஷமான முகத்தை மாற்றி.

ஆசாம் மாநிலத்தின் பிகு நடனத்தை சிரித்துக்கொண்டே மெல்ல உடல்  அசைந்து என்ஜாய் பண்ணிக்கொண்டே  ஆடினாள்.

அடுத்து ஒருநிமிடம் மஹாராஷ்டிரா லவாங்கி  நடனத்தை அதிவேகமாக, கைகால்களை சுழட்டி நடனமாட, பின்னாடி திரையில் இவள் ஆடும் ஒவ்வொரு நடனத்தின் பெயர்களும் போட்டோவுடன் வர.

அனைவரும் அசந்து போய், எத்தனை விதமான நடனத்தை இக்குழந்தை ஆடுகிறளே என்று வியப்பாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.

கம்யாஸ்ரீ  ஒவ்வொரு  நடனத்திற்க்கும் தன் முகபாவனை மாற்றி, மாற்றி ஆட.

பார்ப்பவர்களுக்கு  மிக சுவாரஸ்சியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது..

இவள் ஒவ்வொரு நடனத்தையும் மாற்றி ஆடும் போது பார்ப்பவர்கள்.

“ஓ… வாவ்…. சூப்பர்”  என்று கமெண்ட் சொல்லிக்கொண்டே  நடனத்தை ரசிக்க.

அடுத்தது ராஜஸ்தானின் கல்பெல்லியா  நடனத்தில் தலைக்கு மேல்  மூன்று பானைகள் வைத்து ஆடுவார்கள். அதே போலவே கம்யாஸ்ரீயும்  தலைக்கு மேல் மூன்று  பெரிய பானைகளை வைத்து , கால்களை ஒரு பெரிய தாம்புள  தட்டில் மேல் வைத்து. அந்த தட்டை  நகட்டிக்கொண்டே, பானை கீழே விழாதவாறு கம்யா பேலன்ஸ் பண்ணி கைகளை மட்டும் அசைந்து   நடனம் ஆட..

அனைவரும் எழுந்து நின்று கம்யாஸ்ரீ கஷ்டபட்டு  ஆடுவதை பார்த்து   விசில்அடித்து,  கைதட்டிக்கொண்டே அவள் நடனம்   ஆடவதை  பார்த்து ரசிக்க இரண்டு நிமிடம் அந்த நடனத்தை ஆடி முடித்தவள், அடுத்தது  கேரளா மாநிலத்தின்  மோகினி நடனத்தை  தன்  கண் விழியையும், கழுத்தையும்  அசைத்து, தலையாட்டி,    அபிநயம் பிடித்து  நடனம் ஆடியவள்,.

அடுத்தது  குஷராத்தின் பாரம்பரிய  கார்பா  நடனத்தை  அவள்  பெரியதாக  அணிந்திருந்த,  சுடிதாரின் டாப்பை தன்  ஒரு கையாள்  தூக்கிய படியே   சுழண்டு, சுழண்டு, அந்த பாட்டுக்கு ஏற்ப மேடை முழுவதும் சுற்றி கொண்டே  நடனம் ஆட..

கைதட்டல் காதை பிழந்தது.

கீழே நின்றுருந்து சௌமியா தன் மகள் நடனத்தில்  எந்த ஒரு சிறு மிஸ்டேக்கையும்  செய்யக்கூடாது  என்பதற்காக “1,2,3,4” என்று அடுத்து, அடுத்து வரும் நடனத்தை விரல் கொண்டு சொல்லிக்கொடுக்க.

 வைஷு வீடியோ  காலில் மூலம்  கம்யாஸ்ரீ ஆடுவதை  பார்த்திருந்தாள்..

கம்யாஸ்ரீ  கடைசி 3 ன்று நிமிடம் சிவனின் ருத்ர தாண்டவம் ஆட..

அனைவரும் கைதட்டலை நிறுத்திவிட்டனர்.. சிவன் ருத்ர தாண்டவ பாடல் கேட்டு அனைவருக்கும்  மெய் சிலிர்த்தது.

அதுவும் அக்குட்டி பெண் கையில் உடுக்கை வைத்து கொண்டு ஆடும் தாண்டவத்தை பார்த்தவர். எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே கம்யாஸ்ரீ  ஆடுவதை பார்த்திருந்தனர்.

அவளின் பின் திரையில் சிவன் ருத்ர தாண்டவம் ஆடும் புகைப்படங்கள்  அனைத்தும்  ஒலிப்பரப்பாக..

இவள்  சிவனின் கோபமுக  பாவனையோடு ருத்ர தாண்டவத்தை தன் முகத்தில் காண்பித்து,  அந்த ஒலிக்கேற்ப  வெறி கொண்டவள் போல சிவ தாண்டவம்  3  நிமிடம் விடாமல் ஆடி முடித்தவள், கடைசியாக ஒரு பானையின் மேல்  ஒரு காலை தூக்கி  நின்று நடராஜர்  போல போஸ் கொடுக்க, இவ்வளவு நேரம் அவள் ஆடவதை கண்யிமைக்காமல் பார்த்திருந்தவர், கைதட்டி, விசில் அடித்து தங்கள் ஆதரவை அவளுக்கு தெரிவிக்க..

அனைவரும்  இவளுக்கு 10  வயது தானா என்று ஆச்சரியமாக பார்த்தனர்.

கம்யா பானை  மீது  இருந்து இறங்கியவள் கைதட்டும் அனைவரையும் பார்த்து கைகூப்பி  தலைவணங்கி நன்றி சொன்னவள்..மெல்ல நடந்து வந்து  மேடையின் ஓரம்  கால் வலியால் அமர்ந்து விட..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!