Skip to content
Post Views: 2,652
மகளின் நடனத்தை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த, சௌமியா மகள் அமரவும் ஓடி வந்து மகளை தூக்கியவள் ஒரு சேரில் அமரவைத்து , குடிக்க சூஸ்கொடுத்தவள்.. அவள் தலையை தடவி விட்டு “நல்லா ஆடுனடா” என்றவள்.
மகளின் கால் கீழே முட்டி போட்டு அமர்ந்து, அவளின் காலை பார்க்க அது நன்றாகவே வீங்கி போய் இருக்க..
Advertisement
மகளை பார்த்து “ஏண்டி…இப்படி உன்னை வருத்திகிட்டு ஆடனுமா”?..
“எதுவுமே கஷ்டபடமா கிடைக்காது, ஹார்ட் வெர்க் பண்ணணுமுன்னு சித்தி சொல்லி இருக்காங்கம்மா, பாத்தியா எவ்வளவு பேர் என் டான்ஸை பார்த்து விடமா ரொம்ப நேரம் கைதட்டுனாங்க”.. என்று சந்தோஷப்பட்ட.
Advertisement
Advertisement
மகளின் கால்லை பிடித்துவிட்டுக்கொண்டே “ரொம்ப நல்லா ஆடுன, கண்டிப்பா உனக்கு ஏதாவது பரிசு உனக்கு கிடைக்கும்’..
“ஐயோ மறந்தே போயிட்டே” என்றவள்.”மா சித்திக்கு போன் போடு”..
Advertisement
“சித்தி இவ்வளவு நேரம் உன் டான்ஸை பாத்தாடி, இரு போன் போடுறேன்” என்றவள்..
தன் தங்கைக்கு போன் பண்ணி மகளிடம் கொடுக்க.
வைஷு போனை எடுத்ததும்..
“சித்தா நான் எப்படி ஆடினேன்” என்ற அக்காவின் மகளை கண்ணீரோடு பார்த்தவள்,,.
போனில் தெரிந்த கம்யாவின் முகத்துக்கு முத்தம் வைத்தவள்.
“சூப்பர்டா, வாழ்த்துக்கள், அப்பறம் பேசுறேன், பரிசு வாங்கிட்டு சித்திக்கு போட்டோ அனுப்பு”.. என்று கூற.
“சரி சித்தி” என்று போனை வைத்தாள்..
நிறைய பேர் கம்யாவிடம் வந்து “நல்லா ஆடுன” என்று கைகொடுக்க.. அனைவரும் கைகொடுத்து சிரித்த முகமாக நன்றி சொன்னவள்.
தன் அம்மாவை பார்த்து “டாடி வரலயே” என்று ஏக்கமாக கேட்ட மகளை பார்த்தவள்.. “இரு” என்று யாரையோ தேடிய படியே சௌமியா இருக்க..
தேடியவர் கண்ணீல் பட்டதும். “அதோ பாரு, உன் டாடி” என்று ராகேஷ் வருவதை காண்பிக்க..
ராகேஷ் மகளை பார்க்க ஆசையோடு அருகில் வர.. தன் டாடி வந்த சந்தோஷத்தில் “டாடி…” என்று கத்தியபடியே ராகேஷிடம் வர..
மகளை தூக்கி சுற்றியவன்.. “டாடி நீ சொன்ன மாதிரி வந்துட்டேன்”..
“தாங்யூ டாடி”, என்றவள் “என் டான்ஸை பாத்தீங்களா”?..
“பாத்தேன் டா, ரொம்ப நல்லா ஆடுன,, கூட்டமா இருந்ததால டாடி கிட்ட வரமுடியல”.. என்று இருவரும் பேசிக்கொண்டிருப்பதை..
யாழினி ஏக்கமாக பார்த்திருந்தாள்.
என் டாடியும் வந்திருந்தால் , என்னை இப்படி தூக்கி சுற்றி முத்தமிட்டு பாராட்டி இருப்பார். இப்படி வராமல் இருந்து விட்டாரே என்றவள்.
சஞ்சனாவை பார்த்து “நானா வருவார, இல்லையா”..
யாழினியின் வருந்த மான முகத்தை பார்த்த சஞ்சனா.. “நானா இங்கே வர டிக்கெட் எல்லாம் புக் பண்ணி வச்சு இருந்தார் பேபி, அங்கே வெதர் சரியில்லை பேபி, அதான் வீ, பி சார் வரல”..
“போங்க இப்படியே ஏதாவது சாக்கு சொல்லுங்க”.என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தவள்..
“வாங்க நம்ம ரூம்புக்கு போகலாம்”.. என்று கிளம்ப..
“பரிசு வாங்கிட்டு போகலாம், யாழினி” என்று சஞ்சனா கூற.
“கண்டிப்பா எனக்கு முதல் பரிசு கிடைக்காது, அது அந்த கம்யாவுக்குதான், அந்த குஜாராத் பையனும் நல்லா ஆடினான், அப்போ எனக்கு இரண்டாவது பரிசு கிடைக்க வாய்ப்பு இல்ல, வாங்க”.. என்றவளை..
“கண்டிப்பா உனக்கு செகெண்ட் பரிசு கிடைக்கும், எனக்கு நம்பிக்கை இருக்கு.. உங்கார் யாழினி” என்று அவளை சமாதானம் பண்ணி அமர வைத்து இருந்தாள் சஞ்சனா.
மேடையில் நடன போட்டிக்கான தீர்ப்பு அறிவித்துக்
கொண்டிருந்தனர்..
மூன்றாவது பரிசு குஜராத்தை சேர்த்த பையனுக்கு வழங்கப்பட்டது..
யாழினிக்கு இரண்டாம் பரிசும் கோப்பை,மெடல், பரிசு தொகை என அனைத்தும் வழக்கப்பட்டது..
சிரித்த முகத்துடன் சென்று வாங்கிக்கொண்டு வந்தாள் யாழினி..
முதல் பரிசு கம்யாஸ்ரீக்கு வழங்கப்பட்டது. ஆல் இந்தியா ஜுனியர் சாம்பியன் கோப்பையை கையில் வைத்து சிரித்த முகமாக தன் பெற்றோருடன் பரிசு வாங்கிக்கொண்டு மேடையில் நின்று இருந்த கம்யாஸ்ரீயை, கீழிருந்த பார்த்த யாழினி அடுத்த வருடம் கண்டிப்பாக நான் இந்த கோப்பையை வாங்குவேன்,. என்று நினைத்திருக்க..
கம்யாஸ்ரீயிடம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிக்கொண்டிருப்பவர்.. சில கேள்விகள் அவளிடம் கேட்டுக்கொண்டிருக்க.
அவளின் டான்ஸ் மாஸ்டர் யார் என்றதற்கு,, “என் சித்தி வைஷ்ணவி தேவி, பெஸ்ட் டான்சர்” என்றாள்..
“உங்க சித்தி இங்கே வந்து இருக்காங்களா?”..
“இல்லை” என்றவள், “அவங்க ஸ்ரீரங்கபட்டிணத்துல இருக்காங்க, இங்கே எல்லாம் வர மாட்டாங்க”..
“வாழ்த்துக்கள் உனக்கும், உன் சித்திக்கும்” என்று சொல்லி. அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள…
கம்யாஸ்ரீ வெற்றி கோப்பையோடு, தன் தாய், தந்தையோடு சென்னை செல்ல.
யாழினிஸ்ரீ ஐதராபாத் வந்து சேர்ந்தாள்.
இந்திரா தேவி தன் பேத்தியை ஆரத்தி எடுத்தே வீட்டினுள்ளே விட்டார்..
உள்ளே வந்ததும், தன் அம்மம்மா கையில் அவள் பரிசு பெற்றதை கொடுத்துவிட்டு அவர் காலில் விழுந்து வணங்கியவள், அவள் ரூம் சென்று விட.
சஞ்சனாவிடம் ‘ஏன் யாழினி டல்லா இருக்கா” என்று கேட்டார் இந்திரா தேவி.
“வீ. பி சார், யாழினி மேம் டான்ஸ் பாக்க வரலன்னு கோபம்”…
“ஓ…” என்றவர்.
“சரி நீ கிளம்பு”..
“ஓகே மேம்”.. என்று சஞ்சனா அவள் வீட்டிற்கு கிளம்பிவிட..
இரவு உணவை எடுத்துக்கொண்டு பேத்தியின் அறைக்கு சென்றார் இந்திரா தேவி..
சோர்ந்து போய் படுத்திருந்த யாழினியை பார்த்தவருக்கு, தன் மகனை நினைத்தும் கவலையாக இருந்தது..
அவளை மெல்ல எழுப்பி அமர வைத்து இரவு உணவை ஊட்டி விட்டவர்.. அவளை தூங்க வைத்து விட்டே வெளியே வந்தார்.
தன் மகன் விஜயேந்திரனுக்கு கால் பண்ண அது நாட் ரீச்சபல் என்று வர..
யாழினி கோபமாக இருக்கிறாள், சீக்கிரம் வா, என்று மெஜேஸ் டைப்பண்ணி அனுப்பி வைத்திருந்தார்..
அதிகாலை 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தான் வீ, பி என்கிற, விஜயேந்திரன்.. முதலில் தன் அறைக்கு சென்றவன் குளித்து முடித்து, மகளுக்கு அவன் வாங்கி வந்த பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மகள் அறைக்கு வர..
ஏசியின் குழுமையில் முகத்தை நன்றாக மூடி தூங்கிக்கொண்டிருந்தவளின் பெட்சீட்டை வீ. பி மெல்ல இழுக்க..
யாழினி தூக்கத்தில் பெட்சீட்டை இழுத்து போர்த்திக்கொள்ள..
மறுபடியும் மகள் மூடிய பெட்சீட்டை இழுத்தான்..
யாழினி குளிரில் பெட்சீட்டை வேகமாக இழுக்க அது அவள் கைக்கு வராமல் இருக்க.. கோபபட்டு எழுந்து பெட்சீட்டை இழுக்க போனவள். அவள் தந்தை வீ. பி யை பார்த்து..
“நானா” என்று தாவி அணைத்துக்கொண்டாள்..
“நா சிங்கார தல்லி, நா சின்னு குட்டி” என்று மகளை கொஞ்ச..
தீடிர் என்று ஞாபகம் வந்தவளாக “நான் கோபமா இருக்கேன்”..
என்று சொல்லி விட்டு தந்தையிடம் இருந்த விலக..
மகளிடம் “சாரிடா, சாரிடா” என்று கெஞ்சி , அவளுக்கு அவன் வாங்கி வந்த பொம்மைகளையும் பரிசுகளையும் அவள் கைநிறைய கொடுத்து சமாதானம் பண்ண.
அவளோ சமாதானம் ஆக மாட்டேன் என்பது போல் அமர்ந்திருக்க.
“உனக்கு என்ன வேணும் சொல்லு நானா வாங்கி தர்ரேன்” என்று சொல்ல..
“எனக்கு” என்றவள், “இன்னைக்கு பஸ்ட் பரிசு வாங்கிய கம்யாஸ்ரீ அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தாங்கல, அந்த டான்ஸ் மாஸ்டர் கிட்ட நான் டான்ஸ் கத்துக்கனும்” என்று மகள் கூற..
“அவ்வளவு தானே, நானா நாளைக்கே அந்த டான்ஸ் மாஸ்டரை, நம்ம டான்ஸ் ஸ்கூலுக்கு, டான்ஸ் மாஸ்டர் வேலைக்கு வர சொல்லுறேன் நீ டான்ஸ் கத்துக்கோ” என்றான்.
“தாங்யூ நானா” என்றவள், “என் கிப்ட்” என்று கேட்க.
மகளுக்காக வாங்கி வந்ததை தர.
அதை பார்த்து சந்தோஷப்பட்டாள்..
இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கிவிட.
இந்திரா தேவி மகன் வந்ததை தெரிந்து, அவன் அறைக்கு சென்று பார்க்க. மகன் அவன் அறையில் இல்லாததை பார்த்தவர், யாழினி அறைக்கு வந்த பார்க்க, தந்தையும், மகளும் தூங்குவதை பார்த்தவர்.. கலங்கிய விழியோடு அறையை விட்டு வெளியே வர.
“என்னாச்சு பங்காரம்” என்றார் இந்திராதேவியை கணவர்.
“ஒன்னுமில்லை” என்று கணவரிடம் சொல்லி விட்டு கீழே செல்ல போனவளை கையை பிடித்துக்கொண்டவர்,
“சொல்லு எதுக்கு யாழினி ரூம்புல இருந்து வரும் போது அழுத”.
“அது” என்றவர்., யாழினியும், விஜயேந்திரனும் தூங்குவதை பார்த்தவருக்கு, மகன் கடைசிவரைக்கும் இப்படி தனியாக இருந்து விடுவானோ என்று நினைத்தே கண்கலங்கியதை கூற..
“ஏன் தேவி? உன் பையன் அன்னைக்கு யாழினியை என் பொண்ணா வளக்கபோறேன்னு சொன்னப்போ சந்தோஷப்பட்ட, இப்போ தனியா இருக்கான்னு வருத்த படுற”..
“அன்னைக்கு சூழ்நிலை அப்படி, அதுக்காக இவன் கல்யாணமே பண்ணாம இருப்பான்னு நான் நினைக்கல,, நம்ம வீ. பி கடைசிவரைக்கு இப்படியே கல்யாணம் பண்ணாம இருந்துருவானா?” என்று கவலையுடன் கணவரிடம் கூற..
கவலையுடன் பேசும் மனைவியை தோள் தட்டி அணைத்தவர்.. “கண்டிப்பா அவனுக்குன்னு ஒரு பொண்ணு பிறந்து இருப்பா, அவனை தேடி ஒரு நாள் வரவா பாரு” என்ற சொன்ன கணவரை பார்த்தவர்.
“ஆமாம் வருவா, வருவா அவளை கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லுங்க, எங்கே இருக்காளோ” என்று இருவரும் பேசியபடியே கீழே செல்ல..
இங்கே பெங்களூரு நகரில் உள்ள ஸ்ரீரங்கபட்டிணத்தில் ஒரு காய்கறி சந்தையில் ஒருவனை பளார் என்று அறைந்திருந்தாள் வைஷ்ணவிதேவி.
“இனிமே லவ்வு, கிவ்வுண்ணு எவனாச்சு என்கிட்ட வந்து சொன்னா, காலுக்கு கீழ இருக்குறத கலட்டி அடிப்பேன், ஓடிரு” என்று தன்னிடம் காதல் சொல்ல வந்தவனை அடித்து விரட்டி இருந்தாள்,. நம்ம கதாநாயகி…….
error: Content is protected !!