Skip to content
Post Views: 6,917
காதல் அன்று
“என்ன அரசு, என் வார்த்தையில உங்களுக்கு எல்லாம் நம்பிக்கை இல்லாம போச்சா? இல்ல நான் தான் என்னைப் பத்தி ரொம்ப அதிகமா நினைச்சுட்டு இருக்கேனா?
நான் பேசி நிச்சயம் பண்ணி விட்ட ஒரு சம்பந்தத்தை கலைக்கிற அளவுக்கு, இல்ல மறுத்துப் பேசுற அளவுக்கு நான் கீழே போயிட்டேனா?
இல்ல, நான் பண்ணி வச்ச கல்யாணங்களில் எதாச்சும் பிரச்சினை ஆகியிருக்கா?
Advertisement
அப்படி யார் வாழ்க்கைய நான் கெடுத்து இருக்கேன்? சொல்லு?” வந்ததும் வராததுமாக வித்யாவின் அப்பா தமிழரசுவை கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார், ராகவின் பெரியப்பா பார்த்தசாரதி!
ராகவ் போன் பண்ணி விவரம் சொல்லியதும், உடனே காரை எடுக்க சொல்லி வித்யாவின் வீட்டுக்கே வந்து விட்டார் அடுத்த கால் மணி நேரத்தில்!
ராகவையும் நேராக அங்கு வர சொல்லியும் விட்டார்.
Advertisement
ராகவ் அமைதியாக உடகார்ந்து வித்யா வெளியே வருகிறாளா என்று பார்த்துக் கொண்டு இருந்தான்!
Advertisement
உள்ளே அவள் அறையில் அவளை, தான் சொல்லும் வரை வெளியே வரக் கூடாது என்று சொல்லி மிரட்டி வைத்திருந்தார் லதா.
அவள் வெளியே ராகவின் குரல் கேட்டு, கொஞ்சம் அழுதுக் கொண்டே உட்கார்ந்து இருந்தாள்.
“என்ன மாமா, இப்படி சொல்லிட்டீங்க, உங்க வார்த்தைக்கு எப்படி மதிப்பு இல்லாம போகும்?” தமிழரசு பதறினார்!
Advertisement
“உனக்கு இருக்கு, உன் பொண்டாட்டிக்கு இல்ல போலேயே?” கோபம் குறையாமல் தான் கேட்டார் பார்த்தசாரதி!
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல அண்ணே! நீங்க தயவுசெய்து என்னைத் தப்பா நினைக்காதீங்க.
பொண்ணைப் பெத்தவங்க இடத்தில் இருந்து யோசிச்சுப் பாருங்க.
வித்யா சின்னப் பொண்ணு, அவ மனசுல ஆசையை வளர்த்துட்டு பின்னாடி நடக்காம போச்சுன்னா, அவளால தாங்கிக்க முடியுமா சொல்லுங்க?” என்றார் லதா.
“அது எப்படிம்மா, ஏமாந்து போவா, நான் அவளை அப்படி விட்டுடுவேனா?”
“இல்ல மாமா, இன்னும் ராஜேந்திரன் மாமா, அடுத்த கட்ட பேச்சை பேசக் கூட வர மாட்டேங்கிறாரே!
பொண்ணப் பெத்த நாங்க போய், நிச்சயம் பண்ண எப்ப வர்றீங்கன்னு கேட்டா நல்லா இருக்குமா சொல்லுங்க?” என்றார் அரசு.
“அப்படியே கேட்டாலும் கூட அந்த ஈஸ்வரி, நாங்களா உங்க கிட்ட பொண்ணுக் கேட்டு வந்தோம்? யாரு வந்தாங்களோ, அவங்க கிட்ட போய் பேசுங்கன்னு சொல்லிடும்! வீணா எங்களுக்கு தான் அசிங்கம்” என்றார் லதாவும் கூட சேர்ந்து!
“வாஸ்தவம் தான், அது மாதிரி பேசக் கூடிய ஆள் தான் அந்த பொம்பள!” பெரியப்பாவும் ஒத்துக் கொண்டார்!
“இந்த மாதிரி சூழ்நிலையில், இவங்க ரெண்டு பேரும் தனியா சந்திச்சுப் பேசுறத எப்படி அனுமதிக்க முடியும் சொல்லுங்க?”
“அவ என் வீட்டுக்கு டுயுஷன் படிக்க தான் வரா!” என்றான் ராகவ் இடையிட்டு!
“ஆமாம், இதை என்கிட்ட ராகவ் ஏற்கனவே போனில் சொல்லிட்டான். எனக்குப் பொண்டாட்டி வரப் போறவள இனி யாரும் மக்குன்னு சொல்லிறக் கூடாது.
அவள் ஒண்ணும் மக்கு எல்லாம் இல்லை, என்னால அவளை பாசாக்கி காட்ட முடியும்னும் சொன்னான் அவன்” என்றார் பெரியப்பா!
“எங்க.. அவளுக்கு தான் அவளோட அக்கா அண்ணன் மாதிரி எல்லாம் படிப்பு ஏற மாட்டேங்குதே!” என்றார் சலிப்புடன் லதா!
“இது தான்.. இந்த கம்பேரிசன் தான் அவளைப் படிக்க விடாம தடுக்குது! அவளுக்கு எது வரும், எது வராதுன்னு உங்களுக்கு தெரியுமா?
சும்மா மக்கு மக்குன்னு சொல்லியே அவளை நீங்களே டீ மோடிவேட் பண்ணி வச்சு இருக்கீங்க இத்தனை நாளா!” என்றான் ராகவ் கொஞ்சம் கோபத்துடன்.
“இல்ல தம்பி நாங்களும் நிறைய டுயுஷன் வச்சுக் கூடப் பார்த்துட்டோம், கடைசியில அவ கெப்பாசிட்டி இவ்வளவு தான்னு ஒரு வழியா மனசைத் தேத்திக்கிட்டோம்” என்றார் லதா.
“ஆமாம். ஆனா நீங்க எங்க அனுப்பி வச்சீங்க, உங்க பெரிய பசங்க ரெண்டு பேரும் படிச்ச அதே டுயுஷன் டீச்சர் கிட்ட!
அவங்களும் நீங்க வீட்டில் செய்ற இதே கம்பேரிசன செஞ்சு செஞ்சு அவளை இன்னும் உள்ளே தான் தள்ளியிருக்காங்க.
இவ்வளவு பேசுறாங்க இல்ல பெரியப்பா, வித்யா டென்த்ல மேத்ஸ்ல எவ்வளவு மார்க்ன்னு கேளுங்க” என்றான் கோபத்துடன்.
“எவ்வளவு மா?” கேட்டார் பெரியப்பா!
“நூத்துக்கு நூறு மார்க்!” என்றார் தயங்கியபடி லதா!
“ம்ம். மேத்ஸ்ல சென்டம் வாங்கியிருக்கிற ஒரு பொண்ணு எப்படி மக்கா இருப்பா?
இத கொஞ்சமாச்சும் யோசிச்சு இருக்கீங்களா, நீங்க ரெண்டு பேரும் டீச்சர்ஸ் தானே?” ராகவ் விடுவதாக இல்லை!
“ம்ம். ஆமா நாங்க இந்த கோணத்தில் யோசிச்சதே இல்ல! தப்பு தான்” என்றார் அரசும்!
“இப்ப ரீசண்டா வந்திருக்கும் உங்க பொண்ணோட டெஸ்ட் பேப்பர்ஸை வாங்கிப் பார்த்தீங்களா?”
“இன்னும் இல்ல, வந்து இருக்கா, எனக்கு தெரியலே, ஏய் வித்யா, ஏண்டி என்கிட்ட சொல்லவே இல்லை?” உள்ளே குரல் கொடுத்தார் லதா!
“முதல்ல அவளை அந்த டெஸ்ட் பேப்பர்ஸ் எல்லாம் எடுத்துட்டு வெளியே வர சொல்லுங்க” என்றார் பெரியப்பா!
வித்யா டெஸ்ட் பேப்பர்ஸ் எல்லாம் எடுத்து வந்து காண்பித்தாள்.
வாங்கிப் பார்த்த லதாவும் அரசும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள்!
போன டெஸ்ட் மார்க் பார்த்து விட்டு அவள் அக்கா கூட கமென்ட் செய்தாள், “அம்மா அடுத்து இவளோட அச்சீவ்மென்ட் ஒன் டிஜிட் மார்க் தான்” என்று!
அப்படிப் பட்ட அவளிடம் இருந்து அறுபது சதவீத மார்க்கை அவர்கள் ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை!
“நல்லா பாருங்க, நான் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சு கொஞ்ச நாள் தான் ஆவுது, அதுக்குள்ளயே இவ்வளவு இம்ப்ரூவ்மென்ஸ் இவ கிட்ட!” என்றான் ராகவ் பெருமையாக!
“சாரி. தப்பு எங்க மேல தான்!” ஒத்துக் கொண்டார்கள் பெற்றோர் இருவருமே!
“நாங்க இவ கிட்ட கோபப்பட்டதுக்கு வேற ஒரு காரணமும் உண்டுண்ணே” என்றார் லதா!
“அது என்னம்மா?” என்றார் பெரியப்பா.
“அந்த ஈஸ்வரி, வேணுமின்னே எனக்கு போன் பண்ணி அசிங்க அசிங்கமா பேசுது.
பொண்ணுக்கு படிப்பு ஏறல, செலவுப் பண்ணி கல்யாணம் செய்து கொடுக்கவும் வழியில்ல போல உங்களுக்கு!
அதான் இப்படி பொண்ணை எங்க ராகவ் கிட்ட பழக விட்டு, எப்படியாச்சும் பெரிய இடத்துல சம்பந்தம் பண்ணிடலாம்னு பார்க்குறீங்களான்னு கேட்குது.
நானும் விடல அவங்கள! எங்களையும் என்ன உங்கள மாதிரி கொல்லைப்புறமா, திருட்டுத்தனமா வீட்டுக்குள்ள வந்து கல்யாணம் பண்ணிக்கிற ஆளா நினைச்சுட்டீங்களா?
இது பார்த்தசாரதி அண்ணன் முடிவு பண்ணின சம்பந்தம். உன்னை மாதிரி குறுக்கு வழியில வந்தது இல்லன்னு பதிலடி கொடுத்துட்டேன்!
ஆனாலும் அந்த பொம்பள விடல, அந்த ஆளு யாரு ராகவ்க்கு பொண்ணுக் கேட்டு வர?
பெத்த அப்பன், இங்க குத்துக் கல்லு மாதிரி இருக்கான், அவன் வந்து கேக்காம நீங்க அவன் பையனுக்கு சம்பந்தம் பேசுவீங்களா? நல்ல கதையா இருக்கே இதுன்னு சொல்லுச்சு!
அதான் பார்த்தசாரதி மாமா அவரைக் கூட்டிட்டு வந்து நிச்சயம் பண்ணுறேன்னு சொல்லியிருக்காரே அப்புறம் என்ன உனக்குன்னு, நான் சொன்னதுக்கு,
அந்த பகவானே வந்தாலும் இந்த ஆளை நான் அங்க வர விட மாட்டேன்,
எப்படி நீங்க இந்த கல்யாணத்தை நடத்துறீங்கன்னு பார்க்கிறேன்னு சவால் வேறே விடுதுண்ணே!” என்றார் லதா ஆதங்கத்துடன்.
“விடும்மா, நான் இதுல இன்வால்வ் ஆனதுதால அவளால ஒண்ணும் செய்ய முடியாது, அது தான் உன்கிட்ட மிரட்டிப் பார்த்துருக்கா, அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
அவ உன் கிட்ட மட்டும் இப்படி பேசல, என் பொண்ணோட, அதான் மோகனாவோட மாமியார் கிட்ட போய், இப்படி உங்க சம்பந்தி, எங்க ராகவோட, ஒரு பொண்ணைப் பழக விட்டு வேடிக்கைப் பார்க்கிறார், இந்த வயசுக்கு, அவர் ஸ்டேட்டஸ்க்கு இந்த மாமா வேலையெல்லாம் தேவையான்னு கூட கேட்டுருக்கு.
என் பொண்ணு கூட என் கிட்ட சொல்லி வருத்தப்பட்டு, நீங்க இதுல இன்னுமும் இனவால்வ் ஆகணுமாப்பா கூட கேட்டா!
நான் சொல்லிட்டேன், நந்தினி சாகும் போது அவளுக்கு நான் சத்தியம் பண்ணிக் கொடுத்து இருக்கேன். ராகவ் பெரியவன் ஆன பின், அவன் கல்யாணம் என் பொறுப்புன்னு!
நான் அதை மீற முடியாது, என்ன வந்தாலும், யார் தடுத்தாலும், என்ன டிராமா போட்டாலும், இந்த கல்யாணம் நடந்தே தீரும்!” அவர் ரொம்பவும் உறுதியான குரலில் சொன்னார்!
“நீங்க இவ்வளவு தூரம் சொன்ன பின்னே, நாங்க என்ன சொல்லப் போறோம் மாமா, இனி நாங்க ஒண்ணும் மறுக்க போறதில்ல” என்றார் அரசு!
“அப்புறம் என்ன? இப்ப சந்தோசமா ராகவ்?” ராகவ் பக்கம் திரும்பி, பெரியப்பா கேட்டார்!
“ரொம்ப தாங்க்ஸ் பெரியப்பா!”
“டேய் போடா கிறுக்குப் பய மகனே, பெரியப்பாவுக்கு எதுக்குடா தாங்க்ஸ் எல்லாம்!” அவர் ராகவின் தோளைத் தட்டினார்.
“அப்புறம் பெரியப்பா, நான் கொஞ்சம் வித்யா கிட்ட தனியா பேசணும், உங்க எல்லோர் அனுமதியோட!”
லதா தயங்க, அரசு, “போய் பேசுங்க தம்பி, ஆனா ரூமில் போய் பேச வேண்டாம்.
அவள இதோ இங்க வெளியே துணி துவைக்கிற குழாயடி கிட்ட வர சொல்றேன், அங்க நின்னு பேசுங்க” என்றார்.
“ம்ம் சரி”, என்று ராகவ் எழுந்துப் போனான்.
“நான் போய் உங்க எல்லோருக்கும் காபி போடுறேன்” என்று லதா கிச்சனுக்கு நகர்ந்து விட்டார்.
ஹாலில் அமர்ந்துகொண்டு அரசுவும் பெரியப்பாவும் பேச்சை தொடர்ந்தார்கள்!
கொல்லைப்புறம் இருந்த துவைக்கும் கல்லில் அமர்ந்து இருந்தாள் வித்யா!
அவனைக் கண்டதும், வேகமாக எழுந்து அவன் அருகே வந்தவளை,
“ஏய், மயிலு, மாமாவைக் கட்டிக்கிட்டிப் பிடிச்சுடாதே, அங்க பாரு, உங்க அம்மா கிச்சனில் இருந்து நம்மள வாட்ச் பண்ணிட்டு தான் இருக்காங்க!” என்றான் ராகவ் மெல்லிய குரலில்.
“ம்ம். மாமா, ரொம்ப தாங்க்ஸ் மாமா, என்னால உன்னைப் பார்க்காம இருக்கவே முடியல தெரியுமா, ஆனாலும் நீ எப்படியும் வருவன்னு எனக்கு பயங்கர நம்பிக்கை!
இந்த ரெண்டு நாளா, தனியே உட்கார்ந்து மனசுக்குள்ளயே நான் உன் கிட்ட பேசிட்டு இருந்தேன்.
நீயும் என் கிட்ட பேசின தெரியுமா?” அவள் விழி விரித்து முகம் முழுக்க சந்தோசமாய் பேசினாள்.
“நானா , நான் எப்படி உன்கிட்ட பேசுனேன்?” ராகவ் கேட்க,
அவள் கொஞ்சம் வெக்கப்பட்டாள்.
“அது சும்மா… எனக்கு நானே நீ பேசுற மாதிரி பதில் சொல்லிப்பேன்!”
“ அது தான் எப்படி?”
“ம்ம்.. இப்படி..” அவள் சொல்லிக் காண்பித்தாள்.
“நான் இப்படி தான் உன்கிட்ட பேசுவேன்.
மாமா ப்ளீஸ் மாமா சீக்கிரம் எதாச்சும் பண்ணு, என்னைப் பார்க்க வா மாமான்னு!
அதுக்கு நீ வரேண்டி மயிலு, உன்னைப் பார்க்காம என்னால மட்டும் எப்படி இருக்க முடியும், நானும் என்ன பண்ணலாம் யோசிச்சுட்டு தாண்டி இருக்கேன்ன்னு நீ பதில் சொல்லுவ!
இப்படி கேள்வியும் நானே மாமாவோட பதிலும் நானேன்னு எனக்குள்ள மோனோ ஆக்டிங் மாதிரி பேசிப்பேன்!
இன்னும் ரெண்டு நாள் உன்னைப் பார்க்காம இருந்திருந்தா, அப்படியே பயித்தியம் ஆகி இருப்பேன் மாமா!” அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்து ஓடியது!
அதைக் கண்டு பதறிய ராகவ், “ஏய் மயிலுகுட்டி, அழக்கூடாது, உன் கண்ல இருந்து தண்ணீ வந்தா, நான் என்னை ஒரு பெரிய பெயிலியர்னு நினைச்சுப்பேன்!
உன் கண்ல தண்ணீ மட்டும் வரவே கூடாது, சரியா!” என்று சொல்லி அவள் கண்ணீரை தன் கர்சீப் கொண்டு துடைத்தவன், அப்படியே அவள் கன்னங்களில் இன்னமும் இருந்த லதாவின் கை அச்சைக் கண்டு கோபம் கொண்டான்!
“இருக்கு அந்த கிழவிக்கு ஒரு நாள்” என்றுப் பல்லைக் கடித்தான்.
கூடவே மென்மையாக அவள் கன்னத்தை வருடியும் விட்டான்.
“மாமா, லதா பாவம், உன் கோபத்தை எல்லாம் அதால தாங்க முடியாது ப்ளீஸ் விட்டுடு!”
“என் செல்லம் சொன்னதால, அந்த கிழவி தப்பிச்சுடுச்சு! இல்ல நடக்கிறதே வேறே!” அவள் நெற்றியில் முட்டிக் கொஞ்சினான் ராகவ்!
முட்டி விட்டு, “சரிடா செல்லம், நாம ரொம்ப நேரம் இங்க இருந்து பேசிட்டு இருக்க முடியாது.
எல்லோரும் நம்மள தான் வாட்ச் பண்றாங்க! நாளைக்கு வழக்கம் போல படிக்க வந்திடு. மாமா வில் பி வெயிட்டிங்!”
“சரி மாமா” என்று புன்னகையுடன் தலையாட்டியவளை, காதலுடன் லேசாக தோளோடு அணைத்து விடுவித்தான் ராகவ்!
அதில் தெரிந்த காதல், உரிமை, அவர்களுக்குள் இருந்த அன்யோன்யம் எல்லாமே நன்றாகவே புரிந்தது இவர்களை கிச்சன் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த லதாவுக்கும்!
அடுத்த நாள்.
ராகவ் வீட்டில் டுயுஷன் படிக்கப் போய் விட்டாள் வித்யா பெரியவர்கள் அனுமதியுடனே!
“டேய் மயிலும்மா”
“என்ன மாமா?”
“மாமா பாவம்டா”
“ஏன் மாமா?”
“இப்படி ஹால்ப் சாரி எல்லாம் கட்டிட்டு வராதே, ஏதாச்சும் சுடிதார் இல்ல சல்வார் மாதிரி போட்டுட்டு வா.
அப்புறம் இப்படி தலை நிறைய பூ எல்லாம் வச்சுட்டு வந்தா, எனக்கு மூடே மாறுது.!
என்னை நம்பி உன்னை அனுப்பி வச்சுருக்க உன் அம்மா அப்பாவுக்கு நான் சரியா நடந்துக்கணும் இல்ல அதான்!”
“உனக்குப் பிடிக்காத எதையும், உன்னைக் கஷ்டப் படுத்துற எதையும் நான் செய்யவே மாட்டேன் மாமா! நாளையில் இருந்து கவனமா இருக்கேன்!”
“சரிடி தங்க மயிலு!” அவளை லேசாக அணைத்து விடுவித்தவன், பின் பாடம் சொல்லித் தருவதில் கவனமானான்!
அவளுமே, இப்போது அவள் நன்கு ஈடுப்பாட்டுடன் படிக்கத் தொடங்கி விட்டாள்!
அவள் மாமாவின் கவுரவம் அவள் பாசாவதில் இருக்கிறது என்ற எண்ணம் அவளை அப்படி செய்ய தூண்டி விட்டது!
அவள் அவனுக்காக படிக்க ஆரம்பித்தாள்.
எக்ஸாம் டேட் வந்தது.
தினமும் அவளை அவனே அவன் பைக்கில் கூட்டி சென்று ஸ்கூலில் இறக்கி விட்டான்!
நன்றாகவே அவளும் எக்ஸாம் எழுதினாள்!
ரிசல்ட் டேட் வந்தது.
பாசாகி விடுவாள் என்று தெரியும், ஆனால் பர்ஸ்ட் கிளாசில் பாசானது ராகவ் உட்பட அனைவருக்கும் ஆச்சர்யமே!
ஆனால் அதில் அவன் மட்டும் அவளின் காதலின் ஆழத்தை உணர்ந்தான்!
பெரியப்பா அவர் வாக்கு கொடுத்தது போல, தொடர்ந்து டூர் ப்ரோக்ராமிலேயே கடந்த சில மாதங்களாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த ராஜேந்திரனைக் கழுத்தில் துண்டுப் போட்டு இழுத்து வராத குறையாய் இழுத்து வந்து சபையில் அமர்த்தி நிறைய உறவுகள் சூழ மிகப் பெரிய அளவில் நிச்சயதார்த்ததை நடத்தி விட்டார்.
அடுத்த பதினைந்து நாட்களில் அந்த ஊரின் விஐபிகள் வீட்டுக் கல்யாணங்கள் நடக்கும் அந்த மிகப் பெரிய மண்டபத்தில் வைத்து மிகக் கோலாகலமாக நடந்தது ராகவ் வித்யா கல்யாணம்!
ராகவ் ஈஸ்வரி காலில் எல்லாம் விழ மாட்டேன் என்று சொல்லி விட்டதால், பெரியப்பாவும் பெரியம்மாவுமே பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்தை நடத்தி வைத்தார் சிறப்பாக!
இராஜேந்திரன் கையில் மிக்சர் தட்டு ஒன்று மட்டும் தான் இல்லை!
மற்றபடி வழக்கம் போல அவர் பக்கா மிக்சர் பார்ட்டி ரோல் அவருக்கு இங்கு!
தாலிக் கட்டும் போதே ராகவ் வித்யாவைக் கவனித்தான்!
ஏதோ யோசித்துக் கொண்டே இருப்பது போல தோன்றியது அவனுக்கு!
அப்படி என்ன தான் யோசித்துக் கொண்டிருக்கிறாள் அவனின் செல்ல மயில்!
error: Content is protected !!