Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

டிங் டாங் காதல்

டிங் டாங் – 16.1

சென்றிருந்தது ஒரு வாரம் கார்த்தி சவூதி சென்று. கடந்த ஒரு மாதமாக குற்றாலத்தில் மழை அதிகம் இருப்பதால் கட்டிட வேலையும் பாதியிலேயே நிற்க, வைஷ்ணவிக்கு தான் கொண்டாட்டமாக போனது.

வேலை செய்ய தேவையில்லை என்று. ஷெர்லின், வைஷ்ணவி இந்த விடுமுறையை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டனர். ஒரு நாள் வைஷ்ணவி வீடு, ஒரு நாள் ஷெர்லின் இல்லம் என மாறி மாறி படம் பார்க்க, கேலி செய்ய என நாட்கள் ஆசையாகவும் அமர்த்தலாகவும் சென்றது.

மஹாலக்ஷ்மி தான் வருத்தத்தில் இருந்தார், “அவன் சீசன் வர்றதுக்குள்ள எப்படியாவது வேலைய முடிச்சிடணும்னு சொன்னான் வைஷு இப்டி ஒரு மாசம் வேலை நின்னுபோச்சே. அவன் ரொம்ப வருபதப்படுறான் டா”

“த்தை இயற்கையை யாரால நிறுத்த முடியும் சொல்லுங்க. எல்லாமே நல்லதுக்கு தான். பேஸ்மென்ட் போட்டுருக்கோம். மழை நல்லா பெஞ்சா பில்டிங் ஸ்ட்ரோங் தானே ஆகும்?”



Advertisement

“அதுக்குன்னு ரெண்டு வாரமாவா?” முகம் வாடி கேட்டார்.

“என்ன இப்போ உங்களுக்கு போர் அடிக்கிதா? எங்க வீட்டுக்கு குடும்பத்தோட பொண்ணு கேக்க வாங்க. வாத்தி ஏதோ பையன பத்தி ரொம்ப தீவிரமா விசாரிச்சிட்டு இருக்கார்”

“வைஷு நிஜமாவா?” அதிர்ச்சியில் வாய் பிளந்தார் மாமியார்.

Advertisement

“ஆமா கோவில்பட்டில இருக்காங்களாம் பையன் அம்மா அப்பா. அவன் சென்னைல ஒர்க் பன்றானாம்” தன்னை இந்த செய்தி எல்லாம் சுத்தமாக பாதிக்கவில்லை என்று திடமாக நின்றாள் வைஷ்ணவி.

Advertisement

“என்னடா இப்டி சொல்ற?” அவளுக்கும் சேர்த்து அவர் ஷாக் ஆனார்.

“இதுல சொல்ல இன்னும் என்ன இருக்கு த்தை. என்ன நடந்தாலும் சரி, யார் என்ன சொன்னாலும் நான் உங்க பையன மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்குவேன். யார் என்ன சொன்னாலும் என்னோட முடிவு என்னைக்கும் மாறாது. உங்க வீட்டுல நீங்க எப்போ பேச போறீங்க?”

கார்த்தி வீட்டின் சமயலறையில் திண்டில் அமர்ந்து தோரணையாக மாமியாரிடம் மல்லுக்கு நின்றாள் அந்த ரவுடி.

Advertisement

“என்ன மஹாலக்ஷ்மி இதெல்லாம்?” கறாராக கணவனின் கோபக் குரல் கேட்டு டம்ளரில் சூடாக இருந்த பாலை ஊற்றப் போன மஹாலக்ஷ்மி பயத்தில் கையிலிருந்த பால் கிண்ணத்தை அப்படியே விட்டுவிட, கொதிக்க கொதிக்க காய்ச்சிய பால் அவர் காலில் நூலிழையில் பட்டு தெரிந்தாலும் கைகள் சூடான கிண்ணத்தில் பட்டு உயிரே போகும்படி பெருவிரல் எரிந்தது.

சுப்பிரமணி இருப்பதையும் பொருட்படுத்தாமல் மகாலட்சுமியிடம் திண்டிலிருந்து கீழே இறங்கி அவரிடம் விரைந்தாள்.

அதற்குள் சுப்ரமணியுமே பதறிவிட்டார், “மஹாமா…” வேகமாக மனைவி அருகில் வந்தவர் மனைவியை யாரையும் முன்பே வைஷ்ணவி அவரின் கையை பிடித்து வேகமாக தண்ணீரில் காட்டினாள்,

“த்தை வேற எங்கையாவது பால் சிந்திடுச்சா?” அவரோ வலியில் முகம் சுருங்க கைகளை தண்ணீரில் இருந்து விளக்க பார்க்க அவர் கையை விடாமல் பிடித்தவள், “அங்கிள் ப்ளீஸ் ஆண்ட்டி கைய புடிங்க ஒரு நிமிஷம்” என்றாள்.

தன்னை விட அதிகம் பதட்டத்தில் இருக்கும் வைஷ்ணவியை வியப்புடன் சுப்பிரமணி பார்க்க, அவளோ அவரின் கரத்தைப் பற்றி மஹாலக்ஷ்மியின் கையேடு வைத்தவள், “அங்கிள் கெட்டியா புடிங்க. ஒரு நிமிஷம் சில்லுனு தண்ணில கைய காட்டுனா வீக்கம் வராது” என்றவள் வேகமாக குனிந்து அவரில் காலில் வேறு எங்காவது காயம் இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.

அவளின் எண்ணத்தை புரிந்த மஹாலக்ஷ்மி, “வைஷுமா என்னடா பண்ற? கால்ல எல்லாம் ஒன்னும் படலடா” கணவனிடமிருந்து கையை வேகமாக உருவி வைஷ்ணவியை எழ வைத்தார்.

“அத்தை, நிஜமா சொல்லுங்க, இந்த காயம் எல்லாம் ரொம்ப எரியும்” தண்ணீரில் கையை காட்டினாலும் எரிச்சல் மட்டும் நீங்காமல் இருக்க அவரின் முகம் வாடி தான் இருந்தது.

“இருங்க த்தை வர்றேன்” என்றவள் மின்னல் வேகத்தில் தன்னுடைய வீட்டிற்கு சென்று தீ காயத்திற்கு போடும் ஆயின்மென்ட் ஒன்றை எடுத்து ஓடி வர, அவளது மஹேஸ்வரி கூட வியப்பாக தான் பார்த்தார்.

கார்த்தியின் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது சுப்பிரமணி மனைவியை திட்டிக்கொண்டிருந்தார், “சொன்ன கேக்கவே மாட்டியாடி நீ? ஹாஸ்பிடல் வந்தே ஆகணும் நீ. பிடிவாதம் பிடிக்காத மகா” “ஒன்னும் இல்லங்க. சரியாகிடும்”

“என்ன சரியாகும்? நான் என்ன சிங்கமா புலியா பயந்து இப்டி முழிக்க? கொஞ்சம் சுதாரிச்சதால எப்டியோ உடம்பு, கால்ல படல. அப்டி என்ன பயம் உனக்கு என் மேல? அந்த பயம், எனக்கு தெரியாம என் பையனுக்கு பொண்ணு பாத்தப்ப இருந்திருக்கணும்”

மனைவி மேல உள்ள அக்கரையில் சுப்ரமணியன் பேச்சை கேட்டு ரசித்த வைஷ்ணவி அவர்களுக்கு இடைவெளி கொடுத்து வெளியிலேயே நிற்க, தன்னுடைய பெயர் அடி படவும், “த்தை…” என உரக்க பேசி தன்னுடைய வரவை கூறினாள்.

வைஷ்ணவி குரல் கேட்டதும் அமைதியாகிவிட்டார் சுப்பிரமணி. வரவேற்பறையில் இருவரும் அமர்ந்திருக்க மஹாலக்ஷ்மி அருகில் சென்று அமர்ந்துகொண்டு வைஷ்ணவி மஹாலக்ஷ்மியின் கையை எடுத்து தான் கொண்டு வந்த ஆயின்மென்ட்டை போட்டாள்.

மஹாலட்சுமிக்கோ உள்ளுக்குள் பயம் அதிகமானது, தன்னை கணவர் என்ன பேசினாலும், திட்டினாலும் கேட்டுக்கொள்ளலாம் ஆனால் இந்த பெண்ணை ஏதாவது பேசினால் அவள் தாங்க மாட்டாளே என்ற பயத்தில் கணவரையே பார்த்து கண்களால் சமாளிக்கும் முயற்சியில் இருந்தார்.

“ஒன்றை மாசமா நடக்குது அங்கிள்” கண்கள் கைகள் இரண்டும் மகாலட்சுமியிடம் இருக்க சில நிமிடங்களுக்கு முன் சுப்பிரமணி கேட்ட கேள்விக்கு பதில் தந்தாள் வைஷ்ணவி.

சுப்பிரமணி மனைவியை தீர்க்கமாக பார்க்க, “வைஷுமா நான் பேசுகிறேன்டா. நீ போ. அப்றம் பேசுறேன்” என்றார் மஹாலக்ஷ்மி.

“இல்ல த்தை. நான் இருக்கேன். எனக்காக நான் தானே பேசியாகணும்? நானே பேசுறேன்” என்றவள் அவர் கையில் போட்ட மருந்து எல்லா இடத்திற்கும் படர்த்திருக்கிறதா என்பதை உறுதி செய்து சுப்ரமணியை பார்த்து திரும்பி அமர்ந்தாள்.

“ஆமா அங்கிள் உங்க பையன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணனும்னு தான் ஆசை எனக்கு. ஆனா அவரை எவ்ளோ புடிச்சதோ அதே அளவு அத்தையையும் ரொம்ப புடிச்சது. சொல்ல போனா இவங்க என்னோட மாமியாரா வந்தா நல்லா இருக்குமேன்னு தான் உங்க பையன நான் அந்த கண்ணோட்டத்துல பாக்க ஆரமிச்சதே” நகத்தை கடினமாக மற்றொரு விரல் கொண்டு பயத்தில் பிய்த்து பாடாய் படுத்தினாள்.

“எனக்கு தெரியும் அங்கிள் நான் பண்றது தப்பு தான், இப்டி நேரடியாவே கேக்குறதெல்லாம் அசிங்கமா தான் இருக்கு ஆனா எனக்கு உங்க பையன் தான் வேணும். என்னோட கண்ண பாத்தே என் மனச புரிஞ்சுக்குற ஒருத்தர என்னால எந்த நிலைமையையும் மிஸ் பண்ண முடியாது. உங்க பையன கண் கலங்காம நான் பாத்துக்குறேன்” இதழ் கடித்து தான் பேசியதை எண்ணி தலையில் அடித்துக்கொண்டாள்.

“சாரி சாரி அங்கிள்” உடனே மன்னிப்பை வேண்டினாள்.

“அவசரத்துல எடுக்குற எந்த முடிவும் சரியா இருந்ததில்லை ம்மா”

“நிச்சயமா அவசரத்துல எடுத்த முடிவு தான் அங்கிள், உங்க பையன் வேற யாருக்கும் போய்ட கூடாதுன்னு அவசரத்துல எடுத்த முடிவு தான்” – வைஷ்ணவி

“உன் அப்பா அம்மாக்கு தெரியுமா மா?” – சுப்பிரமணி

“இல்ல அங்கிள், தெரியாது” தலை கவிழ்ந்தது வைஷ்ணவிக்கு.

“நீ செய்றது தப்புனு தெரிஞ்சு தானே ம்மா உங்க வீட்டுல இத நீ சொல்ல தயங்குற?” – சுப்பிரமணி

“அப்பா அம்மா லவ் மேரேஜ் அங்கிள். சொந்தத்துக்குள்ளையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாங்க. என்னோட லவ்க்கு எந்த விதத்துலையும் அவங்க குறுக்க நிக்க மாட்டாங்க. அப்பா அம்மாக்கு தெரிஞ்சு, அப்றம் நீங்க மறுத்திங்கனா தாங்க மாட்டாங்க அங்கிள். அதான் உங்க முடிவு என்னவா இருந்தாலும் என்னோடவே போகட்டும்-னு சொல்லல. உங்களோட முடிவு எதுவா இருந்தாலும் நான் அத ஏத்துக்குறேன்” என்றவள் கண்கள் கலங்கி தலையை நிலத்தை பார்த்து தாழ்த்தினாள்.

அவளை அமைதியாக பார்த்த சுப்பிரமணி எழுந்து தங்கள் அறைக்குள் சென்றுவிட்டார்.

கணவன் சென்ற திசையில் பார்த்த மஹாலக்ஷ்மி மகிழ்ச்சியில் வைஷ்ணவியின் முகத்தை கைகளில் ஏந்தி, “ஏன்டா உன்னக்கு என் மேல அவ்ளோ பாசமா அத்தைகிட்ட சொல்லவே இல்ல”

வைஷ்ணவி கழுத்தை வளைத்து சுப்ரமணி சென்றதை உறுதி செய்தவள் கண்ணீரை துடைத்து மாமியாரின் முகத்தை பார்த்து பல்லை காட்டினாள், “நீங்க தான் மாமாவோட வீக்னஸ்-னு தெரிஞ்சு உங்க வீட்டுகார ஏமாத்துறதுக்கு சொன்னேன். ஒடனே வந்துடுவீங்களே என் பாச மலரே-னு. எப்படி நம்ம ஆக்டிங்? கமல் ஹசன்க்கு டப் குடுத்துடுவேனா?”

நக்கலடித்தவளை பார்த்து செல்லமாக தலையில் ஒரு கொட்டு வைத்து கணவனை காண சென்றார். வைஷ்ணவி வெளியில் பதட்டத்துடன் அமர்ந்துவிட்டாள்.

தங்கள் அறைக்குள் சென்ற மஹாலக்ஷ்மி மெத்தையில் அமர்ந்திருந்த கணவரை பார்த்து தயக்கத்துடன் அருகில் சென்று அமர்ந்தார் அவரின் முகம் பார்த்து. அவர் அமைதியே கோவம் இல்லை என்பதை உணர்த்த கணவன் முகத்தில் தெரிந்த குழப்பத்தை புரிந்துகொண்டார்.

“என்னங்க?” என்றார்.

“இல்ல ம்மா… ஒரே யோசனையா இருக்கு” என்றார்.

“சட்டு சட்டுனு பேசும் தான். ஆனா மனசு தங்கம்ங்க”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!