Skip to content
Post Views: 1,075
TEASER #எழவு_வீடு
“கொஞ்சம் பொறுத்துக்கோமா! அவ்ளோதான்… புள்ள தலை தெரியுது… இன்னும் ரெண்டு முறை உந்தி தள்ளு!!!” அந்த குடிசை வீட்டுக்குள் அலறிக்கொண்டிருந்த பெண்ணிருக்கு அந்தகார வேளையில் பிரசவம் பார்த்துக்கொண்டிருந்தார் எண்பதை கடந்து பலவருடங்கள் போன ஒரு பாட்டி.
“என்னால முடியல ஆத்தா!” அந்த பெண் கதற,
Advertisement
“புள்ளை பொறக்க வேண்டாமா தாயி! கொஞ்சம் பொறுத்துக்கோடா!” பாட்டி கெஞ்ச, அவர் குரலுக்காக வலியை சில நிமிடங்கள் பொறுத்தாள் அப்பெண்.
***
“மெனி மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே…” கையை இறுக பற்றி குலுக்க, “டேய் லூசு இன்னைக்கு எனக்கு பொறந்தநாள் இல்லடா! நிச்சயதார்த்தம்… என்….கேஜ்…மென்ட் டே…!!!” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தான் பிரஷாந்த். அவனிடம் கை குலுக்கிய மணமகளின் உடன் பணிபுரிபவன், “வாட்?” என முகத்தை சுழித்துக்கொள்ள, “போடா போடா போய் சாப்பிடு, அப்பறம் ஜாமூன் காலி ஆகிடும்!” பிரஷாந்த் உற்சாகமாய் தோள் தட்டி அனுப்பி வைக்க, தன் தோழியை நமட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டே கீழே இறங்கி சென்றான் அவன்.
Advertisement
வந்தவன் போனதும், பிரஷாந்தை விட்டு ஓரடி தள்ளி நின்று விருந்தினர்களை தலையசைத்து வரவேற்றுக்கொண்டிருந்த பவித்ரா, “மிஸ்டர் பிரஷாந்த்… ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே’ன்னு பர்த்டே’க்கு தான் சொல்லனும்ன்னு இல்லை! எந்த ஒரு பங்க்ஷனுக்கும் சொல்லலாம்!” என்று முகத்தில் சிரிப்பு மாறாமல் சொல்ல,
Advertisement
“ஓஓஓ…” என கேட்டுக்கொண்டவன், “எந்த பங்க்ஷனுக்கு வேணாலும் சொல்லலாமா ?” என்றான் விஷமமாய். அவன் முக பாவனையை கவனித்திறாதவள், “எஸ்! எந்த நிகழ்ச்சின்னாலும் சொல்லலாம்!” என்றுவிட,
“அப்போ கருமாதி பங்க்ஷன்’ல கூட சொல்லலாமா?” என்று கேட்டவனை, ‘ஹான்?’ என அவள் அதிர்ந்து திரும்பிப்பார்க்க, அவள் முகத்தை பார்த்தவன் அத்தனை சத்தமாய் சிரித்து வைத்தான். வந்த விருந்தினர்கள் கூட அவன் சிரிப்பை கண்ணெடுக்க, கேமரா வெளிச்சங்கள் கொட்டி தெளிக்க, எதை பற்றிலும் கவலைப்படாமல் சிரித்தவன், இன்னமும் தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த பவித்ராவிடம்,
“அட, நகைச்சுவை’ம்மா!! சிரி சிரி” என்றான் அடங்கா சிரிப்புடன்.
Advertisement
இன்னும் இரண்டே மாதங்களில் ஆரம்பமாகப்போகும் அவள் திருமண வாழ்க்கை கூட அவள் முன்னே இப்போது சிரியோ சிரி என சிரிப்பதை போல இருந்தது அவளுக்கு.
***
“ஆத்தா இன்னும் எவ்ளோ நேரம் தான் ஆகும்?” கையில் இரண்டு பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு வருத்தமாய் கேட்டார் மூன்றாம் பிரசவ வலியில் போராடும் அப்பெண்ணின் கணவன்.
“தல பிரசவம் தான் இவ்ளோ நேரம் எடுக்கும்… மூணாம் புள்ள ஏன் இவ்ளோ நேரம் புடிக்குதுன்னு எனக்கே தெரியல!” என்ற கிழவி, “ஒன்னும் கலங்காத! புள்ள வளர்ச்சி அபாரமா இருக்கும் போல!” என்றுவிட்டு கையில் சுடுதண்ணியுடன் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்துக்கொண்டார்.
***
கை மறைவில் இதோடு அறுபத்தி ஏழாவது கொட்டாவியை வெளியிட்டாள் சம்யுக்த்தா. தனியாக நேரம் செலவிடலாம் என்று ஆளில்லாத கடற்கரைக்கு வந்து இதோடு இரண்டு மணி நேரங்கள் போய்விட்டது. வானமும் இருட்ட, “ஜி…” என்றாள் சன்னமாய்.
ஆழி மடியில் கொஞ்சகொஞ்சமாய் சயனிக்கும் ரவியை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த வித்தகன் இவள் அழைப்பை துளியும் செவிமடுக்கவில்லை.
ஆனாலும் விடாது, “ஜிஈஈ….” என்றாள் சத்தமாய். அவன் கவனம் கலைந்ததன் அடையாளமாய் புருவமுடிச்சில் சிறு சுருக்கம் விழ, “தனியா டைம் ஸ்பென்ட் பண்ணலாம்ன்னு ஆசையா வந்தேன்” என்றவளை திரும்பிக்கூட பாராது, “அதானே பண்ணிட்டு இருக்க!” என்றான் அவன்.
“ப்ச்… ஜி… நான் உங்கக்கூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆசைப்பட்டேன்!”
லேசாக திரும்பி, “நான் உன்கூட தானே இருக்கேன்!” என்றான்.
என்ன பேசுவது இவனிடம்!?
“உங்களுக்கு இப்போ ஒண்ணுமே தோணலையா ஜி?” கால் முட்டிகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவனின் கரம் மேல் லேசாக தொட்டவள் வினவ,
“எக்கச்சக்கமா தோணுது! மூணு பாடல்களுக்கு வரிகள் தயாரா இருக்கு! பார்க்க பார்க்க கவிதை தோணுது! இயற்கையோட அழகே தனி!” என பிதற்றுபவனை…. அதாவது அவள் பார்வைக்கு பிதற்றுபவனை ‘மட்டி… மன்னாரு” என உள்ளுக்குள் அவள் திட்டிக்கொண்டிருக்க, விருட்டென அவள்புறம் திரும்பியவன்,
“உனக்கு பிடிச்ச கவிதை எதாவது சொல்லேன்! இந்த இயற்கை, ஏகாந்தம் கூடவே உன் வருங்கால கணவன்… இந்த நேரம் உனக்கு மனசுக்குள்ள எதாவது தோணுதா?” மிகுந்த எதிர்ப்பார்ப்பு மின்னும் அவன் விழிகளை கண்டதும், ‘தெரியாதே’ என சொல்ல வந்த வார்த்தை கூட அடங்கிப்போக, வேகவேகமாய் நினைவடுக்கை அலசியவளுக்கு தோன்றியதோ இந்த கவிதை மட்டுமே!!!
“ஃபுல் அடிச்சும் போதை இல்லை…
புல்லட் பீர் அடிச்சும் கிக்கு இல்லை…
கல்லு குடிச்சும் தூக்கம் இல்லை…
கண்ணை மூடுனா கனவுல நீதானே!!!” அழகாய் சொன்னவள், “வேற யாரு வருவா?” என்று அவனிடம் திரும்ப, நெற்றியில் ‘சொத்’தென அடித்துக்கொண்டவன் அங்கிருந்து எழுந்து விறுவிறுவென போக,
“ஜி… ஜி…. எங்கப்போறீங்க! நான் வேணுனா வேற கவிதை சொல்லவா? மரத்துல இருக்குது காயு… தூங்க தேவ…” அவள் துரத்திக்கொண்டு செல்ல, மணலில் கால் புதைய தெரித்து ஓடினான் அந்த எழுத்தாளன்.
இப்படிப்பட்ட முரண்பாடுகள் முட்டிக்கொண்டு முத்தமிட காத்துக்கிடக்கும் ஒரு முக்கோண… இல்ல… ‘சதுர காதல் கதை…!!!’
ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து பாழடைந்து கிடந்த அந்த பங்களாவிற்குள் இருந்து பயங்கரமான ஓர் குரல்…! அது…
“ஹெலோ ஹெலோ…! வெறும் ‘லவ்’ மட்டும் வந்துப்போக இது ‘லவ் வீடு’ இல்லையே… ‘எ ழவ் வீடு!!’
‘உள்ள வந்தா கன்ஃபார்ம் டெத்து…
பொழைச்சு போனின்னா நீ தான் கெத்து…”
பார்ப்போமா?!” என சவாலுக்கு அழைத்த அதே நேரம், அந்த குடிசை வீட்டில் இருந்து அதிகபட்சமாய் “அம்மாஆஆஆஆஆ” என்ற கதறல்!
ரத்தமும் பிசுபிசுப்புமாய் கைகளில் ஏந்திய அந்த பிஞ்சுகுழந்தையின் நஞ்சுக்கொடியை நறுக்கிய கிழவி,
“வாடா என் ராசா!” என உச்சி முகரப்போக,
“என்னை வெளில எடுக்க இவ்ளோ நேரமா உனக்கு? வழியை விடு தாய்கிழவி” என்ற பிஞ்சு அவர் கைகளில் இருந்து குதித்து இறங்கி வெளியே ஓட……….
உலகின் மொத்த அதிர்ச்சியும் ஒரு நொடியில் தாக்கிவிட்டதில்,
அம்மா வாயை பிளக்க, பாட்டியோ வாயையே பிளந்துவிட்டார்.
error: Content is protected !!