Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தவி(ர்)ப்பேனோ – முன்னோட்டம்

முன்னோட்டம்

“கண்டிப்பா நாளைக்கு வேலை முடிஞ்சியிருக்கனும் மைக். நீங்க என்ன செய்வீங்க ஏது செய்வீங்கன்னு எனக்கு தெரியாது. பட் ஐ நீட் ஏ பேர்ஃபக்ஷன் ஃப்ரம் யூ” தனது அழுத்தமான குரலில் எதிரில் பாவம் போல் நின்றிருந்த மைக்கலிடம் வலுவூட்டும் வகையில் ஆங்கிலத்தில் பேச, அந்த மைக்கலிடம் அமைதி தான் நிலவியது.

“என்ன மைக்கல் ஒர்க் முடிச்சிடுவீங்க தானே?” கத்தி போல் கூர்மையாக சுழன்ற விழிகளில், அடுத்து அவளுக்காக காத்திருந்த வேலையை கணினி திரையில் உற்று நோக்கியவாறே கேட்க, அவனுள் அப்போதும் அமைதி தான்.

அவனின் அமைதியில் முகம் நிமிர்த்திய பெண்,” வாட்?” என்றாள் கைகளில் செய்கையை காட்டி.



Advertisement

“ஹவ் இஸ் இட் பாஸிபில் ஷான். இப்பவே மணி பத்து, இப்போ ஒர்க் ஸ்டார்ட் பண்ணினாலும் முடிக்க முடியாது” தைரியத்தை வரவழைத்து கொண்டு அவன் சொல்ல,

அவ்வளவு தான் அத்தனை நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த பொறுமையை பறக்க விட்டிருந்தாள்.

“இதை தப்பா செய்யறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும் மைக். மைனர் மிஸ்டேக்னாலும் மிஸ்டேக் மிஸ்டேக் தான். அதை இல்லன்னு சொல்லிட முடியாதே”

Advertisement

அஜாக்கிரதையா இருந்தது யார் தப்பு மைக்? இது என்ன எங்க ஊரு பொட்டி கடைன்னு நினைச்சியா? மல்டி நேஷனல் லக்ஸ்சுரி ஃபேஷன் ப்ராண்ட் இது. அவனவன் நம்ம கிட்ட இருந்து, பல்லாயிரம் காசு கொடுத்து அக்சஸ்செரிஸ்(accessories ) வாங்கிட்டு இருக்கான். அவன் கிட்ட போய் இதுல மைனர் மிஸ்டேக் தான் சொல்லி கொடுக்க முடியுமா?

Advertisement

பல லட்சங்கள் மாசமான உன் அக்கௌன்ட்க்கு வருதே, அதுல இருந்து நாங்க கொஞ்சம் எடுத்திட்டு கொடுத்தா விட்டுடுவியா நீ?” பலவாறாக கேள்வி கேட்டு அவனை சரமாரியாக  வெளுத்து வாங்க, தலை கவிழ்ந்து நின்றான் மைக்கல். அவனுள் கோபம் கனன்றது இருந்தும் அமைதியாய் அனைத்தையும் வாங்கி கொண்டு நின்றான்.

“போ. போய் ஒர்க்கை பாருங்க…”என அவனை வெளியேற்றம் செய்தவளுக்கு தலை கிண்ணென்று வலியெடுத்தது.

மைக்கலிடம் காத்து கத்து கத்தியது வேறு தொண்டையில் நீர் வற்றி போயிருக்க, இரண்டிற்கும் சேர்த்து சூடான பானகம் எதையாவது பருகலாம் என்று, அவளிருந்த தளத்தில் இருந்த கஃபேடேரியாவிற்கு மெல்ல நடையிட்டாள்.

Advertisement

அங்கு சென்றதும், கஃபே அவ் லைட் ( Cafe au lait) ஆர்டர் கொடுத்தவள் அதற்காக காத்திருந்தாள்.

அப்போது கூட சும்மா இராமல் வேலை விடயமாக ஏதோ நோண்டி இருந்தவளின் கண்களுக்கு அது புலப்பட்டு, நிலையாய் நிறுத்தியிருந்தது.

அவளின் முகத்தில் கோபம் தணலாய் தகிக்க, அந்த கோபத்தை காட்ட கூடாது என நினைத்து கீழுதட்டை கடித்து கட்டுப்படுத்த முயன்றாலும் அது தோற்று போனது.

*****
“இங்க பாரு மேன். நீ இப்போ இருக்கிற நிலைக்கு, உன்னால கண்டிப்பா மேட்ச் ஆட முடியாது. நீ கண்டிப்பா ரெஸ்ட் எடுத்தே ஆகனும்” அவனுடன் ஆட்டம் ஆடும் சுஷாந்த் பட்டேல் அவனின் நலனை கருத்தில் கொண்டு பேச,

“நான் நல்லா தான் இருக்கேன் பையா. என்னால இப்படியே ப்ராக்டிஸ் பண்ணாம இருக்க முடியாது. க்யா முஜே தேக்னா பாப் நஹின் ஹே(என்னை பார்த்தா பாவமா இல்லையா)?”

நோவே. ஐ அன்டர்ஸ்டேன்ட் யூ மேன். பட் இப்போ இருக்கிற சிச்சுவேஷன்ல நீ ப்லே பண்ணா உன்னோட ஆர்ம் இன்னும் மோசமா தான் போகும். அட் தி சேம் டைம் ஃபிட்னெஸ் டீம் உன்ன அலோ பண்ண மாட்டாங்க” சுஷாந்த்  கூறுவது மூளைக்கு புரிந்தாலும், மனதிற்கு அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது.

அப்போது அங்கே அவனின் மேனேஜர் வந்து பேசவும், அவனிடம் கத்திவிட்டு சென்றிருந்தான் அவன்.

அவன் ஆத்மார்த்தமாய் காதலிப்பது இந்த விளையாட்டை தான். இது தான் அவன் இப்போது வரை உயிரோடு வைத்திருக்க காரணம். இதனை விளையாட கூடாது என மற்றவர்கள் தடை சொல்வதை அவனால் ஏற்க முடியவில்லை.

அவனின் தவிப்பு அங்கிருந்தவர்களுக்கு புரியவில்லை.

******
ந்யூஸ் எப்படி லீக்கௌட் ஆச்சு? இன்னும் நாமளே பேசி ஒரு தீர்மானத்துக்கு வராதப்போ, அதுக்குள்ள இது எப்படி வெளிய போச்சு?” மார்க்கெட்டிங் டீம்மிலிருந்த அனைவரையும் நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அனைவரையும் உண்டில்லையென செய்து கொண்டிருந்தாள் ஷான்.

இப்போது தான் அவர்களுக்குள்ளே பேச்சு வார்த்தைகள் நடத்தி கொண்டிருக்க, அதற்குள் அதனை எடுத்து ஊடகங்கள் பேசுவதை அவளால் ஏற்க முடியவில்லை.

இதனால் என்னென்ன பாதிப்புகள் வர காத்திருக்கிறதோ என பயந்தாள்.

அவள் நேசிக்கும் இந்த வேலையில் எந்தவொரு கரும்புள்ளியும் வந்திட கூடாதென கவனத்துடன் ஒவ்வொன்றாய் செய்து வந்தவளுக்கு இது பெரிய இடியாய் இறங்கியிருந்தது.

கசிந்திருந்த செய்தி என்னவோ இது தான். ‘***** பிரபலமான இன்டர்நேஷனல் லக்ஸ்சுரி ஃபேஷன் நிறுவனத்தின் அடுத்த ப்ராண்ட் அம்பாசிடர் இவர் தான்’ என ஒரு விளையாட்டு வீரனின் பெயரையும் புகைப்படத்தையும் போட்டு போட்டு காண்பித்த மையமாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் எப்படியோ, எப்போது வலைஒளி என ஒன்று வந்ததோ, அப்போதிருந்தே பிரச்சனை தான்.

இவர்கள் சம்பாதிக்க யாரையும் வார்த்தையாலே கொல்லுவார்கள்.

வாயென்று ஒன்று இருப்பதால் எதையும் பேசி விடுகிறது. அது உண்மையா இல்லையா என்பதை கூட அறிந்து கொள்ள முயல்வதில்லை.

பொய்யை கூட உண்மையாக்க  என்னவேண்டுமானாலும் செய்ய கூடிய நபர்கள் தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

வெளிநாட்டில் வாழ்ந்தாலும், பணி எப்போதும் பணி தானே. எங்கு இருந்தால் என்ன அதற்கு ஒரு பங்கம் என்றால் சும்மாவா விடுவார்கள்.

காண்ஃபிடென்ஷியலாக வைத்திருந்த ஒரு முக்கிய விடயம் இப்போது இந்தியாவில் பேசும் பொருளாக மாறி இருக்க, அதற்கு தகுந்த சன்மானம் தர வேண்டுமே.

மேலதிகாரிகள் என்ன முடிவெடுப்பார்களோ, எத்தனை பேருக்கு பதில் சொல்ல நேருமோ என அவளும் பயத்தில் நிம்மதியாக இல்லாது தவிக்க மற்றவர்களையும் நிம்மதியாக மூச்சு விட கூட விடவில்லை அவள்.

******

“என்னால என்னோட வேலையை விட முடியாது மாம். ஐ லவ் மை ஜாப். உங்க கூட இருந்தும் இல்லாம இருக்கிறதுக்கு. நான் இங்க எந்த பிரச்சனையும் இல்லாம நிம்மதியா இருக்கேன்” முகத்தில் அடித்தாற்போல் பேசவும், அவள் அன்னை ஷோபனாவின் முகம் சுருங்கியது.

“பேட்டா…”

“ப்ளிஸ் டோண்ட் கால் மீ லைக் தட். ஐ ஹேட் தட் வேர்ட். யூ டோண்ட் டிசெர்வ் டூ கால் மீ எ டாட்டர். நான் வார்த்தையால மட்டும் உங்களுக்கு பொண்ணா இருக்க விரும்பலை. அப்பாக்கு க்ரிக்கேட் முக்கியம். உங்களுக்கு உங்களோட ப்ளிம் அசோசியேஷன் முக்கியம். இப்போ மட்டும் எங்க இருந்து என்மேல பாசம் வந்தது போல் நடிக்கிறீங்க” சற்றும் காரம் குறையாமல் அவள் பட்ட வேதனைகளை அதற்கு காரணமானவர்களிடம் இறக்க, பெற்ற மகளை இழந்து விட்டோமோ என பயந்து போனார் ஷோபனா.

எல்லாம் காலம் தாழ்ந்து வந்து யோசனை. இனி என்ன ஆகப்போகிறது.

அனைவரையும் தவிர்த்தாள். அவளின் தவிப்பையும் இறக்கி வைக்க தயாரானாள்.

அவளின் தவிப்பும் தவிர்ப்பும் அனைவருக்கும் எப்படியோ, அவளை உயிருக்கு உயிராய் காதலித்த அவனுக்கு வேதனையாக இருந்தது‌. உயிரோடு அவனை எரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!